Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நின்னோடு தமியனாய்

நின்னோடு தமியனாய் 3

அத்தியாயம் 3

பிருந்தா சிறந்த மகப்பேறு மருத்துவர். தனியாக பெரிய ஹாஸ்பிடல் வைத்து நடத்திக் கொண்டிருந்தாலும்,வார இறுதி நாட்களில் அரசு மருத்துவமனைக்கு சென்று இலவசமாக மருத்துவம் பார்த்து வருவது வழக்கம்.

இன்று கொடைக்கானலின் முக்கிய அரசியல் புள்ளி மேலிடத்து நற்பெயருக்காக ஒரு சில நலத்திட்ட உதவிகளை அந்த அரசு மருத்துவமனைக்கு வழங்குவதாக விளம்பரம் செய்ய பத்திரிக்கையாளர்களுடன் வந்திருந்தான்.

நீண்ட வரிசையில் நோயாளிகள் அமர்ந்திருந்தனர்.வயதானவர்கள்,குழந்தைகள் என அவுட் பேசன்ட்களும்… நிறைமாத கர்பிணிகளும்… காத்திருந்தனர். இவளது ஹாஸ்பிடல் சென்று பார்க்கும் அளவிற்கு அவர்களுக்கெல்லாம் வசதி இல்லை. இருந்தும் கொடைக்கானலின் கைராசி மருத்துவர் என்ற பெயரால்,அரசு மருத்துவ மனைக்கு இவள் வரும் நாளை எதிர்பார்த்து அனைவரும் காத்திருப்பர்.



Advertisement

இன்று ஒவ்வொரு பேசன்டாக செக் செய்து கொண்டிருக்க…அரசியல் புள்ளியின் உதவியாள் தடாலடியாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

“மிஸ்டர்!யாரு நீங்க முதல்ல வெளியே போங்க”என்றாள்.

மேடம்! சார் நலத்திட்ட உதவி செய்ய வந்திருக்காரு. ஃபோட்டோ நோயாளிங்க கூட எடுத்தாதான் பேப்பர்ல் போட வசதியா இருக்கும்.உங்கள பார்க்கத்தான் நிறைய வயசானவங்க.. கர்ப்பிணிப் பெண்கள் லைன்ல இருக்காங்க..நாங்க கூப்பிட்டா கூட வர மறுக்கறாங்க..கொஞ்சம் வந்து சொல்லுங்க மேடம்.நாங்க இதுக்காக உங்களுக்கு ஸ்பெசல் பேமனட் கூட தரோம்.

Advertisement

மிஸ்டர்!என்கிட்டவே நிறைய பணம் இருக்கு. உங்க பணம் எதுவும் எனக்கு வேண்டா.என்னோட பேசன்ட்ஸே டிஸ்டர்ப் பண்ணாதீங்க…

Advertisement

மேடம்! எங்க சார் அரசியல்லே எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா?இந்த நிமிஷம் நினைச்சா கூட உங்கள இனிமே இந்த டாக்டர் தொழில் செய்ய விட மாட்டாரு மேடம்..

அதுவரை அமர்ந்து பதிலளித்து கொண்டிருந்தவள்.இருக்கையை விட்டு எழுந்து அவன் அருகில் வந்தாள். நேருக்கு நேராக அவன் முகத்தை பார்த்து,”உன்னோட பூச்சாண்டிக்கு பயப்படறே ஆள் நான் இல்ல.உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க.. என்னோட பேசன்ட்ஸ் உனக்காக வரமாட்டாங்க” என திடமாக கூறிவிட்டு மீண்டும் இருக்கைக்கு சென்று தனது பணிகளைத் தொடர்நதாள்.

விஷயம் அரசியல் புள்ளியின் காதுக்கு சென்றது.ஹாஸ்பிடல் டீன்,ஊரின் மற்ற பிரபல அரசியல் புள்ளிகள் என வரிசையாக சிபாரிசு செய்ய மீண்டும் திடமாக மறுத்துவிட்டாள்.

Advertisement

நாற்பது வயது உடைய நலத்திட்ட உதவிகளை விளம்பரப்படுத்த வந்த அரசியல் புள்ளியே நேரடியாக பிருந்தாவை சந்திக்க வந்தான். வந்தவன் இவளது பேச்சிலும், நடையிலும் இருந்த கம்பீரத்தை ரசித்தான்.மேலும் அவள் அழகில் மயங்கி தன்னிலை மறந்தான்.

அழகிய மான்குட்டி! ஒரு நாள் வேட்டையாடி தன் தாகத்தை தணித்து கொள்ள வேண்டும் என  திட்டமிட்டான். தற்போது அவளிடம் வாக்குவாதம் செய்வது முட்டாள்தனம் என எண்ணி அங்கிருந்து அகன்றான்.அவனது உதவியாளிடம் அவளின் தினசரி பழக்க வழக்கத்தை கண்காணிக்கச் சொன்னான்.

பணிகளை முடித்துக் கொண்டு வெளியே வர,அவளின் பிஏ,” மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே!” மேம் என அவளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினாள்.

புன்னகை முகமாக அந்த பூங்கொத்தை ஏற்றுக் கொண்டாள்.இன்று அவளின் பிறந்தநாள்.அவளது அப்பா பிறந்தநாள் பரிசாக உயர்ரக சொகுசு கார் ஒன்றை பரிசளித்திருந்தார்.அவளின் அம்மா தங்க மோதிரம் பரிசளித்திருந்தார்.

ஐஸ்வர்யா விலை உயர்ந்த ஆடை ஒன்றை பரிசளித்திருந்தாள்.விசாலாட்சி வருங்கால மருமகளுக்காக வைர நெக்லஸ் பரிசளித்தார்.விஸ்வநாதன் புது வெள்ளை நிற டாக்டர் கோட் உடன் ஸ்டெதஸ்கோப்பை பரிசாக அளித்தார்.
மூவரும் காலை நேரமாகவே அவளின் வீட்டிற்கு சென்று தங்களின் பரிசுகளை தந்து அவளை வாழ்த்தி வந்தனர்.

ஆனால் இன்னமும் உரிமை காரன் மட்டும் ஏதும் பரிசளிக்க வில்லை. ஃபோனை எடுத்து ஒருமுறை செக் செய்ய அவனிடமிருந்து எந்த அழைப்பும்,ஏன் ஒரு  வாழ்த்துச் செய்தியும் கூட வரவில்லை.

சோகத்துடன் கடுப்புதான் வந்தது. தன்னுடன் உதவிக்கு வந்த தன் குழுவை  ஹாஸ்பிடல் செல்லும்படி அறிவுறுத்தி விட்டு காரை எடுத்துக் கொண்டு நேராக.. தாங்கள் வழக்கமாக சந்திக்கும் பார்க் சென்று சேர்ந்தாள்.

நீலக்குறிஞ்சி மரத்தடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பென்ஞ்சில் அமர்ந்தாள்.பூக்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து அவள் மீது விழுந்தனர்.ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கூட கடந்திருந்தது.பூபதி இன்னமும் வந்த பாடில்லை. ஃபோன் செய்தாலும்  எடுக்கவில்லை.

இவளும் நிமிடத்திற்கு ஒருமுறை பார்க் வாசலை எட்டி எட்டிப் பார்த்தாள். போவோர் வருவோர் இவளை பார்த்து கொண்டு செல்ல, ஒரு அசெளகரியம் ஏற்பட்டது.ஹேண்ட் பேக்கில் இருந்து “ப்ரைட் அண்ட் பிரிஜூடிஸ்” என்ற ஆங்கில நாவலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.

நேரம் செல்ல செல்ல அந்த கதையின் கதாப்பாத்திரங்களோடு ஒன்றிணைந்து படிக்க ஆரம்பித்தாள். நாவலின் இறுதி அத்தியாயம்  படித்துக் கொண்டிருக்கும்  போது யாரோ ஒருவர் தன்னை குறுகுறு வென பார்ப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க…நெற்றியில் சந்தனப் பட்டையுடன்…வலது கன்னத்தில் குழி விழுக இவளைப் பார்த்து சிரித்தபடி நின்றிருந்தான் பூபதி.

வலது புருவத்தை மேலே தூக்கி அவனை முறைத்தபடி மீண்டும் புத்தகத்தில் தன் கவனத்தை செலுத்தினாள்.

“நான் வந்துட்டேன்.”என்றான் பூபதி.

பிருந்தா புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமலே,”மிஸ்டர். டார்சி  கூட எலிசபெத்தை இவ்வளவு நேரம் காத்திருக்க வைக்கலை.”என்றாள்.

பூபதி குழம்பி,”அது யாரு?” என்றான்

“என் புத்தகத்துல வர்றே ஹீரோ… நேரத்துக்கு வர்ற பழக்கம் இருக்கிறவர். காதலியை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காதவர்.காதலுக்கு மரியாதை கொடுக்கணும், காதலிக்கு நேரம் கொடுக்கணும்.அவளோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கனும்னு வாழ்றவர் என்றாள்.”

“நானும் அப்படிதான் பிருந்தா”என்றான்.

இன்னைக்கு நீ என்ன சொன்னாலும் நா சமாதானம் அடைய போறது இல்ல.

பிருந்தா, எக்ஸ்போர்ட் மீட்டிங்.உனக்கே தெரியும் இல்ல.நான் நம்ம ஃபேக்டரியை அடுத்த லெவல்க்கு கொண்டு போக எவ்வளவு மெனக் கெட்டுட்டு இருக்கேனு.

எனக்கு புரியுது, நேரம் தவறலாம் பூபதி… ஆனால் மரியாதை தவறக்கூடாது. என்னால உனக்காக காலம் பூராவும் காத்திருக்க முடியும். ஆனால் காரணமே இல்லாமல் காக்க வைக்கிறதை ஏத்துக்க முடியாது. ஒரு ஃபோன்…இல்ல, ஒரு மெசேஜ் பண்ணி இதுதான் என்னோட நிலைமைனு ஒரு வார்த்தை நீ சொல்லி இருக்கலாம்.

உன்னோட நிலைமை என்னனு தெரியாம நான் ஒவ்வொரு நிமிஷமும் எவ்வளவு பாரமா கடந்தேனு எனக்கு மட்டுந்தான் தெரியும்.காதல்லே அலட்சியம் மட்டும் இருக்கவே கூடாது. அது ஒருத்தர் இன்னொருத்தரை அவமானப்படுத்தற மாதிரி.

“எனக்கு நிறைய வேலை இருக்கு நான் கிளம்பறே” என ஹேண்ட் பேக்கை தோளில் போட்டபடி  ஒய்யாரமாக நடை போட்டாள்.

பிருந்தா,”சாரி டியர்”என அவள் பின்னே நடந்தான்.

அவள் இறங்கி வருவதாக தெரிய வில்லை.வேக எட்டுக்களை எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள்.

லாவண்டர் நிற மைசூர் நிற சில்க் சேரி அவளது நிறத்திற்கு எடுப்பாக இருந்தது.அதுபோக விசாலாட்சி மல்லிகை சரத்தை மருமகளுக்கு வைத்து விட்டிருக்க…இன்று தேவதை போல இருந்தாள்.

அவள் நடக்க நடக்க சேலை காற்றில் பறந்தது.அவள் வழக்கமாக உபயோகிக்கும் தாழம்பூ பர்வுயூம் வாசம் பூபதியை அவள் பக்கம் இழுத்தது. அவனும் அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் தோற்று விட்டான்.

“உன் சேல காத்தில் ஆட..
என் நெஞ்சும் சேர்ந்தாட..
உன் கூந்தல் வாசம் பார்த்து
என் எண்ணம் கூத்தாட..
மாராப்பு சேலையில நூலப் போல நானிருக்க..
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி..”
என பாட்டு பாடிக் கொண்டே அவள் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

அவனது பாடலைக் கேட்ட பிருந்தாவிற்கு கன்னங்கள் சிவக்க வெட்கச் சிரிப்பு.திரும்பினால் அவன் கண்டு கொள்வான் என திரும்பாமல் சிரித்தபடியே நடக்க ஆரம்பித்தாள்.

பார்க்கை விட்டு வெளியே வர…
பூக்கடையில் இருந்து ஒரு பெண் வெளியே வந்து,”ஹேப்பி பர்த்டே டாக்டர் அக்கா”என பூங்கொத்தை நீட்டினாள்.

உங்களுக்கு எப்படி தெரியும்?

“பூபதி அண்ணாதான் கொடுக்க சொன்னாரு” என்றாள் அந்த பெண்.
திரும்பி பார்க்க மீண்டும் வலது கன்னத்தில் குழி விழுக சிரித்துக் கொண்டு நின்றான்.

தனது கூரிய விழிகளால் எரித்து விடுவதை போல முறைக்க…”கண்களை சிமிட்டி, கூசுது” என ஜாடை செய்த படி கூலிங் கிளாஸ் எடுத்து மாட்டிக் கொண்டான்.

அடுத்தது…ஒரு மல்லிகை பூ  விற்கும் பாட்டி.”இந்தம்மா மல்லிகை பூ , பூபதி தம்பி கொடுக்க சொல்லிருக்காரு…”என கொடுத்தாள்.

“இவனை!” என கறுவிக் கொண்டே பூவை வாங்கி தலையில் வைத்தபடி நடக்க…

அடுத்து…ஒரு பலூன்  விற்கும் சிறுவன்.

“ஹேப்பி பர்த்டே அக்கா”என ஒரு சிவப்பு நிற ஹார்ட் போட்ட பலூனை கொடுத்தான்.

பூபதி அண்ணா கொடுக்க சொன்னாரா?

“ஆமாக்கா” என்றான் சிறுவன்.

அடுத்த அடி எடுத்து வைக்க பாதை முழுவதும் சிவப்பு நிற ரோஜா மலர்களை அலங்கரித்து வைத்திருந்தான்.லேசாக காற்றடிக்க அந்த ரோஜா மலர்கள் அவளை நோக்கி பறந்து வந்தனர்.

உதட்டை சுளித்து ஒரு அலட்சிய பார்வையை வீசி விட்டு தன் காரை நோக்கி நடந்தாள்.

காரை அடைந்ததும் ஹேண்ட் பேக்கினுள் சாவியைத் தேட.. அது அங்கு இல்லை. திரும்பி பூபதியை பார்க்க.. அவன் தன் சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து காண்பித்தான்.

முறைத்துக் கொண்டே அவனை நோக்கி சென்றாள்.ஒழுங்கா சாவியை கொடு..

கார் எல்லாம் வேண்டாம்.அதோ புல்லட் நிக்குது அதுல போலாம்.

உன்கூட எல்லாம் நான் வர மாட்டேன்.

அப்போ நானும் கார் சாவியைத் தர மாட்டேன்.

“சரி நான் பஸ்ல போய்க்கறேன்” என அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் சென்று நின்று கொண்டாள்.

இவனும் எதிரே இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டான்.

மாலை நேரம் அருகில் இருந்த  கல்லூரி யின் மாணவிகள் பஸ்ஸூக்காக இருபுறமும் வந்து நின்றனர்.

பூபதியின் பக்கத்தில் நின்ற பெண்கள். “ஏய் அந்த லாவண்டர் மைசூர் சில்க் பொண்ண பாருங்கடி”என்றாள் ஒருத்தி.

வாவ் !எவ்வளவு அழகா இருக்காங்க… – இரண்டாமவள்

யாருடி இந்த பொண்ணு தேவதை மாதிரி இருக்காங்க….- மூன்றாமவள்

அவர்கள் பேசியதை கேட்ட பூபதியின் கர்வம் கலந்த புன்னகைக்கு எல்லையே இல்லை.

பிருந்தா புறம் இருந்த பெண்கள்…
“ஏய்  பேபி பிங்க் கலர் சட்டை போட்டுட்டு ஒருத்தே எதிர்ல நிக்கிறான் அவனே பாருங்கடி….”

நானும் அவன தாண்டி ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கே – இரண்டாமவள்

நீயுமா?நானும்தான் என்றாள் மூன்றாமவள்…

எதோ ஒன்னு அவன்கிட்ட இருக்குடி… சந்தன பட்டை,கழுத்துல மின்னிட்டு இருக்கறே செயின்….அது போக அவனோட கண்கள் எவ்வளவு அழகா இருக்கான்….என்றாள் மற்றொருத்தி.

ஆமாடி ஆக்டர் சூர்யா மாதிரி அவனுக்கு பவர்புல் கண் இருக்கு…

இதையெல்லாம் கேட்ட பிருந்தாவிற்கு பொறாமை கலந்த கோபம் மேலிட… இதற்கு மேல் பூபதியை இவர்கள் முன் நிற்க வைக்க அவளுக்கு மனமில்லாமல் …தானாகவே இறங்கி வந்து,புல்லட் அருகில் சென்று நின்று கொண்டாள்.

அப்புறம் என்ன “காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ”என காதல் கிளிகள் இரண்டும் வானில் சிறகடித்துப் பறந்தது.
— தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!