அந்த நேரம் ஒரு நர்ஸ் வந்த மொழியை செக்பண்ணி விட்டு “மேம் கொஞ்சமா நடக்கலாம், காலுக்கு வெய்ட் ரொம்ப போடாதீங்க, சாரை பிடிச்சு கிட்டு நடக்கலாம்,” என்று சொல்லி விட்டு சொல்ல.
மொழி காலை கீழே எடுத்து வைக்க அப்படி ஓர் வலி, வலியில் கண் கலங்கியது,.
Advertisement
இதை பார்த்த ரிஷி நீ நடக்கவெல்லாம் வேண்டாம் உக்காரு இல்ல படு என்றான்.
Advertisement
இல்ல நர்ஸ் வந்து கேப்பாங்களே கொஞ்ச நேரம் நடக்க சொன்னாங்க என்றாள்.
அவங்க வந்தா நடந்தாங்க என்று நான் சொல்லிடுறேன் நீ படு பேசாம என்றான்.
Advertisement
மொழிக்கு கால் வலி எடுக்க அப்படியே படுத்துக்கொண்டாள்.
விடிந்ததும் சுதா குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் வந்து விட..
ரிஷியை முதல் முறையாக நேரில் பார்த்த ஆத்விக்கும், சாத்விக்கும் டாடி என்று கத்தியபடியே அவன் மேல் தாவிக்கொள்ள.
தன் இரண்டு பிள்ளைகளை அள்ளிஅணைத்தவனுக்கு, அவர்களின் ஸ்பரிசத்தில் கண்கலங்கியது, இருவரும் “டாடி, டாடி” என்று அழைத்ததும் மனம் உருகி போனது ரிஷிக்கு, அவர்களை அணைத்த வாரே சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.
இரு குழந்தைகளும் அவனை பார்த்த சந்தோஷத்தில் அழுதிருந்தனர் டாடி என்று அணைத்து.
ரிஷிக்குமே அவர்கள் தன்னை அணைத்து டாடி என்று அழுததும் அவன் கண்களும் கலங்கி இருந்து,.
தன் வாரிசுகளை அணைத்தவன், டாடி வந்துட்டேன்ல, அழ கூடாது என்றான் ரிஷி,,. இருவரும் கண்களை துடைத்து விட்டு, ஆத்வீக் ரிஷியின் கன்னத்தை பிடித்து “எப்போ வந்தீங்க டாடி”
என்றான்.
ரிஷி ஆத்வீக்கு பதில் சொல்லவதற்குள் சாத்வீக் ரிஷியின் கன்னத்ததை தன்னை நோக்கி திருப்பி “எதுல வந்தீங்க டாடி பிளைட்லையா”? என்றான்.
மீண்டும் ஆத்விக் ரிஷியை தன்னை பார்க்க வைத்தவன் “நீங்க ஏன் வீட்டுக்கு வரலா” என்றான்..
சாத்விக் ரிஷி முகத்தை தன் பக்கம் திருப்பி மம்மாவை பார்க்க வந்தீங்க தானே டாடி என்றான்.
ரிஷியின் மடியில் இருவரும் அமர்ந்து கொண்டு அவனை கேள்விகள் கேட்க.
அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி கொண்டிருந்தான் ரிஷி..
சுதாவுக்கு மகனை தன் பேரப்பிள்ளைகளோடு பார்த்ததும் கண்கலங்கியது, கண்ணை துடைத்தபடியே.
“எப்படி இருக்க ரிஷி”, என்றார் சுதா.
“நான் நல்லா இருக்கேன் மா” என்றான்.
அதற்குள் காரை பார்க் பண்ணி விட்டு ராமமூர்த்தி வந்து மகனை பார்த்ததும்.
“எப்படி இருக்க ரிஷி” என்று மகனின் தோளை தொட.
“நல்லா இருக்கேன் பா” என்றான், பிள்ளைகளை மடியில் வைத்துக் கொண்டு..
” என்ன சொல்றாங்க உன் பசங்க” என்றார் பேரன்கள் தலையை தடவி..
“ரெண்டு பேரும் என்னை கேள்வி கேட்டுட்டு இருக்காங்க நான் பதில் சொல்லிட்டு இருக்கேன்” என்றான் சிரித்தபடியே.
இருவரும் தந்தையை பிடித்துக் கொண்டனர்.
இத்தனை வருடம் போனில் பேசி வீடியோ பார்த்த தந்தையை நேரில் பார்த்ததும் இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடியல வில்லை, அவனிடம் பேச ஆயிரம் கதைகள் இருந்தது.
தந்தை மடியை விட்டு இறங்கவே இல்லை.
மொழிக்கு அவ்வளவு சந்தோஷம் பிள்ளைகளை அவனோடு பார்த்ததும்.
அதுவும் அவன் மடியில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் பேசுவதை பார்க்க கவிதை போல் இருந்தது.
சிரித்தபடி அவர்களை பார்த்து இருந்த மொழியை “சாப்பிடுறியா மொழி” என்றார் சுதா.
மொழி “ஊம்ம்” என்று தலையாட்ட, சுதா அவளுக்கு ஊட்டி விட்டார்.
குகன் வீடு சென்று குளித்து விட்டு வர.
வந்தவன் பார்த்தது ரிஷியின் மடியில் இருந்த தன் அக்கா பிள்ளைகளை தான்.
“டேய் உங்க அப்பா வந்தாச்சா” என்றான், அவர்களை வம்பு இழுப்பதை போல.
“எஸ் எங்க டாடி வந்துட்டாங்க.
நாங்க கையெடுத்துட்டு சைக்கிள் ஓட்டி காட்ட போறோம் நீங்க நாங்க கையெடுத்து சைக்கிள் ஓட்டினால் திட்டுவீங்க தானே, எங்க டாடி கிட்ட நாங்க சொல்லிட்டோம். நாங்க ரெண்டு பேரும் கையை புடிக்காம சைக்கிள் ஓட்ட போறோம்” என்று சொல்ல.
“டேய் உங்களுக்கு சைக்கிள் சொல்லிக் கொடுத்தது நான் தான்” என்றான் குகன்.
“எங்க ரெண்டு பேருக்கும் சைக்கிள் வாங்கி கொடுத்தது எங்க டாடி” என்றனர் இருவரும் குகனை பார்த்து.
“ஏண்டா இவ்வளவு நாளு மாமா மாமா என்னை இம்சை பண்ணிட்டு உங்க டாடி வந்த உடனே என்னை கண்டுக்கல ரெண்டு பேரும்” என்றான் செல்ல கோபமாக.
“எங்க டாடி எங்களை பார்க்க பிளைட்ல இருந்து வந்திருக்காரு தெரியுமா?”! என்றனர் இருவரும்.
“உங்க டாடியை நீங்களே வச்சுக்கோங்க எனக்கு என் அக்கா போதும்” என்றவன் மொழி அருகே வந்து அவள் தோளில் கையை போட.
“ஐயோ அது எங்க மம்மா கைய எடுங்க மாமா” என்று இருவரும் ஓடி வந்து குகனை மொழியிடம் இருந்து பிரித்து தள்ளியவர்கள் மொழியின் தோளில் இருவரும் கை போட்டு இழுத்துக் கொண்டனர்.
ரிஷிகளுக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை.
அவர்கள் மொழியை பிடித்திருந்த தோரணையைப் பார்த்து, யாருக்கும் கொடுக்க மாட்டேன் எங்க அம்மாவை என்பது போல.
மொழியை அவ்வளவு இறுக்கமாக பிடித்துக் கொண்டனர். ரிஷிக்கு கஷ்டமாக இருந்தது அவளுக்கு வலிக்குமே என்று.
குகன் ஏதோ சொல்ல அதற்கு பதில் ஆத்விக்கும், சாத்வீக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அங்கே இருந்த அனைவரும் முகத்திலும் சந்தோஷம்.
பிள்ளைகள் இருக்கும் போது வாழ்வு எவ்வளவு சந்தோஷம் என்று உணர்ந்தனர்.
ஆத்வீக்கும், சாத்வீக்கும் மொழியிடமும், ரிஷியிடமும் தாவிக்கொண்டே இருந்தனர் ஹாஸ்பிடலில் இருந்து வீடு வரும் வரை.
ஹாஸ்பிடலில் டாக்டர் மொழியை மெல்ல நடந்து செல்லலாம் என்று கூற.
ரிஷி அவளை நடக்கவே விடவில்லை அவளை தூக்கிக்கொண்டு வந்து தான் காரில் அமர வைத்தான்.
பிள்ளைகள் மொழியை தூக்கியதை பார்த்து கைதட்டி சிரித்தனர்..
வீட்டிற்கு வந்ததும் கூட அவளை நடக்கவில்லை, மெதுவாக தூக்கிக்கொண்டு சோபாவில் வந்து அமர வைத்தான்.
சுதா ஏதும் சொல்லவில்லை சிரித்துக் கொண்டார்.
அவர்களுக்கு தெரிந்து விட்டது இனிமே மகன் மொழியை விட மாட்டான் என்று.
அனைவரும் இரவு உணவு உண்டு முடிக்க மொழியை அவன் அறைக்கு தூக்கிச் சென்ற மகனை பார்த்த சுதா.
“டேய் உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகல, அவளை கீழ ரூம்ல வந்து விடு” என்றார்.
கல்யாணம் ஆகலனா என்ன அவளோட ஹஸ்பண்ட் நான், அவ என் பொண்டாட்டி அது ஊருக்கே தெரியும் ..
டேய் சொன்னா கேளுடா சாத்திர சம்பிரதாயம் யெல்லாம் இருக்குடா நீ பாட்டுக்கு உன் ரூமுக்கு அவளை தூக்கிட்டு போற கீழ கொண்டுவந்து விடுறா என்றார் சுதா..
உனக்கு இப்போ என்ன கல்யாணம் ஆகணும் அவ்வளவுதானே இப்பவே கடைக்கு போய் மஞ்சள் கயிறு வாங்கி வந்து, அவ கழுத்துல கட்டிடுவேன் பேசாம உள்ள போய் உன் பேர பிள்ளைகளோட தூங்கு என்றவன்.
மொழி “நான் கீழே” என்று சொல்ல வந்தவளை முறைத்தவன், அவளை தன் அறைக்கு தூக்கி வந்தவன்..
“உனக்கும் தாலி கட்டி தான் நான் உன்னை என் ரூம்பிற்கு தூக்கிட்டு வரணுமா சொல்லு” என்றான்..
“இந்த முறை எல்லாம் பார்த்தா என் பிள்ளைகளை வளர்த்தே நீ, உன் ரத்தத்தை பாலாக்கி என் பிள்ளைகளை வளர்த்து கொடுத்தியே இதெல்லாம் முறையில் வைத்து தான் செஞ்சீயா நீ, உன் பிள்ளைகளுன்னு தானே செஞ்ச, அதே மாதிரி நான் உன்கிட்ட எல்லாம் உரிமையும் எனக்கு இருக்கு என்றான்.
மொழி அவன் கோபமாக பேசியதும் வாயை மூடிக்கொள்ள..
எனக்கு தெரியும் உன்னை எப்ப கல்யாணம் பண்ணனும், உன் கூட எப்ப வாழணும் ,எனக்கும் தெரியும், எனக்கு யாரும் சொல்ல வேண்டாம்.
இந்த ரூம்ல நீ இருந்தா தான் நான் உன்னை பார்த்துக்க முடியும்.
அதனால இனிமே நீ என் கூட தான் இருக்கிற என்றான் கட்டளையாக.
மொழிக்கு ஏனோ அவன் பேசியது ஆனந்தத்தில் கண் கலங்கியது.
அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு அவள் அழுவது போல் தெரிய.
அழுதா கொன்னுடுவேன் உன்னை என்றான் மிரட்டலாக.
வந்த கண்ணீரை உள் இழுத்துக் கொண்டாள் மொழி.
இனி ஆனந்த கண்ணீர் கூட அவள் கண்ணில் இருந்து வர விட மாட்டேன் என்றான் ரிஷி மனதில்…