Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

குட் லக் சுந்தரி

குட் லக் சுந்தரி….14

குட் லக் சுந்தரி….14

விமானம் மேலே ஏற ஏற கீழ் இருக்கும் அனைத்தும் குட்டி பொருட்களாக தெரிய துவங்கியது.ஒரு கட்டத்தில் அந்த குட்டி பொருட்களும் மறைந்து மின் விளக்குள் மட்டும் பால் வெளி கண்டம் போல் தெரிந்தது.அழகான காட்சி தான் மனதை இரசிக்க வைக்கவில்லை மாறாக வலியை தான் தந்தது.விமான நிலைத்திற்கு நேசன் வரமுடியாது என்று கூறிவிட்டார்.அவரை தனியே விட்டு வர மனமில்லாமல் லட்சுமியும் அவருடன் இருந்துவிட்டார்.

நேசன் அன்று சுந்தரியிடம் பேசியது தான் அதன் பிறகு எதுவும் பேசவில்லை இவள் பேச முயன்ற போதும் தவிர்த்துவிட்டார்.லட்சுமி மட்டுமே அந்த வீட்டில் சற்று இயல்புடன் பேசிக் கொண்டு இருந்தார்.ஒருவிதத்தில் அவருக்கு அத்தனை சந்தோஷமும் கூட இந்த நிகழ்வுகளில் தன் குடும்பம் ஒன்றாக கூடியிருக்கிறதே என்று மகிழ்ந்தவருக்கு,மேலும் மகிழ்ச்சியை கொடுத்தது பேரனின் வரவேற்ப்பு.

“இது கூட நல்லது தான் வசந்தி…..விக்ரம் ரொம்ப கெட்டவன் எல்லாம் இல்ல….அவன் நம்ம சுந்தரியை நல்லா பார்த்துக்குவான் பாரு….”என்றவர்,



Advertisement

“என் தங்கம் உன்னால தான்டீ….இன்னைக்கு என் குடும்பமே ஒன்னா இருக்கு….ஏதோ என் ஜென்ம பலனை அடைஞ்ச மாதிரி இருக்கு….எல்லமே உன்னால தான்…..”என்று சுந்தரியை நெட்டி முறித்து கொண்டாடி தான் தீர்த்தார்.சுந்தரி அவரிடம் எதுவும் பேசவில்லை என்றாலும் அவரின் சந்தோஷத்தை கெடுக்கவில்லை அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.

வரவேற்ப்பு முடிந்த இரண்டு நாட்களில் ரவியும்,நிரோஷாவும் கிளம்பிவிட்டனர்.சுந்தரி தனக்கு சில வேலைகள் இருக்கிறது அதை முடிக்காமல் வரமுடியாது என்று மறத்துவிட விக்ரம் அவளுடன் வருவதாக கூறிவிட்டான்.சுந்தரி தன் கடையின் பொறுப்பை தாயிடம் ஒப்படைத்திருந்தாள்.

“ம்மா….நீ சின்ன சின்ன வேலைகள் செஞ்சா போதும்….ஆரி ஒர்க்குக்கு நான் ஆள் பார்த்துட்டேன் அந்த பொண்ணு வருவா….அவளுக்கு நான் சொல்லி கொடுத்துக்குறேன்….”என்றவள் வசந்தியின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு,

Advertisement

“ம்மா எக்காரணத்தை கொண்டும் கடை மட்டும் மூடிடாத…..”என்று கூற வசந்தி தலையசைத்தாரே தவிர எதுவும் பேசவில்லை.எல்லாம் அவர்களின் கைகளை மீறி சென்று கொண்டிருந்தது.ஏதோ சத்ததில் நிகழ்வுக்கு வந்த சுந்தரிக்கு அதுவரை கரைக்கட்டியிருந்த கண்ணீர்  கண்களில் இருந்து வழிந்தோடியது.இனி எப்போது பார்ப்பேன் அன்னையை,தன் தாத்தாவை,லச்சுவை என்று வாய்விட்டு கூறியவளின் விம்மல் பக்கத்தில் அமர்ந்திருந்தவனுக்கும் கேட்டிருக்க வேண்டும்.

Advertisement

“போதும் பார்த்தது…..சீட்டை சாய்ச்சு உட்காரு….”என்று அழுத்தமாக கூறினான் விக்ரம்.சுந்தரி இன்னும் சன்னலின் ஓரம் நெருங்கி அமர அடுத்த நிமிடம் விக்ரமின் கரம் அவளின் இடை வளைத்தது.

“ஏய்…..”என்று அவள் தன்னையும் மீறி கத்தி விட.அவனோ அதையெல்லாம் பொருட் படுத்தவில்லை.அவளை இழுத்து இருக்கையில் நன்றாக அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்.

“ஒழுங்கா உட்காரு இல்லை இழுத்து என் மேலே போட்டுக்குவேன்….அப்பறம் உனக்கு தான் கஷ்டம்….”என்றான் கண்களை மூடிக் கொண்டே,

Advertisement

“திமிரு பிடிச்சவன்….என் உயிரை வாங்குறான்….”என்று அவனை தன் மனதில் எவ்வளவு திட்ட முடியுமோ திட்டியவள் அமைதியாக உட்கார்ந்துவிட்டாள்.அவர்கள் பயணித்துக் கொண்டிருப்பது பிஸ்னஸ் கிளாஸ் அதில் இரண்டு இருக்கைகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டு அதை அடைத்தாற் போல் கதவு போன்ற அமைப்பும் இருந்தது.இவர்களின் விருப்பமின்றி யாரும் அவர்களை தொந்திரவு செய்ய மாட்டார்கள்.சுந்தரியின் கண்கள் அனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தது.

“என்ன எப்படி தப்பிச்சு ஓடலாம்னு பார்க்குறியா…..”என்றான்.அவனை பார்த்து முறைத்தவள் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தாள்.

“ப்பஹா….கோவமா இருக்காங்கலாம்….ஹலோ……”என்று அவளின் தோள்களை சுரண்ட,அவனின் கைகளை தட்டிவிட அவனும் விடுவதாக இல்லை போல மீண்டும் மீண்டும் செய்ய,

“ஆஆஆ…..ஏன் உயிரை எடுக்குற….”என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனின் புறம் அவள் திரும்ப,

“அதை எடுக்கதானடீ உன்னை கல்யாணமே பண்ணியிருக்கேன்….”என்றான் அல்லட்டல் இல்லாமல்.சுந்தரி அவனை முறைக்க,

“என்னடீ முறைக்குற…..”என்றவனின் கைகள் அவளின் கன்னத்தில் இடிக்க,

“சும்மா என் மேல கை வைக்குற வேலையெல்லாம் வச்சுக்காத…..”என்று பட்டென்று கூறிவிட்டாள்.

“அப்படியா அப்ப கண்டிப்பா நான் செய்வேன்…..”என்றவன் அதை செய்ய தொடங்க சுந்தரி தான் நிலைகுலைந்து போனாள் அவனின் தீண்டகளில்.அவனை அடித்தடித்து ஓய்ந்தவளின் கண்கள் மீண்டும் கண்ணீரை சுரக்க,அவளை இழுத்து தன் பாதி உடலின் மீது போட்டவன்,

“இந்த அழுகுற சுந்தரி மூஞ்சி நல்லவேயில்ல….அதை சொல்ல தான் உன்னை கூப்பிட்டேன்….நீ தான் என்னை டெம்பட் பண்ணிட்ட….”என்றான் அவளின் விழிநீரை துடைத்துக் கொண்டே.

“முதல்ல என்னை விடு….”என்றவளின் குரல் அழுகையில் ஒலிக்க,அவளை விடுவித்து அவளது இருக்கையில் அமர செய்தான்.

“சும்மா சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு இருக்காத…..எனக்கு இதெல்லாம் பிடிக்காது….”என்றான் அழுத்தமாக.

“உனக்கு பிடிக்காதுனு என்னை பார்க்காத…..”என்றாள் அவளும் அழுகையுடனே,

“பார்டா….பேச்செல்லாம் பலமா இருக்கு…..”என்றவன் அவளின் காதோரம் முடிக்கற்றையை ஒதுக்கிவிட வர சுந்தரி தன்னை போல் நகர்ந்துவிட்டாள்.விக்ரமின் கரங்கள் அப்படியே நின்றிருந்தது.

“என்னை ரொம்ப கோபப்படுத்துற சுந்தரி நீ…..”என்றவன் தன்னை சமன் செய்ய முயன்று கொண்டிருந்தான்.சுந்தரி எதுவும் பேசவில்லை ஆனால் அவனின் முயற்சிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.இருக்கையை குத்தினான்,கை முஷ்டிகளை மடக்கி தன் வாயில் வைத்து கடித்து என்று இன்னும் ஏதேதோ செய்து கொண்டிருந்தான்.சுந்தரிக்கு அவனின் செய்கைகள் ஒருவித பயத்தை உருவாக்க,

“விக்ரம்….”என்றாள்.ஆனால் அதை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.அவன் தன் வார்த்தைகளை கவனிக்கவில்லை என்றுணர்ந்தவள்,அவனின் தோள்களை தொட்டு,

“விக்ரம்….”என்று அழைக்க வெடுக்கென்று நிமிர்ந்து அவளை முறைத்தவன்,

“என்ன???”என்றான்,அவனின் முகமும்,குரலும் சுந்தரிக்கு பயத்தை கொடுக்க அவள் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு ஐஇடி( Intermittent Explosive Disorder)(அதீத கோபம்) பிராப்ளம் இருக்கு…..”என்று திடீர் என்று அவன் கூற,

“ஐஇடி???”என்று சுந்தரி முகத்தை சுருக்க,அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டு,

“முதல்ல என் கையை பிடிச்சுக்க….ஐ நீட் யூ…..”என்று தன் நடுங்கும் கரத்தை அவள் புறம் நீட்டி கரகரத்த குரலில் கேட்க,சுந்தரி அந்த குரலில் வசியப்பட்டாளா இல்லை அவனின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில் பிணைந்தாளோ அவளே அறியாள்.அவளின் கரம் நீண்டு அவனுடன் பிணைந்தது அதுவரை அலைகழிந்த விக்ரமின் கண்கள் சற்றென்று ஆசுவாசம் அடைந்தது.தன்னை நிதானித்து கொள்ள அவனிற்கு நேரம் தேவைபட்டது.சுந்தரி எதுவும் கூறவில்லை அமைதியாக அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.சிறிது நேரம் கழித்து விக்ரமே பேச்சை தொடர்ந்தான்.

“என்ன பைத்தியகாரன் கிட்ட மாட்டிக்கிட்டேன் நினைக்கிறியா….”என்று கேட்க,

“நார்மல் ஆகிட்டான் போல….”என்று மனதிற்குள் கூறிக் கொண்டவள் தலையை இடவலமாக ஆட்டினாள்.

“பதில் சொல்லாம தலை ஆட்டினா என்ன அர்த்தம்…..”

“எனக்கு தெரியலைனு அர்த்தம்….”என்றாள் அவள்.நிச்சயத்திற்கும் அவளிற்கு எதுவும் தெரியவில்லை தன் வாழ்க்கை எதை நோக்கி போகிறது என்று தெரியாமல் அவளே அல்லாடி கொண்டிருக்க இதில் இவன் வேறு ஏதேதோ கூறவும் மிரண்டு தான் போயிருந்தாள்.

“ம்ம்….அதீத கோபம்…..எனக்கு இது ஒரு ஐஞ்சு வருஷமா இருக்கு….யாராவது என்னை வெறுப்பேத்துற மாதிரி பேசிட்டா நான் என் கன்ட்ரோலை மிஸ் பண்ணிடுவேன்……”

“ஓஓ….அதனால தான் என்னை பழிவாங்கினீங்களா…..”என்று கண்களை விரித்து கேட்க,அவளின் பார்வையை உள்வாங்கியவன்,

“ம்ம்…..அப்படினும் சொல்லாம்….அன்னைக்கு நீ ரொம்ப பேசிட்ட எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு…அதான் உன்னை ஏதாவது பண்ணணும்னு வந்தேன்….ஆனா உனக்கு என் தாத்தா செக்யூரிட்டி வேலை பார்த்து காப்பாத்தவும் எனக்கு இன்னும் கோபம் தான் அதிகமாச்சு….அதான் உன் கல்யாணத்தை சும்மா தட்டிவிட்டுட்டு இருந்தேன்….அதையும் தாத்தா கண்டுபிடிச்சு என்னை…..”என்றவன் கைகள் தன் போல் அவனின் கன்னத்தை தடவ,சற்று முன் இருந்த இலகு தன்மை இப்போது இல்லை.அதை கவனித்த சுந்தரி,

“அச்சோ திரும்ப அந்நியனா மாறிடாத…..என்னால தாங்க முடியாது…..”என்று அலறிவிட,

“அடியே….கத்தாத….”என்று அவளின் வாயை மூட,அவளோ கண்களில் கலவரத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ப்ச்….இப்ப அப்படி இல்லை…அது அந்த நிமிஷம்….அவரு என்னை அடிச்சதை நினைச்சவுடனே எனக்கு கோபம் வந்துடுச்சு….”

“ஆங்…..வரும்….நீங்க பண்ணதுக்கு உங்களை அடிக்க தான் செய்வாங்க….இல்ல நான் தெரியாம தான் கேட்குறேன்…..அப்படி நான் என்ன பண்ணிட்டேன்…..எதுக்கு இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க…..உங்களால எவ்வளவு பேருக்கு கஷ்டம்….இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டா…..”என்று அவள் ஆக்ரோஷமாக கேட்க,

“ஐ டோன்ட் நோ…..”

“வாட்…..விக்ரம் இது ஒண்ணும் விளையாட்டு இல்ல….இந்த பழிவாங்குற படலத்தால யாருக்கும் நல்லது நடக்க போறது இல்ல அது உங்களுக்கும் தான்….”என்று மூச்சு வாங்க அவள் பேச,அவளை நிதானமாக பார்த்தவன்,

“நானும் அதை தான் சொல்லுறேன்….நான் எப்ப உன்னை பழிவாங்க போறேன்னு சொன்னேன்….”என்று கேட்க,இப்போது சுந்தரி இவன் என்ன லூசா என்பது போல் பார்த்தவள்,

“அப்போ என்னை நீங்க லவ் பண்றீங்க…..”

“ஹா….ஹா…..குட் ஜோக்…..”என்றவனின் குரலில் ஏகத்திற்கும் நக்கல் குடியிருந்தது.அதற்கு மேல் அவனிடம் பேச பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.அவனும் எதுவும் பேசவில்லை அமைதியாக அமர்ந்திருந்தான்.சற்று நேரம் கழித்து அவனே தொடர்ந்தான்.

“என் தாத்தா அடிச்சதையே என்னால தாங்க முடியாம தவிச்சிக்கிட்டு இருந்தா அதுக்குள்ள என் அப்பா அவரும் என்னை அடிச்சிட்டார்….என்னால என்னோட கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியல…..கையில கிடைக்கிறதை எல்லாம் உடைச்சேன்…..அப்ப தான் என் பிரண்ட் டேவிட் வந்தான்….ஏதோ என்கிட்ட பேசிக்கிட்டு இருந்தப்ப உன்னை பத்தி பேசும் போது நான் எதோ போல ஆகுறேன் அப்படினு சொன்னான்….அப்ப நான் அதை நம்பல ஆனா உனக்கு மேரேஜ் அப்படிங்கும் போது எனக்கு பிடிக்கலை…..”என்று கூற சடார் என்று சுந்தரி திரும்பினாள்.

“இப்ப ஏன்டீ சந்திரமுகி மாதிரி திரும்புற…..”

“எனக்கு கல்யாணம் ஆனா உனக்கு ஏன் பிடிக்கல….”

“அது தான் எனக்கும் தெரியலை…..போயும் போயும் உன்னையா நான் லவ் பண்ணுவேன்….”என்று கூற,

“போதும் நிப்பாட்டு…..உனக்கு அவ்வளவு தான் மரியாதை….”என்றுவிட,விக்ரம் சிரித்துவிட்டான்.

“நீ மரியாதையே கொடுக்க வேண்டாம்……உன்னை யாருடீ கொடுக்க சொன்னா….”என்றான் அவளின் சிவந்த மூக்கை இழுத்துவிட்டபடி,அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“சரி கேளு….நான் என்னோட சீக்ரெட் சொல்லுற ஒரே ஆள் நீதான்….நீயும் கேட்க மாட்டேன்னு திருப்பிக்கிட்டா….இங்க பாருடீ….”என்று அவளின் முகத்தை திருப்பி தன்னை பார்க்க செய்தவன்,

“என் மனசுல என்ன நினைச்சேனோ அதை சொன்னேன்….உனக்கு கோபம் வந்தா அதுக்கு நான் என்ன பண்ண….”என்றான்,இப்போது சுந்தரி எதுவும் பேசவில்லை நீ பேசு என்பது போல பார்த்துக் கொண்டிருக்க,

“வெரி குட்….இப்ப இருக்க பாரு….இப்படியே இரு…நான் முழுசா சொல்லிடுவேன்….உன்னை பத்தி நினைச்சவுடனே நான் சிலிப் ஆகுறேன்….அது எனக்கு பிடிக்கல….அதுக்காக உன்னை விட்டுக் கொடுக்கவும் முடியலை…..எனக்கு பித்து பிடிச்சிடும் போல இருந்துச்சு….உடனே என்னோட டாக்டர் கிட்ட பேசினேன்…..அவர் நான் சொன்ன எல்லாத்தையும் கேட்டுட்டு,

“நீ அந்த பொண்ணு கூட இருந்தப்ப பீல் ப்ரீயா இருந்திருக்க….அதனால தான் அவளை விட்டுக் கொடுக்க முடியாம தவிக்குற….நீ உன்னோட இகோவை தள்ளி வச்சுட்டு யோசி….அப்ப உனக்கு தெளிவான ஆன்சர் கிடைக்கும்னு சொன்னார்….”

“நானும் அவர் சொன்ன மாதிரி யோசிச்சேன்….எஸ்….நான் இந்தியா வந்திருந்த போது ஐ பீல் ப்ரீ….அதுவும் உன்னோட சண்டை போட்டுக்கிட்டதெல்லாம் ஆசெம்….எஸ்….அவர் சொன்னது சரி தான்…”என்று மெய் மறந்து கூற,சுந்தரிக்கு தான் பைத்தியம் பிடித்துவிடும் நிலையில் இருந்தாள்.காதலிக்கிறாயா என்று கேட்டால் இல்லை என்று கூறுகிறான் ஆனால் என்னுடன் இருந்த பொழுதுகளை இப்படி ரசித்து கூறுகிறான் இவனுக்கு என்ன தான் வேண்டும் என்று தனக்குள் கேட்டு கொண்டிருந்ததை அவனிடமே தன்னை மீறி கேட்டு வைக்க,அதற்கு அவன் கூறிய பதில் தான் அவளை கொலைவெறியாக்கியது.

“எனக்கு நீதான் மெடிசன்….”என்று கூற,

“என்ன???”

“மெடிசன்…மருந்து….”என்று குடிப்பது போல செய்து காட்ட,

“உன்னைஐஐஐஐ……”என்று அவன் கழுத்தை நெறிப்பது போல கொண்டு போனாள்.

“பிடிக்கனும்னா பிடிச்சடுனும்….எதுக்கு அப்பறம் விடுற….இந்தா….”என்று அவளின் கைகளில் தன் தலையை வைத்தான்.சுந்தரி அயர்ந்து தான் போனாள் அவனின் அழுச்சாட்டியங்களில்.

“அப்போ நீ விரும்ப போறது இல்ல….என்னை மனைவி பார்க்க போறது இல்ல…..”என்று கோபமாக கேட்டாள்.அவளுக்கு நன்கு தெரியும் விக்ரமின் பதில் தன் மனதை தாக்க தான் செய்யும் என்று இருந்தும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.இந்த வாழ்வை ஏற்று கொண்டாயிற்று அடுத்து என்ன என்று தான் யோசிக்க தொடங்கினாள் சுந்தரி.அதனாலே இந்த கேள்வியை கேட்டாள்.அவன் அதற்கு பதில் கூறவில்லை கண்களை மூடி கொண்டான்.

“பதில் சொல்லு விக்ரம்….உனக்கு என்னை எப்போதும் பிடிக்க போறது இல்ல….அப்பறம் எதுக்கு இந்த மேரேஜ் டிராமா…..”

“ஐ நீட் யூ…..”என்று மீண்டும் அவன் அதே பதிலில் வந்து நிற்க,

“ஆஆஆ……”என்று தன் காதை பொத்திக் கொண்டு கத்தியவள்.எழுந்துவிட்டாள் தன் சீட்டிலிருந்து,அவள் எழுந்ததும் அவளின் கைகளை பிடித்தவன்,

“எங்க போற….”என்று கேட்க,

“ப்ச்…விடு….உன் கிட்ட பேசினா நான் பைத்தியமாகிடுவேன்…..”

“ஓய் நான் பைத்தியமா….”

“இல்ல நீ என்னை பைத்தியமா மாத்திக்கிட்டு இருக்க….விடு ஐ நீட் சம் அர்….”

“சரி வா லாபி இருக்கு அங்க போகலாம்….”என்று அவனும் எழுந்தான் அவளுடன்.

“உன் தொல்லை தாங்க முடியாம தான் போனா நீ என் பின்னாடியே வர….”

“அது தான் உனக்கு பனிஷ்மென்ட்…..”என்றான் அலட்டல் இல்லாமல்.சுந்தரி அதன் பின் எதுவும் பேசவில்லை அவனும் அவளை அதன் பின் எதுவும் சீண்டவில்லை.இருவரும் அமைதியாக லாபியில் சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கே சாப்பிட்டுவிட்டு வந்தனர்.

“சரி இனி வீட்டுக்கு போய் பேசிக்கலாம்….ஓகே தூங்கு…..”என்றுவிட்டு அவளிற்கு சீட்டை படுப்பதற்கு ஏதுவாக சரி செய்து தர,சுந்தரி ஏதோ கேட்க வந்தவள் பின் என்ன நினைத்தாளோ வாயை மூடிக் கொண்டு சீட்டில் படுத்து கொண்டாள்.அவள் படுத்தவுடன் அவளின்  ஒற்றை கரத்தை தன்னுடன் பிணைத்துக் கொள்ள,

“ஏன் ஓடிடுவேன்னு பயப்படுறீயா….”என்றாள்,

“இல்ல எனக்கு தூக்கம் வருது…..ஐ நீட் யூ….”என்றான் மீண்டும்.சுந்தரிக்கு எங்கு சென்று முட்டிக்கொள்ளலாம் என்று இருந்தது.ஒன்று மட்டும் புரிந்து போனது அவள் நினைத்ததை விட அவளின் வாழ்வு இன்னும் மோசமாக தான் இருக்க போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!