அவனின் பேச்சில் இருந்த பின் பகுதி பாரதியின் ஈகோவைத் தூண்டி இருக்க வேண்டும்.
“எனக்கு நடிக்கணும்னு அவசியம் இல்ல மிஸ்டர் பார்த்திபன். நான் பாம்பேய பாத்தது இல்ல. ” என மிடுக்காய் கூறி எழுந்து நின்றாள்.
Advertisement
Advertisement
மெய் பேசும் நயனங்கள் இன்று பொய் பேசியதே! ஏன்? என்றிருந்தது பார்த்திபனுக்கு. ஏனெனில் அன்று முதல் விமானப் பயணம் என்று பாரதி சொன்னது உண்மை. அவளின் பயம் வெளிநாட்டில் படிப்பு எனச் சொன்னாளே! அது அத்தனையும் உண்மை. அவளின் ஆசையும் கூட.
இன்று, தன் விழி பார்த்து பேசினாலும், அது உண்மையை உரைக்கவில்லை என்பதை பார்த்திபனால் உணர முடிந்தது. அழகான பொண்ணுங்க பொய் பேசலாமா!! அது கோபத்தை உண்டாக்கி திருடியது இவள் தான் என்று ஐயமர தெரிய வைத்தது. தான் ஏமாற்றப்பட்டதில் கோபம் கொண்டவன், நின்றிருந்த பெண்ணவளை நோக்கி நகர, பாரதி பயப்படவில்லை. மற்றவர்கள் தான் கத்திக் கொண்டே நின்றனர்.
Advertisement
“பொய் சொல்லாத டி… நான் யாருன்னு உனக்கு தெரியாது? ” என விழி இடுங்க கோபமாக கேட்டபடி பெண்ணவளைச் சுவற்றில் சாய்த்து நிறுத்தியவன் கரங்கள் பாரதியின் சட்டை காலரைத் தூக்கி கால்களை பூமியில் இருந்து சில செண்டிமெண்ட் அளவுக்கு உயரே தூக்கியது.
“மரியாதையா எம்மேல இருந்து கைய எடுத்திடு… இல்லன்னா… ” என்றாள் பெண் எச்சரிக்கும் குரலில்,
“என்னடி பண்ணுவ… என்னடி பண்ண முடியும் உன்னால… ” என சொல்லி முடிக்கும் முன் பாரதி தன் கரத்தை அவனின் கன்னத்தில் இறக்கி அவனைத் தள்ளியும் விட்டிருந்தாள்.
அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகமே காட்டியது, கண்டு பிடித்து விட்டான்.. இனி என்னை செய்வது போலிஸ்ஸில் மாட்டி விட்டு விடுவானோ! எனப் பயந்து அவனிடம் கெஞ்சுவாள்… கதறுவாள்… கண்ணீர் வடித்து மீண்டும் ஏமாற்ற நினைப்பாள். சிறிது நேர கெஞ்சலுக்கு பின் அவளை விசாரிக்க ராம்மின் முன் அழைத்து செல்லலாம் என நினைத்திருக்க, அவளின் தைரியமான செயலும், துணிச்சலான பேச்சும் அவனைச் சிலை என நிற்க வைத்தது.
“ஒரு பொண்ணுக்கிட்ட பப்ளிக் ப்லேஸ்ல எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா உனக்கு? என்ன பண்ண முடியும்னா கேட்ட… எல்லாமே பண்ண முடியும் என்னால.” என்றவள் மேசையில் கண்ணாடி டம்ளிரில் இருந்த எல்லா பானங்களையும் அவனின் முகத்தில் ஊற்றினாள். செய்த அபிஷேகம் போதும் என்ற முடிவுக்கு வந்து,
” இதோ பாரு நீ யாரையோ நினைச்சி எம்மேல கை வச்சிட்ட. நீ சொல்றது யாருன்னே எனக்கு தெரியாது. நான் பம்பாய் போதும் கிடையாது. ஃப்ளைட்ல ஏற்னதும் கிடையாது.” என்றவள் தன் வேக நடையுடன் அங்கிருந்த செல்ல,
அவள் அடித்ததும், இவள் அவள் இல்லயோ… என அசையாது நின்றவனின் காதில் ‘ஃப்ளைட்ல ஏற்னது இல்ல..’ என அவள் சொன்னது. இவள் அவள் தான் என்று உறுதிப்படுத்தியது.
“இப்பயும் நீ நல்லவே பொய் சொல்ற. நாம ஃப்ளைட் தான் மீட் பண்ணோம்னு நான் சொல்லவே இல்ல. ஆனா உனக்கு தெரிஞ்சிருக்கு. எனக்கு நல்லா தெரியும் நீ தான் அதுன்னு. உனக்கும் என்னை தெரியும். ” எனக் கத்த,
” நீ என்ன பேசுறன்னே எனக்கு புரியால. நீ யாரயோ தேடுற. அது நான் இல்ல. ” எனச் சொன்னவள் பூஜாவைத் திரும்பி பார்த்தபடி சென்று விட்டாள்.
பூஜா, ” ஐ ஆம் எக்ட்ரீம்லி சாரி… அவ அப்படித்தா.. ஸ்டெயிட் ஃபார்வேர்டு… எதையும் மனசுல வச்சிக்க மாட்டா… பொய் சொல்லவும் மாட்டா. நீங்க கொஞ்சம் தப்பா எடுத்துக்காம பெரிய மனசு பண்ணி அடிச்சதையும் அபிஷேகம் பண்ணதையும் மறந்து மன்னிச்சிடுங்க. ம்… பை…
ஹாங்.. நீங்க இதுக்கு முன்னாடி பாரதிய பாத்திருக்க வாய்ப்பு இல்ல. ஏன்னா அவ சென்னைய தாண்டுனது இல்ல. சோ… அவ சொன்னது தான் சரி. உங்களுக்கு வேண்டிய ஆள வேற எங்கயாது போய் தேடுங்க.” என்றவள், வின்சென்ட்டுக்கு டாட்டா காட்டி விட்டு சென்று விட்டாள்.
“டபூள் ஆக்ஷனா… இல்ல. ரெண்டும் ஒன்னு தான்னு நிரூபிக்கிறேன். ” என அவள் சென்ற பாதையை பார்த்தபடி சொல்லிச் சென்றான்.
அந்த கார் ஆடவன் வேகத்தில் அங்கு அக்காக உடைந்து விழ காத்துக் கொண்டிருந்தது. அத்தனை வேகம்…
“அவ தான் அது. எனக்கு நல்லா தெரியும். She is a culprit.. ” என ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்தபடி உறுமினான் பார்த்திபன்.
“நம்ம டிசைன திருடுனது அந்த பொண்ணு தான்னு உறுதியாவா சொல்ற…. “
“ஆமா டா.. என்னை பாத்ததும் அவ குடுத்த ஜெர்க்… கண்ணு எங்கண்ண பாக்காம அல பாஞ்சது… அவ வந்து உக்காந்தப்ப அவளோட உடல் மொழி நார்மலா இல்ல. கண் அப்பப்ப நான் என்ன பண்றேன்னு கள்ளத்தனமா பாத்தது. “
“ஆனா பாக்க திருடி மாதிரி தெரியலயேடா.”
பாவம் வின்செண்டால் நம்ப முடியவில்லை..
“ஒருத்தர பாத்ததும் அவங்க எண்ண ஓட்டத்த கண்டுபிடிக்க தெரியாத நீயெல்லாம் டாக்டரா!” எனப் பற்களை கடித்துக் கொண்டு கேட்க,
‘நான் என்ன மனோதத்துவ டாக்டரா? இல்ல சந்திரமுகி சரணவனன் டாக்டரா… மனசு நினைக்கிறதெல்லாம் கண்டுபிடிக்க. ‘ என நினைத்ததை வெளியே சொல்ல முடியவில்லை.
“எஸ்… இவ திருடி கிடையாது.. எவனுக்காகவோ இந்த வேலய செஞ்சிருக்கணும். அவன காட்டி குடுத்திட்டா இவள விட்டுடலாம்னு நினைச்சேன்… விட மாட்டேன்.. இனி விட மாட்டேன்.. ” என்ற பார்த்திபன் ஹோலி என்ற வண்ணப்பண்டிகையை விளையாடியவன் போல் வண்ணமயமாக இருந்தான், கோபத்தில்.
பார்த்திபன் விடுவதாக இல்லை. அந்த டிசைன்கள் எதிரியிடம் விற்கப்பட்டால் அவர்களின் குடும்பம் நட்டத்தை ஈடுகட்டி நடுத்தெருவில் நிற்கும் என்பதாலோ! கண்ணில் சிக்கும் நேரம் எல்லாம் மூச்சுக்காற்றில் உஷ்ணமேற்றி தன்னை உருக்கும் மாணிக்கத்திற்காகவோ இல்லை
ஒரு பெண் ஏமாற்றி இருக்கிறாள். அதிலும் அவன் மனதின் ஓரத்தில் இடம் பிடித்த பெண். எப்படி ஏற்பது? அதனால் பாரதியைப் பற்றி அறிய மறுநாளே பூஜாவின் இல்லம் விரைந்தான்.
பார்த்திபனை ரேணுகா சிவப்பு கம்பளம் விரித்து புன்னகையுடன் நன்முறையில் வரவேற்றார். மாப்பிள்ளை… அதுவும் பணக்கார மாப்பிள்ளை… உபசரிப்பில் குறை என்ற சொல்லே இருக்க கூடாது எனும் அளவுக்கு வரவேற்க,
“ஆன்டி பூஜா எங்க?”
“டான்ஸ் க்ளாஸ் போயிருக்கா மாப்ள… இதோ கால் பண்றேன். அதுவர நீங்க இத சாப்பிடுங்க.. ” எனத் தட்டு நிறைய பதார்த்தங்களை நீட்டி, பருக பானங்களை எடுத்து வந்தார்.
“பரவாயில்லை ஆன்டி. க்ளாஸ் எங்கன்னு அட்ரஸ் தந்திங்கன்னா நானே நேர்ல போய் பாத்துக்கிறேன்.. ” எனக் காலில் சுடுநீர் ஊற்றியவன் போல் குத்திக்க, ரேணுகா மகளைத்தான் காண துடிக்கிறான் என நினைத்து பூரித்து போய் அட்ரஸை வழங்கினார்.
” ஓகே ஆன்டி… பை…”
“அம்புட்டு அவசரமாக்கும்.. நேத்து தான பாத்து பேசிக்கிட்டீங்க. போதாதுன்னு இன்னைக்கும் விடியவும் வந்திருங்கிங்க. எம்மள பிடிச்சுப் போச்சோ.” என அவனின் விருப்பம் அறிந்து கொள்ளும் விதமாக நூல் விட,
“இப்ப தான் ஆன்டி பழகிவே ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் பழக வேண்டியது நிறைய இருக்கு. வர்றேன் ஆன்டி.” என அவரின் பாச மழையில் நனைய விரும்பாமல் பட்டும் படாமலும் பேசிவிட்டு சென்றான்.
“பழகி பாத்து சொல்லு எம்மக என்ன டிரைவிங் ஸ்கூல் ஸ்கூட்டியா!!. பழகி பாத்து சொல்றானாம் பழகி. ” என நொடித்துக் கொண்டார் அவர்.
ஆடி முடித்து வியர்வையுடன் வெளியே வந்த பூஜா பார்த்திபனை பார்த்து புருவங்களை சுருக்கினாலும், நேராக அவன் முன் வந்து நின்றாள்.
“என்ன திடீர்னு காலைலயே வந்து நிக்கிறீங்க. நேத்து நைட் நான் மெஸ்சேஜ் பண்ணதுக்கு நீங்க ரிப்ளே பண்ணலங்கையும் நீங்க இன்னும் கோபமாத்தா இருக்கீங்கன்னு நினச்சேன். இப்ப கோபம் போய்டுச்சா? ” எனப் புன்னகையுடன் கேட்ட பூஜாவிடம்,
“அது உன் ஃப்ரெண்ட்டால வந்தது. ஆமா அவ எந்த ஏரியா? எப்படி ஃப்ரெண்ட்டானிங்க?” என்று பாரதியை பற்றி கேட்க,
“நீங்க என்னை பாக்க வந்திங்களா? இல்ல என்னோட ஃப்ரெண்ட பத்தி விசாரிக்க வந்திங்களா? அவள பத்தி தான் விசாரிக்கணும்னா! ப்ளிஸ் நீங்க போலிஸ் ஸ்டேஷன் போறது பெட்டர். ஏன்னா அவ நீங்க நினைக்கிற ஆள் கிடையாது.” என லேசான கோபம் கலந்த குரலில் சொல்ல, பூஜாவின் விரும்பமின்மையை தெரிந்து கொண்ட பார்த்திபன்.
“ச்சச்ச நான் எதுக்கு அவள பத்தி விசாரிக்கணும். ஆல்ரெடி போலிஸ் கம்ப்ளைண்ட் குடுத்தாச்சி. நான் தேடுறவள அவங்க கண்டு படிச்சிடுவாங்க. அதனால நோ டென்ஷன். இப்ப வந்தது உன்ன பாக்கத்தா. நேத்து நாம சரியா பேசிக்க முடியல. சோ… உன்ன ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு கூட்டீட்டு போலாம்னு வந்தேன். ” என்றான்.
பூஜா வேகமாக தலையசைத்து தன் சம்மதத்தை கூறினாள்.
ஃபோனில் அன்னைக்கு தகவலை சொல்லிவிட்டு, பார்த்திபனுடன் ஊர் சுற்ற கிளம்பி விட்டாள்.
அது ஒரு தேவாலயம்.. பார்த்திபனுடன் காரில் சென்றாலும் அவளின் விழிகள் திரும்பி திரும்பி அதைப் பார்த்துக் கொண்டே வந்தது. நேற்று அவள் வின்சென்ட்டிடம் கேட்டது நினைவு வர,
“உனக்கு கிறிஷ்டியனாட்டி மேல இன்ட்ரெஸ்ட் இருக்கா. ” எனக் கேட்டான்.
“எஸ் அதிகமாவே இருக்கு. எனக்கு அதுக்குள்ள போகணும்னு ஆச. ஸ்கூல்ல படிச்ச பசங்க, நிறைய பேர் ஜீசஸ்ஸ பத்தி நிறைய சொல்லி கேட்டிருக்கேன். எனக்கு அவரு மேல ஒரு தனி பற்று இருக்கு. அவர பத்தி நிறைய தெரிஞ்சிக்க ஆசப்படுறேன். ” என்றாள் புது உற்சாகத்துடன்.
“ம்… இருக்கலாம். தப்பில்ல. எல்லா கடவுளும் ஒன்னு தான்.”
“எதை செய்யக்கூடாதுன்னு சொல்றாங்களோ! அத பண்றதுல தனி த்ரில் இருக்கு தெரியுமா?” என்றவன் காரை தேவாலயத்தின் முன் நிறுத்தினான்.
பாவம் அவளிடம் போட்டு வாங்க அழைத்து வந்துள்ளான் என்பது புரியாது போனது பூஜாவிற்கு.
விசாலமான இடம் தான். ஊருக்குள் இல்லாமல் சற்று தள்ளி செங்கல்பட்டு போகும் முக்கிய சாலையில் இருந்தது நம் பாரதியின் வெற்றி மோட்டார்ஸ் என்ற கார் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷெட்.
நான்கு பக்கமும் தகர கொட்டாய் போட்ட ஒரு சிறிய கட்டிடம். அதற்குள் தான் காரின் பழுதுகள் சரி செய்யப்பட்டு, வாட்டர் வாஸ் அதாவது காரை குளிக்க வைத்து சுத்தம் செய்வது போன்ற வேலைகள் நடக்கும். சிறிய ஆஃபிஸ் ரூம் உண்டு.
வெளியே குறைந்தது ஆறு கார்களாவது நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே தாராளமாக நான்கை நிறுத்தி வேலை செய்யலாம். ஐந்து பேர் அந்த செட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு நிறுத்தி வைத்திருந்த காரின் அடியில் தான் பாரதி படுத்திருக்கிறாள்.
“கருப்பு, அந்தப் பத்துக்குபீ பத்து ஸ்பேனர கொண்டா.” எனக் கரத்தை மட்டும் நீட்ட, ஒரு விடலை பையன் அவள் கேட்டதை எடுத்து தந்தான். சில நொடிகளுக்குப் பின் எழுந்து நின்றவள்,
“கருப்பு, ஸ்டாட் பண்ணு.” எனக் குரல் கொடுக்க, அந்த கார் உயிர் பெற்றதன் அடையாளமாக சத்தமிட்டது.
“க்யர் போட்டு ஆக்சிலேட்டர அமுக்கு. ” எனக் கட்டளையிட, சாதாரணமாக கேட்கும் சத்ததை விட அதிக சத்தத்துடன் புகையை அது கக்கியது.
“அடச்ச என்ன சனியெ இது! நேத்துல இருந்து இழுத்தின்னே கெடக்கு. இதுக்கு என்ன தா நோவோ.. ச்ச… ” எனச் சிடுசிடுத்தவள் மீண்டும் காரின் முன் பக்கம் சென்று இன்ஜினை நோண்ட, அவளின் தோளில் யாரோ சுரண்டினர்.
அங்கு வேலை பார்க்கும் விடலை பையன் கருப்பசாமி தான் அவளிடம் இப்படி சில நேரம் விளையாடுவான். மற்ற யாரும் அவளிடம் விளையாட மாட்டார்கள். அவன் என நினைத்து, “கம்முனு கெட கருப்பு… நானே காண்டுல இருக்கேன். ” எனக் குரல் கொடுத்தாள்.
“நானும் தான் காண்டுல வந்திருக்கேன்.” என்ற பார்த்திபனின் குரல் கேட்டு வேகமாக திரும்பினாள் அவள்.
“மாலை வணக்கங்கள் மைம்மா…” என சல்யூட் அடித்து புன்னகை இளவரசனாக உருவெடுத்து பார்த்திபன் நின்றிருந்தான்.
‘மைம்மாவா!!’ எனப் புருவம் சுருக்கினாள் அவள்.
“மணிபாரதி.. அது தான உ பேரு. ரொம்ப பெருசா இருந்த மாதிரி ஃபீல் பண்ணேன். அதா சுருக்கி மைம்மா… லோக்கலா நல்லா சிறப்பா தரம்மா இருக்கில்ல..” என விளக்கம் தந்தான்.
‘நீ என்னமும் வச்சிக்க எனக்கு என்ன வந்தது.’ என்பது போல் வேலையை கவனிக்க, பார்த்திபனும் அவளுடன் சேர்ந்து குனிந்து கொண்டான், பேசிய படியே.
கண்டிப்பாக பூஜாவிடம் தன்னை பற்றி கேட்டு தன்னை காண வருவான் என்று தெரியும். எதிர் பார்த்த ஒன்று தான். ஆனால் நேரில் தன் ஷெட்டிற்கே வந்து நிற்கிறான் என்பது அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாகத்தான் இருந்தது.
“நீ இண்ணாத்துக்குய்யா இங்க வந்த… இங்கெல்லாம் வரக்கூடாது. கெளம்பு… கெளம்பு…” என நிமிர்ந்து முறைத்து பார்த்து விரட்ட,
“கிளம்புறதா!! வந்ததுமே எப்படி? எனக்கு சேர வேண்டியத தா.. வாங்கிட்டு போய்க்கிட்டே இருக்கேன். நீ தந்திட்டேன்னா நான் எதுக்கு இங்க வர்றேன்.”
“ம்ச்… நாந்தா உன்னோடது எதுவும் எங்கிட்ட இல்ல. அது நான் இல்லன்னு தெளிவா சொல்டேனே. பொறவும் வந்து வந்து நிக்கிற. போய்யா என்னத்தையாது எடுத்து மூஞ்சில ஊத்திட போறேன். அப்றம் சொரண்டுனா கூட போவாது. ” என்றவள் அவனைக் கண்டு கொள்ளாது மீண்டும் தலையை இன்ஜினுக்குள் விட,
“நானும் நீ தா அதுன்னு எத்தன தடவ தான் சொல்றது. ஒரு பொண்ணா இருந்திட்டு இப்படி அழுத்தம் திருத்தமா பொய் சொல்றியே இது நியாயமா! பொண்ணுங்க பொதுவாக பொய் சொல்ல மாட்டாங்க. அப்படியே சொன்னாலும் அது தனி அழகா இருக்கும். பாத்ததும் கண்டு பிடிக்கிற மாதிரி க்யூட்டா இருக்கும். இப்ப நீ சொல்லிட்டு இருக்கியே அது மாதிரி.. ” என ரசனையுடன் சொன்னவனை ஏற இறங்க பார்த்தவள்,
“உந்நேரம் எத்தினி காஸ்லின்னு எனக்கு தெரியாது. ஆனா எந்நேரம் ரொம்ப வெல ஜாஸ்தி. அதுனால அத்த கெடுக்காம இங்கருந்து ப்பே. ” என்றவள் காரில் ஏறி அமர்ந்து ஸ்டாட் செய்ய, இம்முறை அது சத்தம் அதிகம் கொடுக்காமல் ஸ்மூத்தாக சக்கரங்களைச் சுழல விட்டது.
“அப்ப என்னோட டிசைனு?”
“இன்னா டிசைனு.” கையில் இருந்த கிரீஸ் கறைகளைத் துணியில் துடைத்தாள்.
“யோவ்… யாருய்யா நடிக்கிறா. நீ தா பைத்தியமாட்டம் வந்து ஒலறிக்கின்னு நிக்கிற. நீயா போய் அட்மிட் ஆகிக்கிறியா. இல்ல நான் கூட வந்து சேத்து விடவா. ” என அவனை பைத்தியக்கார ஹாஸ்பிடலில் சேர்க்க பாரதி துடித்தாள்.
“என்னை நீ எங்க வேண்ணாலும் சேத்து விடு. இல்ல உங்கூடவே வச்சிக்க. எனக்கு அதப்பத்தி கவலையில்ல. ஆனா எங்கிட்ட இருந்து திருடன பென்டிரைவ்.. பென்சில்ல வரைஞ்ச மாதிரியான ஒரு டிராயிங். அக்ரிமெண்ட் பேப்பர். இன்ன பிற பொருட்கள். இத எங்கிட்ட குடுத்திட்டு, யாரு உன்ன எங்கிட்ட திருடச் சொல்லி அனுப்புனான்னு மட்டும் செஞ்சிட்டேன்னா. நான் உங்கிட்ட வம்பு பண்ண மாட்டேன்.
அதுக்கு பதிலா நீயும் நானும் நல்ல ஃப்ரெண்டா இருக்கலாம். முஸ்தப்பா முஸ்தப்பான்னு தோள் மேல கை போடலன்னாலும் சில மீட்டர் இடைவெளி விட்டு டான்ஸ் ஆடலாம்.. என்ன சொல்ற? ” எனக் கை நிட்டி, தன் நட்பு கரத்தை அவள் பக்கம் காட்ட,
பாரதி அவனை இரண்டு நிமிடங்கள் முழுதாக மேல் இருந்து கீழ் வரை பார்த்தாள். பின், ” முடியாது முடியாது… உங்கூடலாம் பாட்டு பாடிக்கினு டான்ஸ் ஆடின்னு சுத்துனா இந்த உலகம் நம்மல மென்டல்ன்னு முத்திர குத்திடும். அதுனால வோணாம்.
காணம போன உன்னோட ஜாமா முக்கியமானதுன்னா போலிஸ்ட்டல்ல போயிருக்கணும்.. அத்த விட்டுப்புட்டு என்னத்துக்கு நீ எம்முன்னாடி வந்து நிக்கிற!”
“திருடெங் கிட்டத்தா திருட்டு பொருள கேக்கணும் மைம்மா. ஸாரி திருடிக்கிட்ட தான் கேக்கணும்.” என்க, திரும்பி நின்று முறைத்தாள் பாரதி.
“நான் ஒன்னியும் திருடி இல்ல. இன்னொருங்காட்டி எம் மூஞ்சி முன்னாடி அத்த சொன்ன. பாத்துக்க…” என எச்சரிக்க,
“மைம்மா… நீ நேத்து ரெஸ்டாரன்ட்ல என்னை பாத்தேல்ல. அப்ப ‘ஹாய்.. நாம இதுக்கு முன்னாடி மீட் பண்ணிருக்கோமா. ‘ அப்படின்னு ஆரம்பிச்சிருந்தன்னு வை. நீ திருடல… நாந்தா கவனக் குறைவுல எங்கயோ போட்டுட்டேன்னு சமாதானம் ஆகிருப்பேன். ஆனா, நீ அப்படி பண்ணல. நீ என்ன பண்ணிருக்கன்னா!!
சும்மா போய்க்கிட்டு இருந்தவன பிடிச்சி இழுத்திட்டு வந்து காப்பி வாங்கி குடுத்து, அத எம்மேலயே அபிஷேகம் பண்ணி, என்னை பாத்ரூம் போச் சொல்லிட்டு, நிதானமா எம்பேக்குள்ள கைய விட்டு திருடீட்டு நடந்தே போய் ஒருத்தே கூட பைக் ஏறி போயிருக்க.
இத நான் சொல்லல. சென்னை ஏர்போர்டுல இருக்குற கேமரா சொல்லுது. பைக் நம்பர் கூட இதுதானா பாரு. ம்… ” என ஒரு துண்டு சீட்டைக் காட்ட, அதில் இருந்தது ராஜாவின் பைக் நம்பர்.
“அங்க ஒரு லேடி ஆஃபிஸ்ஸர ஃப்ரெண்டா பிடிச்சி வச்சிருக்கேன். அவங்க தான் இந்த ரெக்கார்டர்டு வீடியோவ குடுத்தாங்க. ” என ஆதாரத்துடன் காட்டினான்.
‘ஐய்யைய… மாட்டிக்கிட்டோம்…’ என்ற உணர்வு உள்ளுக்குள் இருந்தாலும், வெளியே காட்டாது, பார்த்திபனை முறைத்தபடி நின்றாள் அவள்.
“என்னால உம்மேல கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணி நீ திருடுனத ப்ரூப் பண்ண முடியும். எங்கிட்ட இருந்து நீ அடிச்சிட்டு போனத வாங்க பொம்பள போலிஸ்ஸ கூட்டுட்டு வந்து கைல சங்கிலிய மாட்டி ஜெயிலுக்குள்ள போட்டு விசாரிக்க இந்த ஆதாரம் போதும் தான்.
பட் அது மேட்டர் இல்ல. நீ ஃப்ரெபஸ்னல் திருடியோ! இல்ல சும்மா டயம் பாஸ்க்காக திருடிய2 மாறுனியோ! அது தேவையில்ல. ஏன்னா ஒன்னொன்னுக்கும் பின்னாடி ஒவ்வொரு கத இருக்கும். எனக்கு கத கேட்க டைம் இல்ல. ஏன்னா அது காஸ்லின்னு இப்பதா ஒரு மெக்கானிக் பக்ஷி கூவுச்சி.
எனக்கு தேவையானது அந்த ஃபைல். அத குடுத்திட்டு. யாருக்காக இத பண்ணன்னு சொல்லிட்டா. எந்தப் பிரச்சனையும் பண்ணாம நான் போய்க்கிட்டே இருப்பேன். என்ன சொல்ற.” என்க, பாரதி அசையாது நின்றாள்.
“ஹா… மறுபடியும் அந்தப் பொண்ணு நான் இல்ல. நான் வேற அது என்னை மாதிரியே இருக்குற டுவின் சிஸ்டர்ன்னு எம்ஜிஆர் படம் ஓட்டக் கூடாது. ஓட்டவும் முடியாது. ஏன்னா நீ தா அதுன்னு உன்னோட உயிர் தோழியே வாக்குமூலம் குடுத்திருக்கா. கால் பண்ணி பேசுறீயா?” எனப் பூஜாவிற்கு ஃபோன் அவள் பக்கம் ஃபோனை நீட்டினான்.
அதை வாங்காது இவன் பொய் சொல்கிறானோ! போட்டு வாங்குகிறானோ! என்ற சிந்தனையில் மூழ்கி இருந்தாள் பாரதி. அவளின் முகபாவனைகளை வைத்து அதை உணர்ந்த பார்த்திபன்.
” அது ஒன்னுமில்ல.. காலைல நானும் பூஜாவும் சர்ச்சிக்கு போனோமா! அங்க ஜீசஸ் முன்னாடி உண்மைய மட்டும் தா பேசணும், இல்லன்னா சாத்தன் உங்கழுத்து மேல் குத்து கால் வைத்து உக்காந்து, நீ போற இடத்துக்கெல்லாம் ஃப்ரியா டிராவல் பண்ணி வரும்னு சொன்னேன். உடனே நம்பி அத்தனையையும் சொல்லிட்டா. எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா அவ. சமீபத்துல தா அந்த மாதிரியான பேய் படத்த பாத்தாளாம். அந்த பயத்த அவ கண்ணுல இன்னைக்கும் பாக்க முடிஞ்சது.” என்க, பாரதி உடனே பூஜாவிற்கு ஃபோன் செய்தாள்.