பார்க்கிங் ஏரியாவிற்கு வந்த ஸ்மிருதியும் ஹாசினியும், ஸ்கூட்டியின் அருகே வந்து சேர்ந்தனர். மிதுர்ளா கொடுத்த தலைக் கவசத்தை ஸ்மிருதி தன் தலையில் அணிந்துகொண்டு, ஹாசினிக்கும் ஒன்றைப் பொறுத்தினாள். முதலில் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்த ஸ்மிருதி, வண்டியை ஆன் செய்துவிட்டு ஹாசினியை ஏறச் சொன்னாள்.
Advertisement
“ஆண்ட்டியை கெட்டியா பிடிச்சிக்கோடா,” தன் பின்னால் அமர்ந்திருந்த ஹாசினியிடம் கூறிவிட்டு வண்டியை கிளப்பினாள்…
Advertisement
”ஹாசினி, எங்கே போலாம்?” என ரோட்டைப் பார்த்து வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவள் ஹாசினியிடம் கேட்க, “ம்ம்… ஃபீனிக்ஸ் மால் போலாம் ஆண்ட்டி. அங்க ஃபன் சிட்டிக்குப் போலாம். இங்கே பாருங்க, கேம்ஸ் விளையாடுறதுக்கு ஃபன் சிட்டி கார்டு கூடக் கையோட எடுத்துட்டு வந்துட்டேன்,” என்றாள் ஹாசினி.
Advertisement
”ஹ்ம்ம்… ப்ரிப்பேர்டாத்தான் வந்திருக்க,” என்றவள் சிறிது நிமிடத்தில் கூகுள் மேப் உதவியுடன் இன்றும் அஜயுடன் சென்ற அதே மாலுக்கு ஹாசினியுடன் வந்து சேர்ந்தாள்…
Advertisement
இருவரும் உள்ளே நுழைந்ததும், நேராக மேல் தளத்தில் இருக்கும் ஃபன் சிட்டிக்குச் சென்றனர். அன்று விடுமுறை நாள் இல்லை என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. இரண்டு மூன்று நபர்களே இருக்க, ஸ்மிருதியும் ஹாசினியும் அவ்விளையாட்டைத் தொடர்ந்தனர்…
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக இருவரும் அதே இடத்தில் நேரம் போவது தெரியாமல் விளையாடினர். சில மாதங்களுக்குப் பிறகு ஸ்மிருதியின் அந்தக் குறும்புத்தனம், அவளிடம் இன்று வெளிவந்தது போல் இருந்தது.
மிகுந்த மகிழ்ச்சியில் ஹாசினியுடன் குழந்தையுடன் குழந்தையாக மாறிப் போயிருந்தாள்.
கார்ட்டில் உள்ள பேலன்ஸ் முடிவடைந்ததும் தான் நேரமாகிவிட்டதை உணர்ந்தனர்.
உணவு விற்கும் இடத்திற்குச் சென்று இரண்டு சிக்கன் பாப்கார்னை மட்டும் வாங்கிக் கொண்டு, பேச்சு நடையுடனே அதனைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, வண்டி இருக்கும் இடம் வந்து சேர்ந்தனர்…
இருவரும் பேச்சிலேயே வீட்டிற்கு வந்து சேர, மணி எட்டரையை காட்டியிருந்தது…
ஹாசினியை வீட்டில் விட்டுவிட்டு, தன் வீட்டினுள் நுழைந்த ஸ்மிருதி, அங்கு அஜய் இருப்பதை கண்டும் காணாதது போல் அறைக்குள் செல்ல முற்ப்பட்ட சமயம், “ஒரு நிமிஷம்,” என்ற அஜய்யின் இறுக்கமான குரல் அவளை நிற்க வைத்தது…
அவன் புறம் திரும்பாமல் நின்றவளின் முன்பு வந்து நின்றவன், “வெளியே போறதா இருந்தா சொல்லிட்டுப் போறதுல உனக்கு அப்படி என்ன கஷ்டம்?” என்பவன் இயல்பான குரலிலேயே வினவினான்…
”யார் கிட்ட சொல்லிட்டு போகணும்?” என எகத்தாளமாய் கேட்டவளின் பேச்சை அலட்சியப்படுத்தியவன், “என் கிட்ட கால் பண்ணி சொல்லணும்னு கூட அவசியமில்லை, ஜஸ்ட் ஒரு மெஸ்ஸெஜாவது பண்ணிருக்கலாம்ல?” என்றவனின் குரலில் ஏக்கம் தெரிந்தது…
இந்த முறை அவளுக்கு ஏனோ பேச வார்த்தைகள் வெளி வர மறுக்க, மௌனமாய் நின்றாள்.
”நீ என்னைப் பத்தி எப்படி வேண்டுமென்றாலும் நெனச்சிக்கோ, என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கோ. பட் ப்ளீஸ், இனி ஒரு தடவை இப்படிச் சொல்லாம வெளியே போகாத,” எனக் கெஞ்சல் தொனியில் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
அவன் அவ்வாறு கூறியது ஸ்மிருதிக்கு இன்று சிறு நெருடலை கொடுத்தது, அவன் முகத்தில் தெரிந்த கவலையை அவள் நன்கு அறிந்து கொண்டாள். ‘இவன் தனக்காக எதற்கு கவலைப்படணும்?’ என்று யோசித்தவள், ‘அண்ணனுக்காகத்தான், அவருக்காகத்தான் என்னைப் பாதுகாப்பா பார்த்துக்கனும்னு நினைக்கிறான் போலிருக்கு, எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அண்ணன் இவனை சும்மா விட மாட்டாருல? அதற்காகத்தான் இந்தளவு துடிக்கிறான்,’ என அவளே ஒரு காரணத்தை முடிவு செய்து தவறாக எண்ணிக் கொண்டாள்…
மறுநாள் ஸ்மிருதிக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வர, யோசனையுடன் அதனை ஏற்று காதில் வைத்தாள்…
”ஹெலோ… திர்ஷி, நான் சுமித்,” என்ற குரலில் உற்சாகமானவள், “சுமித்… என்னடா, இப்போ தான் கால் பண்ணணும்னு தோணுச்சா? நம்பர் வாங்கி த்ரீ டேஸ் ஆச்சு,” என்றாள் நண்பனிடம்.
”கொஞ்சம் பிஸி திர்ஷி. அண்ட் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கால் பண்ணேன்,” என்றான் புதிராக…
”என்ன மேட்டர்டா? உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கா?” என ஆவலுடன் கேட்டாள் ஸ்மிருதி.
”ச்சீ… மேரேஜா? அதுக்கெல்லாம் இப்போ இடமில்லை. நான் இன்னும் ஜாலியா இருக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு,” என மனதில் எதையோ வைத்துக்கொண்டு சொன்னான்…
”தேங்க்ஸ் திர்ஷி. அண்ட் நாளைக்கு என் வீட்ல பார்ட்டி இருக்கு, நீ கண்டிப்பா வரணும்,” என்றான்…
இதில் யோசித்தவள், “இல்லைடா, வெரி சாரி சுமித், என்னால வர முடியாது,” என்றாள்…
”ஏன் வர முடியாது? என்ன, உன்னோட நியூ ஹஸ்பண்ட் பர்மிஷன் தர மாட்டாரா?” என நக்கலுடன் கேட்டான் சுமித்…
”அதெல்லாம் இல்லை. என் விருப்பத்தை மீறி என்னை யாராலும் தடுக்க முடியாது…” என்றாள் தெளிவான குரலில்.
”பின்ன வேற என்ன உனக்கு பிராப்ளம்?”
”இல்லைடா, ப்ச்… நான் இன்னொரு நாள் வரேன்,” என்றாள் யோசனையுடன்…
”அதெல்லாம் முடியாது, நீ வந்தே ஆகணும்,” என்றான் சுமித் உறுதியான குரலில்…
மேலும் மறுக்க முடியாத ஸ்மிருதி, “ஓகே… யாரைலாம் பார்ட்டிக்கு இன்வைட் பண்ணியிருக்க?” என்றாள்…
”நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் தான் இன்வைட் பண்ணியிருக்கேன்,” என்றான் சுமித்…
”அப்படியா? ஓகேடா. நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு. ஷ்யூரா நாளைக்கு வரேன்,” என்றாள் ஸ்மிருதி…
”ஓகே திர்ஷி. டுமாரோ லொகேஷன் ஷேர் பண்றேன், நீ அந்த ப்ளேஸ்க்கு வந்துடு,” எனத் தன் வேலை முடிந்துவிட்டதென இணைப்பைத் துண்டித்தான்…
காதிலிருந்து போனை விலக்கியவள், அதனை கையில் உருட்டியபடியே ‘சுமித் பர்த்டே பார்ட்டிக்கு அவன் போக பர்மிஷன் தருவானா?’ என யோசித்தவள், ‘அவன் தடுத்தாலும் நான் பார்ட்டிக்குப் போயே தீருவேன்,’ என்ற முடிவும் எடுத்தாள்…
அன்றைய இரவு, அஜய் தன் வொர்க்கிங் டேபிளில் இருந்த சமயம், தொண்டையை செருமியவாறு அவன் முன்பு வந்து நின்றாள் ஸ்மிருதி…
“என் கிட்ட ஏதாவது பேசனுமா?” என அவளின் புறம் திரும்பினான் அஜய்.
“ஆமா. அது, நாளைக்கு என் ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போறேன்,” என்றாள் நேரடியாக.
”ஏன், நான் வரதுல உனக்கு என்ன பிரட்சனை?” என்றான் கூர்மையான பார்வையுடன்…
”என்னால உங்களை அழைச்சிட்டுப் போக முடியாது. அங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் வருவாங்க. உங்க கிட்ட சொல்லிட்டுப் போகணும்னு நெனச்சன், சொல்லிட்டேன்,” என்றவள் அவனை விட்டு நகர்ந்து சென்றுவிட்டாள். இங்கு அஜய்யின் புருவங்களோ சுருங்க, மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு மடிகணினியின் பக்கம் திரும்பி கொண்டான்,…
அடுத்தநாள் காலை வழக்கம் போல் அஜய் தன் அலுவலகத்திற்குச் சென்றுவிட, ஸ்மிருதி அன்றைய பொழுதினையும் வீட்டிலேயே போக்கினாள். தன் நண்பனிடமிருந்து பார்ட்டி ஏற்பாடு செய்கின்ற இடத்தைப் பற்றியும் அவளுக்கு தகவல் வந்தது…
ஒரு காட்டன் சல்வாரில் பார்ட்டிக்கு செல்வதற்காகத் தயாரானாள். அவன் நண்பன் சொல்லியது போல் ஆறு மணிக்கு மேல்தான் கிளம்பினாள்…
மிதுர்ளாவின் ஸ்கூட்டியில் சுமித் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அது ஒரு ஆடம்பரமான, ஒதுக்குப்புறமாக இருந்த வீடு. சாலையில் கூட மனிதர்களின் நடமாட்டத்தைக் காணவே அரிதாக இருந்தது…
அவ்விடத்தைப் பார்வையால் சுழற்றியவள், ‘இந்த இடத்துக்கு ஏன் வரச் சொன்னான்? பார்ட்டி நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்ல. திரும்பிப் போயிடலாமா?’ என அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம் சரியாக அவளின் போன் ஒலித்தது…
திரையில் சுமித்தின் எண் தோன்ற, யோசனையுடனே அதனை ஏற்று காதில் வைத்தாள்…
”ஹேய் திர்ஷி, ஏன் வெளியேயே இருக்க, உள்ளே வா,” என்றான் வீட்டினுள் இருந்து அவளைக் கண்காணித்த சுமித்…
”ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்துட்டாங்களா? எதுக்கு இந்த மாதிரி ஒரு ப்ளேஸ்ல பார்ட்டி வச்சிருக்க? இங்க நிஜமாவே பார்ட்டி நடக்குதா என்ன?” என்றாள் சந்தேகத்துடன்…
”இது என் டேடோட கெஸ்ட் ஹவுஸ் திர்ஷி. வீட்டுக்குள்ள தான் பார்ட்டி. நீ வா,” என்றுவிட்டு இணைப்பைத் துண்டித்தான்…
வீட்டினுள் பார்ட்டி நடப்பதற்கான சிறு அலங்காரம் செய்திருக்க, ஆனால் ஒரு நபர் கூட இருப்பதற்கான அடையாளமே தென்படாமல் போக, “சுமித்,” என்று குரல் கொடுத்தாள்…
”ஹாங், திர்ஷி! நான் இங்க இருக்கேன்,” என்று அவளின் முதுகுக்குப் பின்னால் குரல் கேட்க, பதறியடித்துக் கொண்டு திரும்பினாள்…
நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டவள், “என்னடா பின்னாடி வந்து பயமுறுத்துற?” என்றவள், “இன்னும் யாரும் வரலையா?” என்றாள் சுமித்திடம்…
அந்த சமயம் எதிர்புற அறையிலிருந்து ஹரீஷ் அவர்களை நோக்கி வந்தான்.
“ஹாய் திர்ஷி, இப்போ தான் வந்தியா?” என்றான் ஹரீஷ்.
”ஆமா… நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்கீங்க. மத்தவங்க எல்லாரும் எங்க?” என்றாள் ஸ்மிருதி குழம்பிய பார்வையோடு.
”எல்லாரையும் இன்வைட் பண்ணேன் திர்ஷி. பட், யாரும் வரலைனு சொல்லிட்டாங்க. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு காரணம் சொல்றான். நம்ம ஹரிணியும், காவியாவும் கூட ரீசன் சொல்லி வரலைனு சொல்லிட்டாங்க,” என்றான் வருந்தியவாறு…
”இன்னைக்கு மார்னிங் வரைக்கும் எனக்கும் இதைப்பத்தி தெரியாது. இப்போ தான் கால் பண்ணாங்க,” என்றான் சுமித்…
ஸ்மிருதிக்கு ஏனோ மனம் நெருட, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாதவள், “ஓகேடா, அப்போ நானும் கிளம்புறேன்,” என்றாள்..
”போலாம் ஸ்மிருதி. வா, முதல்ல கேக் கட் பண்ணலாம்,” என சுமித் முன்னேறி நடக்க, வேறு வழியின்றி ‘இதோடு வீட்டுக்குக் கிளம்பிவிடலாம்’ என்று எண்ணி அவனுடன் நடந்தாள்…
அங்கு ஒரு பெரிய கேக்கில் சுமித்தின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கேண்டிலை பற்ற வைக்க, ஹரீஷ் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடினான். அவனுடன் சேர்ந்து ஸ்மிருதியும் வேறு வழி இல்லாமல் சேர்ந்து பாடினாள்…
மெழுகுவர்த்தியை அணைத்து விட்டு, கேக்கை வெட்டியவன், ஸ்மிருதிக்கு எடுத்து ஊட்டி விட வர, அவள் அதனைத் தன் கையில் வாங்கிக் கொண்டாள். பின் சுமித் மற்றொரு பீஸை வெட்டி ஹரீஷ்க்கு ஊட்டினான்…
”இது உனக்கான கிஃப்ட்,” என்று அவனுக்கு ஒரு வாட்சைப் பரிசளித்தவள், “டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்,” என்றாள்…
”என்ன அவசரம்? இரு ஸ்மிருதி, நைட் டின்னர் முடிச்சிட்டுப் போ,” என்றான் ஹரீஷ்…
”இல்ல… இட்ஸ் ஓகே. இருக்கட்டும். இன்னொரு நாள் பார்த்துக்கலாம். நான் வரேன்,” என்றவள் திரும்பிப் போக எத்தனிக்கையில் அவள் கரம் பிடித்துத் தடுத்தான் சுமித்.
”ப்ளீஸ் திர்ஷி, கோவப்படாத. இன்னைக்கு என் பர்த்டே சோ…” என்றவன் அவளை மேலிருந்து கீழ்வரை பார்வையாலேயே அளவெடுத்தான்…
அவனின் பார்வை அவளுக்கு அருவெறுப்பை உண்டாக்க, “சுமித்,… என்ன பண்ணுற நீ?” என்றாள் கோபமாக..
”ஐ லவ் யூ திர்ஷி… நான் உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்,” எனச் சொல்ல, ஸ்மிருதிக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தர, கோபத்துடன் அவனின் கன்னத்தில் தன் கைவிரல்களை அழுத்தமாகப் பதித்தாள்…
”எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் இப்படி உன்னால எப்படி டா சொல்ல முடிஞ்சது?” என்றாள் ஆத்திரம் குறையாமல்…
”நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன் திர்ஷி? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உன்னை அளவுக்கு அதிகமா லவ் பண்றேன். ப்ளீஸ் என்னை விட்டுப் போயிடாதே திர்ஷி,” என்றவாறு அவள் கரம் பற்றினான்…
தன் கரத்தைப் பற்றியிருந்த அவனின் கரத்தை உதறித் தள்ளியவள், “நீ ரொம்பத் தப்பா பண்ணுற. நான் கிளம்புறேன்,” என்று திரும்பியவளின் முன்பு வந்து நின்றான் சுமித்.
”உன்னால என் அனுமதி இல்லாம இந்த இடத்தை விட்டு அவ்வளவு சீக்கிரம் போயிட முடியாது திர்ஷி,” என்றவனின் பார்வையில் திமிருத்தனமும் அவள் உடலினை வருடிடும் எல்லைமீறிய பார்வையும் வெளிப்பட்டது…
”வேண்டாம் சுமித், ஒழுங்கா வழி விடு,” என்று பயத்திலும் மிரட்டியபடி சொன்னவன், ஹரீஷின் புறம் திரும்பி,.. ”நீயும் இவன் கூடச் சேர்ந்து, இப்படி ஒரு கேவலமான வேலைக்கு உடன் போறியா ஹரீஷ்? ப்ளீஸ், இவனுக்குச் சொல்லிப் புரிய வை,” அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக தான் நின்றான்…
”அவன் கிட்ட என்ன பேச்சு? என் கிட்ட பேசு திர்ஷி. சொல்லு திர்ஷி, என் லவ்வை அக்ஸப்ட் பண்ணிப்பியா?” அவளை நெருங்கி வந்தபடி கேட்க,..
“ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட இப்படி கேவலமா நடந்துகிறியே, நீயெல்லாம் என்ன ஆம்பிளை?” என்றாள் கோபத்தின் உச்சியில் இருந்தவள்…
இதில் ஏளனமாகச் சிரித்தவன், “யார், நான் ஆம்பிளையான்னு கேட்கிறியா?” என்றவன், “சரி, நீ என்ன பெரிய யோக்கியமானவள்னு உன் மனசுல நினைப்பா? முதல் புருஷன் செத்துப் போன ஒரு வருஷம் முடியுறதுக்கு முன்னாடியே, இன்னொருத்தனை கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்க நீ, என்னை ஆம்பிளையான்னு கேட்கிறியா?” என்றான்..
இந்த வார்த்தையில் மனம் அடிபட்டு போனவளின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது. இது வரை இது போல் வார்த்தையை எவரிடமிருந்தும் கேட்காத அவள் மனதால் பலவீனமானது போல் உணர்ந்தாள்..
”என்னடி, நீலி கண்ணீர் விடுறியா? ரெண்டு புருஷனைக் கட்டிக்கிட்டியே, மூணாவதா என்னையும் கட்டுக்கோ,” எனச் சொல்லவந்தவன், நிறுத்தி, “வேண்டாம் வேண்டாம், வெச்சிக்கோ,” என ஏளனமாய் சிரித்தான்…
”ரெண்டு மேரேஜ் ஆனாலும் உன்னோட ஸ்ட்ரக்ச்சர், இன்னும் காலேஜ் படிக்கிற பொண்ணாட்டம் தாண்டி இருக்கு,” என்றவன், அவளை வர்ணித்தபடி நெருங்க, அவள் பயத்தில் பின்னோக்கிச் சென்றாள்…
”காலேஜ் படிக்கும் நாட்களிலிருந்தே உன் மீது எனக்கு ஒரு கண்ணு. எப்படியாவது உன்னை உஷார் பண்ணிடலான்னு பார்த்தேன். ம்ம்ஹும், நீ என் வலையில் சிக்காம போயிட்ட,” என்றவன், “இப்போ உன்னை என் ஆசை தீர அனுபவிக்கப் போறேன்,” என்றவன், “டேய் மச்சான், இங்க நடக்கப் போறத வீடியோ எடுடா,” என ஹரீஷிடம் கூறிவிட்டு, அவள் துப்பட்டாவைப் பிடித்து உருவி வீசி எறிந்தான், அந்த நேரம் சரியாக வீட்டின் வெளிக்கதவு யாரோ ஒருவரால் உடைக்கப்பட்டுத் திறந்தது…