வீட்டின் கதவு உடைக்கப்பட்டுத் திறந்த சத்தத்தில் இரு நண்பர்களும் அந்த திசையில் திரும்ப, அஜய் ருத்ரமூர்த்தியாய் அவர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தான்…
Advertisement
மடிந்து கூனிக் குறுகி ஒடுங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் ஸ்மிருதியைக் கண்டவன், அங்கு என்ன நடந்திருக்கும் என்பதைச் சரியாக யூகித்தவனாய், சுமித்தை நெருங்கி எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நிகழாமல் தன் கைகளால் அவனைச் சரமாரியாக வெளுக்க தொடங்கி இருந்தான்,..
அஜய் கொடுத்த அடியில் இரத்தக் களறியுடன் அவன் தரையில் வீழ்ந்தான். பின் ஹரீஷை நெருங்க, அவனோ… “என்னை எதுவும் செஞ்சிடாதீங்க அண்ணா,” என்றான் பயத்துடன்..
Advertisement
Advertisement
முகத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வந்து, ஹரீஷின் தோளில் தட்டிய அஜய், “தேங்க்ஸ்,” என்றான்…
”இட்ஸ் ஓகே அண்ணா… நீங்க திர்ஷியைப் பாருங்க, நான் போலீஸ்க்கு இன்,பார்ம் பண்றேன்,” என்றுவிட்டு வெளியே நகர்ந்தான் ஹரீஷ்..
Advertisement
அஜய், ஸ்மிருதியின் துப்பட்டாவை எடுத்து வந்து, அவளுக்குப் போட்டுவிட்டு, மடிந்து நடுக்கத்துடன் அழுது கொண்டிருந்த ஸ்மிருதியிடம், “ஆர் யூ ஓகே ஸ்மிருதி, இனி நீ பயப்படத் தேவை இல்லை,” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதீத பயத்தில் இருந்தவள மயக்கி கீழே சரிய, அவளை விழாமல் தாங்கிப் பிடித்தவன், “ஸ்மிருதி, ஸ்மிருதி,” என்றவாறு அவள் பெயர் சொல்லி அவள் கன்னம் தட்டி எழுப்பிட, அவளோ சுயநினைவின்றி கிடந்தாள்…
பின் சற்றும் யோசிக்காமல் அவளை தன் கரங்களில் ஏந்திக்கொண்டவன், தன் வண்டி இருக்கும் இடத்திற்குச் சென்று, முன் சீட்டில் அவளைச் சாய்ந்த நிலையில் அமர வைத்தான்…
அந்த நேரம் போலீஸும் வந்துவிட, அஜய்யும், ஹரீஷும் நடந்ததைக் கூறிய பின்னர், அவர்கள் சுமித்தை கைது செய்து இழுத்துச் சென்றனர்.
”திர்ஷிக்கு என்ன ஆச்சு அண்ணா?” கவலை தேய்ந்த குரலில் கேட்டான் ஹரீஷ்…
”ஒன்னுமில்ல, பயத்துல மயங்கிட்டா. நான் பார்த்துக்குறேன்,” என்றவன்,..
”தேங்க் யூ ஸோ மச் ஹரீஷ்,” என்றான் அவன் கரத்தினை பற்றி…
“எத்தனை தடவை அண்ணா தேங்க்ஸ் சொல்லுவீங்க? திர்ஷி என்னோட ஃப்ரெண்ட். அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பேனா? அந்த சுமித்தோட ப்ளான் என்னனு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நான் இங்க வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. முன்னாடியே தெரிஞ்ச்சிருந்தா திர்ஷி கிட்ட இன்ஃபார்ம் பண்ணியிருப்பேன். என்ன செய்வதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கும் போது தான் உங்க ஞாபகம் வந்தது. உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணேன். உங்க நம்பரை திர்ஷி கிட்ட ஆல்ரெடி வாங்கி வச்சிக்கிட்டதால எனக்கு ஹெல்ப்புல்லா போச்சு,” என்றான் ஹரீஷ்…
”உன்னை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைக்க ஸ்மிருதி உண்மையிலேயே கொடுத்து வச்சிருக்கணும். நான் கிளம்புறேன். டேக் கேர்,” என அவனின் தோளில் தட்டிவிட்டுச் சென்றான்…
குடியிருப்பிற்கு வந்ததும், ஸ்மிருதியைப் படுக்கையில் படுக்க வைத்தவன், அவள் முகத்தில் நீரைத் தெளித்தான். கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியவளுக்கு நடந்தது அனைத்தும் நினைவில் வந்து, பயத்தில் நடுங்கியபடி அலற ஆரம்பித்தாள்…
அவள் நிலமையைக் கண்டு பதறியவன், அவளை நெருங்கி அமர்ந்தபடி, “ஸ்மிருதி, ஸ்மிருதி, இங்கே பாரு, நீ சேஃபாதான் இருக்க,” என்றவன், அவள் கரங்களை அழுத்தமாகப் பிடித்துக் கூறினான்.
கண்களை நன்றாகத் திறந்து இடத்தை ஆராய்ந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானாள். கேவியபடி இருந்தவளுக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுக்க, மறுபேச்சின்றி அதனை வாங்கிப் பருகினாள்…
”ரெஸ்ட் எடுத்துக்க,” என்றவன், அவளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு எழ, அவள் கண்களை மூடிக்கொண்டாள்…
அடுத்தநாள் விடியலில் சூரிய ஒளி கண்ணில் பட்டு கண்விழித்தாள் ஸ்மிருதி. நேற்று நடந்த மோசமான நிகழ்வுகள் நினைவில் வந்து கண்ணீர் சுரந்தது. முகத்தைத் தன் இரு கரங்களால் மூடியபடி சத்தம் வராமல் அழுதாள். அந்த நேரம், “குட் மார்னிங்,” என்ற குரலில் கரங்களை விலக்கி எதிரில் நின்ற அஜய்யைக் கண்டாள்…
”இது உனக்கு,” என்றவன், காபி நிறைந்த கப்பை அவளிடம் நீட்டினான். வாங்கலாமா வேண்டாமா என யோசித்தவள், “என்ன, நீ இருக்க சிச்சுவேஷனை சாதகமாக்கி, உன் மேல் அட்வான்டேஜ் எடுத்துக்குறேன்னு தோணுதா?” இதழ் விரிய அழகாகச் சிரித்தபடி கேட்டான் அஜய்…
அவனின் அந்த புன்சிரிப்பில் அவனையே இமைக்கமால் பார்த்த்வள்,.. ”ஸ்மிருதி,” என்ற அவனது அழைப்பில், வேகமாகத் தலை குனிந்து கொண்டவள், அதே நிலையிலிருந்தே காஃபிக் கப்பை வாங்கிக் கொண்டாள்…
தன் வேலை முடிந்து விட்டதென அதே சிரிப்பை உதிர்த்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான் அஜய்.
ஸ்மிருதி காலைக் கடனை முடித்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த நேரம், அஜய் காலை உணவைச் சமைத்து, அதனை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அந்த நேரம் ஸ்மிருதியைக் கண்டவன், “பிரேக்ஃபாஸ்ட் நானே செஞ்சுட்டேன். பெருசா எதுவும் இல்லை, சாண்ட்விச் தான். எனக்கு இது தான் பெர்ஃபெக்ட்டா செய்யத் தெரியும், சோ இதையே செஞ்சுட்டேன். வா வந்து உட்காரு,” என அவளை அழைத்தான் அஜய்.
சிறு தயக்கத்துடன் அவனுக்கு எதிர் நாற்காலியில் வந்து அமர்ந்தவள், அவன் தந்த சாண்ட்விச்சை சாப்பிடத் துவங்கினாள்.
”ஆபிஸ் போகலையா?” கேட்கலாமா வேண்டாமா என சிறு நிமிட யோசனைக்குப் பிறகே கேட்டாள் ஸ்மிருதி.
”இல்ல… இன்னைக்கு வொர்க் எதுவும் பெருசா இல்லை,” என்பதோடு நிறுத்திக் கொண்டவன், “நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத, இப்போ நீ நல்லா தானே இருக்க?” என்றான் அக்கறையுடன்…
புரியாத பார்வையுடன் தன்னை நோக்கியவனிடம், “நீ… நீங்க மட்டும் வரலைனா இப்போ நான் என்ன நிலைமையில் இருப்பேங்கிறதை நினைச்சிப் பார்க்கவே பயமா இருக்கு,” என்றவளின் கண்களில் கண்ணீர் கசிந்தது…
”நாம நல்லவங்கன்னு நினைக்கிறவங்க எல்லாரும் நல்லவங்களாகத் தான் இருப்பாங்கன்னு நாம நினைச்சிடக் கூடாது. அப்படி நினைச்சா அது தான் நாம செய்ற பெரிய முட்டாள் தனம். ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லி யார் மேல அதிக நம்பிக்கை வச்சிருந்தேனோ, அவங்களுக்கு நான் ஒரு போதைப் பொருளாகத் தான் தெரிஞ்சிருக்கேன். ஃப்ரெண்ட்ஸ்ங்கிற பேர்ல நம்ம கூட பழகுறவங்க எல்லாம் பொய்யானவங்க,” நேற்று நடந்த சம்பவத்தின் தாக்கத்தால் உடைந்து போயிருந்தவள், தன்னையும் மீறி அஜய்யிடம் தன் மனகுமுறல்களை கொட்டி முகத்தை மூடி அழுதாள்…
அவள் அழுவதை வருத்தத்துடன் பார்த்தவன்,..”நீ தப்பா நினைச்சிக்கிட்டு இருக்க ஸ்மிருதி. நீ நினைக்கிற மாதிரி எல்லாரும் பொய்யா இருக்க மாட்டாங்க, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் அந்த இடத்துக்குக் கரெக்ட் டைம்க்கு வந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் உன்னோட ஃப்ரெண்ட் ஹரீஷ் தான்,” என அஜய் சொல்ல, “என்ன சொல்றீங்க?” என்றபடி வியப்பாகப் பார்த்தாள் ஸ்மிருதி….
”ஆமா… உன் ஃப்ரெண்ட் ஹரீஷ் சொல்லி தான், எனக்கு இப்படியொரு ப்ராப்ளம் நடக்குது அப்டிங்கிற விஷயமே தெரிஞ்சது,” என்றவன், நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தான்.
உண்மையை தெரிந்து கொண்ட பிறகு தான், தான் அவசரப்பட்டுத் தன் இன்னொரு நண்பனைத் தவறாக நினைத்து விட்டோம் என்று புரிந்தது அவளுக்கு,…
சற்று நேரம் மௌனமாய் அமர்ந்திருந்தவள்,.. ”சரி, நான் ரூம்க்கு போறேன்,” அறை நோக்கிச் சென்றுவிட்டாள். அறைக்குச் சென்றவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல், சுமித் பேசிய வார்த்தைகளே ரணமாய்க் குத்திக் கிளறியது. ஏனோ அவ் வார்த்தைகள் அவளை மிகவும் பாதித்திருந்தது, அதனைப் பற்றி நினைத்து நினைத்தே விடாமல் அழுது கொண்டிருந்தாள். அந்தப் பக்கமாக வந்த அஜய்யும் இதனைக் காண நேரிட்டது….
’நடந்த சம்பவத்தால இவ ரொம்ப பாதிக்க பட்டிருக்கா, இவளுக்கு நிச்சயம் ஒரு துணை அவசியம் தேவை,’ என்பதைப் புரிந்துகொண்டவன், விஷ்ணுவுக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்தான்…
அடுத்த ஒரு மணி நேரத்தில் அஜய்யின் பிளாட்டில் இருந்தான் விஷ்ணு. வந்ததும் மெல்லமாக விஷயத்தை எடுத்துரைத்ததும், சுமித்தின் மீது கொலை வெறியே உண்டானது விஷ்ணுவிற்கு.
அவனைச் சிரமப்பட்டு அமைதிப்படுத்திய அஜய், ஸ்மிருதியின் நிலமையைப் பற்றி எடுத்துச் சொன்னான்…
அஜய் சொன்னதில், கோபத்தைத் தூர எறிந்த விஷ்ணு, தன் தங்கையைக் காணச் சென்றான்.
“ஸ்மிருதி,” என்ற விஷ்ணுவின் அழைப்பில், தன் தமையனைக் கண்டுகொண்ட ஸ்மிருதி, தாயைக் கண்ட சேயை போல், “அண்ணா,” என்று ஓடிச் சென்று அவள் நெஞ்சில் புகுந்து வெடித்துக் கதறினாள்…
அவள் அழுகையைக் கண்ட விஷ்ணுவே ஒரு நிமிடம் பதறிப் போய்விட்டான், இது நாள் வரையில் தன் தங்கையை இது போல் ஒரு நிலைமையில் காண கண்டிராதவன் துடிதுடித்துப் போனான். அவளுடன் சேர்ந்து அவனுமே கண்ணீர் விடத் தொடங்கிவிட்டான்…
”ஸ்மிருதி… இங்க பாருடா, ஒன்னுமில்லை, அண்ணன் வந்துட்டேன்ல,” தன் வேதனையை மறைத்து அவளைத் தேற்ற முயற்சி செய்தான்…
”பயமா இருக்கு அண்ணா,” என்றவளை என்ன சொல்லி சமாதானம் படுத்துவது என ஒரு நொடி பயந்து தான் போனான் அவனுமே…
”அண்ணா உன் பக்கத்துல இருக்கும் போது உனக்கு என்ன பயம்?” என்றவன், அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு மெத்தையில் அமர வைத்தான்…
“ஸ்மிருதி, நீ தைரியமான பொண்ணு, இந்தச் சின்ன விஷயத்துக்காக ஏன்டா பயப்படுற?” என்றான் அவளைத் தேற்றும் விதமாக…
கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேல் பேசி அவளைச் சிறிது தேற்றியிருந்தவன், “ஏன் ஸ்மிருதி, நீ தனியா போன?” என்றான் கவலை தேய்ந்த குரலில்.
”சாரி அண்ணா, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்,” என்றவள், “அண்ணா… அவன், அவன் எப்படியெல்லாம் பேசுனான் தெரியுமா? என்னை பத்தி ரொம்ப மோசமான வார்த்தைகளால் பேசி காயப்படுத்திட்டான்,” என்றாள் விசும்பலுடன்…
”ஏன் அண்ணா எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்ச? நீ மட்டும் அப்படிச் செய்யாம இருந்திருந்தா, அப்படி ஒரு வார்த்தையை நான் கேட்காம இருந்திருப்பேன்ல?”
”ஸ்மிருதி… அவன் ஒரு பொறுக்கி நாய். அவன் சொன்னதை நினைச்சி நீ இந்தளவுக்கு ஃபீல் பண்ணுறியா?
”என்னால முடியலண்ணா. செக்கண்ட் மேரேஜ்னால தான் எனக்கு இந்த நிலைமை, நான் நம்ம வீட்டுலயே உங்க எல்லார் கூடவும் இருந்திருப்பேன், இப்படி எல்லாருமா சேர்ந்து என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திடீங்களே…” என்றாள் அழுகையுடன்…
”இல்லை ஸ்மிருதி, நீ நினைக்கிறது தவறு. நீ சொல்ற மாதிரி உனக்கு நாங்க கல்யாணம் செஞ்சி வைக்காட்டினா, உன் லைஃப் ஒரு பக்கம் நாசமாகும். இன்னொரு பக்கம் காலம் செல்லச் செல்ல உன்னை எல்லாரும் தப்பான கண்ணோட்டத்துல பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. தப்பான ஆண்கள் உன்னைத் தப்பான பார்வையில் வச்சு பார்ப்பாங்க. மோசமான பெண்கள் புருஷன் இல்லாத உன் மீது அவதூறு பரப்பி பழி பேசுவாங்க. இப்போ நீ சொல்லுற, அம்மா, அப்பா, ஏன் நான் கூட உன் கூட அப்போ இருப்பேன்னு சொல்ல முடியாது. இதே உன் புருசன்னா, காலம் முழுக்க உனக்கு அரவணைப்பா, பாதுகாப்பா இருப்பான்,” என அவளுக்குத் தன்னால் முடிந்த வரை புரிய வைக்க முயற்சி செய்தான் விஷ்ணு…
ஓரிரு நிமிடங்களில் அறையிலிருந்து வெளிவந்த விஷ்ணுவிடம், “என்ன ஆச்சுடா, அவ நார்மலாகிட்டாளா?” என்றான் அஜய் உண்மையான அக்கறையுடன்…
”பெட்டர் டா, கொஞ்சம் நார்மலாகிருக்கா,” என்றான் விஷ்ணு
”ஸ்மிருதியை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போ விஷ்ணு. கொஞ்ச நாள் அவ அங்க இருந்தால் கொஞ்சம் சேஞ்சா இருக்கும்னு தோணுது,” என்றான் அஜய்.
”என்னடா, அவளை மட்டும் எப்படிடா நான் அழைச்சிட்டுப் போறது? இப்போ வரைக்கும் வீட்டுல உள்ளவங்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்” என்றான் வேதனையுடன்…
”விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். ஸ்மிருதியும் சொல்ல மாட்டா. அவளுக்காகத்தான் சொல்றேன், நீ அவ கிட்ட பேசிப் பாரு,” என்றான் அஜய்…
விஷ்ணுவும் ஸ்மிருதியிடம் இதனை பற்றி பேச,.. அவளோ..”இல்லண்ணா, நான் வரல. நான் இங்கேயே இருக்கேன். ஐம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். என்னைப் பத்தி கவலைப்படாதீங்க,” என்றாள் உறுதியான குரலில்…
விஷ்ணுவிற்குத் தன் தங்கையிடம் சிறு மாறுதல் வந்ததற்கான அடையாளம் தென்பட, இவள் அஜய்யைச் சீக்கிரம் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையும் பிறந்தது. அன்று மதிய உணவை அஜய்யின் வீட்டிலேயே உண்டுவிட்டு சிறு நமபிகையுடன் விடைபெற்றான் விஷ்ணு…
தன் தமையன் சென்றதும், அறைக்கு வந்த ஸ்மிருதி, அஜய்யை எண்ணி யோசிக்கத் துவங்கினாள். ‘நான் எவ்வளவு மோசமான வார்த்தைகளால அவரைப் பேசி காயப்படுத்திருக்கேன். பட் அவர் அதைப்பற்றிப் கொஞ்சமும் பொருட்படுத்தாம என்னைப் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கார். ஹரீஷ் மூலமா அவருக்கு விஷயம் தெரிந்தாலும் கூட, சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கார். நான் என்ன தான் இழிவா பேசினாலும் கண்ணியமா நடந்திருக்கிறார். நான் அவரைப் பற்றித் தவறா நினைத்து விட்டேனா? அவர் அப்படி என்ன தவறு செய்தார்? விவாகரத்து செய்து என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டார். அவருக்கு அப்படி என்ன சூழ்நிலையோ? அண்ணா எப்போதும் தவறான நபருடன் சவகாசம் வச்சிருக்க மாட்டார். நான் தான் எல்லாத்தையும் தவறாகவே புரிஞ்சுக்கிட்டேன். என் மேல தான் தவறு, இனிமே அவரை கஷ்டபடுத்துற மாதிரி நடந்துக்க கூடாது’ தன் மீதுள்ள தவறை உணர்ந்து, ஒரு முடிவிற்கு வந்தவளின் நினைவுகள் அவளையும் மீறி கடந்த கால மறுமண நினைவுகளில் மூழ்கியது…