Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் 20

“இவன எப்ப பாத்த?” என்ற ராஜாவின் குரல் கோபமாக இருந்தது

“ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் பாத்தேன். பூஜாக்கு சொந்தம்.”



Advertisement

“அப்பவே ஏன் எங்கிட்ட சொல்ல? இவெங்கிட்டலாம் ஏன் சொல்லனுங்கிற மிதப்பா?” என டேபிளை தட்டி காட்டமாக கேட்டான் ராஜா.

“அப்படில்லாம் இல்ல ராஜா. நீ கொஞ்சம் வேலயா இருந்த… அதா நானே பேசி… சமாளிக்க முடியலன்னா சொல்லலாம்னு இருந்தேன்.” என ராஜாவை சமாதானம் செய்ய பார்த்தாள்.

Advertisement

Advertisement

“ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம்… உங்க கான்வர்சேஷன்க்கு ப்ரேக் விட முடியுமா? அதான் விளம்பர இடைவெளை. ம்… கிடைக்குமா… ஒரே ஒரு நிமிஷம் தான். தேங்க் யூ… ” என இருவரும் அனுமதி தரும் முன் அங்கிருந்த சர்வரை அழைத்தான்.

“ஒரு மட்டன் சுக்கா. ரெண்டு ஆம்லெட். கூடவே ஜின்ஜர் சோடா வித் ஐஸ்ஸோட. ” என ஆர்டர் கொடுத்துவிட்டு,

Advertisement

“இப்ப பேசுங்க. கன்டின்யூ… கன்டின்யூ…” எனத் தட்டில் இருந்த பிரியாணியைக் காலி செய்தபடி, ராஜா பாரதியை திட்டும் காட்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

உணவகத்தின் உள்ளே நுழைந்ததுமே உணவை ஆர்டர் கொடுத்து விட்டான். ” உங்களுக்கு?” என மற்ற இருவரையும் கேட்க, அவர்கள் இவனை முறைத்ததால் ‘பட்டினியாவே கிடக்கட்டும்.’ என்று விட்டு விட்டான். ராஜாவின் திட்டலையும் பாரதியின் திணறலையும் டீவி சீரியல் போல் இமை கொட்டாது கண்டு களிக்க, அவர்கள் இவனின் செயலைக் கண்டு காண்டாகி விட்டனர்.

“என்னப்பா பேசாம அமைதியாகிட்டீங்க? விளம்பர இடைவேளை முடியலயா என்ன! ஆமா இந்த சீரியல எப்ப முடிப்பிங்க? கொஞ்ச போராத்தா இருக்கு. ஆனாலும் என்டர்டெயின்மென்ட்டுக்கு ஓகே தான். வேற வழி… திட்டுங்க ப்ரோ.. ம்… உங்ககிட்ட சொல்லாம என்னை பாக்க வந்திருக்கா. ம்… ஸ்டாட்…” என உற்சாகப்படுத்த,

“நீ என்னத்தையோ சொல்றேன்னு சொல்லி தான கூட்டீட்டு வந்த. அத்த விட்டுடுட்டு தின்னுக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்?” பாரதி.

“சாப்பிடுறேன்னு அர்த்தம். பசிக்கிதுன்னு அர்த்தம்.”

“ம்ச்…” என இருவரும் சலித்துக் கொள்ள, தட்டில் இருந்ததையும் வெய்ட்டர் கொண்டு வந்ததையும் உண்டு முடித்த பின் தான் பேச தொடங்கினான்.

“நல்ல சாப்பாடு. நீங்க தான் எதுவும் வேண்டாம்னு சொல்டீங்க. ஒரு ஜூஸ், காப்பி இதுமாதிரி எதாவது குடிக்கலாம்ல?” என அக்கறையுடன் கேட்க,

“என்ன சொல்ல வந்திருக்கியோ அத்த சொல்லிட்டு கிளம்பு.”

“கிளம்புறதா… இந்த இடத்துல நாந்தா வில்லன்… ஏன்னா உங்க குடுமி எங்கிட்ட இருக்கு.” என ஃபோனில் நேற்று பாரதியிடம் காட்டிய வீடியோவை, ராஜாவிடம் காட்டினான்.

“வில்லனு ஒத்துக்கிறீங்களா? ம்… பட் என்னை நீங்க மிரட்டுறீங்க. it’s okay… எனக்கு பெரிய மனசு. சோ நான் உங்கள மன்னிச்சிட்டேன். ஏன்னா ஒருத்தர ஒருத்தர் குற்றம் சொல்லிட்டே இருந்தா நடக்குற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. எனக்கு அது தா வேணும். தீர்வு… அது கிடைக்க நான் என்ன சொல்ல வந்திருக்கேன்னா… நீ திருடுன டிசைன்ன எங்கிட்ட ஒப்படைக்கணும்.‌ பென்டிரைவ் வேண்டாம். அக்ரிமெண்ட் பைஃல் கூட வேண்டாம். அதுல இருக்குற ஜுவல் டிசைன். அது மட்டும் வேணும்.”

” ம்… அப்றம்…” கூலாக பாரதி கூற,

“பூஜா சொன்னா. அந்த பைஃல்ஸ் இப்ப வரைக்கும் உங்ககிட்ட தான் இருக்குன்னு. உன்ன திருட சொன்ன பாஸ்க்கிட்ட சரண்டர் பண்ணலன்னு. அத எங்கிட்ட ஒப்படைச்சிட்டா! உங்க மேல போட்ட கேஸ்ஸ ஒன்னுமில்லாம பண்ணிட முடியும். நீங்க சுதந்திரமா சுத்தலாம்.”

“சுதந்திரமாவா… ஹிம்… நாங்க அந்த டிசைன்ன திருடச் சொன்னவெங்கிட்ட ஒப்படைக்கலன்னா என்னாகும்ன்னு பூஜா சொல்லிருப்பாளே. ஏன்னா உங்குடும்பத்த மாட்டி விடணும்னு இவ்ளோ வேலை செஞ்சவன். அவன ஏமாத்துனா… என்ன பண்ணுவான்னு சொல்லவே முடியாது.” பாரதிக்குக் கவலையாக இருந்தது.

இரு சுவருக்கு இடையே தலையைவிட்டு சிக்கிக் கொண்டு எடுக்க முடியாத படியான ஒரு இன்னலில் இருக்கிறாள் பாரதி.

ராஜா, இங்கு பார்த்திபனின் முகத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தான். இந்த முகத்தை நம்பலாமா வேண்டாமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் அவன்.

“அதுக்கும் எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. எடுத்தது தெரியாம இருக்க… எடுத்தது மாதிரியே ஒன்ன செஞ்சி வச்சிட்டா… எது ஒரிஜினல்? எது டூப்ளிக்கெட்டுன்னு விவரம் தெரிஞ்சவங்களால தா கண்டு பிடிக்க முடியும்.”

“என்னதாய்யா சொல்ற!! புரியிற மாதிரித்தா சொல்லித்தொலையே. “

வேறு ஒன்றுமல்ல… வரலெட்சுமி வரைந்து வைத்த டிசைன்கள் அவை. அதைப் பார்த்திபனின் குடும்பம் மற்றும் யாரிடம் காட்டி ஒப்புதல் பெற்று வந்தானோ, அந்த மும்பைக்காரன், அவனைத் தவிர இதுவரை வேறு யாரும் பார்த்தது இல்லை. அதற்கு பேக்கப் சாஃப்ட் காப்பி உட்பட வேறு நகல் கிடையாது. அது ஒரிஜினல்… தனித்துவமானது.

இப்பொழுது வரை பாரதி மாறனிடம் அதைக் கொடுக்காததால் மாறனுக்கும் அந்த டிசைன்னு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அசலை பார்த்திபனிடம் ஒப்படைத்து விட்டு, அசல் போலவே நகலை மாறனிடம் கொடுத்தால் பிரச்சனை முடிந்தது.

பார்த்திபன் குடும்பம் அந்த மும்பைகாரனிடம் நல்ல பேரு எடுத்து பிஸ்னஸ் பேசி லாபம் பாக்கும். பாரதிக்கு அவளுடைய வீடு கிடைக்கும். மாறனுக்கும் பார்த்திபன் குடும்பத்த கதிகலங்க வச்ச ஒரு திருப்தி கிடைக்கும்.

எல்லா பக்கமும்…‌ எல்லாருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் நம் பார்த்திபனால் மட்டும் தான் யோசிக்க முடியும்.

” நான் சொன்னது புரிஞ்சதா. ம்… என்னப்பா Excellent-டா ஒரு ஐடியாவ யோசிச்சிருக்கேன். அதுக்கு பாராட்டு விழா… விருது… இந்த மாதிரி எதுவும் இல்லன்னாலும், சூப்பர்ன்னு நீங்க சொல்லிருக்கலாம்.” என உச்சுக்கொட்டி வருத்தப்பட,

“எல்லாம் ஓகே… ரெண்டும் வேற வேறன்னு அவனுக்கு தெரியாதுன்னு எப்படி உறுதியா சொல்ற? சந்தேகம் வந்திட்டா!” என்றாள் பாரதி.

அவளுக்கும் மாறனின் மிரட்டலுக்கு பணிந்து செல்வதா என்ற எண்ணம் இருந்தது. பார்த்திபன் சொன்னது போல் செய்து, ஏமாறி போய் நிற்கும் மாறனின் முகத்தைக் கற்பனை செய்து பார்க்கும் போதே மனம் மகிழ்ந்து போனது. அது போல் நடந்தால்… எப்படி இருக்கும்? என மறைமுகமாக பார்த்திபனின் திட்டத்திற்கு சம்மதத்தை கூறினாள்.

“ஆப்போனென்ட் கண்டு பிடிக்க கூடாதுனா சந்தேகம் வராத மாதிரி டிசைன்களை ரெடி பண்ணு. அதே மாதிரியான ஒரு டிசைன அவெங்கிட்ட குடு. ஒரிஜினல் மாதிரியே தான் இருக்கணும். சின்ன சின்ன விசயங்கள தவிர வேற எதுலயும் மாற்றம் இருக்க கூடாது.

நீ இந்த அயன் படம் பாத்திருப்பன்னு நினைக்கிறேன். அதுல khadi Kraftக்கும் kadi Kraft இடைல இருக்குற வித்தியாசம் மாதிரி, பூதக்கண்ணாடி வச்சி தேடுனாத்தா தெரிஞ்சிக்க முடியும். அப்படி ஒரு டிசைன்னா அது இருக்கணும்.”

“பட் எப்படி அது சாத்தியம்?” என்றான் ராஜா.

” பண்ணித்தா தீரணேம்.. “

“அதா எப்படி?” என்று சடைத்தாள் பாரதி.

“நீ தா யோசிக்கணும்…” என்றதும் ‘நானா!’ என்பது போல் அதிர்ந்து பார்க்க,

“நீ தான்…”

“என்னா…”

“ம்.. ஆட்டையப் போட தெரியுது. ஆர்டிஸ்ட் ஆகத் தெரியாதா?”

“யோவ்.. எனக்கு படம் வரைஞ்சில்லாம் பழக்கம் இல்ல.”

“பழகிக்கம்மா… திருடுறதுக்கு மட்டும்தா டிரெயினிங் போவியா. டிராயிங் பண்ண போக மாட்டியா. “

“என்னால முடியாது. நான் எப்படி! நீ எந்த டிசைன பத்தி பேசறன்னு கூட எனக்கு சரியா தெரியல. அதுல அதே மாதிரி வரைஞ்சி… ம்கும். ” என மறுத்தாள்.

” ஏன் நீயே ரெடி பண்ணி தரக்கூடாது?” என்றான் ராஜா.

” கூடாது தா. ஏன்னா அது என்னோட பிரச்சன இல்லயே ப்ரோ. டிசைன் கைக்கு வரணும் அது மட்டும் தா எம்பிரச்சன. இப்ப நான் உங்களுக்கு குடுத்தது ஓசி ஐடியா. அதுவும் உனக்காகத்தா மைம்மா… நீ சோகமா உக்காந்தா மனசுக்கு கஷ்டமாகிடும் அதா நீ தப்பிக்க ஐடியா குடுத்தேன்.

எனக்கு என்னோட டிசைன்ஸ் வேணும். அதுவும் இப்பவே… நாங்குடுத்த ஐடியாவ ஏம்பக்கமே திரும்பி விடலாம்னு திட்டம் போட வேண்டாம். எங்கிட்ட பூதக்கண்ணாடி இருக்கு… அதுனால எது என்னோடதுன்னு ஈசியா கண்டுபிடிக்க முடியும். மாறுபடியும் ஏமாற மாட்டேன். ஒருக்க தான்.” என்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“பாத்தது போதும். வாங்க போகலாம். இப்பவே என்னோட டிசைன் எனக்கு வேணும்.. ” என எழுந்தான்.

“இல்லன்னா…” என ராஜா மிரட்டலாகவே கேட்க,

“இல்லன்னா என்ன பண்ணுவன்னு தான கேக்குறீங்க!!” என்றவன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அந்த வீடியோவை ஓட்டிக் காட்டி,

“என் டிசைன் இப்பவே கிடைக்கலன்னா 420 கேஸ்ல உள்ள போகவேண்டி இருக்கும். நீங்களும் குறிப்பா நீயும் கம்பி எண்ண வேண்டி வரும். ஏன்னா உன்னோட முகம் தா தெளிவா காட்சியா பதிவாகிருக்கு.

அது கூடாதுன்னா டிசைன்ஸ் கைக்கு வரணும். நான் சொன்ன ஐடியாவ செயல் படுத்துறதும் படுத்தாததும் உங்க விருப்பம். பல கோடி மதிப்புள்ள வீட்டையே எழுதி தர்றேன்னு பேரம் பேசிருக்கான்னா. அந்த டிசைனோட மதிப்பு என்னன்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்ல.

அதுனால உங்கள திருடச் சொன்னவனும் சும்மா இருக்க மாட்டான். திருட்டுக் குடுத்த நானும் சும்மா இருக்க மாட்டேன்.

உனக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்கு. தங்கச்சி இருக்கு. நீ இல்லன்னா யாரு அத பாத்துப்பா. சொல்லு… ம்…” எனத் தெளிவாகவே மிரட்டி விட்டு எழுந்து கொள்ள,

“நீங்க யாரும் வரலயா… டைம் ஆச்சி…” எனத் திரும்பி பார்த்து சொன்னவனை பின் தொடருவதை தவிர வேறு வழி தெரியவில்லை இருவருக்கும்.

” ப்ரோ உங்க ஃப்ரெண்ட ஃபாலோ பண்ணியே ஓட்டுங்க. இல்லன்னா தப்பிச்சி தலைமறைவாகிடப் போறாங்க.” என பைக்கில் ஏறிய பாரதியைக் கேலி செய்தபடி ராஜாவின் பைக்கில் ஏறி அமர்ந்த பார்த்திபனுக்கு நிச்சயம் தைரியம் இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

ராஜா நினைத்தால் ஒரே போடு தான். பார்த்திபன் காலி. அதைத் தடுத்து தாக்கு பிடிக்கும் அளவுக்கு வலிமை நம் பார்த்திபனிடம் இருந்தாலும். ராஜாவை சமாளிப்பது முடியாது தான். ஆனால் ராஜா எதுவும் செய்யவில்லை. ஏனெனில் பார்த்திபன் சொன்னது போல் பாரதியின் முகம் தெளிவாக அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

பார்த்திபனை போல் மாறனும் இதையே காட்டி மிரட்டுவானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மாறனுக்கு வேண்டியது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாரதியை அவன் சும்மா விட மாட்டான் என்று தோன்றியது.

ராஜாவிற்கு போலிஸ் கேஸ் என்று ஸ்டேஷன் செல்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் பாரதிக்கு அது புதிது தான். அவளை அங்கெல்லாம் அலைக்கழிக்கும் எண்ணம் வரவில்லை.

பாரதி அந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளாள். அவளை மீட்க வேண்டும். ஒரு முறை குற்றவாளி என்று முத்திரை குத்தி ஜெயிலுக்குள் சென்று விட்டால் போலிஸ் கட்டம் கட்டி விடும். இருக்கும் ஏரியா அப்படி. பின் எங்கு எது நடந்தாலும் விசாரிக்கிறேன் என்று பாரதியை தேடி காக்கி சட்டை வரும். திருட்டு, ப்ராத்தல் எனச் செய்யாத பல குற்றங்களை சுமத்தும். அது கூடாது என்று நினைத்தவனுக்கு பார்த்திபன் கூறிய ஐடியா பிடித்திருந்தது. அவளை விடுக்கிக் நினைத்து.

அத்தோடு பார்த்திபன் மீது சிறு நம்பிக்கையும் வந்தது. அது ஏன் என்று தான் தெரியவில்லை. ராஜாவின் கரத்தை பிடித்த போது பார்த்தினிடம் இருந்த இரும்பின் உறுதியும்,‌அவன் பேச்சில் இருந்த தெளிவும், முக்கியமாக அவன் பாரதியை இதில் மாட்டிவிட கூடாது என்று யோசித்ததும் ராஜாவை கவர்ந்தது. நம்பிக்கை தானா வந்து ஒட்டிக் கொண்டது.

‘போச்சி இவெ பேசி பேசியே ரவுடின்னு அறிமுகம் செஞ்ச ஒருத்தன கவுத்திட்டான்… இனி ராஜா டம்மி ரவுடி தா போல.’

“ப்ரோ… மைம்மா இவ்ளோ வேகமா போது. நீங்க என்ன சைக்கிள விட மெதுவா உருட்டுறீங்க. திருகுங்க ப்ரோ ஆக்ஸிலேட்டர. கியர் போடுங்க.. ” என பாரதியை முந்திச் செல்ல சொல்ல, ராஜாவும் சிறு புன்னகையுடன் பாரதியின் பைக்கை முந்தி சென்றான்.

சிறு குழந்தை போல் ‘பாத்தியா நாங்க உன்ன முந்திட்டோம்… ஹே… ‘ கைகளை ஆட்டி குதூகலத்துடன் தன் பின்னால் குதித்துக் கொண்டே அமர்ந்திருந்தவனை பார்க்கையில், ‘இவெ நிஜ அமுல் டப்பாவாத்தா இருப்பான் போலயே.’ என எண்ணத் தோன்றியது.

வீட்டின் வாசலில் அல்லாது ஏரியாவிற்குள் நுழைந்ததுமே பார்த்திபனை இறங்கச் சொன்னான் ராஜா.

“ஏன் ப்ரோ… நாலு சந்துக்குள்ள விட்டீங்கன்னா வீடு வந்திடப்போது. வாசல்ல நிப்பாட்டாம ஒய் ரோட்டுல? ” எனக் கேட்க,

அவன் அனைத்தையும் விசாரித்து விட்டு தான் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த ராஜா, “நான் மணிக்கிட்ட தனியா பேசணும்.”

“ஓ… ரகசிய திட்டம். தீட்டுங்க தீட்டுங்க… பட்..”

“உன்னோடது உங்கைக்கு வந்திடும். போதுமா… சும்மா அதையே சொல்லிட்டு. போய் ஓரமா நில்லு.” எனச் சிடுசிடுத்துவிட்டு சென்றான் ராஜா.

பின் ஒரே டயலாக்கை மாடுலேஷன மாத்தி மாத்தி சொல்லிக்கொண்டே இருந்தால், கடுப்புகள் வரத்தான் செய்யும்.

கோபமாக வீடு வந்து சேர்ந்த பாரதி பார்த்திபனிடம் இருந்து எடுத்து வந்த பைஃலை தேடி எடுத்து ஓப்பன் செய்து பார்த்திபன் சொன்ன டிசைன்கள் எங்கே என தேடினால் அது கிடைக்கவில்லை. வேகமாக அதைத் தூக்கிக் கொண்டு ராஜாவிடம் சென்றவள்,

“ராஜா இதுல எதுவுமே இல்ல. அவெ சொன்ன டிசைன்னு இதுல இல்ல. ரெண்டு பேரும் சேந்து நம்மல ஏமாத்த பாக்குறானுங்க.” எனக் கத்த,

“அமைதியா இரு மணி.” என்றவனும் பென்டிரைவ்வை தன் மடிக்கணினியுடன் இணைத்து அதிலாவது எதாவது இருக்கிறதா எனப் பார்க்க, அதில் மும்பைக்காரனுடன் போட்ட அக்ரிமெண்ட் மட்டுமே இருந்தது. பார்த்திபன் சொன்ன டிசைன்கள் எங்கும் இல்லை.

இருவருமே குழம்பி போய்தான் இருந்தனர். “இதுலயும் எதுவும் இல்ல மணி.” என்க, அப்போது பார்த்திபனின் குரல் கேட்டது.

வேகமாக வீதிக்கு வந்து பார்க்க, ரத்னாவைக் கிட்டத்தட்ட தூக்கிக்கொண்டு பார்த்திபன் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் வளவளவென பேசிக்கொண்டே வர, ரத்னா சோர்ந்த முகத்துடன் வந்தார்.

“ம்மா… ம்மா.. என்னாச்சி?” எனப் பதறித் துடித்தபடி பாரதி தாயை நெருங்கினாள்.

“உன்னோட அம்மாவா மைம்மா… மயங்கி விழுந்துட்டாங்க ரோட்டுல. அதா தூக்கிட்டு வந்தேன்.” என்றவன் ரத்னாவைப் பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்த்துவிட்டு,

“சரியா சாப்பிடலன்னா கண்ணுல காட்சி தெரியாது. கலர் கலர் குருவி தா தெரியும். முதல்ல சரியா சாப்பிடுங்க.” என பன்னை நீட்ட, அதை ரத்னா வாங்கிக் கொண்டாள். அவரின் கண்ணில் தெரிந்த சோகம் பார்த்திபனை உறுத்தி இருக்க வேண்டும். அவரின் இரு கைகளையும் பற்றி தன் கரத்திற்குள் வைத்தவன்,

“எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்குது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கும், கெட்டது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கு.

‘காரணம் தெரியாது கவலை கொள்ளாதே! காரணம் இருந்தாலும் கலக்கம் கொள்ளாதே! எதுவும் கடந்து போகும்… இதுவும் கடந்து போகும்…’

இது பகவத்கீதையோட பொன் மொழி. சிலருக்கு இது வாழ்க்கைக்கான உறுதி மொழி. உங்களுக்கும் தேவைப்படும். ” என்று சொல்லி சட்டையில் வைத்திருந்த துண்டு பிரசுரம் ஒன்றை எடுத்து நீட்டினான். அதில் மகாபாரத போரில் கலக்கம் கொண்டு நின்ற அர்ஜூனனுக்கு இறைவன் தந்தருளிய கீதா உபதேசங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

பையனுக்குப் பக்தி அதிகம்னு நினைச்சிட வேண்டாம். நம் அகிலு பாட்டி இருக்கிறது. அந்தப் பாட்டி, தினமும் தியானம் செய்ய, பக்கத்தில் இருக்கும் ஒரு மடத்துக்கு செல்வார். அப்பொழுது அங்கு வரும் ஒரு பெண்ணை கரெக்ட் செய்ய கற்றுக் கொண்டான்.‌ இந்த துண்டு பிரசங்கம் கூட ஒரு பஜனைக்கான அழைப்பிதழ். அவர் தான் தந்தார்.

 தனக்கு வந்ததை ரத்னாவிடம் கொடுத்து நல்ல பெயர் வாங்கப் பார்க்கிறான். அது புரியாது ரத்னாவும் அதை வாங்கிக் கொண்டு புன்முறுவல் பூத்தார். அவருக்கு பார்த்திபனின் வார்த்தைகள் ஆருடம் சொன்னது போல் இருந்தது. அவரின் கன்னம் வருடி சென்றான் பார்த்திபன்.

தாயின் புன்னகையை, அதிசயத்தை போல் கண்டாள் பாரதி. கிட்டத்தட்ட சிதைந்து விட்டது என்று நினைத்த அது, இன்று மீண்டும் உயிர் பெற்றது போல் இருந்தது. ரத்னாவைப் படுக்க வைத்துவிட்டு பார்த்திபனின் பின்னாலேயே வந்தாள் பாரதி.

“யோவ்… பார்த்திபா. நில்லு.. ” எனக் கத்த,

“என்ன மைம்மா? ரெண்டு பேரும் சேந்து திட்டம் வகுக்கப் போறதா ப்ரோ சொன்னாரு. வகுத்துடீங்களா, ஈவு மீதி வராம.” என நக்கலாக கேட்க, அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து வந்தான் ராஜா.

“டிசைன்னு டிசைன்னுன்னு சொன்னியே. இதுல அப்படி ஒன்னுமில்ல. என்ன டபாக்கிறாயா? ” எனக் கேட்டு மல்லுக்கு நின்றான் ராஜா.

“டபாக்கிறதுன்னா என்னாது ப்ரோ?” எனச் சந்தேகம் கேட்டான் அவன்..ன

” யோவ்… ஏமாத்தப்பாக்குறியாய்யா?” என பாரதி குரல் கொடுக்க,

” நான் எதுக்கு ப்ரோ ஏமாத்தணும். நாந்தா ஏமாந்து நிக்கிறேன். இதோ இவள மும்பைல பாத்தப்ப மாடர்ன் பிகர்னு நினைச்சி, ரூட்டு விட்டு. ச்ச… ரொம்ப வருத்தமா இருந்தது மைம்மா. உன்னால நான் ரொம்ப டிஸ்டப்பாய்மெண்ட் ஆகிட்டேன். அடுத்த மொற இந்த மாதிரி மாடர்ன் காஸ்ட்யூம் போட்டு யாரையும் ஏமாத்ததா. ஏன்னா மாடர்ன் டிரெஸ் போட்டிருந்தாலே நம்மல ஏமாத்ததா வந்திருக்காளேன்னு ஒவ்வொரு பொண்ணையும் பாக்கும் போது ஃபீல் ஆகுது. சட்டுன்னு பேசி பழக முடியல.” என வெட்டியாக பேச, ராஜா அந்த பைஃலை அவனிடம் காட்டி,

“இதுல அது எங்க இருக்கு?” எனக் கேட்டான் பொறுமையின்றி.

“சட்டைல இருந்து கைய எடுத்தா காட்டிறேன் ப்ரோ.” என்றான். ராஜா அப்போது தான் பார்த்திபனின் சட்டையை விட்டான். பார்த்திபன் அந்த பைஃலில் இருந்து வெள்ளை நிற காகிதங்களை எடுத்துக் கொண்டு,

“இது தான் அது… நன்றி.. என்னோடது கிடைச்சிடுச்சு… இனி மாணிக்கம் என்கிற பாட்ஷாட்ட பேச்சு வாங்க வேண்டி இருக்காது. சோறு நிம்மதியா உள்ள இறங்கும். ” என்றபடி நடக்க,

“அதுல ஒன்னுமே இல்ல. ஒன்னுமே இல்லாததுக்கு ஏன் இந்த ஆர்பாட்டம் பண்ண?” எனப் பாரதி கேட்டாள். திருப்பி அவளிடம் வந்தவன் காகிதத்தை அவளிடம் நீட்டி,

“உன்னோட கண்ணுக்கு இதுல ஒன்னுமே தெரியலயா?” எனச் சந்தேகமாக கேட்க, அவள் இல்லை என தலையசைத்தாள்.

“ஐய்யோ பாவம்… இங்க வா நான் காட்டுறேன்.” என்றவன் தன் பையில் இருந்த பாக்கெட் சென்ட்டை காகிதத்தில் அடைக்க, வரலெட்சுமி வரைந்து வைத்த வைர நகைக்கான கேட்லாக் மாடல் மெல்ல கண்களுக்கு தெரியத் தொடங்கியது.

அத்தனை அழகாய் இருந்தது அது. அதை அணிபவள் நிச்சயம் அதிஷ்டசாலி தான் என்று அடுத்தவர் பொறாமை படும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த நேர்த்தி பாரதியை ஈர்த்தது.

“அழகா இருக்கு…” என ரசிக்க,

“கண்டிப்பா இருக்கும்.. ஏன்னா அது என்னோட அத்த டிசைன் பண்ணது. இது ஏன் உங்க கண்ணுக்கு தெரியலன்னு தெரியுமா. இது மயூரியோட ஏற்பாடு. இந்த மாதிரி சீக்ரெட்டா கொண்டு போகும் போது யாரும் காப்பி அடிக்க முடியாது. அதே மாதிரி கஸ்டமருக்கு ஒரு த்ரில்லான எக்சைட் மெண்ட் ஃபீல் குடுக்கும். எப்படி ஐடியா? வாவ் என்னோட உடன் பிறப்ப நினைச்சா எனக்கு புல்லரிக்கிது.

அப்பறம் நான் சொன்ன ஐடியாவ செயல்படுத்துறதும் படுத்தாததும் உங்களோட விருப்பம். ஏன்னா எனக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சிடுச்சி. இனி வேற எதுவும் தேவையில்ல. பை மைம்மா… நன்றி சசிகுமார் ப்ரோ…” என்றவன் அசால்ட்டாக நடந்து சென்றே விட்டான். செல்லும் முன் ராஜாவின் பெயரையும் கேட்டு தெரிந்து கொண்டு தான் சென்றான்.

பாவம் பாரதி.. .ஏமாற்றியவனிடம் ஏமாந்து நிற்கிறாள். இனி பாரதியை யார் வீரமாறனிடம் இருந்து காப்பாற்றுவது? எப்படி இந்த சிக்கலில் இருந்து விடுபடுவது?

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!