Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

மன்னவன் மஞ்சத்தில் 6

6.

மஞ்சம் – 6

அதே கேள்வி நிவேதா மனதிலும் உதித்தது.

நிவேதா தன் தங்கை கொண்டு வந்த பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல, மற்ற அனைவரும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.



Advertisement

‘இவளோ நேரம் அறைக்குள் அமர்ந்து அழுது கொண்டிருந்தவளா இவள்?’ என்ற கேள்வி.

அமர் முகமோ இறுக்கமாக இருந்தது.

அக்னி திரும்பியவன் “நீ பயன்படுத்துற வார்த்தையை பார்த்து பயன்படுத்து. திரும்ப வாங்க முடியாது. அளவுக்கு மீறி பயன்படுத்தி எல்லாத்தையும் இழந்துட்டு நிக்காத. ரொம்ப வருத்தப்படுவ.” என எச்சரிக்கை செய்தான்.

Advertisement

“நான் வருத்த படுற மாதிரி எதையும் செய்யல அண்ணா. நீங்க பண்ணிட்டு வந்துருக்குறது தான் எல்லோருக்கும் வருத்தம்.”

Advertisement

“உனக்கு புரியாது அமர். இப்ப புரியிற மாதிரி என்னால சொல்லவும் முடியாது.” என்றவன் மனைவியை தேடி செல்ல, அவளோ அதற்குள் தூங்கி இருந்தாள்.

காலையில் இருந்து அழுதது, பயம், பதட்டம் எல்லாம் சேர்த்து அவளை ரொம்ப வீக் காக்கி விட, மனதில் ஒரு தெளிவான முடிவு எடுத்த பிறகு அவளுக்கு தூக்கம் நிம்மதியாக வந்தது.

தூங்குபவளை நெஞ்சம் இறுக பார்த்தவன் பார்வை சற்று கீழே இறங்கி, அவள் வயிற்றில் படர்ந்தது.

Advertisement

அவள் அருகில் சென்றவன் அவள் வயிற்றுக்கு குனிய மெல்ல விழிகளை திறந்தவள் அவனை பார்த்ததும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

தூக்கத்தில் கூட ஒரு பாதுகாப்பு உணர்வுடன் தூங்குபவளின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாதே.

அக்னி விலகி வந்தவன் “வந்து சாப்பிடு.”

“எனக்கு வேண்டாம். வாந்தி வரும்.”

“வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை. சாப்பிட்டு எடு.”

“நீங்க போய் சாப்பிடுங்க. நான் கடைசியாக சாப்பிடுறேன்.”

பல்லை கடித்துக் கொண்டு வெளியே வந்தவன் ஒரு தட்டில் அவளுக்கு தேவையான உணவை அள்ளிக் கொண்டு வந்து “சாப்பிடு.” என்றான்.

அதை வாங்கிக் கொண்டாள். அவனோ வெளியே வந்தவன், “அம்மா வாங்க எல்லாரும் சாப்பிடுவோம்.” என்றான்.

“உனக்கும் தமிழுக்கும் என்ன பிரச்சனை அக்னி?”

“பெருசா ஒன்னும் இல்லை சீக்கிரம் சரியாகிடும்.” என்றான் பொதுப்படையாக.

அக்னி அறைக்குள் வரும் போது அவள் சாப்பிட்டு முடித்திருந்தாள்.

அவள் கையில் இருந்த தட்டை வாங்க முயல, அவளோ பின்னுக்கு இழுத்துக் கொண்டு எழுந்து நின்றவள் எழுந்து வெளியே வந்தாள்.

அனைவரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர். அவர்கள் அனைவரையும் பாக்கும் போதே அவளுக்குள் ஒரு நடுக்கம் பிறந்தது. அது அவளுக்காக கிடையாது. குழந்தையை நினைத்து உருவான நடுக்கம்.

அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் சமையல் அறைக்குள் நுழைந்தாள். தான் சாப்பிட்ட தட்டை கழுவி கவுத்து வைத்து விட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டாள் காற்றோட்டமாக.

மாமரத்து காத்தும், வேப்பமரத்தில் காத்தும் ஜில்லென்று அடித்தது.

உள்ளிறங்கிய உணவு அதன் வேலையை காட்டியது. நெஞ்சை கரிக்க தொடங்கியது.

வாசலில் நடக்க தொடங்கினாள்.
குமட்டிக் கொண்டு வந்தது.
அவரமாக தெருவுக்கு வந்து சாப்பிட்ட அனைத்தையும் வாந்தியாக பள்ளத்தில் எடுத்து விட்டாள்.

சமையல் அறையில் இருந்து அவள் வாந்தி எடுப்பதை கண்ட பாட்டி கையில் தண்ணீர் சொம்புடன் வெளியே ஓடுவர அவர் பின்னாடியே மற்றவர்களும் வந்தனர்.

அவள் இருளில் நின்றதால் மற்றவர்களுக்கு தெரியவில்லை. அடிக் குடல் சுருக்கென்று இழுக்கும் வரை உள்ளிறங்கிய மொத்தமும் வெளியே வந்து விட்டது.

அக்னி வீதியில் நின்று வாந்தி எடுப்பவளை கைகளை காட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தான்.

“தண்ணி இந்தா. வாய் கொப்பளி சிட்டு குடி.” என பாட்டி நீட்டினார்.

“ரொம்ப நன்றிங்க.” என்றபடி அதை வாங்கி வாய் கொப்பளித்து விட்டு ஒரு வாய் தான் குடித்தாள் உள்ளே சென்ற தண்ணீரும் வெளியே வந்து விட்டது.

தொண்டை பகுதி முழுவதும் வாந்தி எடுத்து எரிய தொடங்கியது, அவளால் நிற்க கூட முடியவில்லை. தள்ளாடி நடந்து வந்தவள் சோர்வாக உள்ளே நுழைந்தாள். கணத்த மனதுடன் கட்டிலில் சுருண்டு படுத்துக் கொண்டான்.

சூடாமணி மனம் பற்றி எரிந்தது.

“அம்மா அவளுக்கு தண்ணி ஒன்னு தான் குறை. அவன் பிள்ளையை சுமந்துட்டு வந்து நம்ம வீட்டில் வாந்தி எடுக்குறாள். இப்போ இதெல்லாம் வேற நான் பாக்கணுமா? நெஞ்செல்லாம் எரியுது.” என்றவர் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அக்னி உதட்டை கடித்துக் கொண்டான் தாய் வார்த்தைகளை கேட்டு.

அக்னி நிற்கிறான் என்று தான் அவரே அளந்து பேசினார். இல்லை என்றால் வார்த்தைகள் வேறு விதமாக வந்து இருக்கும்.

“கோவில் சிலையை செதுக்குற மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக உருவான குடும்பம் இது. இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்கோம். அதுக்குள்ள அவளால் மொத்த சந்தோஷமும் போனது மட்டும் இல்லாமல்.. இதை எல்லாம் சுமக்க வேண்டிய நிலை மா நமக்கு.” என அமரும் கூற, அக்னி அங்கு நிற்க பிடிக்காமல் உள்ளே வந்து விட்டான்.

நிவேதிதா வுக்கு தன் நிலை எண்ணி கழிவிரக்கம் கொண்டது. ‘சோர்ந்து வதந்தி போகும் நிலையில் தோள் சாய்த்து அணைத்துக் கொள்ள ஒரு துணை இல்லையே.?’ என்ற ஏக்கம் அவளை இன்னும் அதிகமாக வதக்கியது.

அதை தாண்டி அந்த வீட்டில் உள்ளவர்களின் குத்தலான பேச்சு அவளை துவண்டு போக செய்தது.

தன் கையை தலையணையாக்கி உடலைக் குறுக்கி கிடந்தவள், சோர்விலே தூங்கி போனாள்.

அக்னி உள்ளே நுழைந்தான் இருளடைந்த அறையை தான் கண்டான்.

வெளிச்சமாக்க விரும்பவில்லை. வெளிச்சம் அறைக்குள் படர்ந்தாலும் அது இன்னும் கூடுதல் வேதனையை தான் அவனுக்கு கொடுக்கும் என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனால் இந்த இருளே போதும் என்று கதவை மூடி விட்டு கட்டிலின் மறுமுனையில் படுத்துக் கொண்டான்.

இன்று இவர்களின் முதலிரவு. ஆனால் அங்கு நடப்பதோ வலியின் போராட்டம்.

மல்லாந்து படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான் அந்த இருளிலும், “மச்சான் நீ என்னை வேண்டாம்னு எத்தனை முறை சொன்னாலும் நான் உன் பின்னாடி வறதை யாராலும் தடுக்க முடியாது. நீ எனக்கு தான் சொந்தம். அதை நீயே நினைச்சாலும் மாத்த முடியாது.” என்ற குரல் அவனுக்குள் கேட்டது.

மெல்ல சிரித்தான் வலியோடு. வலியின் வெளிப்பாடு கண்கள் கலங்கியது.

இத்தனை சீக்கிரம் மூடப்பட்ட அறை கதவை கண்டு அமர் உடல் இறுகியது.

‘என் அண்ணன் காதலுக்கும், அவர் கூட வாழவும் உனக்கு தகுதி கிடையாது.’ என்று நினைத்தான்.

‘என் மகன் சந்தோஷமாக இருந்தாலாவது மனதை தேற்றி கொள்வேன். எதுவுமே நடக்காது என்று தெரிந்தும் நான் எப்படி அமைதியா இருப்பேன். இவளை வீட்டை விட்டு துரத்தி விட்டே ஆகணும். அப்போ தான் என் மகன் வாழ்க்கை நல்லா இருக்கும். எல்லாருடைய கட்டாயத்துக்கு என் மகன் அடிபணியனும்னு என்ற அவசியமும் கிடையாது. என் மகன் சந்தோஷம் மட்டும் தான் எனக்கு முக்கியம். அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். சீக்கிரம் அவளை இந்த வீட்டை விட்டு துரத்தி காட்டுறேன்.’

உண்மை என்னவென்று தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித சபதம் ஏற்றுக் கொண்டனர். இவர்களின் சாபத்தால் காயப்பட போவது இரு காதல் உள்ளங்கள் தான். போராடி சேர்ந்த உள்ளங்களை மீண்டும் பிரிக்க இவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மை தெரிய வரும் போது அனைத்தும் மாறி விடும். யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத நிலைமை.

காலையில் நான்கு மணிக்கே அனைவருக்கும் முன்பே நிவேதிதா எழுந்து விட்டாள்.

தனக்கு தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு வெளியே குளிக்க சென்றாள்.

அங்கே குளியலறை, கழிவறை இரண்டும் வெளியே தான் இருக்கிறது.

குளித்து முடித்து ஆடை மாற்றியவள், வெளியே நின்றபடி கண்ணாடி கூட பார்க்காமல் தலை வாரி முடிந்து அதை கொண்டை போட்டுக் கொண்டாள்.

கல்யாணம் ஆன அடையாளமாக தாலி அவள் கழுத்தின் வெளியே தொங்க, அதை உயர்த்தி பார்த்தவள், ‘நீ வெறும் கயிறுதான். உனக்கு எந்த மதிப்பும் கிடையாது.’ என்றபடி மஞ்சள் கிழங்கு தொங்கும் தாலியை உள்ளே போட்டுக் கொண்டவள், சாணி எடுத்து வந்து கரைத்து வாசலில் தெளிக்க தொடங்கினாள். அதிலிருந்து வந்த வாசனை அவளை குமட்டியது. மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு கூட்டி விட்டவள், மீதமிருந்த மொத்த இடத்தையும் பெருக்கினால். ஜன்னல் மீதிருந்த கோலமாவை எடுத்தாள்.

பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல் ஒரு ரங்கோலி வரைந்து முடித்தவள், சமையல் அறைக்கு சென்று இரவு விட்ட பாத்திரங்களை கழுவி கூடைக்குள் போட்டு, ஏற்கனவே காய்ந்திருந்த பாத்திரங்களை அடுக்கி வைத்தாள்.

முதல் நாள் என்பதால் அனைத்தையும் தேடி தேடி செய்யவே விடிந்து விட்டது.

ஆறு மணிக்கு தண்ணீர் வரவும், குடத்துடன் வெளியே வந்தாள் குடிநீர் பிடிக்க, பைபில் தண்ணீர் வந்தது.

அன்று என்னமோ வீட்டில் அனைவருமே அடித்து போட்டது போல் தூங்கி விட்டனர். ஐந்து மணிக்கு எழும் பாட்டி , அக்னி இருவரும் தாமதமாக தான் எழுந்தனர்.

பாட்டி எழுந்து வந்து சமையல் அறையை பார்த்தவர் கண்கள் சுருங்கியது. அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருக்க, சமையல் அறை முழுவதும் சுத்தமாக இருந்தது.

வெளியே வந்தார். வீடும் சுத்தம் செய்ததோடு மட்டும் இல்லாமல் வாசலில் கோலம் வேறு போட்டிருந்தது.

“யார் எல்லா வேலையும் முடிச்சது? சூடாமணி பண்ணுச்சா?” என பார்க்க அவரும் ஹாலில் தான் இத்தனைக்கும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

இன்னும் சூடாமணி எழவே இல்லையே!வேற யார் பண்ணது? என யோசித்துக் கொண்டே நிற்க, நிவேதிதா தழைய தழைய புடவை கட்டிக் கொண்டு இடுப்பில் தண்ணீர் குடம் சுமந்தபடி உள்ளே வருவதை கண்டு பேரதிர்ச்சி அவருக்கு.

வயிற்றில் பிள்ளையுடன் இருப்பவள் இடுப்பில் குடத்துடன் புடவையை தூக்கி சொருகி கொண்டு தூக்கி வருவதை கண்டு அதிர்ந்தனர், “நீ எதுக்கு இதை எல்லாம் பண்ற? என் கிட்ட கொடு.” என அவர் வாங்க போக,

“நானே இந்த வேலை எல்லாம் செய்றேன். இந்த வீட்டில் சும்மா சாப்பிட எனக்கு பிடிக்கல. ஒருவேளை வேலைக்கு போனால் பணம் கொடுத்து இருப்பேன். இப்போ என்னால் வேலைக்கும் போக முடியாது. அதுவரை எல்லா வேலையும் செய்றேன். இல்லனா இங்க குடிக்கிற தண்ணி கூட என் உடம்பில் ஒட்டாது.” என்றாள்.

அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் அங்கிருந்த அனைவர் கதிலும் விழுந்தது, ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த சூடாமணி தாய் குரலை கேட்டு கண் விழித்தார். அவரும் கேட்டார்.

தூக்கம் கலைந்து எழுந்தவன் நேரத்தை கண்டு பதறி கட்டிலை விட்டு எழுந்தவன் மனைவியை காணாமல் தவிக்கும் போது தான் அவள் வார்த்தைகள் காலையியே அபிஷேகமாக அவன் தலையில் கொட்டியது.

தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!