நிவி அம்மு – மன்னவன் மஞ்சத்தில் 10
10.
மஞ்சம் – 10
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர்.
அக்னி பொறுமையாக வீட்டிற்கு வந்தான். இரவு தாமதமாக தான் வந்தான்.
Advertisement
எப்போதும் வீட்டிற்குள் நுழைந்ததும் கிடைக்கும் அமைதியும், நிறைவும் இன்று அவனுக்கு கிடைக்கவில்லை.
வீட்டிற்கு வர வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு உதித்தது நிவேதிதா அங்கு இருக்கிறாள் என்று தான். அவளை நினைத்து தான் நிம்மதி இழந்தான்.
“அக்னி.. தண்ணி இந்தா.” என சூடாமணி அவனிடம் கொடுக்க, அவனோ அவரை நிமிர்ந்து பார்க்காமல் வாங்கி கொண்டவன், ஒரு மிடறு மட்டும் குடித்தான். கடமைக்கு.
Advertisement
“பாட்டி அவள் எழுந்துட்டாளா?”
Advertisement
“இன்னும் இல்லை அக்னி.”
“அவள் எழுந்து தானே சமைக்கணும். போய் எழுப்பி விடு அண்ணா. எவ்ளோ நேரம் தூங்குறா?” என அமர் சிடு சிடுக்க,
“அவளுக்கு பதில் நான் சமைக்கிறேன்.” என்றவன் எழ,
Advertisement
“அண்ணா..! அக்னி..! ராசா..!” என மூன்று குரல்கள் பதட்டமாக கேட்டது.
“நான் பாத்துக்கிறேன் அக்னி. நீ சமைக்க வேண்டிய அவசியம் கிடையாது.” என் பாட்டி அவனை தடுத்தார்.
சூடாமணி வெறித்த பார்வையோடு மகனை பார்த்து நின்றார்.
அவனுக்கு அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது.
யாரிடமும் எதுவும் பேசாமல் உள்ளே சென்றான். அவளோ அசையாமல் அப்படியே கிடந்தாள்.
“சாரி டி. சத்தியமா இப்படிலாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல. உன்னை நல்லா பார்த்து பண்ணு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. இப்போ அந்த நம்பிக்கை என்னை விட்டு கொஞ்சம், கொஞ்சமாக போகுது. பயமா இருக்கு. இந்த சின்ன ரூமுக்குள்ள வச்சு என்னால எதுவும் பேச முடியல. நான் பேசுறதை பொறுமையா கேக்குற நிலையில் கூட நீ இல்லை. இதுவரை எனக்கும் தமிழுக்கும் சண்டை வந்ததே கிடையாது.. அது உனக்கு தெரியும். முதல் முறை நாங்க ரெண்டு பேரும் ஊர் பாக்க அடிச்சு கிட்டோம். அவனுக்காக நான் எதுவுமே செய்தது கிடையாது. ஆனா அவன் எனக்காக நிறைய செய்து இருக்கான்.
எதுக்காகவும் என் கிட்ட கோபம் பட்டது கிடையாது. எனக்கு என்ன வேணும்னு நான் சொல்றதுக்கு முன்னாடி புரிஞ்சுப்பான். அப்படி பட்டவன் நான் உன்னை கல்யாணம் பன்னதை மட்டும் ஏத்துக்கவே இல்லை. என்னை புரிஞ்சுக்கல. அவன் கிட்ட உண்மையை சொல்லி இருக்கணும். அவன் என்னை புரிஞ்சுக்காம போயிட்டான் என்ன பண்றதுன்னு நான் சொல்லவே இல்லை.
அவன் கிட்ட சொல்லி இருக்கணும். ஒருவேளை சொல்லி இருந்தால் நான் உன்னை பழிவாங்க கல்யாணம் பண்ணல, கட்டாயத்தால் கல்யாணம் பண்ணலன்னு எனக்காக நின்னு இருப்பான். நாளைக்கு அவன் கிட்ட உண்மையை சொல்ல போறேன். உன் கிட்ட தான் என்னால சொல்ல முடியாது.” என்றான் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசியபடி.
இவை அனைத்தையும் சத்தமாக பேசினால் வெளியே கேட்கும். வெளியே கேட்டால் இதை வைத்து ஒரு வில்லங்கம் எழும்.
யாரிடமும் மறைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை இவனுக்கு.
உண்மையை சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அன்னையாக இருந்தாலும் அவருக்கு அவர் விருப்பங்கள் தான் முக்கியம். அவரிடம் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார். இந்த திருமணத்தை நடத்தி இருக்க மாட்டார்.
சிலவற்றை சொல்லவில்லை என்பதற்காக அவர்கள் முக்கியமானவர்கள் இல்லை என்று அர்த்தம் கிடையாது.
அதற்கான நேரம் வரவில்லை என்று அர்த்தம்.
இப்போது அக்னி அப்படி தான் துடிக்கிறான். அவன் செய்த செயல்களை வெளியே சொல்லவும் முடியாமல், உள்ளுக்குள் வைத்து அழுத்தவும் முடியாமல் துடிக்கிறான்.
“நீ என்னை நெருங்கி வந்தப்போ என் அம்மாவை நினைத்து நான் விலகி போனேன். இப்போ நான் உன் கூட வாழனும் நினைக்கும் போது நீ என்னை விட்டு மொத்தமாக போகனும்னு நினைக்கிறது தப்பு டி. அதுக்கு நான் விட மாட்டேன்.” என அவளுடன் காதில் மட்டும் பேசிக் கொண்டிருந்தான்.
தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் மகன் சென்றதை நினைத்து தாங்காத வேதனையோடு மகனை அழைக்க அவன் அறைக்கு வந்தவர் கதவில் கை வைக்க கதவு விலகியது.
அந்த விலகல் வழியாக கண்டார், மகன் அவள் மீது படுத்திருப்பதை. இங்கிருந்து பார்க்க அவருக்கு அப்படி தான் தோன்றியது.
உயிரே உறைந்து போனது. எட்டி பார்க்க வேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை அவருக்கு. அவரை பொறுத்தவரை மகன் கட்டாய திருமணம் செய்திருக்கிறான். ஆனால் இன்று அவரின் மனதின் பொய் பிம்பத்தில் விரிசல் விழுந்தது.
பாட்டி மகளின் செய்கையை வேதனையாக பார்த்தார்.
“சூடாமணி என்ன கெட்ட பழக்கம் இது? கதவு மூடு.” என பாட்டி மெல்லிய குரலில் கண்டித்தார்.
அக்னி காதில் விழுந்து விட கூடாது என்று. அம்மா கதவு திறந்து பார்க்கிறார் என்று தெரிந்தால் அவன் மனதில் அவன் தாய் இறங்கி விடுவார் என்ற பயம் அவருக்கு.
“அம்மா பாத்தா என்ன பாட்டி?” அமரன் சூடான கேள்வியுடன் சூடாமணி அருகில் வர, சின்ன மகன் வரும் முன்பு கதவு மூடியவர், விறுவிறுவென வெளியே சென்றார்.
உடைந்து செல்லும் மகளை பார்க்க அவருக்கும் வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சமாவது சூடாமணி மாற வேண்டும். அப்போது தான் அக்னி வாழ முடியும் என்று அவருக்கு புரிந்தது.
“அமர் நீ அளவுக்கு மீறி பேசுற. அக்னி கட்டிய தாலி நிவேதிதா கழுத்துல தொங்குற வரைக்கும் நிவேதிதா உன் அண்ணி. அந்த மரியாதை கொடுத்து பழகு. அக்னி கோபக்காரனாக இருந்தாலும் இதுவரை வீட்டில் யாரு கிட்டேயும் கோபத்தை கட்டியது கிடையாது. அண்ணன் தம்பி உறவு விரிசல் விழுற மாதிரி நடந்துக்காத.” என பாட்டி கடுமையாக அவனை எச்சரிக்கை செய்தார்.
அவனுக்கு அவர் எச்சரிக்கை உணர்ந்து இருக்கலாம். அலட்சியம் செய்தான். இதனால் அண்ணன் அன்பை இழந்து அல்லவா நிற்க போகிறான். அனைத்தும் முடிந்த பிறகு வருந்தி அதில் என்ன பயன்? அந்த வருத்தம் கூட அர்த்தமில்லாமல் போய்விடும்.
காலம் அனைத்திற்கும் ஒரு பதில் வைத்திருக்கும்.
சூடாமணி இருளில் நடக்க தொடங்கினார். அது கிராமம் என்பதாலும் பழகிய ஊர் என்பதாலும் அவருக்கு எந்த பயமும் இல்லை. அவருக்கு இயல்பிலேயே பயம் என்பது கிடையாது.
அவர் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவர் கால்கள் தமிழ் வீட்டுக்கு வந்து விட்டது.
அவருக்கு இங்க வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் அவர் கால்கள் தானாக வந்து விட்டது.
இருள் நிறைந்த வீட்டை கண்டு அவர் கண்கள் சுருங்கியது.
புடவை முந்தானையை இடுப்பில் சொருகியவர் அந்த வீட்டை நோக்கி நெருங்கினார்.
அவர்கள் பெரிய காம்பவுண்ட் கட்டி கேட் போட்டிருக்கவில்லை. வேலி போட்டு அதில் படல் வைத்திருந்தனர்.
அதில் இருந்த கம்பியை நீக்கி விட்டு உள்ளே சென்றார்.
சூடாமணி சாவே வந்தாலும் வேறு ஒருவர் வீட்டுக்கு செல்ல மாட்டார். இத்தனை வருடங்கள் அண்ணன் வீட்டை தவிர்த்து எங்கேயும் சென்றது கிடையாது.
தமிழை பார்க்க வேண்டும் போல் இருக்க, அவனிடம் கேள்வி கேட்கவே அந்த படலை திறந்து சென்றவர் தன்மானம் மீண்டும் தலைதூக்க, அப்படியே வந்து விட்டார்.
கொஞ்சம் எட்டி பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும் அவர்கள் வீட்டில் இல்லை என்பது.
இவரின் அடிப்படை குணம் எப்போது மாறுமோ?
அக்னி அவளை நெருங்கி படுத்துக் கொண்டான். அவள் மீது கை போட்டு அவள் முகத்துடன் நெருக்கமாக தன் முகத்தை வைத்து இருவரின் சூடான மூச்சுக்காற்று ஒன்றோடு ஒன்றாக கலக்க, அவள் தலையணையில் தலை வைத்து படுத்து அவள் முகம் பார்த்தவன் முகத்தில் மெல்லிய இன்பம்.
“உன் கூட வாழ மட்டும் தான் உன்னை கல்யாணம் பண்ணேன். எனக்கு வேறு எந்த உள் நோக்கமும் கிடையாது டி. நான் உன் மச்சான் தான் டி.” என்றவன் அவளின் கதகதப்பான சுவாசத்தில் விழிகளை மூடி சிரித்தான்.
“என்னைக்கு ரெண்டு பேரும் உரிமையா வாழ போறோம்னு தெரியல. அதுக்குள்ள குழந்தை நல்லபடியா பிறக்கணும்.” என்றபடி அவனும் கண் மூடி அவளுடன் தூங்க தொடங்க, அவன் கொடுத்த அணைப்பில் தன்னை அறியாமல் மேலும் அவனுடன் நெருங்கி அவன் நெஞ்சை முட்டி எழும் எண்ணம் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்துக்கு மீண்டும் சென்றாள்.
பாட்டி பேரனை தேடி வந்தவர் இருவரின் நெருக்கமான நிலை கண்டு அவருக்குள் இனம் புரியாத சந்தோஷம்.
“சீக்கிரம் எல்லாம் சரியாகி என் பேரனும், நிவேதிதாவும் நல்லா வாழனும்.” என ஆசைப்பட்டார்.
அமரன் கண்ணில் படும் முன் கதவை மூடி விட்டு திரும்ப, “பாட்டி அம்மா வந்துட்டாங்களா?”
“இன்னும் இல்லை அமர்.” அறை கதவை மறித்தபடி நின்று கூறினார்.
“அண்ணா அம்மாவை தேடி போகாமல் இருக்கான். வழக்கமா அம்மா எங்கேயாவது போனாள் உடனே தேடி போவான். இன்னும் போகல. இந்த நிவேதிதா இந்த வீட்டுக்குள் வந்ததில் இருந்து அண்ணன் மொத்தமா மாறிட்டார். அண்ணா அவர் அவராகவே இல்லை.” என கதவை திறக்க போக, அவன் கையை தடுத்து பிடித்தவர்,
“அண்ணன் மாறிட்டான்னு சொல்ற நீ என்ன பண்ற? சும்மா தானே இருக்க? அவன் வேலை முடிஞ்சு வந்து படுத்துட்டான். நீ போய் உன் அம்மாவை தேடி அழைச்சிட்டு வா. வீட்டில் நாள் முழுக்க சும்மா இருக்க நீ போய் தேடு. கல்யாணம் ஆனால் வீட்டிலும் அவன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சின்ன சின்ன மாற்றம் உருவாக தான் செய்யும். அதை புரிஞ்சுக்கணும். அவன் கல்யாணம் ஆனாலும் பழையபடியே இருக்கணும்னு சொல்றதுக்கு அவனுக்கு கல்யாணம் பண்ணவே கூடாது. உனக்கு கல்யாணம் ஆகட்டும். அப்போ பாக்குறேன் நீ என்ன பண்றது. இப்போ போய் சூடாமணியை அழைச்சிட்டு வா.” என கோபமான குரலிலும் சாந்தமான முகத்துடன் கூறினார்.
அமரன் தன் பாட்டியை ஒரு மாதிரி பார்த்தவன், “நீ என்னமோ வேற ட்ராக் ல போற இது நல்லதுக்கு கிடையாது சொல்லிட்டேன்.” என வம்பு செய்ய,
“போடா ட்ராக் ல போறேன். டிராக்டர் ல போறேன் சொல்லிகிட்டு.” என அவன் கையை உதறி விட்டவர், அமரன் அந்த இடத்தில் இருந்து நகர்ந்த பிறகு தான் அவரும் அந்த இடத்தை விட்டு வந்தார்.
சூடாமணி நடந்து கொண்டே வந்தவர் அம்மன் கோவில் கடக்கும் போது தான் அவரது கணவனும், தங்கையும் கோவிலில் இருந்து வெளியே வருவதை கண்டார்.
அசிங்கத்தை கண்டது போல் அவர் முகம் அருவருப்பாக மாறி போனது
இருவரும் சூடாமணி யை பார்த்தனர். சூடாமணி அவர்கள் இருவரையும் சாணியை பார்ப்பது போல் துச்சமாக பார்க்க, இருவரும் கூனி போனார்கள் .
தொடரும்…..
