அன்று சண்டே, விடுமுறை நாள் என்பதால் அஜய் வீட்டில் தான் இருந்தான், ஆனால் அன்று தனது அலுவலகத்தில் இருப்பது போலவே தனது மடிக்கணினியில் மூழ்கியிருந்தான். காலை உணவை உண்டு முடித்து விட்டு அமர்ந்தவன், மணி மதியம் இரண்டை தாண்டியும் அசைந்து கொடுக்காமல் தன் பார்வையை மடிக்கணினியிலேயே பதித்திருந்தான்…
Advertisement
ஸ்மிருதிக்கு ஏனோ அவனின் இந்தச் செயல் கோபத்தைத் தூண்டியது, மதிய சாப்பாட்டிற்கு அழைத்தும் அவன் ‘வேலை இருக்கு, அப்புறம் சாப்பிடுகிறேன்’ எனக் கூறிவிட்டுத் தன் வேலையில் மும்முரமாக இருந்தான்…
ஸ்மிருதியோ இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்திக்கு மாறாக இன்று ஸ்பெஷலாகவே சமைத்திருந்தாள், அவள் சமைத்ததை அவன் நிராகரிப்பது போல் தோன்றவும் நேராக அஜய்யின் முன் வந்து நின்றவள்
Advertisement
”உங்க கிட்ட பேசணும்,” என்றாள்,…
Advertisement
அவளின் புறம் திரும்பாமல், “ஹாங் சொல்லு,” என்றான் மடிக்கணினியில் பார்வை இருந்தவாறே…
Advertisement
இதில் மேலும் கோபம் கொண்டவள்,.. “கொஞ்சம் அந்த லேப்டப்லருந்து முகத்தைத் திருப்பித் தான் பேசுங்களே,” என்றாள் காட்டமான குரலில்…
இந்த முறை அவன் அவளின் வார்த்தைகளின் காட்டத்தைப் புரிந்து, அவள் முகம் நோக்கியவன்,..”என்ன ஆச்சு, ஏன் இவ்வளவு சத்தம்? எனக்கு நல்லாவே காது கேட்கும்,” சிறு நக்கலுடன்..
அவளும் ”ஓஹ்… அப்படியா, எனக்கு இது தெரியாதே,” கிண்டல் தொனியில் சொனனவள், “ஒரு மணியில இருந்து தான் சாப்பிடக் கூப்பிடுறேன், ஆனா நீங்க வர மாட்டேங்கிறீங்க, என்ன தான் தலைக்கு மேல வேலை இருந்தாலும், சாப்பாட்டைக் காக்க வைக்கக் கூடாதுனு உங்களுக்குத் தெரியாதா?” என்றாள்..
”ஸாரி… அது நான்,” என இழுத்துக் கொண்டிருந்தவனிடம், “எனக்கு ஒரு நல்ல ஐடியா தோணுது. நீங்க ஏன் உங்க ஆபிஸை வீட்டிலயே ஷிஃப்ட் பண்ணிடக் கூடாது?” என்றாள்…
அவளை விழிகள் சுருங்க பார்ததவன்,.. “வா சாப்பிடலாம்,” என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிளை நோக்கி நடக்க.. “நான் அப்போவே சாப்பிட்டேன், நீங்க தான் சாப்பிடணும்,” என்றவளை ஒரு நொடி நின்று திரும்பி பார்க்க, அவளோ.. “என்னால பசி தாங்க முடியாது, சோ நான் சாப்பிட்டேன்,” என்றாள்…அவள் கூறியதை கேட்டு சத்தமில்லாமல் உதட்டிற்குள் சிரித்தவன், சாப்பிட அமர அவளும் அவனுக்கு பரிமாறினாள்…
”அப்படியெல்லாம் இல்ல. நான் தான் சொன்னேன்ல, *** பிரான்ச்ல ரீசண்ட்டா கன்ஸ்ட்ரக்சன்ஸ் ப்ராஜெக்ட் கம்மிட் ஆகிருக்குனு, அந்த ப்ளேஸ்ல ஃபேக்டரி கட்ட ப்ளூ பிரிண்ட் வரைக்கும் ரெடி பண்ணியாச்சு. பட்,.. அந்த இடத்துல குழந்தைங்க ஆர்பனேஜ் இருக்கு, பக்கத்துல ஸ்கூல், அண்ட் ஹாஸ்பிடல் லாம் இருக்கு. அந்தப் ப்ராஜெக்ட்டை நாங்க எடுத்தோம்னா அதனால நிறைய மக்கள் பாதிக்கப் படுவாங்க, அங்கிருந்து வர்ற பொல்யூஷன்னால குழந்தைகளுக்கு எந்த மாதிரி நோய்கள் வரும்னு சொல்ல முடியாது,” என அதன் பக்கவிளைவுகளைப் பற்றிச் சொல்லி முடித்தவன், “இதனால இத்தனை பிராப்ளம் எனும் போது, அந்தப் ப்ராஜெக்ட்டை கண்டினியூ பண்ண விரும்பல, அதான் அந்தப் ப்ளேஸ்ல கேன்சல் பண்ணியாச்சு. ப்ராஜெக்ட் தந்தவங்க கிட்டயும் பேசிப் புரிய வைச்சு, வேறொரு இடத்துல கன்ஸ்ட்ரக்ஷனை மாத்திக் கொடுத்தாச்சு. அதை ஒட்டி கொஞ்சம் வொர்க் இருந்தது அதான் பார்த்து சரி பண்ணிட்டு இருந்தேன்,” என்றான்…
இத்தனை நேரம் அவன் சொல்லியதை மௌனமாய் நின்று கேட்டவளுக்கு, அவன் செய்த இந்தச் செயலினால் அவன் மீது மரியாதை அதிகமாகியது…
பணத்திற்காகச் சில நபர் ‘யார் எப்படி போனால் நமக்கென்ன’ என்று நினைக்கும் இந்தக் காலத்தில், இவனின் இந்தச் செயல்களைக் கண்டு பூரித்து போனாள்…
‘பியூர் சோல் தான்’ என்று நினைத்துக் கொண்டாள்,..
“நான் ஈவ்னிங் டைம் கொஞ்சம் வெளிய போயிட்டு வரட்டுமா?” என்றாள்.
”எங்கே? ஏதாச்சும் திங்ஸ் வாங்க வேண்டியது இருக்கா?” என்றான்.
”இல்ல, வீட்டுக்குள்ளேயே இருக்க போரிங்கா இருக்கு. இன்னைக்கு சண்டே இல்ல சோ பீச்ல கூட்டம் அலை மோதும், அதான் போயிட்டு வரலாம்னு நினைச்சேன்,” என்றாள் இழுவையுடன்…
சிறிது யோசித்தவன், “ஓகே… நானும் உன் கூட வரேன். உனக்கு அப்ஜக்ஷன் இல்லைனா மட்டும்,” என்றான்…
”எனக்கு என்ன அப்ஜக்ஷன் இருக்கப் போகுது? உண்மையைச் சொல்லணுமா, நீங்க கூட வந்தா சேஃப்டியா ஃபீல் பண்ணுவேன்,” என்றுவிட்டுத் தண்ணீர் எடுக்கச் சமையலறைக்குள் சென்றாள்.
அன்று மாலை கடற்கரைக்குச் செல்வதற்காக இருவரும் தங்கள் காரில் பயணித்தனர். வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே எந்தெந்த இடம் எங்கு இருக்கு என்பதைப் பற்றிய விஷயங்களை ஸ்மிருதியிடம் கூறிக்கொண்டே வந்தான் அஜய். அவளும் அதனைக் கேட்டு அவ்விடங்களை ஆராய்ந்தபடி வந்தாள்…
கடற்கரைக்கு வந்து சேர்ந்தவர்கள், வண்டியைப் பார்க் செய்ய இடமில்லாமல், அவள் சம்மதத்துடன் அவளை மட்டும் இறக்கிவிட்டு, காரை நிறுத்த இடம் தேடிச் சென்றான் அஜய். ஓரிரு நிமிடங்களில் வண்டியைப் பார்க் செய்துவிட்டு வந்தவன், கூட்டம் அலைமோதியபடி இருந்த கடற்கரையில் ஸ்மிருதியைத் தேட முடியாமல், அவளுக்குக் கால் செய்தான்…
போன், ரிங் முழுவதும் போய் அணைந்து போக, ஏனோ அவனுக்குப் பதற்றம் ஏற்பட்டது. மீண்டும் அவளுக்கு அழைத்தவன், அப்பொழுதும் அவள் அழைப்பை ஏற்காமல் போனதில், அடர்ந்த கேசத்தைப் புறம் தள்ளிவிட்டு, பார்வையாலேயே அவளைத் தேடியபடி மீண்டும் அழைத்தான்.
’ஸ்மிருதி பிக்கப் தி கால்,’ என மீண்டும் மீண்டும் அழைத்தவன், ‘ஏன் எடுக்க மாட்டேங்கிறாள்? ஏதாச்சும் பிராப்ளத்துல மாட்டிருப்பாளா? அவளைத் தனியா விட்டுட்டு போயிருந்திருக்கவே கூடாதோ, ப்ச் எல்லாம் என் தப்பு, மடையன் மாதிரி நடந்துகிட்டேன் ச்சே,’ எனத் தன்னுள் புலம்பியப்படி, கால் நடையுடன் அவளைத் தேடியவாறு விடாமல் அழைத்துக் கொண்டிருந்தான்…
’இந்தக் கூட்டத்துல அவளை நான் எப்படி கண்டுபிடிக்கிறது? ஸ்மிருதி ப்ளீஸ் என்கிட்ட வந்துடு,’ புலம்பியபடி வந்தவன்,.., ‘எங்க போயிருப்பா? அவளும் என்னைப் போல தேடிக்கிட்டு இருப்பாளா? இந்த இடத்துல நில்லுன்னு தானே அவ கிட்ட சொல்லிட்டுப் போனேன்,’ என்றவன் அழைப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை…
’இல்ல, டைம் போகப் போக அவளுக்குத் தான் பிராப்ளம். எங்கே மாட்டிக்கிட்டு இருக்காளோ தெரியல. விக்னேஷ்க்கு (இன்ஸ்பெக்டர்) கால் பண்றேன்,’ என்றவன் விக்னேஷிற்கு அழைக்கப் போன நேரம், “பே,” எனச் சத்தமான அலறலுடன் அஜய்யின் முன் வந்து நின்றாள் ஸ்மிருதி…
வாய் விட்டு சிரித்தபடி நின்றவளை அவன் வெறித்து பார்க்க,.. அவளோ…”என்ன, ரொம்பப் பயந்துடீங்களோ? ஓ காட், 80 மிஸ்டு கால்,” தனது போனைப் பார்த்துச் சொல்லியவள், “இவ்வளவு நேரமா நான் உங்களைப் பார்த்த மாதிரி மறைவா தான் நின்னுகிட்டு இருந்தேன். என்னைக் காணோம்னு தெரிஞ்சதும் நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுறீங்கன்னு பார்க்க ஆவலாகவும் எண்டர்டைமெண்டாவும் இருந்தது, அதான் இப்படிப் பண்ணேன்,” என அவள் சொல்லி முடிக்க, இத்தனை நேரம் இதயம் படபடக்க, அவளைக் காணாததில் டென்ஷனுடன் இருந்தவன், அவளின் இந்தச் சொற்களைக் கேட்டு நிதர்சனம் புரிந்து, உச்சக்கட்ட கோபத்திற்குச் சென்று, யோசிக்காமல், அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்,…
இதை எதிர் பார்க்காதவள் கன்னத்தில் கைவைத்தபடி அவனை அதிர்ந்து பார்க்க,.. அவனோ “என்னை டென்ஷன் பண்ணிப் பார்க்கிறது உனக்கு எண்டர்டைமெண்ட்டா?” என கோபம் குறையாமல் கேட்டான் அஜய்…
”பைத்தியக்காரன் மாதிரி புலம்பிக்கிட்டு, உன்னை காணோம்னு பதறிக்கிட்டு இருக்கேன், நீ இதை எண்டர்டைமெண்ட் போலப் பார்த்துகிட்டு இருந்த அப்படித் தானே?” என்றான்
”இல்ல… ஸாரி, நான் சும்மா விளையாட்டுக்கு,” எனச் சொல்ல வந்தவளிடம், “எது விளையாட்டு? நீ செய்த இந்தச் செயலுக்குப் பெயர் தான் விளையாட்டா? போலீஸ்க்கு கால் பண்ணுற வரைக்கும் போயிட்டேன். விஷயத்தை அவங்க கிட்டச் சொல்லி இங்கு வந்திருந்தா என்னாகியிருக்கும்?” என்றான் ஆத்திரம் குறையாமல்.
”ஐம் ரியல்லி சாரி, ப்ளீஸ் கொஞ்சம் காம்டவுன் ஆகுங்க. நான் பண்ண தப்புக்காகத் தான் அடிச்சிட்டீங்கல்ல. நான் இனி எப்போதும் இது போல நடந்துக்கவே மாட்டேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சு, இதைப் பெருசாக்காம விட்டுடுங்க,” என்றாள் அவன் அடித்ததைக்கூடப் பொருட்படுத்தாமல் கெஞ்சல் தொனியோடு.
அவனுக்கு ஏனோ கோபம் அடங்க மறுத்தது.. “வீட்டுக்குப் போலாம்,” என்றான்…
அதிர்ந்தவள்…”எது வீட்டுக்கா? இதெல்லாம் ரொம்ப டூ மச்ச்சா இருக்கு, நான் சும்மா விளையாட்டுப் பண்ணேன், பட் நீங்க சீரியஸா பார்க்கிறீங்க. எதைச் சீரியஸா பார்க்கணும், எதை விளையாட்டுத் தனமா பார்க்கணும் அப்படிங்கிறது கூடத் தெரியாத டியூப்லைட்டா இருக்கீங்க,” என்றாள்…
”எது டியூப்லைட்டா…?” எனத் திகைப்புடன் கேட்டான் அஜய்.
”பின்ன என்ன?” என்றவள், “ஓகே, ஒரு ஹண்ட்ரட் ரூபீஸ் கொடுங்க,” எனக் கேட்க, “எதுக்கு…?” என்றான் அவன் புரியாத பார்வையில்…
”கொடுங்க சொல்றேன்,” என்றவளிடம், தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தவன், அதிலிருந்து அவள் கேட்ட நூறு ரூபாயை எடுத்து கொடுத்தான். “வெயிட் பண்ணுங்க,” என்றவள், வேகமாக எங்கோ சென்றாள்…
”மறுபடியும் எங்கே போற?” என்றவன், போகும் அவளை பின்தொடர்ந்தான். அவளோ அங்கு நின்ற ஐஸ்கிரீம் வண்டியை நெருங்கி, ஒரு Cornetto வாங்கி, அஜய்யிடம் வந்தாள்.
”இந்தாங்க, முதல்ல இதைச் சாப்பிடுங்க, அப்போ தான் சூடா இருக்கிற நீங்க, ஜில்லுன்னு ஆவீங்க,” என்றவள், அவனிடம் நீட்ட, அவன் அதனை கையில் வாங்காமல், அவளைப் பார்த்தபடி நின்றான்…
”என்ன? வாங்கிச் சாப்பிடுங்க, ஜில்லாகனும்ல” அவளின் குறும்பு புன்னகையை கண்டு, அவனின் கோபம் முழுக்க அவனை விட்டுப் பறந்து சென்றது போல் இருந்தது.
அவள் தந்ததைக் கையில் வாங்கிக்கொண்டவன், அதனைப் பிரித்துச் சாப்பிடத் துவங்கினான்.
”அப்படியே கடல் கிட்ட போலாமா?” என ஸ்மிருதி கேட்க, சிறு தலையசைப்புடன் சம்மதம் தந்தவன், அவளுடன் நடந்தான்.
நடந்துகொண்டிருந்தவளுக்கு திடீரென்று ஏதோ யோசனை வர, வேகமாக அஜய்யின் கையிலிருந்து ஐஸ்கிரீமைப் பிடுங்கிக் கீழே எறிந்தாள்…
“கடவுளே… பாதிக்கு மேல சாப்ட்டுட்டீங்களா? உங்களுக்குத் தான் டயபெட்டிஸ் இருக்குல, அதை மறந்து போய் நான் வேற ஐஸ்கிரீம் வாங்கித் தந்துட்டேனே,” என நகத்தைக் கடித்தவள், “இப்போ என்ன பண்ணுறது? உங்களுக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கா? வீட்டுக்குப் போயிடலாமா? இல்ல இல்ல, நேரா ஹாஸ்பிடல்க்குப் போயிடலாம்,” என்று புலம்பியவளை அமைதியாக நின்று பார்த்தவன்,
“ஏன் டென்ஷன் ஆகுற? இது சாக்லேட் ஃபிளேவர் தான், சுகர் அதிகமா இருக்காது. சோ டோன்ட் வொரி,” என்றான் அஜய்…
இதில் நிம்மதியடைந்தவள், அவனுடன் மீண்டும் நடந்தாள். இருவரும் கரைக்கு வந்து சேர, ஸ்மிருதி வேகமாகத் தண்ணீரில் கால் வைக்கச் சென்றுவிட்டாள்.
அஜய் தண்ணீர் வராத இடத்தில் நெஞ்சின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்று அவளை தான் கண்காணித்துக் கொண்டிருந்தான்…
சிறு குழந்தை போல் கடல் நீரில் கால் நனைத்து விளையாடியவளை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான்.
”என்ன, கடல்ல கால் வைக்கப் பயமா? அங்கேயே நின்னுட்டீங்க,” என்றாள் அஜய்யை நோக்கி கிண்டல் பார்வையுடன்.
இதில் கண்களைச் சுருக்கிப் பொய்யாக முறைத்தவனைக் கண்டு சிரித்துவிட்டுக் திரும்பிக் கொண்டாள்…
வெயில் இல்லா அந்த வேளையில், கடற்கரை மணலில் அமர்ந்து, மணல் வீடு கட்டினாள் ஸ்மிருதி. சிறு வயதிலிருந்து இப்போது வரைக்கும் அவள் கடற்கரைக்குச் செல்லும் நேரமெல்லாம் அவள் தவறாமல் விளையாடுவது மணல் வீடு கட்டித் தான். தான் இப்பொழுதும் சிறு பிள்ளை என மனதில் நினைத்துக்கொண்டு அவள் வீடு கட்டும் வேலையில் மும்முரமாக இருந்தாள். அஜய் அவளின் செய்கைகள் ஒவ்வொன்றையும் மறுபக்கம் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
”ஹ்ம்ம்… முடிஞ்சது. எப்படி, சூப்பரா இருக்குல,” என அஜய்யிடம் கேட்க, அவன் புன்சிரிப்புடன் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தான்.
”என்னை மாதிரி யாரும் இவ்வளவு பெருசா மணல் வீடு கட்டிட முடியாது,” என அவள் தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசிய அந்நேரம், சரியாக பறந்து வந்த ஒரு பந்து அந்த மணல் வீட்டை கலைத்தது.
இதில் பூவைப் போல் மலர்ந்திருந்த அவளின் முகம் காய்ந்த பூவைப் போல் வாடிப் போனது…
”பின்ன இல்லையா? அரைமணி நேரமா ஆசை ஆசையா கட்டின வீடு உடைஞ்சு போச்சுன்னா, ஃபீல் ஆகாதா?” என வாடிய முகத்துடன் சொல்லியவள் அந்தப் பந்தைக் கையில் எடுத்தபடி, “இந்த பாலை தூக்கிப் போட்டு, என் வீட்டை கலைத்தவன் எவன்?” என்றபடி, சுற்றும் முற்றும் பார்த்தாள்…
அந்நேரம், “ஆண்ட்டி பால்,” என்ற ஒரு மழலையின் குரல் கேட்க, குரல் வந்த புறம் திரும்பினாள் ஸ்மிருதி.
அங்கு நான்கு வயதேயான சிறுவன் நிற்க, அவனிடம் குனிந்தவள், “நீ தான் பாலை தூக்கிப் போட்டு, என் வீட்டை உடைச்சியா?” என்றாள் கோபம் இல்லாத மெல்லிய குரலில்…
அதில் தலைகுனிந்தவன், “ஸாரி ஆண்ட்டி, நான் வேணும்னு பண்ணல,” என்றான் அந்தச் சிறுவன்…
”ஓகேடா குட்டி, உங்க நேம் என்ன?” எனக் கேட்க, “யஷ்வந்த்,” என்றான் அவன். அந்தப் பெயரைக் கேட்டதும் அவளுக்குப் பழைய நினைவுகள் நினைவில் வர, கண்கள் அவளை மீறி கலங்கியது…
”வொய் ஆர் யூ க்ரையிங் ஆண்ட்டி?” ஸ்மிருதியின் கண்ணீரைக் கண்ட குழந்தை அக்கறையாகக் கேட்டான்…
”நத்திங்… ஒன்னுமில்லடா குட்டி,” என்று கண்களை துடைத்துக் கொண்டவள், அவனின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு, “நீ போய்ப் விளையாடு,” என அனுப்பி வைத்தவள்.. போகும் அந்தக் குழந்தையையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள்…
ஸ்மிருதியை கவனித்துக் கொண்டிருந்த அஜய், அவளது முக வாட்டத்தை கண்டு… “ஆர் யூ ஓகே?” என அக்கறையுடன் வினவிட..
உதட்டில் சிரிப்பை கொண்டு வந்தவள்.. “ஹாங்,” என்றுவிட்டு, “போலாமா?” என்றாள்…
”போலாம். அதுக்கு முன்னாடி, நீ அதைப் பார்க்க வேண்டாமா?” எனக் கரத்தை நீட்டிக் காண்பிக்க, அவன் காண்பித்த திசையில் பார்வையைத் திருப்பினாள்…
அங்கே சூரியன் சற்றே ஓய்வெடுக்க, வானத்திலிருந்து விலகி கடலுக்குள் மறையப் போகும் அந்த அழகான காட்சியைப் பார்த்த அவள், கண்கள் விரிய அதன் அழகைப் பார்த்து வியந்தாள். முதல் முறை இந்த காட்சியை பார்க்கிறாள் அல்லவா!
சிறிது நேரத்திக்கு முன் இருந்த அவளின் மனநிலையை, இந்த அழகிய தருணம் முற்றிலும் மாற்றியிருந்தது….