மன்னவன் மஞ்சத்தில் 12
12.
மஞ்சம் – 12
“ஏய் எழுந்து வாடி. இது என்ன உன் அப்பன் வீடா? ஒய்யாரமாக தூங்குற.” என அவர் போட்ட சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவளுக்கு, மூச்சு ஏகத்துக்கும் வாங்கியது. அவள் கைகள் தன்னிச்சையாக அவள் வயிற்றை பற்றியது.
உடல் நடுங்கியது அவரின் கோபக் குரல் கேட்டு. ஆனால் எத்தனை மணி நேரம் உள்ளேயே இருக்க முடியும்? வெளியே எழுந்து சென்று தானே ஆகணும். அவரை சந்தித்து தானே ஆகணும்.
Advertisement
தன் முகத்தை துடைத்தவள் எழுந்து வெளியே வந்தாள்.
பத்ரகாளியாக நிற்கும் மாமியாரை கண்டு எச்சில் கூட்டி விழுங்கியவள், மலங்க மலங்க விழுந்தாள்.
சூடாமணி போட்ட சத்தத்தில் பாட்டி, அமர் இருவரும் எழுந்து விட்டனர்.
Advertisement
“என்ன பாக்குற? இங்க என்ன நீ விருந்துக்கா வந்து இருக்க? எவ்வளவு நேரமா தூங்குவ. போ போய் வேலையை பாரு. இங்க உன் தகுதி என்னன்னு மறந்துட்டியா?” என விரட்டினார்.
Advertisement
நிவேதிதா சமையல் அறை நோக்கி செல்ல, “அங்க எங்க போற? வெளியே போய் குளிச்சிட்டு, வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டுட்டு, துணி துவைச்சு காய வச்சிட்டு உள்ள வா. சீக்கிரம் பண்ணு. சமையல் வேலையும் சீக்கிரம் முடியனும்.” என்றார்.
அவளால் முடியாது என்று சொன்னது கூட சொல்ல முடியாது. எத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது உடல் நடுங்கியது. இப்போது அவள் உடலும் ஒத்துழைக்கும் நிலையில் இல்லை.
வேறு வழி இல்லையே. அதனால் முதலில் குளிக்க சென்றாள். தன் ஆடைகளை அவிழ்த்து ஊற வைத்தவள்,
Advertisement
ஒரு பக்கெட்டில் இருந்த குளிர்ந்த நீரை கண்டு உடல் நடுங்கியது.
ஒரு மக் தண்ணீர் எடுத்து மேலே ஊற்றியவள் குளிரில் உதட்டை கடித்தாள். கண்கள் கலங்கியது அவளுக்கு. வெட வெட என உடல் நடுங்கியது
அவசரம் அவசரமாக குளித்து விட்டு மாற்று துணி எடுக்க கை நீட்டும் போது தான் உணர்ந்தாள் வேறு துணி எடுத்துக் கொண்டு வரவில்லை என்று.
உடல் வேறு நடுங்கியது. வீட்டில் யாரையும் அழைக்கவும் முடியாது.
கட்டிருந்த பாவாடையை பிழிந்து விட்டு ஊற வைத்த துணியில் ஒன்றை எடுத்து பிழிந்து தோளை சுற்றி போட்டுக் கொண்டவள்,
ஈரத்துடன் வெளியே ஓடி வந்தாள்.
அமரன் வெளியே அமர்ந்து இருக்க அவள் அவமானமாக உணர்ந்தாள். கூனிக் குறுகியது அவள் உடல்.
அவனும் அவள் வரும் நிலை கண்டு எழுந்து செல்லவில்லை. இது என் வீடு. என் வீட்டு வாசல் என்பது போல் அமர்ந்து இருந்தான்.
அவள் ஓடி வரும் நிலையை பார்த்து சூடாமணி சூடானார், “கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா? வயது பையன் இருக்க வீட்டில் இப்படி ஒரு கோலத்திலா வருவ? என்ன புத்தியோ? பெத்தவள்அப்படி.” என கேவலமாக கேட்க, பச்சை தண்ணீரால் அவள் உடல் நடுங்கியது விட, அவரின் கேவலமான வார்த்தைகளை கேட்டு அவள் உடல் நடுங்கியது.
‘நாக்கா அது?’ என யோசிக்க வைக்க,
“சூடாமணி நீ பேசுற விதம் ரொம்ப
தப்பு. நீ விரட்டுன விரட்டுல அந்த பிள்ளை மாத்து துணி கூட எடுக்காமல் போய்ருக்கு. அதுக்கு போய் இப்படி திட்டுற. உடம்பை மூடிக்கிட்டு தானே வரா. கண்டபடி பேசாத சூடாமணி.” என மகளை கடிந்து கொண்டவர்,
“நீ போய் துணி மாத்து.” என அவளை உள்ளே அனுப்பி வைத்தார்.
சூடாமணி தன் தாயை முறைக்க, “நீ போற விதம் சரியில்லை சொல்லிட்டேன்.” என அவரை அடக்கியவர் வெளியே அமர்ந்து இருந்த பேரணிடம் வந்தவர், “உங்களை எல்லாம் நல்லா தானே வளர்த்தேன். எப்போதும் இருந்து இப்படி ஒரு அடிமட்ட புத்தி உனக்கு வந்துச்சு? இப்போ உன்னை தாண்டி போனவள் உன் அண்ணி.
ஏதோ ஒரு பொண்ணு துணி விலகுனா கூட நம்ம திரும்பிக்கணும். இல்லையா அந்த இடத்தில் இருந்து தள்ளி போகனும். கட்டுன பொண்டாட்டியை தவிர வேற யார் கிட்டேயும் பார்வை போக கூடாது. ஆனா நீ உன் அண்ணி வரதை பார்த்துட்டு அப்படியே உட்கார்ந்து இருக்க. நீங்க பண்றது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. நீயும் உன் அம்மாவும் சேர்ந்து இந்த குடும்பத்தை நிலை குலைய செய்ய போறீங்க.” என என்றும் இல்லாத கோபமாக கத்தி விட்டு வீட்டை விட்டு சென்றார்.
நிவேதிதா அறைக்குள் சென்றவள் ஈர உடையை கூட அவிழ்காமல் அப்படியே பெட்டில் கிடந்து சத்தம் வராமல் அழுதாள்.
அழுது, அழுது முகம் வீங்கி கண்ணீர் கூட வறண்டு போனது.
அவளுக்கு அழ கூட அதிக நேரம் தரவில்லை.
வெளியே வேலைகள் வரிசையில் இருப்பதால் மாமியார் மீண்டும் தகாத வார்த்தையில் பேசும் முன்னே வெளியே சென்று விட வேண்டும் என்று அவசரம் அவசரமாக புடவை கட்டிக் கொண்டு வெளியே வந்தவள், அவள் நடந்து வந்ததால் உண்டான ஈரத்தை துடைத்து விட்டு ஃபேன் போட்டு விட்டாள். ஈரம் காய.
வெளியே வந்து வாசலில் சாணி தெளித்து வாசலை சுத்தம் செய்து ரங்கோலி வரைந்தவள், கோலம் மாவை வைத்து விட்டு தன் துணி, தன் கணவன் துணியை துவைத்து காய வைத்தாள்.
தண்ணீர் வரவும் அவசரமாக குடிக்க தண்ணீர் பிடித்து விட்டு, பாத்ரூமிலிருந்து அண்டா குண்டா தொட்டி அனைத்திலும் தண்ணீர் பிடித்து நிரப்பி வைத்தாள்.
உள்ளே சென்று பொங்கலுக்கு அரிசி, பாசி பருப்பு கொட்டி அலசி குக்கரில் வைத்தவள் சாம்பாருக்கு பருப்பு, தக்காளி, பூண்டு , சீரகம், நறுக்கிய கத்தரிக்காய் , கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து மூடி அந்த குக்கரையும் இன்னொரு அடுப்பில் வைத்தாள். தேங்காய் சட்னி அரைக்க தேங்காய் துருவி மிக்ஸி ஜாரில் கொட்டியவள், இரண்டு சின்ன வெங்காயம், அஞ்சு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, பச்சை மிளகாயை, கொஞ்சம் மல்லாட்டை பயறு உப்பு சேர்த்து அதில் கொஞ்சம் கொத்தமல்லி தழை சேர்த்து மூடி வைத்தாள்.
பொங்கல் தயாரானதும் அரைத்துக் கொள்ளலாம் என பால் பாத்திரத்தில் ஊற்றி, டீ தூள், சர்க்கரை, இடிச்ச இஞ்சி, ஏலக்காய் சேர்த்து, மூன்றாவதாக இருந்த அடுப்பில் சிம்மில் வைத்து விட்டு வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய தொடங்கினாள்.
அக்னி அறை, ஹால் சுத்தம் செய்து குப்பையை அல்ல இரண்டு அடுப்பிலும் குக்கர் விசில் வந்தது.
குப்பையை கொட்டி விட்டு வந்து அடுப்பை நிறுத்தி விட்டு கொதித்து தயாராக இருந்த டீயை ஊற்றி கொஞ்சமாக இவள் குடித்தவள் மூன்று கிளாசில் கலந்து ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து, வெளியே அமரன் அருகில் தரையில் வைத்தவள், “நான் குடிச்சிட்டேன்.” என்றாள் சாலையை பார்த்தபடி.
மீண்டும் சமையல் அறைக்குள் சென்றவள், ஒரு வானலில் வைத்து அதில் நெய் ஊற்றி, நறுக்கிய இஞ்சி, கடுகு, மிளகு, முந்திரி எல்லாம் போட்டு வதக்கி பொங்களில் கொட்டினால்.
சுள் என்ற சத்தம் கேட்கும் போது அக்னி புல்லட்டை சமையல் அறை அருகில் நிறுத்தியவன் உள்ளே வியர்க்க வியர்க்க வேலை செய்து கொண்டிருப்பவளை கண்டு மவுனமாக வண்டியில் இருந்து இறங்கினான்.
அங்கு காய்ந்து கொண்டிருந்த இருவர் ஆடையையும் பார்த்தான். வாசலில் போட்டிருந்த ரங்கோலி கூறியது அது அவள் போட்டது என்று.
அவன் புரிந்து கொண்டான் மனைவி தான் காலையில் இருந்து மூச்சு விடாமல் வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்று.
தண்ணீர் பிடிக்கும் இடத்தில் கடைசியாக பிடித்து வைத்த இரு குடங்கள் இருக்க, அது இரு கையில் தூக்கி வந்து உள்ளே வைத்தான்.
நிவேதிதா பொங்கலை ஹாட் பாக்ஸில் கொட்டி மூடி வைத்து விட்டு, அதே வாணலியில் சாம்பார் தாளிக்க தாயார் ஆனால்.
எண்ணெய் சூடாகும் முன்பு ஒரு கிளாசில் டீயை வடிகட்டி அவனுக்கு முன்பு நீட்டினாள்.
“நீ குடிச்சியா?” கேள்வியோடு வாங்கினான்.
“ம்” என முனகிய அவள் சூடான எண்ணெயில் கடுகு சீரகம் போட்டு தாளித்து, மூன்று, நான்கு மிளகு போட்டு அதன் பிறகு நசுக்கிய பூண்டு போட்டு வதக்கி, அது நிறம் மாறியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கினாள். இரண்டாக கிழித்த பச்சை மிளகாய் காரத்துக்கு சேர்த்து வேக வைத்த பருப்பை கடைந்து அதில் கொட்டியவள் அதையும் கழுவ தூக்கி போட்டாள்.
சாம்பார் கொதிக்க தொடங்க, சட்னி அரைத்து தாளித்து பாத்திரத்தில் மாற்றி வைத்தாள்.
அனைத்தையும் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ குமட்டுவதையும் பொருட்படுத்தாமல் பம்பரமாக சுழன்று சமையலை முடித்து, அடுப்பு , அடுப்பு மேடை இரண்டையும் துடைத்து விட்டாள். பாத்திரங்களை ஒவ்வொன்றாக கழுவி கவுத்து அவள் மூச்சு வாங்க நிற்பதை பார்க்கும் போதே உள்ளம் வெடித்து விடும் போல் இருந்தது அவனுக்கு.
அங்கு ஒருவன் நிற்கிறான் என்ற உணர்வே அவளிடம் இல்லை.
மகன் மனைவி அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு சூடாமணி கொதித்துக் கொண்டியம்தார்.
அவளோ வேகமாக ஒரு தட்டில் இரண்டு ஸ்பூன் பொங்கல் வைத்து கொஞ்சம் சாம்பார், சட்னி ஊத்தி அங்கேயே நின்று அவனையே சாட்சியாக வைத்து சாப்பிட்டு, சாப்பிட்டா தாட்டையும் கழுவி வைத்தவள் அப்படியே அவசரமாக ஓடி வந்து வாந்தி எடுத்தாள்.
மொத்தத்தையும் எடுத்த பிறகு தான் அவளால் நிமிர முடிந்தது.
தலை சுற்ற தொடங்க, அப்படியே குத்து காலில் அமர்ந்தாள் தலையை பிடித்துக் கொண்டாள்.
அக்னி தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்துக்கு நேராக நீட்ட, அவளுக்கும் அது தேவையாக இருக்க மறுக்காமல் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க, அப்போது தான் கண் தெரிந்தது.
கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
“நிவி எழுந்து வா.” என வலியோடு அழைக்க, வெடுக்கென்று நிற்பவனை கலங்கிய கண்களோடு நிமிர்ந்து பார்த்தவள், பார்வையில் ஆயிரம் வலிகள்.
உயிர்ப்போ, சந்தோஷமோ இல்லை.
நீட்டிய அவன் கைகளை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் பிடிக்கவில்லை.
அவனோ தீராத வலியோடு ரணமாக மனம் பிழிய அவள் தன் கைகளை பற்ற மாட்டாளா என அதே வலியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையின் வீரம் அவளுள் இறங்கும் முன்னு பார்வையை தாழ்த்தி கொள்ள, “மாம்ஸ்.” என அவன் கையை வேறொரு கைகள் இறுக்கமாக பிடித்துக் கொண்டது.
தொடரும்….
