Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே… Final 1

நெஞ்சம் ஏங்குதே…

   Final



Advertisement

  அத்தியாயம் -18

Advertisement

Advertisement

Advertisement

ஹாஸ்பெட்டலுக்கு எவ்வளவு  வேகமாக செல்ல முடியுமோ, அவ்வளவு வேகமாக வந்து சேர்ந்தான் ரிஷி.

குகனின் மனைவி ரிஷப்சனின் பயத்தோடு  நின்றிருக்க,..

ரிஷி அவளை பார்த்தவன் “ரூம் நம்பர் என்ன மா” என்றான்.

“செகண்ட் ப்ளோர், ரூம்  34” என்றாள்.

வேகமாக சென்றவன். மொழி இருந்த அறை கதவை  தடர் என்று திறக்க.

கண் மூடி படுத்திருந்த மொழி, சத்தம் கேட்டு கண் திறந்து பார்த்தாள்,.

ரிஷியை கண்டிப்பாக அவள் எதிர் பார்க்க வில்லை,.

அவனை பார்த்து பயத்தில் அவள் உடல்  நடுங்க.

அவளின் கையை பிடித்து இழுத்து வந்தான்  ரிஷி வீட்டிற்க்கு.

ஒரு வார்த்தை பேசவில்லை ரிஷி மொழியிடம், அவளை இழுத்துக்கொண்டு  காரில் வீடு வந்து சேர்ந்தான்…

 அவளை கைபிடித்து வீட்டினுள் இழுத்து வந்தவன் அவளை சோபாவில் பிடித்து தள்ள.

சுதா மகனின் கார் சத்தம் கேட்டு வெளியே வந்தவர்.

ரிஷி  மொழியை பிடித்து சோபாவில் தள்ளுவதை பார்த்தவர்.

“ரிஷி என்ன பண்ணுற டா  நீ?, மாசமா  இருக்குற பிள்ளையை, பிடிச்சு தள்ளுற, அறிவு இல்லையாட உனக்கு.

குழந்தைக்கு எதாவது ஆகிட்டா, என்ன பண்ணுறது,” என்று மகனை திட்டியவர்.

மொழியருகே வந்து  “அடி ஏதும் பட்டுடுச்சா டா ?” என்று கேட்க.

“உன் மகமருகளை பூ மாதிரி வச்சிருக்கத்தான் நான் ஆசை படுறேன்,  அவ என்னை வில்லனாக்க பாக்குற, அவ எங்க  போனான்னு கேளுங்க ” என்றான்.

“எங்கடா போனா அவ, பிள்ளைகளை ஸ்கூல் விட்டுட்டு, பிரெண்ட்ஸ் பார்க்க போறேன்னு சொன்னா? எங்க போன மொழி? ” என்றார்.

 “இன்னும் நீ உன் மருமக கிட்ட  கொஞ்சி பேசிட்டே இரு,  நாம  கொஞ்சம் ஏமாந்தோம், அவ  என் பிள்ளையை அழிச்சிருப்பா இந்நேரம்” என்றான் கடும் கோபத்தோடு.

 “என்ன சொல்ற ரிஷி?  எனக்கு ஒன்னும் புரியலயே”? என்றார்.

 “மா அவ ஸ்கூலுக்கு பிள்ளைகளை விட போறேன்னு சொல்லிட்டு பிள்ளைகளை  ஸ்கூல்ல விட்டுட்டு. குழந்தையை  அபாஷன் பண்ண ஹாஸ்பிடல் போய் இருக்கா.குகன் பொண்டாட்டி பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னா.

 அவ மட்டும் பாக்கல இப்ப குழந்தை அழிஞ்சு போய் இருக்கும்” என்றான் தலையில் கை வைத்து.

 சுதாவுக்கு சாக்கடித்தது போல் இருந்தது என்ன சொல்கிறான் ரிஷி அவன் சொல்வது  உண்மையா என்று மருமகளை பார்க்க அவளோ  குலுங்கி குலுங்கி அழுதுக்கொண்டிருந்தாள்.

 அழும்  மனைவியை பார்த்து கோபப்பட்டவன்,  “ஏய்   வாயா மூடு டி மாசமா இருந்ததுல இருந்து, இப்படித்தான் நீலி கண்ணீர் வடிச்சுகிட்டு இருக்க. குழந்தை வேண்டாம், குழந்தை வேண்டாமென்று,  சொல்லுற அளவுக்கு, அந்த குழந்தை என்னடி பண்ணுச்சு, அது ஒரு உயிர் டி அத அழிக்க உனக்கு, எப்படித்தான் மனசு வந்துச்சோ” என்று அவன் புலம்பிக்கொண்டிருக்க.

சுதாவுக்கு மகன் புலம்புவதை கேட்டவர்,, ” என்ன சொல்லுறட! மொழி  குழந்தை வேணாம்னு சொன்னாளா எப்போ இருந்து சொல்லுறா”? என்றார்.

 “குழந்தை கன்ஃபார்ம் பண்ண நாள் இருந்து இன்ன வரைக்கும் சொல்லிட்டு தான் இருக்கா, குழந்தை வேண்டாம் என்று.. நான் தான் அவளை  சமாதானம் பண்ணி வச்சிருக்கேன்.

 இன்னொரு விசயம்  தெரியுமா உங்களுக்கு ? , எனக்கு அவ குழந்தை பெத்து கொடுப்பதற்கே தயாரா இல்லை.அது உனக்கு தெரியுமா. டெய்லி குழந்தை வேண்டாம் என்று சொல்லி மாத்திரை சாப்பிடுற.

 நீயே என்னன்னு கேளு  உன் மருமகளை ”  என்றான்.

 சுதாவுக்கு அதிர்ச்சிக்கு  மேல் அதிர்ச்சியாக இருந்தது. மொழியா எப்படியெல்லாம்  செய்தாள்? என்றவருக்கு ஒன்றும் புரியவில்லை மொழியின் கைகளை பிடித்துக் கொண்டவர்.

 “என்ன ஆச்சுடா உனக்கு நல்லா தானே இருந்த. என்ன பிராப்ளம் உனக்கு உடம்பு எதாவது பிராப்ளம் இருக்கா” என்று நல்ல படியாகத்தான் விசாரித்தார் மொழியிடம்.

 “நீ இப்படி இன்னும் அவளை  கொஞ்சிட்டே இரு அவ நாளைக்கு உனக்கு டாட்டா பாய் சொல்லிட்டு என் குழந்தையை  அளிக்க கிளம்பிடுவா”?. என்று அவன் கத்த.

 “நீ மெதுவா பேசு ரிஷி. நான்  பொறுமையா பேசி விசாரிக்கிறேன்” என்று சுதா பேசிக் கொண்டிருக்கும் போதே  குகன் அவன் மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருந்தான் ரிஷி வீட்டிற்க்கு..

 தன்  வீட்டிற்கு வந்த  அவனைப் பார்த்த சுதா ” வா குகன், வா மா” என்று இருவரையும் உள்ளே அழைத்தவர்.

“என்ன  நடக்குது குகன் எனக்கு ஒன்னும் புரியல, ரிஷி ஏதேதோ சொல்லுறான், உனக்கு விசயம் தெரியுமா”? என்றார்.

 “தெரியும் அத்தை” என்றவன்.

 மொழியின்  அருகில் அமர்ந்து வந்து கொண்டவன்..

“என்னக்கா இது” என்று கேட்க.

தம்பியை பார்த்ததும், இன்னும் அழுகை கூடியது மொழிக்கு,.

தம்பியின் தோளில் தன் முகத்தை மறைத்துக்கொண்டு அழுதாள் மொழி.

 அவள் அழுவதை கேட்டு இன்னும் கோபம் ஏறியது ரிஷிக்கு “வாய மூடுரியா இல்லையா டி  இப்போ” என்று கத்தி இருந்தான்..

 “மச்சான் நீங்க அமைதியா  இருங்க நான் என்னன்னு கேட்கிறேன்” என்றான் குகன்.

 “நானும்  அமைதியா இருக்கணுமுன்னு தான் நினைக்கிறேன் ஆனா உங்க அக்கா என்ன அமைதியா இருக்க விட மாட்டேங்குற, அவ  பண்ணதெல்லாம் நினைச்சு நினைச்சு எனக்கு ஆத்திரமா வருது.. எல்லாத்தையும்  தப்பு தப்பா யோசிச்சு தப்பு தப்பா செய்றா. அவ  என்ன செஞ்சானு  கேளு”   என்றான் ரிஷி கோபமாக.

 “அக்கா மச்சான் இவ்வளவு கோவப்படுற அளவுக்கு நீ  என்ன பண்ணி வச்சு இருக்க,  சொல்லு” என்றான்

 தன்  தோளில்  முகத்தை மூடி இருந்த மொழியின் முகத்தை  நிமிர்த்தி “சொல்லு” என்றான்.

 “எனக்கு பயமா இருக்குடா அவங்கள அமைதியா இருக்க சொல்லு”  என்று  ரிஷியை பார்த்து சொன்னாள் மொழி.

 “நீ பண்ணதெல்லாம் பார்த்துட்டு என்ன அமைதியா இருக்க சொல்றியா, கொன்னுடுவேன் உன்னை” என்றான் ஆத்திரமாக.

” மச்சான் ஏன் மச்சான் இப்படி கோபப்பட்டு கத்துறீங்க அவ பயப்படுறா மச்சான் கொஞ்சம் பொறுமையா இருங்க நான் என்னன்னு கேட்கிறேன்” என்று குகன் சொல்ல.

 “பொறுமையா என்னை பொறுமையா இருக்க சொல்றியா டா அவ  பண்ணுற ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு கேட்டு எனக்கு தாங்க முடியல நிம்மதியை தூங்க கூட முடியாம என்னை டார்ச்சர் பண்றா உன் அக்கா” என்றான்.

 “சரி சரி நான் என்னன்னு கேட்கிறேன் மச்சான்” என்று குகன் சொல்ல.

 சுதாவும் மகனிடம் ” நீ கொஞ்சம் அமைதியா இரு கத்தாத அவ பயந்து அழுகுறா” என்றவர் மகனே இழுத்துக் கொண்டு பக்கத்தறைக்கு சென்றவர்.

 “என்னடா ஆச்சுடா ரிஷி,  என்ன பிரச்சினை உங்களுக்குள்ள அவ  ஏன் இந்த முடிவு எடுத்து இருக்கா “? என்று சுதா மகனிடம் கேட்க.

 “மா அவ தேவை இல்லாம பயப்படறாமா,  அவளுக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா ஆதிவிக்கையும் சாத்விக்கைகும் நல்ல பார்த்துக்க முடியாது என்று குழப்பத்துல இருந்தா.

 அதே மாதிரி சாத்விக்கோட பிரண்டு தர்ஷன் ஒரு பையன் இருக்கான், போல அவனுக்கு அவங்க சித்தி ரொம்ப கொடுமை படுத்துறாங்க அதனால வந்து இவன் கிட்ட சொல்லுவான் போல, பிள்ளைகள் எதார்த்தமாக சொல்ல இந்த லூசு அது தப்பா நினைச்சுக்கிட்டு,  நம்மளுக்கு குழந்தை வந்தால் நம்மளும் மாறிடுவோமா?  என்று பயப்படுற இது தேவையில்லாத பயம், நீ அப்படி இருக்க மாட்டா, பிள்ளைகளை நீ நல்லா பாத்துப்பன்னு நான்  எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா”,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!