Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 28 2

அவள் சென்றதும் அங்கு தன்னையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியைக் கண்ட கீதா, “இப்போ எதுக்கு குடிகாரன் ஒரிஜினல் சரக்கா இல்லை டியூப்லிக்கேட்டான்னு பாட்டிலை பார்க்குற மாதிரி குறுகுறுன்னு  பார்க்குற என்னை?? ” என்று கேட்க,

அவளின் உதாரணத்தை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட அஞ்சலி, ” உனக்கு மட்டும் எப்படி டி இப்படி கேவலமா எக்சாம்பிள் சொல்லத் தோணுது.. ” என்று அலுத்துக் கொள்ள,



Advertisement

கீதாவோ அதை கண்டுகொள்ளாமல், “அது என்னை மாதிரி ஞானிங்களுக்கு தான் அப்படியெல்லாம் தோணும்.. அதெல்லாம் கண்டுக்காத.. முதல்ல எதுக்கு என்னை அப்படி பார்த்தேன்னு சொல்லு” என்று தன் கேள்வியிலே நின்றாள்.

“நீ எதுக்கு அஜயை வேண்டாம்னு சொல்ற?? எங்கிட்ட பொய் சொல்ல நினைக்காத.. ஐ க்நோ யூ.. உனக்கு அவரை பிடிச்சிருக்கு.. இந்நேரம் அவர் இடத்துல வேற யாராவதும் இருந்திருந்தா அவங்களை என்ன பண்ணியிருப்பன்னு எனக்கு நல்லாவே தெரியும்..ஆனா இவரை மட்டும் எதுவும் பண்ணலை நீ.. அது ஏன்???” என்று அஞ்சலி தனக்கு பதில் தெரிந்தே ஆக வேண்டும் என்பது போல் நிற்க,

Advertisement

Advertisement

ஒரு நொடி தயங்கிய கீதா பின் முகத்தை தெளிவாக வைத்துக் கொண்டு, ” ஆமா எனக்கு அவனை பிடிச்சிருக்கு..” என்று அஞ்சலியை போராட வைக்காமல் உண்மையை ஒத்துக் கொள்ள,

இப்போது அஞ்சலி மேலும் குழம்பினாள்.

Advertisement

“அப்பறம் எதுக்கு அவரை வேணான்னு சொல்லி வீட்டுல நேத்து அவ்ளோ போராட்டம் பண்ண??” என்று கேட்க,

கீதாவின் மனதில் நேற்று அவர்கள் வந்து விட்டு கிளம்பிய பின் நடந்த சம்பவங்கள் மனத்திரையில் காட்சிகளாய் ஓடியது.

அவர்கள் சென்ற பின்னும் சற்று நேரம் வரையில் அந்த சிரிப்பு வாயுவின் தாக்கம் கீதாவிடம் மிச்சம் இருந்ததால் சிரித்துக் கொண்டே இருக்க, அவளை மொத்த குடும்பமும் விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தது.

“மீனு உன் பொண்ணுக்கு பைத்தியம் எதும் பிடிச்சிருச்சா?? எதுக்கும் சாயங்காலம் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் காமிச்சிட்டு வந்திடு.. இவளை நம்பி சம்பந்தம் வேற பேசி முடிச்சு நாள் குறிச்சாச்சு” என்று சுந்தர பாண்டியன் தன் மனைவியிடம் கூற,

மீனாட்சியை முந்திக் கொண்ட காமாட்சியோ, ” எனக்கென்னமோ இது காத்து கருப்பு வேலையாட்டாம் தெரியுது தம்பி.. வெளிய நின்னதுல எந்த கருமமோ புள்ளை மேல ஏறிடுச்சு போல.. நம்ம பூசாரிகிட்ட கூட்டிட்டு போய் மந்திரிச்சிட்டு வருவோம் அப்போதேன் சரியாகும்” என்று அவர் தன் ஆலோசனையைக் கூற,

சிரித்து சிரித்து கண்களில் நீர் வர அமர்ந்திருந்த கீதாவோ, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அஜயின் மீது கடுங்கோபத்தில் கனன்று கொண்டு இருந்தாள்.

சற்று நேரம் சென்று அந்த மருந்தின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் தொடங்க, கீதாவின் சிரிப்பும் மெது மெதுவாய் அடங்கியது.

அது அடங்கிய அடுத்த நொடி கோபத்துடன் தன் குடும்பத்தினரைக் கண்டு, “யாரைக்கேட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி பூ வைக்க டேட் ஃபிக்ஸ் பண்ணிங்க??” என்று கோபத்தில் கத்தத் துவங்கினாள்.

அவளின் கத்தலைக் கேட்டு கடுப்பான மீனாட்சி, “கீதா பெரியவங்க முன்னாடி இப்படி பேசாதன்னு உனக்கு எத்தனை டைம் சொல்றது.. நாளைக்கு போற இடத்துலயும் இதே பழக்கம் தான் வரும்.. அப்பறம் நான் சரியா வளர்க்கலைன்னு எல்லாரும் என்னைத்தான் சொல்லுவாங்க.. முதல்ல வாயை அடக்கிப் பழகு” என்று அவளை அதட்ட,

“ம்மா நான் இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன்.. நீ என்னடான்னா போற இடம் வார இடம்னு கடுப்பேத்திட்டு இருக்க” என்று கீதா குதித்துக் கொண்டிருக்க,

“ஏன் கண்ணு உனக்கு அந்தப் பையலை புடிக்காமையா அப்படி சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்த??” என்று சந்தன பாண்டியன் தன் சந்தேகத்தை கேட்டார்.

“அய்யோ பெரியப்பா.. அது எப்படி சொல்ல.. அது நானா சிரிக்கலை.. அவன் தான் இதுக்கு காரணம்” என்று கீதா அதை எப்படி அவருக்கு புரியுமாறு சொல்வது எனத் தெரியாமல் குழம்ப,

“அதான் கண்ணு நானும் சொல்றேன்.. உன் சிரிப்புக்கு காரணம் அந்தத் தம்பிதான்னு நீயே சொல்ற..  என்னைக்குமே உன் அழுகைக்கு தான் அவர் காரணமா இருக்கக் கூடாது.. புரியுதா?? பேசி பேசியே காலம் பூராம் இப்படியே உன்னை சிரிக்க வச்சு சந்தோஷமா பார்த்துக்குவாரு கண்ணு அவரு… அவரைப் போய் வேணான்னு சொல்றியே” என்று சந்தன பாண்டி குறைபட்டுக்கொள்ள,

‘ அய்யோ படுத்துறாங்களே ‘ என நொந்து போன கீதா, “அய்யோ பெரியப்பா இது நீங்க நினைக்குற மாதிரி இல்லை..” என்று ஏதோ சொல்ல வர,

அதுவரையில் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுந்தர பாண்டியனோ, “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நீ என்ன நாடகம் போட்டாலும் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது.. இது ஒன்னும் விளையாட்டு இல்லை கீதா.. இதுல அஞ்சலியோட வாழ்க்கையும் அடங்கிருக்கு… நீ ஏதாவது ஏடாகூடமா பண்ணப்போய் அஞ்சலி கல்யாணம் கெட்டுப் போச்சு நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.. ஒழுங்கா உன் வாலை சுருட்டிட்டு கல்யாணத்து வரைக்கும் அமைதியா இல்லை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று அடிக்குரலில் அவர் சீற,

அவரின் குரலில் இருந்த எச்சரிக்கையை உள்வாங்கிக் கொண்ட கீதாவும், இனி தான் என்ன பேசினாலும் இங்கு எடுபடாது என்று உணர்ந்து கொண்டு கோபமாக அங்கிருந்து தனதறைக்குச் சென்று அறையை பட்டென அரைந்து சாற்றிக் கொண்டாள்.

“ஏய் எருமை?? நான் கேள்வி கேட்டா பதில் சொல்லாம கனவு கண்டுட்டு இருக்க.. என்னாச்சு உனக்கு??” என்று அஞ்சலி அவளை உலுக்கி நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தாள்.

“ப்ச்.. இப்போ உனக்கு என்னடி தெரியணும்??” என கீதா சலிப்புடன் கேட்க,

“நீ எதுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றன்னு தெரியணும்” என்று அஞ்சலியும் அவளிடமிருந்து பதிலை வாங்காமல் விடக்கூடாது என்று உறுதியாக இருந்தாள்.

“நீ நினைக்கிற மாதிரி பெரிய காரணம் எல்லாம் ஒன்னும் இல்லை.. அவனும் நானும் ஒரே கேரக்டர்.. நாங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்தா சண்டை போட்டே வாழ்க்கை வேஸ்டா போயிடும் அதான் வேணான்னு சொல்றேன்” என்று கீதா கூறிவிட,

அந்த பதிலில் திருப்தியடையாத அஞ்சலி, “இதுக்காகவா வேண்டாம்னு சொல்ற??” என நம்பாமல் மீண்டும் கேட்டாள்.

“அட ஆமாடி.. நீ வேறென்னா நினைச்ச??” என்று கீதா சலிப்புடன் அடுக,

“நீ ஏதோ மறைக்கிறன்னு எனக்கு நல்லாவே தெரியுது..” என்று மொழிந்த அஞ்சலி, கீதாவின் கைகளை பற்றிக் கொண்டு அவள் கண்களை நேராய் பார்த்தவள், “கீது நீ ஏதோ மனசுல வச்சி குழம்பிட்டு இருக்கன்னு எனக்கு  தெரியுது.. குழப்பத்துல எந்தவொரு முடிவும் எடுக்காத.. நல்லா யோசி.. தெளிவான மனசோட ஒரு முடிவெடு.. உனக்கு நிஜமாவே இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு தோணுன்னா தைரியமா என் கிட்ட சொல்லு.. என் வாழ்க்கைக்காக பிடிக்காத கல்யாணத்தை நீ பண்ணிக்க வேண்டாம்.. எனக்கு என் தங்கச்சி வாழ்க்கையும் முக்கியம்.. சரியா?? ஆனா எதுக்காகவும் பிடிச்ச ஒன்னை இழக்காத அது மீண்டும் கிடைக்காது” என்று கூறிய அஞ்சலி, கடைசி வரியை மட்டும் அழுத்தத்துடன் கூறிவிட்டு கீதாவிற்கு யோசிக்க தனிமையை வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் அவள்.

செல்லும் அஞ்சலியையே தன் விழியை விட்டும் அகலும் வரை பார்த்துக் கொண்டிருந்த கீதா, “நான் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றதே உனக்காகத் தான் எலி.. எனக்கு அஜய் மேல இருக்க காதலை விட உன் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்” என்று மனதோடு கூறிக்கொண்டு அங்கிருந்து அவளும் கிளம்பிச் சென்றாள் மனதில் நீங்காத பாரத்தோடு..

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!