குக்கர் சத்தம் கேட்டுத் தான் கண் விழித்தான் சரவணன்.
இரவு பிரண்டோட பர்த்டே பார்ட்டிக்கு சென்று லேட்டாக தான் வீடு வந்து சேர்ந்தான்.
யாரையும் தொந்தரவு செய்யாமல் அவன் அறைக்கு சென்று படுத்து தூங்கியிருந்தவன் காலையில் குக்கர் சத்தம் கேட்டு தான் எழுந்தவன்.
எழுந்து பாத்ரூம் சென்று அவன் காலை கடன்களை முடித்தவன் கிச்சன் நோக்கி வர.
அங்கே அவன் அக்கா மீனாட்சி சமைத்துக் கொண்டிருந்தாள்.
அக்காவின் அருகில் வங்தவன் “குட் மார்னிங் கா ” என்று சொல்லிய படியே கிச்சன் பக்கத்தில் உள்ள மேடை மீது அமர்ந்தான்.
“குட் மார்னிங் டா, ஏன் இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்ச ஆபீஸ் மத்தியானம் தானே உனக்கு” என்றாள் மீனாட்சி.
“உன் குக்கர் சத்தம் தான் என்னை எழுப்பி விட்டது, இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு கா போகனும் ” என்றான் தூக்க கலக்கத்தில்.
“சாரிடா” என்றவள்
“காபி குடிக்கிறியாடா சரவணா” என்றாள் மீனாட்சி.
“போடு அக்கா” என்றான்.
தம்பிக்கு காபி கலந்து கொடுத்தவள்.
அவளும் தனக்காக கலந்து வைத்திருந்த சத்துமாவு கஞ்சி குடித்துக் கொண்டே சமைத்துக் கொண்டு இருந்தாள்.”ஏன் கா உட்கார்ந்து குடி கஞ்சியை?” என்றான் சரவணன்.
“ஆண்டாளுக்கு ஸ்கூலுக்கு லேட் ஆயிடுச்சு டா ” என்றவள் வேகமாக சமைத்துக் கொண்டு இருக்க.
சரவணன் காபி குடித்து முடித்ததும்.
“அவளை கொஞ்சம் எழுப்பி விடுடா” என்றாள்.
” இருக்கா” என்றவன் அவன் குடித்த காபி கப்பை கழுவி வைத்து விட்டு ஆண்டாள் அறைக்கு சென்றான்.
அங்கே குப்புற படுத்து அழகாக தூங்கிக் கொண்டிருந்தாள் ஆறு வயசு ஆண்டாள்.
“அடியே ஆண்டாளு, குட்டி பிசாசு ஆண்டாளு” என்றான் இரண்டு முறை அக்கா மகளை.
குழந்தையோ “போ மாமா” என்று மறுபடியும் குப்புற படுத்து தூங்க.
அவளை வம்பு செய்ய வேண்டும் என்று தன் போனில் பாட்டை ஆன் செய்தான் சரவணன். ‘ஆண்டாளு… ஆண்டாளூ, அண்ணாநகர் ஆண்டாள் அய்னாவரம் ஆண்டாளு ‘ என்ற பாடல் ஒலிக்க அடித்து பிடித்து எழுந்தது குழந்தை.
“மா… மீனு” என்று கத்தினாள் ஆண்டாள்.
“என்னடி” என்ற மகள் கத்திய சத்தத்தை கேட்டு வேகமாக ஸ்டவ்வை ஆப் பண்ணி விட்டு மீனாட்சி ஆண்டாள் அறைக்கு வர.
“இந்த மாமாவை இந்த பாட்ட ஆப் பண்ண சொல்லுமா எனக்கு இந்த பாட்ட கேட்டா இரிடேட் ஆகுது” என்று குழந்தை சினுங்க..
“அடிப்பாவி வாரத்தில் பாதி நாள் நீ குளிக்காம தாண்டி நீ ஸ்கூலுக்கு போற, அழுக்கு பேபி” என்றாள்.
“எனக்கு தூக்கமா வருது நான் 10 நிமிஷம் தூங்குறேன்” என்றதும்.
“அடியே அரை மணி நேரத்துல பஸ் வந்துரும் நீ சாப்பிட்டு கிளம்பு” என்றவள்.
மகளின் முகத்தை கழுவி விட்டு அவளுக்கு யூனிபார்ம் மாற்றிவிட்டு.. மகளை டைனிங் டேபிள் அமர வைத்து மகளுக்கு பிடித்த தோசையும் சட்னியும் ஊட்டி விட்டவள். ஸ்னாக்ஸும் லஞ்ச் பாக்ஸும் ரெடி பண்ணி விட்டு.
மகளை அந்த அப்பார்ட்மெண்டில் இருந்து கீழே அழைத்து வந்தாள்.
அவளைப் போலவே சிலர் பிள்ளைகளை அழைத்து வந்து வரிசையாக நின்றிருந்தனர் அந்த அப்பார்ட்மெண்டில் வெளியே..
சரியாக பஸ் வந்ததும் பிள்ளைகளை வரிசையாக நிற்க வைக்க, பஸ் கதவு திறந்ததும் ஒவ்வொரு பிள்ளையாக ஏறினார்கள்.
மீனாட்சி மகளிடம் “அம்மா, மாமா வர லேட் ஆனா கரெக்டா நம்ம பிளாட்டு வாசவில் போய் நின்னுக்கணும் சிவாகுமார் மாமா வருவான், வந்து உன்னை கூட்டிட்டு போவான்” என்று சொல்ல சரிமா என்றது குழந்தை..
மீனாட்சிக்கு யாரிடம் நின்று பேச நேரமில்லை, அவர்களும் இவளிடம் பேசவில்லை அங்கு இருப்பவர்கள் பாதிப்பேர் சிங்கப்பூர் வாசிகள், அவள் வேலைக்கு கிளம்பியாக வேண்டும்.
அவள் வேலை செய்யுவது முதியோர் இல்லத்தில் நர்சாக பணிபுரிகிறார், அங்கே நூற்றுக்கு மேற்பட்டோர் இருக்க அவர்களை பார்த்துக்கொள்ளும் இவள் வேலை.
வேலை மிகவும் எளிதுதான். முதியவர்கள் அனைவருக்கும் பிரஷர், சுகர், ஹெல்த் அனைத்தும் செக் செய்து பார்த்து கொள்ள வேண்டும் என்ற வேலை அவளுடையது.. அவளுக்கு வேலையை விட
பெரியோர்களிடம் பேசுவதை அவளுக்கு பெரிய வேலையாகி போனது.
சிங்கப்பூர் வந்து ஆறு மாதமாகியது.
கடந்த நான்கு வருடமாக சரவணன் இங்கு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான் அவன் உழைப்பால் வந்தது தான் இந்த பிளாட்..
சொந்த பிளாட் தான். 3 மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு.
அழகான வீடு பத்து மாடு கட்டிடம்..
முதல் தம்பி சிவகுமார் இரண்டாவது தம்பி சரவணன்.
சரவணன் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான்.. முதல் தம்பி கேட்டரிங் படித்து சிங்கப்பூரில் ஹோட்டல் வைத்திருக்கிறான்.
சரவணன் தான் வீட்டு பக்கத்தில் ஒரு ஹோட்டல் வைத்து கொடுத்திருக்க சிவக்குமாருக்கு.
ஹோட்டல் நன்றாக போக, பக்கத்தில் ஒரு காபி ஷாப்பிங் ஓபன் பண்ணி இருந்தான் சிவ.. ஹோட்டல் திறந்து மூன்று மாதத்தில் நன்றாக வேலை செய்து 10 பேர் வேலை செய்கிறார்கள், பக்கத்திலே டிகிரி காபி என்று கடை வைத்து விட்டான் சிவகுமார்.
மூன்று பேரும் உழைக்கிறார்கள் அவர்கள் வீட்டில்..
அவர்கள் வீட்டில் இருப்பதோ சார்ட்டடே, சண்டே மட்டும் தான்.
மகளை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தாள் மீனாட்சி.
சரவணன் கிளம்பி நிற்க சாப்பிட்டு போடா அக்கா குளிச்சிட்டு வரேன் என்று தம்பிக்கு அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு செல்ல.
அவனோ அக்காவுக்காக சாப்பிடாமல் காத்திருந்தான்.
“டேய் உனக்கு டைம் ஆச்சு தானே நீ கிளம்ப வேண்டியது தானே” என்றவன். அந்த நர்ஸ் உடைய சரி பண்ணி கொண்டே, கொண்டை போட்டுக்கொண்டு வர.
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் சரவணன்.
“டைம் ஆச்சுடா” என்றவள் வேக வேகமாக தம்பிக்கு தோசையை வைத்தவள் அவனுக்கு லஞ்ச் பேக் செய்துவிட்டு, அவளுக்கும் லஞ்ச் பேக் செய்தவள், அவளும் தோசையை வைத்து உண்ணா அமர்ந்து கொண்டே “சொல்லு” என்றாள்.
“அந்த வினோத்தை பற்றி நீ ஒன்னும் சொல்லலையே” என்றான்.
“டேய் எனக்கு கல்யாணத்து மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லை.
நீ வேணா கல்யாணம் பண்ணிக்கோ..
சிவக்குமாருக்கு வேண பொண்ணு பார்க்கலாம்”
என்றாள்.
கல்யாணத்து மேல இஷ்டமில்லை என்று மீனாட்சி
சொன்னா உடன்.
“அப்போ நீ கடைசி வரைக்கும் ஆண்டாள் கூட தனியா தான் இருக்க போறியா”? என்றான் சரவணன் கோபமாக.
“நீங்க இருக்கீங்க தானடா அது போதும் எனக்கு. உங்களுக்கு நல்லது செய்து பார்க்கிறது தான் என்னோட வேலை” என்று மீனாட்சி கூற.
“அக்கா” என்றான்.
“சாப்பிடு சாப்பிடும்போது பேசாதே” என்று அவள் முகத்தை தூக்க.
தான் சாப்பிடா விட்டாள் அவளும் சாப்பிட மாட்டாள் என்று அவள் வைத்த இரண்டு தோசையில் ஒரு தோசை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு தோசை ஹார்ட் பாக்சில் போட்டுவிட்டு அவன் கோபமாக கிளம்ப.
“ஆபீஸ் போயிட்டு கேண்டில் போய் சாப்பிடு,” என்றவள்.
தன் கைபையை எடுத்துக்கொண்டு அவள் வேலை செய்யும் முதியோர் இல்லத்தை நோக்கி ட்ரைனில் சென்று கொண்டிருந்தாள்.
அவள் மனது இந்த ஒரு வருடமாக தான் நிம்மதியாக இருக்கிறது.
கடந்த ஆறு மாதமாக தான் மூன்று பேரும் ஒன்றாக இருக்கிறார்கள்..
மனதில் நாங்கள் சபிக்கப்பட்டவர்களோ ஒன்றாக இருக்க முடியாது மூன்று பேரும் என்று நினைத்திருந்தவளுக்கு இந்த ஆறுமாகத்தான் நிம்மதியாக இருக்கிறது..
அந்த நிம்மதியை அவள் இன்றும் இழக்க விரும்பவில்லை.
முதலில் சிவக்குமாருக்கு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும்.
அடுத்து சரவணனுக்கு நல்ல பெண் பார்த்து திருமணம் முடித்து வைக்க வேண்டும், எனக்கு ஆண்டாள் போதும் என்று மனதில் பதிந்து வைத்திருந்தாள்.
வேலைக்கு செல்லும் முன் சிவகுமாரை போனில் அழைத்தவள்.
போனை எடுத்தவுடன் “அக்கா வேலைக்கு போயிட்டியா” என்றான் சிவா.
“நான் இப்ப தான்டா வந்தேன் நீ சாப்டியா டா” என்றாள் மீனாட்சி தம்பியிடம்.
“நான் ஹோட்டல் வச்சிருக்கேன் கா சாப்பிட மாட்டேனா? , அப்பவே சாப்பிட்டேன். நீ சாப்டியா சரவணா வந்து சாப்பிட்டானா” என்று விசாரிக்க.
“எல்லாரும் சாப்பிட்டு கிளம்பிட்டோம் டா, நீ ஆண்டாள் ஸ்கூலில் இருந்து வரும் போது, அவளை ஸ்டாப் போயி, கூட்டிட்டு வந்து உன் ஹோட்டல்ல வச்சுக்கோ, அக்கா வேலை முடிஞ்சு வரும்போது, ஆண்டாளை கூட்டிட்டு வீட்டுக்கு போயிக்கிறேன்” என்றாள்.
“அக்கா நீ அழையாது, நான் வீட்டுலயே ஆண்டாள் கூட இருக்கேன், நீ வந்ததும் நான் ஹோட்டலுக்கு போறேன் ” என்று கூற.
“உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையா? சிவா” என்றதும்.
“எனக்கு என்ன கஷ்டம், நீ வேலையை முடிஞ்சுட்டு நிதானமா வா” என்றான்.
சரிடா என்று மீனாட்சி அவள் வேலை பார்க்க முதியோர் இல்லம் செல்ல.
சிவா தன் ஹோட்டலில் உள்ள வேலையில் கவனமாகினான்.
சிவா அவன் கடந்து வந்த பாதையை நினைத்து பார்த்தான்.
ஏமாற்றம், தூரோகம், வலி வேதனை தான் அவன் வாழ்வில்.
கடந்து ஒரு வருடமாகத் தான் நிம்மதியாக இருக்கிறான்.
அதுவும் இந்த ஆறுமாதமாக அவனுக்கு புது மனிதனாக பிறந்து போல ஒரு உணர்வு,.
தன் அக்கா மீனாட்சி மட்டும் இல்லை என்றாள், தான் இன்னும் வேலூர் சிறையிலே இருந்திருப்பேன்,.
என் அக்கா என்னை காப்பாற்ற வில்லை என்றால், நான் என்னவாகி இருப்பேனே தெரியாது.
அவனின் தம்பி சரவணன் அவனுக்காக பல லட்சம் செலவு செய்து தன்னை வெளியே கொண்டு வந்திருக்கிறான், அது மட்டும் இல்லை, இங்கே சிங்கப்பூர் வந்தவுடன் தனக்கென்று ஒரு ஹோட்டல் வைத்து கொடுத்திருக்கிறான்.
இப்படி பட்ட உடன் பிறப்புகள் தன்னோடு பிறக்க என்ன தவம் செய்தேன் நான் என்று தன் உடன் பிறந்த மீனாட்சி, சரவணனை நினைத்தவன்.
தன் ஹோட்டலில் கல்லாவில் அமர்ந்து, பில் போட்டு கொண்டு இருந்தான்,.
ஆண்டாளை கூப்பிடும் நேரம் நெருங்கியதும், தான் வாங்கிய செகனென்ட் காரை எடுத்துக்கொண்டு வீடு சென்றான்.
இவன் வந்து பத்து நிமிடம் கழித்து தான் ஆண்டாள் பள்ளி வாகனம் வந்து..
சிவாவை பார்த்து “மாமா” என்று துள்ளி குதித்து வந்தாள் ஆண்டாள்..
அவனை தாவி அணைத்து க்கொண்டு, “மாமா ஐஸ்கிரீம் வாங்கி தா” என்று அவனை செல்லம் கொஞ்ச.
“அம்மா திட்டுவாங்க டா” என்றான் சிவா..
“நான் அம்மா கிட்ட சொல்ல மாட்டேன் மாமா”, என்றவள் மாமானை ஐஸ் வைத்து ஐஸ்கிரீம் வாங்கி உண்டு விட்டு வீடு வந்தனர்..
சிவ தன் ஹோட்டலில் இருந்தது, அனைவருக்கும் இரவு உணவு எடுத்து வந்திருந்தான்.
மீனாட்சி வரும் முன்னே சரவணன் வந்திருந்தான்.
சிவாவை பார்த்தவன், அவனிடம் பேசாமல் அறைக்கு சென்று விட்டான்,.
சரவணன் அறைவாசலில் நின்ற சிவா.
“நான் கிளம்புறேன் பாப்பாவை பாத்துக்கோங்கோ” என்று கூற.
சிவாவிடம் எதுவும் பேசாத சரவணன், “ஆண்டாள் என் ரூம் வா விளையாடலாம்” என்று அழைக்க.
ஆண்டாள் சரவணனின் அறைக்கு சென்றாள்.
சிவா வெளி கதவை சாத்திவிட்டு ஹோட்டல் கிளம்பினான்.
சரவணனுக்கு தன் மேல் உள்ள கோபம் எப்போ போகுமோ என்று வருந்தியபடியே ஹோட்டல் வந்து சேர்ந்தான் சிவா.
நல்லா கூட்டமாக இருந்தது ஹோட்டல். அவன் வந்தது வேகமாக பில் போட.
கூட்டம் சிறிது குறைந்ததும்.
அவனுக்கு பிடித்த முருகன் பாடலை ஒலிக்க விட்டான் சிவகுமார்.
அவனுக்கு சந்தோஷம் வந்தாலும் சரி, துக்கம் வந்தாலும் சரி அவன் நம்புவது அந்த முருக பெருமானை மட்டும் தான்.
ஹோட்டலில் உள்ள ஸ்பிக்கரில் பாடலை கனேக்ட், செய்தவன் பாட்டை ஆன் பண்ண..
ஒலித்தது முருகனின் பாடல் ‘உள்ளம் உருகுதடா முருகா, உன்னை நினைக்கையிலே, அள்ளி அணைத்திடவே, அள்ளி அணைத்திடவே உன் மேல ஆசை பெருகுதடா முருகா’ என்று பாடல் ஓட. அந்த பாட்டில் தன்னை துழைத்தான் சிவா
.
சரவணன் அடிக்கடி ஆபிஸ் விசயமாக மலேசியா சென்று வந்தான், மீனாட்சி, சிவ, ஆண்டாள் சிங்கப்பூர் வந்து ஒரு வருடம் ஆனது…
சிவாவின் ஹோட்டலும், காபி சாப்பும் பிரபலம் ஆனாது, நினைத்ததை விட.
இன்னும் ஹோட்டல் நன்றாக நடத்தி கொண்டிருந்தான்..
சரவணன் தனக்கு ஹோட்டல் வைக்க கொடுத்த பணத்தையும் அவனிடம் திருப்பி கொடுக்க, சரவணன் அதை வாங்க மறத்து விட்டான், என் கிட்ட இருக்குற பணத்தையே நான் என்ன செய்ய என்று யோசிக்குறேன், நீ இவ்வளவு பணத்தை என்கிட்ட கொடுக்குற என்றான், மீனாட்சியை நடவில் வைத்து கொண்டே.
மீனாட்சிக்கு தம்பிகள் வளர்ந்து வருவதை பார்க்க சந்தோஷமாக இருந்தது,..
“அந்த பணத்தை அப்படியே வைங்கடா ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு உதவும் ” என்றாள் மீனாட்சி.
“சிவா நான் கல்யாணம் செய்துக்க போறதில்லை உன்னையும் ஆண்டாளையும் பார்த்துக்கொள்வது எனக்கு போதும்” என்று அவன் சொல்ல.
சரவணன் அமைதியாக இருந்தவன்.
“நீ கல்யாணம் பண்ணிக்கோ கா, நானும் சிவாவும் ஆண்டாளை பார்த்துக்கிறோம்” என்று சொல்ல.
அவளோ சிரித்திருந்தாள்.
“என்னடா அவ்வளவு பெரிய மனுஷன் ஆயிட்டீங்களா” என்றவள்.
“முதல்ல நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க அப்புறம் எனக்கு ஏத்த, எனக்கு பிடிச்சவரா என்கிட்ட வந்தாருன்னா.? நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் கடைசி வரைக்கும் நான் இப்படி இருந்திட மாட்டேன், தனிமை கொடுமை என்று எனக்கு தெரியும், என்னையும், ஆண்டாளையும் ஏத்தக்குற நல்ல மனுஷன் என் கண்முன்னாடி வந்தாருன்னா, கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று மீனாட்சி சொல்ல, அதற்கு மேல் சகோதரர்கள் பேச வில்லை..
இரண்டு வருடம் ஆகிவிட்டது அவர்கள் சிங்கப்பூர் வந்து..
சிங்கப்பூரின் உள்ள நடைமுறை நன்றாக பழகி ஆயிற்று அனைவருக்கும்.
சரவணனுக்கும், சிவாவுக்கு கல்யாணத்துக்கு பெண் பார்க்க மீனாட்சி கேட்க, அவர்கள் இருவருமே திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை சிவாவுக்கும் உனக்கும் பார்க்கலாம் கடைசியாக நான் திருமணம் செய்து கொள்கிறேன்,என்று சரவணன் சொல்ல.
நீங்க மூத்தவங்க ரெண்டு பேரு இருக்குறப்போ நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணுவேன் என்றான் அவனும்.
இப்படியே மூன்று பேரும் நீ கல்யாணம் பண்ணிக்கோ நீ கல்யாணம் பண்ணிக்கோ என்று சண்டை போட.
அவர்கள் வீட்டின் காலிங் பெல் அடித்தது.
மீனாட்சி தான் சென்று கதவை திறந்து பார்த்தாள், யாரோ சிங்கப்பூர் வாசிகள் போல் தெரிந்தது,.
“யார் வேணும், யார் நீங்க” என்று மீனாட்சி கேட்க, “சரவணனை பார்க்க வேண்டும்” என்று அவர்கள் ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
ஒரு இளம் பெண், மற்றும் ஒரு தம்பதியர் வந்திருக்க.
வாங்க என்று உள்ளே அழைத்தாள் மீனாட்சி.
அந்த இளம் பெண் ஏதோ படபடப்பாக இருப்பதும் கண்கள் சிவந்து தடித்தது போல் இருந்தது போல தெரிந்தது மீனாட்சிக்கு..
சிவாவும் சரவணனும் ரூமில் தான் இருந்தார்கள் அவர்கள் ஆண்டாளோடு பேசிக்விளையாடிகொண்டிருங்க.
வந்தவர்கள் சொன்ன செய்தியில் துடித்து போன மீனாட்சி..
சரவணனை தேடி வந்தவள் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி அடித்திருந்தாள்….