Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 29 2

“வந்தாச்சு வந்தாச்சு” என வினோத் அலுத்துக் கொள்ள,

“அந்த மஞ்சள் பட்டுப்புடவைக்கு மேட்சிங்கா ஆரி வொர்க் போட்ட பிளவுஸ் வாங்கிட்டியா??” – மதுரம்,



Advertisement

“வாங்கியாச்சு வாங்கியாச்சு” – வினோத்,

“பச்சை சேரிக்கு எடுப்பா சில்க் த்ரெட் வளையலும் கம்மலும் வாங்கிட்டு வர சொன்னேன்ல அதை வாங்கிட்டியா??” – மதுரம்.

Advertisement

Advertisement

“வாங்கியாச்சு வாங்கியாச்சு” – வினோத்,

“ஹான் அப்பறம் பூக்கு சொல்லிட்டியா?? சீசன் இல்லைன்னு மல்லிகைப்பூக்கு பதிலா ஜாதிப்பூவை கொடுத்துற போறான்.. மல்லிகைப்பூ தான் வேணும்னு சொல்லிட்ட தான??” – மதுரம்,

Advertisement

“சொல்லியாச்சு சொல்லியாச்சு” – வினோத்,

“நாளைக்கு நைட் தான் ஃபங்க்ஷன் அதுனால இங்க இருந்தே பியூட்டிசியனை கூட்டிட்டு போகலாம்னு சொல்லியிருந்தேனே .. அவங்ககிட்ட நாளைக்கு காலையில பத்து மணிக்கே வர சொல்லிட்டியா??” – மதுரம்,

“சொல்லியாச்சு சொல்லியாச்சு” – வினோத்,

“டேய் என்ன எங்க அம்மாவை கிண்டல் பண்ணிட்டு இருக்கியா?? இன்னைக்கு ஒரு நாள் தான் இருக்குன்னு அதுக்குள்ள ஃபங்கஷனுக்கு தேவையான  எல்லாத்தையும் தயார் செய்யணும்னு அவங்க எவ்ளோ பொறுப்பா யோசிச்சு சொல்லிட்டு இருக்காங்க நீ என்னடான்னா சொல்லியாச்சு  வாங்கியாச்சுன்னு ராகம் பாடிட்டு இருக்க??” என்று அப்போது தான் அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்து சேர்ந்த ராமன் வினோத்தை கண்டிக்கும் குரலில் கேட்க,

அவரை கொலைவெறியுடன் முறைத்த வினோத், ” என்னை மிருகம் ஆக்காம போய்ருங்க அங்கிள்” என்று கடுப்புடன் கூற,

“நீ இப்போவே அப்படித்தான் இருக்க” என்று சமயம் பார்த்து அவனை வாரினார் வாசுதேவ கிருஷ்ணன்.

இருவரையும் ஒருசேர முறைத்த வினோத், “இதெல்லாம் உங்க அம்மா உங்க மருமகளுங்களுக்காக வாங்க சொன்ன லிஸ்ட் இல்லை… அவங்களுக்காக கொடுத்துவிட்ட லிஸ்ட்.. ஃபங்கஷனுக்கு எதுவுமே இன்னும் தயாராகலை உங்க அம்மா மட்டும் தான் தயாராகி இருக்காங்க..இதுல இவங்களுக்கு சப்போர்ட்டுக்கு வேற ரெண்டு பேரும் வந்துட வேண்டியது” என்று மதுரத்தை குற்றம் சாட்டினான்.

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமன், தன் தாயை நினைத்து மனதில் பொருமிக் கொண்டே, “என்னம்மா இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்கிங்க?? ஆமா முதல்ல நாளைக்கு பொண்ணு மாப்பிள்ளைக்கு டிரெஸ் எடுத்திங்களா இல்லையா?? அஸ்வத் எங்க??” என்று அவர் கேள்வியெழுப்ப,

அங்கு அனைவருக்கும் மாலைத் தேநீர் கொண்டு வந்த சீதா தன் கணவனின் கேள்விக்கு பதிலாய், “அஷுக்கு இன்னைக்கு ஒரு ஆபரேஷன் இருக்கு சோ லேட் நைட் தான் வருவேன்னு போய்ட்டான்… அஜய், ஜீவா கூட சேர்ந்து அவனோட ஃப்ரெண்ட்சை நாளைக்கு ஃபங்கஷனுக்கு கூப்பிட போய்ருக்கான்.. மத்த வேலையை பார்க்கவே நேரம் சரியாப் போச்சு அதுனால பொண்ணுங்களுக்கு மட்டும் பட்டுப்புடவையை போய் இனிதான் எடுக்கப் போறோம்..” என்று அவருக்கு தகவல் சொல்ல,

அதைக் கேட்டு தாம் தூம் என குதிக்கத் தொடங்கி விட்டார் ராமன்.

” நாளைக்கு காலையில பத்து மணிக்கு இங்க இருந்து கிளம்பணும்னு சொல்லிட்டு இருக்கேன்.. இன்னும் டிரெஸ் எடுக்காம உன் மகனுங்க என்ன பண்ணிட்டு இருக்கானுங்க.. நீங்க இனி போய் புடவை எடுத்து அதை எப்போ தைக்க கொடுத்து நாளைக்கு அந்த பிள்ளைங்க போட்ட மாதிரி தான் அதை.. என்ன எல்லாரும் இவ்ளோ பொறுப்பில்லாம இருக்கிங்க” என்று அவர் கத்திக் கொண்டே இருக்க,

அவரை மதுரம் தான் அடக்கினார்.

“டேய் இப்போ எதுக்கு டிரவுசர்க்குள்ள டைனோசர் போன மாதிரி கத்திகிட்டு இருக்க.. உனக்கென்ன கிளம்புறதுக்கு முன்னாடி எல்லாம் தயாரா இருக்கணும் அவ்ளோ தான.. அதை நாங்க பார்த்துக்குறோம் நீ போய் முதல்ல BP மாத்திரையை போடு போ” என தன் மகனை அங்கிருந்து கிளப்பிவிட்டு,

அங்கு ‘ டிரவுசர்குள்ள எப்படி டைனோசர் போகும்?? அவ்ளோ பெரிய டிரவுசரா அது?? ‘ என ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வினோத்திற்கு அடுத்தடுத்த வேலைகளை கொடுத்து அவனையும் கிளப்பியிருந்தவர், பின் தன் மருமகள்களுடன் மணப்பெண்களுக்கு நிச்சயப் புடவையை எடுக்க புறப்பட்டு சென்றார்.

பிறை போல் அழகாய் வெட்டப்பட்டிருந்த தன் நகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு அமர்ந்திருந்த கீதாவைக் கண்டு அவளை நெருங்கினாள் அஞ்சலி.

அருகில் யாரோ வரும் அரவம் உணர்ந்து தன் சிந்தையிலிருந்து கலைந்த கீதா, அங்கு வந்த அஞ்சலியைக் கண்டு “என்ன எலி நாங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுறோமா?? நான் கூட இந்நேரம் உன் ஆள் கூட டூயட் பாடிட்டு கனவுல மிதந்துட்டு இருப்பேன்னு நினைச்சேன்.. பரவாயில்லையே” என அவளை சீண்டினாள்.

அதை கணக்கில் கொள்ளாத அஞ்சலி, கீதாவையே ஆழமாகப் பார்த்து, ” நான் நேத்து சொன்னதை யோசிச்சுப் பார்த்தியா கீது?? என்ன முடிவு பண்ணியிருக்க??” என கேள்வியெழுப்ப,

அவள் எதைக் கேட்கிறாள் என்று புரிந்தாலும் அதை காட்டிக் கொள்ளாத கீதா, “எதைப் பத்தி??” என ஒன்றும் அறியாதவள் போல் எதிர் கேள்வி கேட்டாள்.

“ம்ம்ம் நாளைக்கு சாப்பிட்டு தட்டை மாத்திக்கலாமா இல்லை தட்டை மாத்திட்டு சாப்பிட்டுக்கலாமா அப்படின்னு தான்” என அஞ்சலி கடுப்புடன் கோக்கு மாக்காய் பதிலளிக்க,

“ஓஹ் இதுல என்ன சந்தேகம் சாப்பிட்டு தான் மத்த வேலையெல்லாம்.. நமக்கு சோறு தான் முக்கியம் பா” என கீதா சிரியாமல் சொல்ல, அவள் செவியைப் பிடித்து திருகிய அஞ்சலி, “விளையாடாத பக்கி!! ஒழுங்கா சொல்லு.. உனக்கு நிஜமாவே இந்த கல்யாணம் வேண்டாமா??” எனக் கேட்டாள்.

“நான் வேணான்னு சொன்னா உடனே இந்த கல்யாணத்தை நீ நிறுத்திருவியா??” என கீதா பதிலுக்கு கேள்வி தொடுக்க,

மறுநொடி எவ்வித யோசனையும் இன்றி, “ஆமா உனக்கு பிடிக்கலைனா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காது” என்று உறுதியளித்தாள் அஞ்சலி.

அவளை குழப்பத்துடன் பார்த்த கீதா, “உனக்கு அவ்ளோ தைரியம் வந்திருச்சா எலி?? முதல்ல எல்லார்கிட்டயும் போய் எனக்கு இந்த கலர் சேரி தான் வேணும்னு தைரியமா கேட்டு வாங்கிட்டு வா அப்பறம் கல்யாணத்தை நிறுத்துறதை பத்தி யோசிக்கலாம்” என அஞ்சலியின் சுபாவத்தை அறிந்து கீதா அவளை கிண்டல் செய்ய,

“எனக்கு தைரியம் வந்துச்சா வரலையான்னு எனக்கு தெரியலை.. ஆனா என்னோட வாழ்க்கையை காரணம் காட்டி பிடிக்காத ஒரு பந்தத்துல உன்னை சேர்த்து வைக்கிறதை என்னால ஏத்துக்க முடியலை…உனக்கு நிஜமாவே இந்த கல்யாணம் பிடிக்கலையா?? ” என அஞ்சலி தன் மனதில் உறுத்திக் கொண்டிருப்பதை ஒரு பரிதவிப்புடன் கேட்க,

‘அந்த டைனோசர் வாயனை கட்டிக்க யாருக்குத்தான் பிடிக்காது.. ஏன் டி என்னை இப்படி சோதிக்கிற?? ‘ என மனதில் நொந்து கொண்ட கீதா,

“லூசு மாதிரி எதையாவது பேசிட்டு இருக்காம போய் தூங்கு.. அப்போதான் நாளைக்கு ஃபங்க்ஷன்ல ஃபெரெஷா தெரியுவ.. போ கிளம்பு எலி” என அவளிடமிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்த்தாள் கீதா.

அவளின் முயற்சியை உணர்ந்து கொண்ட அஞ்சலியும், “உனக்கு நாளைக்கு காலையில வரைக்கும் டைம் தரேன்.. அதுக்குள்ள ஒரு முடிவை சொல்லு.. என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகணும்னு நினைக்காத.. குட் நைட்” என்று கூறியவள் அவளுக்கு யோசிக்க தனிமையை வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

அஞ்சலி சென்ற பின், கீதாவின் மனம் ஒரு நிலையில்லாமல் தவிக்க அவளின் கைகள் அன்னிச்சையாக தன் சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த ‘அந்த செயினை’ வருடியது.

தன்னவன் அணிவித்த அந்த சங்கிலியில் அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்த கீதா அதை தன் நெஞ்சாங்க்கூட்டில் அழுத்திக் கொடுத்தவள் அஜய் தன் மனதில் அடியெடுத்து வைத்த நாட்களை அசை போடலானாள்.

-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!