புலர்ந்தும் புலாராத அந்த அதிகாலை வேளையில், சுற்றி எங்கும் பனி மூட்டம் சூழ்ந்திருக்க எதிரில் யார் வருகிறார்கள் என்று கூட தெரியாத டெல்லியின் சாலையில் புயல் வேகத்தில் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தது ஜித்தேஷின் ஜாகுவார்.
Advertisement
வெளியில் விழுந்து கொண்டிருந்த பனியும் உள்ளே ஓடிக் கொண்டிருந்த ஏசியும் அவனின் மனதின் வெம்மையை சுத்தமாய் குளிர்விக்க முடியாமல் தோற்று தான் போயின.
Advertisement
காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் மனமெங்கும் ஷ்ராவனியே நிறைந்திருக்க, அவளைக் கடத்தியவனின் நினைவில் அவன் முரட்டுக் கரங்கள் கோபத்தி இறுக, அந்த மகிழுந்து அவன் கைகைளில் சீறிப் பாய்ந்தது.
Advertisement
மதுரையில் இருந்து விமானத்தின் மூலம் டெல்லி வந்தி இறங்கியவனின் கைபேசிக்கு ஒரு மெசேஜ் வர,
Advertisement
அதை திறந்து பார்த்தவனின் விழிகள் இடுங்கியது.
அதில் அவனின் ஷ்ராவனியை யாரோ கசக்கி பிழிந்தது போல் மயக்கத்தில் கிடக்க, அவளின் ஆடையெல்லாம் நழுங்கி போய் தலையெல்லாம் கலைந்து போய் கிடந்த தோற்றம், நிச்சயம் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என சொல்லாமல் சொல்லியது.
அதைக் கண்டவனின் உள்ளம் தன்னவளுக்காக மௌனமாய் கண்ணீர் வடிக்க, அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை கொன்று விடும் ஆத்திரம் கிளம்பியது அவனுள்.
அப்போது அவன் போனிற்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர,
அவசரமாய் அந்த அழைப்பை ஏற்று போனை காதுக்கு கொடுத்த ஜித்தேஷ், ” வேர் இஸ் மை ஷ்ராவனி???” என்று எஃகு போல் இறுகிப் போன குரலில் கேட்டான்.
மறுபுறம் இருந்தோ ஒரு பலமான சிரிப்பு சப்தம் பதிலாக வர,
அதில் எரிச்சல் அடைந்த ஜித்தேஷ், “ஆன்சர் மீ இடியட்” என்று உச்சாஸ்ததியில் கத்த,
“பரவாயில்லையே நம்பரை வச்சே யார்னு கண்டுபிடிச்சுட்ட ரொம்ப அறிவு தான் ஜித்தேஷ் நீ” என்று மறுபுறம் இருந்து நக்கலாக வந்தது பதில்.
“ப்ச் என் ஷ்ராவனிக்கு என்னாச்சு?? அவளை என்ன பண்ண?? ஹவ் டேர் யூ டச் மை கேர்ள்?? நேர்ல மட்டும் இப்போ உன்னை பார்த்தேன் யூ ஆர் ஃபினிஷ்ட்” என்று கோபத்தில் கொதித்த ஜித்தேஷின் கை முஷ்டிகள் இறுக,
அதை எதிர்ப்புறம் உணர்ந்ததோ என்னவோ, “ஓகே ஓகே கூல்.. ஜித்து பேபி இப்போ நீங்க கோபப்பட்டிங்கன்னா உங்களுக்கு தான் நஷ்டம்.. உங்க ஆரூயிர் காதலி இப்போ என் கையில.. சோ கோபப்பட்டு எனர்ஜியை வேஸ்ட் பண்ணாம மூடிட்டு நான் சொல்றதை மட்டும் செய்.. அதைத் தவிற உனக்கு வேற ஆப்ஷன் இல்லை” என்று மறுபுறமிருந்து நக்கலாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
அந்த முகமறியா எதிரியின் வார்த்தைகளைக் கேட்டு ஜித்தேஷின் நரம்புகள் ஒவ்வொன்றும் கோபத்தில் புடைத்தாலும், நிதர்சனத்தை உணர்ந்து மிகவும் முயன்று தன் சினத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், ” உனக்கு என்ன வேண்டும்??” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“எனக்கு நீ தான் வேண்டும்” என்று யோசிக்காமல் அடுத்த நொடி வந்த பதிலில் அதிர்ந்து போன ஜித்தேஷ்,
“வாட்!!!!” என்று தன்னை மீறி கத்தி விட,
“ஷ்!!! ஷாக்கைக் குறை ஷாக்கைக் குறை” என்று மறுபக்கம் இருந்து அதற்கும் கிண்டல் தான் பதிலாக கிடைத்தது.
அதில் அதுவரை அடக்கி வைத்திருந்த ஜித்தேஷின் ரௌத்திரம் மீண்டும் தலைதூக்க, “ஏய் **** எங்கிட்டயே வாலாட்டிகிட்டு இருக்கியா?? நான் மட்டும் உன்னை கண்டுபிடிச்சு வந்தேன்னு வை உன் பொணத்தை கூட யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உன்னை கொடூரமா சிதைச்சிருவேன்.. மைண்ட் இட்” என்று எச்சரிக்கை விடுத்தான்.
“அப்ப சரி.. நீயா பொறுமையா கண்டுபிடிச்சு என்னையும் உன் பேபியையும் தேடி வா.. ஐ அம் வெய்ட்டிங்க்” என்று கூறிய மறுபுறம் பட்டென்று அழைப்பை துண்டித்து விட,
அவனிடம் தான் தன் ஷ்ராவனி இருக்கிறாள் என்பதையே மறந்துவிட்டு கோபப்பட்டுவிட்ட தன் முட்டாள் தனத்தை நொந்து கொண்டே, “ஹலோ!!! ஹலோ!!!! ஹலோ!!! ஷிட் ஷிட் ஷிட்!!!!” என ஜித்தேஷ் அழைப்பு துண்டித்துப் போன போனை வைத்து விமான நிலைய வாசலில் பைத்தியம் போல் கத்திக் கொண்டிருக்க, அங்கு போவோர் வருவோர் எல்லாம் அவனின் செய்கையை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
ஜித்தேஷிற்கு அதெல்லாம் கருத்த்தில் பதியவில்லை. எங்கே ஷ்ராவனிக்கு ஏதாவது தீங்கு நடந்து விடுமோ என பதறியவன் அடுத்த நொடியே தனக்கு அழைப்பு வந்த எண்ணிற்கு மீண்டும் அழைத்தான்.
மறுபுறம் எடுத்ததும், “ஹலோ!! ஹலோ!!” என ஜித்தேஷ் பதட்டமாக அழைக்க,
அவனின் பதற்றத்தை உணர்ந்து கொண்ட மறுபுறம், “ஹாஹா அதான் இவ்ளோ பயம் இருக்குல.. அப்பறம் எதுக்கு இந்த வெட்டி சீன்.. எல்லா நேரமும் இப்படி ஜாலியா இருக்க மாட்டேன்.. அதுனால மரியாதையா நான் சொல்றதை மட்டும் கேளு” என்று இதுவரை இருந்த விளையாட்டுத்தனத்தை கைவிட்டு தீவிரமான குரலில் பேசத் தொடங்கியது.
“நான் இப்போ உனக்கு ஒரு அட்ரெஸ் அனுப்புவேன்.. அதுக்கு நீ மட்டும் தனியா.. எப்படி எப்படி ‘ தனியா ‘ ..வேற யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி வரணும்.. எனக்கு தெரியாம போலிஸ் கிட்ட போகலாம் இல்லை உன்னோட ரவுடிங்களை வச்சு என்னை பிடிக்கலாம்னு ஏதாச்சும் அதிகப்பிரசங்கித்தனம் பண்ண அப்பறம் உன்னோட ஷ்ராவனி பேபி உயிருக்கு உத்தரவாதம் இல்லை.. என் கண்ணுல மண்ணை தூவிட்டு ஸ்மார்ட் மூவ் பண்ணலாம்னு நினைக்காத.. உனக்கே தெரியாம உன்னை என் ஆளுங்க ஃபாலோவ் பண்ணிட்டு தான் இருக்காங்க.. நீ என்கிட்ட இருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஐ வில் பீ வாட்சிங்க்.. ஹாஹாஹா” என்று இடியென சிரித்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட,
அடுத்த நொடி ஜித்தேஷின் கைபேசிக்கு ஷ்ராவனி இருக்குமிடம் அனுப்பிவைக்கப் பட்டிருந்தது.
அந்த முகமறியா எதிரியின் மிரட்டலுக்கு அடிபணிந்து போலீஸிடம் சொல்லாமல் ரிஸ்க் எடுத்து செல்வதா?? வேண்டாமா?? என ஒரு நொடி தயங்கிய ஜித்தேஷின் மனக்கண்ணின் முன் ஷ்ராவனியின் புன்னகை பூசிய பூமுகம் வந்து போக, அடுத்த நொடியே மனதில் தோன்றிய உறுதியுடன், ” எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.. ஐ அம் கமிங்க் ஃபார் யூ பேபி” என்று மானசீகமாக தன்னவளுடன் உரையாடிக் கொண்டவன் ஒரு முடிவுடன் அந்த முகவரியை நோக்கி தன் வண்டியை செலுத்தினான் அங்கு காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்.
நீல வானம் எங்கும் கார் மேகம் சூழ்ந்திருக்க, எந்நேரமும் மேகத்திரையை கிழித்துக் கொண்டு மண்ணை குளிர்விக்க வந்துவிடுவேன் என மழை விழுகத் தயாராகி இருந்த அந்த ரம்மியமான வேளையில் கையில் க்ரீன் டீ உடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தார் மதுரம்.
ஒரு கையில் டீ குவளையும் மறு கையில் ஒரு ஆங்கில கதை புத்தகமும் வைத்து கால் மேல் கால் போட்டு மிகவும் ஸ்டைலாக அமர்ந்திருந்தவரை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டுகொண்டே சைட் அடித்துக் கொண்டிருந்தார் வாசுதேவன்.
தன் கணவனின் கள்ளப்பார்வையை உணர்ந்தாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல் நமுட்டுச் சிரிப்புடன் மதுரம் அந்த புத்தகத்தினுள் தன்னை நுழைத்துக் கொள்ள, அப்போது சரியாய் அங்கு வந்து சேர்ந்த வினோத் பாட்டியின் கையில் இருந்த புத்தகத்தை பறித்துக் கொண்டு, “என்ன கால் மேல கால் போட்டுட்டு கிரீன் டீயும் இங்கிலீஷ் புக்கையும் கையில வச்சிருந்தா பெரிய எலிசபெத் மகாராணின்னு நினைப்பா?? இங்க உங்க குடும்ப கல்யாணத்துக்கு நான் தெரு தெருவா அலைஞ்சு பர்சேஸ் பண்ணிட்டு வரேன் நீங்க என்னடான்னா ஹாயா உட்கார்ந்து கால் ஆட்டிகிட்டு இருக்கிங்க.. “என்று அவன் வெளியே அலைந்து விட்டு வந்த கடுப்புடன் மொழிய,
“நீ சொன்னாலும் சொல்லலைனாலும் என் மது டார்ஜிலிங்க் எலிசபெத் ராணி தான் டா டால்டா தலையா” என்று அவனிற்கு பதிலடி கொடுத்துக்கொண்டே அவர்களுடன் வந்து அமர்ந்தார் வாசுதேவ கிருஷ்ணன்.
அவரை கேவலமாக ஒரு பார்வை பார்த்த வினோத், ” நீ என்ன தான் முக்கி முக்கி பெர்ஃபாமென்ஸ் பண்ணாலும் பாட்டி உன்னை கண்டுக்க மாட்டேங்குதுல.. அப்பறம் எதுக்கு இந்த சில்லறைத்தனமான வேலை பார்க்குற தாத்தா?? சொர்க்கத்துக்கு போகுற வயசுல இப்படி ஜொல்லு விட்டுட்டு இருக்கியே இதெல்லாம் நல்லாவா இருக்கு?”என கேட்டு அவரை அசிங்கப்படுத்தினான்.
“டேய் அவரை கிண்டல் பண்ணது இருக்கட்டும் நான் சொன்னது எல்லாம் வாங்கிட்டு வந்தியா??” என மதுரம் தன் காரியத்தில் கண்ணாய் இருந்தார்.