Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இருளை வென்ற இமைகள்

இருளை வென்ற இமைகள் 4 1

இருளை வென்ற இமைகள்

அத்தியாயம் : 4

மருத்துவமனையின் வெள்ளைச் சுவர்களுக்கு நடுவே, மின்விசிறியின் மெல்லிய சுழற்சிச் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

குளுக்கோஸ் சொட்டுக்கள் ஒவ்வொன்றாகத் தன் நரம்புகளுக்குள் இறங்க, சற்று ஓய்வெடுத்த பிறகு மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்து கண்விழித்தாள் தங்கமயிலு. கண்விழித்தாலும், அவளது உலகம் மட்டும் எப்போதும் போலக் கும்மிருட்டாகவே இருந்தது.



Advertisement

படுக்கையின் ஓரத்தில் ஒரு ஸ்டூலைப் போட்டு அமர்ந்திருந்தவன் , அவளது கையில் லேசான அசைவு தெரிந்தவுடனேயே பதறிப்போய் எழுந்தான்.

“மயிலு… இப்போ பரவாயில்லையா? தலை சுத்துறது நின்னுடுச்சா?” என்று அவன் கேட்ட குரலில் இருந்த தவிப்பும், பரிவும் அவளின் நெஞ்சை உருக வைத்தாலும் வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகள் அவளின் மனதை சுக்குனூராக கிழித்தது.

ம்ம்… பரவாயில்லங்க,” என்று மெல்லத் தலையாட்டியவள், தன் முந்தானையைச் சரிசெய்துகொண்டு எழுந்து உட்கார முயன்றாள். வைரக்கண்ணு உடனே அவளது தோளைப் பிடித்து ஆதரவாகத் தாங்கி உட்கார வைத்தான்.

Advertisement

மீண்டும் டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, “இப்போ ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பி. நேரத்துக்குச் சாப்பாடு கொடுங்க, ரொம்ப யோசிக்க வேண்டாம்னு சொல்லுங்க. நீங்க கூட்டிட்டுப் போகலாம்,” என்று சொல்லி மருந்துச் சீட்டைக் கொடுத்தார்.

Advertisement

அந்த சீட்டில் இருந்த மருந்துகளை வாங்கிக்கொண்டு, தங்கமயிலுவின் இடது கையைத் தன் வலது கையால் இறுக்கமாகப் பிடித்தபடியே மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான் வைரக்கண்ணு.

வெளியே வாசலில் காத்திருந்த டிரைவர் மாடசாமி, இவர்களைப் பார்த்ததும் பதறிப்போய் ஓடி வந்தார். “என்ன தம்பி, இப்போ பரவாயில்லையா? காலையில சாப்பாட்டுக்கு அப்பறம் ஒரு வாய் தண்ணி கூடப் உள்ள போலருக்கு, அதான் மயங்கி விழுந்துட்டாங்க!” போல என்றார்.

“ஆமாண்ணே, அதோட லோ-பிரஷர் கூட . இதனால தான் வந்தது மயக்கம். என்றவன் அடுத்தக்கட்டமாக சரிண்ணே, பொழுது சாயுறதுக்குள்ள நாம ஒரு இடத்துக்கு போயாகணும் என்னோட நண்பன் காத்துகிட்டு இருப்பான்.

Advertisement

அதோடு நில்லாமல் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி பெரியார் நகர் பக்கம் வண்டியை விடுங்க. அங்க எனக்குத் தெரிஞ்ச ஒரு மெக்கானிக் நண்பன் இருக்கான், அவன் மூலமா சின்னதா வாடகைக்கு வீடு கிடைக்குமான்னு பார்க்கணும்,” என்றான்.

ஏற்கனவே நீங்க சொல்லிட்டீங்க தம்பி கரெக்டா அங்கேயே கூட்டி போகறேன்பா.

மயிலுவை காரின் பின் இருக்கையில் அமர வைத்து, தானும் ஏறி அமர்ந்தான். மாடசாமி வண்டியை மதுரை மாநகரத்தின் பெரியார் நகரை நோக்கிச் செலுத்தினார்.

சில மணிநேர பயணத்திற்கு பிறகு,
மாலை நேரத்துப் போக்குவரத்து நெரிசலும், பேருந்துகளின் ஹாரன் சத்தமும், பூக்கடைகளின் மல்லிகை வாசமும் நிறைந்த பெரியார் நகர் சந்திப்பில் கார் வந்து நின்றது.

“தம்பி, பெரியார் நகர் வந்துருச்சு. இந்த வலது பக்கத்துச் சந்துக்குள்ள போனா நடுத்தரக் குடும்பங்கள் குடியிருக்கிற வாடகை வீடுகள் நிறைய இருக்கும். இங்கயே போகலாமா? வண்டியை இங்க ஓரமா நிறுத்துறேன்,” என்று சொல்லி காரை நிறுத்தினார்.

சரிங்கன்னே என்னோட நண்பனும் இங்கதான் வரேன்னு சொல்லிருக்கான். இங்கயே நிறுத்துங்க.

என்றவன் முதலில் கீழே இறங்கி, மறுபக்கம் வந்து கதவைத் திறந்து தங்கமயிலுவின் கையைப் பிடித்து கீழே இறக்கிவிட்டான்.

காலையில் கட்டிய பட்டுப்புடவை கசங்கி, தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூ வாடிப் போய், அழுது அழுது கண்கள் வீங்கிய கோலத்தில், தலை குனிந்தபடி சாலையோரத்தில் நின்றிருந்தாள் பாவை அவள்.

புதிய ஊர், வாகனங்களின் இரைச்சல் என எல்லாமே அவளுக்கு ஒருவிதப் பயத்தைக் கொடுத்தது. தன் கணவனின் கையை ஒரு சின்னக் குழந்தையைப் போல இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நின்றாள்.

அவர்கள் நின்றிருந்த சந்திப்பில், போக்குவரத்துத் தீவின் (Traffic Island) மீது நின்றுகொண்டு, காக்கிச் சீருடையில், தலையில் தொப்பியும் கையில் விசிலுமாகப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தாள் ஒரு இளம் பெண் போலீஸ் அதிகாரி.

சாலையோரத்தில் நின்றிருந்த அந்தப் புது மணப்பெண்ணின் முகத்தை எதேச்சையாகப் பார்த்தவள், ஒரு நொடி அப்படியே திகைத்துப் போய் நின்றாள்! அவளது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

விசில் ஊதுவதைக் கூட மறந்து, கைகளை உயர்த்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, வேகமாகச் சாலையைக் கடந்து மணப்பெண்ணின் அருகே ஓடி வந்தாள்.

பின்பு, உற்சாகத்தில் “ஏய்… நீ தங்கமயிலு தானே? அடியேய் மயிலு… உன்னைப் பார்த்து எம்புட்டு நாளாச்சுடி!” என்று உற்சாகமும் பாசமும் பொங்க, மயிலுவின் தோளைத் தொட்டு உலுக்கினாள் அவள் பெயர் தான் கனகசுந்தரி. அவளின் உயிர்தோழி.

தன் பெயரைக் கேட்டதும் தங்கமயிலு அதிர்ச்சியில் உறைந்தாள்! தன் சிறு வயதுத் தோழி கனகசுந்தரியின் குரல் தான் என அவள் நொடியில் அடையாளம் கண்டுகொண்டாள்.

ஆனால், தன் இந்தப் பரிதாபகரமான நிலையைத் தோழியிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல், பதில் பேச முடியாமல் தொண்டை அடைக்கத் தவித்தாள். அவளது உதடுகள் துடித்தன; கண்களில் நீர் முட்டியது.

கனகசுந்தரிக்கு ஒன்றும் புரியவில்லை. மயிலுவின் தோளைத் தட்டி, “என்னடி, நான் பேசிக்கிட்டே இருக்கேன், நீ எதுவுமே பேசாம சிலை மாதிரி நிக்குற? கல்யாணம் ஆனதும் பழைய ஃப்ரெண்டை எல்லாம் மறந்துட்டியா என்ன? ஏய் மயிலு, இங்க பாருடி என்னை!” என்று அவளது முகத்திற்கு நேராகத் தன் கையை அசைத்துச் சிரித்தாள்.

அப்போதும் தங்கமயிலுவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவளது கண்கள், கனகசுந்தரியின் முகத்தைப் பார்க்காமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடியே, கன்னத்தில் கண்ணீரை மட்டும் சிந்திக்கொண்டிருந்தன.

கனகசுந்தரியின் முகத்திலிருந்த சிரிப்பு மெல்ல மெல்ல மறைந்தது. அருகில் நின்றிருந்த வைரக்கண்ணுவை ஒருவிதக் குழப்பத்தோடும், அதிர்ச்சியோடும் பார்த்தாள்.

அப்போதுதான் வைரக்கண்ணு, கனகசுந்தரியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு, மிக மெதுவான, கனத்த குரலில் அந்த உண்மையைச் சொன்னான்.

“அவங்களுக்குப் பார்வை இல்லம்மா…”

அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த நிமிடம்… கனகசுந்தரிக்கு அதிர்ச்சியில் கால்கள் தள்ளாடின. குறிப்பார்த்து சுடும் திறமை கொண்டவளின் நிலை இன்று இப்படியா? கடவுளே என்றவளுக்கு அவனின் வார்த்தையை நம்ப முடியவில்லை.

“என்ன சொல்றீங்க? மயிலுவுக்குக் கண்ணு தெரியாதா? அய்யோ! என்னங்க சொல்றீங்க? பொய் சொல்லாதீங்க சார்!” என்று நம்ப முடியாமல் கதறிய கனகசுந்தரி, தங்கமயிலுவின் இரு தோள்களையும் பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்!

அடிப்பாவி மயிலு! என்னடி ஆச்சு உனக்கு? நீ என்ன சாதாரணப் பொண்ணாடி? காலேஜ்ல படிக்கும்போதே, நான் படிச்சு முடிச்சு எப்படியாவது ஐ.பி.எஸ் (IPS) ஆகணும் கனகா, காக்கிச் சட்டை போட்டுட்டு ஊருக்குள்ள கம்பீரமா நடக்கணும்’னு கனவு கண்டுக்கிட்டு இருந்தவளாச்சேடி நீ!

இன்னைக்கு நான் இந்த டிராஃபிக் போலீஸ் யூனிஃபார்ம்ல நிக்கிறேன்னா, அதுக்கு நீ கொடுத்த தைரியம் தானடி காரணம்! அப்படிப்பட்ட உனக்கா இந்த நிலைமை?” என்றவளுக்கு உள்ளுக்குள் அவ்வளவு ஆற்றாமை.

இவளின் இந்த கதறல் அனைத்தையும் சாலையில் போய்க்கொண்டிருந்தவர்கள் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அதைக் கவனித்த கனகசுந்தரி, தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

சரி வா வீட்டுக்கு போகலாம்னு அழைச்சா.

இல்லம்மா இங்க தான் வேற இடத்துல வாடகை வீடு பதிருக்கோம் என் நபனோட உதவினால,

இங்க பாருங்க சார், நீங்க ரெண்டு பேரும் இப்போ எங்கேயும் வாடகை வீடு தேடி அலைய வேண்டாம். என் ட்யூட்டி முடிய இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு. இதோ, இந்தச் சந்துக்குள்ளதான் எங்க போலீஸ் குவார்ட்டர்ஸ் வீடு இருக்கு. முதல்ல நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு வாங்க!” மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்.

வைரக்கண்ணு தயங்கினான். “இல்லம்மா, உங்களுக்கு எதுக்குச் சிரமம்? நாங்க பக்கத்துல…” என்று அவன் மீண்டும் இழுக்க, கனகசுந்தரி அவனை இடைமறித்தாள்.

அண்ணா… மயிலு எனக்குத் தோழி மட்டும் இல்ல, என் கூட பிறக்காத தங்கச்சி மாதிரி! கல்யாணம் ஆன அன்னைக்கே என் தங்கச்சி இப்படி நடுத்தெருவுல நிக்குறதைப் பார்த்துட்டு, நான் எப்படிண்ணா சும்மா இருப்பேன்?

வாங்கண்ணா, முதல்ல வீட்டுக்குப் போவோம்,” என்று சொல்லி, மயிலுவின் ஒரு கையைத் தானும் பிடித்துக்கொண்டு, தன் வீட்டை நோக்கி அழைத்துச் சென்றாள். டிரைவர் மாடசாமிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு, வைரக்கண்ணுவும் அவர்களோடு நடந்தான்.

ஐந்து நிமிட நடையில், பெரியார் நகர் போலீஸ் குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த கனகசுந்தரியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

வாசலில் சத்தம் கேட்டு வெளியே வந்த கனகசுந்தரியின் அம்மா அன்னலட்சுமி, புது மணக்கோலத்தில் நின்றிருந்த தங்கமயிலுவைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் பூரித்துப் போனார்.

அடியேய் கனகா! யாருடி வந்திருக்கா … நம்ம தங்கமயிலு தானே! வாம்மா மயிலு, கல்யாணம் ஆகிப் புருஷனோட முதல் முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்க! நில்லுங்க, ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வர்றேன்,” என்று சந்தோஷமாக உள்ளே ஓடப் போனார் அன்னலட்சுமி.

“அம்மா, நில்லு… ஆரத்தி எல்லாம் வேண்டாம்மா, முதல்ல அவளை உள்ள கூட்டிட்டுப் போய் உட்கார வை!” என்று கலங்கிய குரலில் சொன்னாள்.

மகளின் குரலில் இருந்த மாற்றத்தைக் கவனித்த அன்னலட்சுமி, மயிலுவின் அருகே வந்து அவளது முகத்தைப் பார்த்தார். அழுது வீங்கிய கண்களும், எந்த அசைவுமின்றி வெறித்துப் பார்க்கும் கருவிழிகளும் அன்னலட்சுமிக்கு ஏதோ ஒரு விபரீதத்தை உணர்த்தின.

என்னடி ஆச்சு மயிலுக்கு? ஏன் இப்படி சிலை மாதிரி நிக்குற?” என்றவர் கேட்க, கனகசுந்தரி தன் அம்மாவின் காதருகே சென்று, “அம்மா… மயிலுவுக்குக் கண்ணு தெரியாதும்மா!” என்று விம்மினாள்.

அதைக் கேட்டதும் அன்னலட்சுமி தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு, “அய்யோ! என்னடி சொல்ற? ராணுவத்துல இருந்து வந்த பெரியசாமி அண்ணன் பொண்ணுக்கு இப்படி ஒரு சோதனையா?

வாம்மா தங்கம், உள்ள வா…” என்று மயிலுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதபடியே உள்ளே அழைத்துச் சென்றார்.

வீட்டிற்குள் சென்றதும், அன்னலட்சுமி மயிலுவையும் வைரக்கண்ணுவையும் சமையலறைக்கு அழைத்துச் சென்று, சூடான இட்லியும் சட்னியும் பரிமாறினார்.

வைரக்கண்ணு தன் கையாலேயே மயிலுவுக்குச் சட்னியில் தோய்த்து இட்லியை ஊட்டிவிட்டான்.

தன் சொந்தங்களை பிரிந்து, ஊரை விட்டு வந்திருந்தாலும், மனைவி மீது அவன் காட்டும் அந்தத் தாயுள்ளத்தையும், காதலையும் பார்த்து கனகசுந்தரியும் அன்னலட்சுமியும் நெகிழ்ந்து போனார்கள்.

“மயிலுவுக்குக் கண்ணு போனாலும், கடவுள் அவளுக்குக் கண்ணா ஒரு நல்ல புருஷனை கட்டி வச்சிருக்காருடி,” என்று அன்னலட்சுமி மனதார வாழ்த்தினார்.

சாப்பிட்டு முடித்து, கூடத்திற்கு வந்து அமர்ந்ததும், கனகசுந்தரி தன் அறைக்குள் சென்று ஒரு பழைய புகைப்பட ஆல்பத்தை எடுத்து வந்து வைரக்கண்ணுவின் கையில் கொடுத்தாள்.

அண்ணா, நான் உங்களை அண்ணான்னு கூப்பிடலாமா?
என்றாள். கனகா

என்னமா? இப்படி கேட்குற கூப்பிடும்மா, என்றான் அவனும் பாசத்தோடு

அப்படியா இந்தாங்க இதைச் சும்மா பாருங்கண்ணா… நீங்க கட்டிகிட்ட பொண்ணு எவ்வளவு பெரிய லட்சியவாதினு உங்களுக்கே தெரியும்!” என்றாள்.

வைரக்கண்ணு அந்த ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்தான். அதில், என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் சீருடையில் கம்பீரமாகச் சல்யூட் அடித்தபடி நின்றிருந்த தங்கமயிலுவின் புகைப்படமும், மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கிய புகைப்படமும் இருந்தன.

அந்தப் புகைப்படங்களில் இருந்த மயிலுவின் கண்களில் இருந்த அந்தக் கூர்மையும், துடிப்பும் வைரக்கண்ணுவை வியக்க வைத்தது.

கனகசுந்தரி மயிலுவின் அருகில் அமர்ந்து அவளது கைகளைப் பற்றிக்கொண்டாள்.

உங்க அப்பா பெரியசாமி அங்கிள் மிலிட்டரியில இருந்து ரிட்டயர்ட் ஆன உடனே, ‘சொந்த ஊரான அலங்காநல்லூருக்குப் போறோம்’னு சொல்லிட்டு நீங்க கிளம்பிப் போனீங்க.

அவ்வளவுதான், அதுக்கப்புறம் உன்னைப் பத்தி எந்தத் தகவலுமே இல்ல. இப்போ திடீர்னு பார்த்தா… இப்படிப் பார்வை இல்லாம வந்து நிக்குறியே! என்னதான்டி நடந்துச்சு உனக்கு? சொல்லு மயிலு… உனக்கு எப்படிப் பார்வை போச்சு?” என்று கனகசுந்தரி துடித்துப் போய்க் கேட்டாள்.

கனகசுந்தரி கேட்ட அந்தக் கேள்வியில், தங்கமயிலுவின் மனத்திரையில் கடந்த காலத்தின் நினைவுகள் ஒவ்வொன்றாக விரியத் தொடங்கின…

அலங்காநல்லூர் என்பது வெறும் ஊர் மட்டுமல்ல… பாசத்திற்கு உயிர் கொடுக்கும் மனிதர்களும், வீம்புக்காக உறவுகளைத் தள்ளி வைக்கும் மனங்களும், காதலுக்காக எல்லைகளைக் கடக்கத் துணியும் இதயங்களும் வாழும் ஒரு மண். அந்த மண்ணில் பிறக்கும் கதைகள் சாதாரணமாக இருக்காது… காதல் என்றால் ஆழமாக இருக்கும், பகை என்றால் தலைமுறைகளைக் கடக்கும், பாசம் என்றால் உயிரோடு கலந்திருக்கும்.

அப்படிப்பட்ட வீரமும் பாசமும் நிறைந்த அலங்காநல்லூர் மண்ணுக்குத்தான், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற கையோடு தன் குடும்பத்தோடு குடியேறினார் பெரியசாமி. ஊரின் நடுவே இருந்த பூர்வீக வீட்டைப் புதுப்பித்து, ஊர் மக்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டு, ஊரில் ஒரு மரியாதைக்குரிய மனிதராக வாழ்ந்து வந்தார்.

அது தொண்ணுருகளின் காலம். ஊரின் ஒதுக்குப்புறமாக, பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளும் சூழ்ந்த சோலைக்கு நடுவே அமைந்திருந்தது அந்த அரசு மேல்நிலைப் பள்ளி.

ஓடு வேய்ந்த வகுப்பறைகள், சுவரில் பதித்த கரிய நிறக் கரும்பலகை, சுண்ணாம்புக் கட்டியின் (Chalk piece) வாசனை, காலை நேரத்து இறைவணக்கக் கூட்டத்தில் ஒலிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து, மதிய உணவு இடைவேளையில் புளியமரத்தடியில் தோழிகளோடு அமர்ந்து புளியங்காய் உப்பு வைத்துச் சாப்பிடும் அந்தப் பசுமையான பள்ளி வாழ்க்கை!

அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியாக அடியெடுத்து வைத்தாள் தங்கமயிலு.

மற்ற மாணவிகளைப் போல வெறும் புத்தகப் புழுவாக மட்டும் இல்லாமல், பத்தாம் வகுப்பிலிருந்தே தன் லட்சியத்தை நோக்கி அடி எடுத்து வைக்கத் தொடங்கினாள் அவள்.

அவளது அப்பா பெரியசாமி ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், சிறு வயதிலிருந்தே ஒழுக்கமும், தைரியமும், தேசப்பற்றும் அவளது ரத்தத்தில் ஊறியிருந்தது. எப்படியாவது படித்து முடித்து ஒரு ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியாக வேண்டும் என்பதே அவளது உயிர்மூச்சாக இருந்தது.

அதற்காக, பத்தாம் வகுப்பிலிருந்தே பள்ளியில் இருந்த என்.எஸ்.எஸ் (NSS – நாட்டு நலப்பணித் திட்டம்) மற்றும் விளையாட்டு அணிகளில் தன்னை இணைத்துக்கொண்டாள்.

அதிகாலை ஐந்து மணிக்கே ஊர் எல்லையில் இருக்கும் கோயில் மணிச் சத்தம் கேட்பதற்கு முன்பே எழுந்துவிடுவாள் மயிலு.

பனி விழும் மைதானத்தில் காலில் செருப்பு கூட இல்லாமல் ஓட்டப்பயிற்சி செய்வது, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் எனத் தடகளப் போட்டிகளில் ஆண்களுக்கு நிகராகப் பாய்ந்து ஓடுவது என அவளது வேகம் ஊரையே வியக்க வைத்தது.

“ஊரில் உள்ள அனைவரும் பெரியசாமி மவளப் பாருயா… சும்மா புள்ளிமான் கணக்கா ஓடுறா! இவ மட்டும் போலீஸ் வேலைக்குப் போனா, திருடனுங்க எல்லாம் ஊரை விட்டே ஓடிடுவானுங்க!” என்று வயக்காட்டுக்குப் போகும் ஊர்ப் பெரியவர்கள் ஆச்சரியத்தோடு பேசிக்கொள்வார்கள்.

என்.எஸ்.எஸ் முகாம்களில் (NSS Camps) கிராமத்து வீதிகளைச் சுத்தம் செய்வது, மரம் நடுவது, ஊர் மக்களுக்கு எழுத்தறிவு கற்றுக்கொடுப்பது எனப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!