“பார்த்தி நீ பாரதிட்ட என்ன வம்பு பண்ண? ” என்றான் ராம். அவனுக்கு பாரதியின் மீது நம்பிக்கை இருந்தது. சும்மா கை நீட்ட மாட்டாள் என்று தெரியும்.
“என்னங்க நீங்க? அவளுக்கு போய் சப்போர்ட் பண்ணிட்டு பேசுறீங்க. பார்த்தி என்னதா பண்ணிருந்தாலும், அடிச்சுடுவாளா அவ.. ம்.. ஆம்பளப் பையன அடிக்கலாமா?” என மயூரி பொங்கி வந்தாள்.
Advertisement
“அதான… அடிச்சது கூட பெருசில்ல மயூ. ஆனா காரணத்த சொல்லாம அடிச்சிட்டு போய்ட்டாளாம். என்ன மாப்ள? எதுக்கு அடிவாங்குனனு தெரியுமா?”
Advertisement
“இந்தா இத புடி… இப்ப அவளுக்கு ஃபோன் பண்ணி. ஏன் என்னோட உடன் பிறப்பை அடிச்சன்னு காரணம் கேளு. கேட்டு குடுமிப்பிடிச் சண்டை போடு… ம்.. அப்பவாது காரணத்த சொல்லுறாளான்னு பாக்குறேன்.” என மயூரை தூண்ட,
Advertisement
“மணி பதினொன்னு பார்த்தி. இந்நேரத்துல எப்படி?” என மயூரி மறுக்க, பார்த்திபன் தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி நின்று கொண்டான்.
Advertisement
“இங்கு கூடியிருக்கும் வெகு ஜன மக்களுக்கு கதையின் நாயகன் பார்த்திபனின் அன்பான வணக்கங்கள். இன்னைக்கி மத்தியானம் லஞ்ச் சாப்பிட வான்னு கூப்பிட்ட என்னை, ஒரு பொண்ணு அடிச்சிட்டா. அது ஏன்னு எனக்கே தெரியணும். சாப்பிட கூப்பிடா வர்றேன்னு சொல்லணும். இல்ல எனக்கு பசிக்கல. வேண்டாம்னு சொல்லிருக்கணும்.”
“எஸ்… எஸ்… என்னை கை நீட்டி அடிச்சி, அவளோட கை ரேகைய ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி என்னோட கன்னத்துல அச்சு பதிச்ச மைம்மா. இப்ப இங்க வரணும். வந்து காரணம் சொல்லணும். சொல்லி மன்னிப்பு கேட்டு கதறணும். வரமுடியாதுன்னாலும் மன்னிப்பு கேக்கணும். இல்லன்னா நான் இதுக்குள்ள குதிச்சி தற்கொல பண்ணிப்பேன். மாம்ஸ் இது இருநூறு அடி இருக்கும்ல… ம்… குதிச்சிடுறேன். “
“டேய் பைத்தியம் மாதிரி கண்டதையும் உலறாம கீழ வா பார்த்தி.” என மயூரி தன் உடன்பிறப்புக்காக பதறினாள்.
சந்ரு, “டேய் அது வெறும் ஆறடி தண்ணீ தொட்டி தான் டா. நீ இருக்குற உசரத்துக்கு உள்ள விழுந்தா நீ சாக மாட்ட. தவக்கா மாதிரி தலைய மட்டும் வெளிய நீட்டிக்கிட்டு இருப்ப. அத யூஸ் பண்ற நாங்க தா பரலோகம் போணும்.” என்க, மயூரி அவனை முறைத்தாள்.
“அப்ப நான் தற்கொலை பண்ணிக்க ஐடியா குடு மாம்ஸ்.”
“இந்த பக்கம் குதிக்காத. அந்த பக்கமா குதி. இருநூறு அடி இல்லன்னாலும் ஐம்பதடியாது இருக்கும். விழுந்தா புதைக்க இடம் தேட வேண்டிய அவசியமே இல்லாம மண்ணுக்குள்ள பொதஞ்சி கிடப்ப. செடி நடுற மாதிரி உம்மேல மண்ண போட்டுட்டு அடுத்த வேலைய பாப்போம். என்ன சகல சரி தான!”
“முடியாது மாமா. அவள வரச் சொல்லுங்க. அப்ப தா நான் இந்த பக்கம் இறங்குவேன். இல்லன்னா… அந்த பக்கம் தா..” என ஒற்றைக் காலை தூக்கிக் கொண்டு நிற்க, மயூரி உடனே அழைப்பு விடுத்தாள் பாரதிக்கு.
“ம்ச்… என்ன பண்ற மையூ? அவன்தா பைத்தியம் மாதிரி போதைல உலறுறான்னா… அர்த்த ராத்திரில ஒரு பொண்ண வரச் சொல்றது என்ன நியாயம்? ” என ராம் மனைவியை கடிந்தான்.
“எல்லாம் நியாயம் தா. அவ எப்படி பார்த்திபன அடிக்கலாம். அடிச்சது தப்பில்லயா… பார்த்தி சொன்ன மாதிரி அதுக்கு அவ மன்னிப்பு கேட்டுத்தா ஆகணும். அதுவும் இப்பவே. வருவா…” என ஃபோனில் பாரதிக்கு சொல்ல, சரியாக பத்து நிமிடத்தில் அனந்த் பவனம் வந்து சேர்ந்தாள் பாரதி.
அவளுக்கும் பார்த்திபனை அடித்திருக்க கூடாதோ என்ற எண்ணம் தோன்ற உறங்காது புரண்டபடி இருந்தாள். பார்த்திபனின் தற்கொலை மிரட்டலை மயூரியின் குறுந்தகவல் மூலம் அறிந்தவள் உடனே புறப்பட்டு வந்து விட்டாள்.
ஆனால் மொட்டை மாடியில் யாரும் எதிர் பாராத வேளையில் பைப் ஏறி குதித்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
“அந்தச் சுவரையா.” என ஏழடி உயர கருங்கள் சுவரை காட்டினான்.
“ஆமா… அதுக்கு இப்ப என்ன?” என புருவங்களை உயர்த்த,
“ஒன்னுமில்லையே… நீ போய் பேசி சமாதானப்படுத்தும்மா.” என்று விட்டு ஒதுங்கிக் கொண்டான் சந்ரு. ‘பின்னே இவக்கிட்ட யாரு கண்ட படி பேச்சு வாங்குறது.’ என நினைத்தவன் வாயில் விரலை வைத்துக் கொண்டு நிற்க, மயூரி பாரதியை முறைத்தபடி சந்ருவிற்கு அருகில் நின்றாள்.
” ஹாய் மைம்மா… எங்க இந்த பக்கம்… எங்க வீட்டுல எல்லா காரும் நல்லா தான இருக்கு. அப்றம் எதுக்கு மாமா மைம்மாவ கூப்டீங்க?” என ராமை கேள்வி கேட்க, அனைவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.
“என்னமோ தற்கொலை பண்ணிக்கப் போறதா சொன்னியாமே. அதா பாத்திட்டு போலாம்னு வந்தேன். ம்… சீக்கிரம் பண்ணு நான் லைவ்வா ஒரு டெத்த பாத்தது இல்ல. பாக்கணும்னு பல நாளா ஆச பட்டுக்கின்னே கெடக்கேன். ஆனா அமைய மாட்டேங்கிது. “
“எதெதல்லாம் லைவ்வா பாக்கணும்னு ஒரு வெவஸ்த்த இல்லயாம்மா. இது என்ன வெஸ்ட்இன்டீஸ் மேச்சா! லைவ்வா பாக்க. அப்படியே ஆசப்பட்டா சுட்டி டீவிய லைவ்வா பாரு. இல்ல நிறைய இசை வெளியிட்டு விழா நடக்குது அதுக்கு டிக்கெட் வாங்கிட்டு போய் முன் வரிசைல உக்காந்து லைவ்வா பாரு. அதெல்லாம் விட்டுட்டு எம்மாப்ள சாகுறத பாக்கணும்னு வந்திருக்கா பாரேன்… கொடுமை.. ” எனச் சந்ரு புலம்ப,
“அதான… வந்து பேசி மன்னிப்பு கேப்பான்னு பாத்தா. திமிரால்ல இருக்கா. பேசாம நீ ஓடிப்போய் அவள மாடில இருந்து தள்ளி விட்டுடு மாமா. நாம டெத்த லைவ்வா பாக்கலாம்.” என மயூரி கமெண்ட்டு கொடுத்தாள்.
“மறுபடியும் சைலன்ஸ்… அனைவரும் அமைதியாக இருக்கவும்… ஷூ… ” என வாயில் விரலை வைத்தான் பார்த்திபன்.
“அதெல்லாம் கம்முன்னு தா கெடக்கோம். நீ எப்பபைய்யா குதிப்ப. குதிப்பியா இல்ல தள்ளி விட மேல வரவா.”
“அடிப்பாவி மைம்மா.. உன்ன ஒத்த ரோஜாவா நான் நெஞ்சுக்குள்ள குத்தி வச்சதுக்கு தண்டனையா என நெஞ்சிலயே முள்ள எடுத்து குத்திட்ட. இது நியாயமா… யோவ் மாமனுங்களா… உங்களுக்கு என அக்காங்கள கட்டி வச்சது எதுக்கு? இந்த மச்சினன கடைசி வர கண் கலங்க விடமாடீங்கங்கிற நம்பிக்கைல தான. இது என்னை பிடிச்சி தள்ளி விடுறேன்னு சொல்லுது. பத்தாததுக்கு என் கன்னத்துல கைனாட்டு வச்சிருக்கு அத என்னென்னு கேளுங்க.” என அழுகையோடு கத்த,
” அமைதியா பேசுடா… கீழ தா உங்கப்பாவும் என் பொண்டாட்டியும் இருக்காங்க. மேல வந்ததுங்க.. house arrest தா. எனக்கு அது புதுசில்ல.. உனக்கு தா.. கல்யாணம் வேற இருக்கு.. “
“கரெட்டு… இதுக்கு தா ஒரு உடன் பிறப்பு வேணுங்கிறது.”
“அதெல்லாம் அப்றம் பேசிக்கலாம்.. முதல்ல நீ கீழ இறங்கி வா.” ராம் அழைத்தான்.
“அவெ வரலன்னா என்ன! நான் மேல போய் கூட்டீட்டு வர்றேன்.” என பாரதி ஏணிப்படிக்கட்டில் காலை வைக்க, பயந்து போனவன் வேகமாக குதித்தான். பாவம் போதையில் நிலை தடுமாறி கீழே விழப்பார்க்க, அவனின் சட்டையை பிடித்து இழுத்து நிறுத்தினாள் பாரதி.
“இப்ப நீ கூடத்தா என் மேல பர்மிஷன் இல்லாம கை வச்ச. நான் என்ன உன்ன அடிச்சேன்னா! இல்லைல்ல… ஆனா நீ.. என்னை அடிச்சிட்ட. இத்துணுண்டு இடுப்பு… அதுல கைய வச்சிட்டேன்னு, கன்னத்தில நீ கை வச்சிட்ட. அதுவும் நடு ரோட்டுல. நாளப்பின்னா நான் அந்த ஏரியாக்கு போனா என்னை என்ன நினைப்பாங்க! முக்கியமா கேர்ள்ஸ் என்னைப் பாத்து சிரிக்க மாட்டாங்க. எனக்கு எவ்ளோ பெரிய அசிங்கமா போச்சின்னு தெரியுமா? ” எனக் குலுங்கி குலுங்கி பாரதியின் தோளில் சாய்ந்து அழுந்தான்.
“யோவ்… எந்திரிய்யா… உனக்கு இன்னாய்யா பிரச்சன. நான் அடிச்சதா. இல்ல அத்தினி பேர் முன்னாடி உன்ன அடிச்சதா.”
” கண்டிப்பா பின் பகுதிக்காகத்தா மாப்ள கண்ணீர் வடிச்சிட்டு இருக்கான்.. “
” ரெண்டும் தா.. ” என ரோசமாக சொல்ல,
“இதோ பாரு பர்மிஷன் கேட்டோ! கேக்காமலோ. நீ எம்பக்கத்துல வர்றது எனக்கு பிடிக்கல. நீ என்ட்ட உரிம எடுத்துக்கிறதும் பிடிக்கல.. அதயும் மீறி என்ட்ட நெருங்க ட்ரெய் பண்ண. கன்னம் மட்டுமில்ல.. கண்ட இடத்துலயும் நீ அடி வாங்குவ. ஜாக்கிரத…” என்ற விரல் நீட்டி எச்சரித்தவள்,
“இது ஒரு பஞ்சாயத்துன்னு என்னை கூப்பிட்டு வந்து, நடுராத்திரில கோட்டான் மாதிரி சுத்தி நிக்கிதுக பாரு.. ச்ச.. ” என்றவள் பைப் பிடித்து இறங்கி செல்ல, பார்த்திபன் அவள் இறங்கிச் செல்லும் அழகை ரசித்தான்.
“மாம்ஸ்.. ஸ்பைடர் விமன் மாதிரி பைப் விமன்… செம்மையா இறங்கி போறாள்ள மாம்ஸ்..” என சிலாகிச்சு, ராம் தான் அவனின் தலையில் நாலு போடு போட்டு இழுத்துக் கொண்டு நடந்தான். அவனைப் பின் தொடர்ந்து மொட்டை மாடியை அனைவரும் காலி செய்தனர்.
சந்ரு, ‘இத்தன வர்ஷமா இந்த வீட்டுல இருக்கோம். ஒருக்க கூட பைப் ஏறி பாத்தது இல்லயே. இந்த பொண்ணு மாதிரி நாளைக்கி நாம ஏறி பாக்கணும்.. ‘ என பாரதி பிடித்து இறங்கிய பைப்புகளை குறித்து வைத்துக் கொண்டே நடந்தான் சந்ரு.
மறுநாள் காலை விடிந்ததும் வேக வேகமாக வந்து நின்றான் பார்த்திபன் பாரதியின் கடையின் முன், “ஹாய் மைம்மா.. ” என புன்னகையுடன்.
“உனக்கு கொஞ்சோண்டு கூட சூடு சொரணன்னு எதுவுமே கிடையாதாய்யா. அடிவாங்குன பொண்ணு பின்னாடி வந்து நிக்கிற. ” என காட்டமாக கேட்டான்.
“பின்னாடி இல்ல மைம்மா முன்னாடி.” என்றவனை முறைக்க மட்டும் தான் முடிந்தது அவளால். கூடவே அவனின் திருமணம் எனப் பத்திரிகையை நீட்டி, ‘நீ அவசியம் வரவேண்டும்.’ என்று அழைப்பு விடுக்க, முடியாது என்று கண்டபடி திட்டித் துரத்தி தான் பார்க்கிறாள். ஆனால் முடியத்தான் மாட்டேங்கிது.
எப்படியாவது பார்த்திபனை அவாய்ட் செய்து விலகி இருக்க வேண்டும் என்ற அவளின் நினைப்பை தவிடு பொடியாக்கி விடுகிறான் அவன்…
‘நான், எனக்கு உசுரும் உடலும் குடுத்த பெத்தவரு பேச்சையே கேட்டது இல்ல. இவ மட்டும் எம்மாத்திரம்.. ‘ என்பது போல் பாரதியின் நிழலாக தொடரத் தொடங்கினான்..
கேவலம் கேவலமாக காது கூசும் அளவுக்கு பாரதி கழுவி ஊற்றினாலும் கண்டு கொள்ளாது மெக்கானிக் செட்டில் வந்து அமர்ந்து கொள்வான். எந்த வேலையையும் செய்ய விட மாட்டான். வரும் ஆண் கஸ்டமர்களை கண்டு கொள்ளாது இருப்பவன் பெண் வாடிக்கையாளர்களாக இருந்தால் எல்லாம் இனாம் தான். இப்படி நித்தமும் பாரதியின் கல்லாவிற்கு வேட்டு வைப்பான். பாரதி அவனிடம் கத்திக் கொண்டே இருப்பாள்.
திருமணத்திற்கு முதல் நாளும் அப்படித்தான். எப்பொழுது கல்யாணத்தில் கலந்து கொள்ள வருகிறாள் என்பதை அறிய பார்த்திபன் ஃபோன் செய்ய, எடுத்தது கருப்பசாமி..
” ப்ளாக், மைம்மா இல்லையா.. “
“அக்கா ஆபிஸ் ரூம்க்குள்ள இருக்கு.. “
“எந்த ஆஃபீஸ் ரூம்மு.”
” ரிஜிஸ்டர் ஆஃபீஸ் ரூம்ண்ணா.. “
“ரிஜிஸ்டர் ஆஃபிஸ்க்கா… ஏன்.. “
“அது.. அது.. ” என வெட்கத்துடன் பேசாது இருக்க,
” ப்ளாக்.. நீ வெக்கப்படுறியா.. நல்லவேள இந்த ஃபோன் மூலமா அந்த கண்றாவிய பாக்க முடியாது. கற்பன பண்ணும் போதே கர்ணகொடுரமா இருக்கு.” எனக் கேலியாகச் சொல்ல,
“எந்த ஆபிஸ். அட்ரஸை வாட்ஸ் அப் பண்ணு.” என்றவன் பட்டு வேட்டி சட்டையில் புறப்பட்டு சென்றான்.
‘போற இடத்துக்கு தக்ன மாதிரி டிரெஸ் போடணும். ‘ என மாப்பிள்ளை போல் வந்திறங்கினான். ஏன் வந்தான் என்று புருவம் உயர்த்திய பாரதியும் பட்டு சேலை மின்ன புதுப் பொலிவுடன் கையில் மாலையுடன் நின்றிருந்தாள்.
“மைம்மா…” என விழி விரித்தவனுக்கு வாய் அடுத்த வார்த்தையைச் சொல்ல முடியாது மூடிக்கொண்டது. கண்கள் மட்டும் பெண்ணவளை நிறைத்துக் கொண்டே இருந்தது.
இன்று தான் பாரதியைசா சேலையில் பார்க்கிறான். எப்பொழுதும் அந்த மெக்கானிக் உடை அல்லது ஏதாவது ஒரு அட்டு சுடிதாரில் இருப்பாள். இன்று மங்கையின் அழகு ஆடவனின் உள்ளத்தில் அருவியாய் இன்ப நீரை ஊற்றி அவனைத் திணறடிக்கச் செய்தது.
“என்ன இப்படி பார்க்குறான்.. ” என நினைத்தவளுக்கும் அவனின் பார்வை, இதத்தைப் பரவச் செய்தது.
சின்ன சின்ன சேட்டைகள் செய்து அவளை சிரிக்கவும்.. தன் பார்வையால் பெண்ணவளை வெட்கமெனும் சிறைக்குள்ளும் தள்ளியும்.. அவளின் கன்னச்சிவப்பு குறையாமல் இருக்கும் படி காவல் காத்தான்.
அன்று நடந்தது கருப்பசாமியின் திருமணமா இல்லை. இவனே பாரதியின் மேலிருந்து போதையில் பாரதியை திருமணம் செய்து கொண்டானா என்பது அவனுக்கே சந்தேகமாக இருந்தது..
இனி நடந்ததை தான் நாம் அறிவோமே. இனி இவங்களுக்குள்ள இருக்குற காதல வெளிக்கொண்டுவந்து சேர்த்து வைப்போம். கூடவே பாரதி பற்றிய உண்மையயும் தெரிஞ்சுக்கலாம்..