இங்கு நம் நாயகர்கள் இருவரும் ஊரில் நிச்சய தேதியை குறித்து விட்டு சென்னை திரும்பியவுடன், யாருக்கும் சந்தேகம் வராதவாறு வீட்டில் நம்பும்படியாக பொய் சொல்லிவிட்டு டெல்லிக்கு அன்று காலையில் தான் ப்ளைட் ஏறி வந்திருந்தனர்.
வர்ஷூவின் கைங்கர்யத்தில் ஷ்ராவனிக்கு விடாமல் லூஸ்மோஷன் போய்க் கொண்டிருந்தன் காரணமாக அவள் கசக்கி பிழியப்பட்ட கரும்புச் சக்கை போல் கிடக்க, அதை அழகாய் படம்பிடித்து ஜித்தேஷிற்கு அனுப்பி அவனை அலற வைத்திருந்தான் கார்த்திக்.
Advertisement
இத்தனை நேரமும் போனில் ஜித்தேஷுடன் வம்பு வளர்த்து அவனின் அத்தனை சாபங்களையும் பெற்றுக் கொண்டது சாட்சாத் நம் கார்த்திக்கே தான். ( என்னுடைய முதல் படைப்பான அத்தை பெத்த பூங்குயிலே கதையின் நாயகர்களில் ஒருவன் தான் கார்த்திக்).
அனைத்தையும் கேட்டு முடித்த ஜித்தேஷ், “யாருப்பா அந்த கார்த்திக் எனக்கே பார்க்கணும் போல இருக்கே” என பார்க்க,
Advertisement
Advertisement
சட்டென அஸ்வத்திற்கும் அஜய்க்கும் இடையில் இருந்து இரு கைகளையும் அபயம் அளிப்பது போல் விஷ்ணு பகவானாக அங்கு பிரசன்னமானான் நம் கலாட்டா நாயகன் கார்த்திக்.
அவனைக் காணுகையில் குறும்பு செய்துவிட்டு பார்க்கும் மாயக் கண்ணனைப் போல் தோன்ற, அவனை முறைக்க முயன்று தோற்றான் ஜித்தேஷ்.
Advertisement
“ஏன் பா தம்பி.. நான் அவ்ளோ செலவு பண்ணி ஜிம் பாய்ஸா செக்யூரிட்டிக்கு வச்சா கேவலம் ஒரு சர்க்கரை பொங்கல்ல இப்படி கவுத்திட்டியே இதெல்லாம் நல்லாவா இருக்கு??” என ஜித்தேஷ் பாவமாக வினவ,
“சத்தியமா நல்லாவே இல்லை சார்.. அதான் அந்த ஊசிப்போன சர்க்கரை பொங்கல் பாஸ்தாவை இப்படியாச்சும் யூஸ் பண்ணிக்கலாமேன்னு நினைச்சு யூஸ் பண்ணிக்கிட்டேன்..” என கார்த்திக் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு அப்பாவியாகக் கூற,
“உன்னையெல்லாம் எந்த நேரத்துலயா பெத்தாங்க.. காலையில இருந்து இப்படி ஏட்டிக்கு போட்டியாவே பேசி என்னை ரொம்ப படுத்துற மேன் நீ.. மீ பாவம்” என அழுதுவிடும் குரலில் ஜித்தேஷ் மொழிய,
அவனின் பாவனையைக் கண்டு மற்ற மூவரும் சப்தமாக நகைத்தனர்.
பாத்ரூம் சென்று சென்று டயர்டாகி பாத்ரூம் வாசலிலே உறங்கிப் போயிருந்த ஷ்ராவனி அவர்களின் சிரிப்பு சப்தத்தில் மெதுவாய் கண்விழிக்க, அங்கு தன்னவனைக் கண்டு கண்கள் பிரகாசிக்க, தாயைக் கண்ட சேயைப் போல் வேகமாக எழுந்து ஓடிச்சென்று தன்னவனைக் கட்டிக் கொண்டாள் பெண்ணவள்.
அவளை மேலும் இறுக்கிக் கொண்ட ஜித்தேஷ் அவ்வளவு நேரமும் அவளைக் காணாமல் அவதியுற்ற தன் மனதை அந்த அணைப்பில் ஆறுதல் படுத்தினான்.
அப்போது மற்ற ஆண்கள் மூவரும் “க்கும் க்கும்” என கனைத்து தங்கள் இருப்பை உணர்த்த,
பதறிக் கொண்டு ஜித்தேஷிடம் இருந்து விலகினாள் ஷ்ராவனி.
” கூல் பேபி” என அவளை விலக விடாமல் தன் கையணைப்பிலே வைத்துக் கொண்ட ஜித்தேஷ், அங்கிருந்த மூவரையும் அவளுக்கு தன் நண்பர்கள் என அறிமுகப்படுத்த,
அப்போது தான் அங்கிருந்த கார்த்திக்கை கண்ட ஷ்ராவனி, ” அய்யோ இவரா” என பதறிப் போய் ஜித்தேஷின் முதுகிற்குப் பின் ஒளிந்து கொண்டாள்.
அவளின் பதற்றம் ஜித்தேஷிற்கு குழப்பத்தை உண்டு பண்ண, “என்னாச்சு பேபி” என பரிவாக கேட்டான்.
” அங்க இருக்க அந்த அங்கிளை போக சொல்லுங்க ஜித்து.. அவர் தான் ஏதோ கெட்டுப்போன ஒரு ஐட்டத்தை கோவில் பிரசாதம்னு ஏமாத்தி, அதை சாப்பிட்டா உங்க லவ்வர் நூறு ஆயுசு வரைக்கும் சந்தோஷமா இருப்பாருன்னு சொல்லி என்னை சாப்பிட வச்சு என்னை அல்ப ஆயுசுல சாகடிக்கப் பார்த்தாரு.. அதுவும் இல்லாம என்னை கடத்திட்டு வேற வந்து இன்னைக்கு காலையில வேற ஆட்டுக்கால் சூப் என்று ஏதோ ஒரு கருமத்தை கொடுத்து என்னை பாத்ரூமுக்கு உள்ளேயே நிரந்தரமா தங்க வச்சுட்டாரு தெரியுமா” என அவள் சிறு குழந்தை போல் பாவமாக அவன் மேல் குற்றப் பத்திரிக்கை வாசிக்க,
” இன்னைக்கு காலையில என்ன கருமத்தை குடுத்தான்??” என ஜித்தேஷ் யோசிக்க,
“பைத்தியம் கடத்துறப்போ ஒரு மாஸ்கை போட்டாச்சும் கடத்த கூடாது.. இப்படியா அப்பட்டமா காட்டிக் கொடுக்குறது” என அஜயும் அஸ்வத்தும் கார்த்திக்கை மனதிற்குள் தாளித்துக் கொண்டிருந்தனர்.
” காலையில் என்னடா கொடுத்து தொலைஞ்ச?? என அஸ்வத் கார்த்திக்கிடம் கிசுகிசுக்க,
” அவகேடோ போட்ட ஆட்டுக்கால் ஜுஸ் தான் ப்ரோ .. என் வைஃப்போட ஸ்பெஷல் ரெசிபி” என பெருமையாக கார்த்திக் சொல்ல,
” ஏதே ஆட்டுக்கால்லா அவகாடவோ என்ன கன்றாவி காம்பினேஷன் டா இது” என அஸ்வத் முகத்தை சுழித்தான்.
ஜித்தேஷோ உண்மையை ஷ்ராவனியிடம் இருந்து மறைக்கும் பொருட்டு, ” அது ஒண்ணும் இல்லை டா பேபி.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் பிளான் பண்றதுக்காக உன்கூட சும்மா விளையாடி பார்க்கலாம்னு கடத்திட்டு வர சொன்னேன் … அவன் கொஞ்சம் சொதப்பிட்டான்” என சமாளிக்க,
அதையும் அப்படியே நம்பிவிட்ட ஷ்ராவனியும், ” சர்ப்ரைஸா!!! ஐய் ஜாலி ஜாலி!! என்ன சர்ப்ரைஸ்??” என ஆவலுடன் கண்களை விரித்து வினவியவள், அடுத்த நொடியே , ” இருந்தாலும் சர்க்கரை பொங்கலை கொடுத்து கடத்திருக்க வேண்டாம் அது எவ்ளோ கேவலமா இருந்துச்சு தெரியுமா .. உவேக்” என வர்ஷுவின் சமையலை எண்ணி இப்போது கூட ஷ்ராவனிக்கு வாந்தி வரும் போல் இருந்தது.
” அட என்ன சிஸ்டர்.. என் பொண்டாட்டியை எல்லாம் கேவலம் ஷாக்ஸை ( ஷுவுக்கு அணியும் ஷாக்ஸ்) வச்சே கடத்திருக்காங்க .. உங்களுக்கு வெறும் சர்க்கரை பொங்கல் தான அதுக்கே இப்படி வாந்தி எடுக்குறீங்க? இதெல்லாம் அரசியல்ல ஜாதாரணம் சிஸ்டர்.. ஃப்ரீயா விடுங்க” என்று இலகுவாக கூற,
மற்ற நால்வரும் அவனை வெட்டவா குத்தவா என்பதைப் போல் கொலை வெறியுடன் பார்த்து வைத்தனர்.
சற்று நேரத்திலே கார்த்திக்கின் உபயத்தில் அனைவரும் நண்பர்களாகி விட, ஒருவரை ஒருவர் கேலி செய்து விளையாடியதில் நேரம் போனதே தெரியவில்லை.
அதன் பின்பே நாளை தங்களுக்கு நிச்சயம் என அஸ்வத், அஜய்க்கு நினைவு வர, அனைவரிடமும் விடைபெற்று அவர்களை நாளை நடக்கவிருக்கும் விழாவிற்கு வருமாறு அழைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
அப்போது அஜய்க்கு ஒரு விபரீத ஆசை தோன்ற, ஜித்தேஷுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டவன், மறுநாள் அதிகாலையில் சென்னை சென்று இறங்கியவுடனே அதை கீதாவின் கைபேசிக்கு அனுப்பி வைத்திருந்தான், ” ஐ அம் கமிங் வித் ஜித்தேஷ்” எனும் வாசகத்தோடு.