Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

நிவி அம்மு – மன்னவன் மஞ்சத்தில் 18

18.

மஞ்சம் – 18

தட்டி விட்ட கையை பார்த்தபடி, “அம்மா நீ அக்னியை தேடி தானே போன?”

“நீ தான் மகனுக்காக உயிரையே கொடுப்பியே. உயிரை அலைய விட்டு தேடு.” என மெதுவாக உள்ளே சென்று தரையில் படுத்துக் கொண்டார்.



Advertisement

அந்த தெருவில் இருந்து பெண்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பினர்.

‘எங்க போறாங்க எல்லாரும்?’ என நினைத்தவர், “எங்க போறீங்க எல்லாரும்?” என்க,

அவர்களோ சூடாமணியைப் ஒரு மனுஷியாக கூட மதிக்காமல் கேவலமாக பார்த்தனர்.

Advertisement

“அவள் கிட்ட என்ன பேச்சு கிடக்கு. வா போகலாம்.” என முறைத்தவரை இழுத்துக் கொண்டு கிளம்பினர்.

Advertisement

அந்த பார்வை சூடாமணி அருவருப்பாக இருந்தது.

எப்போதும் சூடாமணி மீது பயமாக தான் மற்றவர் பார்வை படரும். இப்படி ஒரு பார்வையை எதிர்கொண்டது இல்லை அவர்.

ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க அமர் அவரசரமாக வண்டியை கொண்டு வந்து அவர் காலடியில் வண்டியை நிறுத்தியவன்,

Advertisement

“அம்மா உன் நாத்தனார் இறந்துட்டா.” என்றான் மரியாதை இல்லாமல்.

‘நாத்தனாரா?’ என சில நொடிகள் யோசித்த பிறகு தான் அவருக்கு புரிந்தது அது வைதேகி என்று.

“அவள் எனக்கு பண்ண அநியாயத்துக்கு இந்த சாவு கூட பத்தாது அமர்.” என இரக்கமே இல்லாமல் கூறியவர்,

“என் அக்னி எங்க? உன் அண்ணனை கண்டு பிடிச்சியா?”

“அண்ணன் பைக் தான் கிடச்சிது. அண்ணனை காணும்.”

“தமிழுக்கு கால் பண்ணி கேள்.”

“தமிழ் ஊரை விட்டே போயிட்டாரு.”

“என்ன டா சொல்ற?” பேரும் அதிர்ச்சி அவருக்கு.

“அவங்க குடும்பத்தோடு போய் இரண்டு நாள் ஆகுது.”

“குடும்பத்தோட?” அவர் வாய் முணு முணுத்தாலும் மனதுக்குள் பெரும் அழுத்தம்.

அவருக்குள் இருந்த நம்பிக்கையே மகன் எப்படியும் தமிழுடன் தான் இருப்பான். அவன் பார்த்துக் கொள்வான் என்று தான் இரவெல்லாம் கொஞ்சம் அலட்சியமாக இருந்தார்.

இப்போது மனதுக்குள் கிலி பிடித்து.

“அண்ணா ராத்திரி முழுக்க தெரு தெருவாக சுத்தி இருக்கார். நிவேதிதா ஊரை விட்டு போயிட்டா. எங்க போனாள்னு தெரியல. போலீஸ் ஸ்டேஷன் ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க.”

சூடாமணி உள்ளுக்குள் கலங்கினார்.
ஏதோ ஒரு பெரும் புயல் தன் குடும்பத்தில் வீச போவதாக உணர்ந்தார்.

அமைதியாக வீட்டுக்குள் வந்தார். அவர் தாய் சுருண்டு கிடந்தார். மகளை கண்டதும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டார்.

வீடே அமைதியாக இருந்தது.

பரஞ்சோதி ஒரு தெருவில் உலாவி விட்டு வீட்டிற்குள் வந்தவள், “அத்தை மாமாவை எங்கேயும் காணும். கால் வலிக்குது. ரொம்ப பசிக்குது.” என்றவள் சூடாமணி மடியில் படுத்துக் கொண்டார்.

சூடாமணி அமைதியாக இருப்பதை கண்டு “அத்தை பசிக்குது” என்றாள்.

சூடாமணி தன் அன்னையை பார்த்தார். அவரோ அசைவதாக தெரியவில்லை.

எப்போதும் யாருக்காவது ஏதாவது வேண்டும் என்றால் அவர் தான் செய்வார். சூடாமணி க்கு இத்தனை வயதானாலும் சமைக்க தெரியாது. பாட்டியும் எந்த வேலையும் செய்ய போறான்.

அதை விட கொடுமையாக பரஞ்சோதி எண்ணெய் என்றாலே என்னவென்று தெரியாது. தயிர் பால் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது.

“இரு வரேன்.” என அவளை எழுப்பி விட்டு சமையல் அறைக்குள் சென்றவர் டீ போட்டு கொண்டு வந்தார்.

“அத்தை டீயா இதெல்லாம் எனக்கு எந்த மூளை?” என்று செல்லமாக சிணுங்க,

“இப்போதைக்கு இதை குடி. அமர் வரட்டும் கடையில் இட்லி வாங்கிட்டு வர சொல்றேன்.” என அவளை சமாதானம் செய்தார்.

பரஞ்சோதி அந்த டீயை ஒரு மிடறு விழுங்கி கருமம் என அங்கேயே அப்படியே துப்பி விட, சூடாமணிகு சுறு சுறுவென கோபம் தலைக்கு ஏறியது.

பல்லை கடித்து அமைதியாக இருந்தார்.
அமர் உள்ளே நுழைந்தான், “ஆள் தான் எருமை மாதிரி வளர்ந்து இருக்க. இப்படியா வீட்டுக்குள்ள துப்பி வைப்ப? நீ என்ன குழந்தையா? கொஞ்சம் கூடவா அறிவு இல்லை.” என முகம் சுழித்து கேட்டவணை கண்டு மொழுக்கென்று அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

“இப்ப எதுக்கு அழற? போய் துணி எடுத்துட்டு வந்து துடை.” என்றான் கொஞ்சம் தணிந்த குரலில்.

“நானா?” என விம்மி கேட்க, அமருக்கு மீண்டும் கோபம் தலை தூக்கியது.

“பின்ன நீ பண்ணி வச்ச அசிங்கத்தை நாங்க துடைக்கணுமா? ஒரு அப்பு அப்புனா தெரியும்.” என்றவனாள் அவன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியல.

“அத்தை பாருங்க.” என ஏதோ ஓங்கி அடித்தது போல் கத்தி அழுது ஆர்பாட்டம் செய்ய, அமருக்கு சலிப்பாக இருபத்து.

ஏற்கனவே சூடாமணி மனம் சோர்ந்து பதட்டத்தில் இருந்தவருக்கு இவரின் செயலும் வெறுப்பாக இருக்கக், அண்ணன் மகளை அடக்க முடியாது என்பது புரிய, “அமர் விடு நான் துடிக்கிறேன். நீ போய் எல்லாருக்கும் கடையில் இட்லி வாங்கிட்டு வா.” என்றார்.

“நீங்க செய்ய போறீங்களா? என்னம்மா?” ஆதங்மாக கேட்டான்.

“டேய் போ டா. ஏற்கனவே எனக்கு நிலமை ஒன்னும் புரியல. நீ வேற.” என மகனிடம் சிடு சிடுத்தவர், உள்ளே சென்று துணி எடுத்து வந்து அவள் துப்பின் வைத்த டீயை துடைத்தார்.

அவருக்கும் அருவருப்பாக இருந்து.
இரு பிள்ளைகளை வளர்த்து இருக்கிறார். அவர்கள் இருவரும் இது போல் செய்தது கிடையாது. அதையும் மீறி செய்தால் அன்னையே பார்த்துக் கொள்வார். சிறுவயதில் இருந்து சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கிறார்.

பரஞ்சோதி அண்ணன் மகளாக இருப்பதால் அவரால் எதுவும் பேச முடியவில்லை. இவ்வளவு கலவரம் நடந்தும் பாட்டி கண் முழிக்கவில்லக். ஆனால் அவர் தூங்கவும் இல்லை.

அமர் ஹோட்டல் சென்று “அண்ணா நாலு பொட்டலம் இட்லி.” என்றபடி வண்டியை நிறுத்த அவன் மாமன் சந்திரன் உள்ளே பூரி, தோசை என வெளுத்து கட்டிக் கொண்டிருந்தார்.

அருகில் இருந்தவரிடம் முப்பத்திரண்டு பல்லும் தெரிவது போல் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.

அமர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவரும் அமர் நிற்பதை கவனிக்கவில்லை.

அமர் இட்லி வாங்கி வந்து கொடுத்து விட்டு அண்ணனை தேடி தோட்டத்துக்கு சென்றான்.

அங்கு மட்டும் தான் அண்ணனை தேட வில்லை என்று அவனுக்கு தோன்றியது.

அதே போல் அவன் நினைப்பை பொய்யாக்காமல் அவன் அண்ணன் மான் தரையில் படுத்து கிடந்தான்.

அவன் நிலை கண்டு தொண்டை அடைத்தது.

‘தவறு செய்து விட்டோமோ?’ என யோசித்தான்.

“அண்ணா.” என பொறுமையாக அழைத்தான்.

தம்பி குரல் கேட்டதும் அக்னி உடல் எக்காக இறுகி போனது.

அந்த புறக்கணிப்பை அமர் மனம் ஏற்கவில்லை. சில நொடிகள் நின்றான்.

அக்னி மேலும் மேலும் இறுகி போக இனி அண்ணன் முன்பு நிற்க வேண்டாம் என்று கிளம்பி விட்டான்.

வேகமாக வீட்டிற்கு வர அவன் மாமன் குரல் தெளிவாக கேட்டது.

“சூடாமணி எதுக்கு கடையில் இருந்து இட்லி வாங்கிட்டு வர சொன்ன? நம்ம குடும்பம் இருக்க நிலைமையில் இப்போ நமக்கு சாப்பாடு தேவையா? சாப்பிடுற நிலமையிலா நம்ம இருக்கோம்? எப்படி சாப்பாடு இறங்கும்? பரஞ்சோதி சாப்பிடாத. அத்தை வீட்டில் பெரிய கலவரம் நடந்து இருக்கு. நீ இந்த வீட்டு மருமகள். எப்படி சாப்பாடு இறங்கியது?” என மகளை தடுக்க,

“அண்ணா பாப்பா சாப்பிடட்டும். அவளுக்கு பசிக்குதுன்னு ரொம்ப நேரமா சொல்றா? எல்லார் வீட்டிலேயும் தான் பிரச்சனை நடக்குது. அதுக்காக சாப்பிடாமல் இருக்க முடியுமா?”

அமர் பல்லை கடித்தபடி வெலியேவே அமர்ந்து கொண்டான் அவர்கள் நாடகம் பிடிக்காமல்.

“சூடாமணி உன் வாழ்க்கையை அழித்த நாசகாரி நிலைமை என்ன ஆச்சு தெரியுமா?”

“தெரியும் அண்ணா.”

“கடவுள் நல்ல தண்டனை கொடுத்துட்டார். இந்த மாதிரி கேவலமான பிறவிகளுக்கு இப்படி பட்ட சாவு தான் வேணும். உன் வாழ்க்கையை அழைச்சு நடு தெருவில் நிற்க வச்சு கை பிள்ளைகளுடன் தவிக்க வச்சவலுக்கு நல்ல தண்டனை கடவுள் கொடுத்துட்டார்.”

சூடாமணி கண் முன்பு அனைத்தும் ஓடியது, “நீங்க சொல்றது தான் நிஜம். கடவுள் இருக்கார் எல்லாத்தையும் பார்த்துகிட்டு.”

போலீஸ் நிவேதிதா வீட்டுக்கு வந்தது.
வைதேகி உடலை வைத்துக் கொண்டு நிவேதிதா வுக்காக காத்திருந்தனர்.

“தென்பாண்டி நிவேதிதா வை முடிந்தவரை தேடிட்டோம். கிடைக்கல.

பஸ் ஸ்டாப் எதிர்ல இருந்த கேமராவில் பார்த்தோம் நிவேதிதா பஸ் ஏறி இருக்கா. அந்த ஊருக்கு போய் செக் பண்ணா அந்த பஸ்ஸில் இருந்து இரங்கல். நடுவில் எங்கேயோ இறங்கி இருக்கா. நாங்களும் எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து இருக்கோம். எனக்கு தெரிந்தவரை நீங்க காத்திருக்க வேண்டாம்.

காணாமல் போனவர்களை கூட கண்டுபிடிக்கலாம். ஆனா வரவே கூடாதுன்னு போனவங்களை உடனே கண்டு பிடிக்க முடியாது. நீங்க உங்க தங்கச்சிக்கு செய்ய வேண்டிய கடமை எல்லாம் செய்யுங்கள்.”
என்றனர்.

அனைவரின் நம்பிக்கையும் உடைந்து போனது.

மாலை ஆகி விட்டது இனியும் உடலை வைத்திருக்க முடியாது என்று அனைத்து வேலைகளும் வேகமாக நடக்க இதோ வைதேகி உடலை தூக்கினர்.

ஆதி கதறி அழுதாள். அம்மா இனி இல்லை. அவரை பார்க்க முடியாது என்று உயிரை கொடுத்து அழுதாள்.

“அக்கா அம்மா நம்பலை விட்டு போயிட்டாங்க. அது கூட தெரியாமல் நீ எங்க இருக்கியோ?” என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள்.

அனைவரையும் கலங்க வைத்து வைதேகி தீக்குள் அடங்கி போக, தன் தங்கைக்கு தன் கையால் தீ மூட்டியவர், அங்கேயே மடங்கி அழுதார். அவருக்கான சோதனை காலம் இன்னும் முடியவில்லை.

இரு பெண்கள் மகள்களாக இருப்பதால் தன் மனதை தேற்றி கொண்டு வீடு வந்து தலை மூழ்கினார்.

தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!