Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Oorkolam Pogum Kaarkala Megam

Oorkolam Pogum Kaarkala Megam 5 2

ஈஸி இல்லை பா”, என்று அவனுக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது வேறு யாரும் அல்ல கோதை தான்.

            “என்ன பாட்டி சொல்றீங்க?”, என்று கேட்ட அருள்மாறனின் புருவம் உயர்ந்தது.



Advertisement

            “இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவன் இப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றது கூட உன் தம்பிக்காக தான்னு எனக்கு புரியுது, மதன் மேல நீ உயிரையே வச்சிருக்க கண்ணு”, என்று சொல்ல தம்பியை ஒரு பார்வை பார்த்தான் அருள். அவன் எதற்கு சம்மதித்தான் என்ற காரணம் அவனுக்கு தானே தெரியும்?

            “நமக்காக இவன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கானா? கண்டிப்பா இருக்காது. இவனாவது எனக்காக பாக்குறதாவது?”, என்று எண்ணி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அண்ணனை பாசமாக பார்த்து வைத்தான் மதன்.

Advertisement

Advertisement

            “நீங்க ரெண்டு பேரும் ராமன் லக்ஷ்மணன் மாதிரி அருள். உங்க கிட்ட இருக்குற ஒற்றுமை மத்த வீட்ல இருக்குமா? நீங்க ரெண்டு பேரும் ராமர் லக்ஷ்மணனா இருந்தாலும் அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் சீதா ஊர்மிளாவா இருக்க முடியாதுள்ள?”, என்று கேட்டாள் கோதை.

            “ஏய் கிழவி, என் பேரனே இப்ப தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கான். நீ குறுக்க புகுந்து கெடுத்து விட்டுருவ போல? இப்ப எதுக்கு டி ராமாயணம் கதை எல்லாம் பேசிக்கிட்டு இருக்க?”, என்று மனைவியின் காதை கடித்தார் வையாபுரி.

Advertisement

            “இவனை இவன் போக்குல போய் தான் பிடிக்கணும். கொஞ்ச நேரம் சும்மா இருங்க”, என்று சொன்ன கோதை ”நான் சொல்றது உனக்கு புரியுதா அருள்?”, என்றார்.

            “இல்லையே பாட்டி?”

            “கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்குற பொண்ணு அவளோட தங்கச்சிக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்படி சொல்லுவா? அவ ஒண்ணும் அருள் இல்லையே? நீ உன் தம்பிக்காக சரின்னு சொல்லிருக்க. அவளும் சொல்லணுமா என்ன?”, என்று கோதை கேட்க “அதானே இதை எப்படி மறந்தோம்?”, என்று எண்ணினான் அருள்.

            இத்தனை நாள் திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பெண் இவன் சரி என்று சொன்னான் என்பதற்காக சரி என்று சொல்லுமா?

            “கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்ன அண்ணனை அது இதுன்னு பேசி நல்லா குழப்பி விட்டுட்ட? அவன் இப்ப இந்த கல்யாணம் வேண்டாம்னு மட்டும் சொல்லட்டும். உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிருவேன் கிழவி”, என்று கோதையின் காதைக் கடித்தான் மதன்.

            “பொறு டா, எல்லாம் சக்சஸ் ஆகும்”, என்று சொன்ன கோதை பேரனையே பார்க்க எழுந்து நின்றவன் “அதெல்லாம் அவங்க சரின்னு சொல்லுவாங்க. அப்படி இல்லைன்னா அந்த பொண்ணை சரின்னு சொல்ல வைங்க. உங்க எல்லாரோட வாயும் எதுக்கு இருக்கு? அவங்க சம்மதிக்கிற மாதிரி பேசுங்க. அப்படியும் முடியலைனா சொல்லுங்க. கடைசியா நானே அந்த பொண்ணு கிட்ட பேசுறேன். அப்புறம் எப்படி அது வேண்டாம்னு சொல்லுதுன்னு பாக்குறேன். நான் அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். பிக்ஸ் பண்ணிட்டேன்”, என்றான் அருள்.

“போட்டோ கூட நீ பாக்கலையே அருளு”

“அதெல்லாம் நீங்க கல்யாணம் முடிவு பண்ணுங்க. தாலி கட்டும் போது அந்த முகத்தைப் பாத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

            அவன் அங்கிருந்து போனதும் அனைவருக்கும் சிரிப்பை அடக்குவது பெரிய போராட்டமாக இருந்தது. அவன் சம்மதத்துக்கு பின் ஏதோ காரணம் இருக்கிறது என்று தெரிந்தாலும் அவன் சம்மதித்ததே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. அதனால் ஏன் எதற்கு என்றெல்லாம் ஆராய வில்லை.

            “நான் இப்பவே சமபந்தி கிட்ட பேசுறேன்”, என்று சொன்ன கிருஷ்ணன் சங்கரலிங்கதித்துக்கு அழைத்து விட்டார்.

            அப்போது தான் லேசாக கண் அயர்ந்திருந்த சங்கரலிங்கம் மற்றும் லதா இருவரும் போன் சத்தம் கேட்டு எழுந்து விட்டார்கள். அதுவும் அழைப்பது கிருஷ்ணன் என்று கண்டதும் அவர்கள் தூக்கம் அவர்களை விட்டு ஓடிப் போனது.

            போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டவர் “சொல்லுங்க சார்”, என்றார்.

            “இன்னும் என்ன சார்? சம்பந்தின்னு சொல்லுங்க சம்பந்தி”

“என்ன சொல்றீங்க?”

“எங்க பையன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்”, என்றார் சந்தோஷமாக.

            தான் சரியாக தான் கேட்டோமா என்ற குழப்பத்தில் “உங்க மூத்த பையன் தானேங்க?”

            “இளையவன் தான் கல்யாணம் எப்பன்னு பறக்குறானே? மூத்தவனை தான் சொல்றேன். அவனுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டான்”, என்று வாயில் வந்ததை அளந்து விட்டார்.

            “ரொம்ப சந்தோஷம் சம்பந்தி”

            “உங்க பொண்ணு எதுவும் சொதப்பாது தானே? அவ தான் எங்களுக்கு மருமகளா வரணும்னு நாங்களும் ஆசைப் படுறோம்”

            “எங்க பிள்ளை எங்க பேச்சை அப்படியே கேப்பா. எனக்கு என்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணமே நடந்து முடிஞ்ச மாதிரி சந்தோஷமா இருக்கு”

            “எங்களுக்கும் சந்தோஷம் தான். சரி நான் வீட்ல கலந்து பேசிட்டு ஒரு நாள் சொல்றேன். ரெண்டு பிள்ளைகளுக்கும் பூ வச்சு உறுதி பண்ணிக்கலாம்”

            “சரிங்க சம்பந்தி. நிம்மதியா தூங்குங்க”

            “சரிங்க குட் நைட்”, என்று கிருஷ்ணன் சொன்னாலும் அனைவருக்குமே மனதுக்குள் இருந்த பரபரப்பில் உறக்கம் என்பது கிட்டே வரவே இல்லை.

            “நாம நினைச்சது நடந்துருச்சு லதா. எனக்கு இப்ப தான் சந்தோஷமா இருக்கு”, என்றார் சங்கரலிங்கம்.

“ஆமாங்க”, என்று சொன்ன லதா இப்போதே பூர்வியிடம் இந்த விஷயத்தைச் சொல்லத் துடிக்க “இப்ப அவளை எழுப்பாத காலையில் சொல்லிக்கலாம். நானே பூர்வி கிட்ட பேசுறேன்”, என்று சொன்ன சங்கரலிங்கம் மனைவியைத் தடுத்து விட்டார்.

            அடுத்த நாள் காலை அனைவருக்கும் அழகாக விடிய பூர்விக்கு மட்டும் நல்ல விடியல் இல்லை போல?”

            காலையில் பூத்த புது மலர் போல எழுந்து வந்த மகளிடம் காபிக்கு பதில் அவளுக்கு பிடித்த இளநீர் பாயாசத்தைக் கொடுத்து அசத்தினாள் லதா.

            “என்ன மா பாயாசம் எல்லாம்?”, என்று அவள் கேட்க “அதானே? இன்னைக்கு யாருக்கும் பிறந்த நாள் கூட இல்லையே? அதுவும் இப்ப எல்லாம் நம்ம வீட்ல எங்க பண்டம் எல்லாம் செய்ற மா. இவ பண்ணுற மொக்கை கேக் தான் இருக்கு. இன்னைக்கு என்ன மா நீ பாயாசம் எல்லாம் பண்ணிருக்க?”, என்று கேட்டாள் ஷிவானி.

            “உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிவாகிருச்சு டி. பூர்வியைப் பாத்ததும் அந்த தம்பிக்கு ரொம்ப பிடிச்சிருச்சாம். நல்ல நாள் பாத்துட்டு ரெண்டு பேருக்கும் பூ வைக்க வராங்க”, என்று சொல்ல பூர்வி அதிர்ச்சி அடைந்தாள் என்றால் ஷிவானிக்கோ அவ்வளவு சந்தோஷம்.

            “நிஜமாவா மா?”, என்று கேட்டாள் ஷிவானி.

            “ஆமா டி, சரி ரெண்டு பேரும் உங்க கிட்ட இருக்குற ஜாக்கெட் சரியா இருக்கான்னு பாத்து ஒண்ணு கொடுங்க. நான் இன்னைக்கே ரெண்டு பேருக்கும் ஒண்ணு போல சேலை எடுத்து தைக்க கொடுத்துக்குறேன்”, என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!