Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Oorkolam Pogum Kaarkala Megam

Oorkolam Pogum Kaarkala Megam 5 1

அத்தியாயம் 5 

எத்தனை கவிதைகள் 

படைக்கப் என்னால் பட்டாலும் 

அதற்கு உயிர் கொடுப்பது நீதானோ!!!



Advertisement

பூர்வி சாமி கும்பிட்டு விட்டு வந்ததும் “பட்டாணியும் உருளை கிழங்கும் வேக போட்டுட்டேன். மாவு பிசைஞ்சு வச்சிட்டேன். குருமா மட்டும் வச்சிரு பூர்வி. நான் அந்த பிறந்த நாள் விழாக்கு போய்ட்டு தலையை காட்டிட்டு வந்துறேன். வரச் சொல்லிட்டா. போகலைனா நல்லா இருக்காது. வந்ததும் சப்பாத்தி போட்டுக்குறேன். நீயும் வரியா டி?”, என்று கேட்டாள் லதா.

Advertisement

            “இல்லை மா, நீங்க போய்ட்டு வாங்க”, என்றவள் குருமா செய்ய ஆரம்பித்தாள்.

Advertisement

            குருமா செய்து முடிக்கும் போது அவளது தந்தை அலுவலகம் முடிந்து வந்து விட அவருக்கு டீ எடுத்துக் கொண்டு சென்றாள்.

Advertisement

            அவர் களைப்பாக இருக்க “அதான் ரிட்டயர்ட் ஆகிட்டீங்க தானே பா? பென்ஷன் வேற வருது. அப்புறமும் இந்த கணக்கு எழுதுற வேலைக்கு போகணுமா பா?”, என்று கேட்டாள்.

            மகளை வாஞ்சையாக பார்த்தவர் “வீட்ல இருந்தா சோம்பேறியா ஆகிருவேன் மா. அப்புறம் உங்க ரெண்டு பேரையும் கரை ஏத்துறதுக்கும் நான் உழைக்கணுமே? உங்க வாழ்க்கைக்கு உங்க அண்ணன் கையை எதிர் பாக்க முடியாதே? என்னால முடிஞ்ச அளவுக்கு உழைக்கப் போறேன். அதுக்கப்புறம் உங்களோட பிள்ளைகளைப் பாத்துட்டு ரெஸ்ட் தான்”, என்றார்.

            “அதெல்லாம் நடக்கும் போது நடக்கும். நீங்க கஷ்ட படாதீங்க”

            “கஷ்டம் எல்லாம் இல்லை டா. இப்ப வந்த சம்பந்தம் முடிஞ்சா நல்லா இருக்கும். ரெண்டு பிள்ளைகளையும் ஒரே வீட்ல கொடுத்துட்டு நானும் உன் அம்மாவும் நிம்மதியா இருப்போம்”, என்று சொல்ல அதற்கு என்ன சொல்ல என்று தெரியாமல் “சரி டீ குடிங்க பா. அம்மா இப்ப வந்துருவாங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் சப்பாத்தி போட போறேன்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள்.

            அவள் வேலை எல்லாம் முடித்து பாத்திரங்களையும் கழுவி வைக்கும் போது தான் லதா அங்கு இருந்து வந்தாள்.

            “இந்தா பூர்வி கேக், நீ அப்ப சாப்பிடலைல? இப்ப சாப்பிடு”, என்று சொல்லி கொடுத்தவள் கணவருக்கு எடுத்து வைத்திருந்ததையும் அவருக்கு கொடுத்தாள்.

            “அருமையா இருக்கு டா பூர்வி. உன் கை பக்குவமே தனி தான். அப்பாவுக்கு மட்டும் வசதி இருந்தா உணக்குன்னு தனியா ஒரு பேக்கரியே வச்சு கொடுத்துருவேன்”, என்றார் சங்கரலிங்கம்.

            “பொம்பளை பிள்ளைக்கு எதுக்கு கடை எல்லாம்? எத்தனை ஆம்பளைங்க கடைக்கு வந்து போவாங்க”, என்ற படியே வீட்டுக்குள் நுழைந்தான் புகழ்.

            அவன் பேச்சில் பூர்வி எரிச்சலுடன் காபி போட உள்ளே சென்று விட்டாள். கணவன் குரல் எப்படி கேட்டதோ? அப்போது தான் அறையை விட்டு குழந்தையுடன் வந்தாள் நித்யா.

            மனது கேட்காமல் “ஏமா நித்யா வயசு பொண்ணு இப்படியா விளக்கு வைக்கிற நேரம் வரைக்கும் தூங்குறது? சாயங்காலம் ஆனா விளக்கு வச்சா என்ன?”, என்று லதா கேட்டே விட்டாள்.

            உள்ளுக்குள் வந்த எரிச்சலை அடக்கியவள் “எங்க அத்தை உங்க பேரன் நைட் முழுக்க தூங்கவே விட மாட்டிக்கிறான். அஞ்சு மணிக்கு தான் தூங்குனான். லேசா படுத்தேன் அப்படியே தூங்கிட்டேன். நான் எதுவும் செய்யனுமா?”, என்று நல்லவள் போலவே கேட்டாள்.

            “பூர்வி குருமா வச்சிட்டா. சப்பாத்தி மட்டும் தான் போடணும். நீ செஞ்சிறியா?”, என்றாள் லதா.

            “எப்படி டா இதில் இருந்து தப்பிக்க?”, என்று நித்யா யோசிக்கும் போதே “அதையும் உன் பொண்ணு போட்டுட்டா. நான் குளிச்சிட்டு வரேன். புகழ் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்”, என்று சொல்லி விட்டு சென்றார் சங்கரலிங்கம்.

            “அப்பாடி”, என்று நித்யா மூச்சு விட “எனக்கும் சோர்வா இருந்துச்சு பூர்வி, நல்லதா போச்சு நீ பண்ணிட்ட? சரி நீ உக்காரு. நான் எடுத்து வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்ற லதாவுக்கு திகைப்பு தான். சமையல் மட்டும் இல்லை. பாத்திரம் விளக்குவது, உணவுகளை டேபிளில் எடுத்து வைப்பது, அடுப்பை துடைப்பது வரை அனைத்து வேலைகளையும் பூர்வி முடித்திருந்தாள்.

            பூர்வியை மருமகளாக அடையப் போகும் வீடு குடுத்து வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது கட்டை கூந்தலைக் கொண்டையிட்டு அழுக்கு நைட்டியில் “அம்மா சாப்பாடு ரெடி ஆகிட்டா? எனக்கு பசிக்குது?”, என்ற படி வந்தாள் ஷிவானி.

            சின்ன மகளைக் கண்டதும் எரிச்சல் வந்தது லதாவுக்கு. ஆனால் இப்போது என்ன சொன்னாலும் அவள் ஒரு பக்கம் கத்துவாள். சங்கரலிங்கம் சில நேரம் கோபத்தில் அவளை அடித்து கூட விடுவார் என்பதால் லதா அமைதியாகி விட்டாள்.

            அப்பா வரவில்லை, அண்ணன் வரவில்லை என்று எதையுமே யோசிக்காமல் “இன்னைக்கும் சப்பாத்தி தானா? குருமாவுக்கு பதிலா முட்டை கிரேவியாவது வச்சிருக்க கூடாது?”, என்று புலம்பிக் கொண்டே உள்ளே தள்ளிக் கொண்டிருக்க அதற்கு பிறகு தான் சங்கரலிங்கம் புகழ், நித்யா என அனைவரும் வந்தார்கள்.

            எந்த வேலையும் செய்யாமல் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் ஷிவானியைக் கண்டு சங்கரலிங்கத்துக்கு கடுப்பாக தான் வந்தது. ஆனால் சில ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் உரைக்காது என்று எண்ணி அமைதி காத்தார்.

            “என்ன ஷிவானி கரெக்ட்டா சாப்பிடுற டைமுக்கு வந்து உன் வேலையை ஆரம்பிச்சிட்ட போல?”, என்று நக்கலாக கேட்டாள் நித்யா.

            “ஆமா அண்ணி, நானும் உங்களை மாதிரி தான். நமக்கு சோறு தானே முக்கியம்?”, என்று பதிலடி கொடுத்தாள் ஷிவானி. நித்யா தான் அமைதியாக சாப்பிட வேண்டியது இருந்தது. நித்யா இப்படி தான் அடிக்கடி ஷிவானியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வாள்.

            ஜக்கில் தண்ணீர் வைத்து விட்டு சாப்பிட அமரப் போனாள் பூர்வி. அப்போது பார்த்து நித்யாவின் மகன் அழுது வைக்க “பூர்வீ நான் சாப்பிட அரம்பிச்சிட்டேன். குட்டி பையன் யூரின் போயிருப்பான் போல? கொஞ்சம் மாத்தி விட்டுட்டு வந்து சாப்பிடு”, என்று சொல்ல சரி என்று சொல்வதை தவிர பூர்விக்கு வேறு வாய்ப்பு இல்லையே.

அன்றைய இரவில் “என்னங்க மாப்பிள்ளை வீட்ல இருந்து கால் பண்ணுறேன்னு சொன்னாங்க. பண்ணவே இல்லை. எனக்கு அந்த குடும்பத்துலே ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் முடியனும் போல இருக்குங்க. ஷிவானி ரொம்ப தலைக்கணமா மாறிட்டா. அவளை எங்க காட்டிக் கொடுத்தாலும் நாளே நாள்ல நம்ம வீட்ல வந்து நிப்பா. இதுவே பூர்வி அங்க இருந்தா வீம்புக்குனாலும் இவளும் அங்க இருப்பா”, என்றாள் லதா.

            “எனக்கும் தோணுது தான் லதா. ஆனா அவங்க ஒண்ணும் சொல்லலையே? நம்ம கிட்ட நம்பர் இருக்குது தான். ஆனா நம்மளா கேட்டு அவங்க பையன் வேண்டாம்னு சொல்லிட்டானா என்ன பண்ணுறது? மூத்தவளுக்கு மாப்பிள்ளை அமையாம சின்னவளுக்கும் பண்ண முடியாதுள்ள? பாப்போம். நல்லதே நடக்கும். நீ கவலைப் படாம இரு”, என்றார் சங்கரலிங்கம்.

            அதே நேரம் அன்றைய இரவு உணவின் போது “அந்த பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி தருவாங்களானு அவங்க வீட்ல கேளுங்க”, என்றான் அருள்மாறன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!