Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 22 2

அத்தியாயம்….22(2)

மணிமேகலைக்கு தன் அத்தையிடம் பேசிய பின், முதலில் இருந்த அந்த பட படப்பு இல்லை என்றாலும், ஒரு வித தயக்கத்தோடு தான் அவள் வீரேந்திரன் அறை நோக்கி சென்றாள். 

இந்த தயக்கத்திற்க்கு வீரேந்திரன் காரணம் இல்லை. சங்கரி அத்தை சொன்னது போல் வீரா அத்தான் எனக்கு புதியவரா…?அதுவும் சிறுவயதில் வீரா அத்தான் வீரா அத்தான் என்று அவன் பின் சுற்றியது இப்போது நினைவுக்கு வந்து இது வரை இல்லாத வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

அதுவும் சங்கரி அத்தை சொன்ன… “எப்போவும் நீ கேட்பியே…உங்களுக்கு அத்தை பிடிக்குமா…?என்னை பிடிக்குமான்னு…? என்ற அந்த வார்த்தையில் நான் என்ன மாதிரி லூசு தனமா கேட்டு இருக்கேன்.



Advertisement

ஒரு மகனுக்கு அம்மாவை தானே ரொம்ப பிடிக்கும். அதுவும் அப்போது நான் அவனுக்கு மாமன் மகள் மட்டும் தான்.

அப்படி இருக்கும் போது…கேள்வின்னு நான் அவனை கேட்டு வெச்சி இருக்கனே…அதை வேற இந்த அத்தை மறக்காம கேளுன்னு வேற சொல்றாங்க.

மணி நீ சின்ன போதிலே ரொம்ப லூசு தனமா தான் வாய விட்டு இருக்க…ஆனா வீரா அத்தான் அப்போத்திலிருந்தே கொஞ்சம் நெஞ்சழுத்தம் தான் போல…நான் எப்படி தினுசு தினுசா கேட்டாலும், அதற்க்கு பதில் அளிக்காது வேறு ஏதாவது பேச்சில் திலை திருப்பி விட்டுடுவார்…என்று சிறுவயது நியாபகங்கள் வரும் போதே கூடவே..அதற்க்கு அடுத்து தான் செய்த செயல்கள்,அதாவது ஒருவகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

Advertisement

ஆனால் இப்போது நான் என்ன மாதிரி காரியம் செய்ய இருந்தேன். நான் எப்படி அந்த முடிவு எடுக்க துணிந்தேன். இதோ இப்போது வசுந்தரா செய்த தப்பால் அவள் குடும்பமே  எப்படி எங்கள் குடும்பம் முன் தலை குனிந்து நின்றது.

Advertisement

நான் நினைத்தது நடந்து இருந்தால், இதே போல் தானே என் அம்மாவும் அப்பாவும், தங்கள் குடும்பத்திற்க்கு முன் தலை குனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை வந்து இருக்கும்.

அதுவும் ஏற்கனவே அப்பத்தா…சித்தப்பா சித்திகளுக்கு என் அம்மா அப்பாவை பார்த்தால் இலக்காரமாய் தான் பார்ப்பார்கள். நான் மட்டும் அப்படி செய்து இருந்தால்…பேசியே அவர்களை கொன்று இருப்பார்கள். 

‘வீரா அத்தான் நீங்க ஏன் அன்னைக்கு என்னை அடிச்சிங்க…?அது மட்டும் இல்லாம வீட்டை விட்டு ஏன் போனிங்க…? நீங்க அடிக்காம இருந்து இருந்தா கண்டிப்பா உங்க கிட்ட எப்போவும் போல நான் பேசி இருந்து இருப்பேன்.

Advertisement

நான் நினைப்பது.செய்வது எல்லாம் சொல்லி இருப்பேன்.நீங்களும் நான் தப்பு செய்ய பார்த்தா கண்டிச்சி இருப்பிங்க…இப்போ பாருங்க உங்கள எனக்கு பிடிச்சும் கூட  சந்தோஷபட  முடியாம இருக்கேன். அதுவும் இந்த ஒரு வாரமா நீங்க எனக்கு பார்த்து பார்த்து செய்தது

.எனக்காக வீட்டில் பேசி என்னை கல்யாணம் வரை கொண்டு வந்தது.  காரணம் உங்களுக்கு என்னை பிடிச்சி இருக்கு.அது எனக்கு நல்லாவே தெரியுது.

இந்த பிடித்தம் எப்போதிலிருந்து தான் தெரியல…சரி எப்போவிலிருந்து வேணா இருக்கட்டும். அதை என் கிட்ட சொல்லி இருக்கலாமே…குறைந்த பட்சம் இந்த கல்யாணம் முடிவு செய்த போதாவது என் கிட்ட சொல்லி இருந்தா, நான் அப்படி ஒரு மடத்தனம் செய்து இருக்க மாட்டனே…?’

 இப்படி எத்தனையோ இருந்து இருக்கலாமே… என்று மனதில் நினைத்துக் கொண்டே அவன் அறைக்கு குனிந்து கொண்டே சென்றதால் தன் அறையின் வாசலிலேயே கை கட்டிக் கொண்டு தன்னையே அளவெடுத்துக் கொண்டு  நின்றுக் கொண்டு இருந்த வீரேந்திரனை பார்க்காது வந்தவளுக்கு திடிர் என்று தன் முன் ஒரு பெரிய உருவம் நிற்க கண்டு பயந்து போய் கத்த பார்த்தவளை…

“ஏய் ஏய் நான் தான் கத்தி கித்தி என் மானத்தை வாங்கிடாதே…” என்று  சொல்லிக் கொண்டே…

 

[the_ad id=”6605″]

 

 

“என் அறையாக இருந்த  அறை, இன்றிலிருந்து நம் அறையாக மாறுவதால் முதல் அடியை வலது அடியாக எடுத்து வைக்கவும். அப்போது தான் தங்கள் வரவு நல்வரவாய் ஒவ்வொரு தினமும் திகழும்…” என்று சொல்லி அவள் தோள் மீது கை போட்டு கொண்டு தன் அறைக்கு அழைத்து சென்றான்.

மாலை வரவேற்ப்பிலேயே அவன் வேண்டிய மட்டும் தோளில் கை போடுவது. பின் இடுப்பை சுற்றி பிடிப்பது போல் போஸ் கொடுக்கிறேன் என்று நன்றாக தன் இடுப்பில் அழுத்தம் கொடுத்தது. பின் இத்யாதி…இத்யாதி என்று அனைத்தும் அப்போதே  வீரேந்திரன் செய்து விட்டதால்..

இந்த தோள் அணைப்பு மணிமேகலைக்கு கூச்சத்தை எல்லாம் ஏற்படுத்தவில்லை. ஆனால் வீரேந்திரனுக்கு அப்படி இல்லாது அவள் தோள் மீது தன் கை பட்டதுமே அவனுக்கு ஒரு சுகமான அனுபவத்திற்க்குள் அழைத்து செல்ல பார்த்தது.

அவளுக்கு அது போல் மயக்கம் ஏதாவது தெரிகிறதா என்று வீரேந்திரன் தன் சிட்டு முகத்தை ஆர்வம் பாதி…. ஆசை மிதியுமாக அவள் முகத்தை பார்த்தான்.

அங்கு இவன் எதிர் பார்த்த எந்த உணர்வும் இல்லாது போக வீரேந்திரன் கொஞ்சம் ஏமாற்றமாக தான் உணர்ந்தான். தன் மீது அவளுக்கு காதல் இல்லை என்றாலும், இன்று தங்களோட முதல் இரவு.

அதற்க்கு உண்டான ஏற்பாடு எல்லாம் செய்ய வேண்டாம் என்று தன் அன்னையிடம் சொல்லி விட்டாலுமே…இத்தனை வருட காதலின் காத்திருப்புக்கு இன்று ஒரு முற்று புள்ளி வைத்து விடு என்று அவன் வாலிப வயது அவனுக்கு எடுத்துரைத்தது.

அதற்க்கு உண்டான பிரதிபலிப்பு எதுவும் தன் மனையாளிடம்  இல்லாது போக..அதை நேரிடையாக  தன் மனைவியிடம் கேட்காது…

சுற்றி வளைத்து  கேட்பது போல்… “நியாயப்படி பார்த்தா நீ என்னை பார்த்து வெட்கப்படனும். நீன்னா பயந்து கத்த பார்த்த…?” என்று அவள் மனதில் இன்றைய நாள் பற்றி என்ன இருக்கிறது…? என்று அறிய இப்படி கேட்டான்.

“ம் அவ்வளவு இருட்டுல நின்னா…யாரா இருந்தாலும் வெட்கம் வராது பயம் தான் வரும்.” ஆம் அவன் தன் அறையின் கதவை சாத்தி விட்டு தான் அவளின் வருகைக்காக கதவின் அருகில் காத்திருந்தான்.

சங்கரி உறங்கும் செல்லும் முன் எப்போதும் போல்  அனைத்து விளக்கையும் அனைத்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டார். மைய்ய இருட்டில் கொஞ்சம் கருத்த நிறத்துடன் என்ன தான் வெள்ளையில் உடை அணிந்து இருந்தாலும், அவள் ஏதோ நினைவில் வந்தவளுக்கு தன் முன் ஒரு பெரிய உருவம் நிற்கவும் பயந்து போனதை அப்படியே சொன்னாள்.

மணிமேகலையின் பேச்சை கேட்டவன்… “சிட்டு…சிட்டு யாரும் என்னை பார்த்து வெட்க பட வேண்டாம். அது போல தான் யாரையும் பார்த்து நீ வெட்க பட தேவையில்லை புரியுதா…?”

உனக்கு நான்.எனக்கு நீ என்று பொருள்படும் படி தான் வீரேந்திரன் பேசியது. ஆனால் குற்றம் உள்ள நெஞ்சு எப்போதும் கொஞ்சம்  குறு குறுக்க தானே செய்யும்.

வீரேந்திரனின்  பேச்சில் மணிமேகலை புரிந்துக் கொண்டது… எனக்கு நீ உனக்கு நான் என்று சொன்னதின் அர்த்தமாய்…ஒருவருக்கு ஒருவர் மட்டுமே என்று தப்பாய் அர்த்தம் கற்பித்துக் கொண்டாள்.

அவனுக்கு நான் என்று தான் இருக்கிறான். ஆனால் நான்…சிறுவயதில் அவனோடு பேசியதோடு சரி. அதன் பின் அவனை பற்றி நான் நினைத்தும் பார்த்து இருக்கிறேனா…அதுவும் நான் எப்போதாவது பார்த்தாலும் வட்டிக்காரன்…அன்று தான் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது இவனுடைய பைனான்ஸ் அடியாட்கள் ஒருவனை அடித்ததை பார்த்து இவனை அப்படி தானே  என் மனதில் உருவகப்படுத்தி வைத்திருந்தேன்… என்று மீண்டும் மீண்டும் அவள் செய்த செயல்களால் வீரேந்திரனை பிடித்து இருந்தும் அவனோட ஆசையாக என்ன…. சாதரணமாக கூட அவளாள் பேச முடியவில்லை.

அதன் வெளிப்பாடாய் இவனை பேச விடாது ஏதாவது செய்ய வேண்டும். இவனின் பேச்சை கேட்டால் தானே எனக்கு பழையதும், புதியதும் கலந்து மனதை தொல்லை செய்கிறது என்று நினைத்தவளாய்…

“என்ன  வீர் அத்தான். இன்னைய பொழுதை நீங்க பேசிய போக்கிடலாமுன்னு முடிவு செய்திட்டிங்கலா…?” என்று  கேட்டதும் தான் நாம் என்ன பேசி வைத்து இருக்கிறோம் என்று முன்பு தோன்றாத  வெட்கம் இப்போது  தோன்றியது.

ஏற்கனவே வீரேந்திரன் எப்போ எப்போ என்று காத்துக் கொண்டு இருந்தவன்…மணிமேகலையின் இந்த பேச்சில் மனது துள்ள…

ஏற்கனவே அருகில் இருந்தவன் இப்போது உடலோடு உடல் உரச “நீ எப்படி பொழுத போக்கலாமுன்னு வந்த சிட்டு…” இது வரை பேசாத அவனின் அந்த ரகசிய குரல்…

இன்று மாலை இது போல் அணைத்து தான் இருந்தான். ஆனால் அவன் கண்கள் தன் முகத்தை தான்டி வேறு எங்கும் பயணிக்கவில்லை. இப்போது அவனின் அந்த கண்கள் முகத்தை தவிர மற்ற அனைத்து பாகத்தையும் அக்கு வேறு ஆணிவேறாய் அலசி ஆராயும் அந்த பார்வையில், தன் முகத்தை அவன் மார்பிலேயே புதைத்துக் கொண்டாள்.

வீரேந்திரன் சட்டையின் இரு பட்டனை போடாத காரணத்தால், அவனின் நெஞ்சத்து முடி இவளின்  நெஞ்சின் ஆழம் வரை பலமாக தாக்க..இன்னும் இன்னும் அவனின் மார்பில் புதைந்தவள் கூடுதலாய் தன் முகத்தை இப்படியும் அப்படியும் போட்டு புரட்டியதில்…

அவளின் மெல்லிய ஈரமான உதடுகள்,  வெட்பமான அவன் நெஞ்சில் பட்டது. இதற்க்கு மேல் அவளிடம் அனுமதி கூட கேட்காது, அவளின் கழுத்து பகுதியில் தன் உதட்டை வைத்து அதில் அதிக வெப்பதை அவளுக்கு கடத்தியதின் மூலம் அவன் என்ன நிலையில் இருக்கிறான் என்று அவளுக்கு புரிய…

அவன் நெஞ்சின் ரோமத்தில் அவள் மயங்கினாலும், இப்போது வேண்டாம் தன்னை பற்றி முழுவதும் சொன்ன பிறகே இது என்ற அவளின் எண்ணத்தை அவனின் சூடான  மூச்சு காற்று தகர்ந்தெரிந்து விட்டது.

எனக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவன். இன்று தங்களுக்கான நாள்…இந்த நாளில் அவன் எந்த வகையிலும் ஏமாற கூடாது என்று முடிவு செய்தவளாய்…தன் கையை அவனின் கழுத்த்தின் பின் பகுதிக்கு கொண்டு சென்றவள் அவனின் முடியின் உட்பகுதியில் தன் விரலை கொண்டு சென்று கோதியதில்…

அவன் கண்கள் சொருக ஒரு நிமிடம் அவள் கழுத்து பகுதியில்  முத்தமிட்டுக் கொண்டு இருந்தவன் அப்படியே தயங்கி நிற்க…அவளோ இன்னும் அவன் கழுத்தில் தன்  கை கொண்டு அழுத்ததை கொடுத்து  தொடர் என்பது போல் செய்த சமஞ்சையில்  அவள் கழுத்தின் மொத்த பகுதியிலும் தன்  முத்தம் என்ற சரம் கொண்டு அவளின் கழுத்தில் சூடினான்.

 

[the_ad id=”6605″]

 

 

சென்னை விமானநிலையம்…

“என்ன வீரா நானே போய்க்கிறேன் என்று சொன்னல…இப்போ எதுக்கு நீ வந்த…?” என்று அதட்டிய லாலியிடம்…

“பரவாயில்ல லாலி. இதோ அடுத்த ப்ளைட்ல கிருஷ்ணகிரியில் இருக்க போறேன்.” என்று சொன்னவனின் சிரித்த முகத்தில் இன்னும் கூடுதலாய் ஏதோ தெரிய…

“ஏய் மேன்..என்ன இன்னைக்கி உன் முகத்தில் தேஜஸ் இன்னும் கூடுதலாய் தெரியுது. என்ன விசயம் மேன்…?”  என்று வீரேந்திரனின் சிரித்த முகத்தை  மகிழ்ச்சியுடன்  பார்த்துக்   கொண்டு லாலி கேட்டாள்.

“இது உனக்கு இப்போ புரியாது. உனக்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் புரியும்.” என்று சொன்னவனின் பேச்சில்..

“எனக்கும் எல்லாம் தெரியும் மேன்.” என்று சொல்ல…

“அப்புறம் என்ன கேள்வி வேண்டி இருக்கு… போன வாரம் கல்யாணம் ஆனவன் முகத்தில் இந்த அளவுக்கு கூட மகிழ்ச்சி இல்லேன்னா…அப்புறம் அவன் கல்யாணம் செய்து என்ன பிரோயோசனம்…?” என்ற கேள்வியும் கேட்டு விட்டு சிரித்த அவன் முகத்தை பார்த்திருந்தவளுக்கு மனதில் ஏக திருப்தி.

“நீ எப்போவும் இதே போல ரொம்ப  ரொம்ப ஹாப்பியா இருக்கனும் வீரா…என் வீராவுக்கு இந்த முகம் தான் நல்லா இருக்கு…அந்த முகம் …ம்…ம்… நல்லாவே இல்ல.” என்று தன் தலையை இடமும் வலமுமாக ஆட்டி சொன்னவளின் பேச்சில்…

வீரேந்திரனின் முகம் சிறிது நேரம் இருளடைந்து மீண்டும் தன் முகத்தில் மகிழ்ச்சியை   மீட்டும் கொண்டவனாய்… “உன்னை போல பெரிய மனிஷி ஆசிர்வாதம் இருக்கும் போது எனக்கு என்ன கவலை லாலி..நான்  ஹாப்பியோ ஹாப்பியா தான் இருப்பேன்.” என்று வீரேந்திரன் மகிழ்ச்சியுடன் சொன்னாலும், அந்த கொஞ்ச நேரம் வந்து போன வீரேந்திரனின் இருள் அடைந்த முகத்தை பார்த்த அந்த உண்மை  தோழி…

“வீரா நீ பெல் கிட்ட எல்லாம் பேசிடறது பெட்டரோன்னு எனக்கு தோனுது. அப்புறம் உன் விருப்பம்.” என்பது போல் பேசியவளின் பேச்சில்…

“நானே அதை பத்தி அவள் கிட்ட பேச மாட்டேன்.அவளா பேசினால் கண்டிப்பா  நான் அவளுக்கு அனுசரணையாக தான் பேசுவேன். சிட்டு  இதை பத்தி வாயே திறக்கலேன்னாலும் நாம் அவளை தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன். நம்ம நாட்டில்  ஏகப்பட்ட ஆண்களின் மனோபாவம் இது தான்.

அவன் எத்தனை பெண்களிடம் வேண்டுமானாலும் பழகலாம் .அது தப்பு இல்ல…ஆனா அவனுக்கு வரவ மட்டும் யாரையும் நினைக்காதவளா இருக்கனும். இப்படி பட்ட மனபக்குவம் இருக்கும் போது ஒரு சில பெண்கள் தன் கணவனிடம் இதை பற்றி  மனது விட்டு பேச தயங்க தான் செய்வாங்க. என்ன ஒன்னு என் சிட்டு இதை பத்தி வாய் திறக்கலேன்னா…நான் என்னை பத்தி அவளுக்கு புரிய வைக்க முடியலையோன்னு அந்த வருத்தம் தான் எனக்கு இருக்கும்.” என்று சொன்ன வீரேந்திரனின் பேச்சில்…

லாலி… “பெல்  ரொம்ப ரொம்ப கொடுத்து வெச்சவ வீரா… நீ அவ மேல வெச்ச காதல் பார்த்து, சில சமயம் எனக்கு  லேசா  பொறாமை கூட எட்டி பார்க்குது. 

அதுவும் அவளுக்கு ஜான் கூட கல்யாணம் செய்ய  ஆலயத்தில் பதிவு செய்ய ஜான்  குடும்பத்தோடு மணிமேகையையும் அவள் தோழி சோனாலியையும் பார்த்துட்டு உன் கிட்ட சொன்னப்ப…

  என் சிட்டு அப்படி எல்லாம் செய்ய மாட்டா…அந்த பதிவு அவள் தோழிக்கா இருக்குமுன்னு நீ அவ்வளவு நம்பிக்கையா சொன்னது.நான் திரும்பவும்  கேட்டு விசாரிச்சி இல்ல நான் சொன்னது தான் உண்மைன்னு உன்னை வீடியோ காலில் அழைத்து  சொன்னப்ப..

 

[the_ad id=”6605″]

 

 

 

அன்னைக்கு உன் முகத்தில் பார்த்த அந்த வெறுமைய பார்த்து நான் அப்போதே பெல் கிட்ட போய் என் வீரா கிட்ட என்ன இல்லேன்னு அந்த வெள்ள பன்னிய கல்யாணம் செய்துக்க பாக்குறேன்னு திட்ட கூட தோனுச்சி வீரா…

ஆனா நீ அப்போ கூட… என் மேல தான் தப்பு. என் விருப்பத்தை அவள் கிட்ட சொல்லி இருக்கனும். சொல்லாத காதல் செல்லாதது போல் ஆகிவிட்டது.

அவளுக்கு அவனை தான் பிடிச்சி இருக்குன்னா…அந்த கல்யாணம் நடக்கட்டும்.  இங்கு நான் பார்த்துக்கிறேன் என்று சொன்ன அந்த பெருந்தன்மை…

பின் அவங்க கல்யாணம் நடக்கலேன்னு நான் சொன்னதும் நீ கோப்ப்பட்டது…என் சிட்டு என்ன விளையாட்டு பொருளா..பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு இப்போ பண்ணிக்காம இருக்க…?

என்ன கேட்க ஆள் இல்லேன்னு நினச்சிட்டானா…சொல்லி என் கிட்ட அவன் பேசி நம்பரை வாங்கி அவன் கிட்ட பேசுனது. பின் அவங்க உறவு தெரிஞ்சி…அந்த ஜானோட நீ பட்ட கஷ்ட்டத்தை பார்த்து எனக்கு ரொம்ப வருத்தமா ஆயிடுச்சி வீரா…ஆனா  உன் காதல்  பொய்த்து போகாம பெல்லை கல்யாணம் செய்ததில் உன்னோட நான்  ஹாப்பியோ…ஹாப்பி…” என்று வீரேந்திரனை வாழ்த்தி விட்டு தன் நாட்டுக்கு சென்றாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!