Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 28 1

அத்தியாயம்….28

வீரேந்திரன் கேட்டதற்க்கு, மணிமேகலைக்கு  என்ன பதில் சொல்வது என்பதை விட எங்கிருந்து ஆராம்பிப்பது என்பது தெரியாது சிறிது நேரம் அமைதியாகி விட்டாள்.

“உன்னால சொல்ல முடியலேன்னா விட்டு விடு சிட்டு.”  மணிமேகலை தன்னிடம் சொல்ல தயங்குகிறாளோ என்று நினைத்து வீரேந்திரன் இப்படி சொன்னான்.

வீரேந்திரனின் பேச்சுக்கு அவனை முறைக்கிறேன் என்று நினைத்து அவனை ஆசையாக பார்த்துக் கொண்டே… “நான் சொல்ல கூடாதது  கூட எல்லாத்தையுமே உங்க கிட்ட சொல்லிட்டேன் வீர் அத்தான். இது எல்லாம் ஒன்னுமே இல்லாத விசயம்.உங்க கிட்ட என்னிடம் ஓளிவு மறைவே இருக்க கூடாது.” என்று சொன்னவளின் பேச்சையும் அவளின் இருந்த கோலத்தையும் பார்த்து…



Advertisement

“ஆ அது நல்லாவே தெரியுது.” என்று சொன்னவனின் பேச்சில்…இவ்வளவு நேரம் இல்லாத கூச்சம் அவளுள் புக…பக்கத்தில் இருக்கும் போர்வையை தேடிய கையை பற்றிக் கொண்ட வீரேந்திரன்…

“எங்க அம்மா ஒன்னு சொல்வாங்க.வெள்ளம் தலைக்கு மேல் போன  பின்னே …ஜான் போனா என்ன…?முழம் போனா என்ன…? என்று. இப்போ அதே தான்  நான் உன்னிடம் சொல்றேன்.” என்றவனின் பேச்சி சத்தியமாக  மணிமேகலைக்கு புரியவில்லை.

“முதல்ல என் கையை விடுங்க. நான் போர்வையை எடுக்கனும்.” என்று சொன்னவள்.

Advertisement

பின்… “அது என்ன தலைக்கு மேல  வெள்ளம் போற விசயம்…?” என்று கேட்டதற்க்கு…

Advertisement

“வெள்ளம் இந்த போர்வை…” என்று சொன்னவன் அந்த போர்வையை எடுத்து காட்டினானே ஒழிய அவளிடம் கொடுக்கவில்லை.

தலை என்பது அவளிடன் உடலை காண்பித்து… “அனைத்தையும் பார்த்த பிறகு…இந்த போர்வை போத்தினா என்ன…?போத்திக்கலேன்னா என்ன…?” என்று அவளின் சந்தேகத்தை தெளிவாக விளக்கினான் வீரேந்திரன்…

“சீ..என்ன வீர் அத்தான் நீங்க இப்படி எல்லாம் தப்பு தப்பா பேசுறிங்க…?. நான் உங்கல  ரொம்ப ஜென்டில்மேனுன்னு நினச்சிட்டு இருந்தேன்.” என்று மணிமேகலை சொன்னாலும்,

Advertisement

அவனின் பேச்சை அவள் வெகுவாகவே ரசித்தாள். அவளின்  அந்த ரசிப்பு அவளின் கன்னத்தில் தோன்றிய சிவப்பிலேயே காட்டி கொடுக்க…

மீண்டும் மீண்டும் அந்த கன்னத்தில் எச்சில் படுத்தியவனாய்… “மனைவியிடம் இருந்து ஜென்டில் மேன் பட்டம் வேண்டாம். காதல் மன்னன் பட்டம் தான் வேண்டும். அது தான் இப்போ நம்ம வாழ்க்கைக்கு தேவையான ஒன்னு.” என்று சொன்னவனின் பேச்சை தொடர்ந்து கேட்க வேண்டும் போல் இருந்தது.

தன் கணவனிடம் இனி ஒளிவு மறைவு இல்லை என்று ஆன பின் என்ன…?தன் மனதில் தோன்றியதை சொல்லியும்  விட்டாள்.

“நீங்க ரொம்ப நல்லா பேசுறிங்க…?” என்று…

“ரொம்ப நல்லான்னா…?” என்று வீரேந்திரன் கேட்க…

“ம் ரொம்ப நல்லான்னா…?” என்று தான்  சொன்னதையே மீண்டும் ஒரு முறை சொல்லி பார்த்துக் கொண்டு அதற்க்கு சரியான வார்த்தையாக…

“நீங்க ரொம்ப ரோமான்டிக்கா பேசுறிங்க…”

“ஓ அப்படியா.. என் சிட்டுவே என்னை ரொமான்டிக் பர்சன் என்று சொல்லிட்டா…அப்புறம் என்ன…?” என்று கேட்டவன்..

பின் அவனே… “அய்யா பேச்சில் மட்டும் இல்லேம்மா செயலிலும், ரொம்ப ரொம்ப ரொமான்டிக்கானவன் தான். ஆனா அதை உனக்கு நிரூபிக்க  நாம முதலில்  பேசி முடிச்சிடனும்.

இல்லேன்னா முக்கியமான நேரத்தில் தான்..வீர் அத்தான் என் மனச  திறக்கமா…” அதற்க்கு மேல் அவனை மேச விடாது அவனின் உதட்டின் மீது தன் கைய் வைத்து மூடியவள்.

“போதும் இதுக்கு மேல நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.நான் ஏன் அங்கயே இருந்திடனுமுன்னு நினச்சேன்னா…என் அப்பா அம்மா இங்கே இருக்க கூடாது. என் கூட கூட்டுட்டு போயிடனும் என்று நினச்சேன்.” என்ற அவளின் பேச்சில் குழம்பி போய்…

“நீ சொல்றது எனக்கு புரியல சிட்டு.” என்று கேட்ட வீரேந்திரனுக்கு தெளிவாக விளக்கி கூற ஆராம்பித்தாள்.

“சின்ன வயசுல இருந்தே வீட்டில் என்னை ஊமையன் மகள். அம்மாவை ஊமையன் மனைவி. இது தான் எங்களுக்கு உண்டான அடையாளம். இதை  வெளி ஆளுங்க கூப்பிட்டா கூட பரவாயில்ல. சித்தி சித்தப்பா..அவங்க பசங்க இப்படி வீட்டு ஆளே கூப்பிடும் போது…

அப்படியே கத்தனும் போல  இருக்கும். எனக்கும் எங்க அம்மாவும் பேரு இருக்கு. அதுவும் நீங்க ஊமையன் ஊமையன்னு  பேச்சுக்கு பேச்சு சொல்றிங்கலே…அவருக்கு நீங்க தான் கமலக்கண்ணன் என்ற அழகான பெயர்  வெச்சிங்க என்று  அப்பத்தா கிட்ட கத்த தோனும்.

ஆனா அப்போ நான் ரொம்ப சின்ன பெண். அதுவும் இல்லாம்மே அம்மா சின்ன வயசுல இருந்தே…நீ வீட்ல இருக்குறவங்க கிட்ட எதுவும்  எதிர்த்து பேச கூடாது.

உன்னால வீட்லஎந்த  பிரச்சனையும் வர கூடாது. அப்படி தான் சொல்வாங்க. ஆனா அம்மா ஏன் எல்லாத்துக்கும் இப்படி பணிந்து போக சொல்றாங்கன்னு அப்போ புரியல.

அதுவும் இல்லாம்மா எல்லோரும் கால் ஆட்டி சாப்பிட… அம்மா மட்டும் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல. அந்த சமையல்கட்டே கதின்னு கிடப்பாங்க. நான் பள்ளிக்கூடம் போகும் போது கூட…

அவங்க கிட்ட போயிட்டு வர்றேன்னு சொல்ல… சமையல்கட்டுக்கு தான் போக வேண்டி இருக்கும். அதே போல் தான் சாயங்கலாம் பள்ளிக்கூடம்  விட்டு வீட்டுக்கு வந்தா, அதே சமையல்கட்டில் தான் அம்மா எல்லோருக்கும் மாலை டிபனுக்கு ஏதாவது தயார் செஞ்சிட்டு இருப்பாங்க.

மத்தவங்க  கூடத்தில் இருந்து அதை கொண்டா… இதை கொண்டான்னு அதிகாரம் செய்துட்டு இருப்பாங்க. அதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா…?

எங்க அம்மா இந்த வீட்டு மருமகள். அதுவும் மூத்த மருமகள். வேலையாள் கிடையாது என்று கத்தி சொல்லனும் போல தோனும். அப்போ நான் சின்ன பெண். இப்போ சொன்னா என்னை அடிப்பாங்க. நான் பெரியவள் ஆன பின் சொல்லனும் என்று நினச்சிட்டு இருந்தேன்.

ஆனா  நான் சின்ன பெண்ணில் இருந்து பெரிய பெண்ணாக ஆன பின் குடும்பம் நிலவரம் தெரிய ஆராம்பிச்சது. சித்தப்பாக்கள் தொழிலை பார்க்க அப்பா வீட்டில் இருப்பது. வயதான தாத்தா கூட தொழிலை பார்ப்பார்.

ஆனா அப்பா வெளியில் போய் கூட பார்க்கவில்லை. ஏன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கூட அப்பா போக மாட்டார். அப்போ தான் எனக்கு ஒன்னு உரச்சது.

அம்மா ஏன் எல்லாத்துக்கு வாய் மூடிட்டு இருக்காங்கன்னு…? கத்தனும் எல்லோர் கிட்டேயும் கேள்வி கேட்கனுமுன்னு நினச்ச நான்…அம்மாக்கு துணையா நானும் அவங்க கூட ஒத்தாசை செய்ய ஆராம்பிச்சேன்.

ஆனா அப்போ எல்லாம் இது தான் தோனும். இங்கே  இருந்தா எங்க நிலை இது தான். இது  தொடர கூடாது. இதற்க்கு ஏதாவது செய்ய வேண்டும்  நினச்சப்ப தான்.

நாங்க இங்கு இருந்தா தானே இந்த பெயர்.ஊமையன் குடும்பம் என்பது போல..எங்களுக்கு முன்ன ஊமையன்னு வர…

வெளிநாடு அங்கு யார் எங்கு போறாங்க…?யார் என்ன பண்றாங்க…?இந்த வம்பு தும்பு எல்லாம் கிடையாது. அங்கு உழைப்பும், திறமையும் தான் கண்ணுக்கு தெரியுமே தவிர..அவங்க குறை தெரியாது. அதை பெருசா எடுத்துக்கவும் மாட்டாங்க. அதான் நான் அங்கு படிச்சி வேலை பார்த்து…”

இது வரை தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்த மணிமேகலை இப்போது கொஞ்சம் தயக்கத்துடன் வீரேந்திரனை பார்த்தாள்.

அவள் விடுத்த மீதி கதையை வீரேந்திரன் சொல்ல ஆராம்பித்தான். “அங்கு இருப்பவனை கல்யாணம் செய்தா…அங்கயே தங்கலாம். உன் அப்பா அம்மாவையும் உன்னோட அழச்சிக்கலாம். அது தானே…

அதுக்கு தானே இங்கு உனக்கு கல்யாணம் ஏற்பாடு செஞ்சாங்கன்னு தெரிஞ்ச உடனே…உன் மீது கவனம் செலுத்திய உன் சாரை கேட்ட…” என்று சொன்னவன்..

பின் யோசிப்பது போல் அவளை பார்த்தவன்… “சிட்டு ஒரு பொருளை எங்கே  தொலைத்தோமோ அங்கு தேடினா தான் அது கிடைக்கும். அதை விட்டு வேறு இடத்தில் தேடுவது அது மடத்தனம் இல்ல” என்று சொன்னவனின் பேச்சை புரியாது குழப்பத்துடன் பார்த்த மணிமேகலையிடம்…

“என்ன புரியலையா…?” என்று கேட்டவன்…தொடர்ந்து..

“உனக்கும் உன் அம்மா அப்பாவுக்கு மரியாதை குறைவா…இங்கு அதாவது இந்த  ஊரில்…உன் வீட்டில் நடந்தது.

அப்போ நீ உன்னை எங்கு நிரூபிக்கனும். இந்த ஊரில் அந்தச் வீட்டில்…நான் பார் எங்க அம்மா அப்பாவை எப்படி வைத்திருக்கிறேன் என்று..

அதை விட்டு ஏதோ திருட்டு தனம் செய்துட்டு தப்பிப்பது போல…ஊரு விட்டு இல்லாம நாடு விட்டு நாடு போய் அவங்க அப்பா அம்மாவை கூட்டி நல்லா வாழ வைப்பாங்கலாம்.

ஏன் சிட்டு நான் ஒன்னு உன்னை கேட்பேன் நீ தப்பா நினைக்க கூடாது” என்று கேட்டவன்…

“நான் தப்பா நினைக்கல..நினைப்பேன்…” என்ற மணிமேகலையின் பதிலை எதிர் பாராது…

“அந்த  நாட்டில் நீங்க  அமோகமா வாழ்ந்தா என்ன…?இல்ல பிச்சை எடுத்தா என்ன…? இங்கு யாருக்கு தெரிய போகுது…?” என்ற வீரேந்திரனின் பேச்சில்…

தன்  கையில் போர்வை  கிடைத்தும் அதை போர்த்திக்காது கையில் வைத்துக் கொண்டு  இருந்த போர்வையை அவன் மீது வீசி எரிந்தாள்.

“ஓ உனக்கு இது தேவையில்லையா…?அது தான் நானும் சொன்னேன்.” என்று சொன்னவன்…

அதை கட்டிலுக்கு கீழே வீசியவனாய்… “எனக்கும் தேவையில்லை.” என்று சொன்னவன் விட்ட கதையை இரவு முழுவதும் எழுதி முடித்தான்.

காதலித்து மணக்காத மணிமேகலை காதலோடு வாழ…காதலுக்காக எதையும் செய்ய துணிந்த வசுந்தரா…காதலும் இல்லாது…கல்யாணத்திற்க்கு முன் வாழ்ந்த காமமும் இல்லாது, தன் அறையில் தனியாக படுத்திருந்தவளின் மனகிடங்கில் என்ன என்னவோ நினைவுகள் வந்து அலை மோதின…

அதுவும் மணிமேகையுடனான தன் நட்பை நினைத்தவள். அதை முறிந்த தானே முறித்ததை நினைத்து, இப்போது வெட்கி தலை குனிந்து போனாள். நல்ல  நட்பை இழந்ததோடு ஒரு கவுரவமான வாழ்க்கையையும் சேர்ந்து இழந்து நிற்கிறோம் என்று நினைத்தவளுக்கு, திருமணத்திற்க்கு பின்னான வாசுதேவனின் செயலும் பேச்சும் மாறி போனதை நினைத்து கவலையோடு…

இது  தான்  அவனின் சுபாவமா…?மணி சொன்னாளே…எனக்கு அவனை பத்தி ஒண்ணும் தெரியாது என்று…அவள் சொன்னது சரி தானே…அவள் எனக்கு நல்லது தான் நினைத்து சொல்லி இருக்கிறாள்.

நான் தான் வாசுவின் மீது இருக்கும் காதலில்…இப்படி செய்து வாழ்க்கையோடு நட்பையும் இழந்து நிற்கிறேன் என்று காலம் கடந்து வருந்தி என்ன பிரயோசனம்…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!