Uravin Uravae 1
உறவின் உயிரே….. 1
மச்சி….. அவ வந்துட்டா வாடா……
டேய் சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சி உன் சைக்கிள் குடுடா……
Advertisement
போடா எங்கப்பா பார்த்தா என்ன கொன்று வாரு….
மச்சி நண்பனுக்காக இதுக்கூட செய்ய மாட்டியா…..
ரவி சிறிது யோசித்து விட்டு சீக்கிரம் வந்துருடா….. எங்கப்பா வர நேரம் தான்டா அதா பயமா இருக்கு…..
Advertisement
நான் அதுக்குள்ள வந்துருவேன் மச்சி…..
Advertisement
சரிடா கதிரு இன்னக்கி யாவுது அவக்கிட்ட லவ்வ சொல்லுடா…..
அவ கிட்ட போனாவே ஓடிர்ரா டா ….
ஓகே மச்சி இன்னக்கி எப்புடியாவது சொல்லிருடா… இல்லனா தினமும் ஸ்கூல் முடிஞ்சி போறப்ப…. எவ்ளோ நேரம் டா வெயிட் பண்றது???
Advertisement
சரிடா மாப்ள இன்னக்கி முடிஞ்சுரு… பாய்….
கதிர் சைக்கிளை வேகமாக ஓட்டி அவள் வருவதற்கு முன்பு அந்த குட்டிசுவர் அருகே போய் நின்றுக்கொண்டான்.
ஸ்வாதி அழகி….. பதின்பருவம் அவளுக்கு இன்னும் அழகை அள்ளித்தெரித்திருக்க பேரழகியாய் வலம் வந்தாள். அமைதியான பெண் தான் கோபம் மட்டும் மூக்கிற்கு மேல் வரும். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். தினமும் சைக்கிளில் கதிரின் பள்ளியை கடந்துதான் அவள் வீடு செல்ல வேண்டும்.
பத்தாம் வகுப்பு படிக்கும் கதிர்…இரண்டு வாரத்திற்கு முன்பு…… கதிர் அவளை எதேர்ச்சையாக பார்க்க அவள் அழகில் ஈர்க்கப்பட்டு இப்படித்தான் இருவாரமாக அவளை கண்களால் கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
இன்றும் அதே குட்டி சுவரில் அமர்ந்து அவளை பார்க்க…..
அவளும் அவனை நோக்க…..
பதின்பருவத்திற்கே உரிய துள்ளளுடன் உள்ளம் குதுகளிக்க …..வலது கையால் ஸ்டைலாக அவன் தலையினை கோதிக் கொண்டே அவளை பார்க்க…..
(அந்த வயசில எல்லாருமே ஹீரோதான்ப்பா)
அவனை பார்த்து வெட்கப் புன்னகை உதிர்க்க……
(போட்றா பாட்ட)
இது காதலா ……
முதல் காதலா….
ஒரு பெண்ணிடம் உருவானதா…..
இது நிலைக்குமா நீடிக்குமா…. நெஞ்சில்….
அவள் சென்ற பாதையை பார்த்துக்கொண்டே அவன் ஈஈஈஈ என்று இளிக்க…..
நங்கென்று ஒரு கொட்டு….. அவன் தலையை பதம் பார்க்க…..
அம்மா…… ஏன்டா எரும இப்புடி கொட்டுன….
ரவி அவனை முறைக்க…..
அப்பொழுதுதான் நிகழ்காலத்திற்கு வந்தான் கதிர்….
ஏய் டைம் ஆயிடுச்சா சாரி மச்சி….
போடாங்க…… எங்கப்பா பார்த்துட்டு போய்ட்டாரு வீட்டுக்கு போய் டின் – தா கட்ட போறாரு….
அதுலாம் ஒன்னு ஆகாதுடா அம்மாகிட்ட சொல்லி சமாளிச்சிக்கலாம்.
அவன் முறைத்துக்கொண்டே அந்த பஞ்சர் சைக்கிளை தள்ளிக் கொண்டு நடக்க…..
மச்சி நீ சிரிச்சா தான்டா அழகா இருக்க…. ஏய் அங்கப்பாரு உன் அத்த பொன்னு அம்மு….
எங்கடா ……என்று அவன் பதட்டத்துடன் பார்வையினை சுழல விட….
கதிர் அவனை பார்த்து வாயை மூடி சிரிக்க…..
டேய் எதுல விளையாடுறது இல்லையா போடா….
மச்சி…. சும்மா உல்லுலாய்க்குடா சின்னபுள்ள மாறி கோவிச்சிகிட்டு வாடா….. இன்னக்கி எட்டு மணிக்கு நா ஸ்பான்ஷர் பண்றேடா ஓகேவா ஹாப்பி….
வெரி ஹாப்பி மச்சி…. என்று ரவி இளித்துக்கொண்டே கூற…
அதான அடுத்தவன் பாக்கெட் காலியானாதான் உனக்குலா சிரிப்பு வருடா …… இப்படியே பேசிக்கொண்டே இருவரும் வீடு சென்று சேர……
கதிர் வீட்டில் அமைதியாக நுழைந்து கைகால் முகம் கழுவி ஸ்நாக்ஸ் மற்றும் டீ அருந்த……
ஏன் இவ்ளோ சைலன்ட் கேக்குறீங்களா….இன்னக்கி அவனோட நைநா லீவு….. அதான் இந்த பம்பு பம்புறான்…..
கதிர் குடும்பம் பற்றி அடுத்த எபி-ல சொல்றேன். இது தான் இந்த website என்னோட முதல் தொடர்கதை படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள். உங்களின் ஊக்கமே என்னை இன்னும் எழுத தூண்டும். நன்றி.
– தொடரும்
