Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 35(இ)

சில மாதங்களுக்கு பிறகு……..

 

நள்ளிரவு தாண்டிய 1.30 மணி அளவில் ஊஞ்சலில் அமர்ந்து மாலினி தனது மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இரண்டு வலிமையான கரங்கள் அவளை பின்னால் இருந்து அணைத்தது.

 



Advertisement

மாலினி சிறிதும் பதற்றமின்றி புன்னகையுடன் அந்த கரங்களுக்கு சொந்தக்காரன் நெஞ்சில் சாய்ந்தபடி மடிக்கணினியை மூடினாள்.

 

அவளது கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி வெற்றிவேல், “போலீஸ்காரன் பொண்டாட்டி அலர்ட்டா இருக்க வேணாமா?” என்றான்.

Advertisement

 

Advertisement

அவளும் அவனுடன் இழைந்தபடி, “போலீஸ்காரன் பொண்டாட்டி திருடன் கிட்ட தானே அலர்ட்டா இருக்கணும்! நீங்க வீட்டிற்குள் வந்ததும் தெரியும்.. குளிக்க யாழு ரூமுக்கு போனதும் தெரியும்” என்றாள்.

 

சட்டென்று அவளது இடையை பிடித்து அலேக்காக தூக்க, அவள், “ஹே! லேப்டாப்” என்று கத்தினாள்.

Advertisement

 

ஒரு கையால் அவளை அணைத்து மறு கையால் மடிக்கணினியை பிடுங்கி மெத்தை மீது எறிந்தான்.

 

அவள் மறுபடியும் ‘லேப்டாப்’ என்று கத்தும் முன் அவளது செவ்விதழ்கள் அந்த காவலனால் சிறை செய்யப்பட்டிருந்தது.

 

நீண்ட முத்தத்திற்கு பிறகே இதழ்களை பிரித்தவன், “உன்னை தூங்கத் தானே சொன்னேன்?” என்றான்.

 

அவனது கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்தவள், “வேலை முடிந்ததா?”

 

“பக்கா” என்றவன், “ஏன் தூங்கலை?” என்று மறுபடியும் கேட்டான்.

 

“எப்படியும் வந்து எழுப்ப தானே போறீங்க!” என்று கூறி கண்சிமிட்ட,

 

உல்லாசமாகச் சிரித்தவன் கைகளை தன்னவளின் மேனியில் அலையவிட்டபடி, “தேறிட்ட மானு” என்றான்.

 

அவனது கையை தடுக்க முயற்சித்தபடி, “யாரோட ட்ரைனிங்!!” என்றாள்.

 

பிடியை சற்று இறுக்கியவன், “பேச்சுக்கும் கை செய்ற வேலைக்கும் சம்பந்தம் இல்லையே!”

 

“சாப்டுட்டு தான் மத்தது”

 

“இப்போ எனக்கு இருக்கும் பசியே வேற” என்றவன் அவளை கைகளில் ஏந்தியபடி கட்டிலுக்குச் சென்றான்.

 

அதன் பிறகு அவளது பேச்சுக்கள் அவனது முத்தத்தில் கரைய, தன்னவளை மொத்தமாக களவாடிய பிறகே விலகினான்.

 

கூடலின் பின் தனது நெஞ்சில் தலை சாய்த்திருந்த மாலினியின் முகத்தை நிமிர்த்திய வெற்றிவேல், “சந்தோஷமா இருக்கிறியா மானு?” என்றான்.

 

அவள் ‘என்ன திடீர்னு?’ என்பது போல் பார்க்க,

 

அவன், “கல்யாணத்தை பத்தி உனக்கு நிறைய கனவுகள் இருந்திருக்கும்.. என்னால் உன் கூட நிறைய நேரம் செலவழிக்க முடியலை.. உன் பிரெண்ட்ஸ் எல்லோரும் ப்ரீ பர்டா(bird) இருக்க நீ கல்யாணம்…………………” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது இதழ்களை வன்மையாக சிறை செய்தவள் விடுவிக்கும் முன் சிறிது கடித்திருந்தாள்.

 

வாய்விட்டு சிரித்த வெற்றிவேல், “என் கூட சேர்ந்து நீயும் அதிரடியா மாறிட்டு வர மானு” என்றான்.

 

“இனி இப்படி பேசுனீங்க ரத்தம் வர அளவுக்கு கடிச்சு வச்சிருவேன்”

 

“ரத்தக்காட்டேரி” என்றவன் தனது தேடலை மீண்டும் தொடர ஆரம்பிக்க, அவனை தடுத்த மாலினி, “தூங்கலாம்.. நாளைக்கு வேற சீக்கிரம் எழுந்திச்சி கிளம்பணும்.. லேட்டா போனா மித்ரா அக்கா கோபப் படுவாங்க”

 

“அந்த ஜக்கமா உன் கிட்டயா கோபப்படுவா? என் கிட்டத் தானே! நான் பார்த்துக்கிறேன்” என்றபடி அணைக்க,

 

அவனது கையை தட்டி விட்டவள், “ஜக்கமாவா! இருங்க நாளைக்கு போனதும் சொல்றேன்”

 

“ஏற்கனவே விசாரணையில் நான் பேசியதுக்கு இத்தனை மாசமாகியும் என்னை முறைச்சிட்டே சுத்துறா.. இதை வேற சொல்லு”

 

“பின்ன! நீங்க பேசுனது அப்படி”

 

“ஹே! அது என் டூட்டி”

 

“டூட்டி னா! என்ன வேணா பேசலாமா? வரைமுறை இல்லை?”

 

“எல்லோரும் உன்னை மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டாங்க”

 

“உங்களுக்கு மித்ரா அக்கா கரெக்டர் பத்தி தெரியும் தானே! நீங்க அவங்க காதலை தப்பா பேசியதும்………..”

 

“ரொம்ப வக்காலத்து வாங்காதீங்க மேடம்.. மித்ரா சொன்ன காதல் கதையெல்லாம் கட்டுக்கதை தான்.. புகழ் பழி வாங்கத் தான் அவளை கல்யாணம் செய்துக்கிட்டார்.. கூடவே புகழ் அவளை காதலிச்சு இருக்கார்.. இவ அவரை கல்யாணத்துக்கு அப்பறம் தான் காதலிச்சு இருக்கா”

 

“யாரு சொன்னது?”

 

“போலீஸ்காரன் மூளை ஷார்ப்.. அன்னைக்கே நான் கெஸ் பண்ணிட்டேன்..”

 

“நிஜமாவா?”

 

“இப்போ எதுக்கு அவங்க பேச்சு?” என்றவன் தனக்கு வேண்டியதை பெற்றுக் கொண்ட பிறகே தன்னவளுடன் உறங்கினான்.

 

 

 

(அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மல்லிகா ஒரு வாரம் கழித்து வீடு திரும்பினார். அதன் பிறகு அவரது உலகம் பிரசாத் என்றானது.

மனோஜை கிருபாகரன் திட்டமிட்டு கொல்லவில்லை என்றாலும் முன்பு அதிகாரி ஒருவரை திட்டமிட்டு கொன்றது, கட்டிடம் இடிந்த வழக்கு என்று இன்னும் சில வழக்குகள் தூசித் தட்டப்பட, இறுதியில் கிருபாகரனுக்கு தூக்கு தண்டனை கிடைத்தது. பிரசாத் கிருபாகரனுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றதோடு அவரை பார்க்கக் கூட அவனும் மல்லிகாவும் செல்லவில்லை. ஆனால் அதற்காக கிருபாகரன் பிரசாத் மீது கோபம் கொண்டாரே தவிர வருத்தப்படவோ மனம் திருந்தவோ இல்லை. மனோஜின் மரணம் கூட அவரை மாற்றவில்லை. புகழ்வேந்தன் கூறியது போல் கிருபாகரன் சுயநல மிருகம் தானோ!!!

சீர் குலைந்த தொழிலை மீட்டெடுக்க பிரசாத் போராடிய போது கலைவாணியின் அறிவுரைப் படி புகழ்வேந்தன் அவனுக்கு உதவினான். அன்னையின் அறிவுரையோடு புகழ்வேந்தனுமே ‘மனோஜின் இழப்பை நினைத்தும் கிருபாகரன் செய்த தவறுக்கு பிரசாத்தை தண்டிப்பது சரி இல்லை’ என்ற எண்ணத்தில் பிரசாத்திற்கு உதவினான். புகழ்வேந்தனின் உதவியை பிரசாத் மறுத்தப் போது மித்ராணி பேசி பேசியே அவனை சம்மதிக்க வைத்தாள். பிரசாத் சில மாதங்களில் தொழிலில் தேறி ஓரளவிற்கு பழைய நிலையை எட்டினான்.

தொழிலையும் அன்னையையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாமல் பிரசாத் திணறியபோது அவனது மறுப்பை பொருட்படுத்தாமல் மல்லிகாவின் பொறுப்பை தன் கையில் எடுத்து அவனுக்கு பக்கபலமாக இருந்தது ரோஷினி தான். அதன் விளைவு பிரசாத் ரோஷினி திருமணம் ஒரு மாதத்திற்கு முன்பு சிறப்பாக நடந்தேறியது. பிரசாத்தின் மனம் முழுவதுமாக மாற ரோஷினி காதலுடன் காத்திருக்கிறாள்.)

 

 

 

 

 

 

அடுத்த நாள் காலை மித்ராணி கண் விழித்த போது பார்த்தது தன்னையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்த புகழ்வேந்தனைத் தான்.

 

மித்ராணி விரிந்த புன்னகையுடன் அவனது கன்னத்தில் முத்தமிட்டு, “குட் மார்னிங் வசீகரா” என்றாள்.

 

வசீகரா என்ற பெயரிற்கு ஏற்றார் போல் வசீகர புன்னகையுடன் தனது இதயராணியின் இதழில் முத்தமிட்டு, “வெரி குட் மார்னிங் மை ஸ்வீட் அல்லிராணி” என்றான்.

 

பின், “ராணியம்மா தான் லேட்.. நானும் இளவரசியும் எப்பவோ எந்திரிச்சாச்சு.. சோம்பேறி ராணி.. என்னடா செல்லம்!” என்றபடி மித்ராணியின் சேலையை சற்று விலக்கி அவளது மேடிட்ட வயிற்றில் இதழ் பதித்தான்.

 

அவனது தலைமுடியை வருடியபடி, “உன்னோட இளவரசி தான் நைட்டெல்லாம் என்னை தூங்கவே விடலை”

 

அவளது வயிற்றை வருடியபடி, “அச்சோ! என்னடா செல்லக்குட்டி! இனி இப்படி பண்ணக்கூடாது.. நைட் அம்மாவை தூங்க விட்டு நீங்களும் சம்மத்தா தூங்கணும்” என்றான்.

 

வயிற்றினுள் இருக்கும் சிசு அவனுக்கு ‘சரி’ என்று பதில் சொல்வது போல் மென்மையாக இவனது கை இருந்த இடத்தில் உதைத்தது.

 

அவன் புன்னகையுடன் கையை எடுத்து அந்த இடத்தில் இதழ் பதித்தான்.

 

மித்ராணி, “இளவரசனா இருந்தா என்ன பண்ணுவ?”

 

“அப்பவும் சந்தோஷம் தான் ஆனா எனக்கு உன்னை மாதிரியே ஒரு இளவரசி தான் வேணும்”

 

“பொண்ணு அப்பா மாதிரியும் பையன் அம்மா மாதிரியும் இருந்தா தான் லக்கி னு சொல்லுவாங்க”

 

“ஓகே.. என்னோட ஜாடையில் உன்னோட குணத்தில் குட்டி இளவரசி..”

 

“ஹ்ம்ம்”

 

“மகாராணிக்கு இன்னும் எழுந்துக்க மனசு இல்லையா?”

 

“உன்னை யாரு வளைகாப்பை பெருசா ஏற்பாடு பண்ணச் சொன்னது?”

 

“நம்ம வீட்டில் நடக்கும் முதல் பங்ஷன்.. என்னோட மகாராணியின் வருகையை அறிவிக்க கல்யாண ரிஷப்ஷனை வைக்கலை அதான் என்னோட இளவரசியின் வருகையை அறிவிக்க பெருசா செய்றேன்” என்றவன், “சரி மெதுவா எந்திரிச்சு கிளம்ப ஆரம்பி.. பிப்டீன் மினிட்ஸ் டைம்.. பிரஷ் பண்ணி குளிச்சிட்டு வா..” என்று கூறி அவளை குளியலறைக்குள் அனுப்பினான்.

 

பதினைந்து நிமிடத்தில் மித்ராணி குளித்து வெளியே வந்தபோது மெத்தை மீது அவளது முகூர்தத்தப் புடவையும் அதற்கு பொருத்தமான வைர நகைகள் நகை பெட்டியினுள் இருந்தது.

 

புடவையை பார்த்தவள் புகழ்வேந்தனிடம், “நீ வாங்கின புது புடவை எங்க?”

 

“அம்மாவும் அத்தையும் முகூர்த்தப் புடவை தான் கட்டனும்னு சொல்லிட்டாங்க”

 

“ஏன்?”

 

“அதான் சம்பிரதாயமாம்”

 

அவன் நெஞ்சில் சாய்ந்தவள், “நான் புதுசையே கட்டிக்கவா?” என்றாள்.

 

அவளது குரல் வேறுபாட்டை உணர்ந்தவன் அவளது முகத்தை நிமிர்த்தி, “என்ன டா?” என்றான்.

 

அவள் தயங்கியபடி, “அது.. இந்த புடவை நீ வாங்கினது இல்லையே.. அதான்” என்று இழுக்க,

 

புகழ்வேந்தன் புன்னகையுடன் அவளது நெற்றியில் முட்டியபடி, “உனக்குனே பார்த்து பார்த்து நான் வாங்கிய முகூர்த்தப் புடவை தான் இது.. நம்ம கல்யாணத்தில் எல்லாமே என்னோட ஏற்பாடு தான்.. பியுடிஷியன் கூட.. அவங்க மூலமா தான் புடவையை மாத்தினேன்” என்றதும் மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாக அவளது கண்கள் விரிந்தது.

 

அதில் கவரப்பட்டு அவளது கண்களின் மீது முத்தமிட்டவனின் உதடுகள் அவளது முகத்தில் முத்த ஊர்வலத்தை நடத்தி இறுதியாக அவளது செவ்விதழில் வந்து நின்றது.

 

அப்பொழுது அவனது கைபேசி அலற மனமின்றி இதழை பிரித்தவன், “பேசாம நீ நிவேதாக்கு ட்ரைனிங் கொடு” என்றான்.

 

அவள் புன்னகையுடன், “ஏன் நீ அந்த மங்குனி அமைச்சருக்கு கொடுக்க வேண்டியதானே?”

 

“அவன் தேறுவது போல் தெரியலை அதான்” என்று கூறி கண்சிமிட்ட,

 

அவள், “போதும்.. போய் போனை எடு.. வேற யாராவது கூட போன் பண்ணி இருக்கலாம்”

 

“அவனை தவிர வேற யாரும் கரடி வேலை பார்க்க மாட்டங்க” என்றபடி கைபேசியை எடுத்தவன் அதை மித்ராணியிடம் காட்டினான். அழைத்தது சதீஷ் தான்.

 

மித்ராணி , “ஸ்பிக்காரில் போடு”

 

அழைப்பை எடுத்த புகழ்வேந்தன் ஒலிபெருக்கியை இயக்கினான்.

 

“குட் மார்னிங் பாஸ்”

 

“குட் மார்னிங் சதீஷ்”

 

“சாரி பாஸ்.. பியுடிஷியன்ஸ் வந்துட்டாங்க.. உங்க ரூமுக்கு அனுப்பவா? உங்க ரூம் இண்டர்காம் வொர்க் ஆகலை அதான் போனில் கூப்பிட்டேன்”

 

அப்பொழுது தான் புகழ்வேந்தனுக்கு நியாபகம் வந்தது. மித்ராணியின் தூக்கம் கலைந்து விடக் கூடாதென்று கட்டில் அருகே இருந்த தொலைபேசி ரீசிவரை எடுத்து கீழே வைத்திருந்தான்.

 

“அவங்களுக்கு குடிக்க ஜூஸ் குடு.. டென் மினிட்ஸ் கழிச்சு மேல அனுப்பு”

 

“ஓகே பாஸ்.. வேற எதுவும் வேணுமா?” என்று அவன் வினவ,

 

மித்ராணி, “கொஞ்ச நேரத்துக்கு கரடி வேலை பார்க்காம இருந்தா போதும்” என்று கூற,

 

சதீஷ், “மேம்!!” என்றபடி முழித்தான்.

 

புகழ்வேந்தன் புன்னகையுடன், “வேற ஒன்னுமில்லை.. நீ வேலையை பாரு” என்று கூறி அழைப்பை துண்டித்து அவளை பார்த்து, “நீ இருக்கியே!” என்றான்.

 

“நீ தானே சொன்ன! கிளாஸ் எடுக்கச் சொல்லி”

 

“நிவேதாக்கு தானே உன்னை எடுக்க சொன்னேன்”

 

“நிவேதா வேற சதீஷ் வேறயா?”

 

புன்னகையுடன் அவளது கன்னத்தை வலிக்காமல் கிள்ளி, “சண்டிராணி..” என்று கொஞ்சியவன், “புடவையை நான் கட்டி விடவா?” என்றான் குழைந்த குரலில்.

 

“அப்போ நாளைக்கு தான் பங்ஷன் நடக்கும்”

 

அவளது நெற்றியில் முட்டியபடி அவளை மென்மையாக அணைத்தவன், “நான் சீக்கிரம் கட்டிவிட்டுருவேன்”

 

அவனது பிடியில் இருந்து விலகியபடி, “நீ முதல்ல கிளம்பு” என்று அவள் அவனை விரட்ட,

 

அவன், “இன்னைக்கு விடுறேன்.. ஆனா சேத்து வச்சு ஒரு வாரத்துக்கு நான் தான் கட்டி விடுவேன்” என்று பேரம் பேசிவிட்டே வெளியேறினான்.

 

அவள் புன்னகையுடன் தொலைபேசியை சரியாக வைத்துவிட்டு புடவையை கட்ட ஆரம்பித்தாள்.

 

இது மித்ராணிக்கு ஏழாவது மாதம். புகழ்வேந்தன் தனது வீட்டிலேயே பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தான்.

 

அவள் புடவையை கட்டி முடிக்கவும் அழகு நிலையத்தை சேர்ந்தவர்கள் வரவும் சரியாக இருந்தது. அதன் பிறகு அவளுக்கு நேரம் ரெக்கை கட்டி பறந்தது.

 

வந்தவர்களை இன் முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்த புகழ்வேந்தனின் கண்களுக்கு மித்ராணி மனையில் அமர்ந்தபிறகு வேறு யாரும் தெரியவில்லை. அழகு தேவதையாக ஜொலித்த தன்னவளை விட்டு அவனால் பார்வையை இம்மியளவும் அகற்ற முடியவில்லை. அவளும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் ‘எப்படி?’ என்று புருவம் உயர்த்தி வினவ,

 

அவன் கண்கள் மின்ன மெலிதாக இதழசைத்து முத்தம் கொடுத்தான். அதில் அவள் முகம் வெக்கத்தில் மேலும் ஜொலிக்க,

 

‘கிளம்பினதும் சொல்லாம இப்படி வந்து சபையில் உட்கார்ந்துட்டியே அல்லிராணி’ என்று அவன் பார்வையால் செல்ல கோபத்துடன் வினவ,

 

அவள், ‘உன் போனை பாரு’ என்று செய்கை செய்தாள். அப்பொழுது தான் சற்று முன்பு கலைவாணியிடம் கைபேசியை கொடுத்தது அவனுக்கு நினைவிற்கு வந்தது.

 

சத்தமின்றி பெருமூச்சை வெளியிட்டவன், ‘உன்னை அப்பறம் கவனிச்சுக்கிறேன்’ என்றான். அவள் உதட்டை சுழித்து பலிப்பு காட்ட, அவன் மனதினுள், ‘அல்லிராணி கொல்றாளே!’ என்று தாபத்துடன் கூறிக் கொண்டான்.

 

அப்பொழுது, “கொஞ்சம் எங்களையும் கவனிங்க புகழ்” என்ற வெற்றிவேலின் குரலில் திரும்பிய புகழ்வேந்தன் புன்னகையுடன், “வாங்க வெற்றி.. மாலினி எங்க?” என்றான்.

 

“அதோ” என்று வெற்றிவேல் கைகாட்ட, புகழ்வேந்தன் திரும்பிப் பார்த்தான்.

 

மாலினியும் மித்ராணியும் ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருக்க, அவர்களுடன் நிவேதாவும் இணைத்துக் கொண்டாள். இவன் பார்த்த நேரம் இவர்கள் பக்கம் திரும்பிய மித்ராணி வெற்றிவேலை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

 

அதை கண்டு ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

 

அப்பொழுது பிரசாத் அன்னை மற்றும் மனைவியுடன் உள்ளே வந்தான்.

 

“வாங்க சித்தி.. வா பிரசாத்.. வா மா” என்று மூவரையும் வரவேற்ற புகழ்வேந்தன், “விருந்தாளி மாதிரி லேட்டா வரீங்க?” என்று உரிமையுடன் கேட்டான்.

 

பிரசாத், “ரோஷினி மேக்கப் போட லேட் ஆகிருச்சு” என்று கூற, அவள் அவனை முறைத்தாள்.

 

“அவளை ஏன் டா வம்பு பண்ற?” என்று மகனை செல்லமாக கடிந்த மல்லிகா புகழ்வேந்தனை பார்த்து, “கிளம்புற நேரத்தில் லேசா தலை சுத்திரிச்சு அதான் லேட்” என்று கூற,

 

புகழ்வேந்தன், “என்னாச்சு? ப்ரெஷர் மாத்திரை போடலையா?”

 

“சுகர் மாத்திரை போட மறந்துட்டேன்.. இப்போ ஒண்ணுமில்லை” என்ற மல்லிகா, “சரி நான் மித்ரா கிட்ட போறேன்” என்றுவிட்டு ரோஷினியுடன் மித்ராணியை பார்க்கச் சென்றார்.

 

ஆண்கள் மூவரும் பேச ஆரம்பிக்க புகழ்வேந்தன் சதீஷை அழைக்க அவனும் அவர்களுடன் இணைத்துக் கொண்டான்.

 

அப்பொழுது குழந்தையுடன் அங்கே வந்த நிவேதா சதீஷிடம், “பாப்பா கிட்ட என்ன சொன்னீங்க?”

 

“என்ன சொன்னேன்?” என்று அவன் முழிக்க,

 

நிவேதா கோபத்துடன், “மேக்கப் போடலைனா நான் கோஸ்ட் மாதிரி இருப்பேன் னு சொன்னீங்களா?”

 

“அய்யோ! நான் அப்படி எதுவும் சொல்லலை” என்று அவன் அலற, நிவேதா நம்பாமல் கடுமையாக முறைத்தாள்.

 

அவன், “பிலீவ் மீ வேதிமா.. பாப்பா ஏதோ தப்பா புரிஞ்சுட்டு சொல்லி இருப்பா” என்று கெஞ்ச,

 

“உங்களை வீட்டில் கவனிச்சுக்கிறேன்” என்று பல்லைக் கடித்தபடி கூறிச் சென்றாள்.

 

வெற்றிவேல், “பாப்பு கிட்ட என்ன சொன்னீங்க?”

 

“பியுடிஷியன்ஸ் பார்த்து யாரு னு கேட்டா.. மேக்கப் போடுறவங்க னு சொன்னேன்.. அப்படினா என்ன னு கேட்டா.. அம்மா ஆபீஸ் கிளம்பும் போது போடுவாளே அது தான் னு சொன்னேன்.. அப்பவும் புரியலை னு சொன்னா.. நேத்து நீ பார்த்த கோஸ்ட் படித்தில் ஒரு ஆன்ட்டிக்கு முகத்தில் வரைஞ்சு இருந்தாங்களே, அது மாதிரி னு சொன்னேன்.. அம்மா எதுக்கு டெய்லி மேக்கப் போடுறா னு கேட்டா.. நான் அப்பனா தான் அழகா இருப்பா னு சொன்னேன்.. அவ்ளோ தான்” என்று பாவமாக கூற, மற்ற மூவரும் பலமாக சிரித்தனர்.

 

 

 

விழாவின் தொடக்கமாக புகழ்வேந்தன் தான் தன்னவளின் கன்னங்களில் சந்தனத்தை தடவி கைகளில் வைர வளையலை அணிவித்தான். இருவரும் கண் வழியே காதல் அம்புகளை வீச, நிவேதா மாலினியுடன் சேர்ந்து கிண்டல் செய்தாள். அதை புகழ்வேந்தானோ மித்ராணியோ கண்டுக்கொள்ளவில்லை. நிவேதா அதற்கும் சேர்த்து கிண்டல் செய்தாள்.

 

அடுத்து ஒவ்வொருவராக மித்ராணிக்கு வளையல் போட விழா இனிதே நிறைவடைந்தது.

 

விழாவிற்கு வந்தவர்கள் கிளம்பியதும் கலைவாணி மித்ராணிக்கு சுத்திபோட்டுவிட்டு, “போய் ரெஸ்ட் எடு டா” என்றார்.

 

அவள் கலைவாணி மற்றும் கமலாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அறைக்கு செல்ல, அடுத்த சில நிமிடத்தில் புகழ்வேந்தனும் அறைக்கு சென்றான்.

 

கமலாவும் இவர்களுடன் புகழ்வேந்தன் வீட்டில் தான் இருக்கிறார்.

 

கண்ணாடி முன் நின்று தனது பிம்பத்தை ரசித்துக் கொண்டிருந்த மித்ராணியை பின்னால் இருந்து அணைத்த புகழ்வேந்தன், “என்னோட அல்லிராணி இன்னைக்கு செம்ம அழகு..” என்றபடி அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

 

அவள் புன்னகையுடன் திரும்ப, “கொல்றடி அல்லிராணி” என்றபடி அவளது இதழ்களை சிறை செய்தவன் நீண்ட முத்தத்திற்கு பிறகே இதழ்களை பிரித்தான்.

 

பின், “கீசர் ஆன் பண்ணி வச்சிருக்கேன்.. ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வா.. காலில் சுடு தண்ணி ஊத்துறேன்.. அப்பறம் கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடு” என்றான்.

 

“ட்ரெஸ் செஞ் பண்ண ஹெல்ப் பண்ணுவ னு நினைத்தேன்” என்று அவள் மையல் பார்வையுடன் கூற,

 

அவன் கள் உண்ட வண்டாக, “கரும்பு திண்ண கசக்குமா?” என்றபடி அவளது நகைகளை கழட்ட ஆரம்பித்தான். அதன் பிறகு ஆடையை மாற்றி குட்டி குளியல் போட்டு மித்ராணி படுக்க ஒருமணி நேரத்திற்கு மேல் ஆனது என்று நான் சொல்லவும் வேண்டுமா!!!!!!

 

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥இதே காதலுடன் இவர்கள் இனிதே வாழ வாழ்த்தி விடைபெறுவோம்♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!