Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-33.1

அத்தியாயம் 33.1: 

 

 

 



Advertisement

 

 

 

Advertisement

 

Advertisement

 

 

 

Advertisement

 

ராமன் மற்றும் மகாலட்சுமியை பற்றிய உண்மையை மருதாயி கூற கேட்டவள் மிகவும் பயந்துவிட்டாள். 

 

 

 

 

 

 

 

 

தன் பயத்தைக் கூடக் கணவனுக்குக் காட்டாது மறைக்கப் படாதபாடுபட்டுவிட்டாள் ஆனந்தி. 

 

 

 

 

 

 

 

 

“ஏன் இப்படி இருக்க? என்ன பிரச்சனை?” எனக் கேட்ட கணவனிடம் உண்மையை மறைத்து ஏதேதோ காரணம் சொல்லி அவனைத் திசைதிருப்பியவள் தங்களின் பயணத்திற்கான வேலையைத் தடையின்றிச் செய்யவைத்தாள் அவனை. 

 

 

 

 

“ஆம்!”… நித்தியன் வேலை செய்யும் நிறுவனத்துடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு வருடம் முழுமையாக இருப்பதால் மனைவியுடன் அங்கேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யது கொண்டிருக்கிறான் நித்தியன். 

 

 

 

 

 

 

முதலில் உமாவை தனியேவிட்டுவிட்டு செல்ல தயங்கியவனை மகாலட்சுமியும் உமாவும் தான் வற்புறுத்தி அனுப்பி வைக்கின்றனர். 

 

 

 

 

கடந்த ஒரு வாரமாகவே மகாலட்சுமி மற்றும் ராமனை கண்கானித்துக்கொண்டுருந்த ஆனந்திக்கு மெல்லமெல்ல இருவரின் குணமும் பிடிபட ஆரம்பித்தது. 

 

 

 

 

 

 

ஒரு நாள் மதியத்திற்கு மேல் தண்ணீர் அருந்த சமையளறைக்கு வந்த ஆனந்தி கண்டகாட்சியில் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள். 

 

 

 

 

 

 

 

மருதாயி பாட்டி அவரின் ஊருக்கு சென்றுவிட, ஆனந்தியும் தலைவலியில் படுத்துவிட, துணைக்கு யாருமில்லாமல் தனியாகச் சமையல் அறையில் வேளை செய்துகொண்டிருந்தாள் உமா. 

 

 

 

 

 

 

 

அந்த வழியாக வந்த ராமன் அவள் தனியாக இருப்பதைக் கண்டுவிட உமாவின் கையைபிடித்திலுக்க அதில் வந்தகோபத்தில் உமா ராமனை அடிபின்னியெடுத்துவிட்டாள். 

 

 

 

 

 

கோபமடைந்த ராமன், “எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே அடிச்சிருப்ப? அடிச்சு போட்டா ஏன் கேட்க ஆளில்லாத அனாதை நாய் நீ என்னையே அடிச்சுயில்ல; இன்னைக்கு உன்னைய என்ன பண்றேன் பாரு டீ” எனக்கூறியவன்… 

 

 

 

உமாவை திருப்பி அடிக்கக் கையோங்கியதை கண்ட ஆனந்தி, “சித்தப்பா என்ன காரியம் பண்றீங்க? யார் வீட்டில் வந்து யாரை அடிக்கக் கையோங்கறீங்க? யார் உங்களுக்கு அவளை அடிக்க அதிகாரம் கொடுத்தது? இந்த விஷயம் மட்டும் அவருக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான் பார்த்துக்கோங்க” எனக்கூறி அவனை முறைத்தாள் ஆனந்தி. 

 

 

அதற்கு ராமன், “என்னமா இப்படிப் பேசற? தப்பு பண்ணா அடிக்கத்தான் செய்வாங்க ம்மா, அதுவும் இல்லாம அவ என் அக்கா மகள் ஆனந்தி, அம்மா அப்பா இல்லாத பிள்ளை தப்பு பண்ணினா நாம தான் சொல்லி திருத்தனும் அதைத்தான ம்மா நான் செஞ்சேன்” என்றவனிடம்… 

 

 

 

 

 

ஆனந்தி, “வேற எப்படிப் பேச சொல்லறீங்க சித்தப்பா? அவ எதாவது தப்பு பண்ணினா ஒன்னு எங்கிட்ட சொல்லுங்க இல்ல அவர்கிட்ட சொல்லுங்க இனி இந்த மாதிரி கைநீட்டற வேலையை வச்சிக்காதீங்க, அப்பா-அம்மா இல்லைனா என்ன அவளுக்கு அண்ணன்-அண்ணினு நாங்க இருக்கோம் இதுதான் நீங்க உமாவை கடைசியா கைநீட்டி அடிக்கிறதா இருக்கனும்” என்றவள் உமாவிடம் திரும்பி, “யார் அடிச்சாலும் வாங்கிகிட்டு இப்படித்தான் அமைதியா இருப்பியா உமா? உனக்கு அண்ணன், அண்ணானு நாங்க இல்லையா? இல்ல எங்களை உனக்குப் பிடிச்சவங்களா நினைக்கவில்லையா? இல்ல உனக்கு இந்த வீட்டில் சொந்தம்னு நாங்க யாரும் இல்லைனு நினைத்து விட்டையா உமா? இன்னும் என்னென்ன விஷயத்தையெல்லாம் எங்ககிட்ட இருந்து மறச்சிவச்சி இருக்க? சொல்லுடீ? எனக் கோபத்தில் கத்தியவளிடம் எதுவும் கூறாமல் அமைதியாகவே நின்றிருந்தாள் உமா”. 

 

 

 

 

 

 

இவர்களின் பேச்சி சத்தத்தில் அறையிலிருந்து வெளியே வந்த மகாலட்சுமி, “என்ன இங்க சத்தம்? எதுக்கு ஆனந்தி இப்படிக் கத்தற? ஏதாவது பிரச்சனையா? இல்லை எதாவது வேணுமா?”. 

 

 

 

 

 

“ஆமாம்! “… “உனக்குச் சமையலறையில் என்ன வேலையா ராமா? எதாவது வேணுமா முற்றத்திலிருந்தே கேட்கவேண்டியது தான?” என்றவரிடம்… 

 

 

 

ஆனந்தி, “நான் சொல்லறேன் அத்தை, உங்க தம்பி தான் தேவையில்லாமல் உமாவை அடிக்க வந்தார் இனி உமாவை திட்டறதோ இல்லை அடிக்கிறதோ இந்த மாதிரி ஏதாவது அவர் பண்ணினா நல்லா இருக்காது பார்த்துக்கோங்க எனக்கூறியவள் உமாவின் கையைபிடித்து இழுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று வேகமாகக் கதவடைத்துகொண்டாள்”. 

 

 

 

 

 

 

 

தன் அறைக்குள் சென்றவளின் கைகாலெல்லாம் பயத்தில் தடுக்கவே ஆரம்பித்துவிட்டது, ஏசி அறையில் வேர்த்து விறுவிறுத்து போய் அமர்ந்துவிட்டாள் ஆனந்தி. 

 

 

 

 

 

 

 

அவளுக்கு நேர்மாறாக உமாவோ கட்டிலில் காலாட்டிக்கொண்டு படுத்துவிட்டாள், தலைக்குக் கைகொடுத்து ஆனந்தியை பார்த்தமாதிரி படுத்தவள் சிரித்துக்கொண்டே, “ஏன் அண்ணி அங்க வீரவசனமெல்லா பேசிட்டு இங்க வந்து வியர்வையில் குளிச்சிகிட்டு இருக்கீங்க? அவ்வளவு பயமா!” என ஆச்சரியம் போல் கேட்டவளிடம்… 

 

 

 

ஆனந்தி, “அட போ உமா, அவங்களை எதிர்த்து பேசங்காட்டியும் கைகாலெல்லாம் நடுக்கமெடுத்துகிச்சி, எப்படி உமா இவ்வளவு நாள் இதுங்க ரெண்டையும் சமாளிச்ச?”. 

 

 

 

 

 

“முதலில் பயமாதான் அண்ணி இருக்கும், போகபோக இவங்க இப்படித்தானு மனதில் பதிந்து போயிடும், அப்புறம் அவங்களைப் பார்த்து பயப்படமாதிரி நடிக்க வேண்டியதுதான் அண்ணி, அவங்களும் நடிப்பை பார்த்து உண்மையினு நம்பி திட்டுவதைக் குறச்சிகுவாங்க. 

 

 

 

ஆனால் அந்த ராமன் மட்டும் தனியா சிக்கும்போதெல்லாம் எங்கிட்ட அடிவாங்காம போகமாட்டான் அண்ணி; எனக்கும் இவங்களோட அடாவடியெல்லாம் பழகிடுச்சி, நீங்கள் தான் இதுகொல்லாம் புதுசு” எனக்கூறியவளை தவிப்பாகாகப் பார்த்தாள் ஆனந்தி. 

 

 

 

 

 

ஆனந்தியின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த உமா, “அண்ணி விடுங்க; இதுங்களையெல்லாம் ஒரு ஆளாவே நான் மதிக்கிறதில்லை, நீங்களும் அவங்களைப் பத்தி நினைக்காம எனக்கு ஒரு குட்டி பையனை பெத்துதர வழியைப் பாருங்க அண்ணி” எனக்கூறி அவளைத் திசைத்திருப்பினாள் உமா. 

 

 

 

 

 

 

அதை உணர்ந்துகொண்ட ஆனந்தியும், “அதெல்லாம் கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும் உமா; அந்த ஆண்டவன் எப்ப கொடுக்கநினைக்கிறானோ அப்ப தான் கொடுப்பான், “ஆமாம்!” அதென்ன பையன்? பொண்ணா இருந்தா என்ன பண்ணுவ உமா?”. 

 

 

 

 

 

 

“உங்களுக்கு முதல் குழந்தை பையனா இருந்தா என்னுடைய பொண்ணை அவனுக்குக் கட்டிவச்சிடுவேன் அண்ணி”. 

 

 

 

 

“ஒரு வேளை பொண்ணா இருந்தா என்ன அடுத்தது பையனை பெத்துகொடுத்துவிடுங்க அண்ணி நான் பெண்ணைப் பெத்துகொடுத்துவிடறேன்”. 

 

 

 

 

“ஒரு வேளை ரெண்டாவதும் பொண்ணா இருந்தா என்ன பண்ணுவ உமா?”, “அப்ப நான் பையனை பெத்து அவளை எனக்கு மருமகளா கூட்டிகிட்டுப் போயிடுவேண் அண்ணி” எனக்கூறி சிரித்தவளை பார்த்து ஆனந்தி, “மொத்தத்தில் உங்க அண்ணனுக்கு நீ சம்பந்தியாகனும் அப்படிதான உமா? கண்டிப்பா அண்ணி” எனக்கூறி சிரித்தவளை பார்த்து ஆனந்தியும் சிரித்தாள். 

 

 

 

 

 

 

இங்கே இவர் இப்படியிருக்கக் கீழே மகாலட்சுமி ராமனை பிடிபிடியெனப் பிடித்துவிட்டார். 

 

 

 

 

“ஏண்டா?… ஏண்டா இப்படி மானத்தை வாங்கற? நித்தியனும் ஆனந்தியும் அமெரிக்கா போறவரை உன்னால அமைதியா இருக்கவே முடியாதாடா? அவங்க ரெண்டு பேரும் ஊர் போறவரை உன்னால் ஏதாவது பிரச்சனை இந்த வீட்டில் வந்தது கொன்னு பொதச்சிடுவேன்… பார்த்து நடந்துக்கோ” எனக்கூறிச் சென்றுவிட்டார் மகாலட்சுமி. 

 

 

 

 

 

 

அதன் பின் வந்த நாட்கள் அமைதியாகவே சென்றது. நித்தியன் மற்றும் ஆனந்தி ஊர் கிளம்பும் முதல் நாள் இரவு உமாவிடம் பேசுவதற்காக அவளின் அறைக்குச் செல்லும் போது தான் நித்தியனுக்கு மகாலட்சுமியின் சுயம் தெரிந்தது. 

 

 

 

 

 

 

அன்று மாலையிலிருந்தே மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்த நித்தியன் மனைவியுடன் உமாவை காண சென்றான். 

 

 

 

 

 

 

 

அங்கு உமாவின் பாதிதிறந்திருந்த அறையில் மகாலட்சுமி மற்றும் ராமனும் சேர்ந்து உமாவிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவன் உள்ளே செல்ல எத்தனித்தவனைத் தடுத்த ஆனந்தி மறைந்திருந்து அவர்களின் உரையாடலை கேட்க ஆரம்பித்தாள். 

 

 

 

 

 

 

 

மகாலட்சுமி உமாவிடம், “என்னடீ உன் அண்ணன், அண்ணி இருக்கிறதால் குளிர்விட்டு போச்சா? அவங்க மட்டும் இங்கிருந்து போகட்டும் அதுக்கப்புறம் இருக்குடீ உனக்கு, பழையபடி ஆரம்பித்தா தான் நீ சரிபட்டு வருவ, குளிர்விட்டு போனதால தானடீ என் தம்பியவே கைநீட்டி அடிச்ச. நாளைக்கு இருக்கு டீ உனக்குக் கச்சேரி” எனக்கூறியவள் வெளியே சென்றுவிட்டாள். 

 

 

 

 

மகாலட்சுமி சென்றதும் ராமன், “உமா குட்டி… நாளை எப்படி எங்கிட்ட இருந்து தப்பிக்கிறனு பார்க்கிறேன் என்றவன் அவளைப் பார்த்து வழிந்துகொண்டே சென்றுவிட உமா வந்த கோபத்தில் அறைக்கதவை அறைந்து சாத்திக்கொண்டாள்”. 

 

 

 

 

 

 

 

தன் தாய் மற்றும் மதனின் செயலை பாத்த நித்தியன் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான். 

 

 

 

 

கணவனின் அதிர்ந்த மாற்றத்தை கண்ட ஆனந்திக்குப் பாவமாக இருந்தது, அதைவிட மகாலட்சுமியின் மீது கொளைவெறியே வந்தது. இப்பொழுது தன் கணவனிடம் மாமியாரின் உண்மையான முகத்தைக் காட்டவேண்டும் நேரம் வந்ததை உணர்ந்த ஆனந்தி நித்தியனை அழைத்துக்கொண்டு தங்களின் அறைக்குள் சென்றுவிட்டாள். 

 

 

 

 

 

 

 

கலங்கி போய் அமைதியாக அமர்ந்திருந்த நித்தியனை பார்க்கபார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது ஆனந்திக்கு, இது அழுவதற்கான நேரமில்லை என்பதை உணர்ந்தவள் தன் அழுகையை அடக்கிக்கொண்டு மகாலட்சுமியை பற்றித் தனக்குத் தெரிந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தாள், ஆனந்தி கூறகூற நித்தியனின் முகமானது நொடிக்குநொடி கோபத்தை அதிப்படுத்திக்கொண்டே சென்றது. 

 

 

 

 

அதே கோபத்துடனே எழுந்தவன், “எவ்வளவு தைரியம் இருந்தா அந்த ******நாய் என் தங்கச்சி கிட்டயே தப்பா நடந்திருப்பான்? அவனுக்கு அந்தப் பொம்பளைங்களும் வேற துணையாக இருக்கா, இவ்வளவு நாளா உமா இந்தக் கஷ்டத்தையெல்லாம் தனி ஆளா இருந்து சமாளிச்சி வந்திருக்கா, ஏன் இவங்க பண்ற கொடுமையையெல்லாம் சகிச்சிக்கிட்டு இருக்கா? நான் எதுக்காக அண்ணனு இருக்கேன்?” எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் நித்தியன். 

 

 

 

 

 

 

 

கணவனின் மனநிலையை உணர்ந்த ஆனந்தி, “அவளுக்குனு இருக்க ஒரே சொந்தம் நீங்க மட்டும் தான் மாமா, அவ உங்களுக்காக மட்டும் தான் இதையெல்லாம் சகிச்சிக்கிட்டு இருந்தா, உங்ககிட்ட இவங்க பண்ற கொடுமையைச் சொன்னா உங்களைக் கொன்னுடுவேனு உங்க அம்மா சொல்லி மிரட்டினதால் தான் அவ ரொம்பப் பயந்துபோய்விட்டா மாமா, அவளை மிரட்டுவது வேற யாரும் இல்லை உங்களைப் பெத்த அம்மா, அவங்களோட இந்தக் கோரமுகத்தைப் பார்த்துதான் உமா ரொம்பப் பயந்துபோய்விட்டா மாமா. 

 

 

 

இப்பகூட அவளா இந்த விஷயத்தைப் பற்றி யாருகிட்டையும் சொல்லவில்லை, மருதாயிபாட்டி சொன்னதால் தான் மாமா எனக்கும் தெரிஞ்சது. 

 

 

 

 

 

நாம அவங்களுக்கு ரொம்பவே கடமைபட்டிருக்கோம் மாமா, அவங்கமட்டும் இல்லைனா இன்னேரம் உமா மொத்தமா நொடுஞ்சி போயிருப்பா, அவங்க தான் அவளுக்குத் தைரியம் சொல்லி அவளைத் தைரியமான பொண்ணா உருவாக்கியிருக்காங்க, நீங்கள் இல்லாத நேரத்தில் அவளுக்கு ஒரு அப்பாவா அம்மாவா அண்ணாவா கூடவேயிருந்து அவங்க சக்திக்கு தகுந்தவரை உமாவை கண்ணுக்குள் வச்சி பாதுகாத்திருக்காங்க மாமா… நாம தான் அவங்களுக்கு ரொம்பவே கடமைபட்டிருக்கோம்”. 

 

 

 

 

 

 

இப்பவரை எப்படியோ ஆனந்தி, “இனி உமா இங்கையேயிருந்து அனுபவித்த கஷ்டமெல்லாம் போதும், இனி அவ இங்க இருக்ககூடாது… எப்படியாவது உமாவை இந்த நரகத்திலிருந்து அழைத்துகொண்டு போய்டனும், போதும் இதுவரை உமா பட்ட கஷ்டமெல்லா” எனக்கூறியவனிடம்… 

 

 

 

 

ஆனந்தி, “கொஞ்சம் பொறுமையா இருங்க மாமா, அவசரப்பட்டு உமாவுக்கு ஆபத்தை இழுத்துவிட்டுடாதீங்க, இவங்களைப் பாத்து தான் கையாளனும் அப்பதான் நாம நினைத்தமாதிரி உமாவை அந்த நரகத்திலிருந்து காப்பாத்தமுடியும்”. 

 

 

 

 

“இன்னும் எத்தனை நாளைக்கு என்னைப் பொருமையா இருக்கச் சொல்லற ஆனந்தி? இதுவே ரொம்ப ரொம்ப அதிகம், உன்னைக் கோபித்து என்ன பயன், நான் சரியா இருந்திருந்தா உமா இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலைமை உருவாகியிருக்காது, இறந்தவங்களோட ஆசையை நிறைவேற்ற படிப்புபடிப்புனு அதிலேயே ஆழ்ந்திருந்ததனால் தான் இவ்வளவு பெரிய வேதனை… உமாவுக்கு ஒரு நல்ல அண்ணா நான் எந்த நன்மையும் அவளுக்குச் செய்யவேயில்லை ஆனந்தி, இத்தனை பிரச்சனைக்கும் முக்கியகாரணமே நான் மட்டும் தான் என வேதனையில் பிதற்றியவனை கண்டு பயந்துவிட்டாள் ஆனந்தி”. 

 

 

 

 

 

 

 

 

இப்படியே விட்டால் வேதனையிலேயே நித்தியனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என நினைத்தவள் அவனை முடிந்தமட்டும் பேசிபேசியே சமாதானம் செய்தால். 

 

 

 

 

 

 

 

 

பாதி நேரம் வரை தூங்காது அதிலேயே உழன்றவனைப் பார்த்துக் கண்ணீர் வடித்த ஆனந்தி கீழே சென்று பாலில் தூக்கிமாத்திரை கலந்து கொடுத்தால், அதன் வீரியத்தில் நித்தியன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டான். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!