Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 23 2

 

” உன்னையத் தெரியாதா விக்கி …..” மனதில் விக்ரமின் வார்த்தைகள் ரீங்காரமிட ,சுகமாக சாய்ந்திருந்தவளிடம் ,

 

“ரிது …. எல்லாரும் பக்கத்துல வந்தாச்சாம் … ”



Advertisement

 

அவள் எழவேயில்லை … எத்தனை வருட தவம் … தன்னை நொடியாவது நினைத்திருப்பானா … தன் ஞாபகம் இருக்குமா இருக்குமா என்று யோசித்திருந்தவளுக்கு விக்ரமின் இன்றைய விளக்கங்கள் அப்படியொரு ஆறுதலைத் தர, வெளியே கார் சத்தம் கேட்கும் வரை அவனை விட்டு விலகவில்லை. அவனும் விலக்கவில்லை தாயாக நெஞ்சில் சாய்த்திருந்தான்.

 

Advertisement

அதன் பின் வந்த நான்கு நாட்களில் நான்கு வருடம் வாழ்ந்த அனுபவம் தான் வருவுக்கு , நாளை அரவிந்தும் விஸ்வனாதனும் வருவதாக இருக்க , இதோ அமெரிக்காவிலிருந்து நேற்று சென்னை வந்து இறங்கிய திலீபன் சங்கீதாவை அழைத்துக் கொண்டு செல்வராஜனும் , இன்பராஜனும் வந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை வரவேற்க அனைவரும் கனிப் பாட்டி வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்க , விக்ரம் மட்டும் , நான் பிறகு வருகிறேன் என்று விட்டான்.

Advertisement

 

“என்னப்பா உன் ஃபிரண்ட்ங்கிறது வேற , மாப்பிள்ளை எதுவும் நினைக்க மாட்டாங்க தான் , தங்கச்சி பிள்ளையோட வாறா … அப்போ தாய்மாமனாக நீ அங்க நிக்கணுமில்லயா ” என லதா சொல்ல , வேறு வழியில்லாது கிளம்பியவன் , பரணியிடம் ,

 

Advertisement

“சித்தி அங்க உங்க கஸின் ஃபேமிலி எல்லாரும் வருவாங்க தானே…. ”

 

“என்னப்பா இப்படி கேட்டுட்ட … எல்லாரும் பொங்கலுக்கு சொந்த ஊர் வரணும்னு வந்தாச்சு …. என் மருமக வந்ததுக்கப்புறம் தான் நீ இப்படி நாலு நாளாவது கூட இருக்க… நீ எந்த விசேஷத்துலயும் கலந்துக்கிறது இல்லங்கிற குறை இருக்கு .. இந்த முறை அந்தப் பேச்சே இருக்காது… ”

 

“இல்ல சித்தி திடீர்னு கல்யாணம் பண்ணதால .. எல்லோரும் எங்களையேப் பார்க்கிற ஃபீல் …..” என வராம இருக்க சாக்கு போக்கு காட்ட , இடையில் புகுந்த லதா ,

 

“நீ கண்டிப்பா வாற, இந்தா உன் தங்கச்சி மகன் கழுத்துல இதைப் போட்டுத்தான் வரவேற்கிற …..” என ஒரு வைரம் பதித்த ஒரு சங்கிலியை தந்து விட்டுச் சென்றார்.

 

அண்ணன் குழந்தையைக் காணும் ஆவலில் விடிந்த நேரத்திலிருந்து தயராகி காத்திருந்தவளுக்கு , விக்ரமின் இந்தச் செய்கை ஆச்சரியமூட்ட , கதவைச் சாத்திவிட்டு கணவனருகே வந்தமர,

 

“ஹேய் பேபி … என்ன காலையிலயே கதவ லாக் பண்ணிட்ட , இந்த டிரஸ்லயும் , இந்தப் பூவுலயும் வேற மயக்குற … அப்படியே லிப் லாக் பண்ணுவோமா….” என அருகில் நெருங்கியவன் வாயில் விரல் வைத்து தடுத்தவள் ,

 

“ஷ் …குட்டியத் தூக்கணும் … நான் தான் ஆரத்தி எடுக்கணும்….. ஏன் வர மாட்டேன்னு சொல்றீங்க , அன்னைக்கு அம்மு , சாருலாம் வீட்டுக்கு வந்தப்பவும் வெல்கம் பண்ணிட்டு உடனே ரூமுக்குள்ள வந்துட்டீங்க … ”

 

“அப்படிலாம் இல்லயே … அந்தக் குட்டிப் பாப்பாவ தூக்கி தான வச்சிருந்தேன்”

 

அவன் விழிகளையேப் பார்த்தவள் ,

“நீங்க பொய் சொல்றீங்க… ரீசன் சொல்லல நான் முன்ன மாதிரி அமைதியாவே இருந்துடுவேன். பேச ட்ரை பண்ண மாட்டேன்….”

 

“ப்ச் என்னடா இப்படிப் பண்ற…” என எழுந்தவன் ,

 

“ரிது… ஒரு விஷயம் என்னோடயே போகட்டும்னு நினைச்சேன். அப்படி ஷேர் பண்றதா இருந்தா என் மனைவிகிட்ட மட்டும் ஷேர் பண்ணலாம்னு இருந்தேன். ஆனா அது நீயா அதாவது திலீபன் தங்கச்சிங்கள்ள ஒருத்தர் தான் என் மனைவினு தெரியாத வரைக்கும் தான் ….” என்றவன் அவளருகிலேயே அமர்ந்து ,

 

“ரிது …. கீது கல்யாணத்துக்காக இந்த ஊருக்கு நான் வந்தது தான் கடைசி , அதுக்கப்புறம் எத்தனையோ விசேஷங்கள் இங்க நடந்தப்பவும் நான் இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டேன் ….இப்ப இங்க உனக்காக … உன்னையப் பார்க்கணும்ங்கிற ஆவல்ல மட்டும் தான் நான் இங்க வந்ததே …..”

 

தயங்கி தயங்கி அவள் முகத்தைக் கையில் ஏந்தியவன் ,

 

“ரிது… உன் கஸின் ஒரு பொண்ணு … அன்னைக்கு சொன்னேனே … அவ பேர் கூட ….. ஆன்… ஏதோ ஒரு லட்சுமினு முடியும் நினைக்கிறேன்  … ”

 

கன்னத்தில் இருந்த கையை இறுக்கமாக பற்றிக் கொண்டவள் ,

 

“அ …. அவளுக்கு என்ன … “அந்த இறுக்கத்தில் என்ன உணர்ந்தானோ ,

 

“ரிது பயப்படாத ஒன்னும் இல்லை… அவள உனக்கு தெரியாததில்ல… உன் பெரியப்பா பொண்ணோ , சித்தப்பா பொண்ணோ தானே… இங்க அடிக்கடி நீங்க வரும் போது என்கிட்ட வாயடிப்பா…. ” என்றவன், அவளுடனான சில சந்திப்புகளைச் சொல்லவும் ,

 

புன்னகையோடு கேட்ட வரு, “அது தான் எனக்குத் தெரியுமே…. ”

 

“என்னத் தெரியுமா…. அந்தப் பொண்ணுக்கிட்ட என்ன சொன்னாலும் கேட்க மாட்டா போல , எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணாதனு …” என்று சலித்தவன் ,

 

“அப்ப கீது கல்யாணம் முடிஞ்சு நாங்க ஊருக்கு கிளம்பினபோது நடந்ததஉன் கிட்ட சொல்லியிருக்காளா…. ”

 

கண்களில் நீர் இறங்க , ” இல்ல அதுகப்புறம் நான் அவளை மட்டுமில்ல யாரையும் பார்க்கல … ”

பெருமூச்சோடு  எழுந்து இடுப்பில் கை வைத்தவன் , ஜன்னலருகே சென்று ,

 

“அன்னைக்கு வீட்ல எல்லாரும் கிளம்பிட்டாங்க … நான் நேரா அப்ராட் போக வேண்டி இருந்ததால கடைசியா கிளம்பினேன்…..” என்று அன்று நடந்தவற்றை அவளிடம் சொல்லிவிட்டு ,

 

“இப்ப சொல்லு நான் இப்ப அங்க வந்தா அந்தப் பொண்ணும் அங்க இருப்பா , அவளுக்கு சங்கடம் தானே … அதுவும் திலீபன் கிட்ட இப்பதான் கேட்டேன் … உன் தங்கச்சிங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகிருச்சானு , அவன் ஆமானு சொன்னப் பிறகு தான் மனசு ஒரு திருப்தியாச்சு ….அவ மறந்து இருக்கலாம் , இல்ல நான் கேட்ட பிராமிஸ ஃபாலோ பண்ணியிருக்கலாம் … இப்ப அவ ஹஸ்பன்டோட சந்தோஷமா இருக்கலாம். இப்ப நான் அந்த இடத்துல இருந்தா எப்படியும் ஒரு சங்கடம் வருமில்லயா … அது தான் வர யோசிக்கிறேன் …. அவ மட்டும் எனக்கு மாமன் பொண்ணா இல்லாம தங்கச்சி முறையா இருந்தா இந்த சங்கடம் அவளுக்கும் இருக்காதுனு நினைக்கிறேன்… நினைக்கதான் செய்றேன் பட் பொண்ணுங்க பொண்ணுங்க தானே… அதுவும் நம்ம ஊரு பொண்ணுங்கள சொல்லவே வேண்டாம்…” அவன் சொல்லி முடித்தது தான் தாமதம் … வேகமாக அவன் முதுகோடு தலை சாய்த்தவள் ,

 

“ஐ லவ் யூ …. விக்கி … ஐ லவ் யூ …..” அப்படியே அவளை முன்னிழுத்து அணைத்துக் கொண்டவன் ,

 

“ஐ …டூ..டா… பார்த்தியா , சும்மாவே நீ ரொம்ப எமோஷனல் … இப்ப இதைக் கேட்டு இன்னும் அழுகிற … சொல்லு இப்ப நான் அங்க வரவா வேண்டாமா …”

 

அதற்குள் லதா கதவைத் தட்ட , “இதோ வந்துட்டோம்மா …” என்றவன் , மனைவியிடம் ,

 

“சொல்லுடா … கிளம்ப வா , வேண்டாமா…. ”

 

“நீ வரணும் விக்கி… ஏன்னா அவ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறா… அவ அத்தானை அந்த அளவுக்கு விரும்புறா … ரெண்டு பேரும் ரொம்ப மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைதான் வாழறாங்க… சீக்கிரம் ரெடியாகிட்டு வாங்க , நான் கீழப் போறேன் ……” என்றுவிட்டு கதவைத் திறந்து வெளியே சென்று விட்டாள்.

 

கனிப்பாட்டி வீட்டிற்கு இவர்கள் சென்று இறக்கவும் , திலீபன் கார் வரவும் சரியாக இருக்க , அமிர்தா ஆரத்தி எடுத்து , விக்ரம் வைர மாலையை குழந்தை கழுத்தில் இட்டு வரவேற்க , ராணி சங்கீதா கையிலிருந்த குழந்தையை வாங்கி முகமெல்லாம் பூரித்துப் போனார்.

 

தன் மகனின் வித்து ,சென்றுப் பார்க்க கனியின் உடல்நிலை தடுத்தது. வீடியோவிலேயே கண்டு ரசித்தவருக்கு கண்ணீர் வந்து விட்டது. தன் மாமியாரிடம் தூக்கிச் சென்று, “அத்தை…. ” எனக் காட்ட ,

 

” உன் மாமனார உரிச்சு வச்ச மாதிரில பிறந்துருக்காரு … டப்பாவுல சரியாவே தெரியல….”

 

” டப்பாவா…” என்ற வருவின் காதில் ஃபோனதான் ஆச்சி அப்படிச் சொல்றாங்க …” என வித்யா கிசுகிசுக்க ,

 

“போ போயி எங்கண்ணன் மைனி கையில கொடுத்து வாங்கு….. அண்ணே நம்ம வாரிச பாருணே….” என்றவர் தன் அண்ணன் அருகே சென்று நின்றார்.

 

பெரியவர்கள் குழந்தையை ரசிக்க இளையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்துக் கொண்டிருந்தனர் .திலீபனும் விக்ரமும் பேசிக் கொண்டிருக்க , பிரதாப்பும்.. இன்னொரு இளைஞனும்  குழந்தையோடு அங்கு வந்து நின்றனர் .பிரதாப்பை கண்ட விக்ரம் ….

 

“சகல …. என்னடா ஆளு அடையாளமே தெரியல …பெரிய மீசையெல்லாம் வச்சிட்டு ….. நீ மதுரையில இருக்கிறதா பெரியப்பா சொன்னாங்க … சாரிடா உன் கல்யாணதப்போ கனடா போயிருந்தேன்… அதான் வர முடியல….”

 

” ஒரு கெத்து வேணுமில்ல …” என மீசையை முறுக்கிய பிரதாப் ,

 

“நீயும் ஜொலிக்கிற திடீர் கல்யாணம்… புது மாப்பிள்ளை களையோ … “எனக் கண்ணடிக்க,

 

“சகல … உன் லெட்சுமி … ” என விக்ரம் ஏதோ சொல்ல ஆரம்பிக்க ,வருவைக் கண்ட பிரதாப் ,

 

“டேய்… அங்கப் பாரு ஃபிரண்ட்ஸ்ங்களப் பார்த்ததும் என் வொஃய்ப்  வயித்துல பிள்ளை இருக்கிறதையும் மறந்து துள்ளிட்டு ஓடுறத ,எப்படியோ அக்கா தங்கச்சிங்கள கல்யாணம் பண்ணி சகலைகளாகிட்டோம் … அப்பா சொன்னாங்க திடீர்னு உன் கல்யாணம் முடிவாச்சுனு… ரொம்ப சந்தோஷமா வாழ்க்கைப் போகுதுடா… அங்கப் பார் உன் மனைவிக்கூட  என் மனைவி எவ்வளவு சந்தோஷமா பேசிட்டு இருக்கிறா…இந்த வாரம் டெலிவரி இருக்கலாம் டா ….”

 

விக்ரம் வருவைப் பார்க்க , பிரதாப்பின் மனைவியின் பக்கவாட்டுத் தோற்றம்  மட்டுமே தெரிந்தது. அப்போது வரை மனைவிக்காக  ஒரு நெருடலோடு சுற்றி வர, இப்போது மனம் இலகுவாக சகஜமாக வலம் வந்தவனது கண்கள் அண்ணன் மகனைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளது வதனத்திலயே நிலைத்து நின்றது.

 

ஒரு ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கன்னத்தில் கைக் கொடுத்து  கீழே அமர்ந்திருந்த பெண்கள் கூட்டத்தில் நட்சத்திரமாக ஜொலித்த மனைவியையே கண்கொட்டாமல் பார்க்க , அவனைக் கவனித்து விட்டவள், ‘என்ன’ என்பதாக புருவம் உயர்த்த ,

 

அருகிலிருந்த அவள் சகோதரியை ஒரு விரலால் காண்பித்து , வயிறு பெரிதாக இருப்பது போல் செய்கை செய்து ,அடுத்து நீ தான் என உதடு குவித்து முத்தம் பறக்க விட்டு திரும்பி நண்பர்களோடு நின்றுக் கொண்டான்.

 

வருவின் முகச் சிவப்பிற்கு சொல்ல வேண்டுமா என்ன ……

 

வானம்பாடி பறவைகள் ரெண்டு

ஊர்வலம் எங்கோ போகிறது,

 

காதல் காதல் எனுமொரு கீதம்

 

பாடிடும் ஓசை கேட்கிறது….

 

தூவும் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!