அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-33.2
அத்தியாயம் 33.2:
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
சூரியனானது யாருக்கும் காத்திருக்காமல் எப்பொழுதும் போலவே தன் வெப்பத்தை வீசி இந்த உலகத்திற்கே வெளிச்சத்தை கொடுத்தது .
மாத்திரையின் வீரியத்தினால் நித்தியன் காலையில் எழவே மணி பத்தை தொட்டுவிட்டது, எழுந்தான் குளித்துவிட்டு கீழே வர அவனுக்காகக் காத்திருந்தார் அவனின் குடும்பவக்கீல்.
அதுவரை தான் வந்தவிஷயத்தைப் பற்றிக் கேட்ட மகாலட்சுமி மற்றும் ராமனிடம் கூடக் கூற மறுத்த வக்கீல் நித்தியன் வந்ததும் தான் வந்தவிஷயத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.
“வணக்கம் நித்தியன்”… “வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க?”, “நல்லா இருக்கேன் நித்தியன், ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி உங்க எல்லார்கிட்டையும் பேசனும் நான் இங்க வந்தேன்”. “அப்படி என்ன முக்கியமான விஷயம் அங்கிள்?” என்றவனிடம்…
“உங்க அப்பா இறக்கிறதுக்குப் பதினைந்து நாளுக்கு முன்ன ஒரு உயில் எழுத சொன்னார், அந்த உயிலை உன் முன்ன படிக்கனும்னு தான் இத்தனை நாள் யாருகிட்டையும் சொல்லாம காத்திருந்தேன். இதை முன்னாடியே வந்த அப்ப கூட நீங்கள் சொல்லியிருக்கலாம் இல்ல அங்கிள்”… “சொல்லியிருக்கலாம் தான் நித்தியன், ஆனால் உன் அப்பா நீ படித்துமுடித்து ஒரு வேளைக்குப் போனபின் தான் சொல்ல சொன்னார் அதனால் தான் நான் உங்ககிட்டையும் சொல்லவில்லை, உன் அம்மாகிட்டையும் சொல்லவில்லை நித்தியன்”. இப்ப படித்துகாட்டிடவா நித்தியன் என்றவரிடம்…
“சரிங்க அங்கிள்”… ‘அப்பா இப்படிச் சொல்லியிருக்காங்கன்னா எதாவது இருக்கும் நினைக்கிறேன், நீங்க படிச்சிடுங்க என்றவன் கவனத்தை அவரிடம் செலுத்தினான்.
மகாலட்சுமியோ மனதில் நீலகண்டனை சரமாரியாகத் தாக்கிக்கொண்டு இருந்தார்’.
“எங்களுடைய மொத்த சொத்தில் அறுபது சதவீதம் ஆனது என் மகன் நித்தியனுக்கும் அவனின் வாரிசுகளுக்கு மட்டுமே சாரும். அந்தபங்கில் என் மனைவி மகாலட்சுமி மற்றும் உமாவுக்கும் எந்த உரிமையும் இல்லை, அதே போல் நித்தியன் விருப்பப்பட்டால் மட்டுமே அவனின் பங்குகளை விற்பனை செய்யமுடியும் அவனைத் தவிற வேறுயாரும் அதில்உரிமை கொண்டாடமுடியாது”.
“மீதி நாற்பது சதவீதம் சொத்துக்களில் வரும் வருமானம் மட்டுமே எனது மனைவி மகாலட்சுமியால் அனுபவிக்க முடியும், அதுவும் உமாவின் திருமணத்திற்கு முன்பு மட்டுமே எக்காரணம் கொண்டும் அந்தப் பங்குகளை விற்கவோ அல்லது மற்றவரின் பெயருக்கு மாற்றவோ முடியது, மீறி செய்தால் அவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யபடுவார்; அதற்கான கடிதத்தையும் இதோடு இனைத்துள்ளேன்”.
“எனது தம்பி மகளான உமாவிற்கு எங்களுடைய மொத்த சொத்தில் மீதி நாற்பது சதவீதம் சொத்துக்களை அவளின் திருமணத்திற்குப் பிறகு அவளின் கணவின் வசம் ஒப்படைக்கபடும் அந்தப் பொறுப்பை வக்கீலிடம் நான் ஒப்படைக்கிறேன்.
உமாவின் பங்கை அவளின் கணவனின் கையெழுத்தில்லாமல் யாராலும் விற்கவோ அல்லது மாற்றவோ இயலாது, அவளின் திருமணம் வரை அவளுக்கு எந்த ஒரு பாதிப்பு நேர்ந்தாலும் அதற்கு முழுப் பொருப்பாக என் மனைவி மகாலட்சுமியையே சாரும் என்று இதைத் தெரிவிக்கிறேன் மேலும் பத்துகோடி ரொக்கப்பணம் உமாவின் பெயரில் வங்கி கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது, அதுவும் உமாவின் விரும்பம் இருந்தால் மட்டுமே வட்டியை எடுக்க முடியும், அசலானது நித்தியனின் கையெப்பம் மற்றும் உமாவின் கையெப்பம் இருந்தால் மட்டுமே எடுக்க முடியும் அதுவும் வக்கீலின் முன்பாக.
இவர்களைத் தவிரவேற யார் எடுத்தாலும் அவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப் படுவார்கள் என்று என் சுயவிருப்பத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்”.
குறிப்பு:
உமாவின் திருமணத்திற்குப் பின் என் மனைவியின் இறுதிகாலம் வரை அவளின் தம்பியோடு கிராமத்தில் உள்ள அவளின் பிறந்த வீட்டில் கொடுத்த சொத்துகளை வைத்துக்கொண்டு வாழஏற்பாடு செய்துவிட்டேன் அவளுக்குப் பிறகு அந்தச் சொத்தான ஓட்டு வீடும் அரை ஏக்கர் நிலம் அவளின் தம்பி ராமனுக்கே சேரும் என்று சுயவிருப்பத்துடன் தெரிவிக்கிறேன்.
இப்படிக்கு உங்களின்,
நீலகண்டன்.
இது தான் நான் நித்தியன் நீலகண்டன் எழுதசொன்ன உயில். எதுக்கு இத்தனை அவசரமாக எழுதசொன்னானு எனக்கு அப்பவும் புரியவில்லை இப்பவும் புரியவில்லை, ஆனா எதையோ மனதில் வச்சிகிட்டு தான் உன் அப்பா இதை எழுதி பதிவும் பண்ணீட்டான்.
“என்ன அங்கிள் சொல்லரிங்க? பதிவு பண்ணியாச்சா?”.
“ஆமாம் நித்தியன்”… அவன் மனதில் எதையோ வச்சிகிட்டு தான் இதையெல்லாம் செய்திருக்கான், சரி நித்தியன் அப்ப நான் கிளம்பறேன் எனக்கூறியவர் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் தன் அறைக்குச் சென்ற மகாலட்சுமி கதவடைத்துக்கொண்டவர் தான் மாலைவரை வெளியே வரவே இல்லை, பச்சதண்ணீர் கூடக்குடிக்காமல் மொத்த கோபத்தையும் அடக்கிகொண்டு நித்தியன் கிளம்புவதற்காகக் காத்திருந்தார்.
ராமனோ அரை ஏக்கர் நிலத்தையாவது தனது பெயருக்கு எழுதிவைத்திருந்ததை நினைத்து ஆனந்தம் அடைந்தவன் சந்தோசத்தைக் கொண்டாடுவதற்குச் சென்றுவிட்டான்.
வக்கீல் உயிலை படிக்கபடிக்க மகாலட்சுமியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தி அவரின் முகத்தில் தெரிந்த வெறியில் சற்று ஆடித்தான் போய்விட்டால். இனியும் உமாவை இங்கே விட்டிருந்தால் அவளின் உயிருக்கு ஒரு சதவீதம் கூட உத்திரவாதம் இல்லை என்பதை அறிந்துகொண்டவள் உமாவை இந்த வீட்டிலிருந்து வெளியே கிளம்பவேண்டிய நேரத்திற்காக அமைதியாகக் காத்திருந்தாள்.
தந்தையின் உயில் குழம்பிப்போய் இருந்த நித்தியன் மகாலட்சுமியின் முகமாற்றத்தை கவனிக்காமல் விட்டுவிட்டான்.
இரவு ஊருக்கு செல்லவதர்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஆனந்தியின் உந்துதலில் கிளம்பிவிட்டான், அவன் சென்றதும் உமாவின் அறைக்குள் சென்று அவளின் முக்கியமான பொருட்களை ஒரு பெட்டியில் எடுத்துவைத்தாள் அதைக் கட்டிலுக்கு அடியில் மறைத்துவிட்டு அறையைப் பூட்டிவிட்டு அவளின் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற சிறிது நேரத்திலேயே வெளியே வந்த மகாலட்சுமி உமாவை தன் அறைக்குள் இழுத்துச்சொன்றுவிட்டார், இவரின் சத்தம் கேட்டு வெளியே வந்த ஆனந்தி அவரின் அறையை ஒட்டுக்கேட்கும் போதுதான் மிகப்பெரிய உண்மையைத் தெரிந்துகொண்டாள். அதை யாருக்கும் தெரியாமல் போனால் பதிவு செய்து கொண்டாள்.
உமாவை இழுத்துச்சென்ற மகாலட்சுமி, “முதலில் உன் அம்மாவால் தான் பிரச்சனை அடுத்தது நீ பொறந்ததால் என் பையனும் புருசனும் உன்னையே சுத்திசுத்தி வந்தாங்க, அது எனக்குச் சுத்தமா பிடிக்கவில்லை… இது பத்தாதுனு உன்னால் தான் என் புருசன் என்னையே அடிச்சிட்டான் அந்தக் கோபத்தில் தான் மூனு பேரையும் விஷம்வச்சி கொன்னேன், நீ மட்டும் அதிலிருந்து தப்பித்துவிட்ட டீ; நீயும் போயிருந்தா நான் என் விருப்பப்படி சந்தோசமா இருந்திருப்பேன், என் சந்தோசத்தையே கெடுத்துவிட்டையேடீ… நித்தியன் மட்டும் இங்கிருந்து போகட்டும் அப்புறம் உனக்கும் இருக்குடீ”.
“இப்ப என்ன சொன்னீங்க பெரியம்மா? என் அப்பா, அம்மா, பெரியப்பாவை கொன்னது நீங்க தானா? சொல்லுங்க நீங்க தானா?”… “ஆமாம் நான் தான் டீ, இப்ப தான தெளிவா சொன்னான்… திரும்பதிரும்பக் கேட்டா மட்டும் செத்தவங்க உயிரோடு வந்திருவாங்களா என்ன? என இளக்காரமாகக் கூறியவளை அருகில் இருந்த அலங்கார ஜடியால் மண்டையிலேயே அடித்துவிட்டாள் உமா”.
“மூனு பேரையும் கொன்னது மட்டுமில்லாமல் நியாயமா பேசறையா நியாயம்? உன்னைச் சும்மா விடமாட்டேன் டீ, இப்பவே நித்தியன் அண்ணா கிட்ட சொல்லி உன்னையும் அந்தப் பொறுக்கியையும் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன் பாரு” என்றவளை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தாள் மகாலட்சுமி.
“போய் சொல்லு போடீ… புருஷனை கொன்ன எனக்கு இவனைக் கொல்ல முடியாதா என்ன? எனக்குப் பிரச்சனையா யாரு வந்தாலும் கொன்னுட்டு போய்ட்டு இருப்பேன், அது நான் பெத்த பையனா இருந்தாலும் சரி உயிரோடு விடமாட்டேன் என்றவளின் கூற்றில் உமா மட்டுமல்ல ஆனந்தியும் அதிர்ந்து போய் விட்டாள்”.
மகாலட்சுமி கோரமுகத்தைப் பார்த்த ஆனந்தி தன்திட்டத்தை உடனடியா செயல்படுத்த ஆரம்பித்துவிட்டாள்.
மகாலட்சுமியின் அறையைவிட்டு வெளியே வந்த உமா தன் அறைக்குள் சென்று கதறிஅழுதுகொண்டிருந்தாள், அப்பொழுது அங்கு வந்த ஆனந்தி கதவை நன்றாக அடைத்துவிட்டு உமாவின் அழுகையைத் தடுக்காமல் தான் கொடுண்டுவந்த பொருட்களைக் கட்டிலில்வைத்தவள் கீழேயிருந்து பெட்டியை எடுத்து அந்தப் பொருட்களை அதில்வைத்துப் பின் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து உமாவை எழுப்பியவள், “இது உடைந்துபோவதற்கான நேரமில்லை உமா… இங்க பாரு, என்னைய பாரு நீ ஒன்றும் சின்னப் பிள்ளையில்ல, நான் சொல்லறது நல்லா கேட்டுக்கோங்க டீ… இந்தப் பெட்டியில் உனக்குத் தேவையான துணிகள், நகைகள், பணம் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தையும் வைத்திருக்கிறேன், நாங்கள் இந்த வீட்டைவிட்டு வெளியே கிளம்பியதும் நீ இந்த வீட்டைவிட்டு வெளியே போயிடு உமா, இனியும் நீ இங்கே இருந்தால் உன் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை, உன்னுடைய பெட்டியில் ஒரு முகவரி வச்சிருக்கேன் நீ அங்கே போயிடுமா அதுதான் உனக்கு நல்லது” என்றவளிடம்…
உமா, “எதுக்கு அண்ணி? நான் ஏன் இங்கிருந்து போகனும் அண்ணி?”.
“ஏனா எனக்கும் அந்தம்மா பற்றிய அத்தனை உண்மையும் தெரியும், கட்டின புருசனை கொன்னவனை உன்னைக் கொல்ல எவ்வளவு நேரம் ஆகும் உமா? கொஞ்சம் கூட இறக்கமே இல்லாம பெத்த பையனையே கொண்ணுடுவேணு சொல்லறவளுக்கு நீ எந்த மூளை டீ பைத்தியக்காரி?.
தயவு செய்து இந்த வீட்டைவிட்டு வெளியே போயிடுமா, நீனா அவருக்கு ரொம்ப இஷ்டம் டீ, உன்னை இத்தனை நாளா இந்த வீட்டில் விட்டு வச்சதிற்கே அவர் மனதார நொந்து போயட்டார்… உனக்கா இல்லையினாலும் அவருக்காகவாது நீ இங்கே இருந்து போயிடுமா, கொஞ்ச நாளில் உன்னை இங்க இருந்து நாங்களே வந்து கூட்டிகிட்டுப் போயிடறோம் உமா” என்றவளிடம் உமா, “சரி அண்ணி… நான் போயிடறேன், ஆனால் எங்க போக அண்ணி? நேரா பெங்களூர் இரயில் ஏறு உமா அங்கிருந்த பாண்டிச்சேரி போ, அங்க ஒரு *******லேடீஸ் விடுதியில் உன் பெயருக்கு அறை புக் பண்ணிட்டேன், கொஞ்சம் நாள் அங்க இரு அப்புறமா பாஸ்போட் எடுத்துகிட்டு அமெரிக்கா வந்திடு, நீ வந்ததும் நாம அங்கிருந்து வேறயிடத்திற்குப் போய்டலாம்” என்றவளின் கூற்றில் உண்மை விளங்க தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் உமா.
