Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi aval

காவலனின் கைதி அவள் -24

காவலனின் கைதி அவள்-24

 

“அண்ணா அண்ணி சிவா கிட்ட இருந்தா நா உடனே!! இன்பர்மேஷன் தரேன்”, என்றான் ராம்.



Advertisement

 

“சரி வாங்கடா நாம போலாம் “, என்று விக்ரம் முகிலையும் ராகவையும் அழைத்துக் கொண்டு வேகமாக  வீட்டிற்கு வந்தான்.  பெண்கள் அனைவரும் பயத்துடன் அழுது கொண்டிருந்தனர். அப்பாக்கள் மற்றும் அமர் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி உட்கார்ந்திருந்தனர்.

Advertisement

Advertisement

“என்னாச்சு???”, என்று அவசரமாக மூவரும் உள்ளே வந்தனர். அனைவரும் மூவரின் பக்கத்தில் வந்தனர்.

 

Advertisement

“மாமா அக்காவ காணோம் மாமா”, என்றாள் விஷா அழுகையுடன்.

 

“எல்லா இடத்துலயும் தேடிட்டோம் அத்தான்”, என்றாள் அனு அழுதபடி விக்ரமிடம்.

 

“எப்பெல்ல இருந்து காணோம்??”.

 

“இங்கதான் இருந்தா அண்ணா குளிக்க போனோம் வந்து பார்க்குறப்ப ஆள காணோம்”, என்றாள் ஸ்ரீ கலங்கிய குரலில்.

 

“அஜீ.. விஷா.. நீங்க ரெண்டு பேரும் மிருணா ரூம்ல தானே இருந்தீங்க??? அப்ப உங்க கூட தானே இருக்கனும்”, என்றான் ராகவ்.

 

 

“மாமா என் டிரஸ்  பக்கத்து ரூம்ல இருந்தது அங்கேயே குளிக்கலாம்னு போயிட்டேன்”.

 

“நா குளிக்க போறப்ப மிருணா இருந்தா  வந்து பாக்குறப்ப இல்ல”, என்றாள் அனு.

 

“அப்ப மிருணா வேற பாத்ரூம்ல குளிக்க போயிருக்கலாம்ல, எல்லா ரூமையும் பார்த்தீங்களா???”, என்றான் முகில்.

 

“முகில் அவ  காலைலயே!! குளிச்சிட்டு தான் ரூம விட்டு வெளிய வந்தா, எங்கயும் இல்ல”, என்றாள் சங்கவி.

 

“அம்மா நீங்க மிருணாவ பாக்கலையா???”.

 

“இல்ல விக்கி கிச்சன்ல தான் இருந்தோம் அவ சத்தமே வரல”, என்றார் மீனாட்சி.

 

“ஆ… வீட்டு லேண்ட் லைன் போன் அடிக்கிற சவுண்ட் கேட்ட மாதிரி இருந்தது, அப்ப குக்கர் சத்தமும்  வந்தது, அதனால நா சரியா கவனிக்கல, போன யாராச்சும் எடுத்தாங்களா?? இல்லையான்னு எனக்குத் தெரியல டா”, என்றார் வாணி வேகமாக.

 

“ராகவ் டெலிபோன் எக்சேஞ்சுக்கு கால் பண்ணி கேளு, முகில் செக்யூரிட்டி கிட்ட கேளு”, என்று போனை எடுத்து ராம்கு அடித்தான்.

“அண்ணா எனக்கு இன்னும் எந்த இன்பர்மேஷனும் வரல அண்ணி ரொம்ப தூரம் போயிருக்க முடியாது, ஹோட்டலுக்கு வந்துட்டேன் அண்ணி பத்தி நியூஸ் கிடைச்சா உடனே!! மெசேஜ் பண்றேன்”, என்று வைத்தான்.

 

சிறிது நேரம் தலையில் கை வைத்தபடி சோஃபாவில் உக்கார்ந்தான்.’மிரு எங்கடி போன??? சீக்கிரமா என் கிட்ட வந்துருடி’, என்று மனதிலே புலம்பினான்.

 

“விக்ரம் கால் வந்துருக்கு டா ஒன் ஹவருக்கு முன்னாடி”, என்றான் ராகவ் வேகமாக.

 

“அண்ணா செக்யூரிட்டிக்கு சரியா தெரியல எல்லாரும் தூக்கத்துல இருந்து எழுந்து பேசுற மாதிரி இருக்கு”, என்றான் முகில்.

 

“ம்ம்… சரி ராகவ் வா நாம போகலாம்”.

 

“நானும் வரேன்”, என்றனர் முகில் மற்றும் அமர்.

 

“வேணா ரெண்டு  பேரும்  மிருணாவ பக்கத்துல எங்கயாச்சும் இருக்காளான்னு நடந்து போய் தேடுங்க”, என்று ராகவை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

‘கடவுளே! ஹெல்ப் மீ இவன் கிட்ட சிக்காம எப்படியாச்சும்  இங்க இருந்து வீட்டுக்கு போயிடனும்’, என்று மிருணா வேகமாக நடந்து போய்க் கொண்டே கடவுளை வேண்டினாள்.

 

விக்ரமின் போனுக்கு மெசேஜ் வந்தது. ராகவ் எடுத்து பார்த்தான்.  “ராம் பிளேஸ் அனுப்பிட்டான் டா”, என்று இடத்தை சொன்னான். விக்ரம் வேகமாக காரை ஓட்ட ஆரம்பித்தான்.

 

சிறிது தூரம் நடந்து சென்றதும் மிருணாவின் எதிரே கொஞ்ச தூரத்தில் சிவா அவன் ஆட்கள் ஐந்து பேருடன் நின்று கொண்டு இருந்தான். அவனை பார்த்ததும் பயத்தில் அப்படியே!! நின்றாள்.”மிருணா ஊட்டிக்கு வந்ததும் கலர்  கூடி இன்னும் அழகாயிட்ட”, என்று இழித்துக் கொண்டே அவளை நோக்கி நடந்து வர ஆரம்பித்தான்.

 

அவனுக்கும் மிருணாவுக்கும் இடையில் ஓர் கார் வேகமாக வந்து நின்றது. சிவா அதிர்ச்சியுடன் சற்று தள்ளி நின்றான்.மிருணா பயத்துடன் காரை பார்த்தாள். சிவா நிற்கும் பக்கம் ராகவ் கோவமாக இறங்கினான். மிருணாவின் பக்கம் விக்ரம் கோவமாக இறங்கினான். மிருணாவிற்கு விக்ரமை பார்த்ததும் சந்தோஷம், அழுகை, சோகம், நடுக்கம், பயம் அனைத்தும் கலந்த கலவையாக அவனைப் பார்த்தாள்.

 

விக்ரம் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். மிருணாவும் அவன் மார்பில் புதைந்து,”ரொம்ப பயந்துட்டேன் மனு”, என்றாள் நடுக்கத்துடன்.

 

அவள் முகத்தை இருகைகளால் நிமிர்த்தி நெற்றியில் இதழ் பதித்து,” நா இருக்குறப்ப என்ன பயம்?? ஆமா இங்கே என்ன பண்ற??”, என்றான் நெற்றி முட்டி.

 

“டேய்!!”, என்று கர்ஜித்தான் சிவா. மிருணா பயத்தில் நடுங்கியபடி சிவாவை திரும்பிப் பார்த்தாள்.

 

“அட சும்மா இரு டா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குறப்ப எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க??”, என்றான் ராகவ் நக்கலாக.

 

“உங்கள சும்மா விட மாட்டேன் டா அவ என் மிருணா “, என்று கர்ஜனையுடன் கத்தியை எடுத்தான்.

 

“டேய்!! அண்ணனும் தம்பியும் சேர்ந்து கிட்டு எங்க அண்ணியயே!! சிவா அண்ணா கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறீங்களா???”, என்று குரு ராகவின் சட்டையை பிடித்தான்.ராகவும் குருவின் சட்டையை பிடித்தான்.

 

விக்ரம் மிருணாவை பின்னால் சீட்டில்  உட்கார வைத்துவிட்டு கதவை மூடினான். ராகவ் மற்றும் குரு இருவரும் உருண்டு பிறண்டு அடித்து கொண்டனர்.

 

“டேய்!! உங்கள இங்க வேடிக்க பார்க்காவ கூட்டிட்டு வந்து இருக்கேனா??  அடிங்க டா”,  என்றான் சிவா ஆத்திரமாக அவனின் ஆட்களிடம். சிவாவின் ஆட்கள் விக்ரமை தாக்க வந்தனர். விக்ரம் நால்வரையும் புரட்டி எடுத்துவிட்டு குருவை இழுத்து அறைந்தான்.

 

 

“டேய்!! என்னையையே!! அடிச்சுட்டல உன்ன..”, என்று சிவாவின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி குத்த வந்தான். மிருணா பயத்துடன் வெளியே நடப்பதை பார்த்தாள்.

 

ராகவ் மற்றும் விக்ரம் அவன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி தூக்கி எறிந்தனர். “ஏய்!! சிபிஐ அவ என் மிருணா ஒழுங்கா விலகிப் போயிடு என் வழில குறுக்க வராத”, என்றான் காரில் இருந்த மிருணாவை சுட்டிக்காட்டி.

 

“அவ என்னவள் டா”, என்றான் நக்கலாக.

 

“டேய்!! இன்னும் ரெண்டு நாள் குள்ள அவ கழுத்துல தாலிய கட்டி என் பொண்டாட்டியாக்கி காட்டுறேன் டா”, என்று உறுதியாக கர்ஜித்தான்.

 

“அதையும் பாக்கலாம் டா அவள அடுத்த முற நீ பாக்குறப்ப என் பொண்டாட்டியா தான் பார்ப்ப”, என்றான் அழுத்தமாக.

 

“அதையும் பாக்கலாம் டா நீ ஜெய்கிரியா??? இல்ல நா ஜெயிக்கிறனான்னு??”, என்றான் ஆத்திரமாக.

 

“பாத்துடா தோத்துட்டா சிலைல வைக்கணுமா?? அதையும் சொல்லிடு”, என்றான் ராகவ் நக்கலாக. விக்ரம் நக்கலாக சிரித்தான்.

 

“என் அண்ணே! ஜெயிக்கப் பிறந்தவர் டா உன் அண்ணேன் எங்க அண்ணேன் கால்ல விழுகுற மாதிரி சிலைய பண்ண சொல்லு”, என்றான் குரு நக்கலாக.

 

“இப்ப கூட உன்ன முடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது”, என்று சிவாவை பார்த்து சிரித்தான். ரோட்டில் நிறைய பேர் இவர்களை பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர்.

 

“நானும் அதையே! தான் சொல்றேன்”, என்று சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும்போதே ரோட்டில் பல ஆள்கள் நடமாட்டமும் கார்கள் போகமுடியாமல் ஹாரனையும் அடித்துக்கொண்டே இருந்தனர்.

 

“விக்ரம் டிராபிக் ஆயிடுச்சு டா”, என்றான் ராகவ் மெதுவாக.

 

“அண்ணே! ஆள் நடமாட்டம் அதிகமாகிச்சு நாம கிளம்பலாம்”, என்றான் குரு.

 

“கூடிய சீக்கிரம் மிருணாவ தூக்கி காட்டுறேண்டா, உன் ஏரியா குள்ள வர முடியாதுன்னு நினைச்சல்ல  நாம நிக்கிறதே!!  உன் ஏரியா எல்லைல தான் ஒரு போன் கால்ல என் மிருணாவ வர வச்ச எனக்கு அவள எப்படி தூக்கனும்னு நல்லாவே தெரியும் டா”, என்றான் உறுதியாக.

 

“உன்னால முடிஞ்சத  பாரு டா”.

 

“அதையும் பார்க்க தானே போற”, என்றான் கோபமாக.

 

“அண்ணே!! வாங்க போலாம்”, என்று குரு இருவரையும் ஆட்காட்டி விரலை நீட்டி மிரட்டிவிட்டு சிவாவை இழுத்து சென்றான்.

 

“விக்ரம் கார எடுடா”, என்று ஏறி உட்கார்ந்தான். விக்ரம் கோவமாக டிரைவர் இருக்கையில் உட்கார்ந்து காரின் கதவை அரைந்து சாற்றி விட்டு காரை எடுத்தான். அவன் கோபம் உணர்ந்து ராகவ் அமைதியாக போனில் வந்த மெசேஜை  பார்த்தான்.

 

மிருணாவாள் அமைதியாக இருக்க முடியாமல்,”என்னாச்சு??? என்ன சொன்னா அந்த நாதாரி சிவா??”, என்றாள் கோவமாக.

 

“உனக்கு வெளிய நடந்த எதுவும் கேட்கலையா???”, என்றான் ராகவ் திரும்பிப்பார்த்து.

 

“இல்ல விண்டோ மூடியிருந்தது, ஓபன் பண்ண முடியல கார் லாக்ல இருந்தது போல ராகவ்”, என்றாள்  வருத்தமாக.

 

“நா தான் லாக் போட்டேன் நீ எதுக்கு இங்க வந்த??  பாஸ்டர் என்கிட்டயே! சவால் விடுறான், ஜெயிக்க விடுவானா??”, என்றான் காரின் ஹாரன்  குத்தியபடி.

 

“என்ன சவால்??”, என்றாள் குழப்பமாக.

 

“அதெல்லாம் உனக்கு எதுக்கு?? நா கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடி எதுக்கு இங்க வந்த??”, என்றான் கோவமாக.

 

“அவன் அம்மா அப்பாவ பிடிச்சு வச்சுருக்குறதா சொன்னான், விஷா வந்த மாதிரி அவங்களும் வந்திருப்பாங்கலோன்னு நினைச்சு வந்துட்டேன்”, என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

 

“எங்க யார்கிட்டயும் சொல்லாம இப்படி கிளம்பி வந்துருக்க”, என்று கோவமாக அவளைத் திரும்பி முறைத்து விட்டு திரும்பினான்.

 

“நா தான் கிளம்பறதுக்கு முன்னாடி உங்களுக்கு மெசேஜ் அனுப்பிட்டு தானே! வந்தேன், அப்ப நா அனுப்புன மெசேஜ் பாக்கவே! இல்லையா?? நீங்களா தான் வந்தீங்களா??”, என்றாள் சோகமாக.

 

“எங்க மெசேஜ் வந்தது?? ராகவ் போன எடுத்து பாருடா”, என்றான்.

 

ராகவ் எடுத்து பார்த்துவிட்டு,” வந்து இருக்குடா”, என்றான் கவலையாக.

 

“ஏன் டி அத ஒரு கால் பண்ணி சொல்ல மாட்டியா??”, என்று கோபமாக வண்டியை வீட்டின் உள்ளே! நிறுத்தினான்.

 

“போன் ட்ரை பண்ணுனேன் லைன் போல அதான் மெசேஜ் பண்ணுனேன்”, என்று இறங்கினாள்.

 

“அப்ப வீட்டில யார்கிட்டயாச்சும் சொல்லி இருக்கலாம்ல”, என்றான் வேகமாக இறங்கி.

 

“அங்க என் அப்பா அம்மா ஆபத்துல இருக்குறப்ப என்னால எப்படி ஒரு ஒருத்தரா கூப்பிட்டு சொல்லமுடியும்?? மெசேஜ் அனுப்புனதே!! பெரிய விஷயம் அதயே!! பார்க்கல என்னைய குத்தம் சொல்ல வந்துட்டான்”, என்று முணுமுணுத்தபடி வீட்டின் உள்ளே சென்றாள்.

 

விக்ரம் முறைத்துக் கொண்டே நின்றான். “எவனோ!! டீ வித்துக்கிட்டு வந்துருகான் நாம செக்யூரிட்டிக்காக போட்டவனுங்க குளிருதுன்னு டீ குடிச்சுருக்கானுங்க, குடிச்ச கொஞ்ச நேரதுல தூங்கிட்டானுங்க டா, அந்த சிவா தான் ஆளு அனுப்பிருக்கான் அதுனால தான் மிருணா போனது யாருக்கும் தெரியல “, என்றான்.

 

 

“ம்ம்… சரி “, என்றான். இருவரும் உள்ளே சென்றனர்.

 

“எங்க போன???”, என்றனர் அனைவரும் பதறியபடி.

 

மிருணா நடந்த விஷயத்தை சொன்னாள்.”அப்பாவும் அம்மாவும் வரவே!! இல்ல நா தான் தேவையில்லாம அங்க போயிட்டேன், அங்க போய் சிவா பார்த்ததும் தான் உண்ம தெரிஞ்சது, அத்த.. அம்மா.. பசிக்குது”, என்றாள் பாவமாக.

 

“இருடா ரெடி பண்ணிறோம்”, என்றார் கோதை.

 

“உன்ன காணாங்குற டென்ஷன்ல இருந்தனால சமைக்கவே! மறந்துட்டோம் டா”, என்றார் மீனாட்சி.

 

“கொஞ்சம் பொறுத்துக்கோ!! “, என்றார் வாணி. மூவரும் உள்ளே சென்றனர். ராகவ் சக்கரவர்த்திக்கு போன் செய்து மிருணா கிடைத்த  விஷயத்தை சொல்லிவிட்டு வைத்தான்.

 

 

“ரொம்ப பயந்துட்டியா டி??”, என்றாள் ஸ்ரீ.

 

 

“அந்த சிவா உன்னை எதுவும் பண்ணலையே!!”, என்றான் அமர் பதட்டமாக.

 

“அக்கா அடி எதும் பட்டுருக்கா??”, என்றாள் பயத்துடன்.

 

 

அனு மிருணாவிற்கு குடிக்க தண்ணீரை குடுத்தாள். அதை குடித்துவிட்டு,”சிவாவ பார்த்ததும் லேசா பயமா இருந்தது பட் நா ஹாப்பி “, என்றாள் சந்தோஷமாக.

 

“என்ன??”, என்றனர் அனைவரும் குழப்பமாக.

 

“இத்தன நாளா வெளிய போகாம கைதி மாதிரி வீட்டுக்குள்ளே! இருந்துட்டு, வெளிய போயிட்டு வந்தது எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு”, என்றாள் சிரிப்புடன்.

 

விக்ரம் கோவமாக பூ ஜாடியை எடுத்து  உடைத்து,” உன்ன அங்க இருந்து காப்பாத்த போராடுனா? நீ வெளிய போயிட்டு வந்தது ஜாலியா இருக்குன்னு சொல்லிட்டு இருக்க”, என்றான் ஆத்திரமாக.

 

அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர் ராகவை தவிர.”உனக்காக பதறி எல்லாரும் வீட்ல அழுதுட்டு இருக்காங்க ஆனா உனக்கு அதெல்லாம் பெருசா தெரியலல்ல”, என்றான் கோபமாக.

 

பெண்கள் பயத்துடனே!! பார்த்தனர். முகிலுக்கும் அவன் கோவத்தை பார்த்ததும் பயம் வந்தது .”போதும் விக்ரம் நிறுத்து நீ எனக்கு ஹெல்ப் பண்ண தான் நா இல்லைன்னு சொல்ல மாட்டேன், என்னைய கண்ட்ரோல் பண்ண நினைக்காத, நா இவங்கள அழ வைக்கணும்னு நினைக்கல, என் அப்பா அம்மா வச்சு மிரட்டுறப்ப நா பயப்பட தான் செய்வேன், நா வேணும்னு வெளிய போகல, நா ஒன்னும்  ஜெயில்ல இருக்க கைதி கிடையாது”, என்றாள் கோபமாக.

 

 

“உன்ன கைதியா தான் இங்க வச்சி இருக்கேன், உனக்கு இந்த வீட்ல எங்க வேணாலும் போலாம் ஆனா வீட்ட விட்டு வெளிய கால் வைக்கக் கூடாது, நா சொல்றது புரிஞ்சதாடி”, என்று கர்ஜித்தான்.

 

மிருணாவின் கண்கள் கலங்கியது,” இதுக்கு மேல நீ எதுவும் சொல்ல வேணா, நீ சொன்னது எனக்கு நல்லாவே!! புரிஞ்சுருச்சு, சிறகடிச்சு  பறந்த என்னைய ஒருத்தன் வலுக்கட்டாயமா ஜோதியாக்க நினைக்கிறான், நீ சிறை பிடிச்சு கைதி ஆக்கிட்ட, இப்ப சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவை ஆயிட்டேன் நா”, என்று அழுகையுடன் அவள் அறைக்கு ஓடினாள்.

 

விக்ரம் தலை முடியை அழுத்தி கோதி தன்னை சமன் படுத்துக்கொண்டான். அனைவரும் போறவலை கவலையாக பார்த்தனர்.”விக்ரம் என்ன நினைச்சுட்டு இருக்க??? முன்னாடி அவ வெளிய போனானு  எல்லார் முன்னாடியும் வச்சு அடிச்சுருக்க, இப்ப கைதி அது இதுன்னு பேசுற உன் தங்கச்சிய  நா அடிச்சா சும்மா இருப்பியா??”, என்றான் கோவமாக.

 

“அமர் ஓவரா பேசாத அவ பண்ணுனது தப்பு மறுபடியும் அப்படி பண்ண கூடாதுன்னு தான் நா அவகிட்ட இப்படி நடந்துகுறேன்”, என்றான் கோவமாக.

 

“மிருணா ஒன்னும் மிஷின் இல்ல ரத்தமும் சதையும் நிறைஞ்ச மனுசி, அவளுக்கும் ஆச , பாசம் எல்லாம் இருக்கு, அப்பா அம்மா அந்த சிவா கிட்ட இருக்காங்கன்னு சொல்றப்ப பதரி போக தான் செய்வா, அப்ப கூட உனக்கு மெசேஜ் அனுப்பி இருக்க ஆனா நீ மெசேஜ் பாக்கல இது உன் தப்பு தானே!!”, என்றான் ஆத்திரமாக.

 

“போதும் அமர் நா அடுத்து சிவாவ என்ன பண்ணலாம்னு ராம் கிட்ட பேச போனா, மிருணாவ காணோம்னு போன் பண்ணி சொல்லுறீங்க,  வீட்ல இத்தன பேர் இருந்தும் அவ வெளியே போயிருக்கா, அவள நீயோ!!  மத்தவங்களோ!!  யாருமே! கவனிக்கல, அவள காணான்னு சொன்னதும் ஃபோன பார்க்க நேரமில்லை, அவள தேடுறது தான் எனக்கு முக்கியம்னுபட்டது”,  என்றான் கோவமாக.

 

“அப்ப எதுக்கு மிருணா கிட்ட லவ்வ சொல்ல மாட்டேங்குற?? நீ இப்படி பேசுனா அவ எப்படி உன் லவ்வ புரிஞ்சுப்பா?? உனக்கு என்ன அப்படி ஒரு ஈகோ லவ்வ சொல்ல”, என்றான் முறைப்புடன்.

 

“விக்ரம் மிருணாவ ரொம்ப ஹர்ட் பண்ற டா, நீ இப்ப பேசினது எனக்கே! ரொம்ப கஷ்டமா இருக்கு”, என்றான் ராகவ்.

 

“மாமா என் அக்கா எல்லாத்தையும் அவ கிட்ட சொல்லனும்னு நினைப்பா, உங்க கோவத்த பார்த்ததும் எனக்கு பேசவே!! ப..ய..மா இ..ரு..க்..கு”, என்றாள் விஷா வார்த்தைகள் தண்டியடித்தபடி.

 

“அண்ணா “, என்று ஸ்ரீ ஆரம்பிக்கும்போதே!!,

 

“போதும் கொஞ்சம் நிறுத்துங்க, இப்ப நடக்குற பிரச்சன தெரியாம பேசிட்டு இருக்கீங்க, அந்த சிவா  மிருணாவ அவனோட மிருணான்னு சொல்றான், அவள இன்னும் ரெண்டு நாள் குள்ள தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவேன்னு என்கிட்டயே! சவால் விடுறான், நானே! அத எப்படி சமாளிக்கிறதுன்னு இருக்கேன். ?? இவ இப்படி சொல்றா எனக்கு கோவம் வராதா?? நா முடிவு பண்ணிட்டேன் என்ன பண்ணனும்னு “, என்று சக்கரவர்த்திக்கு போன் செய்து நடந்த அனைத்தையும் சொல்லி ரிஜிஸ்டரை வீட்டிற்கு உடனே! அழைத்து வரச் சொன்னார்.

 

“அத்தான் மிருணா கிட்ட சொல்லிட்டு ஏற்பாடு பண்ணலாமே!!”, என்றாள் அனு தவிப்புடன்.

 

“விக்ரம் மிருணா ரொம்ப ஹேர்டாவா டா”, என்றான் அமர் கெஞ்சலாக.

 

“அவள நா சரி பண்ணிக்கிறேன்”, என்று சொல்லிவிட்டு அம்மாக்களை அழைத்து விஷயத்தை சொன்னான். அம்மாக்கள் லக்ஷிமணன் மற்றும் கவிதாவிடம் பேசி சம்மதம் வாங்கினார். காலாண்டரில் நேரம் பார்த்தனர்.

 

“விக்ரம் பாட்டி தாலி இருக்கு மிருணா கழுத்துல போட்டுரு”, என்றார் மீனாட்சி.

 

“சரி மா”.

 

அப்பாக்கள் ரிஜிஸ்டர் மற்றும் ஐயரை அழைத்துக் கொண்டு வந்தனர். மிருணாவை அழைத்து வர அம்மாக்கள் மூவரும் மேலே சென்றனர்.

 

ஜெயிக்கப்போவது யார்??? சிவாவா?? அல்லது விக்ரமா??? மிருணா கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்வாளா??? கல்யாணம் முடிந்தாலும் வர போகும் சண்டையை விக்ரம் அறிவானா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்……………….

கைதியின் சிறை தொடரும்……………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!