Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? – 36.1

அத்தியாயம் 36.1: 

 

 

 



Advertisement

 

 

 

Advertisement

சாமியிடம் கூறிவிட்டு சென்றவள் தனத்தின் அண்ணனிடம் மீன் இருக்கா என்று விசாரிக்க அவரோ, “அயிரமீன் இரண்டு கிலோ வரும்; கெண்டை  ஒரு கிலோ வரும் இது தான் கடைசியா இருக்கு உமா, ஒரே அயிட்டமா இல்லை ம்மா” என்றவரிடம்… 

Advertisement

 

 

 

Advertisement

 

“சரி பரவாயில்லை அண்ணா அதையே தாங்க , சாமி அண்ணா வந்ததும் காசு தறேன்”. 

 

 

 

“நீ போய் மசாலா ரெடி பண்ணு பசங்க ரெண்டு பேர் இருக்காங்க அவங்களை வச்சி சுத்தம் பண்ணி வீட்டுக்கு கொண்டாந்துதறேன் உமா”. 

 

 

 

 

“சரிங்க அண்ணா, இந்தத் தனத்தைக் கூட்டிகிட்டுச் சாய்ந்திரம் சாப்பிட வந்துடுங்க ண்ணா” எனக்கூறியவள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். 

 

 

 

 

 

அங்குச் சென்றவள் புது மனமக்கள் மூவருக்கும் சிற்றுண்டி கொடுத்துவிட்டு அங்கிருந்தவர்களின் உதவியுடன் விருந்துக்குத் தேவையான மசாலாவை வறுத்து அம்மியில் அரைத்துக்கொண்டாள். 

 

 

 

 

 

கடைக்குச் சென்ற சாமி உமா கூறிதைவிட இரண்டிலும் இரண்டு கிலோ அதிகமாகவே வாங்கியவர் விரைவாகவே வந்துவிட்டார். 

 

 

 

 

 

மசாலா அரைத்த சிறிது நேரத்திலேயே சாமி ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் கொண்டுவந்துவிட, “பரவாயில்லை அண்ணா ரெண்டுலையும் அதிகம்தான் வாங்கியிருக்கீங்க”… 

 

 

 

 

 

 

 

“அதிகமா இருந்தாகூட பரவாயில்லை உமா பத்தலைனா சிரமமா போய்டும்னு தான் இரண்டு கிலோ அதிகமாகவே வாங்கினேன்” என்றவரிடம் அதற்கான பணத்தைக் கொடுத்தவள், தனத்தின் அண்ணனுக்குப் பணத்தைக் கொடுக்குமாறு கூறி அவருக்கான பணத்தையும் கொடுத்து அனுப்பிவைத்தாள். 

 

 

 

அந்தக் கறியை அதை மேலும் ஒரு விறகடுப்பில் கூட்டி மண்சட்டியில் வைக்க இரண்டும் இரண்டு அடுப்பில் தயாரானது. 

 

 

 

 

 

 

இடையில் தனத்தின் தமையன் மீன் கொண்டு வந்துவிட அவரிடம் சாமியிடம் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறியவள் அதற்குத் தேவையான மசலா செய்து வைத்தாள், ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் இறக்கியவுடனே அதே அடுப்பில் இரண்டு மீனையும் வைத்துவிட்டாள்; அவை தயாரானதும் ரசமும் சாதமும் செய்து முடிக்க மணி நான்கு ஆகிவிட்டது. 

 

 

 

 

 

 

 

அதன் பின் அனைவரும் சென்று குளித்துவிட்டு வரவும் ஆறு, குளம், தோப்புக்கு எனச் சுற்றிவிட்டு வந்து உறங்கிக்கொண்டிருந்த தம்பதிகள் எழுந்துவரவும் சரியாக இருந்தது. 

 

 

 

 

 

 

ஏற்கனவே தங்களை ஒரு வேலையும் செய்யவிடாததில் வருத்தம் கொண்ட அம்மு, மல்லி இவ்வளவு வேலையையும் கஷ்டப்பட்டுச் செய்த உமாவை நினைத்து கவலையாகவும் கொஞ்சம் கர்வமாகவே உணர்ந்தனர். அதைவிட அவளின் சமையலை பற்றித் தங்களின் கணவன்களிடம் கூறி பெருமை கூறிக்கொண்டனர். 

 

 

 

 

 

 

 

 

ஏற்கனவே உமாவின் கைவண்ணத்தில் உண்டிருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தவர்கள் உமாவின் சமையலில் எப்போதும் உண்பதைவிடச் சற்று அதிகமாகவே உண்டார். அதைப் பற்றி அவளிடம் கூறவும் செய்தனர். 

 

 

 

 

 

 

 

சமையல் செய்பவர்களின் எதிர்பார்பே தான் சமைத்தை உண்பவர்கள் அவற்றைப் பற்றி ஒரு வார்த்தையாவது கூறவேண்டும் என்பதுதான், அப்போதுதான் சமைப்பவர்களுக்கும் சமையலில் ஆர்வம் வரும், விதவிதமாகச் சமைக்கும் தோனும். 

 

 

 

முதலில் புதுமனமக்களுக்கு விருந்து பரிமாறியவள் அவர்கள் உண்டதும் மற்றவர்களுக்குப் பரிமாறினாள், அவர்கள் உண்டு முடிக்கவும் வெற்றியின் குடும்பத்தினர் வரவும் சரியாக இருந்தது. 

 

 

 

 

 

 

வந்தவர்களை உபசரித்தவள் அம்மு மற்றும் மல்லியை வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பரிமாறினாள், இவர்கள் உண்டு முடிக்கும் வரையில் கூட வெற்றி அங்கு வரவேயில்லை… அதுவரை இருந்த உமா சந்தோசமான மனநிலையானது மாறி அழுகைவருவது போல் இருக்க முயன்று கட்டுப்படுத்தியவள் வெற்றியின் வரவிற்காக வாயிலையே பார்த்தபடி காத்திருந்தாள் உமா. 

 

 

 

 

 

 

சகுந்தலா, “எல்லோரும் புறப்பட்டாச்சி உமா; சூடா இருக்கும் போதே நீயும் வந்து சாப்பிடு உமா”. 

 

 

 

 

 

 

 

“பசிக்கவில்லை சகும்மா, கொஞ்ச நேரம் ஆகட்டும் அப்புறமா சாப்பிடறேன்; நான் போய் இருக்கப் பாத்திரத்தை ஒதுக்கி வச்சிட்டு வந்திடறேன் நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க ம்மா” என்றவள் மீதியிருந்த உணவை வேற பாத்திரத்தில் எடுத்துவைத்துவிட்டுச் சமைத்த பாத்திரங்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள், உதவிக்கு வந்த ஆனந்தியிடம் வீட்டை சுத்தம் செய்யச் சொல்லியவள் மண்பாத்திரங்களை அவளே சுத்தம் செய்தாள். அதன் பிறகும் வெற்றி வராததால் அவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள் உமா. 

 

 

 

 

 

 

 

காலையிலேயே மார்க்குடன் பாண்டிச்சேரி சென்ற வெற்றி அங்கிருந்த வேலையை முடிக்கவே மாலை நான்கு ஆகிவிட அங்கிருந்து அல்லியூர் திரும்பி வர மணி ஆறை தொட்டுவிட்டது. வந்தவன் நேராக வீட்டிற்குச் செல்ல அங்கு யாரும் இல்லாததால் குளித்துவிட்டு கீழே வரவும் உமா அவனை அழைக்கவும் சரியாக இருந்தது. 

 

 

 

 

 

 

 

 

முதல் அழைப்பிலேயே போனை எடுத்தவனைப் பேசவிடாமல் பொறிந்து விட்டாள் உமா. 

 

 

 

 

 

 

 

 

“உங்களுக்காக எவ்வளவு நேரமா காத்துகிட்டு இருக்கிறது? எங்க இருக்கீங்க? சீக்கிறமா வீட்டுக்கு வாங்க” என்றவுடனே போனை வைத்துவிட்டாள். 

 

 

 

 

 

 

இவள் வெற்றியிடம் பேசியே கேட்ட மதன் சிரித்துக்கொண்டே சென்றவன் ஜெயந்தியிடம் கூறி அவள் மற்றவர்களிடம் கூற அவர்கள் அனைவரும் அவசரமாகத் திட்டம் போட்டு சினிமாவுக்குச் செல்வதாக உமாவிடம் கூற, உமா தான் வரவில்லை என்று மறுத்துவிட்டாள் அதைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் வெற்றி வருவதற்குள் காங்கேயம் சென்றுவிட்டனர். 

 

 

 

 

 

 

 

உமா திட்டியதால் அத்தனை நேரம் இருந்த மண அழுத்தம் குறையச் சிரித்தவன், மார்க்குக்கு அழைத்து செய்யவேண்டியதைக்கூறி அந்தவேலைமுடித்துவிட்டு உமாவீட்டிற்குத் தன்னை வந்து சந்திக்குமாறு கூறி வைத்தவன் உடனடியாக உமாவை கான தன்னுடைய ராயலை எடுத்தவன் வாயில் பாடலை முனுமுனுத்தபடி உல்லாச மனநிலையில் கிளம்பிவிட்டான் வெற்றிவேந்தன். 

 

 

 

 

 

 

 

மார்க்குடன் பேசியவன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உமாவின் வீட்டில் இருந்தான். 

 

 

 

 

 

 

வரவேற்றவளிடம் வெற்றி, “யாரோ என்னைக் காலையிலிருந்து தேடினாங்க போல் இருக்கே!” என்று ஆச்சரியம் போல் கேட்டவனிடம் பொறிந்துவிட்டாள் உமா. 

 

 

 

 

 

 

“ஆமாம் காலையில் அவங்க வரும் போதே தேடினேன், நீங்க ஏதாவது வேலையா போயிருப்பீங்கனு நினைத்து உங்களைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணவேணாம்னு விட்டுவிட்டேன். சரி சாய்ந்திரமாவது வருவீங்கனு உங்களுக்குப் பிடிச்ச அயிரமீன் குழம்பும் சிக்கன் சுக்காவும் வச்சியிருந்தேன் தெரியுமா? நீங்க வரவேயில்லை, எவ்வளவு வேலையிருந்தாலும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரதெரியாதா? வரமுடியாத சூழ்நிலையினா போன் பண்ணி சொல்லவேண்டியது தான எனக் கோபமாக ஆரம்பித்தாள் ஆதங்கத்தில் முடிக்க வெற்றி அவளைக் கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாகச் சமாதானம் செய்தான்”. 

 

 

 

 

 

 

 

அதில் சமாதானம் ஆனவள், “நீங்க இருங்க நான் போய் எடுத்துவச்ச மட்டனையும் சாதத்தையும் சூடுபண்ணி கொண்டாறேன் அதுக்குள்ள போன கையில தூக்கிவச்சிக்காதீங்க என்றவள் அவனின் போனையும் கையோடு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்”. 

 

 

 

 

 

உமா சென்றதும் சிரித்துக்கொண்டே கயிற்றுக் கட்டிலில் படுத்தவன் வேப்பமரகாற்றும் இருவாட்சி மற்றும் மகிழம்பூவின் வாசத்தில் லேசாகச்  கண்ணயர்ந்துவிட்டான். உள்ளே சென்றவள் அடுத்தப் பதினைந்து நிமிடத்தில் வெளியே பாயைவிரித்து அதில் சமைத்த அத்தனை பதார்த்தங்களையும் அடுக்கியவள் தோட்டத்தில் இருந்த வாழையிலையை அறுத்துவந்தபின் அவனை எழுப்பி உணவை பரிமாற ஆரம்பித்தாள். 

 

 

 

 

 

 

 

 

 

முகம் கைகால் கழுவிவிட்டுவந்தவன் வாசம் பிடித்ததும் உமாவிடம்,”வாசம் நன்றாக இருக்கு உமா; இன்னைக்கு ஒரு பிடிபிடிக்க வேண்டியது தான் என்றவன் அவள் வைத்த அத்தனையும் ஒரு பிடிபிடித்தான் அதில் மனநிறைந்தவள் வெற்றிக்கு பிடித்த அயிரமீனை இலையில் அல்லிநிறைத்தாள்; எல்லாத்தையும் எனக்கே வச்சிட்டு நீ என்னத்த சாப்பிடறதுக்கு உமா? என்றவன்  கைகளை கழுவ சென்றுவிட, அதுக்குள்ள சாப்பிட்டுவிட்டீங்க… வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டேன் மகாம்மா, வா வந்து நீயும் சாப்பிடு உமா என்றவன் அதோடில்லாமல்  உணவை இலையில் வைத்து தன் கைகளாலே அவளுக்கு ஊட்டிவிட்டான்”. 

 

 

 

 

 

 

 

 

அதில் கண்களில் இருந்து கண்ணீர் வர வாங்கிக்கொண்டவளின் கண்ணீரை துடைத்தவன் எதுவும் கேட்காது ஊட்டிவிட்டான், உமாவை இமைக்க மறந்து வெற்றியையும் பார்த்துக்கொண்டிருந்தாள். 

 

 

 

 

 

அப்பொழுது அங்கு வந்த மார்க்கு இந்தக் காட்சியைத் தன் போனில் பதிவுசெய்துகொண்டான். சிறுது நேரம் காரிலேயே இருந்தவன் அவர்களின் அழகான தருணங்களைப் புகைப்படம் எடுத்தவன் நேராக அவர்களின் முன் நின்றான். 

 

 

 

 

 

 

 

மார்க்கை வறவேற்றவர்கள் உமா குடிக்கத் தண்ணீர் கொடுத்தவள், “கைகழுவிட்டு வாங்க அண்ணா சாப்பிடுவீங்க; இல்ல ம்மா நான்ஸீ எனக்காகச் சாப்பிடாம இருப்பா ம்மா, நான் வீட்டிக்குப் போய்ச் சாப்பிட்டுகிறேன் ம்மா” என்றவனிடம் வெற்றி, “ஏண்டா பொய் சொல்லற? நீ போய் தான் அவளுக்குச் சமைக்கனும்னு சொல்லு என்றதும் அசடுவழிந்தவன் அதுதான் தெரியுதில்ல அப்புறம் ஏண்டா உமா முன்னாடியே மானத்த வாங்கற” என்றதும் வெற்றி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான், அதில் உமா கூடச் சிரித்துவிட்டாள். 

 

 

 

 

 

அவள் உள்ளே சென்றது இவர் ரகசியமா எதையோ பேசியவர்கள் திரும்பிவந்தவளை பார்த்ததும் அடங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் கிளம்பிய மார்க்கிடம் கைகளில் வைத்திருந்த கேரியரை கொடுத்தாள். 

 

 

 

 

 

 

 

அதை வாங்கியன், “என்ன ம்மா இது இவ்வளவு பெரிய கேரியர்? அது ஒன்றும் இல்லை ண்ணா, உங்களுக்கும் நான்ஸுக்கும் சாப்பாடு வச்சிருக்கேன் போனதும் சாப்பிட்டுவிடுங்க திரும்பவும் சூடு பண்ணாதீங்க” என்றவளிடம் “எதுக்கு ம்மா உனக்குச் சிரமம்? நான் போய்ப் பார்த்துக்கிறேன்”. 

 

 

 

 

 

 

 

“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை ண்ணா, உங்களுக்கு மட்டும் என்ன தனியாவா செஞ்சேன் எல்லாரும் செஞ்சதுதான் ரெண்டு பேரும் வெளியே சுத்தினதால் கண்டிப்பா நீங்க போய் சமைக்கமாட்டீங்க வெளியில் தான் வாங்குவீங்க, அது உடம்புக்கு நல்லதில்லை அதனால் இதைச் சாப்பிட்டு என்னுடைய கைபக்குவம் எப்படியிருக்குனு சொல்லுங்க” என்றவளிடம்… “கண்டிப்பாகச் சொல்லறேன் உமா அப்ப நான் கிளம்பறேன்” எனக்கூறியவன் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டான். 

 

 

 

 

 

 

 

அவன் சென்றதும் உமா, “உங்க தம்பிகளைத் தேனிலவுக்கு எங்க அனுப்ப முடிவு செஞ்சியிருக்கீங்க? இப்பவே அனுப்பினா தான் போவாங்க இல்லனா எதாவது காரணம் சொல்லி போகமாட்டாங்க வெற்றி”. 

 

 

 

 

 

 

 

“நான் இன்னும் இடம் முடிவு பண்ணவில்லை உமா, அவனுங்ககிட்ட கேட்டுகிட்டு அந்த இடத்திற்கு டிக்கெட் போட்டுக் கையில் கொடுத்தா போய்டுவாங்க இல்லைனா அவங்க போகமாட்டாங்க… எனக்கும் அதுதான் சரினு படுது அப்படியே பண்ணீடுங்க, சரி நீங்க கொஞ்சம் படுங்க நான் போய் இருக்கப் பாத்திரத்தை ஒதுக்கி வச்சிட்டு வந்திடறேன்” என்றவள் சென்று ஒதுக்கி வைத்துவிட்டு வரவும் சினிமா சென்றவர்கள் வரவும் சரியாக இருந்தது. 

 

 

 

 

 

 

சிறியவர்கள் இங்கேயே தாங்கிக்கொள்ள மற்றவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். 

 

 

 

 

 

 

 

அடுத்த நாள் மதியத்திற்கு மேல் குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு வந்தவர்களை அன்று இரவே வெற்றி தேனிநிலவிற்காக வெளிநாடு அனுப்பி வைத்தான். 

 

 

 

 

 

 

விடிந்ததும் நாச்சியார் மதன், ஜெயா, சகுந்தலா மற்றும் சந்திரனுடன் உமாவீட்டிற்குச் சென்றவர் நித்தியன் தம்பதியினரிடம் முறைப்படி உமாவை பெண்கேட்க சென்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காலையிலேயே வீட்டிற்கு வந்தவர்களை யோசனையோடு பார்த்தவன் சற்று அதை ஒதுக்கி வைத்து விட்டு வந்தவர்களை முறைப்படி வரவேற்றான். அப்பொழுது கோயிலுக்குச் சென்றுவந்த உமா, ஆனந்தி, கண்ணன் மற்றும் குட்டி. 

 

 

 

 

 

 

 

வீட்டில் இருந்தவர்களை வரவேற்ற உமா அனைவருக்கும் பிரசாதத்தைக் கொடுத்தவள் உள்ளே சென்று குடிக்கத் தண்ணீர் ஆனந்தியிடம் கொடுத்துவிட்டவள் அனைவருக்கும் டீ மற்றும் காபி போட ஆரம்பித்துவிட்டாள். 

 

 

 

 

 

நாச்சியார் நித்தியனிடம், “உமா ஆசைபட்ட மாதிரியே தங்கச்சி கல்யாணத்தை முடிச்சி அவங்களைத் தேனிலவுக்கும் அனுப்பியாச்சி தம்பி; இனி உமா-வெற்றி கல்யாணத்தைப் பற்றிப் பேசலாமா?”… “பேசலாம் பாட்டி, எனக்குத் தெரிஞ்சி உமாவுக்கும் வெற்றியை பிடிச்சியிருக்கு இனி நாள்கடத்த எந்தக் காரணமும் இல்லை அவளுக்கு, உங்க மனதிருப்திக்கா நீங்களே அவளைக் கேட்டுக்கோங்க பாட்டி” என்றவனிடம்… 

 

 

 

 

 

மதன், “நீ சொல்லறதும் சரிதான் நித்தியன்; உமாகிட்டையும் கேட்டிடலாம் என்றவன் அனைவருக்கும் டீ மற்றும் காபி கொண்டுவந்த உமாவிடம் மதன், நீ தான் சொல்லனும் உமா இப்ப உனக்கு வெற்றியை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா? எப்பவுமே அவரைக் கட்டிக்க எனக்குச் சம்மதம் தான் அண்ணா, நான் ஆசைபட்டது ஒரு அக்காவா மட்டும் இருந்து அம்முவுக்கும் மல்லிக்கும் கல்யாணம் பண்ணனும்னு நினைத்தேன் பண்ணையார்வீட்டுக்கு மருமகளா இல்லை, அது நடந்திடுச்சி மதன்அண்ணா. 

 

 

 

 

 

இனி எனக்கு அப்பாவா அம்மாவா இருந்து எல்லாத்தையும் செய்ய அண்ணனும் அண்ணியும் இருக்காங்க அவங்க பார்த்துக்குவாங்க” என்றவளின் கையைப் பிடித்துக்கொண்டனர் ஆனந்தியும் நித்தியனும். 

 

 

 

 

 

 

 

“எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் தான் பாட்டி, என் தம்பிங்க ரெண்டு பேரும் எங்கூடத்தான் இருப்பாங்க, அதுக்கு உங்களுக்குச் சம்மதமா?” என ஒரு வித தவிப்பான மனநிலையில் கேட்டவளிடம் சாரதா, “எங்களுக்குப் பரிபூரணச் சம்மதம் உமா; கண்ணனும் குட்டியும் நம்மகூடத்தான் இருப்பாங்கனு ஏற்கனவே வெற்றி எங்ககிட்ட சொல்லீட்டான், நீ பயப்படவேண்டிய அவசியமே இல்லை ம்மா” என்றவர் மேற்கொண்டு நித்தியன்-ஆனந்தியிடம் கல்யாணத்தேதி குறிப்பது பற்றிப் பேசிமுடிவு செய்த பின் வீடுதிரும்பினர். 

 

 

 

 

 

 

அடுத்தநாளே பூசாரியிடம் திருமணத்திற்குத் தேதி குறித்தவர்கள் கல்யாணத்திற்கான வேலையை ஆரம்பித்துவிடனர். 

 

 

 

 

திருமணம் பேசியதை பற்றிச் சந்திரன் மற்றும் தர்மர், விஷ்ணு மற்றும் அருண் தம்பதிகளிடம் கூற அவர்களே இரட்டிப்பு மகிழ்ச்சியில் தேனிலவு கொண்டாடியவர்கள் அந்த வார இறுதியில் ஊர் வந்துவிட்டனர். 

 

 

 

 

 

 

இவர்கள் வந்தவுடனே பத்திரிகை அடிப்பது, துணிமணிகள் எடுக்க அடுத்து வந்த ஒரு வாரம் எடுத்துக்கொண்டனர். 

 

 

 

 

தாங்கள் இனைய காரணமாக இருந்த உமா மற்றும் வெற்றியின் திருமணத்திற்கான அத்தனை வேலைகளையும் தாங்களாகவே இழுத்துபோட்டு செய்தனர். 

 

 

 

 

 

 

 

 

இதற்கிடையே மதன் உமா-வெற்றி திருமணத்தைப் பற்றிப் பேசிய அடுத்த நாளே வர்ஷாவிற்குப் பள்ளி இருப்பதாலும் அங்குத் தங்கள் தொழிலை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததாலும் ஜெயந்தியுடன் மூணாறுக்கு சென்றுவிட்டான். 

 

 

 

 

 

 

மீனு-கார்த்திக்கும் வேளையிருப்பதால் காங்கேயத்திற்குச் சென்று வேலம்மை மற்றும் விசாலாட்சியை மட்டும் அல்லியூரில் விட்டுவிட்டு ஊருக்கு சென்றவன் அன்று மாலையே ஏற்கனவே ஒப்பந்தம் போட்ட நிறுவனத்தின் மூலம் புதியதாக ஒப்பந்தத்தைப் போட அழைப்பு வந்ததால் அன்று மாலையே ஜெர்மன் சென்றுவிட்டான் கார்த்திக். 

 

 

 

 

மீனு தனியாக வீட்டில் இருக்க விரும்பாமல் சங்கருடன் நிறுவனத்திற்குச் சென்றுவந்தாள், அதில் சங்கரின் வேலை பளுவானது கொஞ்சம் குறைந்தது. 

 

 

 

 

 

 

 

இதற்கிடையில் வெற்றி மார்க்குடன் சேர்ந்து ரகசியமாகச் சிலவேளைகளைச் செய்துவந்ததால் அடிக்கடி காணாமல் பேய்விட விஷ்ணு அல்லது அருண் என யாரையாவது ஒருவர் முன்கூட்டியே இந்த வேலையை இங்கு, இப்படி, இந்த இடத்தில் செய்யவேண்டும் என்று நினைவுபடுத்திக்கொண்டே இருந்தனர். 

 

 

 

 

 

 

 

ஆனால் உமாவிற்குச் செய்யவேண்டிய அனைத்திலும் வெற்றியே முன்நின்று பார்த்துபார்த்துச் செய்தான், அதேபோல் உமாவும் அவனின் வேளையை நினைத்து அதிகமாகத் தொந்தரவு செய்யாமல் இருந்தால், வெற்றி இருக்கவேண்டிய இடத்தில் அவனை வைத்தே வேலையைச் செய்யவைத்தாள். 

 

 

 

 

 

 

 

உமாவும் அவனுக்காகத் துணிமுதல் நகைகள் வரை பார்த்துபார்த்து எடுத்தாள். 

 

 

 

 

 

ஒரு நாள் உமாவிற்குப் போன் செய்த மீனு பேச்சி வாக்கில் வெற்றிக்கு மூக்குத்தி பிடிக்கும் என்று கூறிவிடத் திருமணத்திற்கு நகைகள் எடுக்கச் செல்லும் போது மூக்குத்தி குத்திக்கொண்டாள், அதை அவனிடம் காட்ட ஆசையாகக் காத்திருந்தவளை காண வெற்றி வந்தபாடில்லை. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்படியே வெற்றி முக்கியமான இடங்களில் தவிர மற்ற நேரங்களில் காணாமல் போய்விட உமாவின் மாற்றம் அவனின் கண்களில் பட்டுக் கருத்தில் பதியாமலேயே போய்விட்டது. 

 

 

 

 

 

 

இவன் செய்த சொதப்பல்களுக்கொல்லாம் விஷ்ணுவும் அருணும் தான் பெரியவர்களிடம் திட்டுவாங்கிக்கொண்டு திண்டாடினார்கள். 

 

 

 

 

 

 

 

 

 

இப்படியே நாட்கள் நகரத் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே சொந்நபந்தங்கள் அனைவரும் பண்ணையாரின் வீட்டிற்கு வந்துவிட்டனர். 

 

 

 

 

 

 

 

 

உமாவின் திருமணத்திற்குத் தாய்மாமனாகச் சங்கரும்; தமையன்களாக நித்தியன், கண்ணன் மற்றும் குட்டியும்; தங்கையாக அம்முவும்; தோழியாக மல்லியும் முன் நின்று அல்லியூரையே கலகலபடவைத்தனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

வெற்றி- உமாவின் திருமணத்திற்காகச் சங்கர் தன் செலவிலேயே ஊருக்கே ஒரு வாரம் விருந்துவைத்தவர் முறைபடி அம்மு மற்றும் மல்லிக்கு தாய்மாமன் சீரை ஊர்சனம்வியக்க பண்ணையார்வீட்டை நிறைக்கவும் செய்தார், அதில் மகிழ்ந்த உமா சங்கரிடம் தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தவும் செய்தாள். 

 

 

 

 

 

அதற்குச் சங்கர், “நீ அவங்க மேல் எவ்வளவு பாசம் வச்சியிருக்கையினு எங்களுக்குத் தெரியும் உமா… அவங்க இல்லாம நீ இல்லை, நீ இல்லைனாலும் அவங்க இல்லைனு தெரிந்ததால் தான் இந்த ஏற்பாடு, அதுமட்டுமில்லம ஒரு தாய்மாமனாக நான் உனக்கு எதுவும் செஞ்சதில்லை இதைச் செஞ்சா நீயும் சந்தோசப்படுவ அவங்களும் சந்தோசப்படுவாங்க, எனக்கு மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு என்றவளை ஆதரவாகப் பார்த்தாள் உமா”. 

 

 

 

 

 

 

அவளின் பார்வையை உணர்ந்தவர் விசாலாட்சி சின்னச் சிரிப்புடனே, “இதைப் பற்றியெல்லாம் நீ யோசனை செய்யாம நிம்மதியா இரு ம்மா; அப்ப தான் கல்யாணத்தில் முகம் நல்லா இருக்கும் இல்லைனா அழுது வடிஞ்சமாதிரி இருக்கும் வெற்றி பார்த்துட்டா நீ உமா இல்லைனு சொல்லிடப்பேறான்” என்றவரை பார்த்து சிரித்தவள், “அப்படியெல்லாம் அவரு சொல்ல மாட்டாரு அத்தை… நான் எப்படி இங்கிருந்தாளும் அவர் என்னையைத் தவிர யாரையும் மனதால் கூட நினைக்கமாட்டாங்க என்று பெருமையாகக் கூறியவளை பாத்துப் பூரித்துபோய்விட்டார்கள் சங்கரும் விசாலாட்சியும்”. 

 

 

 

 

 

 

 

அதற்குக் கார்த்திக், “பாருங்க ப்பா இந்த அம்மையாரை; இப்பவே வரபோற புருஷனுக்கு வக்காலத்து வாங்கிறா, கல்யாணத்திற்குப் பிறகு எங்களையெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுமா இல்லையானு எனக்குச் சந்தேகமா இருக்கு” என்றவனைப் பார்த்து உமா, “அதை நீங்கள் சொல்லறீங்களா? கல்யாணம் பண்ணி இங்கிருந்து போய்ட்டு ஒரு போன்கூடப் பண்ணி விசாரிக்கவில்லை, மீனுவும் மாமாவும் தான் அடிக்கடி பேசுவாங்க… பாட்டியும் அத்தையும் ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்துட்டுபோங்க தெரியுமா?” என்றவளிடம் கார்த்திக், “வேலை கொஞ்சம் அதிகம் உமா அதுவும் இல்லாம ஜெர்மன் போனதால் டைம்கிடைக்கவில்லை. இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அல்லியூருக்கு பொட்டியகட்டிடறேன் போதுமா” என்றுகூறி சிரிக்க அவளும் சிரித்துவிட்டாள். 

 

 

 

 

 

 

மூன்றாவது நாள் முகூர்த்தக்கால் நட்டவர்கள் அன்றே உப்பு வாங்க சென்றனர், உப்பு வாங்கய பின் தாய்மாமன் விருந்து வைக்க அன்றையநாள் சிறப்பாக முடிந்தது. அடுத்தநாள் சகோதரிகளும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விருந்து வைக்க மிகவும் மகிழ்ந்தவள் அகமும் முகமும் மலர்ந்து போய்விட்டது. 

 

 

 

இங்கே இப்படியிருக்க அங்கே வெற்றியை வீட்டைவிட்டு வெளியே போகவிடாமல் காவலுக்கா நாச்சியாரும் சாரதாவும் அவனின் அறையிலேயே இருந்துகொண்டனர். 

 

 

 

 

 

வெற்றி இனி எங்கேயும் போகமாட்டேன் என எவ்வளவு கூறியும் அவர்கள் இருவரும் கொஞ்சம் கூட அசஞ்சி கொடுக்கவேயில்லை, இத்தனை நாள் தங்களைப் படுத்திய பாட்டிற்கு நன்றாக அனுபவிக்கட்டும் எனநினைத்த குடும்பத்தினர் யாரும் அவனுக்காகப் பாட்டிகளிடம் பேசவேயில்லை. மற்றபடி அனைத்து வேலைகளும் நன்றாகவே நடந்தது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!