Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 9.2

இந்த அவதாரத்தை எதிர்பார்த்திராத சிதம்பரம்

 

 

‘அய்யய்யோ கேட்டு விட்டதா கழுகு காது இவளுக்கு .’ என்று நினைத்து கொண்டு



Advertisement

 

” இல்லம்மா சும்மா விளையாட்டுக்கு…….” என்று பதறியபடி இழுத்தார்.

 

Advertisement

“விளையாட உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரரி தான் கிடைச்சாளா?

Advertisement

குத்து கல்லு மாதிரி நான்  இருக்கும்போது உங்களுக்கு விலையாட பக்கத்து வீட்டுக்காரி கேக்குதா?” என்று அதையும் தவறாகவே எடுத்து பேசினார் வள்ளி.

 

இவர்களை கவனித்த மதுமிதா சிதம்பரம் காதருகே வந்து

Advertisement

 

“சிக்கி சின்னா பின்னம் ஆக போறீங்க சிதம்பரம்!” என்று கூறி சிரித்தாள்.

 

“ உன்னோட ரைமிங் நல்லா தான் இருக்கு.

என்னோட டைமிங் தான் கவலைக்கிடமாக இருக்கு.”

நான் நல்லா வசமா மாட்டிகிட்டேன். கொஞ்சம்  காப்பாற்று.” என்று மகளிடம்  கெஞ்சும் குரலில் கேட்டார்.

 

“சரி சரி நான் பாத்துக்குறேன்.” என்று கூறியவள்

 

“அம்மா இப்போ எதுக்காக டாப்பிக்கை  மாற்றுகிறீர்கள்?”

 

“என்னடி டாப்பிக்கை மாத்திட்டாங்க?”

 

“சொல்லு டாபிக்… நான் காபி போடுவதை பத்தி. நீங்க யாராவது நான் போடற காபியை குடிக்க ரெடியா இருந்தா தானே நான் காபி போட்டு கத்துக்க முடியும்.

 

“அப்படியா.

பேசாம நீ காபி போட்டு உன் அப்பாவுக்கு கொடு. உங்க அப்பாவுக்கு  ஒன்னும் ஆகலேன்னா  நாங்க எல்லாம் குடிக்கிறோம்.  என்ன சரியா?” என்று கேட்டார் வள்ளி .

 

அதற்கு சிதம்பரம்

“ஐயையோ இதுக்கு நீ அந்த கரண்டியில் இரண்டு அடி கொடுத்துடு.  நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன். நான் ஏகபத்தினி விரதன் வள்ளி.  கொஞ்சம் நீயே பெரிய மனசு பண்ணி என்னை மன்னித்து காபி போட்டு எடுத்துட்டு வா வள்ளி.  நல்ல பொண்டாட்டி இல்ல?” என்று கெஞ்சல் பாதி கொஞ்சல் பாதியாக கேட்க

 

வள்ளி மனமிரங்கினார் இல்லை இல்லை மலை இறங்கினார்.

 

“சரி. சரி. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்.” என்று விட்டு சென்றார்.

 

“அப்பா” என்று அவர் தோளில் இரண்டு குத்து குத்தினாள் மகள்.

 

“அரசியல்ல இதெல்லாம் சகஜம் அம்மா அம்மா நீ கண்டுக்காம  அந்த டிவியை போடு.  ஏதாவது காமெடி வருதான்னு பார்க்கலாம்.” என்று கேட்டார்  சிதம்பரம்.

 

கவுண்டமணி செந்தில் காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அதனை பார்த்து இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

 

 

 

 

சிதம்பரம் சூடான் காபியுடன் தோட்டத்தில் போட்டிருந்த நாற்காலியில் செய்தி தாள் உடன் உட்கார்ந்தார் சிதம்பரம்.

 

மகள் அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

 

“அப்பா” என்று கூப்பிட்டாள்.

 

“என்னமா சொல்லு. அது வந்து…” என்று தயங்கினாள்.

 

“என்னம்மா என்ன விஷயம்? சொல்லு. எதுவாயிருந்தாலும் சொல்லு.” என்று செய்தித்தாளை மடித்து அந்த பக்கம் வைத்துவிட்டு மகளிடம் திரும்பினார் சிதம்பரம்.

 

“இன்னிக்கி பார்க்ல ஒருத்தன் என்கிட்ட வந்து லவ் பண்றேன்னு சொன்னான்.”

 

“ஓ அப்படியா?”

 

“நீ என்ன  சொன்ன?” என்று ஆர்வமாக கேட்டார்  சிதம்பரம்.

 

“நான் என்ன சொல்றது? அது தான் ஏற்கனவே நான் உங்க கிட்ட நீங்க சொல்ற பையனை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு  சொல்லிட்டேன் இல்லையா? .”

 

“சரி. அது நீ என்கிட்ட சொன்ன.  அவன்கிட்ட  என்ன சொன்ன? அவன் கிட்டயும் நான் இதையே தான் சொன்னேன்.

 

“என்னம்மா சொல்ற?” என்று நம்ப முடியாமல் கேட்டார்  சிதம்பரம்.

 

“ஆமாம்பா நான் உங்ககிட்ட சொன்னதை தான் அவன் கிட்டயும் சொன்னேன்.”

 

“அதுக்கு அவன் என்ன சொன்னான்?”

 

அவர்கள் வீட்டில் பேசிட்டு உங்ககிட்ட வந்து பேசுறதா சொன்னான். ஆனால் அவன் வருவான்னு எனக்கு தோனல. சரி வந்தா பாத்துக்கலாம் விடுமா.” என்றார் சிதம்பரம் சாதாரணமாக.

 

“அப்புறம்…..” என்று  இழுத்தாள் மகள்.

 

“அப்புறம் என்னமா?” என்று கேட்டார் சிதம்பரம்.

 

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி பீச்ல நாலு பசங்க  நானும் கீதாவும் போயிருந்தப்போ கையை பிடித்து இழுத்து கலாட்டா பண்ணினார்கள். என்னமா என்ன சொல்ற?” என்று பதறியபடி கேட்டார் சிதம்பரம்.

 

“ஆமாம்பா நாங்க அந்த ரவுடி பசங்க கிட்ட இருந்து தப்பிச்சி ஓடி வந்துட்டோம்.”

 

“நீ எனக்கு அப்படி இல்லைன்னா அண்ணனுக்கு போன் பண்ணி இருக்கலாம் இல்லையா? மது.”

 

“அவனுங்க என்னோட போனை  கீழே  தள்ளி விட்டுட்டாங்க. அப்புறம் எப்படியோ சமாளிச்சு போனை எடுத்துட்டு நாங்க ரெண்டு பேரும் ஓடி வந்துட்டோம்.”

 

“இனிமே பீச்சில ரொம்ப நேரம் நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்காதீங்க. சரியா?”

 

“ஆமாம்பா நானும் கீதாவும் இதையேதான் நினைச்சோம். அன்னிக்கி ரொம்ப நேரம் பேசிட்டு இருந்ததால நேரம் போனதே தெரியல.  அதனாலதான் லேட் ஆயிடுச்சு.  அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.  கொஞ்ச நாளா நான் எங்க போனாலும் என்னை யாரோ ஃபாலோ பண்ற மாதிரி எனக்கு தோன்றிக்கொண்டே இருந்துச்சு.

 

கீதா அந்த ரவுடி பசங்களா இருக்குமோன்னு சந்தேகமா கேட்டா.  எனக்கு அது பெரிய குழப்பமாக இருந்தது.

 

ஆனால் இன்னிக்கி பார்க்கல ஒருத்தன் என்கிட்ட வந்து  பேசினதும் தான் எனக்கு இருந்த எல்லா குழப்பமும் தீர்ந்தது.” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் மதுமிதா .

 

“என்னமா சொல்றே?” என்று புரியாமல் கேட்டார் சிதம்பரம்.

 

“இல்லப்பா நான் தான் ஒருத்தன் என்கிட்ட வந்து லவ் பண்றேன்னு சொன்னான்னு சொன்னேன் இல்லையா.”

 

“ஆமாம் அதுக்கென்ன? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

 

“அவன் என்னை  பாலோ பண்ணிக்கிட்டு இருந்ததா என்கிட்ட  சொன்னான்.  அதுக்கப்புறம் தான் அவன் தான் என்னை கொஞ்ச நாளா பாலோ பண்ணினான்னு புரிஞ்சது.”

 

“ஓ அப்படியா?”

 

“ஆமாம்  அப்பா. இதையெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். அம்மா கிட்ட சொன்னா அம்மா பயப்படுவாங்க. அதனாலதான். உங்க கிட்ட சொல்றேன் . நீங்களே நல்ல நேரம் பார்த்து அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிவிடுங்கள்.” என்றாள் மகள்.

 

அந்த வீட்டில் பெற்றோர்களும் பிள்ளைகளும் நண்பர்கள் போல பழகினார்கள்.  ஒருவரது கஷ்டத்தை மற்றவர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வர். வாரத்திற்கு ஒரு முறை வீட்டு ஆண்கள் சமைப்பர். மதுமிதா எந்த ஒரு விஷயத்தையும் தன் குடும்பத்தினரிடம் இருந்து மறைத்தது கிடையாது. பெற்றவர்களும் அப்படியே எந்த ஒரு  சாதாரண விஷயத்தையும் பிள்ளைகளிடம் கூறி அவர்களது அபிப்ராயத்தை கேட்டபிறகு முடிவெடுப்பர்.

எனவே அந்த குடும்பத்தில்  ஒளிவு மறைவு என்பது கிடையாது.

 

இரவு மனைவியிடம் மகள் கூறியது அனைத்தையும் கூறி முடித்தார் சிதம்பரம்.

 

எல்லாவற்றையும் கேட்ட வள்ளி

“அதுக்குதான் நான் அவளை அங்கெல்லாம் தனியா போகாதன்னு சொல்லிட்டு இருந்தேன். அவள் எங்க நான் சொல்றதை கேட்கிறா?” என்று கோபமும் வருத்தமும் ஆக ஆரம்பித்தார் வள்ளி.

 

“அவளுக்கு அந்த பக்கம் ஏதோ ஷாப்பிங் வேலை இருந்ததால் அதை முடிச்சிட்டு அப்படியே பீச் போயிருக்கா.

 

நீ என்ன அவளை தப்பு சொல்ற. இதுல அவளோட தப்பு என்ன இருக்கு?” என்று நியாயத்தை பேசினார் சிதம்பரம்.

 

“இதுல அவளோட தப்பு எதுவும் இல்லைனு  எனக்கும் தெரியும். ஆனால் நாட்டில் நடக்கிறது எல்லாத்தையும் பார்த்தா பெண்ணை பெற்றவர்கள் வயித்துல நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிற மாதிரி தான் இருக்கு. இன்னும் எத்தனை வருஷம், யுகம் ஆனாலும் சில ஆம்பளைங்க இப்படித்தான் இருப்பானுங்க.

எப்போது இந்த நிலைமை மாறி பொண்ணுங்களும் நிம்மதியா நடமாட முடியுமோ தெரியல.  அப்படி ஒரு காலம்  வர்ற மாதிரி எந்த அறிகுறியும் இல்லை” என்று சோகமாக பெரிய பெருமூச்சுடன் கூறினார் வள்ளி.

 

“இதையெல்லாம் சொல்லி நாம பொண்ணுங்களை வீட்டிலேயே வச்சிக்க முடியாது வள்ளி.”

 

அதுவும் கரெக்டுதான்.

ஆனால் பொண்ணுங்களோட கஷ்டத்தை  சொல்லி பையன்களை ஒழுங்கா வளர்க்கலாம்.

 

மதுசூதன் இந்த மாதிரி ஒரு பொண்ணு  கிட்ட நடந்து கொள்வானா? ஒருநாளும் பண்ணமாட்டான்.

 

ஏன்னா நான் அவனை அப்படி  வளர்த்து இருக்கிறேன். இப்படியே எல்லா பெற்றவர்களும் பையன்களை ஒழுங்காக வளர்த்தாலே நாட்டில் முக்கால்வாசி பொறுக்கி பசங்க பிரச்சனை  தீர்ந்துவிடும்.

பெண்ணைப் பெற்றவர்களும் நிம்மதியா இருக்கலாம்.”

 

“வளர்க்கலாம்னு சொல்லாதே.  வளர்க்கணும்னு சொல்லு. பையனைப் பெற்றவர்கள  பொறுப்பா ஒழுக்கத்தை சொல்லிக்கொடுத்து வளக்கணும்.”

 

“நீங்க சொன்னதும் எல்லோரும் அதைக் கேட்டு அப்படியே செய்யப் போறாங்க பாருங்க. நான் சொன்னா  கேட்கிறார்களோ இல்லையோ சட்டம் சொன்னால் கேட்டு தானே ஆகணும்.

அதுக்குத்தான் சட்டத்திலும்  நிறைய மாற்றம் கொண்டு வந்து பொண்ணுங்களுக்கு நாம பாதுகாப்பு கொடுக்கணும்.”

“சரி சரி சட்டசபையில் பேச வேண்டியதை வீட்ல பேசிட்டு இருக்கீங்க. நம்ம வீட்டைப்பற்றி இப்போ நாம பேசுவோம்.”

“இனிமே  எங்கேயாவது போகணும்னா போயிட்டு நேரத்தோடு வர சொல்லணும்.”

 

“சரி வள்ளி. நீ ஒன்னும் இதுக்காக கவலைப்படாத. நாமதான் நம்ம பொண்ணுக்கு கராத்தே  கற்றுக் கொடுத்து இருக்கிறோம் இல்லையா? அவளும் இனிமே ஜாக்ரதையா இருப்பா.” என்று மனைவிக்கு சமாதானம் கூறினார் சிதம்பரம்.

 

கணவன் கூறியதைக் கேட்டு ஓரளவு சமாதானம் ஆனாலும் வள்ளிக்கு அன்று தூங்குவது கடினமாகவே இருந்தது.

 

‘முருகா நீ தான் பா என் குடும்பத்தை நல்லபடியா வச்சிக்கணும்.’ என்று எழுந்து படுக்கையில் சம்மணம் போட்டு அமர்ந்து  முருகனை சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பவும் படுத்து உறங்கினார்.

 

தந்தையிடம் தன்னை பின்தொடர்ந்து வந்தவன் பூங்காவில் பார்த்த அவன் தான் என்று கூறினாலும் அவளது மனம் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்தது.  ஏதோ ஒன்று அவளுக்கு உறுத்தியது. ஆனால் என்ன என்று அவளுக்கு புரியவில்லை.

 

எனவே உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

 

பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக எழுந்து பூஜை அறைக்கு சென்று

‘முருகா  என்னால இன்னும் கூட அவன் தான் என்னை ஃபாலோ பண்ணினான்னு  நம்ப முடியல.  எனக்கு இப்ப கூட குழப்பமா தான் இருக்கு.  சீக்கிரமா என்னோட குழப்பத்தை தீர்த்து வை முருகா. “ என்று இவளும் ஒரு வேண்டுகோளை முருகன் முன்  வைத்தாள். இதனால் மன பாரம் குறைய நிம்மதியாக உறங்கினாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!