Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன்- 11 ( 1. 2)

 

நாம் 11 (1. 2) 

 

     ரவிந்திரன் வேந்தனை அழைத்து அவர்கள் முன் இருப்பவர்களில் இப்போதைக்கு தேவையானவர்களை மட்டும் காண்பித்து.. ” வேந்தா.. இவர்தான் அருணாச்சலம்.. அவர் மனைவி லட்சுமி. அவங்க மகள் எழிலரசி. “  எனக் கூறி அறிமுகம் செய்ய.. தன் அரசியை தனக்காகவே பெற்றவர்களான.. அவளின் பெற்றோர்களையும்.. தன்னவளை அனைவரின் முன் நேராக பார்க்கிறோம் என்ற பரவசம் முழுவதையும்.. முகத்தில் வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை மூவருக்கும் வணக்கம் தெரிவித்தான். அப்போது அரசியை பார்க்கும் அவனின் கண்களும், உதடும் தானாகவே கூடுதல் புன்னகை அள்ளித்தெளித்தது



Advertisement

    அருணாச்சலமும் அவ்வாறேஇவர் ரவிந்திரன்.. அவர் மனைவி சித்ரா. இவர்களின் மகன் வேந்தன். ” என்று அறிமுகம் செய்ய.. எழிலரசி கண்களால் ஒரு பார்வை பார்த்து அனைவருக்கும் ஒருசேர புன்னகையுடன் வணக்கம் கூற அவர்களும் பதில் புன்னகைத்து.. சித்ரா எழிலரசியை அருகில் அழைத்தார். எழிலரசி தன் பெற்றோர்களை பார்க்க.. அவர்கள்போம்மா.. ‘ என்று தலை அசைக்க

    ‘ எழில் சித்ராவின் அருகில் சென்று அமர.. உடனே இருவரின் அக்கா தங்கைகள் தோழியும்.. எழிலின் அருகில் அமர்ந்தார்கள். வேந்தன் ரவிந்திரன் மற்றும் சித்ராவின் நடுவில் அமர்ந்துயிருந்தான். எழில் அமர்ந்தவுடன் ரவிந்திரன் அருணாச்சலத்தின் பக்கத்தில் சென்று அமர.. அவர் சென்றவுடன் வேந்தனின் நண்பர்கள் கமலேஷ், இன்பா இவர்கள் வேந்தனின் அருகில் அமர்ந்தார்கள். பிறகு அவர்களும் தங்களை அறிமுகம் செய்து கொள்ள என இருந்தார்கள். ‘

    வேந்தன் இளமதியை பார்த்து அவள் அறிமுகம் செய்து கொள்ளும் முன்னே.. ” ஹாய்.. இளமதி.. எப்படி இருக்கிங்க?.. ” அரசி இவர்களை கவனிக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு கேட்டான். வேந்தன் கவனித்ததை இளமதியும் பார்த்தால்.

Advertisement

     ‘ இளமதியும் அருணாச்சலமும்..  எழிலரசிக்கு வேந்தனை பற்றி தெரியப்படுத்தவில்லை. முதலில் வேந்தனுக்கு இளமதியை ஞாபகம் இருந்தால் அவரே எழிலரசியிடம் தெரியப்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைத்தார்கள். இளமதி எழில் பின்புறம் அமர்ந்திருந்தார். இப்போ எழில்.. வினோ , யோகாவுடன் பேச்சில் கலந்து இருப்பததால்.. இவர்களை கவனிக்கவில்லை.

Advertisement

    இளமதி புன்னகையுடன்நல்லா இருக்கேன்.. நீங்க?..”

    வேந்தன் மெதுவாக புன்னகையுடன்.. ” ம்.. உங்க தங்கச்சி புண்ணியத்தில் சூப்பரா!.. இருக்கேன்

    ம்.. பார்த்தேன்.. பார்த்தேன்!.. நீங்க உள்ள வரும்போது நேரா அவள பார்த்து மந்திருச்சுவிட்ட ஆள் போல வந்திங்களே..  அப்பவே தெரிந்து. எங்க நேரா அவ பக்கத்தில் வந்து விடுவிங்கனு.. ஒருநிமிடம் நான் பயந்தே போய்யிட்டேன். நல்ல வேலை நீங்களா சுதாரித்து நின்னிட்டிங்க. ”

Advertisement

   வேந்தனோ சிரிப்புடன்.. ” நீங்க வேற மதி.. நீங்க நினைச்ச மாதிரி.. நான் நேராதான் வந்துயிருப்பேன்.. அப்புறம் அரசிதான் என்னை கவனித்து.. லைட்டா ஒரு முறைப்பு பார்வை பார்த்தா பாருங்க.. பிறகு தான் நான் உடனே நின்றேன். ”

   இளமதியும் புன்னகையுடன்.. ” .. பரவாயில்லையே இப்பவே எழிலோட பார்வைய புரிந்து வைத்துயிருக்கிங்க.. ”  அவர்கள்  பேசிக் கொண்டுயிருக்கும் போது..

    ரவிந்திரன் வேந்தனை தனியாக அழைக்க.. அவருடன் அருணாச்சலமும் இருந்தார். இளமதியிடன் கூறிவிட்டு அவர்களிடம் சென்றான். அவர்கள் இருவரிடமும் பேசினான். பின் இன்பா அவர்களுடன் இணைந்து பேச.. சிறிது நேரம் கழித்து.. வேந்தன் அவனின் நண்பர்கள் வினோத், திலகன் மூவரும்  இன்பாவுடன் மாடிக்கு சென்றார்கள். சிறிது நேரத்தில் இன்பா கீழே வந்துவிட்டான்.

    வேந்தன் மாடிக்கு சென்றவுடன் எழிலரசியிடன் சித்ரா.. ” எழில்.. வேந்தன் உன்னுடன் பேச மாடியில் காத்தியிருக்கான் மா.. நீயும் வேந்தனும் இப்ப இன்னொரு முறை தனியா பேசி.. உங்க விருப்பத்தை எங்களுக்கு தெரிவிங்க. “

    ம்.. சரி. ” கூறிபின் தன் அன்னையை தேட.. அவர் உறவினர்களுக்கு காபி.. பலகாரம் எடுத்து வைக்க சென்றுயிருக்க.. அடுத்து இளமதியை பார்த்தாள். இதனை கவனித்த இளமதி.. ” எழில்.. நீ சத்யா.. தர்ஷினி கூட மாடிக்கு போ. “

    அவள் சரி என தலையசைத்து.. சற்று தூரத்தில்  வேந்தனின் மாமா, அப்பாவுடன் பேசிக் கொண்டுயிருந்த அப்பாவை பார்த்தாள். அவரும் கவனித்து ‘ போம்மா ‘ என்ற கண்ணசைவுடன்.. புன்னகை புரிந்தார்.

   ‘  தோழி, தங்கையின் முன்னால் தன்னவனை காணச்சென்றவள்.. சட்டென்று பின்னால் வந்த இருவரிடம் இதை ஏதும் அறியாத எழிலரசியின் சித்தி.. தர்ஷினியின் அம்மா சரஸ்வதி.. மற்றவர்களிடம் கொடுக்க வேண்டி.. பேசவந்தால் அவர்கள் அங்கே நின்றுவிட.. எழிலரசி இதை கவனிக்காமல் ஒரு யோசனையிலே.. அவள் மட்டும் மாடியேற ஆரம்பித்தாள். ‘ 

   இங்கு நடப்பது தங்களின் பிடித்தமான இருவரின் முக்கிய நிகழ்வு அல்லவா!.. அதனால்மகிழ்வுடன் அவர்களின் புது உறவினர்கள் மற்றும் தங்களுக்கு உள்ளே என வீட்டின் உள்ளே சிலர், வெளியே என பேசிக் கொண்டு இருந்தார்கள்.

    எழிலரசிக்கு மனதில் இனம்அறியா உணர்வு வந்து அவளை ஆட்கொண்டது.. இருவரின் முதல்.. கோயில் சந்திப்பிலேயே.. தன்னவன் தன் மனதில் புதுவிதமான எண்ணம், சலனம் போன்றவற்றை தனக்குள் ஏற்படுத்தினான். இப்போது என்னவெல்லாம் மாற்றம் தனக்குள் கொண்டு வரப்போகிறானோ தெரியலையே என.. இந்த சந்திப்பு அவளுக்கு.. ஆர்வம், எதிர்பார்ப்பு, தயக்கம், வெக்கம் என்ற மனநிலையில் இருந்தாள். ‘

    ‘ இவற்றை யோசித்தால்.. சட்டென்று அவளுள் வந்த நாணத்தினால் அவளின்  முகத்தில் தோன்றிய கன்னம் சிவப்பை.. மற்றவர்களிடம் இருந்து மறைக்க தலை குனிந்து.. அவள் பல வருடங்கள்.. ஓடியாடிய அந்த மாடி படியில் நேராக நிமிர்ந்து ஏறக்கூட முடியாமல் தடுமாறி.. தன் கால்லை எடுத்து வைத்து படிகளில் ஏறத் தொடங்கினாள்.. ‘

   எழிலரசி ஏறத்தொடங்கி ஏழு படிகளை கடந்து மாடியின் வளைவில் திரும்பியது தான் அவளுக்கு தெரியும். அடுத்து அவள் கண்கள்பார்த்து.. மிகமிக அருகில் தன்னவன் தனுவின் புன்னகை முகம். ஒருநொடி புரியாமல் விழிவிரிக்க.. பின் தான் புரிந்தது. தான் தன்னவனின் கைகளில் இருக்கிறோம் என்று. ‘

    அவளவன் தனு.. படியின் வளைவில் நின்று.. எப்போது அவனின் அரசி இங்கு வருவாள்?.. என அவ்விடத்தில் காத்துயிருந்தான். அப்போது அவன் பார்த்தது.. அரசி ஏதோ நினைத்து படியே தலைகுனிந்து வருவதை பார்த்தும்.. தன் மனதில் தோன்றிய தீடிர் எண்ணத்தால்.. அவளை அப்படியே தன் கைகளால் அள்ளிக்கொண்டு.. அவளின் முகத்தில் தன்னால் தோன்றியிருந்த.. கன்னசிவப்பை மிக மிக அருகில் பார்த்து புன்னகைத்தான். ‘

   அரசி சில நொடிகள் கழித்து தான் நடப்பு உலகிற்கு வந்தாள்.. ” என்ன பண்ணுறிங்க தனு?.. யாராவது நம்மள இந்த கோலத்தில் பார்த்தால் என்ன நினைப்பாங்க?.. கீழ இறக்குங்க தனு. ” மிக மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் படி கூறினாள்.

    ” அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. அங்க பாரு நாலு பேரையும்.. ஒன்னும் சொல்லாம தான் நிற்கிறார்கள்.. ” எனக் கூறியவுடன்

   எழில் அவர்களை பார்க்க.. இவனின் இந்த செயலை பார்த்த நால்வர் மயங்கி விழாத குறையாக பார்த்துக் கொண்டுயிருந்தனர். இருவர் வினோத், திலகன்.. இருவர் சத்யா, தர்ஷினி. எழிலரசிக்குஅய்யோஎன்றானது. ‘

      எழிலரசி ஏதோ மீண்டும் கூற.. அவனே தொடர்ந்தான்அமைதிய வா முயல்குட்டி.. நேரம் கம்மியதான் இருக்கு.. இந்த நேரத்திற்குள் உன்னிடம் சொல்ல.. பேச.. கொடுக்க.. எடுத்துக்க  என நிறைய இருக்கு.. ” என்று அவளிடம் பேசி கொண்டே எழிலரசியின் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினான்.

 

   ‘ தன் அரசியின் அறையில் இருந்த ஊஞ்சலில்.. வேந்தன் தன் மடியில் தன் அரசியை வைத்திருந்தான். அவன் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல்.. அவளின் முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தவன்.. அரசியின் கன்னத்தை தாங்கி பிடித்து.. தன்னவளின் நெற்றியில் மென்முத்தம் ஒன்றை பதித்தான். ‘

    அவனின் மடியில் அமர்த்திருந்தவளோ  தன்னையே பார்ப்பவனை அவளும் பதில் பார்வையை செலுத்தி அவனின் உணர்வுகளை உள்வாங்கி கொண்டுயிருந்தாள்.. அவன் பட்டென்று தன் முகத்தை பிடித்து நெற்றியில் முத்தம் வழங்கியவனின் விழிகளில்.. ஏதோ பொக்கிஷம்!.. ஒன்று தன் கைகளில் கிடைத்துவிட்டது போல மகிழ்ச்சியும்.. இனி அதனை தன் கண்ணின் மணிபோல பாதுகாப்பேன் என்பது போலவும் பார்த்தான். ‘

   வேந்தன் அவள் கைகளை பற்றி.. அதில் ஒருவிரலை தடவிக் கொண்டேமுயல்குட்டி.. முயல்குட்டிடி.. இப்ப நீ ரொம்ப அழகாக இருக்க டா. ” மீண்டும் நெற்றி முத்தம் கொடுத்தான்.

    அவள் கண்களை பார்த்துக்கொண்டே.. ” ஹேய் அரசி.. நான் வீட்டின் உள்ளே நுழையும் போது.. நீ என்ன பார்த்தியே ஒரு பார்வை!.. பார்வையா அது?.. அதை பார்த்து நேரா.. உன்னைய நோக்கி வர வைச்சுட்ட. நல்ல வேளை!.. அப்படியே என்னை உன்னிடம் இழுத்த இந்த முயல் கண்ணாளே!.. அழகாக முறைச்சு.. என்னை எல்லாரிடமும் மாட்டிக்காகாம தப்பிக்க வைச்சுட்ட. ” சட்டென்று கண்களுக்கு முத்தம் கொடுத்தான்.

    என்ன முயல் நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன்? நீ ஒன்னும் பேசாம!.. எதுக்கும் பதில் சொல்லாம!.. ஆனா சுகமா.. என் மடியில் உட்கார்ந்து இருக்க. ” வேந்தன்  பாவமாக முகத்தை வைத்துக் கூறி கேட்க..

     இதனை எல்லாம் கேட்டும், பார்த்தும், வாங்கியும் என இருந்த அரசி.. கடைசி வரியை கேட்டவுடன் காண்டாகி.. அவனை முறைப்புடனே.. ” இது உங்களுக்கே அநியாயம்மா தெரியல.. நடந்து வந்தவள.. உங்க, என் நண்பர்கள் முன்னால தூக்கிட்டு வந்து!.. அவங்க முன்னாடியே கதவ சாத்தி.. இப்படி மடியில உட்காரவைச்சு.. பாத்துடே இருந்துட்டு.. டக்குனு!.. நெற்றியில் முத்தம் கொடுத்துட்டு.. அந்த பார்வை!.. பார்த்தேன்.. இந்த பார்வை!.. பார்த்தேன் சொல்லிட்டு மட்டும் இல்லாம.. முத்தம் முத்தம்!..  வேற கொடுக்கிறிங்க. “

     ” பிறகு பதில் சொல்லவில்லையா என வேற கேள்வி கேட்கிறிங்க. நான் எதை தான் கவனிக்க?..  உங்களையா?.. என்னையா?.. நீங்க பேசுறதையா?.. அதுக்கான பதிலையா?.. இல்ல உங்க உங்க முத்தத்தையா?.. இதுல என்னைய சுகமா உங்க மடியில உட்கார்ந்து இருக்கேன் என்று பொறாமை வேற உங்களுக்கு?..” என முச்சு விடாமல் பேசினாள்.

    வேந்தன் சிரிப்புடனே…” சரி.. சரி.. முயல்குட்டி!.. நான் தெரியாம கேட்டுடேன். நீ  ரிலாக்ஸா என் மடில.. வசதியா, சுகமா உட்காரும்மா. ” அவளை நன்றாக அமர வைத்துக்கொண்டவன்..

    ” அரசி.. நான் என்ன சொல்வது ம்.. எனக்கு இந்த 2நாட்களாக.. நான் உன்னுடன் இருக்கேன் என்பதே.. இன்னும் நம்பமுடியாம!.. இருக்கனா.. அதான் உன்னோட பேச வாய்ப்பு கிடைக்கும் போது, நினைக்கும் போதும் நான் நானாக இருக்க மாட்டேன்கிறேன். “

    இப்ப என் முகத்தை மட்டும் பாரு என.. அவள் கன்னம் தாங்கி.. ” அவங்க முன்னாடி தூக்கிட்டுவந்ததுக்கு மட்டும் சாரி அரசி. நாம்ம நேற்று முழுவதும் போனில் கூட பேசாம இருந்தோம். இப்ப வரைக்கும் கூட பொறுக்க முடியாம.. காலையில் உனக்கு கால் பண்ணா அப்பவும் பேசமுடியலையா!.. அதனால இப்ப பேச போவதில் இருந்த ஆர்வம்!. அதுகூட நான் தேர்ந்தெடுத்தபுடவை.. கொடுத்த பூ வைத்தும் செம்ம அழகா வேற இருந்தா என் முயல்குட்டி!.. நீ என்னிடம் பேச வரப்போற என்ற அந்த நினைப்பில் இருந்தப்ப..” 

    ”  நீ வரலையா.. அதான் நீ இன்னும் என்ன பண்ணுறனு?..  நான் மாடிபடில.. அந்த இடத்திற்கு பார்க்க வந்தஅப்ப.. நீ என்னிடம் பேசபோவதால் வந்த..  நாணத்தில்லா.. இல்ல ஏதோ ஒருகாரணத்தால் தலைகுனிந்த படியே மாடிபடி ஏறி வந்தியா.. அப்ப அப்ப.. என் பிளிங்ஸ் என்னசொல்வது?.. “

    ” ம்.. உன்னைய முதன்முதல்ல பார்த்தப்பவே முயல்குட்டியா!.. என் அரசியா!.. என் மனதில் பதிந்தவநீ!.. இப்ப அந்த முயல்குட்டியே.. இரு குடும்பத்தின் மூலமா.. எனக்கு மனைவியா!.. என்னவளா!.. என்னிடம் வரபோறா என நினைத்தவுடன்.. என்னால முடியல அரசிம்மா.. அதான் யார்இருந்தாங்க?.. என்பதை மறுந்து தூக்கிடேன். “

    ” பிறகு உன் முகத்தை மிக மிக அருகில் பார்த்தா.. அதில என்னை ஈர்த்த  கண்கள், சிவப்பேரிய கன்னம்மாக இருந்த உன்னை.. அப்ப அங்கவே கொடுக்க நினைத்த முத்தத்தை.. எவ்வளவு  நல்ல பையானா உள்ள வந்துதானே கொடுத்தேன். அதுவுமில்லாம நான் உனக்கு முத்தம் கொடுக்க அனுமதி நீ கொடுத்துயிருக்க. ஞாபகம் இருக்குல. ”

    ‘ அவர்களின் போன் உரையாடலை அவளுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக புருவத்தை உயர்த்தியும்.. கண்களில் கள்ளம் நிரம்பியும்.. நான் ஒன்றும் அறியபிள்ளை நீ தான்.. நான் முத்தம் கொடுத்திற்கு காரணம்போல அவன் சொல் இருந்தது. ‘ 

    ‘ அரசிக்கு.. தன்னவன் முகம் மின்ன.. அவனை பற்றி கூறியபோது.. ஆசையுடன் கேட்டிருந்தவள்.. தான் அனுமதி கொடுத்த முத்தம் பற்றியும் அவன் கூறவும்.. அவனை காண முடியாமல் வெக்கம் வெக்கம்மாக வரஇவனை.. ‘ எழில் ரூட்ட மாத்து.. இல்ல இவன் இன்னும் வேற ஏதாவது சொல்லுவான். ‘

    ” ம்.. ம்.. அனுமதி கொடுத்ததும் ஞாபகம் இருக்கு.. நம்ம இரண்டுபேரை பற்றி நீங்க இப்ப கூறுகிறேன் என்று கூறியதும் நினைவில் இருக்கு.. பேச்ச குறைச்சுட்டு முதல்ல அத சொல்லுங்க. ”

    வேந்தன் அரசி.. தன் அனுமதியை நினைத்தும்.. அதனால் வந்த வெக்கத்தையும் பார்த்தான்.. அவள் அதனை மறைக்க.. அவள் பேச்சை மாற்றுவதை நினைத்து.. எனக்கு திரும்பி வாய்ப்பு கிடைக்காமல போய்விடும் முயல்குட்டி.. அப்ப பாரு.. ” ரொம்ப மிரட்டுற முயல்நீ.. ” என பொய்யாக மிரட்டி.. 

   அவளை இன்னும் இறுக்கி தோள் வளைவில் அணைத்துக் கொண்டு.. ” என்னை உனக்கு எந்த விதத்தில் ஞாபகம் இருப்பது போல இருக்கு?.. ” ஆவலுடன் கேட்க..

    அரசி அவன் அணைப்பை சுகமாக ஏற்றுக் கொண்டவள்.. ” ம்.. முகம் ஞாபகம் இல்ல தனு. ஆனா.. உங்களிடம் எப்பயோ?. எங்கயோ?.. இதோ!.. இந்த கை பிடித்துயிருப்பதில்.. நீங்கள் பேசும் போது.. நான் கேட்கும்.. இந்த குரலும்.. அதிலிருக்கும் அக்கறை, பாசத்தை.. ஏற்கனவே  உங்க பக்கத்தில் உட்கார்த்து பேசியது போன்ற உணர்வு மட்டும் இருக்கு. ” 

    ” அதனால் தானோ என்னவோ.. கோயிலில் நீங்க எங்களிடம் வீட்டில் என்னுடன் பேச அனுமதி வாங்கிவிட்டேனு சொன்னிங்க தானே.. அப்ப நான் கேட்ட உங்க குரல்.. அதுதான்!.  நான் மறுக்காம உங்களுடன் பேச வந்த முதகாரணம். நாம்ம அருகருகே உட்கார்ந்த சில நிமிடங்களில் என்னால்.. எந்தவித தயக்கமும் இல்லாம.. மனம்விட்டு பேசமுடிந்தது என்றால்.. நான் இப்ப சொன்ன அந்த உணர்வுதான். தனு. ”

   வேந்தன் மென்புன்னகையுடன்.. ” ம்..ம்.. ம்.. ” என அவள் கூறுவதை கேட்டுக் கொண்டும்.. அப்படியே கோயிலில் அன்றைய நாளில் இருவரின் நடவடிக்கைகளை நினைவுப்படுத்தி பார்த்தான்.

    பின் அவள் விரலை காட்டி.. ” அரசிம்மா.. இந்த மோதிரம் யார் உனக்கு கொடுத்தா?.. ”

    அரசி சிறிது நேரம் யோசித்து.. பின் கண்களை சிமிட்டுயும்.. உதட்டை பிதுக்கி.. தோளைகுலுக்கி.. ‘ பச்என்ற சத்தம் கொடுத்து.. ” தெரியல்ல தனு. ஆனா!.. இந்த மோதிரத்த விரலில் இருந்து.. இதுநாள் வரைக்கும் கழட்டி வைத்ததே இல்ல. எனக்கு இது ரொம்ப ஸ்பெஷல்!.. மாதிரிதோனும். எதனாலோ இந்த மோதிரத்தை கழட்டவே கூடாது.. என்றும் உன்னோடதான் இருக்கனும் என்று மனசு சொல்லும். ”

    ‘ வேந்தனுக்கு முதலில் அவள் முகத்தில் காட்டிய பாவனை.. பின்  அவள் கூறியதை கேட்டு.. அவனுக்கு வேறு ஏதேதோ எண்ணம் தோன்ற.. அய்யோ இந்த முயல்குட்டிய மடியில் உட்கார வைத்து நானே எனக்கு ஆப்பு வைச்சுக்கிட்டனா?… இப்படி சோதிக்கிறாளே என்னை. ம்.. வேந்தா வேண்டாம். தன் மனம் போன போக்கை கட்டுப்படுத்திக் கொண்டு.. தனக்கு அப்போது தோன்றிய உணர்வின் சிறிதளவை.. அந்த மோதிரத்தின் மேலும் அதனை அணிந்திருந்த அவளின் வெண்டைவிரலின் மீது.. அழுத்தமான முத்தம் ஒன்றை வழங்கினான். ‘

    பின் புன்னகையுடன்.. ” முயல்குட்டி.. இந்த மோதிரம் என்னோடது. நான் தான் உனக்கு  போட்டுவிட்டேன்.  ” என அவள் கண்களை பார்த்துக் கூற..

    ‘ அதனை கேட்டவுடன் அரசிக்கு ஒருபக்கம் அதிர்ச்சியாகவும்.. மறுப்பக்கம் இன்பமாகவும் உணந்தாள். ஆனால் ஏதோ ஒன்றை நினைத்து.. சட்டென்று அவள் கண்களிலிருந்து கண்ணிர் கன்னத்தில் உருண்டோடியது. ‘

  தனு..  நீ..நீங்க தான் இந்த மோதிரம் போட்டுவிட்டதா?.. எங்க?.எப்ப?.. எப்படி?.. எனக்கு உங்களையும், இதை போட்டுவிட்ட மாதிரியும் ஞாபகமே இல்ல..” அதற்கு மேல் அவளால் பேசமுடியாமல் அவனின் தோளின் மேலேயே சாய்ந்தழ..

   வேந்தன் அவள் கண்ணிரை மென்மையாக துடைத்துவிட்டு.. ” இதுக்கு ஏன் முயல்குட்டி நீ அழற?.. அன்னைக்கு நீ இருந்த நிலைமையில்.. இப்ப மோதிரத்தை பற்றியும்.. என்னை பார்த்தும்.. நீ உணர்ந்ததை சொன்னியே இதுவே அதிகம்தான் டா. ” என்று கூறி மீண்டும் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.. பின் 12 வருடங்கள் முன்.. தாங்கள் சந்தித்த தினத்தில்.. நடந்ததை அவளிடம் கூறத் தொடங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!