Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ12_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 12_2

 

மரத்தடியில் பேருந்திற்காக காத்திருந்தவள் வந்து-சென்று கொண்டிருக்கும் வாகனங்களை கடனே என்று பார்த்து நிற்க, எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மெட்டாலிக் க்ரே டொயோடா கேம்ரி மீது கண்கள் நிலைத்தது. அதிக அரவமில்லாத சாலையில் வழுக்கிக் கொண்டிருந்த வாகனம் பத்து  மீட்டர் தொலைவில் நின்றுவிட.. அதை ஆசை தீரப் பார்த்து முடிக்கும் முன் அவள் பேருந்தும் வந்துவிட, அதிக கூட்டமில்லாத பேருந்தில் வாகாய் நின்று கொண்டு கண்களைக் கவர்ந்த வாகனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூகிளில் மூழ்கிப்போனாள்.

 



Advertisement

சற்றும் எதிர்பார நேரத்தில்.. அவள் காதருகில் மூச்சுவாங்க “பிடிச்சிருக்கா?” என்ற மயக்கும் ஒலி கேட்கவும், மாதங்கள் பின் மீண்டும் இதயம் ஓட்ட பந்தயத்திற்குத் தயாரானது.

 

திரும்பிப் பார்க்க அவசியமில்லை. ‘மனோ..’ இதழ் விரிய.. கண் மூடி நின்று அந்த நிமிடத்தை உள்வாங்கிக் கொண்டாள். இதயத்தைக் கிழித்த அந்த சத்தம், நாசியைத் தொட்ட மிதமான நறுமணம், அகலமாய் திறந்திருந்த அவள் வெற்று முதுகில் பட்டும் படாமலும் அவள் பின் நின்றிதவன் சட்டையின் வருடல்.. காதருகே அவளை உஷ்ணமாக்கிக் கொண்டிருந்த அவன் மூச்சுக் காற்று.. அனைத்தும் ஏதோ ஏகாந்த நிலைக்கு அவளை இழுத்துச் சென்றது.

Advertisement

 

Advertisement

“கேட்டேனே.. பிடிச்சிருக்கா?”, அவள் கைப்பேசியில் தெரிந்த வாகனத்தில் அவன் பார்வை பதிந்திருக்க.. கண் திரவாமலே அவளின் “ம்ம்.. ரொம்ப” என்ற பதில் கண்டிப்பாக அவன் கேட்ட கேள்விக்கானது இல்லை என்பது அவனுக்கு தெரியாமலில்லை.

 

“அப்போ வா..”, என்று படிக்கட்டின் பக்கம் செல்லவும்,

Advertisement

 

“மனோ..” என்றாள் முதல் முறையாக

 

நின்றுவிட்டான். திரும்பவில்லை. அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்காத அழைப்பிது. ஒருவரையும் முதல் பெயர் கொண்டு அழைக்கவிட்டதில்லை.

 

இன்று பிடித்தது. மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டிய அழைப்பு.

 

“அடுத்த ஸ்டாப்”, நடத்துனரிடம் இரண்டு பயணச்சீட்டிற்கான பணத்தைக் கொடுத்து.. அவள் புறம் திரும்பினான்.

 

கருப்பு மையினிடையே வீற்றிருந்த நீள நயனம்.. இமைகளை மிதமாய் அலங்கரித்த  பிஸ்தா நிறம், காதோர ஸ்ப்ரிங் முடி… குடை ஜிமிக்கி.. கூர் நாசியின் ஒருபக்கத்தில் புதிதாய் முளைத்திருந்த சின்ன வளையம்.. ரவிக்கையை ஒத்த பீச் நிறத்து உதட்டுச் சாயம்.. ரவிக்கையில் ஏதோ ஒரு ஓரம் ஒட்டியிருந்த பிஸ்தா நிறத்தில் புடவை என்று பெண் அவன் திடத்தை உடைத்துக் கொண்டிருந்தாள்.

 

அடுத்த நிருத்தம் வந்திருக்க.. “வா விழி”, என்று அவன் இறங்க.. அவளும் இறங்கியிருந்தாள்.

 

“எப்பிடி இருக்க விழி?”

 

“பாத்து சொல்லுங்க..”, அழகாய் சிரித்தாள்.

 

கருப்பு கண்ணாடியை கழட்டியவன், “ரொம்ப அழகா இருக்க” என்றான் கண் சிமிட்ட மறந்து.

 

“நீங்க எப்டி இந்த பஸ்-ல?”

 

“போன ஸ்டாப்ல உன்ன பார்த்தேன். கிட்ட வரதுக்குள்ள பஸ்ல ஏறீட்ட.. நானா பஸ்ஸான்னு ஒரு கை பார்த்துட்டேன்..”

 

“பாத்ததும் கூப்பிடுறத விட்டுட்டு வேகாத வெயில்ல பஸ்ச துரத்திகிட்டு!”

 

‘என்ன பண்ண உன்ன பாத்தா மூளை ஸ்ரைக் பண்ணுதே..’ இழுத்து மூச்சு விட்டவன், “ஃபங்ஷன் முடிச்சிடுச்சா? இல்ல இனிமேல் தானா?”

 

“என் ஃப்ரெண்ட் ஸ்ருத்தியோட அக்கா பொண்ணுக்கு பேர் வைக்கிற ஃபங்ஷன். காலைலயே முடிஞ்சிடுச்சி. அவ கூட அரட்டை முடிச்சுட்டு கிளம்ப லேட் ஆகிடுச்சு!”

 

“அப்போ ஃப்ரியா விழி?”

 

“ஏன் மனோ… நான் ஃப்ரியா இருந்தா என்ன பண்ண போறீங்க?”

 

வந்த ஆட்டோவை நிறுத்திக் கொண்டே, “லன்ச் சாப்பிட போலாம் வான்னு கூப்பிடுவேன்”

 

“நான் ஏன் உங்க கூட வரணும்?”, நமுட்டு சிரிப்போடு புருவம் உயர்த்தினாள்.

 

“சரி.. நீ என் கூட வர வேண்டாம். என்னைக் கூப்பிடு, நான் உன் கூட வரேன்..”

 

என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே, “நான் ஏன் உங்கள கூட்டிட்டு போகணும் மனோ?” கேட்க, அவனும் விடுவதாக தெரியவில்லை.

 

“உனக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததுக்கு குரு தட்சணை!”

 

அவள் பதில் அளிக்கும் முன், வந்து நின்ற ஆட்டோவில் அவளையும் ஏற்றி தானும் ஏறிக் கொண்டு அவன் வாகனம் முன் இறங்கிக் கொண்டனர்.

 

“ஹேய்.. இன்னும் இந்த கார் இங்க தான் நிக்குதா? செம்மையா இருக்கில?”

 

“பிடிச்சிருக்கா?”

 

‘இதயே எல்லாத்துக்கும் கேப்பானாமா?’ “பிடிச்சா என்ன பண்றதா உத்தேசம்? இந்த கார வாங்கி ரைட் கூட்டிட்டு போவீங்கன்னா சொல்லுங்க..”

 

“ஏறு.. உனக்கு போதும்ன்னு தோன்ற வரை ரைட் போலாம்!”, கார் கதவை அவளுக்குத் திறந்து விடவும், விழி விரித்தாள்.

 

“இது..?”

 

“டொயோடா கேம்ரி ஹைப்ரிட். 2.5லிட்டர்ஸ், 179 ஹார்ஸ்பவர், இது தான்.. இந்த மெட்டாலிக் க்ரே தான் வேணும்ன்னு கேட்டிருந்தேன். காலேஜ் டாப்பர் ஆகவும் அப்பா ப்ரெசென்ட் பண்ணினாங்க! ஆன்-ரோட் 50 தொட்டுடுச்சு. சீட் கம்ஃபர்ட்… ரைட் ஸ்மூத்னஸ்.. ரொம்ப பிடிச்சுது! போதுமா டீடெயில்ஸ்? ஏன் இன்னும் ஏறாம நிக்கிற? ஏறு. வெளியில வெயில் கொளுத்துது… ஏறு ஏறு”

 

ஏறிய பின்னும், முகத்தில் ஏசி-யின் குளுமை அடித்தபின்னும் ஏதோ எங்கோ இடித்தது.

 

“நீங்க யாரு?”, என்றாள் முகம் சுருக்கி!

 

“கம் அகெயின்.. என்ன என்ன கேட்ட?”, இது என்ன புது கேள்வி என்ற பார்வை அவனிடம்.

 

“ஐ மீன்… நீங்க கம்யூடர் சென்டர்ல வேல செய்றவங்க தானே..”

 

“வாட்?”, ‘இது என்ன டா எனக்கு வந்த சோதனை’ என்ற பார்வை அவனிடம்!

 

அவள் மனம் சமன்படவில்லை. மிஞ்சிப் போனால் இருபதாயிரம் வாங்குபவனிடம் எப்படி இந்த வாகனம்? குழம்பிப் போனாள்.

 

“காலேஜ் டாப்பர்ன்னா…? எந்த காலேஜ்? அப்புறம் ஏன் அங்க வேல? இந்த கார ப்ரெசென்ட் பண்ண முடியற அளவுக்கு உங்களுக்கு வசதி இருக்குன்னா.. ப்ச்! யாரு நீங்க?”

 

“அன்னைக்கே சொன்னேன் எல்லாத்தையும். நீ கேக்கவே இல்லியா?”

 

“எப்.. எப்போ?”

 

“ம்ம்!” நீண்ட மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டவன், “பசிக்குது. சாப்பாட வாங்கி தந்துட்டு கேள்வி கேளு.”

 

நேரம் காலம் தெரியாமல் கைப்பேசி அழைத்தது. சௌந்தரியா திரையில் சிரித்துக் கொண்டிருந்தார்.

 

“அம்மா.. ஃபோன்ல”

 

“ப்ரைவசி வேணுமா.. கார ஓரம் நிறுத்தவா?”

 

“இல்ல இல்ல.. பேச ராணுவ ரகசியம் எதுவும் இல்ல. உங்களுக்கு ப்ராப்லம் இல்லியே?”

 

“நோ ஃபார்மாலிட்டீஸ். நீ பேசு”

 

அவன் கவனம் சாலையில் நிலைக்க.. அம்மாவும் மகளும் பேச ஆரம்பித்தனர்.

 

“ம்மா.. ஏன் மா?” அவள் குரம் உயர்த்தவும் அவன் கவனம் இப்பொழுது அவர்கள் பேச்சில். அந்த பக்கம் கேட்கவில்லை. ஆனால் இவள் பொரிந்து கொண்டிருந்தாள்.

 

“அம்மா… இந்த குலம் கோத்திரம் இனம் மதம்… பச்! அவன் யார வேணும்னாலும் இருக்கட்டும் அதுக்கு?”

 

“வசதியா இருந்தா என்ன? ஃபேமஸ் டாக்டரா  இருந்தா நமக்கென்ன?”

 

“மூளைக்கு படிச்சு என்ன பிரயொஜனம்? அவருக்கு மூளை இல்லியே… 20 வயசு கூட ஆகாத பொண்ண போய்… பச்!”

 

“ஏன் மா ஏன்? விடுங்கம்மா என்னை! செக்கண்ட் இயர் தான் படிக்கிறேன். நான் படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போகணும்”

 

“ம்மா.. அவங்க அவசரத்துக்கு என் ஆசையில மண்ண அள்ளி போடாதீங்க! அப்பாட்ட குடுங்க நான் அப்பாட்ட பேசறேன். பாட்டி எங்க?”

 

“எனக்கு யாரையும் பாக்க வேண்டாம். போட்டோ அனுப்பினா பாக்க கூட மாட்டேன். அப்பிடியே டெலீட் பண்ணிடுவேன்!”

 

“என் பதில் நோ தான்! ஒரு வருஷம் ஒரே ஒரு வருஷமாது வேலைக்கு போகணும் மா..”

 

“அட்லீஸ்ட் படிச்சாது முடிக்கிறேனே.”

 

“அப்புறம் நைட் பேசுவோமா… வெளியில இருக்கேன். பாய்!”

 

கைப்பேசியை அணைத்ததும் அவள் இயல்புக்குத் திரும்பினாள். அவள் அப்பாவையும் பாட்டியையும் தாண்டி படித்து முடிக்கும் முன் அவளுக்கு விருப்பமில்லாத திருமணம் நடக்காது என்பது அவளுக்குத் தெரியும் என்பதால் முடிந்த பேச்சு வார்த்தை எண்ணத்தில் நிலைக்கவில்லை. ஆனால் அது அவனுக்குத் தெரியாதே… அவன் அதிலேயே உழன்றான்.

 

“மாப்பிள்ளை பாத்தாச்சா..?”, சாதாரணம் போல் கேட்டாலும் உள்ளுக்குள் உதறல் தான்!

 

“பச்! நீங்க உங்கள பத்தி சொல்லுங்க. ப்ளீஸ்…”

 

“படிச்சு முடிச்சதும் கல்யாணமா?”

 

“என்னைக்குனாலும் செஞ்சு தானே ஆகனும்! இப்போ நீங்க உங்கள பத்தி சொல்றீங்களா?”

 

இதற்கு மேல் தன்னை பற்றித் தெரிந்து என்ன செய்யப் போகிறாளாம்? “ஏன் என்ன பத்தி தெரிஞ்சா தான் என் ஃப்ரெண்டா இருப்பியா?”

 

‘ஃப்ரெண்டா?’ அவனை பார்த்தாள். கருப்புக் கண்ணாடிக்கு பின் ஒளிந்திருந்த கண்களிலிருந்து உணர்வுகளை புரிந்துக் கொள்ளமுடியவில்லை!

 

அவள் ஏன் வாய் திறந்தாள் அதன் பின்! மூக்கை உறுத்தி பாடாய்ப் படுத்திய  வளயத்தைக் கழட்டி அதை அருகிலிருந்த கப் ஹோல்டரில் போட்டுவிட்டு அமைதியாய் கண் மூடி சாய்ந்துகொண்டாள்.

 

‘இப்போ இவன வான்னு கூப்பிட்டேனா.. அப்புறம் வந்து பிடிச்சிருக்கா.. மண்ணான்னு ஆயிரம் கேள்வி எதுக்கு? ஃப்ரெண்டா இருக்கவா..? போடா. நீ யார வேணா இரு!’ இறுக கண்களை மூடிக் கொண்டாள்.

 

“மேடத்துக்கு கோவமா?”

“..”

“மூக்கில ஓட்டை காணம்.. ஆனா மூக்குத்தி எல்லாம் போட்டிருக்க?”

“..”

“சாரில பெரிய பொண்ணா தெரியற. இப்படி எல்லாம் அழகா வெளியில் சுத்தரனால தான் பொண்ணு கேக்கறாங்க”

“..”

“பேச மாட்டியா?”

“..”

“நீ ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறன்னு தெரியுதா?”

“..”

“விழி..”

 

“ஆமா எனக்குப் பிடிவாதம் தான். முன்னப் பின்ன தெரியாதவங்க கூட பழக முடியாது.”. கண்கள் மூடியே இருக்க இதழ் மட்டும் அசைந்தது.

 

“ஒரு அம்மா, ஒரு அப்பா, அவங்களுக்கு ஒரே மகன். அது நான்… இது தான் என் குடும்பம். எங்க கூடவே கும்பத்தில ஒருத்தங்களா யமுனாக்கா.”

 

பட்டென்று கண்கள் திறந்தாள். அவன் தொடர்ந்தான்.

 

“ராயபெட்ல தான் வீடிருக்கு. கொஞ்சம் வசதியான குடும்பம் தான். கம்யூட்டர் எஞ்சினியர். போன வருஷம் பாஸ் ஆனேன். இப்போ சாப்வேர்ல இருக்கேன். இன்னும் ரெண்டு மாசத்துல அமெரிக்கா போறேன். நாலஞ்சு மாசம் ஆகும் திரும்பி வர. ப்ராஜெட் இழுத்தடிச்சா வர முடியாமலும் போகலாம்.

அடுத்த வருஷம் பிஜி ஜாயின் பண்ணனும்ன்னு ப்ளான். அதுக்கு, டிசம்பர்குள்ள கலேஜஸ்க்கு அப்ளை பண்ணனும். எல்லாம் சரியா நடந்து நான் ஆச பட்ட எம்.ஐ.டி.-ல சீட் கிடைச்சா… அடுத்த ரெண்டு வருஷம் அங்க தான்.

படிப்பு முடிச்சு… அங்கேயே ஒரு வேல பார்த்தா தான் இங்க வரும் போது பெரிய கம்பனியில பெரிய ஆஃபர் கிடைக்கும்! எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கிற வரைக்கும்  கொஞ்ச வருஷம் அங்க வேலை பாக்கவேண்டி வரும்!”, சொல்லிக் கொண்டிருக்கும் போதே எப்படியோ போல் இருந்தது.

‘மூன்று வருடமேனும் எனக்காகக் காத்திருப்பாயா?’ கேள்வி தொண்டைக்குள் மாட்டி மாண்டு மடிந்தது.

 

மீண்டும் அழுகை வரும் போல் இருந்தது, அலர்விழிக்கு. அவன் வேண்டாம் என்று கூறியதன் காரணம் முழுவதுமாக புரிந்தது. “உனக்காக.. எனக்காக.. நமக்காக இப்போ வேண்டாம்!” கூறினானே!

 

இருவருக்கும் ஒன்று சேர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ‘இப்பொழுதே திருமணத்திற்கு அவசரப் படும் குடும்பம் ஒரு பக்கம்.. வேற்று இனத்தைச் சேர்ந்த இவன் ஒரு பக்கம்.. நான்கு வருடம் கண்காணா தேசத்திற்கு செல்ல தயாராகி கொண்டு! ச்ச…!’

 

“அப்பிடியே போக வேண்டியது தானே… ஏன் திரும்பவும் பிடிச்சிருக்கான்னு கேட்டுகிட்டு வந்தீங்க?”, இயலாமை கோபமாய் வெளி வந்தது.

 

“விழி..?”, அவன் முகம் விழுந்து போனது.

 

“ஏன் இருக்கப் படிப்பும் வேலையும் பணமும் போதாதா உங்களுக்கு! அங்க போய் படிச்சா தான் ஆச்சா?” எரிந்து விழுந்தாள்.

 

சிவந்து போன அவள் முகத்தை பார்த்தவனிடம் ஒரு நிமிட மௌனம். என்ன நினைத்தானோ.. “சரி போகல. இங்கேயே இப்படியே இருந்திடுறேன். போதுமா?”, கூறும் பொழுதே ஏதோ வெறுமை.

 

அதன் பின் இருவருமே பேசிக் கொள்ளவில்லை. வாகனம் உணவு விடுதி முன் நின்றது.

 

கட்டிடத்தைப் பார்த்ததுமே பர்ஸ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

 

இருவருக்குமான மேசையில் அமர, அவள் இதயம் அடித்துக் கொண்டது மனோவிற்காக அல்ல.. ‘செத்த அலர்.. பசிக்கலன்னு ஜூசோட நிறுத்திக்கோ..’

 

“என்னை பத்தி கேட்டியே?”, அவன் தான் கேட்டான்.

 

“அது தான் உங்க ஹிஸ்டரி ஜாகரஃபி எல்லாம் சொல்லிட்டீங்களே.. இதுக்கு மேல என்ன இருக்கு?”

 

“ம்ம்.. இன்னும் ஒன்னு பாக்கி! அப்பா பேங்க்ல ஆப்பிஸர். அம்மா உன் ஃப்ரெண்ட்.. அவங்களுது தான் கம்யூடர் சென்டர்.”

 

“எஸ்தர் ஆன்டி?” முகம் மலர்ந்து போனது.

 

“ம்ம்.. உன்ன பத்தி அம்மா ஒரு ஒரு தரமும் பக்கம் பக்கமா பேசறாங்க! அம்மாக்கு உன்ன அவ்வளவு பிடிச்சிருக்கு!”

 

“எனக்கும் ஆன்டிய ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்.”

 

மகனின் கனவைப் பற்றி பக்கம் பக்கமாக இவளிடமும் பேசினாரே! மனோவா தான் அந்த மகனா?

 

‘கண்டிப்பா இந்த தரம் உங்க மகன் கனவு நிறைவேறத் தடை ஏதும் வராது!’ சொல்லிக் கொண்டாள்.

 

அவன் கண்கள் மென்யூ கார்டில் பதிய.. “என்ன வேணும்ன்னு சொல்லு விழி..”

 

“உங்க நம்பர் குடுங்க மனோ..”

 

அவன் கைப்பேசியிலிருந்து அழைப்பு விடுத்தான்.

 

‘என் நம்பர் தெரியுமா?’ அவசியம் இல்லாத கேள்வி அவசியம் இல்லாததால், எழுந்த இடத்திலேயே மறைந்தது.

 

“ஏன்னு கேளுங்க மனோ!”

 

“ஏன்?”

 

தொண்டை வரை அடைத்து நின்ற காதலை உள்ளுக்குள் விழுங்கி, “ஃப்ரெண்ட்ஸ்னா கான்டாக்ட்ல இருக்கணும் இல்ல.. அதுக்கு தான்!”, என்றாள்.

 

“ஓஹோ.. நீயும் முடிவு பண்ணிட்ட போல!”

 

“நடுவில வரவே மாட்டீங்களா?”

 

“போக வேண்டாம்ன்னு சொன்னியே விழி?”

 

“பதிமூனு வயசில இருந்தே எம்.ஐ.டிக்கு போகணும்ன்னு ஒத்த கால்ல நிக்கிறதா கேள்வி பட்டேன். பட்டுன்னு போகலன்னு சொன்னா நம்பறமாதிரி இல்லியே…”

 

“..”

 

“சாரி! லூசு மாதிரி பேசிட்டேன். ஏதோ ஒரு கோபம், காரணமே இல்லாம உங்க மேல திரும்பிடுச்சு! நல்ல படியா போய்ட்டு வாங்க. நாலஞ்சு மாசம் வேலை அப்புறம் ரெண்டு வருஷம் படிப்பு அப்புறம் புது வேலை அட்லீஸ்ட் ரெண்டு வருஷம்! மொத்தத்துல நாலஞ்சு வருஷம் ஆகிடும் இல்ல?”

 

“ம்ம்”

 

“நடுவில வரவே மாட்டீங்களா?”

 

“கண்டிப்பா வருவேன் விழி. ரெண்டு வாரம் கிடைச்சா கூட வந்துட்டு போவேன். வர்க் ஜாயின் பண்றதுக்கு முன்ன கொஞ்சம் ப்ரேக் கண்டிப்பா எடுப்பேன். நீ..? உன் ப்ளான்?”

 

“நான் கூட இன்னும் ஒரு வருஷம் தான். அப்புறம் எங்க போவேன்னு எனக்கே தெரியாது. ஆனா போய்டுவேன்.”, திருமணத்திற்கு சம்மதிக்க மட்டேன் என்று கூற நினைத்து… என்னை மறந்து விடாதே என்று சொல்ல நினைத்து.. அவன் வேண்டாம் என்றதை பற்றி பேச கூடாது என்று நினைத்து, கடைசியாக ஏதோ உளறி கொண்டிருப்பது போல் தோன்றியது. வாய் மூடிக் கொண்டாள்.

 

அவள் திருமண பேச்சை பற்றி அவனுக்கு தெரிந்தே ஆகவேண்டும் போல.. “உடனே கல்யாணம் பண்ணலனா… நல்லா படிச்சு சென்டர் வழியாவே எம்.என்.சி-ல நுழைஞ்சுடு. அங்க இருந்து ஸ்டேட்ஸ் வர வாய்ப்பு கிடைச்சா… என்ட்ட சொல்லுவ தானே..”

 

“நாளைக்கே எனக்கு கல்யாணம் ரேஞ்சுக்கு பேசறீங்க மனோ! ஃபோன்ல பேசினத மறந்திடுங்க. அது எல்லா வீட்டுலயும் பொண்ணுங்களுக்கு நடக்கிறது தான்!

நீங்க அங்க போனதும் என்னை மறந்திடாமா என் கூட டச்சுல இருந்தா சொல்றேன்..”

 

இதயம் மீண்டும் அதன் ரிதத்திற்கு வந்தது.

 

“உன்னையும் சென்டர்ல்ல பாக்க முடியறது இல்ல. எனக்கு ஓவர் பிஸியா போய்ட்டு இருக்கு. இனி மேல் நானும் கம்யூட்டர் சென்டர் பக்கம் அதிகம் வர மாட்டேன்.”

 

“ஓ..”

 

“கொஞ்ச நேரம் முன்னாடி உன்ன பாக்க தான் ஹாஸ்டலுக்கு போனேன். ஆன்டி நீ வெளியில போய்ட்டதா சொன்னாங்க. வழில உன்ன பாப்பேன்னு எதிர்பார்க்கல”

 

என்ன சொல்ல போற மனோ? மனம் எதை எதையோ நினைத்து ஆசைக் கொண்டது.

 

“விசா ஸ்டாம்ப் ஆகிடுச்சு ரெண்டு மாசத்துல கிளம்பறேன்னு சொல்லணும்னு தோனிச்சு. அதுக்கு தான்..”

 

“ஓ..”

 

மெலிதான இசையில், மிதமான குளிரில் கண்ணாடி தடுப்புக்கு மறுபுறம் தெரிந்த நீச்சல் குளத்தை பார்த்து அமர்ந்திருந்தவள் எண்ணம் எல்லாம் பர்ஸில் இருக்கும் பணம் பற்றித் தான். வேறு எண்ணங்களுக்கு விடை கொடுத்திருந்தாள்.

 

“என்ன விழி யாருமில்லாத பூல எவ்வளவு நேரம் முறைச்சுட்டே இருப்ப? இந்த வெல்கம் ட்ரிங்க் ட்ரை பண்ணி பாரு. நல்லா இருக்கு..”

 

சுவைத்தாள். நாவு இன்பத்தில் திளைத்தது. எச்சில் சுரபி எல்லாம் உயிர்தெழ, ‘ஸ்ஸ்’ என்று கண்களை மூடி ரசித்தாள்.

 

“நல்லா இருக்கில்ல?”

 

“வாவ்.. என்ன ஜூஸ் இது?”

 

“ட்ராபிக்கல் ஃப்ரெஷ் ஜுஸ்.. ஆரெஜ், ஆப்பிள், பேர், பைன்ஆப்பிள், லைம்..”

 

எச்சில் ஊற ரசித்து அதை அவள் பருக… அவன் ரசனையோடு பருகியது ஜூசோடு நிற்கவில்லை என்பது நிஜம்.

 

“ஆர்டர் பண்றோமா… புஃபே ட்ரை பண்ணலாமா?”, அவன் வினவ.. பட்டியலில் விலை  பார்த்தவள் கண்கள் விரிந்தது.

 

அந்த மூன்று அங்குல கோப்பையிலிருந்த இரண்டு அங்குல அளவு ஜூஸ் மூன்று டிஜிட் விலையை காட்டியது.

 

“மனோ..”

 

“சொல்லு..”, மென்யு காட்டை பார்த்துக் கொண்டே வினவ..

 

“இங்க க்ரைண்டரா? இல்ல ஆட்டுக்கல்லா..?”, என்றாள் படு சீரியசாக.

 

“அங்..? அப்படினா?”, பாவம் அவனுக்குப் புரியவில்லை.

 

“அப்படினா..

என் கிட்ட இருக்க அமௌன்டுக்கு என்னால இந்த ஜூசுக்கும், ஒரு பாட்டில் தண்ணிக்கும் ஒரு ஸ்டாட்டருக்கு மட்டும் தான் பில் பே பண்ண முடியும். மீதிக்கு நான் மாவாட்டணும். அது தான் கேட்டேன்”

 

சத்தம் போட்டுச் சிரித்தான். பின் மேனேஜரிடம் ஏதோ கேட்டு எங்கோ சென்று வந்தான்.

 

“க்ரைண்டராம். சோ பாத்திரம் கழுவ விடுவாங்களாம் இல்லனா இங்க செர்வ் பண்ணனுமாம். உனக்கு எது வசதி?”

 

“சேந்து சாப்பிடறோம்! சேந்தே பாத்திரம் கழுவலாம். நீங்க தேய்ங்க நான் கழுவறேன்…”, அவளும் சிரித்தாள்.

 

“அந்த பக்கம் வாஷ் ரூம் இருக்கு. வேணும்னா போயிட்டு வா!”

 

நேரம் கடந்தது. வயிறோடு மனமும் நிறைந்தது.

 

நீச்சல் குளத்தில் சிலர் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் அப்பாவும், ஒரே வயதில் இரு குழந்தைகளும் அடக்கம். பல வர்ண பந்து இருவரையும் சிரிப்பில் ஆழ்த்தியிருந்தது. அம்மா தண்ணீரில் இறங்கவும் சிறுவன் அம்மா கழுத்தைக் கட்டிக் கொள்ள.. மகள் அப்பா முதுகில் சவாரி சென்றாள். சிறிது நேரம் வெளியே தெரிந்த கவிதையை ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் காவியம் படைக்க அசை பிறந்தது.  

 

“என்ன ஸ்வீட் சொல்லட்டும்?” கேட்டவனை பார்த்தாள். இருவர் விழிகளும் சந்தித்து நகர மனமின்றி சிக்கி நின்றுக் கொண்டது.

 

இந்த நிமிடம் இருவருக்குமே அவர்கள் லட்சியமும் பிடித்தமில்லை, கனவும் பிடித்தமில்லை.

 

சுற்றியிருக்கும் எதுவுமே வேண்டாம்! எதிரில் இருப்பவரின் கனவாய்.. வாழ்வாய்.. லட்சியமாய் தான் மட்டும் இருக்க முடியாதா என்ற கடலளவு ஆசை மட்டுமே!

 

காவியம் பாடவா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர்தான் எதிர்காலமோ

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!