Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ரஞ்சிதாவின் ராம் வெட்ஸ் சீதா – 7 (2)

ராம் வெட்ஸ் சீதா -7(2).

 

நிச்சியதார்தம் மிகவும் சிறப்பாகவும் நல்லபடியாகவும் நடந்தேறியது..

 



Advertisement

கொட்டாம்பட்டி ஊர் மக்கள் வந்த பேருந்திலேயே  அனைவரும் தங்களது இல்லத்திற்கு கிளம்ப வெற்றியும் ஹரிணியும், அவர்களை பின் தொடர்ந்தார்கள் ராயல் என்பீல்டில்..

 

அவர்கள் சென்றதும் ராதாவின் வீட்டில் ஏதோ போட்டு உடைப்பது போல் சத்தம் கேட்பது போலிருக்கே, வாங்க என்னானு பாக்கலாம்..

Advertisement

 

Advertisement

அஹ்ஹா, ஆத்தாளுக்கும் மவளுக்கும் சண்டை ஆரம்பிச்சிடுச்சு போல, ராதாவின் அப்பத்தா  பேச்சியம்மா ரொம்ப ஆர்வமா இந்த சண்டையை பாக்கும் போது நம்ம மட்டும் என்ன பாக்காமல் இருக்க முடியுமா!!??

 

“இந்தா மா சிவகாமி, யாரை கேட்டு எனக்கு நிச்சியம் பண்ணனும் னு நீ முடிவு பண்ணி எல்லாமே முடிஞ்சதுக்கு அப்புறம், ஒண்ணுமே தெரியாத போலிருக்குற நீயி “என்று பெத்த தாயை பேர் சொல்லி கூவும் ராதாவை ஆவென பார்த்தார் பேச்சி..

Advertisement

 

“இந்தா கிழவி உன் ஓட்ட வாயை மூடு முதல்ல வாயி உள்ள ஈ போயி மூக்கு வழியா வருது, ஆமா எனக்கு நிச்சியம் நடக்க போகுதுனு உனக்கு தெரிஞ்சி இருக்குமே, நீ எதுக்கு என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல,”என்று அவளின் அப்பத்தாவையும் சண்டைக்கு இழுத்தாள் ராதா.

 

” ஒருத்தவங்கலாச்சும் வாயை திறந்து பேசுங்களா இப்படியே உம்முனு முகத்தை தூக்கி வச்சி இருந்தா நான் சும்மாவிடுவேனாக்கும்???, இப்போ வாயை திறந்து சொல்ல போறிங்களா இல்லையா ” என்றவள் ஓடி சென்று புல் அறுக்கும் அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து அவளின் தாய் மற்றும் அப்பத்தாவின் முகத்துக்கு அருகே காட்டி “இந்தா கிழவி பாக்கு இல்லைனா மட்டும்,, ஏய் ராசாத்தி வெத்திலை பாக்கு இல்லை, சுண்ணாம்பு இல்லை, புகையிலை இல்லை ன்னு கடைக்கு அனுப்புன வாய் இப்போ ஏன் திறந்து பேச மாட்டுது, “என்றவள் பக்கத்தில் திரு திருவென முழித்து கொண்டிருந்த தாயை பார்த்து “ஏன் மா நான் உனக்கு என்ன துரோகம் பண்ணேன், படிக்கணும் ன்னு ஆசை பட்டது தப்பா மா, சொல்லு மா நான் படிச்சி டாக்டர்ரா ஆகணும் ன்னு ஆசைப்பட்டதும் தப்பா மா, என்னைய ஏன் இப்படி ஒரு கோலத்துல பாக்கணும் ன்னு நீ ஆசை பட்ட, எனக்கு என்ன வயசு மா ஆகுது, வெறும், பதினெட்டு தான் ஆகுது,  ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை நினைச்சி என் முகத்துல கறுப்பு மையை பூசிகிட்டு சுத்திட்டு இருந்த நானு, ஊருக்கே கருவாச்சியா தெரிஞ்சேன் , ஆனா இன்னக்கி எல்லாரும் என்னைய பார்த்த பார்வையில பொறாமை தான் இருந்தது தவிற நம்ம வீட்டு விஷேஷத்துக்கு ஆர்வத்தோடு யாருமே வரல மா, ஏம்மா வாயை மூடிட்டு ஊமை மாதிரி நிக்குற, ஏதாவது வாயை தொறந்து பேசு மா “என்று கையில் இருந்த அரிவாளை தூக்கி ஓரம் வீசி விட்டு,தாயின் கால்களை பிடித்து கதறி கொண்டிருந்தாள் ராதா..

 

மகளின் கண்ணீரை பார்த்து தாங்கி கொள்ள முடியவில்லை அந்த தாயால்,

உடனே கீழ அமர்ந்து மகளின் விழியோரத்தின் அருவி போல் கொட்டும் கண்ணீரை துடைத்து விட்டு அவளின் கரங்களை பிடித்து “எல்லாம் உங்க அப்பா கொடுத்த வாக்கு தான், உங்க அப்பா இருந்த வரைக்கும் எனக்கு எந்த பயமும் கவலையும் கிடையாது, ஆனா உலகம் ரொம்ப சீரழிச்சி போயி வருது ராதா, இதோ உன் அப்பத்தா கொஞ்சம் நாள் இருப்பாங்க, அவங்க போறத்துக்கு முன்னாடியே உன் கல்யாணத்தை பாக்கணும் ன்னு இருப்பாங்களே மா “என்றவர் மேலும் ” வெற்றி தம்பி ரொம்ப நல்லவர் மா, அவருக்கு என்ன குறை இருக்கு, படிப்பு, வேலை, பெரிய வீடு, இத்தனைக்கும் மேல உன் சொந்த அத்தை மவன், உனக்கும் அவருக்கும் சின்ன வயசுல பேசி வச்சது தான் இப்போ நடந்துகிட்டு இருக்கு டி ராதா “என்று பெண்ணவளின் கையை வருடி “அம்மா உனக்கு நல்லது தான் செய்வேன், கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட படிக்கலாம், உன் ஆசையை நிறைவேத்த உன் அத்தை எப்போதும் உன் பக்கம் இருக்கும் பழச நினைத்து பயப்படாத, அந்த கோமளம் இன்னக்கி உன்னை பார்த்த பார்வை எனக்கும் தெரியும் ,”என்று மகளுக்கு புரியும் படி எடுத்து விளங்கி சொன்னார் சிவகாமி..

 

“சாரி அம்மா, நான் ஏதோ கோவத்துல பேசிட்டேன் “என்றவள் தாயின் மடியில் தலையை வைத்து படுத்து கொண்டாள் ராதா.

 

ராமகிருஷ்ணனின் இல்லம்.

 

“அடேய்ய் முருகேசு  என்ன டா பக்கத்து ஊருல இன்னக்கி ஒரு விஷேஷம் நடந்திருக்கு போல, அந்த ராதா புள்ளைக்கு கல்யாணமாம், படிக்கற வயசுல இந்த கல்யாணம் அந்த ராதாவுக்கு தேவையா டா “என்ற ராமை பார்த்து “அது எனக்கு தெரியாது டா, எனக்கு இருக்கற ஒரே சந்தேகம் நீ தான்” என்ற நண்பனை புரியாமல் பார்த்த ராம் அவனிடம் “என்ன டா சந்தேகம் உனக்கு, அதுவும் என் மேலையே ” என்றான் ராம்.

 

“அந்த  ராதா புள்ளைக்கு கல்யாணம்ன்னா உனக்கு என்ன டா?, அது அவங்க வீட்டுல பெரியவங்க பேசி நடத்தி வைக்கறாங்க, அதனால நம்ம அதுல வாயை நுழைக்க கூடாது “என்று கூறும் முருகேசுவை பார்த்து ” ஏன்டா அப்போ சீதாவையும் இப்படி தான் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களா”   என்றவனின் முகத்தை நன்றாக ஆழ்ந்து பார்த்த முருகேசு நண்பனின் மனவோட்டத்தை புரிந்து கொண்டு “டேய் ராமு , படிக்கிற வயசு டா இது, சீதாவும் நம்ம வயசு தான், முதல்ல ஸ்கூல் படிப்பை முடிச்சிட்டு ரிசல்ட் வந்ததும் சீதா எந்த காலேஜில் சேரறளோ, அங்கேயே நீயும் நானும் ஒண்ணா படிக்கலாம் “என்ற நண்பனை கட்டி அணைத்து “நிஜமாவா சொல்லுற முருகேசு நீ ” என்ற ராமின் மனதை புரிந்து கொண்டு “” அஹ்ஹா இவன் சீதாவை லவ் பன்றான் போல “இது மட்டும் அந்த  புள்ள அண்ணன் காரன் சேதுபதி க்கு தெரிஞ்சிது அவ்ளோதான் செத்தான்டா ராமு ” என்று மனதுக்குள் புலம்பிய போது அங்கு வந்து கொண்டிருந்தாள் அபிநயா.

 

வந்தவள் நேராக ” முருகேசு உன்னைய அத்தை சாப்பிட கூட்டாங்கா, என்றவள் ராமிடம் திரும்பி அண்ணா அம்மா உன்னையும் சாப்பிட கூட்டுது, நீங்க விளையாடுனது, பேசுனது எனக்கும் தெரியும், “என்று ராமின் செவியில் யாரு அந்த சீதா “என்று கேட்டவளை பார்த்து அதிர்ந்து நின்றான் ராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!