Skip to content
Post Views: 4,217
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 6
மறுநாள் கல்லூரிக்கு வந்த அர்ஜுனின் கண்களில் மீரா படவே இல்லை. மதியம் காண்டீனுக்கு அர்ஜுன் சூர்யாவையும் அழைத்துக்கொண்டு மீராவை பார்க்க செல்ல… அங்கே மீரா அவள் தோழிகளுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
Advertisement
அவள் கான்டீன் சாப்பாடு தான் சாப்பிட்டு கொண்டிருந்தாள். அவ்வளவு பெரிய வீட்ல இருக்கா…. வீட்ல சமையலுக்கு ஆள் இருக்கும், அப்புறம் ஏன் இங்க வந்து சாப்பிடுறா? என்று யோசித்துக் கொண்டே சென்றான்.
அர்ஜுனும், சூர்யாவும் வீட்டில் இருந்தே சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவார்கள். அன்றும் அதேபோல் அதைத் தங்கள் வகுப்பிலேயே அமர்ந்து சாப்பிட்டுவிட்டே வந்திருந்தனர். அதனால் ஆளுக்கு ஒரு ஐஸ்கிரீம் மட்டும் வாங்கிக்கொண்டு மீராவின் பார்வையில் படும்படியான இடத்தில் சென்று இருவரும் நின்றனர்.
அர்ஜுன் கான்டீன் உள்ளே வரும் போதே மீரா பார்த்துவிட்டாள். ஆனால் அவனைப் பார்க்காதது போலவே இருந்தாள். அர்ஜுன் அவள் பார்க்கவில்லையோ என்று நினைத்துச் சூர்யாவிடம் சத்தமாகப் பேச… அப்போதும் மீரா அவன் பக்கம் திரும்பவே இல்லை.
அர்ஜுனுக்குப் புரிந்தது அவள் வேண்டும் என்றே தன் பக்கம் திரும்பாமல் இருக்கிறாள் என்று. கோபமா இருக்கிறாளோ சரி சாப்பிட்டு முடிக்கட்டும் பேசுவோம் என்று நினைத்தவன், அவளுக்காகக் காத்திருக்க. மதிய வகுப்பு தொடங்கும் நேரம் நெருங்கும் வரை மீரா சாப்பிட்டே முடிக்கவில்லை. அவள் தோழிகளுடன் பேசிக்கொண்டு மெதுவாகச் சாப்பிட்டாள்.
அர்ஜுனுக்கு வகுப்பு தொடங்கும் நேரம் ஆனதால் மாலை பேசுவோம் என்று நினைத்து, அவன் வகுப்பிற்குச் சென்றான். மாலை அர்ஜுன் தன் வகுப்பில் இருந்து வரும் முன்பே மீரா சென்றுவிட்டாள். இப்படியே மீரா அந்த வாரம் முழுவதும் அர்ஜுனுக்குப் போக்கு காட்டினாள்.
அந்த வாரம் சனிக்கிழமை அர்ஜுன் ஷட்டில் விளையாட மீரா வருவாளா இல்லையா என்று நினைத்துக் கொண்டே செல்ல… மீரா ஏற்கனவே அங்கே வேறு சிலரோடு சேர்ந்து வேறு கோர்ட்டில் விளையாடி கொண்டிருந்தாள்.
மீரா, அர்ஜுனை பார்த்தும் பார்க்காத மாதிரியே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கே ஜீவாவும் வர அர்ஜுனும், ஜீவாவும் சேர்ந்து விளையாடினார்கள்.
அர்ஜுன், ஜீவாவோடு இன்னும் இருவர் வந்து சேர, கேம் விளையாட தொடங்கினார்கள். அப்போது பார்த்து மீரா வீட்டுக்கு கிளம்ப, அர்ஜூனால் கேம்மை பாதியில் நிறுத்தி விட்டு அவள் பின்னே செல்ல முடியவில்லை.
அர்ஜுனுக்குக் கடுப்பாக வந்தது. அவன் விளையாட்டில் விருப்பம் இல்லாமல் ஆடி கொண்டிருந்தான். விளையாடி முடிந்ததும் ஜீவா “என்ன உங்க சண்டை இன்னும் முடியலையா?” என்று கேட்க…. அர்ஜுன் அவனிடம் சிரித்து மழுப்பிவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றான்.
அன்று ஆராதனா காலையில் நடன பள்ளிக்கு செல்லவில்லை. அதைக் கூட அர்ஜுன் கவனிக்காமல் இருந்தான். மாலையில் அவள் கிளம்பி கொண்டிருக்கும் போது அங்கே வந்த அர்ஜுன் “எங்க போற?” என்று கேட்க….
ஆராதனா “டான்ஸ்… கிளாஸ்க்கு” என்றாள்.
“நீ காலையில பாட்ச் தான?”
“போனவாரம் போனபோது… இந்த மாசத்தில இருந்து சாயங்காலம் பாட்ச் வரேன்னு மாத்திக்கிட்டேன்.” என்ற ஆராதனா, “ஆதி அண்ணா போலாமா?” என்று கேட்டவள், அர்ஜுனை ஓரப்பார்வை பார்க்க… அவள் சொன்னதைக் கேட்டு அவன் முகம் மலர்ந்தது.
“நான் கொண்டு போய் விடுறேன்” என்றான்.
“ஒன்னும் தேவை இல்லை, நீ உன் வேலைய பாரு” என்றவள், ஆதியிடம் போலமா அண்ணா என்றாள்.
Advertisement
“ப்ளீஸ்…ப்ளீஸ் ஆரு… என் செல்லம் இல்லை. நான் வந்து விடுறேன்.” அர்ஜுன் கெஞ்ச….
“போனவாரம் நான் கேட்டபோது நீ வந்தியா, இப்ப மட்டும் என்ன? நான் ஆதி அண்ணாவோடையே போய்கிறேன்.” ஆரு கெத்தாகச் சொல்ல…. இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு ஆதி சிரித்தபடி சோபாவில் அமர்ந்து இருந்தான்.
அன்று கணேசனும், வித்யாவும் ஒரு விசேஷத்திற்குச் சென்று இருந்ததால், வீட்டில் இவர்கள் மூன்று பேர் மட்டும் தான் இருந்தனர்.
“ப்ளீஸ் ஆரு, திரும்பி வரும் போது உனக்கு எவ்வளவு ஐஸ்கிரீம் வேணும்னாலும் வாங்கிக்கோ.” அர்ஜுன் சொல்ல…
“ஓ… திரும்பி வரும் போதும் நீயே கூப்பிட வரியா?” ஆரு ஆச்சிர்யப்பட ,
“அர்ஜுன் உண்மைய சொல்லு. நீ அங்க போனா மீராவை பார்க்கலாம்னு தானே ஆருவை நீ விடுறேன்னு சொல்ற.” ஆதி அர்ஜுனை பார்த்து நேரடியாகக் கேட்க….
அர்ஜுன் ஆமாம் என்றவன், மீராவை முதல் நாள் சந்தித்தில் இருந்து நடந்த அனைத்தையும் சொன்னவன், “நான் அவளை விரும்புறேன்.” என்றும் சொல்ல… ஆருவும், ஆதியும் சுவாரசியமாகக் கதை கேட்டனர்.
“அடப்பாவி இவ்வளவு நடந்திருக்கு இத்தனை நாள் மறைச்சிட்டியே, பாவம் மீரா அவளைப் போட்டு இப்படிப் படுத்தி வச்சிருக்கியே… இனிமேலாவது அவகிட்ட ஒழுங்கா பேசு.” ஆரு அர்ஜுனுக்கு அறிவுரை சொல்ல….
“அர்ஜுன், ஆரு, அம்மா காதுக்கு மட்டும் விஷயம் போகக் கூடாது. அப்புறம் பெரிய பிரச்சனை ஆகிடும்.” என்றான் ஆதி.
“ஆமாம் தெய்வங்களா… என்னை அம்மாட்ட மாட்டி விட்டுடாதீங்க.” என்று அர்ஜுன் கை எடுத்து கும்பிட… “சரி பக்தா உன்னுடைய பிராத்தனையை ஏற்றுக் கொண்டோம்.” என்று அம்மன் போஸ்ஸில் ஆரு நிற்க…. “இதையெல்லாம் பரத நாட்டியம் ஆடும் போது பண்ணாத, இப்ப பண்ணு.” என்ற அர்ஜுன், “வா போகலாம். டைம் ஆகிடுச்சு…” என்றபடி ஆருவை இழுத்துக்கொண்டு செல்ல. ஆதி தங்கள் கடைக்குச் சென்றான்.
ஆருவை டான்ஸ் கிளாஸ்ல் கொண்டு வந்து இறக்கி விட்ட அர்ஜுன், மீராவை தேட… அவளைக் காணவில்லை. “இரு அர்ஜுன், நான் போய் உள்ள இருக்காளான்னு பார்கிறேன்.” என்ற ஆரு உள்ளே சென்று பார்க்க… மீரா சின்னக் குழந்தைகளுக்கு நடனம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள்.
ஆரு மீராவையே பார்த்துக் கொண்டு நிற்க, வகுப்பு முடிந்து வந்த மீரா அப்போது தான் ஆராதனாவை பார்த்தாள். மீராவிற்கு முதலில் நினைவு வரவில்லை… ஆனால் உடனே இந்தப் பெண்ணை எங்கையோ பார்த்திருகிறோம் எங்கே என்று யோசித்தவளுக்கு, பளிச்சென்று ஆருவின் குடும்பமே நினைவுக்கு வர முகம் மலர்ந்தவள், அவள் அர்ஜுனின் தங்கை என்பதும் சேர்ந்து நினைவுக்கு வந்ததும், அவள் முகம் இன்னும் தாமரையாய் மலர்ந்தது.
போய்ப் பேசலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டி மன்றம் நடத்திய மீரா ஆருவின் அருகே சென்று, “நீ ஆராதனா தானே” என்று கேட்க… ஆராதனாவும் முகத்தில் புன்னகையுடன் ஆமாம் என்று தலை ஆட்டியவள், “நீங்கள் மீரா” என்று சொல்ல… மீரா “நியாபகம் இருக்கா, சும்மா நீனே சொல்லு.” என்றவள், “நீ எந்தக் காலேஜ்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“உன்னைப் போய் மறப்பேனா. நான் S.I.E.T B.SC., MATHS second இயர்.” என்று சொன்ன ஆராதனா வெளியே அர்ஜுன் காத்திருப்பதை மறந்து மீராவிடம் தானும் மாலை நேர வகுப்பிற்கு மாறியது பற்றிச் சொல்ல…
“அப்ப நாம இனிமே அடிக்கடி பார்க்கலாம்” என்று மீரா சந்தோஷமாகச் சொன்னவள், ப்ரண்ட்ஸ் என்று கையை நீட்ட… ஆராதனா மனதிற்குள் இப்ப ப்ரண்ட்ஸ் அப்புறம் சின்ன அண்ணி என்று நினைத்துக் கொண்டு கை கொடுத்தாள்.
மீராவும், ஆருவும் நெருங்கிய சினேகிதிகள் போல் பேச ஆரம்பித்தனர்… “நீ எப்படி வந்த ஆரு?” என்று மீரா கேட்டதும் தான், அர்ஜுனின் நினைவு ஆருவுக்கு வந்தது.
ஐயோ என்னைக் கொல்லப் போறான் என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள், “மீரா, அர்ஜுன் வெளிய இருக்கான், மறந்திட்டேன் இரு வரேன்.” என்று வெளியே ஓட… மீராவிற்கு அர்ஜுனின் பெயரை கேட்டதும் அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற அவளும் வெளியே சென்றாள்.
சற்று தள்ளி அர்ஜுனும், ஆருவும் எதோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் தண்ணீர் குடிப்பதை போல் அங்கேயே நின்றாள். அவளுக்கு அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை.
“சாரி அர்ஜுன், ப்ளீஸ்… ப்ளீஸ்… கோவிச்சிக்காத மீரா கூடப் பேசினதும், நீ வெயிட் பண்றத மறந்திட்டேன். உனக்கு ஒன்னு தெரியுமா நான் உனக்காகத் தான் பாட்ச் மாறினேன்.”
Advertisement
ஆரு சொன்னதை நம்பாமல் அர்ஜுன் பார்க்க, “எனக்குக் கொஞ்ச நாளா உன் மேல சந்தேகம். மீராவை பற்றி நீ அன்னைக்கு என்கிட்டே பேசினது எல்லாத்தையும் நான் கவனிச்சேன். அதனால உனக்காகத் தான் சாயங்காலம் பாட்ச் மாறினேன்.” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த அர்ஜுன், ” தேங்க்ஸ் ஆரு, நீ என்னை வெயிட் பண்ண வச்சது எனக்குக் கோபமே இல்லை. நீ மீராவை நல்லா பார்திக்கோ… அவளோட நீ ப்ரண்ட் ஆனா எனக்கு ரொம்பச் சந்தோஷம். சரி நான் கிளம்பறேன்.” என்றவன், அவள் பின்னே பார்க்க… அப்போது தான் அங்கே மீரா அவனையே பார்த்துக் கொண்டு நிற்பதை கவனித்தான்.
அர்ஜுன் மீராவை பார்த்து என்ன? என்பது போல் புருவத்தை உயர்த்த, தடுமாறிய மீரா என்ன செய்வது என்று தெரியாமல்… கையில் இருந்த டம்ளரை தண்ணீர் குடிக்க வந்தேன் என்று தூக்கி காட்டினாள். அவள் செய்கையில் அர்ஜுனுக்குச் சிரிப்பு வர… மீராவும் லேசாகச் சிரித்தவள் வேகமாக உள்ளே ஓடிவிட்டாள்.
“ஆரு, நான் இன்னும் மீராட்ட பேசலை நியாபகம் வச்சிக்கோ. நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காமிச்சிக்காத கொஞ்ச நாள் போகட்டும் நானே அவள்கிட்ட பேசுறேன்.” அர்ஜுன் சொல்ல… ஆருவும் சரி என்றவள் உள்ளே சென்றாள்.
உள்ளே மீரா சீனியர் மாணவிகளுடன் நடன பயிற்சி செய்ய, ஆராதனா அவள் பாட்ச் மாணவிகளுடன் சென்று நடன பயிற்சி செய்ய ஆரம்பித்தாள். பயிற்சி முடிய இரண்டு மணி நேரம் ஆனது. அதன் பிறகு இருவரும் வெளியே இருந்த வரண்டாவில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர். மீராவின் கண்கள் அர்ஜுன் வருகிறானா என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது. ஆரு அதைக் கவனித்தும் கவனிக்காத மாதிரி அமர்ந்து இருந்தாள்.
ஆராதனாவை கூப்பிட அர்ஜுன் வராமல் ஆதித்யா வர, மீராவின் முகம் வாடிவிட்டது. அதை ஆதி, ஆரு இருவருமே கவனித்தனர்.
Advertisement
“அர்ஜுன் வரலையாண்ணா…” ஆரு கேட்க… “இல்லை உன்னை விட்டுட்டு திரும்பி போகும் போது பைக் ஸ்கிட்டாகி கீழே விழுந்துட்டான். கால்ல அடி. அது தான் நான் வந்தேன்.” என்றான் ஆதி.
ஆரு பேசுவதற்கு முன் பதறிய மீரா, “அர்ஜுனுக்கு ரொம்ப அடிபட்டுச்சா? இப்ப எப்படி இருக்காங்க?”என்று மூச்சுவிடாமல் கேட்க… அவளது தவிப்பை பார்த்த ஆதி, “இல்லை சின்னக் காயம் தான்.” என்றதும் தான் அதுவரை இழுத்து வைத்திருந்த மூச்சை மீரா விட்டாள்.
“உனக்கு அர்ஜுனை முன்னாடியே தெரியுமா” ஆரு கேட்க….
“ஏன் உங்க அண்ணன் சொல்லலை. நானும் அவர் படிக்கிற காலேஜ்ல தான் BE., second இயர் படிக்கிறேன். அதனால தெரியும்.” என்றாள். அப்போது தான் ஆருவிர்க்கு நினைவு வர அவள் மீராவை ஆதிக்கு அறிமுகம் செய்ய…. இருவரும் ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லிக் கொண்டனர்.
“அர்ஜுனுக்குச் சின்னக் காயம் தான் இல்லை… ரொம்ப ரத்தம் வந்திடுச்சா?” மீரா கவலையாகக் கேட்க “இல்லை…” என்ற ஆதி மீராவின் கவலையை அறிந்து, ஒரு நிமிஷம் இருங்க என்று தனது செல்லை எடுத்து அர்ஜுனை அழைத்தான். “அர்ஜுன் எப்படி இருக்க ? கால் வலிக்குதா? என்னது இப்ப இல்லையா சரி, இந்தா ஆருகிட்ட பேசு.” என்று போன்னை அவன் ஆருவிடம் கொடுக்க….
“என்ன பிரதர் ரோட்ல விழுந்து புதையல் எடுத்தீங்கலாமே? எவ்வளவு எடுத்தீங்க? கனவு கண்டுகிட்டே வண்டி ஓட்டினா இப்படித்தான் ஆகும்.” என்று ஆரு பேசிக்கொண்டே தள்ளி சென்றவள், “அர்ஜுன் இங்க மீரா உனக்கு அடிப்பட்டது தெரிஞ்சு ரொம்ப டென்ஷன்னா இருக்கா.” என்று சொல்ல…
error: Content is protected !!