Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

7.காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி…

 

தன் பணிகளை முடித்து விட்டு அதிகாலையில் இல்லம் திரும்பிய கண்ணன் நேராக சித்துவின் அறைக்குள் நுழைந்தான். அங்கே சித்து ஆழ்ந்த உறக்கத்தில்…. அருகிலிருக்கும் தலையணையை கட்டியணைத்து  தூங்கிக் கொண்டிருக்க… அவனையே பார்த்திருந்த கண்ணன் என்ன நினைத்தானோ… தன் பணி அலுப்பையும் மறந்து , குளியல் அறைக்குள் நுழைந்து ஒரு வாளி நிறைய தண்ணீர் எடுத்து வந்து ஈவு இரக்கம் பார்க்காமல் சித்துவின் மீது ஊற்றினான்.



Advertisement

“ஐய்ய்ய்யோ அம்மாமாமாமா….  அம்மாமாமா…..” என அலறியடித்து எழுந்தவன் தன்னிலை உணரவே சில நொடிகள் கடந்தது. தன் மீது நீரை பார்த்ததும் வெறி கொண்ட வேங்கை ஆன சித்து எழுந்து நின்று ” ஆதி பிசாசே … உன்னை சும்மா விட மாட்டேன் டி. தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தண்ணி ஊத்தி எழுப்பிட்டு ஒடிட்டியா….. இருடி இன்னைக்கு பொழுது உனக்கு எப்படி விடியுது ன்னு பாரு.” என வீர வசனத்தோடு நில்லாமல் அருகிலிருந்த வாளியை எடுத்தபடி நகர, தரையிலிருக்கும் தண்ணீர் சித்துவோடு  சண்டையிட்டு அவனை தரையில் தள்ள “ஆ ஆ ஆ…  யம்ம்மாமா… இடுப்பு ….  போச்சு” என தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க வலி பின்னி எடுத்தது அவனுக்கு. ஆ ஆ… என்ற ராகத்தோடு தன் இடுப்பை பிடித்த படி எழுந்து நின்றான் சித்து.

இவை அனைத்தையும் பால்கனியின் ஓரம் வாயை பொத்தி அமர்ந்து கொண்டு சிரியோ சிரி என்று கண்ணன் சிரிப்பது தெரியாமல் தன்னை நிதானித்த சித்து குளியலறைக்குள் சென்று வாளியில் நீரை நிரப்பிக் கொண்டு ஆரதியின் அறைக்கு செல்ல….

Advertisement

Advertisement

அவ்வறையில் இவ்வீட்டின் மருமகளான ஆரதி  சித்துவை போலவே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அதைப்பற்றி எல்லாம் சித்துவின் அறிவு சிந்திக்காமல் வேகமாக வாளியில் இருக்கும் தண்ணியை அவள் மீது ஊற்ற .., சித்துவைப் போல்  கூச்சல் இடாமல் திடுக்கிட்டு எழுந்தவள் … நீர் ஊற்றப்பட்டதை அறிந்து அருகிலிருக்கும் சித்துவை வெறிகொண்டு முறைத்தாள்.

“இருக்கா இப்போ  வெறியா இருக்கா… எனக்கும் அப்படி தான  இருக்கும். அறிவு கெட்டவளே எது எதுல விளையாடனுன்னு விவஸ்தையே இல்லையா. எனக்கு நீ வெறும் தண்ணீயை தான ஊத்துன….. ஆனா நான் ரொம்ப நல்லவன் ஆதி. அதான் தண்ணியோட சேர்த்து  ஷாம்புவை யும் மிக்ஸ் பண்ணி ஊற்றிட்டேன் . அப்படியே நல்ல தேய்ச்சி  குளிச்சுட்டு ரெடியாகி வேலைக்கு போ. நான் என்னோட அண்ணன் ரூம்ல போய் தூங்குறேன் பாய் ஆதி…. பிசாசே ” என்று நகர்ந்தவனை பிடித்தவள் ,

Advertisement

வார்த்தைக்கு இடம் அளிக்காமல் தன் மொத்த திறமையும் கையால் காட்டிக் கொண்டிருக்க…, சித்துவிற்கு தான் இந்த பொழுது மோசமாகி போனது. அடித்து அடித்து ஓய்ந்தவள் “ஏன்டா ஓணானுக்கு பொறந்த ஒட்டுண்ணியே…” என ஆரம்பித்தவளை இடைமறித்த சித்து

“எங்க அம்மா உனக்கு ஓணாவா…இல்ல எங்க அப்பா உனக்கு ஓணாவா ஆதி.” என்று விளக்கம் கேட்க ஏற்கனவே அவன் செயலில் கடுப்பாக இருந்த ஆரதி மேலும் கடுப்பாகி ,

“பன்னிகுட்டி பாண்டா …. இவ்ளோ‌ அடிகிறனே சூரனை இருக்கா உனக்கு. வெக்கமே இல்லாம விளக்கம் கேக்குற. நான் உன்னை என்னடா பண்ணேன். சொல்லு என்ன பண்ணேன்…. பேசாம தூங்கிட்டு இருந்த பச்ச புள்ளை மேல தண்ணியை ஊத்துனாதும் இல்லாம என்னமோ கோட்டையை பிடிக்க போற மாதிரி பேச்சு வேற பேசுற… இந்த வாய் தான பேசுனது. இன்னிக்கு இந்த வாய்ய வடகோணம் வரைக்கும் திருப்பி விடல நான் ஆரதி இல்லைடா….” என அவளும் அவனுக்கு போட்டியாக வீர வசனம் பேச அதில் நொந்த சித்து…. பதில் பேச வாயை திறக்க.. அதற்கும் முடு விழா எடுத்து விட்டாள் ஆரதி. வாயை ஒரு கையாளும் அவளை ஒரு கையாளும் பிடித்து கொண்டு போராடுபவனை  பார்த்து கொண்டிருந்த கண்ணனுக்கு அதற்க்கு மேல் பொறுமை இல்லாமல் சத்தமாக சிரித்து விட….

அவன் சிரிப்பு சத்தத்தில் சுயம் பெற்ற இருவரும்  சிறிது நேரத்திலே இவை அனைத்தும் அவன் வேலையென புரிய …. ஒரே நேரத்தில் அவனிடம் பாய அவனோ அவர்களை விட வேகமாக பாய்ந்தான் தன் அறைக்கு.

ராசாத்தி அம்மாவை சந்தித்த சித்து அவருக்கு ஆட்கொணர்வு மனு பற்றிய விளக்கத்தை கூறிவிட்டு அவரை அழைத்துக்கொண்டு உயர்நீதிமன்றத்திற்கு சென்றவன்… அரசியலமைப்புச் சட்டம் 226ல் உள்ள 5 சட்டங்களில் ஒன்றான ஆட்கொணர்வு மனு நீதி பேரானையை பூர்த்தி செய்து .. அனிதாவிடம் பேசிய கடைசி ஆதாரங்களையும், காவல்துறையிடம் கொடுத்த புகார் நகலையும் அந்த மனுவோடு இணைத்து அனிதாவை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தான் . அனைத்தையும் முடித்துவிட்டு ராசாத்தி அம்மாவை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவிக்க அவரோ ..”இல்ல தம்பி ஒருத்தி தான் எங்க இருக்கான்னு தெரியல. மிச்சம் இருக்க ஒரு பொண்ணை யாது நல்லபடியா பாத்துக்கணும். காலேஜ் போற பொண்ணு தம்பி. அவ அக்கா தங்கச்சியை படிக்க வைக்கணும்’னு கஷ்டப்பட்டு படிக்க வச்சா… இப்போ எங்க இருக்கான்னு தெரியல. நான் கட்டிகிட்டவன் சரியா இல்லாம போனதால வந்த வினை இது. நான் இல்லாம ராத்திரி நேரத்துல தனியா இருப்பா தம்பி என் பொண்ணு. அந்த மனுஷன் பகலிலேயே நிதானமா இருக்கமாட்டான். ராத்திரி நேரத்துல எப்படி என் பொண்ணுக்கு துணையா இருப்பான். நான் ஊருக்கு போறேன் தம்பி. திரும்ப எப்ப வரனும்’ னு சொல்லுங்க அப்போ வரேன்” என்றார் ராசாத்தி அம்மா.

அவரது பேச்சில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த சித்து மேற்கொண்டு எந்த வாதமும் செய்யாமல் அவரை ஊருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்து அனைத்தையும் செய்து முடித்தான் .

இதற்கிடையில் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி .. காவல்துறை அழைத்து இத்தனை நாள் இதை கிடைப்பில் போட்டதற்கு எச்சரிக்கை விடுத்ததோடு மட்டுமில்லாமல் அடுத்த 2 நாட்களுக்குள் அனிதாவை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.

பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்த ஆரதியிடம், அவளது மேற்பார்வையாளர், நேற்று நடந்த அடையாறு ஆற்றின் மர்ம கொலை தொடர்பான  வேலையை அவளிடம் ஒப்படைக்க,  ஆரதியோ தன் புது அலுவலகத்தில் கிடைத்த முதல் வேலையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற முடிவோடு அதை விசாரிக்க ஆரம்பித்தாள். முதல் வேலையாக நேற்று இரவு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கே இருக்கும் செய்திகளை சேகரித்தவள் அடுத்ததாக உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று அங்கு ஏதேனும் தகவல் கிடைக்குமா என கழுகாய் காத்தவளுக்கு உணவாய்

மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒருவர் வர, அவரை அழைத்து ரகசியமாக விசாரித்துக்கொண்டு இருப்பவளை மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த கண்ணன் காண.  “ஆதி இங்க என்ன பண்ற. வேலைக்கு போகலையா?” என்றான்.

“அடடா எடுபிடி இங்கதான் இருக்கியா! நான் எங்க போனாலும் ஃபாலோ பண்ணிட்டு வர… ” ஆரதி.

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு . அப்புறமா நான் உன்னை ஃபாலோ பண்றேன்னா இல்ல நீ என்னை ஃபாலோ பண்றியான்னு தெரியும்..” கண்ணன்.

“என்னோட முதல் வேலையே நேத்து  அர்த்த ராத்திரில நீ மூஞ்சிய கூட கழுவாம ஓடுனியே அந்த கொலை பற்றி தான். நீங்கலாம் சரியா கண்டுபிடிச்சா எதுக்கு எங்களுக்கு வேலை வருது.” ஆரதி.

“ஏன்டி எதுக்கு எடுத்தாலும் இப்படி ஏட்டிக்கு போட்டியா பேசுறியே நீ அடங்கவே மாட்டியா” கண்ணன்.

” நீ என்னை அடக்கவே மாட்டியா” என்று பட்டென ஆரதி கேட்டிட,

அதில் திடுக்கிட்டு சுற்றி முற்றி பார்த்தவன்..”அடியே அறிவு கெட்டவளே என்னடி பேசுற. அதுவும் டியூட்டி நேரத்துல. உன்னோட வாய உடைச்சா சரியா வரும்… முதல்ல வா இங்க இருந்து கிளம்பலாம். “

“இப்ப நான் என்ன கேட்டேன். நீ இப்படி ஓவர் ரியாக் பண்ற அளவுக்கு . எதையாது புரியாம பேசுறதே உன்னோட வேலை. நீ கிளம்பு எனக்கு இங்க சில தகவல் தேவைப்படுது.” என்ற ஆரதிக்கு கண்ணனோ ..”ஆதி இப்போதைக்கு உடற்கூறாய்வு தகவல் கிடைக்காது. அந்த டெட்பாடி ரொம்ப அழுகிய நிலையில் இருக்கு. ரிசல்ட் வர ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும். நீயும் நானும் கிட்டத்தட்ட ஒரே இடத்துல தான் வந்து நிற்கிறோம். இங்க நீ நிக்குறது வேஸ்ட். வா போலாம்” என்று கையோடு அவளை இழுத்து சென்றான்.

ஆரதியுடன் சென்றுக்கொண்டிருந்த கண்ணனுக்கு அழைப்பு வர அதை எடுத்தவன் எதிர்முனையில் என்னமோ சொல்ல  “நான் அப்பவே சந்தேகப்பட்டேன். சரி ரெண்டு மூணு நாள்ல சீக்கிரமா தகவல் சொல்ல பாருங்க” என்றுவிட்டு அலைபேசியை அணைத்தான்.

ஆரதி , “என்ன கண்ணா ! யாரு? “

மருத்துவமனையிலிருந்து தான்… முதற்கட்ட ஆய்வுல  அந்த உடல் ஒரு ஆணோடதுன்னு  கண்டு பிடிச்சிருக்காங்க ஆதி. முழு தகவல் வர இன்னும் மூன்று நாளாகுமாம்.

ராசாத்தி அம்மாவை பஸ் ஏற்றி விட்ட சித்து கண்ணனுக்கு அழைத்து.. இங்கு நடந்த அனைத்தையும் தெரிவிக்க,

“சரி சித்து ‌.ஆதி என் கூட தான் இருக்கா. நீ நேரா அனிதா வேலை செஞ்ச கடைக்கு வந்துரு.” என்று தகவலை சொல்ல… பாசமலர் இருவரும் பேசிக் கொண்டிருந்த கைபேசியை பிடுங்கிய ஆரதி தான்,

” அது எப்படிடா பித்து… நானும் கண்ணனும் எங்க ஒண்ணா இருந்தாலும் நடுவுல நந்தி மாதிரி வர. உன் அண்ணன் என்னை பார்த்ததும் உனக்கு மூக்கு வேர்த்துடுச்சா என்ன ????? ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு போ. கடைக்கு வர கடப்பாக்கல்லுக்கு வர’ன்னு எதாச்சும் பண்ண அவ்வளவுதான் ….. ” என்று ஆரதி பேசிக் கொண்டே செல்ல பட்டன அழைப்பை துண்டித்தான் சித்தேஷ் கண்ணன்.

அம்மு இளையாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!