Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் மலரும் ஓசை

Manam Malarum Oosai 17.2

         ‘பட்டு எங்களோட ஒட்டமாற்றான்ற வேதனையில என் பொண்ணு பேரு கெடும்ங்கிறது கூட என் மண்டைக்கு உரைக்காம எதோ பேசிட்டேன் ரூபா.. என்னை..” என குரல் கமற..

       ‘அத்தை..” என இடைபுகுந்தவன்.. ‘உங்களோட பழைய மாதிரி ஒட்ட முடியாத சூழல்ல நான் இருக்கேன்.. அதுக்காக பாசம் இல்லன்னு ஆகிடுமா.?” என பாசத்தோடு சொல்லி..

      ‘உங்க பாசத்தை என்மேல மட்டும் வைங்க.. என் பட்டுக்கு தூரத்து உறவா மட்டும் இருங்க.. அதுதான் உங்களுக்கும் நல்லது.. பட்டுக்கும் நல்லது..” என்றான் தன்மையாக.

      சுதாகரன்.. ‘ப்ரியாவை விடுங்க.. பரதன் இறந்ததால உங்களுக்கு பிறக்க போற குழந்தைக்கும் பட்டுக்கும் நான்தான் தாய்மாமன்.. என்னையாவது மாமான்னு சொல்லி பழக்கி விடுங்க..” என்றான் உரிமையாக.



Advertisement

        ‘அத்தைதான் எமோஷனல் ஆகிடறாங்கனா.. அவங்களுக்கு எடுத்து சொல்றதை விட்டுட்டு நீ அத்தைக்கு மேல இருக்க.. நான் சொல்றமாதிரி ஃப்யூச்சர்ல நடந்துகாட்டு.. அதுதான் தாய்மாமாக்கான என்ட்ரன்ஸ் எக்ஸாம்.. பாசாகிட்டினா என் பட்டுக்கு நீ தாய்மாமா ஆகிடலாம்..” என்றான் கோபமில்லாமல் இயல்பான பாவனையில்.

     சுதாகரன்.. ‘ம்.. கொஞ்சம் டப் போர்சன்தான்.. ஆனாலும் பாசாக டிரை பண்றேன்..” என தானும் இயல்போடு சொன்னவன்.. மாரியப்பனிடம்.. ‘ரூபன் பேச ஆரம்பிச்சா மட்டும் ஆப் ஆகிடுங்க தாத்தா..” என முறைத்தான் செல்லமாக.

      பேரனின் உயர்ந்த எண்ணங்களில் பெருமையடைந்தாலும்.. ‘வர வர இந்த ரூபன் என் பேச்சையும் கேக்கிறதில்ல.. கல்யாணமாகி அடுத்தநாள் நல்லா விடிய கூட இல்ல.. கிளம்பிப்போனவன் காலைலதான் வந்தான்.. இதுல என் பேச்சு எங்க எடுபடும்..?” என்றார் உண்மைக் கோபமாக.

Advertisement

      ‘அச்சோ.. இதுக்கே கோபப்பட்டா எப்படி தாத்தா..? பட்டுவோட பிறந்த நாளுக்காக டைரக்டர்கிட்ட கெஞ்சி கேட்டுட்டு வந்தேன்.. நைட் வேற டப்பிங் ரெக்கார்டிங் இருக்கு.. சாய்ங்காலம் கிளம்பனுமே..” என்றான் முகம் சுருக்கி.

Advertisement

          ‘இதுக்குத்தான் இத்தனை அவசரமா கல்யாணம் செய்தியா.?” என்றார் கோபமாக.

         ‘உங்க பேத்தி செய்த சொதப்பலாலயும்.. கர்ணாண்ணன் அபிமன்யு இந்த வாரமே ஃபாரின் போறதாலயும்தான் அவசர கல்யாணம் செய்ய வேண்டியதாகிடுச்சி.. இல்லன்னா கிராண்டா செய்திருக்கலாம்..” என ஆதிரை மீது குறைபட்டவன்..  ‘இன்னும் இருபது நாள்வரை தொடர்ந்து வேலையிருக்கும்.. அதுக்கப்புறம் ஒரு மாசம் இந்த வீட்டை விட்டு வெளில போனா என்னன்னு கேளுங்க..” என்றான் வாக்குறுதியாக.

      இத்தனை நேரம் தனியாய் பேசிக்கொண்டிருப்பதால் ஆதிரை என்ன நினைப்பாளோ என நினைத்த கணேசன்.. ‘சரி.. சரி.. என் தங்கை வாங்கி வந்த டிரெஸ்சை பட்டுக்கு போட்டுவிட்டு கேக் வெட்ட ஏற்பாடு செய் ரூபா..” என்றார்.

Advertisement

         ‘இந்த வருசம் ஓ.கே.. பட்டுக்கு விபரம் தெரிய ஆரம்பிச்சா இதெல்லாம் கூடாது.. அப்படியே ஆசைப்பட்டு வாங்கினாலும் உங்கண்ணன்கிட்டதான் கொடுக்கனும்..” என கட்டளையிட்டு.. ‘பட்டுமா..” என குரல் கொடுத்து கதவைத் திறந்தான்.

         ‘ப்பா.. பெரிய பட்டுக்கு அப்பா கத ஜொல்லி..” என வேக நடையோடு வந்தாள் ரூபனிடம்.

       ‘அப்பா கதை சொன்னியாடா.?” என பெருமையாய் முத்தமிட்டு.. ஆதிரையிடம்.. ‘பட்டு சொன்ன கதை நல்லாயிருந்ததா..?” என கண்ணிமைத்து கேட்டு.. ‘பட்டுக்கு இன்னொரு புது டிரெஸ் போட்டு.. கேக் வெட்டலாமா..?” என கேட்க.. குழந்தை உற்சாகத்தோடு ஆயத்தமானாள்.

      எல்லாம் தயார் செய்ததும்.. ‘ஆதிம்மாவை கூப்பிடு ரூபா..” என்றார் கணேசன்.

      இனி அத்தை மாமா தவறாக பார்க்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளே போனவன்.. ‘ஆதி..” என்க.. ‘நான் வரல.. நீங்க செலிபிரேட் பண்ணுங்க..” என்றாள்.

      ரூபன் நெருங்கி வரவும் ஆதிரையின் கண்கள் கலங்கியது. சட்டென மனைவியின் எண்ணம் புரிந்தவன். ‘உன் விருப்பம்.. அதுக்கு கலங்குவியா.?” என அவள்முன் நின்றான்.

        ‘இல்ல.. என்.. என்னை.. அந்த மாதவிம்மா போல நினைக்கிறாங்க..” என்றவளுக்கு கண்ணீர் கன்னம் இறங்கியது.

        ‘ப்ச்.. நீயேன் எதுக்கெடுத்தாலும் மாதவி மாதவின்னுட்டிருக்க..?” என கடிந்து மனைவியின் கன்னம் துடைக்க.. ரூபனின் கையை தட்டிவிட்டவள்.. ‘எனக்கு பட்டுவை பிடிக்கும்.. அவங்க நினைக்கிறது போல நான் கிடையாதுன்னு போகப்போக புரிஞ்சிப்பாங்க.. ஆனா உங்களை பிடிக்கல.. உங்க ஆறுதல் இல்லாமலே என்னை நான் தேத்திப்பேன்..” என்றாள் ரோசமாக.

         ‘அடேங்கப்பா.. இம்புட்டு ரோசமிருந்தா எப்படி ஆகுறது..?” என பயந்தவன்போல் கேட்க.. ‘ப்ச்.. பட்டு திரும்ப கூப்பிடறதுக்குள்ள போங்க.. இல்ல அதுக்கும் என்னைதான் தப்பா நினைப்பாங்க..” என்றாள் தவிப்பாக.

     ‘யார் என்ன நினைப்பாங்கனே எப்பவும் யோசிச்சிட்டிருக்காத..” என அதட்டி ‘பட்டுக்கு இன்னும் பேர் வைக்கில.. ஒரு நல்ல பேர் செலக்ட் பண்ணு.. கேக் வெட்டிட்டு அத்தை மாமாவை அனுப்பி வச்சிட்டு வரேன்.. இன்னைலயிருந்து பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிக்கலாம்..” என வெளியேறினான்.

      நிஜமாவே இன்னும் பேர் வைக்காமலா இருப்பாங்க.? ஒருவேளை நம்மளை காம்பரமைஸ் பண்றதுக்கு எதாவது பிணாத்துறானா.? இல்லையே அப்போ எப்படி நம்மளை செலக்ட் செய்ய சொல்வான்..? ம்.. எதாவது ஒரு பேரை சொல்லலாம்.. பார்ப்போம் அதையே வைக்கிறானான்னு என நினைத்தவள்..

      ச்ச.. இவன்மேல கோபமா இருந்தாலும் எப்படியாவது நம்மளை பேச வச்சிடறான் என கோபமாய் நினைத்து.. இனி நம்மளை தொட்டு பேசவே அனுமதிக்க கூடாது.. அதுக்கு முடிந்தவரை இவன் வரும்நேரம் நாம வீட்ல இருக்க கூடாது. வேலைக்கு போகனும் என முடிவெடுத்து தனது பணி வாய்ப்பிற்கான விபரங்களை கூகுளில் ஆராய மொபைலை எடுத்தாள்.

      ‘ஆதி வரலயா ரூபா..?” என கனகா கேட்க.. ‘வரலன்னுட்டாமா.. அவளை தப்பா பார்க்கிறோம்னு அழறா.. நாம கேக் வெட்டலாம்..” என குழந்தையிடம் போனான்.

      ‘நாங்க ஒன்னும் சொல்லலையே..” என ராதா பதற.. ‘அவளும் சொன்னிங்கனு சொல்லைல அத்தை.. யார் என்ன நினைப்பாங்களோன்னு ஏற்கனவே பயந்திருக்கா.. இதுல நீங்க நம்பாம பார்க்கவும் கஷ்டப்படுறா.. இனி இப்படி நடக்காதுனு சொல்லிருக்கேன் விடுங்க..” என பேசியவன் பாவனை.. இனி ஆதிரையை தவறாக பார்க்ககூடாதென்ற செய்தியும் அடங்கியிருந்தது.

     ராதா எதோ சொல்ல வர.. பாலன்.. ‘இந்தா.. சும்மா அதையே வளைச்சி வளைச்சி பேசிட்டு.. உங்கண்ணன் பேத்திக்கு பிறந்தநாள் கொண்டாட வந்திருக்கோம்.. அதை முதல்ல பார்க்கலாம்..” என மனைவியை அதட்டி.. ‘நீ ஏற்பாடு செய் ரூபா..” என்றார்.

      பாலனின் அண்ணன் பேத்தி என்ற வார்த்தையில் சந்தோசமடைந்தவன்.. ம்.. இப்படியே இருந்தால் அனைவருக்கும் நலமே என்ற நிம்மதியோடு கேக் வெட்டலானான். பட்டுவின் ஒவ்வொரு அசைவையும் சுதாகரன் படமெடுத்தான் தங்கையின் நினைவோடு.

      கேக் வெட்டியதும்.. ‘பெரிய பட்டுக்கு..” என தந்தையிடம் குழந்தை சொல்ல.. ‘பெரிய பட்டுக்கு முன்ன கொடுத்தாச்சில்ல.. நிறைய சாப்பிட்டா காய்ச்சல் வரும்.. அதனால இப்போ இந்த பாட்டி தாத்தாக்கு கொடுக்கலாம்..” என குழந்தையின் கையால் அனைவரையும் கேக் உண்ண வைத்தான்.

     சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அதிகாலையே எழுந்ததால் குழந்தைக்கு தூக்கம் வரவும் தந்தை மடியிலேயே உறங்கியிருந்தாள். குழந்தையும் உறங்கியாகிற்று.. அதிரூபனும் காலையில்தான் வந்திருக்கிறான் என.. ‘கிளம்பலாமாப்பா.?” என்றான் சுதாகரன்.

         ‘மாலா வந்திடுவா.. இரு சுதா சாப்பிட்டு மதியம் போல போவிங்க..” என்றார் கனகா.

     எப்பொழுது வந்தாலும் சாப்பிட வைக்காமல் அனுப்பாத அதிரூபன் இன்று அமைதியாக இருக்கவும்.. ‘கிளம்பலாம்..” என்றார் பாலன். மாமாவின் முகச்சுணக்கம் அறிந்தவனாய்.. ‘இன்னும் கொஞ்சநாள் மாமா.. ஆதி புரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம் நாம பழைய படி இருப்போம்..” என்றான் ஆறுதலாக.

      அனைவரும் கிளம்பவும் தனதறை வந்தான் அதிரூபன். ‘கதவை எதுக்கு தாழ் போடுறிங்க..?” என பதறினாள் ஆதிரை.

          ‘எதுக்கு இத்தனை பதட்டம்.?”

          ‘வெளிய உங்க சொந்தக்காரங்க என்ன நினைப்பாங்க..?” என கதவை திறக்க முயல.. தடுத்தவன்.. ‘அவங்க கிளம்பிட்டாங்க..”

         ‘என்ன..? அதுக்குள்ளயா.?” என முனுமுனுத்தவள்.. ‘பட்டு உங்களை தேடுவா..” என மீண்டும் கதவை பார்க்க.. ‘பட்டு தூங்கிட்டா..” என்றான் அமைதியாக.

     ப்ரியா போனதை விட என்ற ராதாவின் வார்த்தை உறுத்திக்கொண்டே இருக்கவும்.. பேசவே கூடாது என முடிவெடுத்ததை மொத்தமாய் மறந்தவளாய்.. ‘அவங்க உங்களுக்கு நெருங்கின சொந்தமா.?” என்றாள் அறிந்துகொள்ளும் ஆவலோடு.

       ‘ம்.. நெருங்கின சொந்தம்தான்.. ஆனா உன் அளவுக்கு இல்ல..” என மனைவியோடு நெருங்கி நின்றவன்.. ‘எங்கத்தை எங்கப்பா கூட பிறந்தவங்க.. என்மாமா என் அம்மாகூட பிறந்தவர்..” என்றான் ஆதிரையின் தடுமாற்றத்தை ரசித்தவாறு.

      ‘அப்போ ப்ரியா இவனின் அத்தை பொண்ணா.? ப்ரியா இருந்திருந்தான்னாங்களே.? அவங்களுக்கு என்னாச்சு.? இவன் ஏது அவங்களை காதலிச்சானா.? ச்ச.. ச்ச.. இருக்காது.. அப்படியிருந்தா இவன்கிட்டயே ப்ரியாவைப் பத்தி பேசமாட்டாங்க.. என மனதில் உழலுவதை உதடுகள் சத்தமின்றி அசைந்து காட்டிக்கொடுக்க.. ‘நீ செம அறிவாளி.. இப்படி அழகியை தேடிட்டிருந்தவன்.. ப்ரியாவை போய் லவ் பண்ணுவனா.?” என்றான் ரசனையாக.

      எப்படி கண்டுபிடிக்கிறான் நாம நினைக்கிறதை என அதிர்வாய் நிமிர..  ஆதிரையின் தலை அதிரூபனின் மார்பில் முட்ட.. பிறகுதான் அவனின் குரல் குழைவை நினைவு படுத்தி.. ‘ப்ச்.. தள்ளுங்க..” என்றாள் கடுப்பாக.

     அதிரூபன் அசையாமல் நின்றிருக்க.. ‘என்னவோ சத்தம் கேட்டாதான் நெருங்குவேன்.. அப்படியிப்படின்னுட்டு இப்போ என்ன.?” என்றாள் கோபமாக.

        ‘இப்போ கேக்கல.. ஆனா காலைல டீ குடிக்கும்போது அவ்வளோ டிஸ்டன்சுல இருந்தப்போவும் நான் உணர்ந்தேன்..” என்றான் காதலாக.

        ‘என்ன..?” என அதிர்வாய் பார்த்து.. “பொய் சொல்றிங்க.. அவ்வளோ தூரத்திலயிருந்து எப்படி கேக்கும்..?” என்றாள் திணறலாக.

    ‘தூரத்துலயிருந்தா கேக்காதுதான், ஆனா என்னால உணரமுடிஞ்சதே..” என குழைந்து, “சரி அது உனக்கு புரியும்போது புரியட்டும் விடு..

     பட்டு என் மடியில படுத்து பால் குடிச்சிட்டிருக்கும்போது.. என் காலை பார்த்த.. கையைப் பார்த்த.. முகத்தைப் பார்த்த.. என் தலைமுடியைக் கூட பார்த்த..” என ராகமிழுத்து, “ஆனா என் கண்ணை ஏன் பார்க்கல..?” என்றான் ஏக்கமாக.

      ‘அச்சோ.. நாம நினைச்சது போலவே நாம பார்த்தத பார்த்துட்டானே..” என நினைத்தவளுக்கு இதயம் வேகமாய் துடிக்க.. ‘ஆதி.. இப்போ சத்தம் ரொம்ப அதிகமா கேக்குதுடி..” என மனைவியை அணைத்தவன் நெற்றி கன்னம் என இதழொற்ற.. ‘ப்ளீஸ்..” என தடுமாற்றத்தோடு ஆதிரை கண்கலங்க..

        ‘பதட்டப்படாத.. உன் மன உளைச்சலை தீர்க்காம உன்னை எடுத்துக்க மாட்டேன்..” என உறுதியாய் சொல்லி ஆதிரை இதழை தனதால் வருடியவன்.. ‘இப்போ.. கொஞ்சமா இது மட்டும்..” என ஸ்பரிசிக்கவும், ஆதிரை விலக போராட, மென்மையாய்  ஆரம்பித்த நிகழ்வு.. சிறு யுத்தமாய் மாற.. தாளமுடியாமல் தன் மொத்த கணத்தையும் கணவன் மீது இறக்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!