Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை 01

​ஓம் நமச்சிவாய.

மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை.



Advertisement

அத்தியாயம் 01.

 தை மாதம் அடை மழை பெய்தது. மழை அதன் அதிகபடியான கோபத்தை கண்ணீராக பூமித்தாயின் மீது பொழிந்தது.. நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணி.. கொட்டும் அந்த மழை கூட அவனையோ அவனது மனதையோ குளிர்விக்கவில்லை.. அவனது மனதின் வெம்மை நீங்காமல் அப்படியே இருந்தது…

Advertisement

Advertisement

அவனோ பிரதான சாலையில் லிப்ட் கேட்பது போன்று மாறுவேடத்தில் நின்றிருந்தான்… ஆனால் அவன் யாரை எதிர்பார்த்து இந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தானோ. அவர்களோ ஆடிக்காரில் போதையில் ஆடியபடி அரைமணி நேரம் கழித்து வந்தார்கள்..

அவனும் கை போட்டு நிறுத்த முயன்றான்.  ஆனால் முடியவில்லை.  அந்த கார் சாலையில் அத்து மீறி கன்ரோல் இல்லாமல் சென்றது. இந்த மழையில் எதிரில் வாகனம் வந்தால் விபத்து நடப்பது நிச்சயம் என புரிந்துகொண்டவன்..  அவனது நீண்ட நாள்  ஓட்டபயிற்சி தற்போது கை கொடுத்தது.. 

Advertisement

காற்று மழையையும் தாண்டி  மூச்சை பிடித்து வேகமாக ஓடி அந்த காரை திசை மாற்றி அருகில் இருந்த மரத்தில் மோதவைத்தான்..

டிரைவர் சீட்டில் இருந்தவன் ஸ்டெயரிங்கில் தலை சாய்த்து மயங்கினான். அருகில் இருந்தவனுக்கு காயங்கள்.. பின்னால் இருந்தவனில் ஒருவனுக்கு அவன் ஓடி வந்தபோது மழையால் அவனின் வேசம் கலைந்ததை பார்த்தவன்.. அவனை அடையாளம் கண்டு கொண்டு மறுபக்க கதவை திறந்து இறங்கி ஓடப்பார்த்தான்.. ஏனென்றால் அவனிடம் மாட்டினால் அடுத்து என்ன நடக்கும் என அவன் பலமுறை செய்து காட்டி உள்ளான்… அதை நன்கு அறிந்து கொண்டும் அவனின் கையில் சிக்க இவன் முட்டாள் இல்லை என்று நிருபிப்பதற்காக ஓடினான்.. இவனோ ஓரே பாச்சலில் அவனை பிடித்துவிட்டான்..

” அடேய் தறுதலை நாய்களா உங்களை பிடிக்க சென்னை போலீஸ் வலை வீசி தேடல். அப்படினு நியூஸ் பேப்பர்ல வருதே. நீங்க என்ன பெரிய அப்பாடக்கரா?..  வழிபறி நாய்களா? உங்களை பிடிக்க என்னை டெல்லியில இருந்து அனுப்பியிருக்காங்களே. என்ன காமெடி..  என்கிட்ட உங்க பாட்ச்சா எதுவும் பலிக்காது. வாழ்ந்த தடம் தெரியாம உயிரோட புதைச்சிடுவேன். இடியட்ஸ் பெலோ.. ” என்று கத்தினான்.. மழை சத்தத்தையும் தாண்டி கேட்டது அவனது கர்ஜனை.. 

அவனது கட்டளையால் சற்று தள்ளி நின்ற அவனது டீமிற்கு அவனது கர்ஜனை வெற்றியின் ஒலியாக கேட்டதோ. அவன் அழைக்காமலே அருகில் வந்தார்கள் மூவர்..

இன்ஸ்பெக்டர் மூர்த்தியை அருகில் அழைத்து ” ஆம்புலன்ஸ் ரெடியா..” என்றான்..

” எஸ் சார்..” என்றான் பவ்வியமாக..

” ம் தட்ஸ் குட்.. சீக்கிரம் அதுல இவங்களை ஏத்திவிட்டு ஜி எச் கொண்டு போங்க.. நீங்க பாலோவ் பண்ணிப்போங்க.. அவங்க கண் முழிச்சதும் வாக்குமூலம் வாங்க பாருங்க” என்றான் தோள் தட்டி.. 

அவனிடம் பிடிபட்ட குற்றவாளிகள் எவ்வாறு தப்பிக்கமுடியாதோ. தப்பிக்க நினைத்தால் எவ்வாறு அதற்கும் மேல் தண்டனை கொடுப்பானோ.. அதே போன்று வேலை செய்பவர்களை பாராட்டுவதே மரியாதை என்று நினைப்பவன்… அது அவனது அனுபவத்தில் கிடைத்த பாடம்..

” ஓகே சார்..” என்று கூறிவிட்டு. ” ஏன் இந்த ஆள் இங்க வந்தானோ தெரியலயே. இதோட திரும்ப போய்டுவானா? இல்ல இருப்பானான்னு  தெரியலயே.. இவன் இருக்குற வரை கை நீட்டி பணம் வாங்க முடியது..  தினமும் பணம் இல்லாம போனா அந்த காட்டேரி வேற நொய் நொய் னு கத்துவாளே. தொல்லைங்க இரண்டும்..” மனதில் மேலதிகாரியையும் மனைவியையும் தாளித்தபடி ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தான் இன்ஸ்பெக்டர் மூர்த்தி..

ஒரு மணி நேரத்தில் அந்த இடமே சுத்தமாகியது..

அவனிடம்” பத்து நாள் டைம் சென்னை டிரான்ஸ்பர் நீ போய் உன் சொந்த ஊரை சுத்தம் பண்ணு வாழ்த்துக்கள் மை பாய்.. ” என்று முதல் கேஸாக இந்த வழிபறி கூட்டத்தை பிடிக்கும் கேஸை கொடுத்து அனுப்பிவைத்தார் டெல்லி    டி ஜி பி. 

அவனும் அங்கிருந்தே அவனின் நம்பிக்கையான ஆட்களை வைத்து இந்த பத்து நாட்களில் அனைத்து தகவல்களையும் கையில் எடுத்துவிட்டான்..

இதோ நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை மீனாம்பாக்கம் விமானநிலைத்தில் ஒன்பது மணிக்கு இறங்கி வெளியே வந்து அங்கிருந்து வீட்டிற்கு கூட செல்லாமல் முதல் வேலையை முடிக்கும் வெறியோடு வந்து இதோ அவர்களை பிடித்து பாதி வேலையை முடித்துவிட்டான்… 

அவனின் டிரான்ஸ்பர் அவன் சொல்லாமல் வெளியே தெரியவேண்டாம் தெரிந்தால் குற்றவாளி தப்பித்துவிடுவான் என கேட்டுக்கொண்டதால் அது யாருக்கும் தெரியாமல் போனது…

அங்கிருந்து அவனிற்கென ஒதுக்கியிருந்த போலீஸ் ஜீப்பில் ஏறி சென்றான்..

டிரைவரிடம். ” நான் சென்னை வந்த விசயம் நம்ம நாளு பேரை தவிற வேற யாருக்கும் தெரியவேணாம் அதுக்கு பின்னுக்கு யார் இருக்கிறானு கண்டுபிடிக்கணும்..” அவரிடம் எச்சரித்தான்.. 

அவரும் ” இனியாவது இந்த சென்னை பொண்ணுகள் நிம்மதியா கழுத்தில தாலி நகை போட்டு போனா அதுக்கு ஆபத்து இல்லனு ஆகிடுச்சினா எனக்கு ரொம்ப சந்தோசம் ஸார்…” என்றார் அந்த பெரியவர்..

அடை மழை தற்போது தூறலாக மாறியது சிலு சிலு வென வீசிய குளிர் காற்று அப்பொழுதான் அவனின் மனதை குளிர்வித்தது..

அடுத்து அவன் சென்னை வந்த மற்றுமொரு காரணமும் உள்ளது..

 அந்த ஜீப் சிட்டில் தலை சாய்த்த படி 

” நான் சொல்லுற இடத்துல நிப்பாட்டுங்க. நாளைக்கு உங்களுக்கு அழைக்கும் போது வந்தால் போதும்..” என்று கூறிவிட்டு தலைக்கு மேல் கைவைத்து சாய்ந்தான்..

அவனின் அந்த அமைதியான மனநிலை கெடுக்கும் படி அவனது கை பேசி அழைத்தது.. அதில் வந்த பெயரை பார்த்துவிட்டு அவனின் முகத்தில் சிறிய அளவு கீற்று புன்னகை வந்து அதே நொடியில் மறைந்தது.. 

அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்து 

” ஹலோ அச்சுமா ஹவ் ஆர் யூ?..” என்றான்..

அந்த பக்கம் அர்ச்சனாவோ ” டேய் கண்ணா எப்படி பா இருக்கிற நீ.? அம்மா ரொம்ப நேரமாக கூப்புடுறேன் லைன் கிடைக்கல. இப்பதான் கிடைச்சிது.. நாளைக்கு மறக்காம வந்துடுவதானே கண்ணா?..” என்றார் மகன் வரவேண்டும் என்ற தவிப்புடன் இல்லை என்றால் யார் கணவனிடமும் நாத்தனாரிடமும் பேச்சுக்கேட்பது என்ற பயம் அந்த பேதை தாய்க்கு..

” ஐயோ அச்சுமா எனக்கு எதுவும் மறக்கல நான் கண்டிப்பா வந்துடுவேன். நீ இப்ப எதையும் போட்டு மனதை குழப்பாம தூங்கு அச்சுமா..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்..

அழைப்பு போகவில்லை எங்கு நாளை ஏதாவது வேலை என கூறி வராமல் விட்டுவிடுவானோ என்ற அவரது தவிப்பு மகனிடம் பேசியதும் தான் அடங்கியது.. 

” ஏய் யாரோட டி நான் தூங்கினதும் இந்த நேரத்துல கொஞ்சி பேசுற?.. ” என்று கத்தியபடி கைபேசியை வாங்கி பார்த்தார்.. அதில் மகனின் கைபேசி எண்ணை பார்த்ததும். மகனிடம் பேசியதை சந்தேகப்பட்டுவிட்டோமே என நினைத்தாலும். அதற்கு  மனைவியிடம் மன்னிப்பு கேட்டால் அவர் ராதாகிருஸ்ணன் இல்லையே..

” ஏய் என்னவாம்? உன் பிள்ளை. நாளை விடிஞ்சதும் அவன் இங்க இருக்கணும்.. இல்ல உனக்குதான் பொங்கல் கிடைக்கும். அதனால உன் பிள்ளையை எப்படியாவது வர வை.  அவன் வராம அந்த சபையில நான் நாளைக்கு தலை குனிஞ்சேன்னு வை நீயும் உன் பிள்ளையும் தொலைஞ்சிங்க..” என்று கத்தினார்..

சீட்டில் தலை சாய்த்தபடி அவனது தாய் அர்ச்சனாவை நினைத்தான். இந்த நேரம் அவனின் தாய் அவரது கணவனிடம் திட்டு வாங்குவார் என அவனுக்கு நன்கு தெரியும்.. 

அவன் சென்னை வந்ததும் இனி அதற்கு  என்ன பண்ணவேண்டும் என தீர்மானித்துவிட்டான்..

மகாலிங்கம் சென்னையில் பிரபலமான பிசினஸ் மேன். அவரது காதல் மனைவி மகளை பெற்றுவிட்டு இறந்துபோனார்..

அதன் பின் லிங்கம் வேறு திருமணம்  பண்ணாமல் மகள் தொழில் இவை இரண்டுமே உலகம் என வாழ்ந்தார்.. தொழிலில் காட்டும் கவனத்தை விட அதிக கவனம் மகளிடம் காட்டினார்.. 

அவர் ஷிட்டியில் நேர்மையான பிசினஸ் மேன் அதனால் மகளுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என பயம்..

அதனால் கைக்குள் பொத்தி வைத்து வளர்த்தார். அவரின் மகள் அர்ச்சனாவிற்கு வெளி உலகம். வெளி மனிதர்கள்  எப்படி என்று எதுவும் தெரியாமல் போனது தான் விந்தை..

படிப்பும் அவ்வளவாக ஓடவில்லை அதனால் +2 வுடன் நிறுத்தி தந்தையிடம் கெஞ்சி கொஞ்சி தையல் சமையல் என கற்க ஆசைபட்டார் அர்ச்சனா.

ஆசை மகள் கேட்கவும் தட்டமுடியாமல் வீட்டிற்கே அதற்குரிய ஆட்களை வரவழைத்து பயிற்சி கொடுத்தார் லிங்கம்..

இவ்வாரே நாட்கள் சென்றது. அர்ச்சனாவிற்கு இருபத்தி இரண்டு வயதாகியது..  லிங்கத்தின் நண்பர் மூலம் தான் மகளுக்கு திருமண வயது வந்துவிட்டது என உணர்ந்தார் லிங்கம்..

அதன் பின் மகளின் சம்மதத்துடன் நண்பரின் மேல் வைத்த நம்பிக்கையிலும். அவர் காட்டிய ராதாகிருஸ்ணனை பற்றி எதுவும் விசாரிக்காமல் அவனுக்கு பெற்றோர் யாரும் இல்லை வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பார் என நம்பி மகளுக்கு அந்த கேடுகெட்ட மாப்பிள்ளையை திருமணம் பண்ணிவைத்தார்.. 

ராதாவின் தங்கை விமலராணியும் அங்கே வந்து தங்கிவிட்டாள். அப்போது அதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை..

திருமணம் முடித்து வைத்ததும் மருமகனை அவரது ஆபிஸ் அழைத்து சென்றார் லிங்கம்..  

அங்கு சென்ற பின்தான் அவர்களின் சொத்து மதிப்பே அவருக்கு தெரிந்தது.. அப்பொழுது இருந்து கூடிய சீக்கிரம் அதை அவர் கைபற்றுவதற்கான திட்டம் போட்டார்.. ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வைக்காமல் காலமே மாரடைப்பினால் லிங்கத்தை  எடுத்துக்கொண்டது… 

அப்பொழுது இருந்து அர்ச்சனா முதல் கொண்டு பிசினஸ் வீடு வரை ராதாவின் கையில் வந்தது..  மகாலிங்கம் சொத்தால் அவரின் காலத்திற்கு பின் மகளுக்கு ஆபத்து என நினைத்து முட்டாள் தனமாக மருமகனை நம்பி அனைத்தையும் ராதாவின் பெயரில் எழுதிவைத்தார்…

அதுவே ராதாவிற்கு மிகுந்த பலமாக போனது.. மனைவியின் பெயரில் சொத்து இருந்தால் அதை அவரின் பெயரில் மாற்றி வாங்குவதற்கு நல்லவர் போன்று நடிக்கலாம்.. ஆனால் அதற்கு எவ்வித அவசியமும் இல்லாமல் நேரடியாக சொத்தை அவரின் பெயரில் எழுதியதால் அவருக்கு நல்ல கணவனாக நடிக்கவேண்டிய எவ்வித தேவையும் இல்லை…

அர்ச்சனாவின் குழந்தை தனம் கொண்ட அபரிவிதமான அழகு அவரை சந்தேகப்படவைத்தது.. ராதா விமலா என இரண்டு பருந்துகளிடம் எவ்வித ஆதரவும் இன்றி சிக்கிக்கொண்டார் அர்ச்சனா… 

ராதாகிருஸ்ணன் நேரடியாக மனைவியை ஒதுக்கி அடக்கிவைத்தார்.. என்றால் விமலாவோ ” அண்ணி உங்க சமையல் அருமையா இருக்கு போங்க.. கேசரி , லட்டு , பயாசம். என்று ஸ்வீட் ஐட்டமும். சரி பிரியாணி. ரைஸ் இப்படி  சாதம் வகை. இட்லி பொங்கல் எல்லா வகையான சாப்பாடும் உங்க கை பட்டாலே ருசி அல்லுது போங்க அண்ணி…” என்பாள் விமலா.

அர்ச்சனாவின் பணத்தில் துணி எடுத்துவந்து ” அண்ணி எனக்கு இந்த துணியை இதே மாடல் வைத்து தைத்து தாங்க. உங்களால  மட்டும் தான் அழகா அதே மாதிரி தைக்க முடியும்.. ” என்று குழைந்து பேசுவாள் விமலா.. 

அண்ணனால் ஏற்படும் காயத்திற்கு தங்கை பேசுவது மருந்தாக தெரிந்தது. அந்த பேதைக்கு.. 

திருமணம் முடித்து இரண்டு வருடத்திற்கு பின்தான் அர்ச்சனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.. அந்த இரண்டு வருடமும் மலடி என்னும் பட்டத்துடன் நரக வேதனையை அனுபவித்தார் அர்ச்சனா.. கேட்பார் யாரும் இல்லாமல் ஓசி பணத்தில் ராதாகிருஸ்ணன் ஆடி தீர்த்தார்.. 

குழந்தை உண்டான நேரத்திலும் மசக்கை மயக்கத்தில் தாளிப்பு வாசனை பிடிக்காமல் வாந்தி எடுத்து பின் சற்று நேரத்தில் மீண்டும் சமைப்பார்.. விமலா கேட்கும் வகை வாகையான உணவுகளை சமைத்து கொடுப்பார்..  இல்லை என்றால் ராதா அர்ச்சனாவிற்கு அடி வெழுத்துடுவார். தையலும் அப்படியே.. 

தான் அவர்களுக்கு சொந்த வீட்டிலேயே சமையல்காரி .  தையல்காரி, வேலைக்காரி..  ஆகிவிட்டோம் என தெரியாமல் தொடர்ந்து அப்படியே இருந்துவிட்டார் அர்ச்சனா..

ராதாகிருஸ்ணனும். அவரின் தங்கை விமலராணியும் தான் அந்த வீட்டில் எல்லாம்..  விமலராணி சிறு வயது முதல் அவர் நினைப்பதுதான் நடக்கவேண்டும் என நினைப்பவர்.. ராதாவும் விமலாவிற்கு வாழ்க்கை துணையாக  கணவன்  வேண்டும் என்று தேடி திருமணம் பண்ணிவைக்கவில்லை. அடிமையாக அவர்களின் சொல்லிற்கு தலையாட்டும் பொம்மை வேண்டும் என்றுதான் தேடி திருமணம் பண்ணிவைத்தார்.. 

விமலாவின் கணவர் வரதன். மிகவும் பொறுமைசாலி. ஆனால் அவரே ஒரு கட்டத்தில் விமலாவுடன் வாழ முடியாது என்ற முடிவெடுத்து பிரிந்து சென்றுவிட்டார்.. அப்பொழுது அவர்களுக்கு வைதேகி என்ற பத்துவயது பெண் குழந்தை இருந்தால்..

அவளுக்கு தந்தை என்றால் உயிர். தாயை அதிகம் அவளிடம் நெருங்க விடமாட்டாள்.. தந்தையுடன் போவதற்கு தான் பிரியப்பட்டாள். ஆனால் விமலா விடவில்லை.. அதில் இருந்து இன்னும் அதிகமாகவே தாயிடம் இருந்து ஒதுங்கினாள்.. அப்பொழுது இருந்து பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய அர்ச்சனாவிற்கு வைதேகி குழந்தையாகி போனாள்.. வைதேகியும் அர்ச்சனாவிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டாள்.. 

கஷ்டப்பட்டு சொந்த உழைப்பில் பணம் வந்திருந்தால் அதன் அருமை புரிந்திருக்கும்..  ஆனால் மாமனாரின் ஓசி பணத்தில் குடி சூது போதை வஸ்த்து. என அனைத்தையும் பழகி கணக்கில்லாமல் பணத்தை தண்ணீர் போன்று இறைத்தார்.. சூதில் சொத்தை அடமானம் வைத்தார் ராதா..

இருந்து தின்றால் குன்றும் தேயும் என்பதை ராதாகிருஸ்ணன் நிறுபித்தார்.. 

பத்துவருடத்தில் சொத்தக்கள் எல்லாம் போய் வேலைக்கு சென்றால் தான் அடுத்தவேலை உணவு என்ற நிலை வந்தது…  சொகுசாக வாழ்ந்த ராதாகிருஸ்ணனால் மீண்டும் முன்பு போல் அன்னகாவடியாக வாழ பிடிக்காமல் அர்ச்சனாவின் பெயரில் இருந்த அந்த ஓரே பங்களாவையும் தொழில் நஷ்டம் என்று கேட்டு அவரிடம் கையெழுத்து வாங்கி விற்றுவிட்டார்..

அந்த பணத்தில்  இரண்டு வருசம் ஓடியது..  அதன் பின் வேறு ஆபிஸிற்கு எக்கவுன்டராக வேலைக்கு சென்றார் ராதா.

போன இடத்தில் பணத்தை கண்டதும் கை சும்மா இருக்காமல் திருடி கணக்கை குறைத்து காட்டினார். இது அவரின் முதலாளிக்கு தெரியாமல். இருந்த வரை தப்பித்து வந்தார்.. 

ஒரு நாள் கையும் களவுமாக மாட்டியதும் அவரை போலீஸில் பிடித்துக்கொடுத்தார்கள்… 

ராதாவை சிறையில் அடைத்ததும். அர்ச்சனாவிற்கு ஒன்று தெரியவில்லை அடுத்து எவ்வாறு குடும்பம் நடத்துவது என. அதன் பின் தையல் கலை தான் கை கொடுத்தது..

விமலா. வைதேகி பாரதி. அர்ச்சனா என நான்கு பேரும் உணவு உண்டு அவர்கள் இருந்த வீட்டிற்கு வாடகை பணம் கொடுத்து என இரவு பகல் பாராமல் வீட்டு வேலை தையல் என அர்ச்சனாவின்  நாட்கள். மூச்சு விட நேரமில்லாமல் ஓடியது.. 

பத்துவயதில் தந்தை சிறை சென்றுவிட்டார் தாய் மிகுந்த கஷ்டபடுகிறார்.. என அதை பார்த்து பார்த்து வளர்ந்த பாரதி. அவனை அவனே செதுக்கினான் என்றுதான் கூறவேண்டும்..

ராதா தண்டனை முடிந்து வந்தும் அவரின் ஆட்டம் அடங்கவில்லை.. 

வீட்டில்  இருக்கும் நாட்களில் வைதேகியும் பாரதியும் தான் அர்ச்சனாவிற்கு அவர்களால் முடிந்த உதவியை செய்து சற்று நேரம் ஆறுதல் கொடுப்பார்கள்… விமலா சப்புக்கொட்டி உணவை உண்பதும் அர்ச்சனாவை அதட்டி வேலை வாங்குவது என்று அவரின் உடல் எடையை அதிகரித்து தற்போது சர்க்கரை .பி பி என நோய்களை தேடிக்கொண்டு வகை வகையான உணவை உண்ண முடியாமல் தவிக்கிறாள்.

பாரதி படிப்பு விளையாட்டு என அனைத்திலும் கெட்டி.. அவனின் முயற்சியால் படித்து ஸ்போட்ஸ் கோட்டாவில் போலீஸ் ட்ரெய்னிங் செலக்ட் ஆகி. அதன் பின் அவனது துணிவு நேர்மை என அனைத்து குணங்களும் அவனது முப்பதாவது வயதில் பதவி உயர்வை தானாகவே அவனிடம் வரவைத்தது..

வைதேகி அழகான பெண். அவளை ஆரம்பத்தில் அவர்கள் கஷ்டபடுவதை பார்த்து விமலா பாரதிக்கு திருமணம் முடித்து கொடுக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தார்.. பாரதி போலீஸ் ஆகிட்டான் என தெரிந்ததும். அதையே கெட்டியாக பிடித்துக்கொண்டு அண்ணனிடம் இருவருக்கும் திருமணம் முடித்து வைப்போம் சொந்தம் விட்டுப்போகாது என கூறினார்..

ராதாவும் சரி என்று கூறி அதற்கான ஏற்பாட்டை செய்துவிட்டு பாரதியை வருமாறு அர்ச்சனாவிடம் கூறினார்…

அவரும் வைதேகியே மருமகளாக வந்தால் நல்லது என நினைத்து மகனிடம் விசயத்தை கூறாமல் பார்க்கவேண்டும் வந்துவிட்டு போகும் படி கூறினார்.. 

பாரதியும் தாயின் சொல்லை மதித்து என்றவென்று கேட்காமல் வந்துவிட்டான்.. வந்ததும் தான் திருமண ஏற்பாடு நடப்பது தெரிந்தது.. 

ராதாகிருஸ்ணணின் ஆட்டம் என்ன ஆட்டம். அன்று அப்படி ஒரு ஆட்டம் பாரதி ஆடித்தீர்த்தான்.. 

இறுதியில் ” வைதேகி எனக்கு பொண்டாட்டி இல்ல தங்கச்சி.. நானும் அவளும் அப்படித்தான் பழகினோம். இனியும் அப்படித்தான் இருப்போம்.. நான் படிக்க போகும்போது வைதேகி இருக்கிறா அம்மாவை குள்ளநரிகளிடம் இருந்து பார்த்துக்குவான்னு தான் அம்மாவை பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போனேன்..” கத்திவிட்டு வைதேகியை அழைத்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!