Skip to content
Post Views: 403
இம்சை காதலி – 2
Advertisement
“சார்”.
Advertisement
“எப்படி மேடம் இருக்கீங்க?” சிரிப்புடன்.
Advertisement
“இவ்ளோ நேரம் கழிச்சு இப்ப தான் நியாபகம் வருதோ!! ம்ம்…” பொய்யாக முறைத்தாள்.
Advertisement
“அதான் நானே பேசிட்டேனே மேடம். சொல்லுங்க எப்படி இருக்கீங்க?” புருவம் உயர்த்தி.
“பார்த்தா தெரியல? நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” சிரிப்புடன்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க. எங்க தங்கிருக்க?”.
“பக்கத்துல ஒரு ஹாஸ்டல்ல இருக்கோம்”.
“சரி. நீ எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்குறதனால உன்ன ஃப்ரீயா விடுவேன்னு உன் விளையாட்டுத் தனத்த இங்க காட்டக்கூடாது. எனக்கு எல்லாருமே ஒன்னுதான் ஆஃபிஸ் டைம்ல”.
“இப்பகூட உங்கள தெரிஞ்சவங்களா நா காட்டிக்கல விதுரன் சார்” சாரை அழுத்திச் சொன்னாள்.
“சரி சரி. சண்டைக்கு வராதமா. நா பாவம். உன்ன சமாளிக்க முடியாது” பொய்யாக தலைக்கு மேல் கும்பிட்டான்.
“அந்த பயம் இருக்கணும். சரி நா போய் ஒர்க்க பாக்கட்டா”.
“சரி போ”.
“ஓகே” வெளியே சென்றாள்.
“என்னாச்சு அஞ்சு? உன் டீம்ஸ்லா வெளிய வந்துட்டாங்க நீ லேட்டா வர” ருத்ரா குழப்பமாக.
“நல விசாரிப்பு டி. வேற ஒன்னும் இல்ல” என்று சிஸ்டமை ஆன் செய்தாள்.
“அஞ்சு! உனக்கு விதுரன் அண்ணாவ நியாபகம் இருக்கா டி?”.
“உனக்கே நியாபகம் இருக்குறப்ப எனக்கு இருக்காதா டி!” திரும்பி அவளைப் பார்த்து.
“ஆமால!”.
“அர்வி அண்ணா என்ன சொன்னான்?”.
“என்னைய அவருக்கு நல்லாவே நியாபகம் இருக்காம்” சிரிப்புடன்.
“ஹே! நாங்க ரெண்டு பேரும் வந்துட்டோம். உங்களுக்கு எப்படி போச்சு?” சுஜி இருவர் தோளிலும் கை வைத்து.
“எல்லாருக்கும் ஒரே மேட்டர் தான் சொல்லிருப்பாங்கனு நினைக்கிறேன்” அஞ்சு யோசனையுடன்.
“உங்களுக்கும் மெயில் ஐடி தந்தாங்ளா?” ஹேமா.
“ஆமா” என்றனர்.
“சரி. உக்காருங்க ரெண்டு பேரும். யாராச்சும் ஏதாச்சும் சொல்ல போறாங்க” ருத்ரா சுற்றிப் பார்த்த படி.
“ஆமா” என்றபடி மற்ற இருவரும் அமர்ந்தனர்.
“உங்க டிஎல் எப்படி?”.
“நல்லா பேசுறாங்க அஞ்சு” சுஜி.
“என் டிஎல் கொஞ்சம் காமெடி பீஸ்னு நினைக்கிறேன். ஜாலியா பேசுறாங்க” ஹேமா.
“ரொம்ப நல்லா விசயம் தான்” அஞ்சு.
“ஆமா. அர்வி சார் ரொம்ப ஃப்ரெண்ட்லி போல, அஞ்சு! விதுரன் அண்ணா ஸ்ட்ரிக்ட் போலயே!”.
“ஆமா டி. அத அவரே சொன்னாரு பாரு அப்ப எனக்கு சிரிப்பு தான் வந்தது. நா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுன்னு அவரே சொல்லிட்டு அழைவாரு போல!” சிரித்தாள். மற்ற மூவரும் சிரித்தனர்.
“சுஜி! ஹேமா! திரும்பி உக்கார்ந்து சிஸ்டம ஆன் பண்ணுங்க டி. அப்பறம் அரட்டை அடிக்கலாம்”.
“ஓகே” என்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.
சிறிது நேரம் வேலை பார்த்தனர். லஞ்ச் டைம் என மற்றவர்கள் சாப்பிட கிளம்பினர். “அஞ்சு! ருத்ரா! நாம போலாமா?” ஹேமா.
“கொஞ்ச நேரம்டி. இதோ வரேன்” அஞ்சு.
“வெய்ட் ஹேமா” ருத்ரா.
“சரி. நாங்க ரெண்டு பேரும் முன்னாடி போய் பிளேஸ் இருக்கானு பாக்குறோம் டி. நீங்க ரெண்டு பேரும் வாங்க” சுஜி ஹேமாவை அழைத்துச் சென்றாள்.
அர்வி விதுரனும் இவர்கள் பக்கத்தில் வந்தனர். “அஞ்சு! ருத்ரா! இன்னும் சாப்பிட போகலையா?” அர்வி.
“போகணும். அஞ்சு ஏதோ பார்த்திட்டு இருக்கா அதான்” ருத்ரா.
“ஒரே நாள்ல வேல பார்த்து மேடம் பெரிய ஆளா ஆயிடுவாங்க ம்ம்… நமக்கு போட்டியா வருவாங்க போலயே டா!” விதுரன் கிண்டலாக அஞ்சுவைப் பார்த்து. அர்வி சிரித்தான்.
“ஆமா ஆமா! வருவேன்” அஞ்சு வேகமாக.
“வரலாம் மேடம். அதுக்கு உங்க உடம்புல தெம்பு வேணாமா? சாப்பிட போகாம ரெண்டு பேரும் உக்கார்ந்திருந்தா எப்படி?” புருவம் உயர்த்தி.
“அண்ணா! நீ தானே சேர்ந்து சாப்பிடலாம். லஞ்ச்ல மீட் பண்ணலாம்னு சொன்ன? உனக்காக தான் வெய்ட் பண்ணுனேன். இனிமே வெய்ட் பண்ண மாட்டேன் போ! வா ருத்து! போலாம்” முறைப்புடன் ருத்ராவை இழுத்தாள்.
“அஞ்சு! நீ வெய்ட் பண்ணுறத பார்த்து தான் இவன போய் இழுத்துட்டு வந்தேன். வாடா போலாம்” அர்வி அவசரமாக.
“பசிக்கிது. போலாம் அஞ்சு” ருத்ரா.
“சரி”. நான்கு பேரும் மேலே வந்தனர். கேண்டீன் பெரிய ஹால்லாக அதில் சாப்பிட நிறைய டேபிள் சேர் போட்டிருந்தனர்.
சுஜியும் ஹேமாவும் கை காட்டினர். “ஓகே அண்ணா நாங்க எங்க ஃப்ரெண்ட்ஸ் கூட போய் உக்காருறோம்”.
“என்ன அஞ்சு! இப்படி சொல்லுற? லஞ்ச் டைம்ல எங்ககூட உக்காரு. மத்த டைம்ல உன் ஃப்ரெண்ட்ஸ் கூட போயிடுங்க ரெண்டு பேரும். என்ன ஜெய்! ஒன்னும் சொல்லாம நிக்கிற?” விதுரனைப் பார்த்து.
“அதான் உன் அண்ணா பாசமா கூப்பிடுறான்ல! வாங்க ரெண்டு பேரும், சேர்ந்து சாப்பிடலாம்”.
“சரி. சுஜி , ஹேமா பக்கத்துல சேர் இல்ல டி இவங்க கூடவே சாப்பிடலாம்” ருத்ரா.
“சரி” என்றவள் சுஜி ஹேமாவிடம் இங்கு உக்காருவதாக சைகை செய்தாள். இருவரும் தலையாட்டினர். நான்கு பேரும் ஓர் டேபிளில் சென்று அமர்ந்தனர்.
“அஞ்சு! இன்னைக்கு அம்மா சாம்பார் பொட்டட்டோ ஃப்ரை பண்ணிருக்காங்க. உனக்கு ரொம்ப பிடிக்கும்ல!” பாசமாக.
“ஆமா அண்ணா! ருத்துக்கும் பிடிக்கும்ணா. அம்மா சமையல் சாப்பிட்டு எத்தன வருசம் ஆச்சுல!” சந்தோஷமாக.
“ம்ம்… இந்தாங்க, ரெண்டு பேரும் எடுத்து சாப்பிடுங்க” கொடுத்தான். இருவரும் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டுவிட்டு அவனிடமே கொடுத்தனர்.
“சூப்பர் அண்ணா!”.
“நல்லா இருக்கு” ருத்ரா.
“என்னோடதும் எடுத்துக்கோங்க. நா பாக்க வச்சுட்டு சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்கும்” விதுரன் சிரிப்புடன். இருவரும் எடுத்து சாப்பிட்டுவிட்டு, “வாவ்…! சூப்பரா இருக்கு!” என்றனர்.
“டேய் ஜெய்!” என ஆச்சரியமாகப் பார்த்தான் அர்வி.
“சாப்பிடு டா, வாயில ஈ போகுது வாய முடு” கிண்டலாக.
“ம்ம்… ம்ம்…” சந்தேகமாகப் பார்த்தான்.
“அண்ணா! எங்க லஞ்ச் ஹாஸ்டல்ல குடுத்ததுதான் சாப்பிட்டு குறை சொல்லக் கூடாது சரியா? இந்தாங்க” என கொடுத்தாள். இருவரும் ரெண்டு டிபன் பாக்ஸ்லயும் உள்ளதை எடுத்து சாப்பிட்டனர்.
“நாட் பேட்” விதுரன்.
“ஆமா. நல்லா தான் இருக்கு”.
“நாங்க ரெண்டு பேரும் சாப்பாட்டு விசயத்துல ரொம்ப பார்ப்போம். இந்த ஹாஸ்டல்ல சாப்பிட்டு பார்த்து ஓகேங்குறனால தான் ஜாயின் பண்ணுனோம்” ருத்ரா.
“ம்ம்…குட்!” விதுரன். அஞ்சுவும் அர்வியும் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தனர். ருத்ராவும் விதுரனும் இவர்களை கண்டுக் கொள்ளாமல் சாப்பிட்டனர்.
“டேய் அர்வி! அவள சாப்பிட விடு டா. நீ சாப்பிட்டே முடிச்சுட்ட. அவளப் பாரு பேசிக்கிட்டே இருக்காளே தவிர, சாப்பிடாம வச்சுருக்கா”.
“ஈஈஈஈஈ… அஞ்சு! சாப்பிடு. உன் டிஎல்கு பார்த்தியா! உன் மேல எவ்ளோ அக்கறை!” கிண்டலாக.
“போடா லூசு! லஞ்ச் டைம் முடியப் போகுது. அவளுக்கு நாளைக்கு நா டெஸ்ட் சொல்லிருக்கேன். படிக்க வேணாமா? அதும் இல்லாம எனக்கு வேல இருக்கு, உனக்கு ஒரு பைல் அனுப்பிருக்கேன். அத நீ பாக்கணும். உங்க வெட்டி கதைய கேக்க எனக்கு டைம் இல்ல டா. சிக்கிரம் போகணும்” அர்வியை பொய்யாக முறைத்தப்படி.
“உனக்கு என்னைக்கு தான் வேல இல்ல. நானே இப்பதான் என் தங்கச்சிய பார்த்தேன். பேச எவ்ளோ கதை இருக்கு தெரியுமா?”.
“சரி. நீ பேசிட்டு வா, நா போறேன்” எழுந்தான்.
“சரி சரி. கோவப்படாத டா. அஞ்சு! நீ சாப்பிட்டு வா டா. எங்களுக்கு கொஞ்சம் வர்க் இருக்கு” தயங்கியபடி.
“அண்ணா! நாங்க சாப்பிட்டு வரோம். நீங்க போங்கணா. நோ பிராப்ளம்” சிரிப்புடன்.
“ஈவ்னிங் நீ கிளம்புறதுக்கு முன்னாடி ருத்ராகூட என் ருமுக்கு வா டா” சொல்லிவிட்டு விதுரனுடன் சென்றான்.
“அஞ்சு! விதுரன் அண்ணா பேசுனது உனக்கு கஷ்டமா இருக்கா டி?”.
“இல்ல ருத்து. எனக்கு ஏன் கஷ்டமா இருக்கணும்? வேல இருக்கு போறாங்க. அவ்ளோ தான்” சாப்பிட்டாள்.
“ஜெய்! நீ ஓவரா பேசுற டா. அஞ்சுவ ஹர்ட் பண்ணிட்ட. அவ முகமே மாறி போச்சு. உனக்கு வேல இருக்குன்னு சொன்னா வரப்போறேன். அதுக்கு எதுக்கு இவளோ பேச்சு?” எரிச்சலுடன்.
“நா என்ன டா அப்படி சொன்னேன்? நார்மலா தான் சொன்னேன்” புரியாமல்.
“நாங்க என்ன வேணாலும் பேசுவோம். அது வெட்டி பேச்சாவே இருந்துட்டு போகட்டும். அதுனால உனக்கு என்ன? இனிமே இப்படி பேசாத” அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவன் அறைக்குச் சென்றான்.
‘நா என்ன பண்ணுனேன்? இவன் என்ன இப்படி சொல்லிட்டு போறான்? நா சாதாரணமா தான் சொன்னேன். கோவமாக்கூட பேசலயே!!’ நினைத்தபடி வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
“சாரி! உங்க ரெண்டு பேருக்கும் பிளேஸ் பிடிச்சு வச்சுருந்தோம். அந்த பசங்க வேற சேர் எடுத்துப் போட்டுக்கோங்கன்னு சொல்லிட்டு எடுத்துட்டு போய்ட்டாங்க” சுஜி.
“ஏய்! அதுக்கு எதுக்கு சாரிலாம். விடு” ருத்ரா.
“ஆமா” அஞ்சு.
“அரவிந்த் சார் உன் ஓன் அண்ணாவா அஞ்சு?” ஹேமா.
“இல்ல அவங்க.. ” என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே,
“ஹேமா! உன்ன சுந்தர் சார் கூப்பிடுறாங்க” அவள் டீம்மேட்.
“ஓகே. அஞ்சு! நா வந்ததும் சொல்லு டி” சுந்தரை பார்க்கச் சென்றாள்.
“அஞ்சு! அவ எப்போதுமே அப்படித்தான். நல்லா கத கேப்பா” சிரித்தாள் சுஜி. மற்ற இருவரும் சிரித்தபடி வேலையைப் பார்த்தனர்.
“அஞ்சு! இது எனக்கு புரியல டி. கொஞ்சம் சொல்லிக்குடு டி” ருத்ரா. அஞ்சு அதனை பார்த்து சொல்லித்தர ஆரம்பித்தாள். சுஜியும் சிறிது நேரத்தில் இவர்களுடன் இணைந்துகொண்டாள்.
“என்னாச்சு ஹேமா? எதுக்கு கூப்பிட்டாங்க?” ருத்ரா.
“நா இன்னும் பாஸ்வேர்ட் மாத்தவே இல்ல. அதான் மாத்தாம என்ன பண்ணுறனு கேக்க கூப்பிட்டாங்க” உட்கார்ந்தாள்.
“மாத்தாம அப்படி என்ன வெட்டி முறிக்கிற டி” சுஜி கிண்டலாக.
“மறந்துட்டேன் டி”.
“அத முதல்ல பண்ணு” ருத்ரா.
“வெய்ட் வெய்ட். நீ மாத்தலன்னு அவங்களுக்கு எப்படி தெரியும்” அஞ்சு யோசனையுடன்.
“அதானே!” மற்றவர்களும் யோசனையுடன்.
“சரி. நாம நம்ம வேலய பாக்கலாம். இல்லன்னா அதையும் கேக்கப் போறாங்க”.
“சரி அஞ்சு” என்றனர்.
“சரி. வாங்க. மீதி இருக்குறதயும் பாக்கலாம்”.
“என்ன அஞ்சு சொல்லி தர?” ஹேமா.
“இந்த டாப்பிக் புரியல ஹேமா. அதான் அஞ்சு சொல்லித் தரா” ருத்ரா.
“நானும் ஜாயின் பண்ணிக்கிறேன் டி” என்று அவர்களுடன் இவளும் இணைந்து கொண்டாள். இப்படியே மீதி நேரமும் சென்றது.
“சரி டைமாச்சு கிளம்பலாமா?” சுஜி.
“இரு டி. இன்னைக்கு என்ன பார்த்தோம்னு விதுரன் சாருக்கு மெயில் பண்ணனும்னு சொல்லி மெயில் அனுப்பிருக்காரு. மெயில் பண்ணிட்டு வரேன்”.
“எங்க டிஎல்லாம் எதுவுமே சொல்லவே இல்ல டி” சுஜி.
“உன் அண்ணாகூட கேக்கல டி. இவர் ரொம்ப கராரா இருப்பாரு போலயே அஞ்சு” ருத்ரா.
“ம்ம்..” சிஸ்டமில் டைப் செய்தபடி.
“நம்ம டீஎல்லாம் கண்டுக்க மாட்டாங்க போல டி” ஹேமா.
“ஒரே நாள்ல எப்படி சொல்ல முடியும்? போகப்போக தானே தெரியும்” ருத்ரா.
“நீங்க மூனுபேரும் சிஸ்டம ஆஃப் பண்ணுங்க. என்னைய சார் கூப்பிடுறாங்க. நா போயிட்டு வந்துறேன்” அஞ்சு எழுந்து சென்று விதுரனின் ரூம் கதவைத் தட்டினாள்.
“எஸ்!”.
“சார்!”.
“ம்ம்… உன்ன என்ன படிக்க சொன்னேன்! என்ன படிச்சுருக்க?” சிஸ்டமைப் பார்த்தபடி.
“சார்! நீங்க சொன்னத படிச்சேன் சார்”.
“இல்ல. நா சொன்ன டாபிக் பாதி படிச்சுட்டு வேற படிச்சுருக்க. அதான் மெயில்ல சொல்லிருக்கியே!” முறைப்புடன்.
“அது ஃப்ரெண்ட்ஸுக்கு சொல்லிக் குடுத்தேன் சார். அப்ப அத படிச்சா தானே சொல்லித்தர முடியும்? நீங்க என்ன படிச்சிங்கன்னு கேட்டிங்க. அப்ப அதையும் தானே சொல்லணும் சார்?”.
“உன்ன எக்ஸ்டிரா படிக்க வேணானு சொல்லல. நா சொன்ன டாபிக் முடிக்காம வேற படிச்சுருக்க. சொன்னத பண்ண மாட்டியா? உன் ஃப்ரெண்ட்ஸுக்கு டவுட்னா அவங்க டிஎல் கிட்ட கேக்கணும். அத அவங்க சொல்லித் தருவாங்க. நாளைக்கு நா டெஸ்டுன்னு சொன்னேன் நியாபகம் இருக்கா?”.
“இருக்கு சார்”.
“நீ படிக்காததுல இருந்து நா கேட்டா என்ன பண்ணுவ?” கூர்மையான பார்வையுடன்.
“எனக்கு அப்போதிக்கு என்ன தோணுதோ பண்ணுவேன்” தோளைக் குளுக்கினாள்.
“சரி. காலைல வந்து மீதிய படி. உன் ஃப்ரெண்ட்ஸ டவுட்னா டிஎல் கிட்ட கேக்க சொல்லு”.
“எனக்காகலாம் நீங்க எதுவும் பண்ண வேணா சார். நா படிச்சுப்பேன். அப்பறம் எனக்கு ஒரு டவுட்”.
“என்ன?” முறைப்புடன்.
“இல்ல. வேணா! நா எதும் கேக்கல. நா போகலாமா சார்?”.
“என்ன கேக்க வந்? பரவால்ல கேளு”.
“வேணா சார். வெட்டியா பேசி உங்க டைம நா வேஸ்ட் பண்ணல. நா கிளம்பணும்” கோபமாக.
“அஞ்சு!” எழுந்தான்.
“சொல்லுங்க சார்”.
“நா லஞ்ச்ல பேசுனது உன்ன ஹர்ட் பண்ணிருச்சா? நா கோவமாலாம் பேசல” பொறுமையாக பக்கத்தில் வந்து.
“நோ சார். அப்படிலாம் இல்ல. என் ஃப்ரெண்ட்ஸ் வெளில வெய்ட் பண்ணுறாங்க. நா கிளம்பணும்” வாட்சை பார்த்தபடி.
“அஞ்சு!”.
கையை உயர்த்தி, “வேணா! நீங்க எதுவும் சொல்ல வேணா. நானும் கேக்க வேணா. ஆஃபிஸ் டைம் ஓவர். நா கிளம்புறேன்” திரும்பினாள்.
“அஞ்சு குட்டி!” கையைப் பிடித்தான்.
“விடுங்க விதுரன். எதுக்கு வெட்டியா பேசிட்டு இருக்கீங்க? உங்க வேலைய போய் பாருங்க” கையை விடுவிக்க முயற்சி செய்தாள்.
“சாரி! நா பேசுனது தப்பு தான்”.
“கைய விடுங்க முதல்ல” எரிச்சலுடன்.
“முடியாது”.
“வந்த அன்னைக்கே என்னைய டென்ஷன் பண்ணிட்டீங்க. விடுங்க நா கோவம்!” அவன் கையைக் கிள்ளினாள்.
“ஆ… ” கையை விட்டுவிட்டான். முறைத்தப்படியே வெளியே சென்றாள்.
எதற்காக அர்வி விதுரனை சந்தேகமாகப் பார்த்தான்?? பாஸ்வேர்டு மாற்றாதது எப்படி தெரியும்?? அஞ்சு என்ன கேட்க வந்தாள்?? விதுரன்-அஞ்சுக்கு என்ன உறவு??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…….
? இம்சை தொடரும் ?
error: Content is protected !!