Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 9.2

உணவை ஆர்டர் செய்து காத்திருக்க யாழினி மட்டுமே பேசினாள் உதய் கேட்க மட்டுமே செய்தான் ஏனோ அந்த பேச்சு அவனுடைய மனதிற்கு அமைதியை வரி வரி கொடுத்தது… அவன் கண்களுக்கு அவள் ஒரு அழகிய பதுமையாய் தெரிந்தாள் அதற்கு அழகு சேர்க்கும் விதமாக பேசும் பொழுது சிரிக்கும் அந்த சிவந்த இதழ்கள், வசீகரிக்கும் கண்கள் என்று அவனின் மனதை பெரிதும் சலனப்படுத்தியது… சாதாரண பெண் தான் ஆனால் அவளிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு அவனுக்கு அந்த வெள்ளந்தியான மனதை பார்த்து…

“இந்த கடைக்கு எங்க வீட்டுல தெரியாம அடிக்கடி வருவேன் சார் கடை ஓனர் அப்பாவோட பழைய பிரண்ட் இன்னைக்கு அவரு இல்ல போல… இங்க இருக்க பிரியாணிக்கு அவ்ளோ மவுசு… சும்மா ஜொள்ளு வழிய வழிய சின்ன வயசுல சாப்பிடுவேன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க இப்ப வரைக்கும் அந்த டேஸ்ட் அப்டியே இருக்கு சாப்பிட்டு பாருங்க இனி இந்த கடைய தவற வேற எந்த கடைக்கும் போக மாட்டீங்க… உங்க வீட்டுல இருக்க எல்லாத்தையும் இங்க ஒரு நாள் கூட்டிட்டு வாங்க நான் டிஸ்கவுண்ட்-கு பேசி ஏதாச்சும் வாங்கி தரேன்”

டிஸ்கவுன்டில் இதழ் பிரியாமல் சிரித்தவன், “கொஞ்ச நேரம் கம்முனு இருங்க யாழினி. மூச்சு வாங்க வேணாம்?” என்றான் கிண்டலாக உதய்…

“சார் பேசாம இருந்தேனா எனக்கு மண்டைக்குள்ள என்னமோ பண்ண ஆரமிச்சிடும் வீட்டுல தங்கச்சி பேசாம இருப்பா அதுனால அம்மா என்னைய தான் பேச சொல்லுவாங்க அப்ப பேச ஆரமிச்சது இப்ப வரைக்கும் மூட முடியல… சரி சொல்லுங்க எத்தனை பேர கூட்டிட்டு வருவீங்க டிஸ்கவுண்ட் பத்தி அங்கிள் கிட்ட பேசுறேன்”



Advertisement

“எது டிஸ்கவுண்ட் வாங்கி தர்றியா?” என்றான் புருவங்களை வளைத்து சிறு சிரிப்புடன்…

“ம்ம்ம் ஆமா சார்” என்றாள் அதே தீவிரமான முக பாவத்துடன்…

“எவ்ளோ டிஸ்கவுண்ட் வரும் என்கிட்டையும் காசு கம்மியா தான் இருக்கு” அவள் வழியிலேயே சென்றான்…

Advertisement

“டென் பெர்ஸன்ட் வரைக்கும் வாங்கி தருவேன் அதுக்குமேல எல்லாம் கேக்க முடியாது… என் பில்ல நானே கட்டிருவேன் உங்க பில்க்கு மட்டும் நீங்க கட்டுங்க எனக்கு சாளரி வந்ததும் உங்களுக்கு ஒரு நாள் என் ட்ரீட் அப்ப வேற கடைக்கு போகலாம் அது கிண்டில இருக்கு அங்க இருக்க ஷவர்மா வேற லெவல்ல இருக்கும் அதுல அப்டியே அவங்க குடுக்குற மயநீ…” பேசியவளின் கண்களும் இதழ்களும் உரைத்தன அவள் கண்ட காட்சியில்…

Advertisement

சிரித்துக்கொண்டே அவள் பேசியதை கைபேசியை பார்த்துக் கொண்டே கவனித்த உதய் அந்த அமைதிக்கான காரணத்தை அறிய தலையை நிறமிர்த்தியவன் கண்டது அவனுக்கு முன்னே அவர்கள் ஆர்டர் செய்திருந்த பிரியாணி, ரைஸ், மற்றும் பட்டர் சிக்கன் எல்லாவற்றையும் ஒரு இளம் வயது பெண் அடுக்கினாள்… அவன் யாழினியை பார்க்க அவள் முகம் கறுத்து காணப்பட்டது… ஏதோ பெரிதாய் அதிர்ச்சியை சந்தித்தது போல் உணர்ந்தான் அவன்…

“எதுவும் பிரச்சனையா”

அவனது குரலில் நினைவு பெற்றவள் தலையை குலுக்கி, “இல்ல சார் நா… நான் இப்ப வர்றேன்” அந்த குரலில் சுரத்தையே இல்லை அவள் எழுந்து செல்ல அவளையே பார்த்தவன் அவள் பின்னே சென்றான் ஜெயனுக்கு சைகை செய்து…

Advertisement

வேகமாய் சமையல் அறையை நோக்கி ஓடியவள் அதை தாண்டி பின்னே இருந்த குடோன் இருந்த இடத்திற்கு செல்ல அங்கே அவள் சகோதரி குழலினி தன்னுடைய சுடிதாரின் மேலே அந்த கடையின் பெயரை தாங்கிய பனியனை அணிந்து சில சாமான்களை அடுக்கிக்கொண்டிருந்தாள் தெளிவாக தெரிந்தது அவளுக்கு தன்னை பார்க்க மறுத்து அவள் கண்களை பார்க்க தவறிய தங்கையை மெதுவாக வலி நிறைந்த குரலில் அழைத்தாள்…

“குழலு” யாழினியின் குரலில் நடுக்கம்.

அதில் வந்த நடுக்கத்தை பார்த்த உதய்க்கு ஆச்சரியம் இவ்வளவு நேரம் தன்னுடன் வளவளத்த பெண்ணா இவள்? நிமிடத்தில் மாறிவிட்டாளே…

“வேலை இருக்கு க்கா நான் வீட்டுக்கு வந்து பேசுறேன்” என்றாள் அவள் யாழினியை பார்க்காமலே…

அவள் கையை பிடித்து திருப்பிய யாழினி, “குழலு நீ காலேஜ் போகலையா?” இன்னும் அவள் வார்த்தையில் கவலை நீண்டு கொண்டே சென்றது…

“அக்கா நான் தான் சொல்றேன்ல வீட்டுல போய் பேசிக்கலாம் க்கா ஓனர் பாத்தா திட்டுவாங்க”

“குழலு கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு காலேஜ் போகலையா?”

“இல்ல”

“ஆனா ஏன்… அப்பா சேத்து விட்டாரா இங்க?” தழுதழுத்த குரலில் பேசியவள் குரல் இறுதியாக இயலாமையில் உள்ளே சென்றது.

“இல்ல க்கா நானா தான் சேந்தேன்… ஆனா அப்பாக்கு தெரியும் நான் இங்க வேலை பாக்குறது”

“ஏன் அவருக்கு நீ கொட்டுற காசு பத்தலயா?” வழிந்த கண்ணீரை துடைத்து, “சரி நீ வா இனி இங்க வேலை பாக்க வேணாம் நீ”

“அக்கா வேலை பாக்க வேணாம்னா சாப்டுக்கு நாம என்ன பண்றது? உன் கல்யாணம் நடந்த அதுக்கு செலவுக்கு கூட நமக்கு காசு இல்ல”

“அத பத்தி நீ கவலை படாத குழலு நான் பாத்துக்குறேன் எனக்கு என்ன அவசரம், அந்த ஆசையும் இல்ல இப்ப எனக்கு… எனக்கு கல்யாணம் கூட வேணாம் நீ படிக்கணும் குழலு”

“அக்கா நான் படிச்சு இப்ப என்ன ஆகா போகுது சொல்லு… உனக்கு இப்பையே 24 வயசு ஆகிடுச்சுனு அம்மா ரொம்ப பீல் பண்ணுனாங்க. பேங்க்ல மாசம் முப்பத்தி அஞ்சு ஆயிரம் கடனும் அது இல்லாம வெளிய வாங்குன கடன் வேற… கொஞ்சம் கஷ்ட படுறேன் க்கா நானு அப்ப தான் உன் லைப் நல்லா அமையும்”

“என்னடி பெரிய மனுசி மாதிரி பேசுற ரெண்டு காசு சம்பாதிச்சிட்டா உனக்கு எல்லாம் தெரிஞ்சிடுமா? என்ன தெறியும் உனக்கு இந்த உலகத்தை பத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வக்கிறேன்னு சொல்லிட்டு உன் வாழ்க்கையை நீ பாழாகிக்க போறியா? எவன் உன்ன கல்யாணம் பணிக்குவான் படிக்காம இருந்தா? எனக்கு என்ன வயசு 24 எல்லாம் ஒரு வயசா? நான் சம்பாதிக்கிறது எதுக்கு? உன்ன இப்புடி தட்டு கழுவ வைக்கிறதுக்காகவா? இல்ல குழலு…

நீ நல்லா படிக்கிற பிள்ளை உன்ன இப்புடி பாக்குறது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா… அம்மா உன்ன நல்ல நிலமைல பாக்கணும்னு எவ்ளோ அசைய இருக்காங்க தெரியுமா… உன் வாழ்க்கையை அழிச்சு அதுல கிடக்கிற வாழ்க்கை எனக்கு வேணாம்… மொத மாசம் சம்பளம் வந்ததும் உன்ன அந்த பார்ட் டைம் வேளைக்கு கூட போக வேணாம்னு சொல்லணும்னு நெனச்சேன் ஆனா அதுக்குள்ள உன்ன இப்புடி பாப்பேன்னு கனவுல கூட நெனச்சு பாக்கல…

எவ்ளோ கஷ்டம் வந்தாலும் நான் பாத்துக்குறேன். நேரா அறுபதாவது கல்யாணம் கூட பண்ணிக்கிறேன் ஆனா நீ உன் படிப்பை மட்டும் நிறுத்தாத குழலு எனக்காக இத ஒன்னு மட்டும் பண்ணு… அப்பாக்கு காசு தான குடுக்கணும் நா வேற வேலை பாத்து கூட அவருக்கு காசு குடுக்குறேன்”

“அக்கா ஏன் க்கா இப்புடி எல்லாம் பேசுற நாம ரெண்டு பேரும் சேந்து வேலை பாத்தா கடன் எல்லாம் சீக்கிரம் அடைச்சிடலாம் அப்றம் வாரம் வாரம் வீட்டுக்கு கடன் காரங்க வர மாட்டாங்க நிம்மதியா இருக்கலாம் க்கா… ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிற? என்னால இத்தனை பிரச்சனையை வச்சுக்கிட்டு படிக்கச் முடியல ஒரு படத்துல ஃபெயில் கூட ஆகிட்டேன்… எனக்கு படிப்பு வராது க்கா இனிமேல்”

யாழினிக்கு உயிரே போவது போல் வலித்தது… இதனை நாட்கள் விளையாட்டாகவே இருந்ததற்காக தன்னையே தண்டிக்க தோன்றியது… ஒரு வருடம் முன்னர் வேளைக்கு சென்றிருந்தால் இன்னேரம் சகோதரியின் வாழ்க்கை இந்த நிலையில் இருந்திருக்காதல்லவா?

உறுதியாக நிற்கும் சகோதரியிடம் இறுதி முயற்சியாக அவள் முன்னே சுற்று புறம் பார்க்காமல் மண்டியிட்டு அவள் கால்களை தொட்டு, “உன் கால புடிச்சு கெஞ்சி கேக்குறேன்”

பதறிய குழலினி யாழினிக்கு சரி சமமாக மண்டியிட்டு அவள் கைகளை பிடித்து அழுதுகொண்டே, “என்ன க்கா இது எல்லாம் கால்ல விழுகுற கஷ்டமா இருக்கு க்கா”

“வேலைய விற்று குழலு நான் இன்னும் கொஞ்ச நாள்ல ஆபீஸ்ல லோன் ஏதாச்சு அப்ளை பண்றேன்… இன்னும் ஒரு வருஷம் தான படிப்பு அப்றம் நீயும் படிச்சதுக்கு ஏத்த வேளைக்கு போ அப்ப நான் உன்ன எதுவும் சொல்ல மாட்டேன்… வீட்டுக்கு போடி கெஞ்சி கெடுக்குறேன்… இல்ல பிச்சை கேக்குறேனு வச்சுக்கோ… அம்மா கேட்டாங்கனா துடிச்சிடுவாங்க”

“அக்கா ஆனா…”

“பேசாத குழலு வீட்டுக்கு போ இல்லனா நான் வீட்டு பக்கமே வர மாட்டேன் எனக்காக யாருமே கஷ்ட பட வேணாம்” இறுகிய குரலில் கூறியவள் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அசைத்து பார்த்தது குழலினியை…

“நான் ஓனர் கிட்ட சொல்லிட்டு போறேன்”

“வேணாம் நான் பாத்துக்குறேன் நீ போ”

தலையை அசைத்தவள் அங்கிருந்து செல்ல அருகில் இருந்த சிங்க்ல் முகத்தை கழுவி உதய் இருந்த இடத்திற்கு சென்றாள் எப்பொழுதும் போல் முகத்தை வைத்துக் கொண்டு… அவளை கண்ட உதய்க்கு தான் மனம் சுருங்கியது எவ்வளவு எளிதாக வெளியில் சிரிக்கிறாள்… சொல்லபடாத பல வலிகளை உள்ளே மறைத்து வைத்து அதில் தவிக்கும் இதயத்தை என்ன கூறி சமாளிப்பது? அவளை பார்க்கும் பொழுது அவனுக்கு அந்த எண்ணம் மட்டும் தான். வீட்டில் ஒரு ஆண் மகனின் துணை இல்லாமல் அந்த வீட்டில் இருக்கும் பெண்களின் நிலைமை பரிதவிக்கும் நிலையே…

குடும்பத்தின் நிலையை அறிந்து அவள் துடிப்பது, சகோதரியின் காலில் அவளின் எதிர்காலத்திற்காக விழுந்தது, தனக்காக தன் சகோதரி வாழ்க்கை அழிவதை பார்த்து திருமணமே வேண்டாம் என்று கூறும் அவள் சொல்லில் இருந்த வலியும், வேதனையும், உண்மையும் அவனுக்கு சிலிர்ப்பை தந்தது…

அவளின் செய்கை வொவொன்றும் அவனின் இதயத்தில் ஆனந்தமாகவும், வலியுடன் கூடிய சுகத்திலும் அவள் இடம் பிடித்திருக் கொண்டிருந்தாள் அவளுக்கே தெரியாமல்…

அந்த குறும்பிலும் இருந்த பக்குவம் அவனுக்கு பிடித்திருந்தது… இப்பொழுது தனக்கு முன்னே அமர்ந்திருந்த யாழினி உணவை பார்த்து இன்முகத்துடன் எடுத்து ஒரு வாய் சாப்பிட திடீரென நியாபகம் வந்தவளாய் நிமிர்த்து அவனை பார்த்தாள்…

இவள் சற்று நேரத்திற்கு முன்னே நடந்ததை மறந்து விட்டாளா இல்லை மறைத்து விட்டாளா என்ற சந்தேகம் அவனுக்கு…

“புடிக்கலயா சார்?” தான் ஏதோ பெரிய தவறு செய்தது போல் கேட்டாள், அவனை அழைத்து வந்து அவனுக்கு விருப்பம் இல்லாததை செய்தது போல் நினைத்திருந்தாள்…

அவள் கேள்வியில் சிரிப்பு வர பார்க்க… முகத்தை திருப்பி தொண்டையை செறுமியபடி நிதானித்து கொண்டான், “டிஸ்கவுண்ட் வாங்கி தரேன்னு சொன்னிங்க எவ்ளோ பண்ண முடியும்?”

“ஏன் சார் ரொம்ப மோசமாவா இருக்கு?” ஒரு சோகத்துடன் கேட்டவள் அவன் தட்டில் இருந்த உணவை எடுத்து ஒரு வாய் உண்ண கணைகள் மூடி அதை ரசித்தாள் சிறு முணங்களுடன், “சார் அப்டியே டேஸ்ட் நாக்குல கரையிது… இது உங்களுக்கு புடிக்கலயா?” இறுதிரில் இருந்தது செல்ல கோவம் மட்டுமே…

“சரி சரி சும்மா சொன்னேன் சாப்பிடுங்க இன்னைக்கு என்னோட ட்ரீட்-னு வச்சுக்கோங்க. ஒகேவா” அவன் தட்டிலிருந்து உணவை யோசிக்காமல் அவள் உண்டது கூட அவனுக்கு இனித்தது.

அவன் கூறியதில் நெளிந்தவள், “இல்லை சார் ஆல்ரெடி நீங்க எனக்கு தோசை வேற வாங்கி தந்திங்க அதுக்கே நான் இன்னும் காசு தரல இதுல நீங்க இது வேற வாங்கி தர வேணாம்”

“சேத்து ஒரு நாள் நீ எனக்கு தருவ” பன்மையில் வந்த சொற்கள் இப்பொழுது ஒருமையில் வந்தது அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை… ஆனால் அவனின் நெஞ்சில் அவள் ஒரு உரிமையுள்ள இடத்தில் குடியேறினாள்…

“போகலாமா?” தலையை அசைத்து அவள் வெளியே சென்று விட்டாள்… இந்த ஒரு சிறிய இடைவேளை அவனுக்கு தேவைப்பட்டது அதை அழகாய் அவள் நிரப்பி இருந்தாள் அவன் மனம் குளுர…

ஜெயனுக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒன்று சேர ஆடி தீர்த்தது… இந்த இடத்தை பார்த்தவுடன் ஓடி விடுவான் என்று நினைத்தால் அவன் உணவை ஒரு கை மிச்சம் வைக்காமல் ரசித்து ரசித்து உண்டது, அவளுடைய கதைகளை முகம் சுளிக்காமல் கேட்டது அவனுடைய புதியதொரு பரிமாணம் பளிச்சிட்டு நின்றது கண்முன்னே…

உதய் ஜெயனை பார்க்க அவன் உதய்யை நெருங்கி வந்தான், “யாழினி பத்தி தெரியுமா ஜெயன்?”

“ஹல்ப் அன் ஹௌர் சார்”

வெளியில் அவன் செல்ல யாழினி கையை பிசைந்து முகம் சிவக்க சங்கடத்தில் நின்றிருந்தாள் அவளை கேள்வியாய் பார்த்தவன் ‘என்ன’ என்று புருவம் உயர்த்த, “எனக்கு இணைக்கு லீவு கிடைக்குமா சார்?” ஆதுரமாய் கேட்டாள் தயக்கத்துடன்.

உதய்யின் கண்கள் அவள் பின்னே செல்ல அங்கே அவள் தங்கை ஒரு கடைக்கு அருகில் நின்று இவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள்… நிலைமையை புரிந்து உதய் அனுமதி பெற்று அவள் சிட்டாக பறந்துவிட்டாள்…

உதய் வண்டியில் ஏறி அமர சிறிது நேரம் கழிந்து ஜெயன் வந்து வண்டியை கிளப்பினான் அவளுடைய ஜாதகத்தோடு, “அவங்க கூட பொறந்தது தங்கச்சி சார், அப்பாக்கு பிஸ்னஸ்ல நெறய லாஸ் ஆகிருச்சு, இப்ப வரைக்கும் கடன்-அ அடக்க முடியல, அம்மா கவர்மன்ட் டீச்சர், யாழினி கூட நிறைய பார்ட்-டைம் ஜாப் பாத்துருக்காங்க வீட்டுக்கு தெரியாமல்… அவங்க அப்பா பிசினஸ் பத்தி இன்னும் டீடெயில்ஸ் நாளைக்கு ஈவினிங் கைல கிடைக்கும்…”

“வீட்டை சுத்தி ஒரு ரெண்டு பேர் போடுங்க ஜெயன்”

“போட்டுட்டேன் சார்”

“இன்னைக்கு மீட்டிங்ஸ், ப்ராஜெக்ட் கரெக்ஷன் எதுவா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம். கெஸ்ட் ஹவுஸ்க்கு வண்டிய விடுங்க ஜெயன்”

வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன் கேள்வியாய் உதய்யை பார்க்க அவன் ஆழ்ந்த யோசனையுடன் வழக்கமாய் செய்யும் வெளியில் தெருவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்… “சார்ர்ர்ர்”

“ம்ம்ம்”

“உங்க சித்தி கூப்டாங்க சார்”

“கெஸ்ட் ஹவுஸ் வழி தெரியாதா ஜெயன்”

“இல்ல சார் விஷ்ணு சார் கூட உங்கள பத்தி கேட்டாரு”

“வண்டிய நிறுத்துங்க” உத்தரவாய் கடுகடுத்த குரலில் ஆணையிட்டான்…

அந்த குரலில் உறைந்த ஜெயன் வண்டியை நிறுத்தினான்… வண்டியின் வேகம் கூட குறையவில்லை சட்டென இறங்கியவன் எதிரில் வந்த ஒரு வண்டியை நிறுத்தி அதில் ஏறி சென்றுவிட்டான்…

இதுவரை உதய் கோவப்பட்டு பார்த்திராத ஜெயனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை… எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஒரு நாள் கூட இந்த கோவம் அவனிடம் இருந்தது இல்லை ஆனால் விஷ்ணுவின் பெயரை கேட்டதும் எதற்காக இந்த கோவம்???

தனக்கு அருகில் இருந்த அலைபேசியை எடுத்தவன் காதில் வைத்து, “சார் இருக்கீங்களா?”

“ம்ம்ம் இருக்கேன் ஜெயன்… எனக்காக அண்ணன் கூட இருங்க… அவன் என் மேல கோவமா இருக்கான்… அவனா தான் இனி வீட்டுக்கு வருவான்… என்ன இது வரைக்கும் அவன் அப்டி பண்ணதே இல்ல வழக்கத்தை விட ரொம்ப பேசிட்டேன்… பாத்துக்கோங்க” என்று அணைப்பை துண்டித்தான் உதய் மாதவன் சகோதரன் விஷ்ணு…

‘எதற்காக இந்த வீம்பு சண்டை? இருவருக்கும் இருக்கும் பாசம் மலை அளவு ஆனால் வெளி காட்டும் விதம் கடுகளவு’ என்று வண்டியை உதய் சென்ற வண்டியின் பின்னாலே செலுத்தினான்…

 

மறக்காம கதை எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க மக்களே… Please

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!