Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 14.2

“பேசுறது அவன் இல்லடா இவன் வேணும்னே பன்னுறான்… உதய் வா உன் வீட்டுக்கு போகலாம்” கூறியதையே மீண்டும் ஒருமுறை கூறினான் சுற்றி இருந்தவர்கள் வார்த்தை எதையும் மனதிற்கு எடுத்து செல்லாமல்.

“யார்ரா இவன் பைத்தியம் மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி பேசிட்டு இருக்கான்… ஜெயன் எதாவது மெண்டல் ஹாஸ்பிடல்க்கு போன் போடுங்க வந்து தூக்கிட்டு போகட்டும். இவனால எனக்கு தேவ இல்லாம அரைமணி நேரம் வேஸ்ட்… அதான் நா மொத மாதிரி இல்லனு தெரிஞ்சு போச்சுல பின்ன எதுக்கு பின்னாடியே வால் மாதிரி தொரத்திட்டே இருக்க இதனை வருஷம் நிம்மதியா இருந்தேன் என்னைக்கு ஆபீஸ்க்கு வந்தானோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு” – உதய்

“நீ என்னே வேணாலும் பண்ணிட்டு போ ஆனா உன் வீட்டோட சேந்து இருடா இப்புடி தனியா இருக்க என்ன அவசியம்” – ஆதி

“எல்லாத்துக்கும் காரணம் நீ தான்… நீ மட்டும் தான்… அன்னைக்கு நீ பண்ணுன காரியம் தான் இன்னைக்கு என் மொத்த குடும்பமும் எனக்கு எதிரா இருக்குது… இன்னைக்குன்னு இல்ல கடந்த பத்து வருசத்துக்கு மேல இதே நிலைமை தான் எல்லாரும் என்ன விட்டுட்டு தூரமா போய்ட்டாங்க நா போகவே முடியாத இடத்துக்கு போய்ட்டாங்க…



Advertisement

என் தம்பி நீ செத்தா கூட பரவால்ல என் முகத்துல முழிக்காதான்னு சொல்றான்… எதுனால? எல்லாம் உன்னால… உன்னால மட்டும் தான்… சந்தோசமா இருந்த குடும்பத்தை பிரிச்சு இப்புடி தூள் தூளா ஆக்குன உன்ன எப்டி மன்னிக்கனும்னு ஆசை படுற? நா செத்தாலும் அப்டி நடக்காது… நா அனுபவிச்ச கஷ்டத்துல ஒரு பத்து பர்ஸன்ட் கூட நீ அனுபவிக்காம இருந்தா எனக்கு என்ன மரியாதை??

அதான் உங்க சொந்த வீட்டை உங்க அப்பா கடன் வாங்கிருக்காருன்னு பொய் சொல்லி நானே உன்ன அந்த வீட்டை விட்டுட்டு வெரட்டுனேன்… வேணும்னே உன்னோட பார்ட் டைம் ஜாப்ஸ் எல்லாத்துலயும் உன்ன வேலைய விட்டு தொரத்துனேன்… எல்லாத்துக்கும் மேல நீ ஆசை ஆசையா விளையாடுவியே புட்பால் அதுல தமிழ்நாடு டீம்ல நீ செலக்ட் ஆகாம நா தான் பண்ணுனேன்… என்ன போதுமா இல்ல இன்னும் வேற எல்லாத்தையும் சொல்லட்டுமா?”

*********************

Advertisement

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் – அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்

Advertisement

“கிழிச்சுச்சு” கடு கடு குரலில் ஆதியின் கோவம் கண்களில் தெரிய வெறித்த பார்வையோடு தனது முழு கோபத்தையும் அந்த வண்டியின் வேகத்தின் காண்பித்தான் அதிலும் அந்த பாட்டின் வரிகள் இன்னும் கோவத்தை தூண்டி விட்டன…

“எவன் டா சந்தோசமா இருக்கது மனுஷனுக்கு கோவம், வெறுப்பு மட்டும் தான் வருது… வாழுற ஆசையே விட்டு போச்சு மச்சான் அப்புடியே போய் கார அந்த லாரில ஏத்தணும் போல இருக்கு” என்றவன் வண்டியின் வேகத்தை உயர்த்தி அவர்களை விட நானூறு மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்த லாரியை நோக்கி செலுத்த அவன் அருகில் அமர்ந்திருந்த தமிழுக்கும் பின்னிருக்கையில் அமர்ந்து பவித்ராவிடம் காதல் வளர்த்துக்கொண்டிருந்த கௌதமிற்கும் தூக்கி வாரி போட்டது…

“ஆத்தி டேய் ஸ்பீட்ட கம்மி பண்ணுடா” – கெளதம்

Advertisement

“வண்டிய நிறுத்துடா” ஜன்னல் வழி வெளியே குதித்து விடுவோமா என்ற நினைவில் வெளியே எட்டி பார்த்த தமிழுக்கு ஆதி முந்தி சென்ற வாகனங்கள் தெரிய உயிரே நடுங்கியது…

“கன்னி கழியாமல் உயிரே நீங்க போகின்ற என்னுடைய சாபம் உனக்கு ஏழு பிறவிகளுக்கும் நீடிக்கும்” பாதி சொர்கத்திற்கு சென்றிருந்த தமிழின் சாபம் ஆதியை துளியும் அசைக்கவில்லை…

“அறிவு கெட்டவன் சாகுறதா இருந்தா தனியா உன் வண்டிய எடுத்துட்டு போய் சாகுடா ஏண்டா இப்புடி லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க” ஆதியின் தலையில் கெளதம் அடிக்க சற்று வேகத்தை குறைந்தவன் ஒரு ஓரம் வண்டியை நிறுத்தி வேகமாக பின்னிருக்கையில் அமர்ந்துக் கொண்டான்…

“அது எப்புடிடா பண்றது எல்லாத்தையும் கச்சிதமா பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி போய் ஒக்காந்துக்குற?” ஆதியை அர்ச்சித்துக்கொண்டே வண்டியை எடுத்தான் தமிழ், “ஆனாலும் நான் சாபத்தை திருப்பி வாங்க மாட்டேன்… அப்பனே முருகா ஞாயானபண்டிதா எனக்கு பிள்ளை பொரிந்ததும் உன் கோவிலுக்கு வந்து மொட்டை போடுறேன்”

“அடிங்க நாயே வாய்மூடிட்டு வண்டிய ஓட்டல குறுக்குலயே ஏறி மிதிப்பேன் பாத்துகோ… அப்புடியே லெப்ட் எடு” – ஆதி

“தம்பி வீடு ரைட்ல போகணும்… தண்ணி அடிக்காமயே போதைல இருக்கீங்கன்னு நெனக்கிறேன் இன்னைக்கு” – தமிழ்

“எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ மூடிட்டு வண்டிய ஒட்டு இல்ல நான் ஓட்டுறேன் நகரு”

“தலைவரே வழிய மட்டும் சொல்லுங்க எப்டி ஸ்மூத்தா ஓட்டுறேன்னு மட்டும் பாருங்க… ஒடம்புல சின்னதா அசைவு கூட இருக்காது”

“பேசாம ஓட்டு டா”

கண்களை மூடி பின்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டேன் ஆதி… காலையில் உதய்யை பார்த்ததிலிருந்து ஒரு நிலையில் இல்லாதவன் முதுகில் ஏற்பட்ட காயத்தை கூட பொருட்படுத்தாமல் ஜடமாய் திரிந்தவன் நண்பர்களுடன் காலையிலிருந்து சென்னை முழுவதும் தெரு தெருவாக சுற்றி திரிகிறார்கள். எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை மனம் தாறுமாறாக வலியில் துடித்தது

“வழிய சொல்லுடா தூங்காத… ஆமா எங்க போறோம்?” – தமிழ்

“லெப்ட்-ல போய் அடுத்து ரெண்டாவது ரைட் அதுல ரைட்-ல இருக்க மூணாவது வீடு”

கெளதம் ஓரளவிற்கு யூகித்துவிட்டான் தமிழ் தான் ஒன்றும் புரியாமல் முன் கண்ணாடி வழியாக ஆதியை பார்த்தபடியே வண்டியை ஓடிக்கொண்டிருந்தான்… ஆதி கூறிய இடம் வந்த உடன், “ராசா வந்துருச்சு ஆமா இது யார் வீடுடா இம்மாம்பெருச்சா இருக்கு?”

அந்த இருளிலும் அந்த வீட்டின் பிரமாதமான தோற்றம் பிரகாசித்தது. அந்த தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளும் சிறிய மாளிகை போலவே இருந்தது ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிலோமீட்டர் இடைவேளை இருக்கும் அந்த அளவிற்கு அதன் சுற்றுப்புறம் பறந்து விரிந்திருந்தது தமிழ் வண்டியை நிறுத்தி இருந்த இடம் ஒரு வீட்டின் பின்புறம், மணிமேகலையின் வீட்டின் முன் வாசலிற்கு சற்று பின்னால் நின்றது…

“பையன் ஆளுடா” கெளதம் ஆதி கூறிய அனைத்தையும் தமிழிடம் கூற ஆதி வண்டியில் இருந்து இறங்கி அந்த வீட்டையே வெறித்து பார்த்து நின்றான் ஒரு இதமான அமைதியில்…

“இந்த மணியை அடிக்க தான் நீ இப்புடி மூஞ்சிய தூக்கிட்டு இருந்தியா இத மொதையே சொல்லிருக்கலாம்ல… சரி வா வீட்டை பாதச்சுல கெளம்பு நேரமாச்சு தூக்கம் வருது”

♪ என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே ♪

காரில் பின்னணியில் ஓடிகொடிருந்த அலைபாயுதே படத்தில் பாடல் இதமாய் கதை குளிர்வித்துக்கொண்டிருக்க தமிழ் அமர்ந்திருந்த கதவினை திறந்து அந்த பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டான்…

“டேய் என்னடா பண்ணுற தெருல இருக்க எல்லாரும் எந்திரிச்சு வந்துருவாங்க லூசு கேன பயலே” கெளதம் ஒலியை குறைக்க மீண்டும் ஆதி அதை உயர்த்தி அவனை நோக்கி ஒரு பார்வை முறைத்து, மணிமேகலையின் வீட்டை நோக்கி பார்த்து நின்றான் சிறு புன்னகையுடன்…

“பரவால்லடா மான்குட்டியை வெளிய வர சொல்லு நா சௌண்ட கொறச்சிடுறேன்”

♪ காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது

என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது

என் காதல் எனயென்ன உன் நெஞ்சு காணாது

ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே

நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே

உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ…. 

“மச்சி எவனாச்சு வர போறான் டா பிக்காளி பயலே… இந்த வீட்டை எல்லாம் பாத்தா கண்டிப்பா வீட்டுக்கு ஒரு போலீஸ் காரண காவலுக்கு வச்சிருப்பாங்க உன்னால மொத தடவ போலீஸ் ஸ்டேஷன் போக போறேன் போல”

தமிழ் அவன் பங்கிற்கு புலம்ப ஆதி அதை கவனிக்காமல் இருந்த அந்த நேரத்தில் வெளி வந்தாள் அவன் மான்குட்டி

எளிமையான இரவு உடையில் கண்களை கசக்கி பால்கனியில் வந்து நின்றவளை அந்த உடை மறைத்திருந்தது அதன் அளவு அவளுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தது. ஆனால் அதையும் தாண்டி அவளுடைய குட்டி முகம் நிலவின் ஒளியில் அழகாய் பளிச்சிட்டது. கண்களை துடைத்து நின்றவளது பார்வை சத்தம் வந்த திசையில் நின்ற ஆதியை பார்த்ததும் பளிச்சிட ஆதி நீண்டதொரு மூச்சினை விட்டான் அந்த பார்வையை தாளாமல்…

“டேய் அந்த புள்ள வந்துருச்சுல பாட்ட ஆப் பண்ணு” கௌதமின் சொல் கேட்டு மணி மேகலையிடமிருந்து பார்வையை எடுத்தவன், “எப்டிடா இவனுக்கு இப்புடி சிக்குது… மச்சக்காரன்டா” என்றான் தமிழ் சிரித்தபடி…

“ஆனா இந்த ஒன்னுல மாப்பிள்ளை சீரியஸ் ஆஹ் இருக்கான்… வாழட்டும்” – கெளதம்

ஆதியை பார்த்த நொடி புன்னகை பூத்த முகமாய் அவனை நோக்கி கை அசைக்க ஆதியும் கை ஆசைதான் மென் முறுவலுடன்…

‘என்ன இங்க?’ சைகையில் அவள் அங்கிருந்து கேட்டாள்…

ஆதி தோளை குலுக்கி அழகாய் சிரித்தான்… மணிமேகலையாலும் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை…

‘கீழ வா’ என்றான் ஆதி.

கண்களை விரித்து நொடி தாமதிக்காமல் கோவில் மணியாய் தலையை ஆட்டியவள், மீசையை முறுக்குவதுபோல் செய்து கீழே காண்பித்தாள் அவள் தந்தையின் இருப்பை கூற…

“மச்சி இவளை கரெக்ட் பண்றதுக்கு பேசாம நீ அவளோட அப்பாவை கரெக்ட் பண்ணிடலாம்டா” கெளதம் சத்தமாய் அவளை பார்த்து சிரிக்க ஆதிக்கும் அது ஒட்டிக்கொண்டது… அவன் கூறியது சரி தானே என்று… நிமிடத்திற்கு ஒரு முறை அவளது தந்தையை பற்றி அவள் கூறிவிடுவாள்

கண்களை சுருக்கி ‘ப்ளீஸ்’ என்றான் கெஞ்சுவது போல்…

‘எதுக்கு’

முகத்தில் இருந்த சிரிப்பு மறைத்து மீண்டும் ‘ப்ளீஸ்’ என்றான்…

நின்ற இடத்திலே நெளிந்தாள்… அவனிடம் செல்லவும் மனம் ஆசைபட்டது இந்த இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் தயக்கம் இருந்தது என்ன தான் ஆதியை பற்றி தெரிந்திருந்தாலும் இரவில் வீட்டை விட்டு செல்லும் அளவிற்கு அவன் பழக்கப்பட்டவன் இல்லையே ஆனால் ஒரு பக்கம் அவனது வாடிய முகம் ஏதோ வலியில் இருப்பதாய் கூறியது…

அவன் கண்களை பார்த்து நிராகரிக்க மனம் இன்றி தரையை பார்த்தவள் ‘வரவில்லை’ என்று தலை அசைத்தாள்…

அவளை பார்த்தவாறே பெருமூச்சொன்றை விட்டவன் தலையசைத்து ஏமாற்றத்துடன் வண்டியில் எற சென்றவனை அவள் கை தட்டி அழைத்தவள் ஒரு நிமிடம் என்று வீட்டின் உள்ளே சென்று மீண்டும் வெளியில் வந்து ஆதியை நோக்கி ஒரு கசங்கிய காகிதத்தை வீசினாள்…

அவளை கேள்வியாய் பார்த்தவன் அந்த காகிதத்தை எடுத்து பார்த்தான்… அதில் ‘SORRY ?’

மறுப்பாக தலை அசைத்து வண்டியில் ஏறி அமர்ந்தவன், “என்ன மயிறு வாழ்க்கைடா இது” புலம்பியவாறே காரில் ஏறி அமர்ந்தான்… அவனது ஒரு பார்வைக்காக கண்களில் ஏக்கத்துடன் காத்திருந்த மணிமேகலைக்கு ஏமாற்றமே கிட்டியது…

காரில் மெயின் ரோட்டிற்கு வந்தவுடன் தமிழிடம் காரை நிறுத்த கூறி, “நான் நைட் லேட்டா வருவேன்னு சஹானாக்கு சொல்லிடு இன்னைக்கு உங்க வீட்டுலயே இருக்கட்டும்”

“எங்கடா போற வா நாங்க இறக்கி விடுரோம்”

“வேணாம் நீங்க போன நா பாருக்கு(bar) போறேன்… வீட்டுல சொல்லாத”

“அவனுக்காக உன் ஒடம்ப கெடுத்துக்காத ஆதி” – தமிழ்

இருந்த கோவத்தை எல்லாம் பொறுமையாக வைத்திருந்தவன் கத்திவிட்டான், “இப்ப நா அவனுக்காக தான் குடிக்கிறேன்னு சொன்னேனா எதுக்கு எல்லாத்துக்கும் அவனையே இழுத்துட்டே சுத்துறீங்க கிளம்புங்க ஒழுங்கா இல்லனா செருப்பு பிஞ்சிடும் பாத்துக்க”

அவர்கள் பதில் கேட்காமல் இடத்தை விட்டு சென்றுவிட்டான் ஆதி…

“வாடா அவன் வந்துருவான்” கெளதம் தமிழுக்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்து சென்றான்…

அங்கு சஹானா தான் தமிழ் அழைத்தும் அவன் இல்லத்திற்கு செல்லாமல் தங்கள் வீட்டிலே அவள் சகோதரனை எதிர்பார்த்து வாசலையே நொடிக்கொருமுறை பார்த்தவாறே நின்றாள்… ஓரளவிற்கு யூகித்திருந்தாள் ஆதி ஏதோ பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டான் என்று அவனை ஒருமுறை நேரில் பார்த்தால் மட்டுமே கண்களுக்கு நிம்மதி. ஆனால், இன்றும் தமிழிடம் வந்த ஆதியின் செய்தியை கேட்டு கவலையுடன் துக்கத்தை தழுவ முயற்சி செய்து தோல்வியை மீண்டும் தழுவினாள்…

எப்டி இருக்கு?

யாரும் உதய திட்டாதீங்க திட்டாதீங்க சொல்லிட்டேன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!