Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 20 1

20

சத்தியநாதன்-தேவியின் வீட்டு மாடியில், முன்பு ஜேகோப் தங்கியிருந்த அறையில் இப்போது தன் பெற்றோருடன் தங்கியிருந்தான் ஜேகோப். காலை களேபரம் எல்லாம் முடிந்து சில மணிநேரங்கள் ஆகியிருந்தது.



Advertisement

நிச்சய தட்டை மாற்றிய கையோடு வீட்டை விட்டு வெளியேறியவனை ஊராட்கள் போக விடவில்லை. வெளியே தங்கிக்கொள்கிறோம் என்ற ரிச்சர்டையும் விடவில்லை. கட்டாயமாக இங்கே தான் இருக்க வேண்டும் என்று வற்ப்புறுத்தினர். ஏதோ விட்டால் ஓடிவிடுவார்கள் என்பதை போல அவர்கள் நடந்துக்கொள்வது இன்னமும் அவனுக்கு எரிச்சலை கிளப்ப, அதை தனிய வைக்கும் முயற்சியாய் ரோஷிணி கூட அவன் கண்ணில் சிக்காதது இன்னமும் பேரெரிச்சலை கிளப்பிக்கொண்டிருந்தது.

Advertisement

‘நான் வந்துருக்கேன்னு தெரியும் தானே? வெளில வரதுக்கு என்ன? என்னை பார்க்கவே வேண்டாம்ன்னு அவாய்ட் பண்றாளா?’ அவன் அப்படி யோசித்துக்கொண்டே இவ்வீட்டில் இருந்து அவ்வீட்டை பார்க்க,

Advertisement

“பப்பூ, வாப்பா… சாப்பிட போலாம்!” என்று கையை பிடித்தார் தேவி. வெடுக்கென உருவிக்கொண்டான் கையை அவரிடம் இருந்து. அதில் அவர் முகம் விழுந்துப்போக, வெளியில் இருந்தே, “டேடிஈஈஈ…” என்று கத்தினான்.

Advertisement

அவன் குரலில் வீட்டாட்கள் எல்லோரும் வந்துவிட, ஜேகோப் தூய ஆங்கிலத்தில் தன் பேச்சை ஆரம்பித்தான் அங்கு.

“எல்லா டிராமாவும் முடிஞ்சுதா? எல்லாரும் பர்ஃபார்ம் செஞ்சு முடிச்சாச்சா? இல்ல இன்னும் எதாவது பாக்கி இருக்கா? முடிஞ்சுதுன்னா தயவுசெஞ்சு கிளம்புங்க! என்னால இங்க ஒரு நிமிஷம் கூட நிக்க முடியாது. இங்க இருக்கவங்க முகத்தை பார்க்கவே இர்ரிட்டேடிங்’கா இருக்கு…  என்னால இந்த ‘டாக்சிக் டிராமா’வ இதுக்கு மேல சகிக்க முடியாது!” என்று கத்த, அவன் பேசுவது அங்கே தேவகி, ரிச்சர்டை தவிர யாருக்கும் புரியவில்லை என்பதால் அவனை வாய்ப்பார்த்துக்கொண்டு நிற்க,

“ஜாக்கி..ஈஈ!” பல்லைக்கடித்துக்கொண்டு மகனை அதட்டினார் தேவகி.

அன்னையின் குரல் கேட்டதுமே, “பேசாதீங்க ம்மா… என்கிட்ட பேசவே பேசாதீங்க! உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை… நீங்க இந்த பேமிலி ப்ளட் தானே? அதான் உடனே அவங்களுக்கு தகுந்த மாதிரி மாறிட்டீங்க!” என்று கசப்பாக முகம் சுளித்தான்.

என்னதான் ஆங்கிலத்தில் என்றாலும் பேசும் தொனியும், முகத்தில் வரும் உணர்வுகளும் என்ன சொல்கிறான் என்பதை பிறருக்கு கடத்தாமல் போய்விடுமா என்ன? சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் ஊராட்களையும், முகம் கறுக்க நிற்கும் தமையனையும் கண்டு கையை பிசைந்த தேவகி, “பொறுமையா இரு, தனியா பேசிப்போம்!” என்று சொல்லி, தேவியிடம் ஒரு அறையை ஏற்ப்பாடு செய்ய சொல்லி கேட்டார்.

அவரோ ஜேகோப் தங்கியிருந்த அறையில் இருக்க சொல்ல, “நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன், எனக்கு புடிக்கல” என்று முரண்டுப்பிடித்தான் ஜேகோப்.

“எனக்கு இங்க இருக்கணும் பப்பூ, அம்மா முழிச்சதும் என்னை தேடுவாங்க ப்ளீஸ்” என்று அவர் கெஞ்ச, “நீங்க இருங்க, நான் போறேன்” என்றான் அதற்கும். தேவகி என்ன முயன்றும் அவனை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. ரிச்சர்ட் தான் பேசி சமாதானம் செய்து இப்போது அறைக்குள் அமர வைத்திருக்கிறார்.

அறைக்குள் வந்ததில் இருந்து முகத்தை உர்ரென்று வைத்துகொண்டு அம்ரந்திருந்தான் அவன். எதிர் அறையில் தான் ரோஷிணி இருக்கிறாள்! அவள் உள்ளே இருப்பது இவனுக்கு தெரிந்தது. வேண்டுமென்றே தவிர்க்கிறாள் என உறுதியானதும் அவனது கோபங்கள் எல்லாம் எப்போது, எங்கே வெடிக்கலாம் என்ற விளிம்பு நிலைக்கு போய்க்கொண்டிருந்தது.

அப்போது தேவி மூன்று டம்ளர்களில் பாதாம் பாலோடு வந்தார். பெரியவர்கள் எடுத்துக்கொள்ள, ஜேகோப் முகத்தை திருப்பினான்.

“எடுத்துக்கோ பப்பூ, வந்ததுல இருந்து ஒண்ணுமே சாப்பிடல நீ!” தேவி அக்கறையாய் சொல்ல, அவன் காதே கேட்க்காதது போல அமர்ந்திருந்தான். தேவிக்கு முகமே விழுந்துப்போனது.

அதைக்கண்ட தேவகி தான், “விடு தேவி, அவன் வரப்போ சாப்பிட்டுட்டு தான் வந்தான், அதான் பசி இருக்காது… நீ இங்க வச்சுடு! அவன் அப்பறம் குடிச்சுப்பான்” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு கதவை அடைத்தார்.

“ஜாக்கி… நீ செய்யுறது கொஞ்சமும் சரி இல்ல” தேவகி ஆரம்பித்ததுமே, “யார்? நானா? நானா?” என்று ஒரு வேகத்துடன் எழுந்து கத்த ஆரம்பித்தான் அவன். அவன் செய்கைகள் எல்லாம் விநோதமாக இருந்தது பெற்றவர்களுக்கு.

இத்தனை வருடத்தில் அவன் எதற்கும் இப்படி அடம் பிடித்ததில்லை.. இப்படி கோபம் கொண்டதில்லை.. இப்படி எடுத்தெறிந்து நடந்துக்கொண்டதில்லை…! ஆனால், இப்போது எல்லாம் நடக்கிறது.

அவர்களுக்கு புரியாத ஒன்று என்றால், அது இத்தனை வருடமும் அவன் விருப்பத்தை மீறி எந்த ஒரு விஷயமும் அவன் மீது திணிக்கப்பட்டதில்லை. எல்லாம் அவன் முடிவு என்று சுதந்திரமாக வாழ்ந்தவனுக்கு, இந்த குடும்ப அரசியல் அத்தனை எரிச்சல் வாய்ந்ததாய் இருந்தது.

அவனை மீறி, அவன் விருப்பத்தை மீறி ஒன்று அவன் மீது திணிக்கப்படுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாததன் பிரதிப்பலிப்பே இந்த அசாத்திய கோபம்!

அவன் மனதில் எதுவும் இல்லாமல் இருந்திருந்தால் எப்படியோ? அதில் ‘ரோஷிணி’ என்ற ஒருத்தி இருக்க, அவனால் அவளை விட முடியும் என்று தோன்றவில்லை.

அவள் தனக்கு இல்லாமல் போய்விடுவாளோ என்ற நினைப்பு எழ எழவே, அவள் மீதான பிடிப்பும் காதலும் அதிகரித்துக்கொண்டே போவதை போல உணர்ந்தான் அவன்.

இந்த அளவுக்கு அவள் மீது பற்று வரும் அளவுக்கு அவர்களுக்குள் எதுவுமே நிகழவில்லையே! இன்னும் ஏன்? அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து சிரித்து பேசிக்கூட நேரம் போக்கியதில்லை. அப்படி இருக்க, தன் காதல் இப்படி ஆழ்ந்து வேரிடும் அதிசயத்தை அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

தேவகியோ, “சங்கவியை பாத்தேன்… கண்ணுக்கு லட்சணமா இருக்கா! அவளையே கல்யாணம் பண்ணிக்கோ! எந்த பிரச்னையும் வராது” என்று சொல்ல, அன்னையை எரிப்பது போல பார்த்தான் அவன்.

அதை கண்டுக்கொள்ளாதவர், “அவ பேர உன்னோட சேர்த்து ஊரு முழுக்க பேசிட்டாங்க… இனி யார் கட்டுவாங்க அவளை.. ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கக்கூடாது ஜாக்கி… அது பாவம்” அவனுக்கு புரிய வைக்க பார்க்க,

“அப்போ ஒரு பையனோட வாழ்க்கையை கெடுத்தா, அது பாவம் இல்லையா? நாங்க கர்ஸ்(சாபம்) பண்ணா அது பலிக்காதா?” என்றான் அவன்.

“ஜாக்கி… விளையாடுற நேரம் இல்ல இது… நீ சங்கவிக்கு நோ சொல்றதால இங்க நிறைய பேரு அபெக்ட் ஆவாங்க டா, புரிஞ்சுக்கோ”

“அப்ப நான் அபெக்ட் ஆனா பரவால்லையா?”

“ப்ச்… ஜாக்கி… உனக்கு சங்கவிய மேரேஜ் பண்றதுல என்ன ப்ரோப்லேம்?”

“ஐம் இன் லவ் வித் மை ரோஸ்! அதான் ப்ரோப்ளம்”

தேவகி அவன் சென்று நயமாக ஆரம்பித்தார்.

“பப்பூ… அதெல்லாம் லவ் இல்லடா… ஜஸ்ட் அன் இன்பெக்ச்சுவேஷன்!  ஒரே வீட்டுல அடிக்கடி பார்த்துக்கிட்டு இருந்ததால அவமேல ஒரு இண்டரஸ்ட் வந்துருக்கலாம். இந்த ‘ஸ்டாக்ஹோம்சின்ட்றோம்’ சொல்லுவாங்கல்ல…? தட் கைன்ட் ஆஃப்” அவர் பேச, ஒன்றுமே சொல்லாமல் அவர் முகத்தையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் ஜேகோப்.

அவன் பார்வையின் பொருள் விளங்காது, “என்னடா?” என்று அவர் வினவ, சட்டென பக்கத்தில் இருந்த தந்தையிடம் திரும்பிய ஜேகோப், “டேட், ஐ ஆஃபன் ஆஸ்க்ட் யூ க்நொவ்? ஹவ், அண்ட் ஃப்ரம் வேர் டிட் யூ கிராப் திஸ் ஏஞ்சல்’ன்னு… யூ ஹேட் லெஃப்ட் அவர் ஏஞ்சல் இன் கேன்பரா இட்செல்ப். திஸ் லேடி ஹூ சிட்ஸ் இன் ஃப்ரன்ட்  ஆஃப் அஸ் இஸ் சர்டெயின்லி அ க்ரிஞ்சு கிழவி!”

(டேட், நான் அடிக்கடி உங்ககிட்ட கேட்பேன்’ல? எப்படி, எங்கிருந்து இங்க தேவதையை கடத்திட்டு வந்தீங்கன்னு! நம்ம தேவதையை நீங்க ‘கேன்பரா’லையே விட்டுட்டு வந்துட்டீங்க… இப்ப நம்ம முன்னாடி உட்காந்துருக்குற இந்த லேடி, ஏஞ்சல் இல்ல… ‘க்ரிஞ்சு கிழவி’) என்று சொல்லிவிட,

ஏற்கனவே மனைவியின் இந்த நடத்தையில் ஒப்புதல் இல்லாது, அதே சமயம் அவரை கடிந்தும் பழக்கம் இல்லாத ரிச்சர்டுக்கு, மகனது பேச்சு குபுக்கென சிரிப்பை வரவழைக்க, இருவரையும் கொடூரமாய் முறைத்த தேவகி, மகனின் தலையில் நறுக்கென கொட்டினார்.

கண்டிப்பாக வலித்திருக்கும். தேய்த்துக்கூட விடவில்லை அவன். அப்படியே அமர்ந்திருந்தான்.

“பப்பூ… அம்மாக்காக டா! நான் சொல்றேன்ல? சங்கவி உனக்கு பர்பெக்ட் மேட்ச்! உனக்கு நான் கெடுதல் சொல்வேனா சொல்லு?” அவன் தாடையை பிடித்து கெஞ்சலாய் அவர் சொல்ல,

“மெகா சீரியல்” என்றான் அவன்.

“என்ன சீரியல்?”

“ம்ம்? சீரியஸ் மம்மி மாறி பேசிட்டு இருக்கீங்க… சேம் ஸ்க்ரிப்ட்!” என்றான் கடுகடுவென.

தேவகிக்கு அவ்வளவு தான் பொறுமை இருந்தது.

“இங்கப்பாருடா… நீ ஆசைப்படுறியோ இல்லையோ சங்கவி கூட உனக்கு கல்யாணம் நடக்கும்… என் அண்ணன் நடத்துவான்…! முடிஞ்சவரைக்கும் மனசை மாத்திக்கப்பாரு, அவ்ளோதான் சொல்லிட்டேன்!” என்றவர் அறையில் இருந்து வெளியேறிவிட்டார்.

ரிச்சர்ட் மகனிடம் பேச வர அவருக்கு அழைப்பு வந்தது. நெட்வர்க் சரியாக கிடைக்காமல் போக, “ஓபன் ஏரியா’ல இருக்கும். டெரெஸ் ஆர் கார்டன்…” ஜேகோப் சொல்ல, மொட்டை மாடிக்கு மொபைலுடன் சென்றார் ரிச்சர்ட்.

அறைக்குள் தனித்திருந்த ஜேகோபுக்கு எப்படியேனும் ரோஷினியை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது. அறையை விட்டு வெளியே வந்தான். கூடத்தில் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டது. அவன் இருந்த தளத்தில் ஒருவரும் இல்லை. இருந்தாலும் கவலை இல்லை என்ற மனநிலை அவனுக்கு. நேராக அவள் அறைக்கு சென்றவன் படபடவென கதவை தட்ட,

“வரேன் ம்மா! இரு!” என்ற நலிந்த குரலுடன் சில நொடிகளில் கண்களை துடைத்துக்கொண்டே கதவை திறந்த ரோஷிணி இந்த பட்டபகலில் அவள் அறை முன்னே அவனை எதிப்பார்க்கவே இல்லை. எப்படியும் ஆட்கள் இருக்கையில் தன்னை சந்திக்க துணிய மாட்டான் என்று எண்ணியிருந்த அவள் நினைப்பை துவம்சமாக்கி விட்டு நிதானமாக அவள் அறைக்குள் நுழைந்தான் அவன்.

“என்ன பண்ற ஜாக்? வெளில போ… ப்ளீஸ்” அவள் இறைஞ்ச, “மாட்டேன்!” என்றவன் கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

இவள் தான் பயத்தில் யாரும் பார்க்கும்முன்னே கதவடைப்போம் என்று தாழிட்டு விட்டு அவனிடம் ஓடி வந்தாள்.

“ப்ளீஸ் ஜாக்… இப்படி எல்லாம் இங்க பண்ணக்கூடாது! பெரிய பிரச்சனை ஆகிடும்! தயவுசெஞ்சு போய்டு!”

“என்ன பிரச்சனை ஆகிடும்? உன்னையும் மேரேஜ் பண்ணிக்க சொல்லுவானுங்களா? எனக்கு ஓகே தான்!” அவன் இலகுவாக சொல்ல, அவள் வெகுண்டெழுந்தாள்.

“என்ன? என்னையும் பண்ணிப்பியா? அப்போ உனக்கு அவளும் வேணும், நானும் வேணுமா?”

“அவ வேணுன்னு நான் எப்போ சொன்னேன்?”

“இப்போ நீ சொன்னதுக்கு அதான் அர்த்தம்!” அவன் சிடுசிடுக்க, “சரி, எனக்கு அவ வேண்டாம்… நீ மட்டும் தான் வேணுன்னு சொன்னா என்னை மேரேஜ் பண்ணிப்பியா?” என்று அவன் வர, அவள் வாய் அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!