Skip to content
Post Views: 3,059
“பேச மாட்டியே!” சலித்தவன், “இங்க பார் ரோஸ்! என்ன ப்ரோப்ளம் வந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்! நீ ஸ்ட்ராங்’கா ஓகே மட்டும் சொல்லு எனக்கு” என்று கேட்க, அவள் தலைகுனிந்தாள்.
“ஐ க்நொவ் யூ லவ் மீ! அதை உன் வாயால கேட்டுட்டா நான் இன்னும் ஸ்ட்ராங்’கா எல்லார்ட்டயும் பேசுவேன்!”
Advertisement
அவள் மௌனம் காக்க, “இங்கப்பாரு” என அவள் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்திப்பார்த்தவன் அதிர்ந்துப்போனான். அவன் வந்ததில் இருந்து தன் தலைமுடியை இருபக்கமும் விரித்துப்போட்டு பாதி முகத்தை மறைத்து வைத்திருந்ததில் அவள் முகத்தை சரியாக கவனிக்க முடியவில்லை அவனால்.
Advertisement
ஒரு பக்கம் கன்னத்தில் வரிவரியாய் கோடிழுத்ததை போன்ற தடயம். உதட்டருகே கூட லேசாக ரத்தம் கட்டியிருந்தது.
Advertisement
மறைத்திருந்த முடியை முழுவதுமாக இரு கைகளால் விலக்கி, அவள் முகத்தை அப்படியே ஏந்தியவன், “என்னாச்சு?” என்றான் பதட்டமாய்.
Advertisement
கண்கள் தரையை பார்க்க, அழுகையில் உதடு நடுங்கியது அவளுக்கு.
“சொல்லு ரோஸ், என்னாச்சு?” அவன் மீண்டும் கேட்க, “அண்ணன் அடிச்சுட்டான்!” என்றாள் விம்மலுடன்.
“ஃபார் வாட்?” என்றவனுக்கு இந்த மனிதர்களின் காட்டுமிராண்டித்தனத்தை சகித்துக்கொள்ளவே இயலவில்லை.
“வீட்டுக்கு தெரியாம கொடைக்கானல் போனதுக்கு!”
“ப்ச்!” அலுத்துக்கொண்டவன், “இவங்க இப்படின்னு தெரியும் தானே? அப்பறம் ஏன் போன?” என்றான் இயலாமையுடன்.
“மாட்டிக்க மாட்டோம்ன்னு நினைச்சோம்!” அழுதுக்கொண்டே சொன்னாள் அவள்.
“எங்க அவன்? நான் பேசுறேன்” ஜேகோப் சொல்லும்முன்னே அவனை கெட்டியாய் பிடித்துக்கொண்டவள், “வேண்டாம்… வேண்டாம்” என்றாள் அவசரமாய்.
“பொறுமையா கேட்குறேன்!” அவன் சொல்ல, “இல்ல வேண்டாம்! ஏற்கனவே உங்கமேல கோவமா இருக்காங்க… இப்போ பேசுனா பிரச்சனை ஆகும்!” என்று தடுத்தாள் அவள்.
அவள் கன்னத்தில் இருந்த காயத்தை மெல்ல வருடிக்கொடுத்தவன், “ஆயின்ட்மென்ட் போட்டியா?” என்றான்.
‘ம்ஹும்!’ அவள் மறுத்து தலையாட்ட, “நான் போடவா?” என்றான்.
அவள் அப்படியே நிற்க, உதடு கூட அழுந்தாமல் மெல்லிய முத்தம் ஒன்றை பதித்தான் அவள் காயத்தில்.
அவளது கண்ணீர் அதிகரித்தது. இரு பெரு விரல்களால் வழியும் நீரை அழுந்த துடைத்தவன், மறுக்கன்னத்திலும் முத்தம் வைக்க, அவளுக்கு அழுகையில் உதடு நடுங்கியது. இருபுருவங்களுக்கு மத்தியில், வெகு அழுத்தமாய், சில நொடியில் தன் முத்தத்தை ஆழ பதிந்தவன், அவள் முகத்தை அப்படியே தன் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள, அவனை இறுக கட்டிக்கொண்டவள், அழுது கரைந்தாள்.
சிறுது நேரம் அவள் முதுகை வருடிக்கொடுத்துக்கொண்டே அவளை அழவிட்டவன், ஒருக்கட்டதில் இந்த அழுகை ஓயாது என்று உணர்ந்து, “ரோஷிணி…” என்றான் லேசான அதட்டலாய். அதில் சற்று நிதானத்திற்கு வந்தவள், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனை விட்டு தள்ளி நிற்க, அவளது குனிந்த தலையை விரல் கொண்டு நிமிர்த்தினான் ஜேகோப்.
அழுது அழுது முகமெல்லாம் வீங்கி சிவந்து கிடந்தது. தலை முடி எல்லாம் அலங்கோலமாய் இருக்க, நலுங்கிய உடையில் பார்க்கவே பரிதாபமாக நின்றவளை, “ரெப்ரெஷ் ஆகிட்டு வா! போ” என்று அனுப்பி வைத்தான் அவன்.
அறைக்குள் இருந்த குளியலறைக்குள் சென்று தன்னை சீர்ப்படுத்திக்கொண்டு அவள் வந்தபோது, கையில் பாதாம் பாலுடன் நின்றிருந்தான்.
“இது ஏது?” கேட்டுக்கொண்டே அவள் வாங்கி பருக,
“எனக்கு குடுத்தது!” என்றவன் அவள் குடிக்கும்வரை பேசவில்லை.
குடித்து முடித்ததும் தெம்பாக உணர்ந்தாள் ரோஷிணி. தலை முடியை அள்ளி கிளிப்புக்குள் அடக்கியிருந்தாள். இப்போது அவள் முகம் பார்க்கவே சற்று தெளிந்து இருக்க,
“சோ, வாட்ஸ் யுவர் டிசிஷன்?” என்றான் ஜேகோப். ரோஷிணி பேசவில்லை.
“நீ ஓகே சொன்னா தான் என்னால ப்ரோசீட் பண்ண முடியும் ரோஸ்!” அவன் சொல்ல, “நான் ஓகே சொல்ல என்ன இருக்கு? உங்களுக்கும் சங்கவிக்கும் கல்யாணம்! அது நல்லபடியா நடக்கணும், அவ்ளோதான்!” என்று சொல்ல, ஜேகோப்புக்கு ஆயாசமாய் வந்தது.
‘காதலுக்காக மற்றவரிடம் போராடலாம்… ஆனால், காதலியிடமே போராடுவது ‘ஐயோ’ என்று இருந்தது அவனுக்கு’
“அப்போ உனக்கு என்மேல லவ் இல்ல?” அவன் கேட்க, அவள் பதில் சொல்லவில்லை.
அவனை பிடிக்கும். சைட் அடிக்க தோன்றியது. அவன் செய்கைகளை ரசிக்க தோன்றியது. அவன் முத்தமிட நெருங்கியபோது தடுக்க தோன்றவில்லை. ஆனால், இதெல்லாம் காதலா என்று கேட்டால் அன்று அவளுக்கு தெரியவில்லை.
ஒட்டுமொத்தமாக யோசித்து வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று தெளிவாய் தோன்றியதும் அன்று அதை அவனிடம் சொல்லிவிட்டாள். ஆனால், அவன் பதிலுக்கு காதலிக்கிறேன் என்றதை அவளால் நம்பவே முடியவில்லை. அவன் காதலை சொல்லும்வரை தோன்றாத உணர்வுகள் எல்லாம் அதன் பிறகு மேலெழும்ப ஆரம்பித்தது.
ஆனாலும், அவள் குடும்பம் அவளை தடுக்க, மறுநாளே இப்படி ஒரு கலவரம் நடந்து அவள் மனதில் முளைவிட்ட ஆசைகளில் ஆசிட் ஊற்றி விட்டது.
அது என்னவோ அவன் தனியாளாய் இருக்கும்போது திடமாய் மறுத்து வேண்டாம் என்று சொல்ல முடிந்ததை, தன் கண்முன்னே அவன் இன்னொருத்தியை கைப்பிடிக்கப்போகிறான் என்று உணர்ந்தபோது செய்ய முடியவில்லை.
அவன் மீது புதியதாய் ஒருவித உரிமை உணர்வு கிளம்பியது. அவன் எனக்கு தான்! அவன் என்னுடையவன் போன்ற எண்ணங்கள்…! அவன் இல்லாத இந்த மூன்று நாட்களில் முழுக்க முழுக்க அவன் மட்டுமே தான் அவள் எண்ணம் முழுவதும்.
ஆனால் நடக்கும் நிதர்சனம் அவளை சுயநலமாய் யோசிக்க விடவில்லை. சங்கவியின் பெயர் ஊரில் அவனோடு சேர்ந்து பேசப்பட்டிருக்க, கண்டிப்பாக இந்த கல்யாணம் நடக்காது போனால், அவள்(சங்கவி) வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்று அவள் அறிவாள். அதிலும் அவர்கள் வீடு..!? அதுவே நரகமாய் போய்டும் அவர்களுக்கு.
இந்த திருமணம் நின்றால் எத்தனை பேருக்கு மனகஷ்டம் என்று எல்லா விதத்திலும் யோசித்து தன் மனதை அப்படியே மூடி மறைத்துவிட வேண்டும் என்று தீர்மானமெடுத்திருந்தாள்.
தீர்மானம் எடுப்பது கூட கடினமாக இல்லை. ஆனால், அதை செயல்ப்படுத்த நினைப்பது கூட கொடூரமாய் இருந்தது. ஜேகோபின் வருகையை அறிந்தது முதல் அவனை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தாள். எங்கே பார்த்தால் உடைந்து விடுவோமோ என்ற ஐயத்தில், தலைவலி என அவள் அறைக்குள் முடங்கிக்கொள்ள, இதோ விடாமல் வந்து நின்றுவிட்டானே!!!
“சொல்லு ரோஸ்… உனக்கு என் மேல லவ் வரலை… அப்படி தானே?” அவன் கேட்க, ‘ம்ம்’ என தலையசைத்தாள் ரோஷிணி.
“ம்ம்ம்… அப்போ ஒண்ணுமே இல்ல நமக்குள்ள? நான் யாரை மேரேஜ் பண்ணாலும் யூ டோன்ட் கேர்… அப்டி தானே?” அவன் கேட்க, மறுபடியும் கண்ணீர் சுரப்பிகள் தன் வேலையை ஆரம்பிக்க, அப்படியே தலை குனிந்து இருந்தாள் ரோஷிணி.
“ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க? பிடிச்ச லைஃப் பார்ட்னர சூஸ் பண்றதை போய் எதுக்கு இவ்ளோ காம்ப்ளிகேட் பண்றீங்க? எனக்கு புரியவே இல்ல”
“உனக்கு புரியாது ஜாக்!” முனுமுனுத்தாள் அவள்.
“சரி எனக்கு புரியவே வேண்டாம்… நான் சங்கவிக்கிட்ட பேசுறேன்” என எழுந்துக்கொண்டான்.
“என்ன பேசப்போற?” அவள் பதட்டமாய் கேட்க,
“நான் ரோஷியை லவ் பண்றேன்னு சொல்றேன்! எனக்கு இந்த மேரேஜ் வேண்டாம்ன்னு சொல்றேன்!”
“சொன்னா? அவளால என்ன செய்ய முடியும்!?”
“ஒருவேளை அவளுக்கும் என்னை பிடிக்காம இருந்தா அதை வச்சு நான் வீட்டுல பேசுவேனே!”
“வாய்ப்பில்லை, அவளுக்கு உன்னை பிடிக்கும்!” ரோஷிணி சொல்ல, “எப்படி சொல்ற?” என்றான்.
“எனக்கு தெரியும்… அவளே சொல்லிருக்கா! உன்னை பார்த்த நாள்ல இருந்தே அவ சைட் அடிப்பா!” என்று சொல்ல, தலையில் அடித்துக்கொண்டான் அவன்.
“சரி பாஸ்போர்ட் இருக்கா?” திடுமென அவன் கேட்க, சந்தேகமாய் “ம்ம்ம்” என்றாள் அவள்.
“குடு!” என்றவன், அவளிடம் இருந்து அதை வாங்கிக்கொண்டு, “தேங்க்ஸ் டு காட்! அட்லீஸ்ட் உன்ன பாஸ்போர்ட்’டாவது வாங்க வச்சானே!” என்று சொல்ல, “அது காலேஜ்ல சேர்ந்தப்போ எல்லாருமே வாங்குனோம்!” என்றாள் சின்னகுரலில்.
கதவு வரை சென்றவன், நின்றான். திரும்பி அவளை பார்த்து, “நீ இன்னும் என் லவ்வ அக்சப்ட் பண்ணல! லாஸ்ட் மினிட் வரைக்கும் உனக்காக நான் வெயிட் பண்ணுவேன் ரோஸ்! நீ எனக்கு ஓகே சொல்லிட்டா இந்த மேரேஜ் நடக்காது… ஒருவேளை ஓகே சொல்லலன்னா…” என்று நிறுத்தி,
“அப்பவும் இந்த மேரேஜ் நடக்காது” என்றான் திண்ணமான குரலில்.
“இப்படி சொல்லாத ஜாக்… நம்ம மேரேஜ் நடக்கலன்னா அது நமக்கு தான் தெரியும்! நம்ம மனசோட அந்த கஷ்டம் போய்டும்! வேற யாரையும் பாதிக்காது! ஆனா, சங்கவி விஷயம் அப்படி இல்ல! புரிஞ்சுக்கோ!” என்றாள்.
அவள் பேச்சிற்கு, “ஓகே பாய்” என்றவன் கதவை திறந்து எதிர் அறைக்கு சென்றுவிட்டான். ரோஷினி தான் யார் கண்ணிலும் பட்டானா என்று பதைப்புடன் நோட்டமிட்டு ‘இல்லை’ என்றதும் சற்று நிம்மதியுடன் அறைக்குள் புகுந்தாள்.
error: Content is protected !!