Skip to content
Post Views: 3,316
நிர்க்கதியான நிலையில் விட்டுச் சென்ற பெற்றோரை மட்டுமே குறை கூட முடிந்தது, ஆனால் அதிலும் என்ன பயன் நேரம் விரயமாவதைத் தவிர? வாழ்க்கையே வெறுத்து நின்ற தருணங்களில் தெய்வமாய் வந்து முன் நிற்பார் காயத்திரி.
செய்வதறியாது உடலைக் கவிழ்த்து கட்டிலில் படுத்திருந்தவனின் தலையை இதமாய் வருடும் அவர் கை ஒரு மென்மையான பாசம் மட்டும் இருக்கும் அன்னையின் குரலில், “ஆதி கண்ணா…” மயில் தொகையைவிட மெல்லிய குரல் அது, அவரின் மனதைப் போலவே.
அந்த இனிமையான குரலில் ஆறுதலைத் தேடினானோ அல்லது வழியை கண்டுகொண்டானோ கன்னங்களில் கண்ணீர் கோடுகள், “ம்மா” கன்றாய் ஊமை வலியுடன் அன்னை மடி நாடினான்.
பிள்ளைகளுக்குள் பாகுபாடு பார்க்காத அவரின் பாசம் இப்பொழுதும் சற்றும் மாறாமல் இருந்தது, அவன் அடர்ந்த சிகையை விறல் கொண்டு கோதியவர் மௌனமாய் இருந்தார்.
Advertisement
“ம்மா” குரல் கரகரத்தது மகனுக்கு.
“சொல்லுபா” அவன் முதுகில் கை கொண்டு தடவி அவனைத் தேற்ற முயன்றவர் கையை பிடித்து தன்னுடைய கன்னத்தில் வைத்து இறுக்க அவர் கையை பற்றிக்கொண்டான்.
மகனின் மௌனமும், அவன் கண்ணீரும் அன்னையையும் கலங்கச் செய்தது, “அம்மாகிட்ட சொல்லுபா”
Advertisement
ஆதரவைத் தேடிய மனது மொத்தமாய் மனக்குமுறலை வெளியேற்றியது, “முடியலாமா என்னால… எதுவுமே முடியல மா”
Advertisement
“எதுக்குயா நீ கலங்குற? போதும்யா நீ கஷ்டப்பட்டது எல்லாம்” கண்ணை உயர்த்தி அன்னையின் முகம் பார்த்தான் ஆதி கேசவன்.
புரியவில்லை மகனுக்கு, “ம்மா..??” குழப்பமாய் காயத்திரியைப் பார்த்தான், பதில் கூற மனமில்லாமல் மௌனமாய் கலங்கிய விழிகளுடன் அந்த பாசத்திற்குரிய பெண்மணியை விழி அகற்றாது பார்த்தான்.
“இனியாவது சந்தோசமா இரு… இருப்ப… எல்லாமே நல்லது தான்யா நடக்கும்… நிம்மதியா போ வழி பிறக்கும்”
Advertisement
படுக்கையிலிருந்து எழுந்தவன் திடுக்கிட்டுப் பார்த்த பொழுது அன்னை அங்கில்லை மாறாக அவன் இரு சக்கர வாகனமும் அடர்ந்த காரிருளும் மட்டுமே துணையாய் இருந்தது. கையிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அசதியில் தன்னை அறியாமல் உறங்கியவனுக்கு அந்த சொற்ப நேரத்திலும் சொப்பனம்…
அதன் அர்த்தம் புரியவில்லை, அதைப் பற்றி யோசிக்கும் நிலையிலுமில்லை. இரவின் தனிமையில் அப்படியே அருகிலிருந்த சிறிய கல்லில் அமர்ந்தான். அந்த இடத்தை விட்டுச் செல்ல மனமேயில்லை.
நிசப்தமாய் இருந்த தெருவில் மிக மெல்லிய சத்தத்தோடு வந்து நின்ற வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தினையும் அதனுள் அமர்த்திருந்தவனையும் பார்த்தவன் மீண்டும் தன்னுடைய பார்வையை அவன் வீட்டிற்குத் திருப்பினான். சில நொடிகள் அதே அமைதிக்குப் பிறகு, காரின் கதவைத் திறந்து வெளி வந்த உதய்யை தொடர்ந்து ஜெயனும் வந்தான்.
ஜெயனை பார்த்து, “நீங்க போங்க ஜெயன். நான் வர்றேன்” என்றபடியே தன்னுடைய டக் இன் செய்த சட்டையை வெளியில் எடுத்துவிட்டவன் முழுக் கையாய் இருந்த சட்டையும் கை முட்டி வரை மடித்துவிட்டு, அணிந்திருந்த கூலிங் கிளாஸை கழட்டி சட்டையில் மாட்டிக்கொண்டு வந்தான்.
“இருக்கட்டும் சார் வெயிட் பண்றேன்”
ஆதியைப் பார்த்துச் சொன்னவனை எண்ணிச் சிரித்த உதய், “உங்க கூட இருக்குறத விட அவன் கூட நான் சேஃப் ஜெயன்”
முதலாளியை ஆசிரியமாய் பார்த்தான் ஜெயன். ஒரு சமயம் எதிரியாய் நிற்கின்றனர், ஒரு சமயம் மறைமுகமாய் தாங்கி பிடிக்கின்றனர், பல சமயம் தோழனாய் தோள் தங்குகின்றனர்… என்ன வகையான நட்பு இது… புரியவில்லை அவனுக்கு.
“அப்ப உங்க ரெண்டு பேரோட பாதுகாப்பும் என்னோடது சார்”
விசுவாசத்தைத் தாண்டி ஜெயன் தன் மீது வைத்திருந்த பாசத்தை எண்ணி மகிழ்ந்தவன் இதழில் வந்த சிறு புன்னகையில் ஆணாய் இருந்தாலும் அந்த சிரிப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை ஜெயனால். ஆதியை நோக்கி உதய் மாதவன் செல்லவும் தன்னுடைய அசிஸ்டன்ட் ஒருவனை அழைத்து வாகனத்தை எடுத்துச்செல்லக் கூறி ஆதி, உதயைத் தாண்டி சில அடிகள் தூரத்தில் நின்று கொண்டான் ஜெயன்.
ஜெயனை பார்த்த ஆதித் தன் முன்னாள் வந்து நின்ற உதய்யையும் கண்டும் காணாமல், “இவன் எதுக்கு இங்க நிக்கிறான்? தூக்கம் வருமா வராதா இவனுக்கு?” இருந்த எரிச்சலில் என்னரமும் உதய் பின்னால் சிறு அலுப்பும் காட்டாது திரிபவனைப் பார்த்து கோவம் தான் வந்தது ஆதிக்கு.
“உன்ன பாதுகாக்க நிக்கிறானாம்” வார்த்தைகள் உதிர்த்த உதய்யின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.
“டேய் கருப்பு பூனை…” தன்னை தான் ஆதி அலைகிறான் என்று தெரிந்து ஆதியை பார்த்தான், “நீ இங்க நின்னு ஒன்னும் கிழிக்க வேணாம் கெளம்பு” சத்தமாக ஆணையிட்டாலும் ஜெயன் அசையவில்லை.
அதை யூகித்தே இருந்த உதய், “நான் சொன்னா கூட அவன் கேக்க மாட்டான்”
“கிறுக்கன் கூட இந்நேரம் கூலர்ஸ் போட மாட்டான்” கேட்டும் சிறு புன்னகையோடு உதய் அமைதியாகிவிட்டான்.
உதய்யின் நிர்மலமான முகத்தைப் பார்த்தவன், “உன்ன யாரு இங்க வர சொன்னா?” ஜெயன் பக்கம் திரும்பி, “டேய் இவன கூட்டிட்டு போ” ஜெயனுக்கு இது உத்தரவு தான். ஜெயன் எதுவும் செய்யாமலிருக்க, “ஜடம்” வாய்க்குள்ளே முணுமுணுத்தான்.
நண்பனின் நிலையில்லா நிலையம் செய்வதறியாது திகைத்து நின்ற தோற்றமும் உதய்யை கண் சிமிட்டாமல் நண்பன் மீது பார்வையை நிலைத்திருக்க வைத்தது.
“என்ன பிரச்னை உனக்கு?” உதய்யிடம் எப்பொழுதும் இருக்கும் அதே அமைதி நாளிரவு ஒரு மணிக்கும் இருந்தது.
உதய்யை பார்க்காமல் பார்வையைத் தவிர்த்தவன், “உன்கிட்டலாம் சொல்லணும்னு அவசியமில்லை போடா” எரிச்சலோடு வந்தது பதில் ஆதியிடமிருந்து.
“ஏன் கோவமா இருக்க?” – உதய்
“நான் கோவமா இருக்கேன்னு உங்கிட்ட சொன்னேனா?” – ஆதி
“சரி ஏன் நிதானம் இல்லாம குழப்பத்துல இருக்க?” விடுவதாக இல்லை உதய்.
ஆதிக்கு தெரியும், தன்னை பார்த்த உடனே மொத்தத்தையும் தெரிந்துகொள்வான் என்று, “அதெல்லாம் ஒண்ணுமில்ல”
“அப்றம் ஏன் காலு ஒரு இடத்துல அசையாம நிக்க மாட்டிக்கிது” குழப்பத்திலிருக்கும் பொழுது கால்கள் தானாக ஆடும் ஆதிக்கு.
இப்பொழுது உதய்யின் வார்த்தையில் கால்களை அசையாது விட்டான், உதடுகளும் அசைய மறுத்தது. ஆதி கேட்டால் கூறும் ரகம் இல்லையென்று தெரிந்து அவனே கூறட்டுமென உதய் அமைதியானான்.
ஆதி முன்னாள் நிற்கும் அவனுடைய வண்டியை பார்த்தவன் அதன் பியூயல் டாங்கை தடவி பார்த்தான், அவனுக்கு பிடித்த கருப்பு நிறம். ஆதிக்கு கருப்பை விட வாகனத்தில் சிகப்பு தான் பிடிக்கும்.
எத்தனை வருடங்கள் ஆகியது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து… செல்வத்தில் கொழிக்கும் வாழ்க்கையில் பகட்டையும் பாதுகாப்பையும் விட்டு நிம்மதியாக எளிமையான வாழ்க்கையை வாழ அந்த நொடி ஆசை வந்தது.
“இந்தா” நண்பனின் ஆசையை கண்டுகொண்டவன் சாவியை உதய்யிடம் தூக்கி போட்டான்,
சாவியை பிடித்த உதய் ஆசையாக கண்கள் மின்ன வாகனத்தில் ஏறி அமர்ந்து உயிர் கொடுத்தவன் சற்று கண்கள் தெளித்திருந்த ஆதியை பார்த்து அப்படியே நிற்க, ஆதி முகத்தை திருப்பிக்கொண்டு, “நான் வரல” உள்ளே சென்ற குரலில் பதில் வந்தது.
ஆதியை விட பிடிவாதமுடையவன் வண்டியை அணைத்து அப்படியே நின்றான் தனக்கு எதிரிலிருந்த இருளை வெறித்து நின்றான். தலையில் அடித்து எழுந்த ஆதி, “பிடிவாதம்”
வசைபாடிக்கொண்டே வண்டியில் ஏறி அமர உதய் மௌனமாய் வாகனத்தை செலுத்தினான். பின்னாலே வந்தது உதய்யின் பாதுகாப்பிற்காக ஒரு பி.எம்.டபில்யூ அதில் ஜெயனும் அவனுடைய அசிஸ்டன்ட் இருவரும். அதை எதையும் கவனிக்கும் நிலையிலா உதய் இருந்தான்?
சலனமற்ற மனதுடன் நண்பனுடன் பல வருடங்கள் கழித்து செல்லும் பயணம், அதுவும் உதய் பெரிதும் விரும்பி ஓட்டும் புல்லட்டில்… உதய்யின் மனநிலையை கூறவே வேண்டாம், இத்தனை வருடங்களில் காணாமல் போயிருந்த ஒரு நிம்மதி, திருப்த்தி. மௌனமாய் இருவரும் பயணிக்க திடீரென நினைவு வந்தவனாய் தன்னுடைய வண்டியில் பின்னால் மாட்டியிருக்கும் ஹெல்மட்டை எடுத்து வாகனத்தை ஓடிக்கொண்டிருந்த நண்பனின் தலையில் மாறிவிட்டான்.
“டேய் எடுடா” கர்ஜித்தான்.
உதய்க்கு புடிக்காதது ஹெல்மெட் அணிவது, ஊருக்கு ஆயிரம் உபதேசங்கள் வழங்குபவன், லட்ச கொள்கைகள் வைத்திருப்பவன் தடா போடுவது இந்த ஒன்றுக்கு மட்டுமே, கேட்டால் இதை அணிந்தால் ஏதோ சங்கிலி போட்டு சுதந்திரத்தை தடுப்பது போல் இருக்குமாம்.
ஆதி வழக்கம் போல் அவன் பேச்சை நிராகரித்தான். சில நிமிட பயணத்திற்கு பிறகு வாகனத்தை திருப்பி உதய் தொடங்கிய இடத்திலே வந்து நிறுத்தினான்.
ஆதி இறங்கியதும் உதய் தானும் இறங்கி வாகனத்தில் சாய்ந்து நின்றான், “சஹானாக்கு மாப்பிள்ளை எதுவும் பாக்குறியா?”
“அவளே பாத்துக்குவா”
“சஹானா மனசுல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்ல” அன்று சஹானாவுடன் சென்ற சிறிது நேரத்தில் ஏதோ உதய் கணித்தது அது, “எவனாவது அவளை லவ் பன்றானா?” சரியாக யூகித்து கேட்டான் உதய்.
“ஆதவன்” ஒரு வார்த்தையில் பதில் வந்தது.
உதயால் நம்ப முடியவில்லை… இத்தனை வருடங்களாய் தன்னிடம் ஒரு தகவலை கூறாமல் இருக்காதவன் இந்த விஷயத்தை பற்றி ஏன் தன்னிடம் கூறவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை தனக்காக இத்தனை ஆண்டுகள் மௌனமாய் தன்னுடைய காதலை மறைத்து இருந்தானா? தன்னையே அறியாமல் மனதில் ஒரு சிறிய பெருமிதம் கலந்த வலி, தனக்காக மட்டுமே யோசிப்பவன் மனதை அறியாமலே நான் இருந்துள்ளேன் என்ற வலி.
error: Content is protected !!