Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 3 1

அத்தியாயம்

உந்தன் அருகில் நான்

இல்லாத போதும் என்னை

நீ உணர்வாயா அன்பே?!!!



Advertisement

அவன் பூங்கொடியின் வீட்டுக்கு வரும் போது வீட்டில் பெண்கள் தான் இருந்தார்கள். அவன் வந்ததும் அவர்களிடம் பயங்கர வரவேற்பு கிடைத்தது.

Advertisement

அவனை அமர வைத்து மணியம்மை பேசிக் கொண்டிருக்க அவனுக்கு ஜில்லென்று மோர் கொண்டு வந்து கொடுத்தாள் மங்களம்.

Advertisement

அதை வாங்கிக் குடித்தவன் “ரொம்ப நல்லா இருக்குக்கா”, என்றான். அவன் உறவு முறை சொல்லி பேசியது அனைவருக்கும் பிடித்தது. “மருமகனும் தங்கமான குணமா அமைஞ்சிட்டார்”, என்ற நிம்மதி மணியம்மைக்கு வந்தது.

Advertisement

“அக்கா, பூங்கொடிக்கு கல்யாண ஜாக்கெட் தைக்க கொடுக்கணும். அத்தை அளவு ஜாக்கெட் வாங்கிட்டு வரச் சொன்னாங்க”, என்று மங்களத்திடம் கேட்டான்.

“நான் எடுத்து வச்சிருக்கேன், தரேன் தம்பி”, என்று மங்களம் சொல்ல “ஐயோ அவளைப் பாக்க முடியாதா? என் கண்ணுல காட்டாமலே விரட்டிருவாங்க போலயே?”, என்று மனதுக்குள் புலம்பினான்.

“என்ன யோசிக்கிறீங்க தம்பி?”, என்று மைதிலி கேட்க “பூங்கொடிக்கு வளையலும் மோதிரமும் எடுக்கப் போறோம். அதுக்கு அளவு வேணும்”, என்று தயங்கிய படியே சொன்னான்.

அதற்கு மைதிலி ஏதோ சொல்ல வர அவன் மன உணர்வை புரிந்து கொண்டு “பூவு ரூம்ல தான் இருக்கா. நீங்க போய் இந்த நூலை வச்சு அளவு எடுத்துக்கோங்க தம்பி”, என்று சொல்லி நூல் கண்டைக் கொடுத்து அனுப்பினாள் தாரணி.

சந்தோஷமாக அவளுடைய அறைக்கு சென்றான் மணிமாறன். அவளுடைய அறைக் கதவு லேசாக திறந்திருக்க அதை இன்னும் லேசாக திறந்து “கொடி, உள்ள வரலாமா?’, என்று கேட்டான்.

மதிய உணவு என்னவா இருக்கும் என்ற யோசனையில் இருந்தவள் அவன் குரலில் திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.

நைட் பேண்ட், ஷர்ட், தலையில் பெரிய கொண்டை என்று இருந்தவளைப் பார்த்தவனின் இதயத்தில் தாளம் தப்பியது. சத்தியமாக அவளை அப்படி ஒரு தோற்றத்தில் எதிர் பார்க்க வில்லை. சிறு பெண் போல இருந்த அவளின் அந்த தோற்றம் கூட அவனைக் கவர்ந்தது.

அவள் அவனையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க “என்ன உள்ள கூப்பிட மாட்டியா?”, என்று கேட்டான்.

அவசரமாக “வாங்க உக்காருங்க”, என்றாள். உள்ளே வந்தவன் கட்டிலில் அமர்ந்தான். அவள் சற்று தள்ளி சுவரில் சாய்ந்து படபடப்புடன் நின்றாள்.

“எதுக்கு வந்திருப்பான்?”, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே “மோதிரம், வளையல்க்கு உன்னோட அளவு வேணும். கொஞ்சம் கிட்ட வரியா?”, என்று கேட்டான்.

தடதடக்கும் நெஞ்சத்தை அடக்கிய படி அவன் அருகே வந்தவள் அவன் முன் கை நீட்டினாள்.

தந்தம் போல இருந்த அவள் கையை வருட எழுந்த ஆவலை அடக்கியவன் கையில் இருந்த நூலால் அளவெடுக்க ஆரம்பித்தான். மோதிரம் அளவெடுக்கும் போது அவளுடைய விரல்களை அவன் கரம் உரசியது. அவனது தீண்டலில் அவளுக்குள் அனல் பற்றியது போல இருந்தது.

அவன் விரல்கள் தயக்கத்துடன் அவளுடைய விரல் பற்றி மோதிர விரலை அளவு எடுக்க அவள் நடுங்கினாள். அவனிடம் இருந்து கையை உருவிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் அது மரியாதையாக இருக்காது என்பதால் அமைதியாக நின்றாள்.

அவள் உணர்வுகள் அவனுக்கு புரிய வில்லை போல? நிதானமாக அளவு எடுத்துக் கொண்டிருந்தான். எத்தனை முறை அளவு எடுத்த போதும் அவனால் சரியாக எடுக்க முடியவில்லை. அதை அவன் உணர்ந்தான் தான். ஆனாலும் அவனுக்கு அவள் கையை விட ஒரு சதவீதம் கூட மனதில்லை.

தன்னுடைய கைக்குள் பாந்தமாக அடங்கி இருந்த அவளது வெண்டை பிஞ்சு விரல்களை லேசாக அழுத்தினான். அவனுடைய தொடுகையில் அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அவளுடைய நடுக்கம் உணர்ந்தவன் அவளுடைய விரலை ஒவ்வொன்றாக வருட ஆரம்பிக்க அதற்கு மேல் தாங்க முடியாமல் கையை உருவிக் கொண்டாள்.

தான் செய்தது அதிகப் படியான காரியம் என்று உணர்ந்து “சாரி”, என்று சொல்லி அவன் அசடு வழிய அவளுக்கோ அவன் முகம் பார்க்க கூட முடியவில்லை.

“இப்ப என்ன பண்ணுறது? அளவு சரியா எடுக்கலையே?”, என்று அவன் கேட்க அடுத்த நொடி தன்னுடைய பீரோவைத் திறந்தவள் உள்ளே இருந்து ஒரு மோதிரம் மற்றும் வளையலை எடுத்துக் கொடுத்தாள். அவள் புத்தி கூர்மையை அவன் வியப்பாக பார்க்க அவளோ “இதை ஏன் முன்னாடியே செய்யாம போனேன்”, என்று தன்னையே நொந்து கொண்டாள்.

“குட். போலிஸ்க்காரனுக்கு ஏத்த விவரமான பொண்டாட்டி தான். சரி உன் அளவு ஜாக்கெட் வேணுமே”, என்று கேட்டு அவன் வம்பிழுக்க “அது கீழ அண்ணி கிட்ட இருக்கு”, என்றாள்.

“சரி பொண்டாட்டி, போய்ட்டு வரேன்”, என்று அவன் சொல்ல அந்த சொல்லே இருவருக்கும் இனித்தது.

“என்ன டி அமைதியா இருக்க? வழி அனுப்ப வர மாட்டியா?”, என்று அவன் கேட்க அவனுடைய ‘டி’ என்ற அழைப்பில் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவளுடைய அதிர்ச்சியைப் பார்த்தவன் “எல்லாரும் பொண்டாட்டியை அப்படி தானே கூப்பிடுறாங்க? அதான் நானும் கூப்பிட்டு பாத்தேன். பரவால்ல கிக்கா தான் இருக்கு. ஏதோ நமக்குள்ள ஒரு பாண்டிங் வந்த மாதிரி இருக்கு. இனி அப்படியே கூப்பிடுறேன்”, என்றான்.

அவன் பேச்சில் ஏதேதோ உணர்வுகள் அவளுக்குள் கரை புரண்டு ஓடியது. அவளுடைய முகத்தில் வந்து போகும் நுண்ணிய உணர்வுகளைக் கண்டவனுக்கு அவளை இறுக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

இதற்கு மேல் இங்கே இருப்பது நல்லதல்ல என்று எண்ணியவன் “போயிட்டு வரேன்”, என்றான்.

இப்போதும் அமைதியாக இருந்தால் அவன் போக மாட்டான் என்பதால் “ம்ம்”, என்று மட்டும் முணுமுணுத்தாள். வாசல் வரை சென்றவன் “கொடி”, என்று அழைத்தான். என்ன என்பதாக அவனைப் பார்த்தாள். “நான் ஒண்ணு சொன்னா செய்வியா?”, என்று அவன் தயக்கமாக கேட்க “என்ன இப்படி கேக்குறான்? முத்தம் எதுவும் கேட்டுருவானோ?”, என்று பயந்து போனாள்.

அவள் திகைத்து அசையாமல் நிற்க “சரி இன்னொரு நாள் அதைக் கேக்குறேன்”, என்றவன் அறையை விட்டுச் சென்று விட்டான் .

“என்ன தம்பி அளவு எடுத்துட்டீங்களா?”, என்று கேட்டாள் தாரணி.

“ஆமா அக்கா… இல்லை அக்கா.. இல்லை எடுக்கலை”, என்று அவன் உளற “என்ன இப்படி உளறுறீங்க? வளையல் மோதிரத்துக்கு அளவு எடுத்தீங்களா இல்லையா?”, என்று கேட்டாள்.

“அது வந்து… அளவு எடுக்கும் போது சரியா வரலை. அதனால கொடி மோதிரமும் வளையலும் கொடுத்தா. சரி நான் வரேன் கா”

“சாப்பிடாம போகக் கூடாது. வாங்க சாப்பிடலாம்”

“இல்லைக்கா பரவால்ல”

“உங்க கொடியை பரிமாறச் சொல்றேன்”

“அப்படின்னா சாப்பிட ஆசையா தான் இருக்கு. ஆனாலும் வேலை இருக்கு கா. வீட்டுக்கு போயிட்டு ஸ்டேஷன் போகணும்”, என்று சொல்லி விட்டு அளவு ஜாக்கெட்டையும் வாங்கி விட்டு சென்றான்.

அவன் போனாலும் கூட அவன் வந்து போன திகைப்பை பூங்கொடியால் கடக்க முடியவில்லை. அவனது பேச்சு, அவன் பார்வை அவளை முற்றிலுமாக அசைத்திருந்தது. அதுவும் அவனுடைய விரல் தீண்டிய விதம் இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்த்தது.

அதற்கு அடுத்த நாட்களில் மூன்று அண்ணிகளும் அவளுக்கு சமையல் சொல்லித் தருகிறேன் என்ற பெயரில் அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார்கள் .

கல்யாண தேதி நெருங்க நெருங்க வீட்டுக்கு வெள்ளை அடிப்பது, வீட்டை ஒதுங்க வைப்பது என வேலைகள் அதிகம் இருந்தது. பத்திரிக்கை அடிப்பது, மண்டபத்துக்கு சொல்வது என்று வேலை வரிசையாக வந்து கொண்டே இருந்தது.

பத்திரிக்கை அடித்து வந்ததும் ஆவலாக பூங்கோடியே அதை பிரித்துப் பார்த்தாள். அவள் கண்கள் முதலில் பார்த்தது மணிமாறன் என்ற அவனது பெயரைத் தான். அவள் விரல்கள் அவனுடைய பெயரை வருட தனக்கு அவன் மேல் வந்திருக்கும் உணர்வுக்கு பெயர் என்ன என்று தெரியாமல் குழம்பினாள். உறவுகளுக்கு பத்திரிக்கை வைப்பது போன்ற வேலைகளை ஆண்கள் பிரித்துக் கொண்டார்கள்.

மணியம்மையுடன் சேர்ந்து மங்களம் வீட்டு வேலைகளைச் செய்தாள் என்றால் தாரணியும் மைதிலியும் மணப்பெண்ணுக்கு தேவையான உடை, நகைகளை வாங்கிக் குவித்தார்கள்.

மூன்றாம் வருடம் காலேஜ் ஆரம்பித்த விஷயம் அவளுடைய தோழி ரேவதி மூலம் தெரிந்ததிலிருந்து அப்படியே மாறிப் போனாள் பூங்கொடி. அது வரைக்கும் மணிமாறனைப் பற்றிய கனவில் இருந்தவள் அதன் பிறகு தன்னால் காலேஜ் செல்ல முடியவில்லை என்ற கோபத்தில் எல்லாவற்றையும் வேண்டா வெறுப்பாக செய்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு இந்த திருமணமே பிடிக்கவில்லை தான். ஆனால் அவனை…. இந்த கேள்விக்கு தான் விடை தெரிய வில்லை. பல கேள்விகள், மணப்பெண்ணுக்கே உண்டான பயம் அவள் மனதைச் சுற்றி வரும் போது திருமணத்தை எண்ணி பூரிப்பு எங்கிருந்து வரும்? கூடவே அவளால் காலேஜ் போக முடியாததற்கு காரணம் மணிமாறன் என்பதால் அவன் மீது கொலை வெறியும் வந்தது.

ஒரு வழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த திருமண நாளும் வந்தது. மணப் பெண் அலங்காரத்தில் தேவதையாக இருந்தாள் பூங்கொடி.

அந்த திருமண மண்டபம் உறவினர்களின் வருகையால் பரபரப்பாக இருந்தது. “மாங்கல்யம் தந்துனானே…”, என்று ஐயர் மந்திரம் ஓத ஆரம்பித்தார். “கெட்டிமேளம் கெட்டிமேளம்”, என்று யாரோ குரல் கொடுத்தார்கள். அனைவரின் ஆசியோடு மணிமாறன் அவள் கழுத்தில் தாலியைக் கட்ட அவள் உடல் சிலிர்த்தது.

“தம்பதி சமேதராய் அக்னியை சுத்தி வாங்கோ”, என்று ஐயர் ஆணை பிறப்பித்ததும் இருவரும் எழுந்து கொண்டார்கள். அவளுடைய கையைப் பற்றி அக்னியை வலம் வந்தான் மணிமாறன்.

“பெரியவாளை சேவிச்சிகோங்க”, என்று ஐயர் சொல்ல அனைவரின் காலிலும் விழுந்து வணங்கினார்கள். அதன் பின் சடங்குகள் மளமளவென்று நடந்தது. அண்ணன்கள் வரிசையாக மாப்பிள்ளைக்கு நகைகளைக் போட்டு விட்டார்கள்.

அவனுடைய நண்பன் ஒருவன் “கொடுத்து வச்சவங்க டா நீயும், உன் பிள்ளைகளும். நாலு மச்சினன்கள் கிட்ட இருந்து சீர் வந்துட்டே இருக்கும்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

மணிமாறனின் போலீஸ் நண்பர்களும் வந்திருந்தார்கள். அதே போல பூங்கொடியின் கல்லூரியிலும் இருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள். மண்டபத்தில் எல்லா சடங்கும் முடிந்தவுடன் உணவு உண்டு விட்டு  சீர் வரிசையுடன் புகுந்த வீட்டுக்கு கணவனுடன் சென்றாள். மணிமாறனின் வீடு அழகாக இருந்தது. விதவிதமான மலர்கள் அவளுடைய கண்ணைக் கவர்ந்தன. தேவகி வீட்டை பார்த்து பார்த்து அலங்கரித்து வைத்திருந்தாள். அவனது பெரியத்தை தான் இருவருக்கும் ஆலம் சுற்றினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!