Skip to content
Post Views: 4,150
தேவகி அன்புடன் அவளை அணைத்துக் கொள்ள அவளை இன்னும் பூங்கொடிக்கு பிடித்தது. அதன் பிறகு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்தாள். கூடவே போட்டோவில் சாந்தம் தவழும் முகத்துடன் இருந்த மணிமாறனின் அன்னையையும் கரம் கூப்பி வணங்கினாள். அவளின் அந்த செய்கையில் அனைவரும் நெகிழ்ந்து விட்டார்கள். மணிமாறனோ அவளின் அந்த செய்கையில் அவள் மேல் பைத்தியமாகிப் போனான்.
அவன் அவளையே பாக்கவும் அவளுக்கு என்னவோ போல இருந்தது. “அத்தை மாதிரியே நீங்க இருக்கீங்க”, என்றாள்.
Advertisement
அவள் சொன்னதை கண்டு கொள்ளாமல் “கொடி”, என்று கிறக்கமாக அழைத்தான்.
Advertisement
“ம்ம்”
Advertisement
“அப்படியே என்னைக் கொல்லுற டி”, என்று அவன் முணுமுணுக்க அவளுக்கு மூச்சடைக்கும் உணர்வு தான் வந்தது. அதன் பின் அவன் பக்கம் அவள் திரும்பவே இல்லை.
Advertisement
இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தார்கள். அன்றைய இரவு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அங்கே பூங்கொடிக்கு துணைக்கு தம்பிதுரை மற்றும் அவன் மனைவி தாரணி இருவரும் மணிமாறன் வீட்டில் தங்கி விட்டார்கள்.
தாரணி தான் அவளை மிதமாக அலங்கரித்தாள். மணிமாறனின் அறைக்குள் பூங்கொடியை அனுப்பி வைத்ததும் அவள் தான். அறைக்குள் சென்றதும் அங்கிருந்த அலங்காரத்தைப் பார்த்த படியே அதிர்ந்து நின்று விட்டாள் பூங்கொடி.
“கடவுளே செட்டப் எல்லாம் பாத்தா பயங்கரமா இருக்கு. இந்த போலீஸ்காரன் முதல் ராத்திரியைக் கொண்டாடாம விட மாட்டான் போலயே?”, என்று எண்ணி அவளுக்கு பயமாக இருந்தது.
அவன் வரவுக்காக காத்திருந்தாள். கதவு தாளிடும் ஓசை கேட்கவும் திரும்பிப் பார்த்தாள். மணிமாறன் தான் உள்ளே வந்து கொண்டிருந்தான். இவள் இதயம் படபடப்பாக துடிக்க ஆரம்பித்தது.
அவனோ இது நாள் வரை அவனுடைய அறையில் நுகர்ந்தரியாத ஒரு புது வித வாசனையை நுகர்ந்தான். இதமான அந்த மனம் அவனது மனதை கொஞ்சம் கொஞ்சமாக மயக்க ஆரம்பித்தது.
அவளுக்கு வெகு அருகில் அவன் வந்து நிற்கும் வரை தலை குனிந்து நின்றிருந்தாள். மிதமான அலங்காரத்தில் சிவப்பு நிறப் பட்டுப் புடவையில் தந்தச் சிலை போல இருந்த பூங்கொடியின் அழகில் மலைத்து தான் போனான். அவள் கழுத்தில் கிடந்த தடித்த அந்த மஞ்சள் கயிறு அவளை மேலும் வசீகரித்துக் காட்டியது.
அவளுடைய நெற்றியிலும் வகிட்டிலும் இருந்த குங்குமம் அவளது அழகை இன்னும் அதிகப் படுத்திக் காட்டியது. அவளுடைய பின்னந்தலையில் வைத்திருந்த மல்லிகைச் சரம் அவள் தோளில் சரிந்திருந்தது. அவனுடைய கண்கள் அவளுடைய அழகை இன்ச் பை இன்ச் ஆக ரசிக்க அவளுக்கோ பி.பி ஜெட் வேகத்தில் எகிறியது.
அவள் அருகில் நெருங்கி வந்தவன் அவளுடைய தோளில் கை வைக்க அவள் விலகினாள்.
“ஏன் டி?”, என்று புருவச் சுளிப்புடன் கேட்டான்.
அவள் அமைதியாக இருக்க “நான் உன்னைத் தொடக் கூடாதா?”, என்று கேட்டான்.
அவள் அப்போதும் எதுவும் சொல்ல வில்லை என்றதும் வெட்கப் படுகிறாள் என்று எண்ணிக் கொண்டு மீண்டும் அவளை நெருங்கியவன் அவளுடைய கரத்தைப் பற்றினான். அவள் கரங்கள் நடுங்கினாலும் அதை உருவிக் கொள்ள வில்லை. அன்று போல் இன்றும் அவன் விரல்கள் அவள் கரத்தை மென்மையாக மீட்ட அவன் தொடுகையை தாங்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அவன் இன்னும் அவளை நெருங்கி நிற்க “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றாள்.
தோளில் இருந்த கையை எடுத்த மணிமாறன் புருவச் சுளிப்போடு கட்டிலில் அமர்ந்தான். “வா, இங்க வந்து உக்காரு”, என்று அவளையும் அழைத்தான். அவன் கட்டிலுக்கு அவளை அழைத்ததும் அவள் அவனை முறைப்பாக பார்க்க “பேச தான் கூப்பிட்டேன், வா”, என்றான்.
அவன் அருகே சென்று சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள் பூங்கொடி. அவள் அமைதியாக இருக்கவும் “பேசணும்னு சொன்ன? என்ன ஆச்சு? வீட்டு ஞாபகமா?”, என்று கேட்டவன் அவளை ஆராய்ச்சியாக பார்த்தான்.
“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை”, என்று அவள் பட்டென்று சொன்னதும் அவன் முகம் சுருங்கிப் போனது. அவனுடைய கனவே உடைந்தது போல உள்ளுக்குள் நொறுங்கிப் போனான். அவன் மனதில் வந்திருந்த மயக்கம் அனைத்தும் அவனை விட்டுச் சென்றிருந்தது.
“வாட் யு மீன்? பிடிக்காதது கல்யாணமா? இல்லை என்னையா?”, என்று கூர்மையுடன் கேட்டான்.
“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை”, என்றாள். அவள் அவனை பிடிக்க வில்லை என்று சொல்லாதது அந்த நேரத்தில் அவனுக்கு சிறு ஆறுதலைக் கொடுத்தது.
“உனக்கு ஏன் இந்த கல்யாணம் பிடிக்கலை?”, என்று கேட்டான். அவன் மனதில் “ஒரு வேளை இவளுக்கு வேற யாரையும் பிடிச்சிருக்குமோ?”, என்ற பயம் வந்தது.
“எனக்கு படிக்கணும்”, என்று சொல்லி அவன் நெஞ்சில் பாலை வார்த்தாள் அவன் மனைவி.
“என்னது படிக்கணுமா?”, என்று லேசான மனதுடன் அவளை அறிந்து கொள்வதற்காக கேட்டான்.
“ஆமா, எனக்கு தேர்ட் இயர் காலேஜ் ஆரம்பிருச்சு. அது போக அதுக்கு மேலயும் படிக்கணும். அப்புறம் மாடல் மாடலா டிரஸ் வடிவமைச்சு ஒரு பொட்டிக் வைக்கணும்”
“நான் உன்னைப் படிக்க வைக்கிறேன்”, என்று மணிமாறன் சொன்னதும் அவள் கண்கள் மின்னின.
“நிஜமாவா?”, என்று விழி விரியக் கேட்டவளின் அருகில் வந்தவன் அவளுடைய இரு தோளிலும் கையைப் போட்டு அனைத்துக் கொண்டான். அதில் கூச்சம் வர அவனிடம் இருந்து விலக முயன்றாள்.
“கொஞ்ச நேரம் அமைதியா இப்படியே இரு. நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். இங்க பாரு கொடி. படிப்போட முக்கியத்துவம் எனக்கு நல்லா தெரியும். நானும் அப்பாவும் முன்னாடியே உன்னைக் காலேஜ்க்கு அனுப்பணும்னு பேசிருக்கோம். என்னோட மனைவி நல்லா படிச்சு பெரிய ஆளா வந்தா எனக்கு சந்தோஷம் தானே? நானே உன்னைப் படிக்க வைக்கிறேன். ஒரே ஒரு வாரம் மட்டும் பொறு. மறுவீடு விருந்துன்னு ஏகப் பட்டது இருக்கு. அதுக்கு அப்புறம் நானே உன்னைக் காலேஜ்ல கொண்டு போய் விடுறேன்”, என்றான்.
“உங்களை நம்பலாமா?”, என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“கட்டாயம் நம்பலாம்”
“ஹாஸ்டல் போக மாமா விடுவாங்களா?”
“ஹாஸ்டலா? அதுக்கு வாய்ப்பே இல்லை”, என்று சொன்னதும் அவள் முகம் சுருங்கியது.
“இங்க பாரு கொடி, இது தான் உன்னோட வீடு. இனி நீ தான் இந்த வீட்டையும் அப்பா, அத்தையையும் பாத்துக்கணும். அத்தை வாழ்க்கைல ரொம்ப கஷ்டப் பட்டவங்க. அவங்களுக்கு என் மேலயும் அப்பா மேலயும் அதிக அன்பு உண்டு. ஆனா எங்க கிட்ட மனசு விட்டு எதுவும் பேச மாட்டாங்க. இனி நீ தான் அவங்களுக்கு ஒரு மகளா இருக்கணும். அதுக்கு நீ இந்த வீட்ல இருக்கணும். நானே உன்னை காலேஜ்ல கொண்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வருவேன். இல்லைன்னா அப்பா வருவாங்க. எங்களால உன் படிப்பு பாதிக்கப் படாது. அதே நேரம் நீ என்னோட மனைவி, என்னோட சரி பாதி. இந்த வீட்டுக்கு ஆணி வேர். அதையும் நீ மறக்க கூடாது. நான் சொன்னது புரியுதா?”
“ம்ம்”
“குட், சரி வா படுக்கலாம்”, என்று சொல்லி அவளைக் கட்டிலில் படுக்கச் சொன்னான். அப்போது கதிரவன் அவனை போனில் அழைத்தார்.
அதை எடுத்து “அப்பா”, என்று கேள்வியாக அழைத்தான்.
“கொஞ்சம் என் ரூமுக்கு வந்துட்டு போ பா”
“இதோ வரேன் பா”, என்று சொல்லி போனை வைத்தவன் “அப்பா கூப்பிடுறாங்க. என்னன்னு கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றான்.
குழப்பமாக அவர் அறைக்குச் சென்றவன் அவர் சொன்ன விசயங்களைக் கேட்டுக் கொண்டு அறைக்கு வந்தான். அவள் படுக்காமல் சோபாவில் அமர்ந்திருக்க இருக்க “வா, தூங்கலாம்”, என்று சொல்லி கை பிடித்து அழைத்தான்.
“இல்லை, நான் இங்கயே படுத்துக்குறேன்”, என்று சோபாவைக் காண்பித்தாள்.
“இங்க பாரு பூங்கொடி, நீ படிக்க போறேங்குறது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவு நம்ம கல்யாணமும் உண்மை. என்னைப் பொறுத்த வரைக்கும் இது விளையாட்டு கிடையாது. இந்த கல்யாணம் தான் எனக்கு எல்லாமே. எனக்கும் நிறைய கனவு இருக்கு. அது முழுசா நிறைவேறலைன்னாலும் சுத்தமா நீ இல்லாம இருக்க முடியாது. ஏதாவது புரியுதா?”, என்று அவன் கேட்க அவள் தலை ஒரு மார்கமாக ஆடியது.
“கடைசி வரை நீ என்னை பிரிஞ்சு போக என்னால அனுமதிக்க முடியாது. நீ என் கூட தான் இருக்கணும் கொடி”
“இல்லை… அது வந்து… எனக்கு போலீஸ்னா கொஞ்சம் பயம். நீங்க எல்லாம் ரொம்ப கெட்டவங்களா இருப்பீங்க? அதனால தான்”
“அப்படின்னு யார் சொன்னா”? இன்னைக்கு முழுக்க என் கூட இருந்துருக்க. உன்னால என்னை புரிஞ்சிக்க முடியலையா? என்னைப் பாத்தா கெட்டவன் மாதிரி இருக்கா? இல்லை என் அப்பாவைப் பாத்தா கெட்டவன் மாதிரி இருக்கா?”
“இல்லை, இல்லை. நான் நினைச்சதை விட நீங்க நல்லவங்களா தான் இருக்கீங்க. மாமாவும் நல்லவங்க தான். ஆனாலும்…”
“இப்போதைக்கு நீ என்னை நல்லவன்னு நினைச்சதே போதும். மத்தது எல்லாம் அப்புறம் புரிஞ்சிக்கலாம். காலைல இருந்து செம டயர்ட். வா தூங்கலாம்”, என்று சொல்லி அவளை படுக்க வைத்தவன் அவள் அருகே படுத்தான்.
அவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்ள அவன் கரங்கள் அவளுடைய வயிற்றில் விழுந்தது. அவள் திகைப்பாய் அவனைத் திரும்பிப் பார்க்க “என்னையும் நீ உணரணும். அதனால இந்த சின்ன சின்ன தொடுகை எல்லாம் அவசியம் கொடி. உனக்கு வேற வழி இல்லை. நீ என்னை சகிச்சிக்கிட்டு தான் ஆகணும்”, என்று சொன்னவன் அவளுடைய விரிந்த கண்களை ரசித்துப் பார்த்து விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அதிர்ச்சியில் அவள் கண்கள் சாசர் போல் இன்னும் விரிய “எதையும் நினைக்காம தூங்கு”, என்று சொன்னான். படக்கென்று தலையை திருப்பி கண்களை மூடிக் கொண்டாள். ஆனாலும் அவன் கைகள் அவள் இடையை அனைத்து பிடித்த படி தான் இருந்தது. அவளது முதுகில் அவனது சூடான மூச்சு காற்று பட புரியாத அவஸ்தைக்குள் சிக்கிக் கொண்டிருந்தாள் அவள்.
அவனோ நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான். அடுத்த நாள் காலையில் வழக்கம் போல அவன் சீக்கிரம் எழ அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவன் குளித்து முடித்து வரும் வரைக்கும் அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் அருகே அமர்ந்தவன் அவள் மதி முகத்தையே பார்த்தான். அழகான நிலவு போன்ற அவள் முகத்தில் முத்தமிட ஆர்வம் வர நேற்று போல இன்றும் அவளது நெற்றியில் இதழ் பதித்தான். அவளோ அதைக் கூட உணராமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவனுடைய ஆசை அடங்காமல் பெருக சிறு புன்னகையுடன் அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டான். அவளுடைய கன்னத்தின் மென்மையை உணர்ந்த அவனது உதடுகள் அவனை அறியாமலே அடுத்த கன்னத்திலும் பதிந்தது.
அப்போதும் அவள் எழுந்து கொள்ள வில்லை அவனுடைய உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக விழித்து கொள்ள ஆரம்பித்தது. “இதுக்கு மேல போனா நம்ம நிலைமை தான் மோசமாகிரும்”, என்று எண்ணியவன் அவள் முகம் நோக்கி குனிந்து தன்னுடைய தலையில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் படுமாறு செய்தான்.
தன்னுடைய வீட்டில் தூங்குவது போன்ற மனநிலையில் இருந்த பூங்கொடி குளிர் நீர் முகத்தில் பட்டதும் படக்கென்று கண் விழித்தாள்.
வெகு அருகில் இருந்த அவன் முகத்தைக் கண்டு அவள் படக்கென்று எழ அவள் அப்படி எழுவாள் என்று தெரியாமல் இருவர் இதழும் ஒரு நொடி மோதிக் கொண்டது.
என்னவென்று உணரும் முன்னமே இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்திருந்தது. படக்கென்று அவனிடம் இருந்து விலகி அமர்ந்தாள்.
அவளுடைய விலகலில் அவனுக்கு ஏமாற்றம் வந்தது. அவளோ கூச்சத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அந்த முத்தமும் கண் முன் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் அவனது கோலமும் அவளுக்கு மூச்சடைக்கும் உணர்வைத் தான் கொடுத்தது.
அவளுடைய உணர்வுகளை அவள் முகம் பார்த்துப் படித்தவன் “மறுவீட்டுக்கு போகணும் கொடி, நேரம் ஆச்சு. எழுந்து குளிச்சிட்டு வா”, என்றான்.
காதல் தொடரும்…..
error: Content is protected !!