Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 19 1

அத்தியாயம் 19 

காதல் என்றுமே கண் கட்டு

வித்தை தான் நம்மை

சுத்தலில் விடுவதால்!!!



Advertisement

“முதல்ல கிளம்பு. மத்தது எல்லாம் அப்புறம் பேசலாம். நீ டிரஸ் மாத்து”, என்றான் மணிமாறன்.

Advertisement

“சரி வெளிய போங்க. நான் டிரஸ் மாத்தணும்”, என்று அவள் சொல்ல “உன்னைக் கொன்னுருவேன் டி. படுத்தாதே. நான் இங்க தான் இருப்பேன். நீ என் முன்னாடி மாத்தி தான் ஆகணும்”, என்றான்.

Advertisement

“பிளீஸ்”

Advertisement

“இனிமே நீ என்ன பிளீஸ் சொன்னாலும் வேலைக்காகாது மேடம். ஆனா உன் பக்கத்துல கூட நான் வர மாட்டேன். கவலைப்படாதே. ஏன்னா பக்கத்துல வந்தா இன்னும் நேரம ஆகிரும். அப்புறம் சீக்கிரம் அங்க போக முடியாது”, என்று சொல்ல அவசரமாக உடை மாற்ற ஆரம்பித்தாள்.

வைத்த கண் எடுக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. சொர்கத்தைக் கண்டது போல பிரம்மித்துப் போய் அமர்ந்திருந்தான் மணிமாறன்.

“மாத்திட்டேன் போகலாமா?”, என்று அவள் மெதுவாக கேட்க “முழுசா ஒண்ணும் தெரியலை. பட் ஓகே. வா போகலாம்”, என்று சொல்லி கீழே அழைத்துச் சென்றான்.

பெரியவர்களிடம் கிளம்புறோம் என்று சொல்ல சந்தோஷமாக அவர்களை அனுப்பி வைத்தார்கள் கதிரவனும் தேவகியும். அவன் காரை எடுக்க “என்ன காரை எடுக்குறீங்க? மாமாவுக்கு கார் வேண்டாமா?”, என்று கேட்டாள்.

“அப்பா பைக் யூஸ் பண்ணிக்குவாங்க. நீ ஏறு”, என்று சொல்லி காரை எடுத்தான்.

எங்கே போகிறோம் என்று கேட்டு நச்சரித்தவள் அவன் பதில் சொல்லாததால் ரேவதியை அழைத்தாள். அவள் போனில் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

“என்ன டி வச்சிட்ட?”, என்று கேட்டான் மணிமாறன்.

“அந்த பக்கி அவ ஆள் கிட்ட பேசிட்டு இருக்கு”

“அடுத்த மாசம் அவளுக்கு கல்யாணம். அவ ஆள் கிட்ட பேசாம உன் கிட்டயா கடலை போடுவா? சரி அவளுக்கு என்ன கிஃப்ட் வாங்கன்னு பிளான் பண்ணிட்டியா?”

“அதுக்கு தான் நாள் இருக்கே? அப்புறம் பாக்கலாம்.”

“இனி உனக்கு யோசிக்க எங்க நேரம் இருக்கும்?”, என்று அவன் கேட்டதும் வெட்கத்துடன் அவனைப் பார்த்து சிரித்தாள். சிறிது நேரத்தில் அவன் தோளில் சாய்ந்து தூங்கி விட்டாள்.

வெகு நேரம் கழித்து மணிமாறன் மெல்லிய குரலில் “கொடி, எந்திரி டி”, என்று அழைத்தான்.

கண் விழித்துப் பார்த்தவள் இருக்கும் இடம் எதுவென்று தெரியாமல் விழித்தாள். சுற்றி இருந்த பசுமையைப் பார்த்தவள் “ஏங்க ஊட்டிக்கா வந்துருக்கோம்?”, என்று ஆவலுடன் கேட்டாள்.

“பின்ன ஹனிமூனுக்கு வேற எங்க போவாங்களாம்? இங்க இருக்குற குளிர் இப்போதைக்கு தேவை”, என்று சொல்லி அவன் அவளை மேய்ச்சல் நிலம் போல பார்க்க அவளோ அவன் பார்வையைக் பார்க்காமல் சுற்றி வேடிக்கை பார்த்தாள்.

“இதை எல்லாம் அப்புறம் ரசிக்கலாம். இப்ப இறங்கு. நேரம் ஆச்சு”, என்றான் மணிமாறன்.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அவனுடன் சென்றாள். ஒரு காட்டேஜ் உள்ளே தான் சென்றான் மணிமாறன். ஏற்கனவே புக் செய்திருந்தான்.

சின்ன வீடு போல அழகாக இருந்தது. அதே போல பல வீடுகள் அங்கே இருந்தது. படுக்கை அறைக்கு வந்ததும் கையில் இருந்த பேகைத் தூக்கி போட்டவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

தன்னுடைய கைகளை மாலையாக அவன் கழுத்தில் கோர்த்துக் கொண்டவள் “இப்பவே ஆரம்பிக்கணுமா? இப்ப தானே வந்தோம்? அவ்வளவு தூரம் கார் வேற ஒட்டிட்டு வந்துருக்கீங்க?”, என்று கேட்டாள்.

“வேற இப்ப என்ன டி பண்ணுறது?”, என்று கேட்டவனின் உதடுகள் அவளுடைய காது மடலைக் கடிக்க “நான் குளிச்சிட்டு வரேன்”, என்றாள்.

“நானும் வரவா?”

“சீ”

“சேந்து குளிச்சா தண்ணியும் நேரமும் மிச்சமாகும் டி”

“ஊகூம் அதெல்லாம் முடியாது. பிளீஸ்ங்க. நான் சீக்கிரம் வந்துருவேன்”

“சரி சரி, நீ போய்க் குளி. நான் சாப்பாடுக்கு சொல்லிட்டு வரேன். கதவை வெளிய பூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

அவளும் இரவு உடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். அவன் உணவுக்குச் சொல்லி விட்டு வரும் போது பூங்கொடி குளித்து விட்டு வெளியே வந்தாள்.

“சேலை கட்டலையா டி?”, என்று கேட்டுக் கொண்டே அவன் அவளை வாசம் பிடிக்க “மாத்துறேன். இப்ப நீங்க போய்க் குளிங்க”, என்றாள்.

“இப்ப சாப்பாடு கொண்டு வருவாங்க டி. வாங்கிட்டு டிரஸ் மாத்து”, என்று சொல்லி விட்டு குளிக்கச் சென்றான்.

சிறிது நேரத்தில் உணவு வர அதை வாங்கி வைத்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள். குளித்து முடித்து வந்தவன் அவளை முறைக்க “சாப்பிட்டு மாத்துறேன் போதுமா? எனக்கு பசிக்குது”, என்றாள்.

“சரி வா சாப்பிடலாம்”, என்று அமர்ந்தவன் அவளுக்கு ஊட்டி விட்டான். அவளையும் அவனுக்கு ஊட்டச் சொன்னான். சாப்பிட்டு முடிக்க அரை மணி நேரம் ஆனது.

உணவு முடிந்ததும் “ஒழுங்கா சேலையை எடுத்து கட்டு சொல்லிட்டேன். இனி வர பத்து நாளும் நான் உன்னை சேலைல தான் பாக்கணும். நீ டிரஸ் மாத்து. நான் இப்ப வரேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.

“எங்கே போறான்?”, என்று குழம்பிய படியே சேலையைக் கட்டினாள் பூங்கொடி.

அவள் கட்டி முடிக்கும் போது அறைக்கு வந்தவன் “வாவ் செமையா இருக்க டி. போகலாமா?”, என்று கேட்டான்.

“எங்க போறோம்? வாக்கிங் போக போறோமா?”, என்று கேட்டாள்.

“வாக்கிங்கா? ரெண்டு நாளுக்கு அப்புறம் தான் உன்னை வெளியவே விடுவேன்”, என்று சொன்னவன் “வா”, என்று அவள் கை பற்றி அறையை விட்டு ஹாலுக்கு அழைத்துச் சென்றான்.

“இங்க எதுக்கு?”, என்று அவள் யோசிக்கும் போதே அங்கே இருந்த மற்றொரு அறையை திறந்து அங்கே அழைத்துச் சென்றான்.

கதவைத் திறந்ததும் குப்பென்று பூக்களின் மனம் வீச திகைத்து போனாள். அவன் அந்த அறையின் விளக்கைப் போட அங்கே இருந்த கட்டிலில் படுக்கை முழுவதும் சிவப்பு வண்ண ரோஜாவால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

அவள் அந்த அலங்காரத்தையும் அந்த ரூமையும் ரசித்துக் கொண்டிருக்க அவனோ அவளைத் தான் ரசித்திருந்தான்.

“இதைச் செய்யச் சொல்ல தான் போனீங்களா?”

“ம்ம், பிடிச்சிருக்கா?”

“ரொம்ப அழகா இருக்கு”

“அப்படின்னா ஆரம்பிக்க வேண்டியது தான்”, என்று சொல்லி அவளை நெருங்கினான். அவன் சொன்னதைக் கேட்டு சிலிர்த்துப் போய் நின்றாள். அவன் நெருங்க நெருங்க அவள் கால்கள் எல்லாம் தடுமாறியது.

அவளுடைய கன்னத்தில் இதழ் பதித்தவன் அவளுடைய மறு கன்னத்திலும் இதழ் பதித்தான். கால்கள் தள்ளாட நிற்க முடியாத நிலையில் மெதுவாக அவன் மீது சாய்ந்தாள். கன்னத்தில் இருந்து அவளுடைய இதழ்களுக்கு தன்னுடைய இதழ்களை இடம் மாற்றினான்.

அவன் ஏற்படுத்திய உணர்வலைகளைத் தாங்க முடியாமல் அவனுடைய டீஷர்ட்டை கொத்தாக பற்றிக் கொண்டாள் பூங்கொடி.

அவள் அப்படிச் செய்யவும் இன்னும் இன்னும் அழுத்தி முத்தமிட்டவனின் கரம் அவளுடைய இடையில் பதிந்தது.

அவனுடைய முத்த வேகத்தில் ஏற்கனவே மயங்கி கிடந்தவள் இப்போது இடையில் அவன் கரம் பதியவும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவன் வேகத்தில் “ம்ம்”, என்று அவள் முனங்க அந்த சத்தம் அவன் வேகத்தை இன்னும் அதிகரிக்க செய்தது.

“வாசமா இருக்க டி கொடி”, என்று சொன்னவன் அவளுடைய கழுத்து வளைவில் தஞ்சமடைந்தான். அவன் கைகளில் நெகிழ்ந்து போய்க் கிடந்தாள் பூங்கொடி.

சில தடைகளை விலக்க அவன் அவளிடம் அனுமதி கேட்க “இவ்வளவு நேரம் யார் கிட்ட அனுமதி கேட்டாராம்?”, என்று எண்ணிக் கொண்டவள் சம்மதம் சொன்னாள்.

அவன் விரல்கள் அவள் உடலில் ஊர்வலம் போக “ஐயோ கொல்லுறானே?”, என்பது தான் அவளது எண்ணமாக இருந்தது.

இத்தனை நாள் இருந்த ஆசை கட்டவிழ்க்க அவளை முரட்டுத் தனமாய் தான் அணுகினான். அவனுடைய இத்தனை நாள் காத்திருப்பு புரிய அந்த முரட்டுதனத்தை சந்தோசமாகவே அனுமதித்தாள். அவனுடைய விரல்கள் அவளின் உடலை மீட்ட ஆரம்பிக்க இனிய சிணுங்கல்கள் கேட்க ஆரம்பித்தது.

திருப்தியாக அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு படுத்தவன் அவளை இழுத்து தன்னுடைய மார்பில் சாய்த்துக் கொண்டான். இருவருக்கும் உறக்கம் என்பது துளி கூட இல்லை. அவன் ரகசியமாக பேச அவளோ வெட்கத்துடன் அவனுடன் ஒண்டிக் கிடந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!