Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 1

அத்தியாயம்            1

அது சேலத்தில் உள்ள  உயர்தர மருத்துவமனை.. அங்கே அனுமதிக்கப் பட்டிருந்தாள்…. துர்க்காஸ்ரீ… 27 வயது. இரவு  மணி 9:30… அந்த மருத்துவமனை வந்து கிட்ட தட்ட ஒருமணி நேரம் ஆகிறது.

ஆனால் அவளின் படபடப்பு அடங்கவில்லை, இன்னும் அந்த நெஞ்சக்குள் ஏதோ செய்து கொண்டிருக்கிறது. தன் கைகளில் ட்ரிப்ஸ் போடப்பட்டு தான் படுத்திருக்கிறாள்….

தன்னுடன்….. தனது அம்மா…. மற்றும் அவளை தாயாய் தாங்கும் அவளின் ஓரகத்தி…. நித்தியாவும் கூட இருக்கிறார்கள் தான், ஆனால் பயம், கண்ணை மூட முடியவில்லை அவளால்.



Advertisement

கண்ணை திறந்து வைத்துக் கொண்டே இருக்கிறாள். தூக்கம் என்பது மருந்துக்கும் வரவில்லை. நர்ஸ் வந்து கூட அமைதியாய் சொன்னார்கள்.. “துர்க்காக்கா… ட்ரிப்ஸ் போட்டுருக்கு… நீங்க கண்ணை மூடி தூங்குங்க… எதையும் நினைக்காதீங்க…” என்றார்கள்.

அவளுக்கோ “ம்… பரிதாபம்…. அய்யோ…. சிறு பெண்ணெல்லாம் என்னை பார்த்து பரிதாபப்படுகிரார்களே என தான் எண்ணம் தோன்றியது”.

அந்த நர்ஸ் மட்டும் அல்ல, அவளை பார்த்து பரிதாபப்படுவது அந்த ஹோஸ்பிட்டல் வளாகத்தில் உள்ள இவளின் சொந்தங்கள் அனைத்தும் அவளை, பரிதாப பார்வை தான் பார்க்கின்றன.

Advertisement

ஆனால், தன்னை தாங்க வேண்டியவன் மட்டும், அவன் கண்ணில் மட்டும் ‘காதல் பார்வை வேண்டாம்…. ஒரு பரிதாப பார்வை மட்டும் போதும்…’ என  இவளும் அவன் முகம் பார்த்தால் கூட அங்கு பதிலில்லை.

Advertisement

“ம்கூம்…. மருந்துக்கும் இல்லை…. எங்கே அவன் இவளை இப்போதெல்லாம் முறைப்பதற்காக கூட நிமிர்ந்துப் பார்ப்பதில்லை.

அதை விட இன்று மாலை நடந்ததை நினைத்தால்…. அவளின் bp  இன்னும் குறைந்தது….

‘எத்தனை நாள் பூரித்திருப்பேன், எத்தனை தரம் கர்வம் கொண்டிருப்பேன் இவன் என் கணவன்’ என. ஆனால், இந்த ஒரு செயலால் எல்லாம், அக்கு அக்காக.. செதில் செதிலாக அல்லாவா… உடைகிறது.

Advertisement

‘மிகவும் உயரத்திலிருந்து விழுந்தால்…. சற்று அதிகமாக தானே… உடையும்’ அப்படி தான் அவள் நிலையும்.

அய்யோ! அதை நினைக்கக் கூடாது. இல்லை, ‘ஈஸ்வர் அப்படி இல்லை, இல்லவே இல்லை….’ என கண்களை மூடியச் சமயம்… தன் சின்ன மகனின் அழுகுரல் கேட்டது.

அதை தொடர்ந்து, புயலென ஆறடி உருவம் வந்தது. கண்ணில் ஒரு வன்மம், நடையில் ஒரு வேகம் என அரக்கனாக வந்தான், துர்கா அறைக்கு.

வந்தவன் “ஏய், என்னடி நாடகமா…. நான், கேட்டது  இது வரை கிடைக்காமல் இருந்ததில்லை. க்ம், அது உனக்கேத் தெரியும்….

தெரிஞ்சும்…. என்கிட்டே விளையாடிறியா? பார்க்கறேன் டி இந்த ஹோஸ்பிட்டல் இதோ, இப்பப் படுத்திருக்கியே இதையே…. எனக்கு சாதமாக மாத்தி என்னால, என்னால செய்ய முடியும் டி…. “ என சொடக்கிட்டு பேசிக் கொண்டிருந்தான்.

கண்களை திறக்கவில்லை அவள். தன் இரண்டு கைகளையும், இரண்டு புறமும் உள்ள கட்டிலின் விளிம்பை பிடித்துக் கொண்டு…. தன் கண்ணில் வழியவிருந்த நீரை அடக்கிக் கொண்டிருந்தாள் அவனின் மனையாள்.

அவள் அழுத்தி பிடித்ததில், தனது மணிக்கட்டில், தானேக் கத்தியை வைத்து நரம்புகளை வெட்டத் தெரியாமல்… வெட்டியதிலிருந்து ரத்தம் வந்துக் கொண்டிருந்தது இப்போது.

அதைப் பார்த்துவிட்டு, அங்கிருந்த நித்யாதான் “சிஸ்டர்… சிஸ்டர்… யாராவது இருக்கிங்களா ” என வெளியேச் சென்றுத் தேடினாள்.

அது vip களுக்கான லாபி. எனவே குரல் கேட்ட உடன்…. அங்கிருந்த ஸ்டாப் நர்ஸ் வந்துப் பார்த்து, கட்டைப் பிரித்துக் கொண்டே “என்ன க்கா… இப்படிச் செய்து இருக்கீங்க. நீங்க என்ன சிறு பிள்ளையா, எடுங்க க்கா கையை, எடுங்க “ என கட்டிலைப் பிடித்திருந்த அவளின் கையை, வலு கொண்டு இழுத்து விடுவித்தாள், அந்த நர்ஸ்.

அந்த புயலோ…. ‘யாருக்கோ…..’ என நகராமல்… இன்னுமவளை முறைத்து பார்த்துக் கொண்டு அந்த அறையின் வாயிலில் நின்றான்.

அங்கு வந்த டியூட்டி டாக்டர் தான்…. அந்த புயலைப் பார்த்தது… “நகருங்க சார் அந்த பக்கம்….” என அவனை மிரட்டிய படி உள்ளேச் சென்றார்.

அப்போதே. “டேய்… டேய்…. மகி, ஏண்டா, வாடா, அப்புறம் பேசலாம், வா…” என அவனின் தம்பி அகிலேஷ்வரன், அவனின் தோளைப் பிடித்து தள்ள, நகர்த்த முடியவில்லை அவனை.

உடனே அந்த வராண்டாவில்… கிட்ட தட்ட ஓடியே வந்தான், கீர்த்திவாசன். துர்காவின் தம்பி, மகியை தள்ளியவாறே “என்ன பாவா, என்ன, எதுக்கு வந்தீங்க, கிளம்புங்க” என அப்போதும் கிட்ட தட்டக் கெஞ்சினான். அப்படி தான் சொன்னான்.

இதை பார்த்த, துர்க்கா “விடு டா… பாவாவ. விடு.” என கத்த கத்த, அங்கு தையல் பிரிந்தது அவளுக்கு. டாக்டர்தான் சற்று சத்தமாக “நான் என் வேலையைப் பார்க்கவா… இல்ல போகவா…” என்று நிதானக் குரலில் சத்தம் போட்டார்.

மகி, என்ற அழைக்கப்பட்ட… மகேஷ்வரனை, இப்போது இருவரும் சேர்ந்து நகர்த்தி, வெளியே அழைத்து வர, இப்போது அந்த அறையின் கதவு சாற்றப்பட்டு சிகிச்சைத் தொடர்ந்தது.        .

மகி, வெளியே வரவும், அங்கு அழுதுக் கொண்டிருந்த, அவனின் இரண்டு வயது மகன் சர்வேஷ் “ப்பா…. “ என ஆர்பாட்டம் செய்ய, மகியின் கோவம் சற்று இறங்கியது.

சர்வேஷை தனது மாமியாரின் கையிலிருந்து வாங்கியவன், அவனிடம் “சாப்பிட்டியா…..” என்றான்,  மிரட்டும் தோரணையில். அந்த பிஞ்சு இன்னும் குரலெடுத்து அழத் தொடங்கியது.

என்ன செய்வது என தெரியாமல், தூக்கிக் கொண்டு வெளியே சென்றான் மகி. அவனிற்கு ஒரு டர்க்பான்டசி பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொடுத்தவன், தனது காரில் அவனை அமர வைத்து, ac போட்டு, மியூசிக் பிளேர் ஆன் செய்து…. “சொடக்கு மேல…. சொடக்கு போடுது…..” பாட்டு ஆன் செய்து, வெளியே வந்தான்.

ஒரு தம்-மை பற்ற வைத்துக் கொண்டு, தனது மகனையே வேடிக்கைப் பார்த்தபடி எதிரில் உள்ள அந்த திட்டுப் போன்ற அமைப்பில் அமர்ந்தான். ‘இருக்கும் பிரச்சனையில் இவள் வேறுப் படுத்துகிறாள்’ என தான் தோன்றியது மகிக்கு.

அப்போது அவனின் போன் அலறியது. எடுத்து “ஹலோ….” என்றான். லேசான ஆசுவாசம் எட்டிப் பார்த்தது, அவன் முகத்தில்.

அந்த புறம் என்ன கேட்டார்களோ…. இவன் “ம்… இருக்கா…”

……………

“தெரியல…. வினோ… ” என்றான்.

……………..

“காலையில வரேன்…. அந்த புது அட்வகேட் என்னாச்சு, பாத்தியா….” என்றான்.

………..

“சரி, ம்ம்….. சரி, பாய்….”

…….. ………

“ம், ஆச்சு. வரும் போதுச் சாப்பிட்டுதான் வந்தேன். பைய்…..” என அழைப்பைத் துண்டித்தான்.

ஒரு பெருமுச்சு எழுந்தது அவனிடமிருந்து. அப்படியே, அங்கு அமர்ந்து வேடிக்கைப் பார்த்தான்.

‘எதையெல்லாம் பார்ப்பது, இதற்கு தான், என்னை விட்டு விடு என்கிறேன். என்னையேப் பிடித்துக் கொண்டுத் தொங்குகிறாள்’ என சலிப்பாக வந்தது, அவனுக்கு.

‘அத்தனைப் பேரையும் என் விருப்பம் போலே ஆட்டி வைக்கிறேன்.. ஆனால், இந்த ஸ்ரீ மட்டும். இருக்கட்டும், எங்கேப் போய் விடப் போகிறாள், எனக்கு இவளை பற்றித் தெரியாதா? நான் கேட்டு இல்லை என்று மறுக்கும் தைரியம் அவளுக்கு இருக்கா? பார்க்கிறேன்….. “ என காரின் மேல் சாய்ந்து யோசனை ஓடியது அவனுள்.

பட படவென காரின் கண்ணாடியைத் தட்டினான், சர்வேஷ். அதில் கலைந்தவன், சிரித்தவாறே “ என்ன டா சர்வா, பிஸ்கட் தீர்ந்துப் போச்சா “ என டோரைத் திறக்க.

அது தனது சாக்லேட் பற்களைக் காட்டிச் சிரித்தது. வாட்டர் பாட்டில் எடுத்து, அவனின் கையைக் கழுவி விட்டு, குடிக்கத் தண்ணீர் கொடுத்து, காரில் அமர்த்திக் கொண்டு வீடு நோக்கி சென்றான் மகி.

வீடு அப்படியே கிடந்தது. போட்டது, போட்ட படி., கதவு திறந்து இருந்தது. பசங்க விளையாடிய விளையாட்டு பொருள், திக்காளுக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்தது.

‘ச்ச…. என்ன இது’ எனத் தோன்ற…. “பெரியம்மா….” என கத்தி அழைத்தான். அவர் கலங்கிய முகத்துடன் பூஜை அறையிலிருந்து வெளியே வர.

“என்ன… இது இப்படியே வைச்சிருக்கீங்க. எங்க, வேலாத்தா, கூப்பிட்டு கிளீன் பண்ணச் சொல்லுங்க” என சிடு சிடுக்க…

“பிள்ளைக்கு எப்படி இருக்கப்பா…. “ என தன்மையாகவேக் கேட்டார் அவனின் தூரத்து உறவான, அவனின் பெரியம்மா.

“ம்…. நல்லா தான் இருக்கா. என் உயிரை எடுத்துகிட்டு.” என ஒரு பதில் சொன்னான். கேட்டிருந்த பெரியம்மா, இவனை எதில் சேர்ப்பது என பார்த்திருந்தார்.

அங்கே ஹோஸ்பிட்டலில், துர்க்காவின் பிரிந்த தையலை சரி செய்து, அவளிற்கு மயக்க ஊசி போட்டிருந்தனர். அதனால் அரை மயக்கத்தில் இருந்தாள்.

“ஈஷ்வர்….. ஈஷ்வர்…. “ ஜபம் தான் ஓடிக் கொண்டிருந்தது அவள் வாயில். இந்த நிலையிலும் அவளிடம் மாற்றமில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும், சொல்ல முடியாத துக்கம் வந்தது.

அதுவும் துர்க்காவின் தந்தை வரதராஜன், அந்த வராண்டாவின் சேர் போடப்பட்டுள்ளவற்றில் ஒன்றில் அமர்ந்தவர் தான், இன்னும் வந்து தன் பெண்ணைப் பார்க்கவில்லை.

நகரத்தில் பிரபல நகை கடை வைத்திருப்பவர். பரம்பரை பரம்பரையாக நகை வியாபாரம்.  நல்ல பெயர், குடும்ப கௌரவம் என அனைத்தும் நிரம்பப் பெற்றவர்.

ஆனால், தன் பெண் விஷயத்தில் ஏமாந்து நிற்கிறார். அவருக்கு தன் பெண் மேல் தான் கோவம். என்ன இல்லை அவளிடம், தங்கமாய் தாங்க, நாங்கள் இருக்கிறோம் ‘அவனை விட்டு விடு….’ என்றால் கேட்டால் தானே. அவன் கழுத்தை பிடித்துக் கொண்டே அழுவது.’ என தன் பெண் மேல் தான் கோவம் வந்தது. ‘என்னவெல்லாமோ ஆசைப்பட்டு, இப்படி ஒரு நிலையில் பெண்ணைப் பார்க்கவா’ என மனம் நொந்தேப் போனார், வரதராஜன்.

ஆனால், தன் மாப்பிள்ளை முன், எதையும் காட்டிக் கொள்வதில்லை. இப்போது கூட மகி வந்தது, தன் பெண்ணைக் கடிந்தது எல்லாம், அவர் காதில் விழத்தான்ச் செய்தது.

ஆனால், இதில் ‘தான்’ என்ன செய்ய முடியும் என அமைதியாக அமர்ந்திருந்தார். தன் பெண் ‘ம்….’ என சொல்லட்டும், அவனை அவனை என பற்களை நர நரவென கடிக்க மட்டுமே முடிந்தது, அவரால்.

ஆம், என்ன செய்து விட முடியும் அவனை, ‘அவனின் பார்வை வட்டத்தை தாண்ட முடியுமா’ என இன்னொரு மனம் எடுத்துச் சொல்ல, அமைதியானார் வரதராஜன்.

அதிகாலை மூன்று மணி. துர்க்காவிற்கு லேசாக மயக்கம் தெளிந்தது. அவளருகில் இருந்த இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அவள் எழுந்து தனது போன் எடுத்து…. வாட்ஸ்அப் பார்த்தாள். அவனின் லாஸ்ட் சீன் பார்க்க…. அது 12:30 என காட்ட, ‘தூங்கிட்டாரா….’ என தனக்குள் சிரித்துக் கொண்டவள்.

தானும் தனது…. லாக் ஸ்க்ரீன்னில் வைத்திருந்த, தங்கள் நால்வர் மட்டும் எடுத்துக் கொண்ட, அந்த புகைப்படத்தைப் பார்த்தாள்.

அதில் அவளின் ஈஷ்வர், தங்களது பெரிய மகன் கமலேஷை முதுகில் தூக்கியப் படி., துர்காவின் கையில் வைத்திருக்கும், தன் இளைய மகனுக்கு நெற்றியில் முத்தம் வைத்த படி இருக்கும், ஒரு புகைப்படம். அதனை ஆசையாகப் பார்த்தபடி இருந்தாள் துர்கா.

அது சர்வேஷின் முதல் பிறந்த நாளின் போது எடுத்தது.. ஒரு  வருடம் முன்பு, என்ன ஒரு இனிமையான தருணம். அதில் தனது உடை, அவனைப் பற்றிய பெருமை நிறைந்த தனது விழிகளையும் பார்த்தாள்.

இப்போது தன்னைக் குனிந்துப் பார்த்துக் கொண்டாள், மிகவும் மெலிந்து இருந்தாள். செல் காமெராவை ஆன் செய்து, இப்போது தன் முகம் பார்க்க, அந்த விழிகளில் நிராசை மட்டும் தெரிந்தது.

அப்போதைய துர்கா, சற்று பூசினார் போன்று அவளின் தோள் வரை வெட்டிய முடி., அன்று நல்ல க்ரே கலர் மைசூர் கிரேப் சாரி உடுத்தி…. அழகாக இருந்தாள்.

இப்போது தன்னை குனிந்துப் பார்க்க, சற்று இளைத்து, கன்னமெல்லாம் ஒட்டி., ஏதோ… இருக்கிறேன் என இருந்தாள். இந்த ஒரு வருடம் அவள் வாழ்வில், எப்படி கடந்தாள் எனத் தெரியவில்லை.

அதைவிட, நாளை காலை வந்து அவன் என்ன செய்வானோ என அது வேறு அவளை பயமுறுத்தியது. இப்போதுத் தோன்றியது “பேசாமல் அவன் கேட்பதைக் கொடுத்து விடலாமா, அவனாவதுச் சந்தோஷமாக இருக்கட்டும்….” என ஒரு செகண்ட் தான் தோன்றியது.

‘அய்யோ…’ என தனது தலையில் தானே அடித்துக் கொண்டாள். அது மட்டும் முடியாது. வேண்டுமானால், நான் இறந்த பிறகுக் கொடுக்கிறேன் “அவனுக்கு விடுதலையை….” என அவளின் மனம் அலறியது.

ஆம், இப்போது அவளின் கணவன்….. மகேஷ்வரன் கேட்பது விவாகரத்து. அதையும் நேர்மையாகக் கேட்கிறான் ‘எனக்கு நீ வேண்டாம், என்னை விட்டு விடு…..” என.

இன்று, நேற்று அல்ல…. கடந்த 1 வருடக் காலமாக, கேட்கிறான். அதையே நினைத்துக் கொண்டிருந்தவளின் விழிகளில் கண்ணீர் வரவில்லை, வற்றி விட்டது போல, வெறுமைதான் வந்தது.

முதலில், கொடுத்து விடேன் என சாதாரணமாக தான் கேட்டான். அப்போதெல்லாம், தெரியவில்லை, இப்படி உறுதியாய் நிற்பான் என.

எப்படியோ, அவன் சொல்லுவது ‘என் வாழ்விலிருந்து போ’ என்பது தான். எங்கே போவதாம், ‘என்ன வேண்டுமோ எடுத்து செல்…. இதோ பத்திரம்’ என்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!