Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 3

அத்தியாயம்                3

மகி, இப்போதெல்லாம் சனி கிழமை மட்டுமே சேலத்திலுள்ள, அவன் வீட்டிற்கு வருவது. அதுவும் பசங்களுக்காக போல். கடந்த 1 வருடங்களாக, இது துர்காவை உறுத்தினாலும், அவனை கேள்வியேக் கேட்டு பழகாதவள், அவனை அப்படியே ஏற்றாள்.

மகி, தன் அப்பா இறந்துடன், தன் குடும்பத்தை மட்டும், பிள்ளைகளின் படிப்பை காரணம் சொல்லி சேலத்திற்கு மாற்றி இருந்தான். தனியாக வீடு ஒன்று லீசுக்கு எடுத்து, அங்கு தான் குடி அமர்த்தி இருந்தான்.



Advertisement

அவன் அம்மா வைதேகி “ஏம்ப்பா, இப்படி ஓடனும், பிள்ளைகள் இங்கேயே இருக்கட்டும் “ என தான் சொன்னார். ஆனால் அவனிற்கு சேலத்திலும் தொழில் இருப்பதால், “இங்கு அடிக்கடி வந்து செல்வது முடியாது, மேலும் அகில், இங்கு பார்க்கட்டும், நான் அங்குப் பார்க்கிறேன்” என சொல்லவும் செய்தான். அதற்கு மேல் யாரும் எதுவும் பேசவில்லை.

கூடவே தன் தூரத்து உறவான ஒரு பெரியம்மாவையும் தங்க வைத்திருந்தான். இவன் மேட்டூரிலும் சேலத்திலும் என இருந்து பார்த்துக் கொள்வான். இப்படி தான் இரண்டு வருடங்கள் சென்றது.

கடந்த ஒரு வருடங்களாக தான், அவன் வருவது வார விடுமுறை நாட்கள் என ஆனது, வந்தாலும் அவளிடம் பேசுவதில்லை தான். ஆனால் பிள்ளைகளுக்கு அது தெரியாமல் பார்த்துக் கொள்வான்.

Advertisement

துர்காவும் இதற்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள். அவனின் மாற்றம் வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரிந்து தான். இருந்தது, அவனிடம் கேட்கும் துணிவு அப்போது யாருக்கும் இல்லை.

Advertisement

ஆனால், இதற்கெல்லாம் விடையாக, கடந்த ஒரு வருடத்தில் உண்டான  குழப்பத்திற்கு எல்லாம் பதிலாக நேற்று வந்தவன், வரும் போதே ஆர்பாட்டமாக வந்தான் “துர்கா….” என அழைத்த படியே…

“ப்பா” எத்தனை வருடங்களாகின, இப்படி ஒரு அழைப்பை கேட்டு என தான் தோன்றியது துர்காவிற்கு. ஆனால், பிறகு தான், இந்த வார்த்தையே அவன் வாயிலிருந்து வராது…. ‘ஸ்ரீ’ என்பது தானே…. அவனின் அழைப்பு.

அதுவும் இந்த 6 மாதங்களாக, அழைப்பே இல்லை. இப்போது இப்படி அழைக்கவும் துர்கா மனம் ஏதோ என சந்தோஷம்தான் பட்டது. தனது வருத்தங்களை எல்லாம் நொடியில் மறந்தவள். அவன் முன் பிரகாசமாக நின்றாள்.

Advertisement

அதெல்லாம் அவன் கருத்திலேயே பதியவில்லை போல், தந்து குறிக்கோள் என்ற ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு இருந்ததனால், மனைவி மக்கள் யாரும் அவன் கண்ணிற்குத் தெரியவில்லை போல. எந்த முகாந்திரமும் இல்லாமல் கட கடவென அவள் கைபற்றி பெட்ரூமினுள் அழைத்து சென்றான்.

கத்தை காகிதத்தை கையில் திணித்தான்…. “விவாகரத்து வேண்டும்….” என்றான்.

அதையும் நேர்மையாக தான் கேட்கிறான் “எனக்கு, உன்னுடம் வாழ்ந்தது போதும். நீ என்ன வேண்டுமோ, எடுத்துக் கொள். ப்ளீஸ்…. கிவ் மீ ஸ்பேஸ்…” என்றான். உடையவோ, ஒரு குரல் மாற்றமோ இல்லை அவனிடம்.

முதலில் தன் கணவன் என்ன சொல்கிறான் என புரியவில்லை அவளுக்கு, ஏதோ பண்டமாற்று முறைப் பற்றிச் சொல்கிறான். ஆனால் ஏன், தன்னிடம் சொல்கிறான் என தெரியவில்லை துர்காவிற்கு.

இவளின் முழியை பார்த்த மகி “என்ன புரியுதா…” என கேட்டு திரும்பவும் தனது கோரிக்கையை சொன்னான்.

இப்போது தான் புரிந்தது, ‘ஒ… விவாகரத்து கேட்க்கிறான,’ என தனது முளையில் கேட்ட வார்த்தை சரிதான என, இவள், அவன் முகம் பார்க்க.

திரும்பவும் மகி, தான் சொன்னதையே சொன்னான், இன்னும் அழுத்தமாக. இப்போது திரும்பவும் அவன் சொன்ன வார்த்தையை தன்னுள் ஒரு தரம் சொல்லி பார்த்தாள் துர்கா.

அவள் மனம் சத்தமில்லாமல் கதறியது ‘எது வேண்டுமோ எடுத்து கொள்ளலாம் உனக்கு ஈடாக. என்ன தாராளம்….. இருக்காதா, நான் அவனிற்கு கொடுப்பது சுதந்திரம் அல்லாவா. ‘ என ஏதோ தனது மனம், மூளை, இதயம் என எல்லாம் அந்த வார்த்தையின் கசப்பை உணர்ந்தது போல், அவளின் முகம் கசங்களானது.

“உனக்கு ஈடாக….. எதை சொல்லுவேன் நான்… உனக்கு ஈடு செய்கிறாயா. முடியுமா உன்னால். இன்னொரு ஜென்மம் அல்லவா வேண்டும் அதுவும், உன்னால் மட்டுமே செய்ய முடியும்.” என மனதுள் போராட.

மகி ஏதோ ‘இப்போதே கொடு’ எனும் விதமாக அவளையேப் பார்த்து நின்றான்.

துர்காவிற்கு, இதுவரை, காற்றில் மிதந்து வந்த செய்தி, வியாபாரத்தில் ஏதோ லாப, நட்டம் குறித்த செய்தி தான் தெரியும். ஆனால் இது புதிது.

அப்படியே கண்கள் சொருக கட்டிலில் அமர்ந்தவள் தான், என்ன நடக்கிறது என தெரியாமல் அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் சென்று என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என அவளிற்கே தெரியாமல் செய்தது தான், தன்னை தானே அழித்துக் கொள்ள நினைத்தது.

இவள் இப்படி அமரவும், மகி போன் வரவும் எழுந்து பேசியபடியே வெளியேச் சென்றுவிட்டான்.

தன் சுயநினைவே இல்லாமல், அவனில், தன் சுயம் தொலைத்து நிற்கிறாள் துர்கா.

தங்களது இளைய மகன்… சர்வேஷ் பிறந்ததிலிருந்து… ஒரு இடைவெளியை உணர்கிறாள் தான்…. ஆனால் அது எதோ தொழிலில் கவனமாக இருந்ததனால் எனதான் நினைத்திருந்தாள். ஆனால், இப்போது பிளவாக நிற்கும் போது, என்ன செய்வது யார்க்கும் தெரியவில்லை.

சர்வேஷ், வயிற்றில் இருக்கும் போதே…. கந்தசாமி இயற்கை எய்தினார். அப்போது தான் 7ஆம் மாதம் வளைகாப்பு முடிந்து, அம்மா வீட்டிக்கு சென்றிருந்தாள்… துர்கா.

வீட்டில் எல்லோரையும் விட இடிந்து போனது மகி தான். இறந்த அன்று அவன் அழுத அழுகை ‘ப்பா…’ எல்லோரையும் சற்று அசைத்து தான் பார்த்தது.

எப்போதும் கலையாத உடை, திருத்தமான முகத்துடன், கம்பீரமாக வலம் வருபவனை, இப்படி கதறும் தோற்றத்தில் பார்க்க முடியவில்லை யாராலும். துர்காவிற்கு, அப்போது தான்… அவன் மேல் சிறு தாய்மை பொங்கியது.

காரியமெல்லாம் முடிந்து கூட, துர்காவை அவன், பார்க்க கூட இல்லை. எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்தான். யாரையும் கவனிக்கவில்லை.

யாரின் ஆறுதலுக்கும் அவன் செவி சாய்க்கவில்லை. அறுதல் தேடுபவனுமில்லை அவன்.

அன்று சொந்தங்கள் எல்லாம் சென்ற பிறகு,  ஹால் சோபாவின் கீழே  அமர்ந்து, சோபாவில் தலையை சாய்த்து, அதன் மேலேயே கைகளை விரித்து…. ஓய்ந்த தோற்றத்துடன் அமர்ந்திருந்த மகியை, தனது ரூமிலிருந்து பார்த்த, துர்கா… அருகில் வரவும் முடியாமல், அவனை அப்படி… நிராதரவாகப் பார்க்கவும் முடியாமல் தவித்துதான் போனாள்.

அப்போதும் அவன்…. தனது மனையாளைத் தேடவில்லை. எதிரில் இருந்த தனது தந்தையின் போட்டோவையே வெறித்து பார்த்திருந்தான்.

துர்கா தான் தவித்து போனாள். ஆனால், ஹாலில் சென்று… அவனிடம் பேசும் தைரியம் அப்போது இல்லை. கணவன் மனைவி…. பேசுதல் கூட ரூமுடன் சரி…. ஹாலில் பார்வை கூடக் கிடையாது. அப்படி தான் வழக்கம் அங்கு.

அப்போது அவளின் கண்கள் அவனிற்காக மட்டும் அழுதது. அவன் தலை கோதி…. தன் தோள் சாய்த்து தேற்ற மாட்டேனா என அவள் மனம் ஏங்கியது.

ஆனால், அதற்கெல்லாம் அங்கு நேரமில்லை. ஆம் அவளின் பிறந்த வீட்டினர் அவளை அழைப்பதற்காக வந்து விட்டனர்.

வயிற்று பிள்ளைகாரி வேறு அதனால், அவன் நிமிரும் முன் துர்கா தாய் வீடு கூட்டி செல்லப்பட்டாள்.

அவனிற்கு ஒருவரை பிடிக்கும் என்பதும், அந்த நபர்காக எதுவும் செய்வான் என்பதும் அவனின் தந்தை காலத்துடன் முடிந்தது போலும்.

மகி, தேறவே முழு மாதம் ஆனது. அதுவரை, துர்காவிடம் போனில் பேசுவதுடன் சரி. தன் தந்தையின் 30 முடிந்து.. ஒரு வாரம் கழித்து தான் சேலம் சென்றான். தன் மனைவி, மகனை பார்க்க.

அதன் பின்…. இரு வாரத்திற்கு ஒரு முறை என ஆனது, அவனின் வரவு சேலத்திற்கு. அவனிற்கு ஆசை பெண் குழந்தை வேண்டுமென ஆனால் அடுத்து சர்வேஷ் பிறந்தான்….

ஒரு சின்ன ஏமாற்றம் மகிக்கு,. முகத்தில் காட்டவில்லை, குறிஞ்சி பூ போல் ஓர் ஆசை வந்தது அவனிடம்.

இப்படியொரு ஆசையை தன் மனைவியிடம் கூட பகர்ந்ததில்லை அவன். தெரிந்திருந்தால், அவனிற்கும், ஆசை வருமென புரிந்திருக்கும் அவளிற்கு.

அவனின் ஆசை, விருப்பம், குறிக்கோள், என்ன பிடிக்கும், எதை விரும்பி சாப்பிடுவான் இப்படி எதுவும் தெரியாது. தெரியும் படி அவன், அவளிடம் நின்று பேசியது கூட இல்லை.

இது ஒதுக்கமா, ஆணவமா என தெரியாத நிலை. யாரையும் பக்கத்தில் விடுவதில்லை. ‘யாரிடமும் நெருங்கி பேசி, சிரித்தும்’ அவன் வீட்டில் கூட யாரும் பார்த்ததில்லை போல்.

எல்லோர்க்கும் தேவையானதை அவர்கள் கேட்கும் முன் செய்வான். தனக்கு தேவையானதை தானே நடத்திக் கொள்வான். அதனால் எதற்கும் ஏங்கியதில்லை அவன்.

இவர்கள் வீட்டில் முன்று தலைமுறையாக பெண் பிள்ளை இல்லை. சின்ன வயதில் தங்கை வேண்டுமென தன் தந்தையிடம் கூட கேட்டிருக்கிறான்.

எனவே, இப்போது ஒரு ஏமாற்றம். உடனே கிளம்பி, சின்ன ட்ரிப் சென்று விட்டான். தந்தையிடம் தான் சொல்லுவான்… இப்போது அவரும் இல்லாததால், யாரிடமும் சொல்ல கூட இல்லை, கிளம்பி விட்டான்.

இதை கேட்கும் அளவுக்கு நெருக்கமும் இல்லை துர்காக்கு. அவளிற்கு இதையெல்லாம் கேட்க வேண்டும் என தோன்றவும் இல்லை.

நித்யா தான்…. “துர்கா….. பெரிய பாவா, இரண்டு நாளா காணும்…. எங்க போனார்ன்னு ஏதாவது சொல்லிட்டு போனாரா…..” என்க.

இவளும் சாதரணமாக “இல்லையே அக்கா….. எங்கிட்ட எதுவும் சொல்லல. அதான், பையன பார்க்க வரலியா. நான் ஏதோ வேலைன்னு நினைத்தேன்.” என எதுவும் அறியாமல் கூறினாள்

நித்யா தான் கடிந்து கொண்டாள்“என்ன துர்கா….. புருஷன் எங்க போன்றாங்க, என்ன பண்றாங்கன்னு கூட கேட்க மாட்டியா. இன்னுமா இதெல்லாம் உனக்கு தெரியல.” என்க.

துர்கா சிரித்தபடி.“…. கூல்க்கா. அவர் அப்படி எங்க போய்ட போறார். இன்னும் என்ன அவங்க சின்ன பிள்ளையா…. கவனிக்க. அதெல்லாம் அவர்க்கு தெரியும். விடுங்க…” என்றாள் விட்டேற்றியாய்.

துர்கா வீட்டினர் எல்லருக்கும் கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது. ஆனால் அவன் தந்தையின் நினைவில் இருக்கிறான் என நினைத்தனர்.

நான்கு நாட்கள் கழித்தே வந்தான், மகி. அப்போதும் குழந்தையை பார்க்க… வர ஒரு வாரம் ஆனது அவனிற்கு.

வைதேகிக்கு தான், சற்று சங்கடம். ‘என்ன துக்கமாக இருந்தாலும், அதை குழந்தையிடம் காட்டுகிறானோ’ என. மகி, வீட்டிற்கு வந்த உடன் சண்டை செய்தார் தான். ஆனால், மகி அதையெல்லாம் கணக்கிலேயே கொள்ளவில்லை. தன் விருப்பம் போலே, ஒரு வாரம் சென்று தான் குழந்தையைப் பார்த்தான்.

துர்காவிற்கு இதெல்லாம் தெரியவில்லை போல், வந்தவனிடம் எதுவுமே கேட்க்காமல் குழந்தையை கொடுத்தாள் துர்கா. அப்போது தான், நன்றாக பார்த்தான் தன் மகனை தன் தந்தையின் ஜாடையில்… தன் கையில் அமைதியாய் உறங்கும் தன் இன்னொரு உயிரை கண்டதும் பூரித்து போனான்.

ஏனோ, தானோவென வந்தவன், இப்போது கட்டிலில் நன்கு சாய்ந்து அமர்ந்து, குழந்தையை, அழகாக தன் முழங்கைக்கு மாற்றி, தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.

கண்கள் துளிர்த்தது மனம் விம்மியது…’இவனை வேண்டாம்’ என்றா, நான் போனேன் என்று.. அதனால், இப்போதெல்லாம் பாசம் என்றால், அது தன் மகன்களிடம் மட்டும் என்றானது.

சர்வேஷ்  பிறந்த போது…. 9 மாதம் வரை மேட்டூர் வரவே இல்லை துர்கா. மகி தான், வந்து பார்த்து செல்வான்…. பெரியவன் கமலேஷை lkg சேர்த்திருந்தாள்… சேலத்தில்…

அதனால், ‘2 மாதத்தில் ஸ்கூல் லீவ்வில்…. வந்து விடலாம்’ என்றாள் துர்கா….

மகி, அவளை தேடுவதும் இல்லை. அதனால், இது பெரிய விஷயமாக அவனிற்கு இருக்கவில்லை. அதனால், இறங்கியோ கட்டாய படுத்தியோ அழைக்க தோன்றவில்லை அவனிற்கு.

யாரிடமும் எதுவும் கேட்காதவன் அவளிடமும் கூட. அதனால், அதையே எல்லோரிடமும் சொன்னான் மகி. மகியின் அம்மா வைதேகி தான்…. “இங்கு இல்லாத ஸ்குலா….” என கேட்க.

மகி “இப்போ அவ வந்து என்ன பண்ண போறா…. அவ அங்க ரெஸ்ட் எடுத்து வரட்டும்….” என்றான் ஒரே போடாக.

ஆனால், இதெல்லாம் வைதேகிக்கு ஒரு உறுத்தலை கொடுக்கத்தான் செய்தது. என்ன செய்வது, ‘தன் மகன் எது சொன்னாலும் கேட்கமாட்டான்’ என புரிந்து வைத்திருப்பவரால், அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்.

யார் என்ன பேச…. அதன்பின் தான் துர்க்காவின் வாழ்க்கை கொஞ்ச கொஞ்சமாக திசை மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!